Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...24.1

  • Thread Author
அத்தியாயம்….24 1

மகளின் அழுத கோலத்தை பார்த்த போது சரஸ்வதி இந்த முறை தெருவாசிகளுக்கு காட்சி பொருளாக இருக்க வேண்டாம் என்று நினைத்து தன் மகளின் கை பிடித்து தன் வீட்டிற்க்கு அழைத்து செல்லும் முன்.. தன் இரு பேத்திகளையும் சரஸ்வதி..

“வாடா செல்லங்கலா…?” என்று அழைத்தும் அவளின் பேத்திகள் போகாது..

தீரா.. “ம்மாவோடு..” இருக்கேன்..” என்று சொல்ல ஸ்ருதி சொல்லும் நிலையில் கூட இல்லை அப்படியே முகத்தை சித்தியான வர்ஷினியின் மடியில் முகத்தை புதைத்து கொண்டு விட்டனர்…

சுப்ரியாவோ எப்போதும் போல தன் பிரச்சனையே தலைக்கு மேல் இருக்க. தன்னை சுற்றி இருப்பவர்களை கூட கவனியாது தன் அம்மா பேத்திகளை அழைத்தாலுமே, வர்ஷினியையும் பார்த்து நின்று கொண்டு இருந்தவரை இப்போது அவரின் மகள் அழைத்து செல்ல..

இதற்க்கு மேல் என்ன வேடிக்கை பார்க்க வேண்டியது இருக்கு என்று அந்த தெருவாசிகள் தத்தம் வீட்டிற்க்கு சென்று நுழைந்து கொண்டு விட்டனர்.

தன் மகளை வீட்டிற்க்குள் அழைத்து வந்த சரஸ்வதியோ… மகளிடம் என்ன எது என்று கேட்க கூட இல்லாது தலை மீது கை வைத்து அமர்ந்து கொண்டு விட்டார்..

தன்னை இந்த நிலையை பார்த்த பின்னும் அம்மா தன்னிடம் என்ன எது என்று கூட கேட்காது இருந்தவரிடம்..

“ம்மா என்னம்மா நான் எப்படி வந்து இருக்கேன்.. நீங்க என்னம்மா. இப்படி உட்கார்ந்து விட்டிங்க..?” என்று கோபத்துடன் கேட்க.

அதற்க்கு சிறிதும் குறையாத கோபத்தை இப்போது சரஸ்வதியம்மா தன் மகளிடம் காட்டினார்..

“என்ன டி கேட்க சொல்ற…? என்ன கேட்க சொல்ற.. உன் பேச்சை காது கொடுத்து கேட்டதினால் தானேடி நான் இந்த கதியில் வந்து உட்கார்ந்து இருக்கேன்…” என்று தலையில் அடித்து கொண்டு அழுதவர்..

பின் அனைத்துமே தன் மகளிடம் ஒன்று விடாது கூறி முடித்தார்.. ஒன்று விடாது என்றால், தான் தன் மருமகளுக்கு உண்டாகி இருப்பவளுக்கு செய்து கொடுத்த நண்டில் இருந்து… தன் கணவர் தன்னை அடித்த அடி வரை தான்..

அதோடு ஸ்ருதி பிரச்சனை சொன்ன சரஸ்வதி..

“சொந்த அப்பனையே சந்தேகம் படுவது போல சொல்லுறது என் அடி வயிறு பத்தி எரியுது டி..” என்று தன் வயிற்றின் மீது அடித்து கொண்டு அழுத தன் அம்மாவையே அதிர்வுடன் பார்த்த சுப்ரியா..

“என்னம்மா சொல்ற….?”” என்று தன் அதிர்வு மாறாது கேட்ட சுப்ரியா..

பின்… “ இது எல்லாம் கேள்வி பட்டா அங்கே என் நிலை இன்னுமே தானேம்மா மோசம் ஆகும்..” என்று கூறியவளையே.. தன் மகளுக்கு என்ன பிரச்சனை என்பது போல பார்த்தவரிடம். சுப்ரியா.

