அத்தியாயம்…23…2
இது வரை கை நீட்டாத, ஏன் கடிந்து கூட பேசாத தன் கணவன் தன்னை அடித்ததுலேயே தன் நிலை மறந்து போன சரஸ்வதி… தன் தலை முடியை பிடித்து இழுத்து சென்றதில், மொத்தமாக தான் மடிந்து போனார்..
அதுவும் மகன்கள் மருமகள்கள் பார்க்க அப்படி ஒரு அவமானமாக இருந்தது.. தான் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடந்ததை உணரும் முன் கணவன் தன்னை வெளியில் தள்ள பார்க்க..அதில் சரஸ்வதியின் இது தான் என்று நிலை சொல்வது போல இல்லை எனும் போது தான்..
தன் பேத்தியோடு அந்த ஆட்டோ ஓட்டுனர்.. அந்த தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் திரண்டு வருவதை சரஸ்வதி மட்டும் அல்லாது தட்சணா மூர்த்தி… மகேந்திரன் ஸ்வேதா என்று பார்த்தது..
வீட்டின் உள்ளே வர்ஷினி சட்டமாக அமர்ந்து விட்டாள், தீக்ஷயன் நிலை சொல்வது போலவே இல்லை.. தன் அம்மாவா.? அம்மாவா…? இப்படி செய்ய பார்த்தது அதிலேயே அதிர்ந்து நின்று விட்டவன் தன்னை சுற்றமும் மறந்தும் தான் போய் நின்று விட்டான்..
ஆனால் மகேந்திரனுக்கு சரஸ்வதி தாய் தானே இந்த வயதில் அப்பா அடித்ததே அதி₹சி என்றால், இப்படி வெளியில் தள்ள நினைத்ததில்.
“ப்பா ப்பா. விடுங்க எது என்றாலும் பேசிக்கலாம் அப்பா..” என்று அழைத்து கொண்டே இவர்கள் பின் அவன் வர கணவனுக்கு பின் வந்த ஸ்வேதா என்று இவர்கள் கண்ணுக்கு தான் இந்த காட்சி தெரிந்தது..
தன் பேத்திய்ன் அழுகையின் கோலமும், ஆட்டோ ஓட்டுனரின் நிலையும் தெரு மக்கள் முகத்தில் தெரிந்த கோபத்தின் சாயலிலுமே தட்சணா மூர்த்திக்கு புரிந்து விட்டது.. என்ன நடந்து இருக்கும் என்பது..
அதில் தன் இயல்பாக மனைவியின் தலையில் இருந்த கை தன்னால் நழுவியது.. சரஸ்வதிக்குமே புரிந்து விட்டது என்ன நடந்து இருக்கும்.. அதில் தன் இப்போதைய நிலை மறந்தவளாக பேத்தியின் பக்கம் ஓட.
இவர்களே இப்படி என்றால், மனேந்திரன் ஸ்வேதா. ஓடி விட்டனர்.. வெளியில் சத்தத்தில் வீட்டில் அமர்ட்ந்திருந்த வர்ஷினி தீக்ஷயன்.. ஏன் கீழ் அறையில் உறங்கி கொண்டு இருந்த தீரா கூட எழுந்து வெளியில் வந்து அம்மா அப்பாவின் நடுவில் பயத்தோடு கை பற்றி நின்று கொண்டு விட்டாள்..
தீக்ஷயனுக்கும் வர்ஷினிக்குமே.. ஏதோ நடந்து இருப்பது புரிந்தது தான்.. ஆனால் ஸ்ருதியின் அருகில் ஓடி என்ன என்று கேட்கும் நிலையில் அவர்கள் இருவரும் இல்லை..
சத்தத்தில் வெளியில் வந்து நின்று விட்டாலும்.. சற்று முன் நடந்த நிகழ்வின் தாக்கத்தில் இருந்து இருவரும் வெளி வர முடியவில்லை என்பது தான் உண்மை..
அதில் தெரிந்தாலுமே செயலாற்ற அவர்களின் நிலை செயல் படுத்தவிடவில்லை..
அதில் நிலை வாசல்ப்படியின் அருகிலேயே நின்று கொண்டு விட்டனர்..
மகேந்திரன் தான் ஓடி போய் மகளின் அருகில் சென்றவள் தூக்க முயன்றான்.. ஆனால் தந்தை தன்னை தூக்கவுமே.. “ நோ நோ… என்னை கீழே விடு.. நீ என்னை கீழே விடு.. நீ பேட் நி பேட்..” என்று சத்தன் போட.