“ம்மா என் கூட படித்தாலே ஷன்மதி..” என்று சுப்ரியா சொல்லும் போதே.

“ஆமாம்.. பாவம் அவள் அப்பாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சி… அம்மா ஒரு தம்பி.. தம்பி இவளை பத்தி யோசிக்காம கூட வேலை பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு போயிட்டான் என்று சொன்னியே அவளா டி…?” என்று கேட்ட அன்னையிடம்..

“ஆமாம்மா.. ஆமாம்மா…” என்று தலையாட்டிய சுப்ரியா பிறந்த வீட்டில் கூட பிறந்தவனை ஏமாற்றியவள் புகுந்த வீட்டில் தான் கணவனாலும் கூட பழகிய தோழியாலும், ஏமாந்த கதையை அழுதுக் கொண்டே ஒப்பாரி வைத்து கொண்டு சொல்ல தொடங்கினாள் ..

“என் வயசு தானேம்மா கல்யாணம் பண்ணிக்காம அம்மா அப்பாவை இவள் தானே காப்பத்துறா என்று பாவப்பட்டு தான்மா அவள் என் கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு நகையும் இருக்கு ஒரு வீடு வாங்க நினச்சா இந்த பணத்துக்குள்ள வாங்க முடியலேன்னு ஒரு வாட்டி அழுதப்ப.. நான் தான்ம்மா என் வீடு இரண்டு வாடு தள்ளி இருக்கு ஒரு அப்பார்ட்மெண்ட் செகண்ட் சேலுக்கு வருதுன்னு சொல்லி… வாங்கி கொடுத்தேன்..” என்று அழுத்துக் கொண்டே சொன்னவளிடம் சரஸ்வதி எரிந்து விழுந்தார்..

“நானே பிரச்சனை மேல பிரச்சனையில் இருக்கேன்.. உன் பிரச்சனை என்ன என்று கேட்டா எனக்கு தெரிந்த கதையையே திரும்ப சொல்ற…?” என்று கத்திய பின் தான் சுப்ரியா..

நேராக கடைசி பேச்சுக்கு தாவி விட்டாள்..

“ம்மா அவள் இப்போ குழந்தை உண்டாகி இருக்காளாம்மா..?” று சொன்னதுமே..

“அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா…?” என்று கேட்டவரிடம்… இல்லை என்று தலையாட்டா.

இப்போது சரஸ்வதி. “ அவளுக்கா இப்போ நீ இந்த கோலத்தில் வந்து நிற்கிற..? என்று இரவு உடையில் வந்து இறங்கிய மகளிடம் கேட்ட போது.

“அவளுக்கு ஏம்மா நான் அழுகுறேன்… “ ஆமாம் ஆமாம் கூட பிறந்த அண்ணன் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை என்று நினைத்தவள் கூட பழகியவள் இப்படி ஏமாந்து பிள்ளை வாங்கி கொண்டதை நினைத்தா அழுக போறா..

சுப்ரியா பிறந்த வீட்டில் நடந்த கதையே வேறு..,

அதாவது சுப்ரியாவின் கணவன்.. ராஜேஷ் தன் கை பேசியில் பதிவு செய்து வைத்து இருந்த ஷண்முகம் என்ற பெயருக்கு சொந்தக்காரி.. ஷன்மதி தான்.. அதாவது சுப்ரியா கணவனின் கை பேசியின் அழைப்பை ஏற்ற போது கேட்ட குரலுக்கு சொந்தக்காரி ஷன்மதி தான்… குரல் அடையாளம் தெரியவில்லை போல.. இல்லை ஷன்மதியாக நினைத்து பார்த்து இருக்க மாட்டாள் போல.. அதனால் தான் அவளை பற்றிய சந்தேகம் பெண்ணவளுக்கு வரவில்லை.. அது கூட பரவாயில்லை தன் கணவனின் பற்றிய இந்த சந்தேகத்தை தன் உயிர்தோழியான ஷன்மதி கிட்டேயே…

கணவனின் அழைப்பை ஏற்ற போது ஒரு பெண் குரல் கேட்டது என்று சொல்லும் அளவுக்கு அந்த பெண்ணை நம்பினாள் போல.

ஒரு சமயம் சுப்ரியாவின் அந்த நம்பிக்கை ஷன்மதி அனைத்து வகையிலுமே அதாவது அழகு… வசதி.. கீழாக இருப்பதால், கணவனோடு ஷன்தியை ஒப்பிட்டு பார்க்க வில்லை போல.

சுப்ரியா இதை தெரியாது போய் விட்டாள் போல ஒரு சில ஆண்கள் அதாவது கிளி மாதிரி வீட்டில் மனைவி இருந்தாலுமே, குரங்கு மாதிரி கூத்தியா வெளியில் வைத்து கொள்வான் என்பது..

அதனால் தானோ என்னவோ சுப்ரியாவின் குழந்தை விக்னேஷை எப்போதுமே ஷன்மதி வீட்டில் விட்டு விடுவாள்.. காரணம் முழு சோம்பாறியான ஷன்மதி குழந்தையை பார்த்து கொள்வதிலுமே சோம்பேறி ஆகி போய் விட்டாள்..

மாமியார் வசந்தியோ இவளுக்கும் மேல் போல.. நீ தானே பெத்த நீ தான் பார்த்து கொள்ளனும் என்று ஒதுங்கி கொள்ளும் ரகம்…

அப்படி இருந்ததினால் தான் தீரா தன் ரத்தம் என்ற எண்ணம் கூட இல்லாது எங்கு பார்க்க சென்றால் தன் தலையில் கட்டி விடுவார்கள் என்று ஒதுங்கி கொண்டு விட்டார்..

தன் மாமியார் தன் மகனை பார்த்து கொண்டு இருந்தால், கண்டிப்பாக சுப்ரியா ஷன்மதியை தன் வீடு அருகில் வீடு பார்த்து கொடுத்து இருக்க மாட்டாள்..

ஷன்மதி வேலைக்கு சென்றாலுமே, அவளின் அம்மா சுப்ரியா குழந்தையை விட்டு சென்றால் பார்த்து கொள்வார்.. பத்து நிமிட பயணத்தில் இருக்கும் போதே ராஜேஷோடு சினிமா ஷாப்பிங்க என்று செல்லும் போது தன் குழந்தையை ஷன்மதி வீட்டில் தான் விட்டு செல்வாள்..

ஷன்மதி வேலைக்கு சென்றாலுமே அவளின் அம்மா கலா நன்றாக பார்த்து கொள்வார்.. அதனால் தான் ஷன்மதி வீட்டை பற்றி பேசியதும், எப்போதுமே எதிலுமே ஆதாயம் பார்க்கும் சுப்ரியா தன் கணவன் உதவியோடு தான் இவர்கள் வீட்டிற்க்கு இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரான தன் நண்பன் அதை விற்க போகிறேன் என்று ராஜேஷிடம் சொல்ல.

ராஜேஷ் தன் மனைவியிடம் சொல்ல. இப்படியாக தான் அந்த ஷன்மதி இவர்கள் வீட்டு தெருவில் இவர்கள் அருகில் குடி வந்தது…

எப்போதாவது அதாவது கணவனோடு வெளியில் செல்லும் போது மட்டும் குழந்தையை ஷன்மதி வீட்டில் விட்டு செல்லும் சுப்ரியா..

இப்போது தான் பள்ளியில் சேர்த்து உள்ள மகனை பள்ளி விட்டு வந்ததுமே விட்டு வந்து விடுவாள்..

ஒரு சில சமயம் காலை உணவு ஏன் இரவு கூட ஷன்மதி வீட்டில் தான் குழந்தை சாப்பிடுவது…

குழந்தையை ஷன்மதி வீட்டில் விட்டு வரும் வேலை மட்டும் தான் சுப்ரியாவுடையது..மீண்டும் கூட்டி கொண்டு வருவது ராஜேஷ் தான் ..