தட்சணா மூர்த்தியோ. “ கண்ணா என்ன டா ஆச்சு…” என்று கன்னத்தை பற்றி கேட்டவரின் கையையுமே ஸ்ருதி தட்டி விட்டு..
“நோ நோ தொட கூடாது தொட கூடாது.. நீயும் பேட் நீயும் பேட்.. ..” என்று தன்னை மறந்து கத்தியவளின் செயல்களில் அத்தனை வித்தியாசங்கள் தெரிந்தது..
சரஸ்வதியோ பேத்தியின் உடைகளை வலம் வந்தது.. ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லையே என்று ஆராய்ந்து.. பாவம் அவருக்கு தெரியவில்லை.. அசம்பாவிதம் எல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது என்பதும்.. அதன் தொட்டு தான் தன் பேத்தி பேச்சு மறந்து சிரிப்பு மறந்து விளையாட மறந்து என்று தன்னை முடக்கிக் கொண்டு தன் அறையிலேயே முடங்கிக் கொண்டாள் என்பதுமே… அது தெரியாது புதியதாக சரஸ்வதி ஆராய.. ஸ்வேதா மகளின் ஓடி போனதுமே.. ஸ்ருதி தாயின் வயிற்றை கட்டிக் பிடித்து கொண்டவள்..
‘ம்மா ம்மா..” என்று அழுகையுடன் ஏதோ சொல்ல முற்படும் போது..
“ஒன்னும் இல்ல ஸ்ருதி ஒன்னும் இல்ல. “ என்று சொன்னவள் கூடவே உஷ்…” என்று தன் வாயின் மீது கை வைத்து பேசாதே என்பது போல சைகை காட்டினாள்…
வர்ஷினியும் தீக்ஷயனுமே நிலை வாசல்ப்படி நின்ற போது தான் அதிர்ச்சி பின் என்ன என்று பார்த்தவர்களின் கண்ணுக்கு மகேந்திரன் தொடும் போதும்.. தட்சணா மூர்த்தி தொடும் போதும் கத்தியவள் சத்தம் போட்டவள்.. தன் தாய் அருகில் நின்றது ஏதோ பேச முற்ப்பட்டது..
தங்களுக்கு ஏன் தெரு மக்களுக்கு வந்த கோபம் கூட ஸ்வேதா முகத்தில் தெரியாதது.. அதோடு ஏதோ ஸ்ருதி காதில் கேட்க.
ஸ்ருதி ஏதோ சொல்ல வர,, அதை சொல்ல விடாது ஸ்வேதா தடுத்து கொண்டு இருப்பதை பார்த்த தீக்ஷயன் தன் கை பிடித்து நின்று கொண்டு இருந்த தன் மகள் தீராவை தான் பார்த்தான்.. பின் தன் மனைவியையுமே…
ஸ்ருதிக்கு என்ன பிரச்சனை என்று சரி வர தெரியவில்லை.. ஆனால் வசிக்கு நடந்த பிரச்சனை என்ன என்று தெரியும்.. அதுவும் தங்கள் குழந்தையை அழிக்க நினைத்த வீட்டில் பிரச்சனை… அதற்க்கு நான் சென்றால், மனைவியின் நிலை அறிய தீனா அவனின் வசியை பார்க்க..
வசியின் பார்வையும் முதலில், தீராவை பார்த்து பின் தன் வயிற்றின் மீது கை வைத்தவள் கணவன் அவளை பார்க்கும் போது அவளுமே அவனை தான் பார்த்தது..
என்ன நினைத்தார்களோ இருவருமே ஸ்ருதி அருகில் சென்றனர்.. தீக்க்ஷயன் நினைத்தது போல் தான அவன் அவளை தொட போகும் போது அவனின் கையை தட்டி விட்டு விட்டாள் ஸ்ருதி..
தன்னை விட்டு தூர விலக வர்ஷினியின் அருகில் நின்று கொள்ள. ஸ்வேதாவோ மீண்டும் குழந்தையை தன் கை பிடிக்குள் கொண்டு வந்து விட..
தீக்ஷயன் மட்டும் அல்லாது வர்ஷினியுமே இதை கவனித்தான் தான்..
அதற்க்குள் தெரு வாசி ஒருவர்.. “ யாராவது ஒருத்தர் போலீஸ்க்கு போன போடுப்பா…”” என்ற நொடி…
“அது எல்லாம் போட்டாச்சி.. இன்னும் கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்து விடும்.” என்று சொன்னது வேறு யாரும் இல்லை.. அந்த ஆட்டோ ஒட்டுனர் பார்த்திபன் தான்…