கடந்த ஒரு வருடமாக இது தான் நடக்கிறது.. ஷன்மதி வேலைக்கு செல்வதால் அவளின் அம்மா காலையிலேயே எழுந்து காலை மதியம் என்று உணவை சமைத்து விடுவாள்..

இங்கு சுப்ரியா வீட்டிலோயோ.. ராஜேஷின் உணவு வெளியில் தான்.. பின் ஒன்று போல அம்மா மனைவி ஒருவரும் சோம்பேறியாக இருந்தால், இரவு மட்டும் தான் வீட்டு உணவு.

அதனால் சுப்ரியாவும் சரி அவளின் மாமியார் வசந்தியும் சரி.. லேட்டாக தான் எழுந்து கொள்வது.. காலை உணவையே பத்து மணிக்கு தான் செய்து முடிப்பர்.. அப்போது மதியம் இரண்டு கடந்து விடும்..

சுப்ரியா மகனை பள்ளிக்கு சேர்த்த பின்.. இவனுக்கு என்று கட்ட வேண்டுமா என்று யோசித்தவளுக்கு ஷன்மதி..

“எனக்கு என் அம்மா கட்டி கொடுக்கும் போது உன் மகன் என்ன சுப்பு.. குழந்தை இத்துனுண்டு.. அதுக்கு நீ எழுந்து சமைக்கனுமா…?” என்ன..

காலை மதியம் என்ன மாலை கூட அவன் ஷன்மதி வீட்டிலேயே ஷன்மதியின் அம்மா சாப்பிட ஏதாவது கொடுத்து விடுவார்..

ஆறு மணிக்கு மேல் வரும் ராஜேஷ் குழந்தை எங்கு என்று கேட்க..

“ ஷன் மதி வீட்டில் இருக்கா…” என்று சொல்ல.

ராஜேஷ்.. “போய் கூட்டிட்டு வா..” என்று தான் ஆரம்பத்தில் அவள் கணவன் சொல்லி இருக்கிறான்..

ஆனால் கை பேசியில் கொரியன் சீரியல் பார்க்கும் மும்முரத்தில் சுப்ரியா தான்..

“நீங்க போய் கூட்டிட்டு வாங்க …” என்று சொல்ல.

முதலில் மனைவியை முறைத்து பார்த்து தன் மகனை கூட்டிட்டு வர ஆரம்பித்த ராஜேஷ் நாளடைவில்..

“என்ன குழந்தை ஷன்மதி வீட்டில் இருக்கானா…?” என்று மனைவியை அழைத்து வா என்று சொல்லாது அவனே அழைத்து வர செல்ல ஆரம்பித்து உள்ளான்..

சுப்ரியாவுக்கு கணவன் மீது பின் யாரோ ஒரு பெண் என்று சந்தேகம் கொண்டவள் அது ஷன்மதியாக இருக்கும் என்று நினைக்க வில்லை போல..

அதனால் தான்.. குழந்தையை அழைத்து செல்ல சென்றவன் லேட்டாக வரும் போது எல்லாம். ஏன் என்று விசாரிக்கவில்லை போல..

ஆம் ராஜேஷ் முதலில் வீடு வந்த பின் தன் குழந்தையை பார்க்கும் ஆவலில் தான் ஷன்மதி வீட்டிற்க்கு சென்றது. எந்த புள்ளியில் இருவருக்கும் வேறு பழக்கம் ஆரம்பித்தது என்று தெரியாது ஆரம்பித்து விட்டது..

அதன் பின் ராஜேஷ் குழந்தையை அழைத்து வரும் சாக்கில் ஷன்மதி வீட்டிற்க்கு செல்ல. ஷன்மதியோ சரியாக அந்த சமயம் தான் வேலையை விட்டு வீடு வருவாள்..\

வீடு வரும் ஷன்மதி ஏதாவது ஒரு காரணம் சொல்லி தன் அம்மாவை வெளியில் எங்காவது அனுப்பி வைத்து விடுவாள்..

இல்லை ஏன் குழந்தையிடம் அடுத்த தெருவில் இருக்கும் பார்க் பற்றி ஆசையோடு சொன்னவள்..

தன் அம்மாவிடமும்.. “ அப்பாவை பார்த்து கொண்டு எத்தனை நேரம் தான் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு இருப்பிங்க. குழந்தையை கூட்டிட்டு பார்க் போயிட்டு வந்தா உங்களுக்கும் மைன்ட் ரிலாக்ஸா இருக்கும் தானே.” என்று சொல்ல.

கலாவுமே சுப்ரியா பைய்யனோடு அந்த பூங்காவுக்கு செல்ல ஆரம்பித்தவர் பின் ஆண்டு கணக்கில் நோயாளியை கவனித்து கொண்டு இருந்த அந்த பெண் மணிக்கும் அந்த பூங்காவும், அங்கு விளையாடும் குழந்தைகளும், அந்த குழந்தைகளை அழைத்து வந்த தன் வயதை ஒத்த பாட்டிமார்களிடம் பேசும் பேச்சும், அவர் மனதிற்க்கு இதமாக அமைந்து விட.

பின் மகள் சொல்லாமலேயே மகள் வந்ததும் சுப்ரியா மகனை அழைத்து கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டார்..

விபத்தில் நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக இருந்த ஷன்மதியின் அப்பா ஒரே அறையில் முடங்கி போக… ராஜேஷ் ஷன்மதி வீட்டில் குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டான்..

சில சமயம் இவன் இருக்கும் போது தான் ஷன்மதி அம்மா கலா பூங்காவில் இருந்து வருவார் தான்..

ஆனால் பாருங்க ராஜேஷ்… “குழந்தையை கூட்டிட்டு போக இப்போ தான் வரேன்..” என்று பேச்சை அந்த பெண்மணியுமே நம்பி விட்டார்..

சில சமயம் ஒரு மணி நேரம் ஷன்மதியோடு இருந்து விட்டு வெளியில் சென்று பின் கலா வந்த பின் வந்து அப்போது தான் வருவது போல வருவதுமாக இருக்க. ஷன்மதி வீட்டில் பிரச்சனை இல்லாது ராஜேஷ் தன் சின்ன வீட்டை செட் செய்து கொண்டு விட்டான்.

பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக் கொள்வான்.. ஆனால் பாருங்கள் இவர்கள் மாட்டாது குடும்பம் நடத்தியதில், பிள்ளைகள் வந்து இவர்களை மாட்டி விட்டு விட்டது.

ஷன்மதியின் அம்மா மகளின் நிலை அறிந்து என்ன டி என்று கேட்கும் போது..

“எனக்கு வயது முப்பது ஆகுது நானுமே பெண் தானே. எனக்குமே குழந்தை கணவன் என்று வாழ ஆசை இருக்காதா.? என்று கேட்டதுமே.

“அதுக்கு ஏன்டி கல்யாணம் ஆனவன் கூட.. அதுவும் குடும்பமே நடத்தி இருக்க ..” என்று கேட்டதற்க்கு தான்..

பின் கல்யாணம் ஆனவனா என்னை கட்டிப்பான்.. என்னை கல்யாணம் செய்தால் வ்ன்னோடு நீங்க உங்க கணவர் என்று வாலு பிடித்தது போல வந்தா. முன் நீங்க பார்த்த எத்தனை இடம் அலறி அடித்து ஒடி போய் விட்டாங்க… உங்க மகனே உங்களை பார்க்காத போது மாப்பிள்ளை பார்த்துப்பானா என்ன..

ஆனா பாரு இவர் பார்த்துப்பார்… உங்களுக்கு தான் எனக்கு ஒரு வாழ்க்கை தேடி தர முடியல.. நானே தேடின இந்த வாழ்க்கையை பற்றி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை..” என்று மகள் கேட்டு விட்டதில் கலாவினால் வாயில் துணியை அடைத்து கொண்டு அழுக தான் முடிந்தது தன் கைய்யாலகத தனத்தினால், நடக்க முடியாத ஷன்மதியின் தந்தைக்கு இப்போது பேசவும் முடியாது போய் விட்டது போல ஆகி விட்டார்.

விளைவு ஷன்மதி ராஜேஷ் வீட்டின் முன் நின்று விட்டார் வாழ்க்கை கேட்டு… ராஹேஷுக்கு தாரளம் மனம் தான் போல. அதனால் தான். ஏமாற்றாது நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று அவனுமே சொல்லி விட.

சுப்ரியா ஷன்மதியா ஷன்மதியா என்று அதிர்ச்சியில் இருந்தவள் பின் தெளிந்த கணவனின் சட்டையை பிடித்து சண்டை போட்டு மாமியார் மாமனாரிடம் பஞ்சாயத்து வைக்க.

அவர்களின் தீர்ப்போ மகன் பக்கம் தான் இருந்தது.. நீ தானே உன் பிரண்ட் உன் பிரண்ட் என்று பக்கத்தில் கூட்டியாந்து வைத்து கொண்டே..

உன் பிரண்ட் பக்கம் என்னடியம்மா பக்கம்.. இன்னுமே பக்கமே உன் வீட்டில் உன் படுக்கையில் இருக்கேன் என்று சொல்றா.. தப்பு உன் மேல தான் என்று சொன்ன வசந்தி கூடவே… குழந்தையும் உண்டாகிய பின் என்ன செய்ய முடியும் என்று.. நீ ஒரு பாட்டுக்கு இரு அவள் ஒரு பாட்டுக்கு இரு.. உன் அண்ணன் மட்டும் என்ன ஒழுங்கா. என் மகள் இறந்த பின்னே இன்னொன்னு கட்டிக்கலையா.? என்று இறந்து திருமணம் செய்து கொண்ட தீக்க்ஷயன் பற்றி இழுக்க.

தாள முடியாது இதற்க்கு ஒரு முடிவு கட்டி வேண்டி தன் மகனை தன் அம்மா வீட்டிற்க்கு அழைத்து சென்றால், மகன் மீது இருக்கும் பாசத்தில் கூட வருவான் என்ற நம்பிக்கையில்..

மகனை கை பிடிக்க. மகனுமே கை விட்டு விட்டு ஷன்மதி கையை பற்றிக் கொண்டு விட்டதில் இதோ தனித்து அப்போது உடுத்தி கொண்டு இருந்த உடையோடு வீடு வந்து சேர்ந்த கதையை தன் அம்மாவிடம் சொல்லி முடிக்கும் சமயம்..

அந்த வீட்டு ஆண்கள் வீடு வந்து சேர்ந்தனர்… ஆண்கள் மீது அந்த காவல் அதிகாரி கை வைத்து இருப்பார்களோ என்ற பயத்தொல் சரஸ்வதி பார்க்க. ஆண்கள் எப்படி சென்றார்களோ அப்படியே வந்து இருக்க.. ஸ்வேதா கன்னம் தான் பன்னு போல வீங்கி போய் காணப்பட்டது…




 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
சுப்ரியா பிள்ளைய பார்த்துக்க சோம்பேறி தனம் 😈😈😈 புருஷனை பார்த்துக்க சோம்பேறி தனம் 😈 👿 👿 இப்படி ஒரு வாழ்க்கை வாழ தான் அடம் பிடிச்சு கல்யாணம் செஞ்சியா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️இதுல தீஷன் வாழ்க்கையும் போச்சு 🤧 🤧 🤧 🤧 🤧 பெத்த குழந்தை, புருஷன் எல்லாரையும் இழந்துட்டு என்ன வாழ போற 🙁🙁🙁🙁🙁

ஷண்மதி நீ எல்லாம் என்ன பிறவி 🤧 🤧 🤧 உன்னோட கஷ்டத்தில் எல்லாம் உதவி செஞ்சு துணையா இருந்தவளுக்கு எப்படி கெடுதல் செய்ய முடிஞ்சுது 😡😡😡😡 உனக்கு கல்யாணம் வேணும்னா உன் கூட பிறந்தவன் மாதிரி ஓடி போய் இருக்க வேண்டிய தானே 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 ஷண்மதி நீ அவ குழந்தைய பார்த்துக்கிறதுக்கு தான் பணம் வசதின்னு எல்லாம் வாங்கி கிட்டு தானே இருக்க😡😡😡

ராஜேஷ் 👿👿👿👿👿👿👿👿👿👿

மூனு பேர் மேலயும் தப்பு இருக்கு 😨😨😨 ஆனாலும் ஷண்மதி ராஜேஷ் செஞ்சது நம்பிக்கை துரோகம் 🥶🥶🥶 இதுங்க இரண்டையும் சும்மா விடக்கூடாது 😈😈😈

ஸ்வேதா நல்லா மூஞ்சி வீங்கி வந்திருக்காளா 🤧🤧🤧🤧

சரசு தான் செஞ்சது தப்பு என்று உணர்ந்த மாதிரியே தெரியல 🤔 🤔 🤔 🤔 ஏதோ அவங்களுக்கு அநியாயம் நடந்த மாதிரி தான் பேசுறாங்க 😣😣😣😣😣

மருமக குழந்தைய பார்க்கமாட்டா என்று நினைச்சு ஏதேதோ செஞ்சாங்க 🤭🤭🤭 ஆனால் அவங்க பொண்ணு தான் குழந்தைய பார்க்காமல் விட்டு வாழ்க்கைய இழந்து நிக்குறா🤧🤧🤧🤧🤧
 
Last edited:
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Arumai. Ippadi somberiya irukka, unaku ethuku ma kudumbam? Karma unaku kuruma vechuruchu.

Swetha unaku ithu pathathu. Dheena , nee un kudumbathai kootitu kilambu Raasa.
 
Last edited:
Active member
Joined
May 24, 2024
Messages
194
Anna valkaiya panaysm vacha ila
Anubavi
Purusan pulla ah parka somberthanam ethukubkalyanam panna
Ana Rajesh shanmathi randuperukum prusa kidaikanum thoo

Swetha moonju mattumtan panna
Unmai trinju purusan sevula trupalaya
I
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
சுப்ரியா எல்லாத்துலயும் சுயநலம்.... பிள்ளையை வளர்க்குறதுக்கு கஷ்டப்பட்டுட்டு ப்ரென்ட்டை கொண்டு வந்து பக்கத்துல வச்சுக்கிட்டு அவளை வேலை வாங்குனா இப்போ புருஷனும் அவகிட்ட போயிட்டான்.... இப்போ புலம்பி என்ன பண்ண....😤😤😤😤😤

ஷன்மதி இப்படித் தான் நீ பெத்தவங்களை பார்த்துக்கணும்னா அவங்களை எதாவது ஆசிரமத்துல விட்டுட்டு உன்னோட வாழ்க்கையை பார்த்துட்டு போயிருக்க வேண்டியது தானே.... பெத்தவங்க தோழி ன்னு எல்லாருக்கும் துரோகம் பண்ணிருக்க.... 😡😡😡😡
ராஜேஷ்..... 😈😈😈😈

சரஸ்வதி இவங்க மகளும் பெரிய மருமகளும் பிள்ளையை எப்படி வேணும்னாலும் வளர்க்கலாம் கவனிக்காம இருக்கலாம் ஏன்னா அது அவங்க பெத்த பிள்ளை அதனால கண்டுக்க மாட்டாங்க.... ஆனா வர்ஷினிய மட்டும் சந்தேகத்தோடயே பார்ப்பாங்க அவ சித்தின்றதால.... என்ன நியாயம் உங்களோடது... 😡😡😡😤😤😤😤😤
 
Top