Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam-4

  • Thread Author
அத்தியாயம்..4

வர்ஷினி தன் அண்ணனிடம் பணம் கேட்கவே அப்படி தயங்கினாள்.. இன்று வரை தன் அண்ணனிடம் இருந்து அவள் பணம் என்ன வேறு எந்த ஒரு பொருளுமே வாங்கியது கிடையாது.. அதற்க்கு அவள் தந்தை சந்தர்ப்பம் தரவில்லை என்பது வேறு விசயம்..

இப்போது அவளின் பிரச்சனை அது கிடையாது.. தன் அண்ணனிடமே பணம் கேட்க தடங்கியவள் இரு பக்கம் அண்ணி அண்ணியின் அம்மா வந்து நின்று கொண்டதில் அவள் தயக்கம் இன்னுமே கூடியது..

ஆனால் கேட்டு விட்டு, இப்போது அமைதியாக இருந்தால் அண்ணி அவரின் அம்மா தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட வர்ஷினி..

இப்போது மிக தெளிவாகவே… “வேலைக்கு போக இன்னுமே இரண்டு ட்ரஸ் எடுக்கனும்.. அதோட ட்ரவல்.. அண்ட் புட். என் தேவைக்கு தேவைப்படுது.. என் சேலரி என் அக்கவுண்டில் வர இன்னும் ஒன் வீக் இருக்கு ண்ணா..” என்று இவள் தன் வார்த்தையாக சொல்லி முடித்தது தான் தாமதம்..



அடுத்த வார்த்தையாக இவளின் அண்ணி பிரபா… “அப்போ நீ இத்தனை வருஷம் சம்பாதித்தது என்ன ஆச்சு வர்ஷி…? நீ வீட்டு செலவுக்கு எல்லாம் பணம் கொடுத்தது கிடையாது.. அது எனக்கு நல்லாவே தெரியும். மந்திலி.. உனக்கு தேர்ட்டி பைப் தவுசண்ட் வாங்குவ.. உன் பெட்ரோல் உன் தனிப்பட்ட செலவு என்று பத்தாயிரம் போனாலுமே.. மாதம் இருபது ஆயிரம். வருஷம் மூன்று லட்சம்.”

“ஒன்னரை வருஷத்தில் எப்படியும் ஒரு நான்கு லட்சத்துக்கு மேல இருக்குமே வர்ஷி..” இப்படி நொடியில் கணக்கு போட்டு விட்டு தன்னையே பார்த்து கொண்டு இருந்த தன் அண்ணியை அதிர்ந்து போய் பார்த்து கொண்டு இருந்தாள் வர்ஷினி..

உண்மை தானே.. ஒரு வகையில் அண்ணியின் பேச்சு உண்மை தானே.. ஆனால் அவள் சம்பாத்தியத்தில் இவள் செலவு செய்தது எல்லாம் கண் முன் வளம் வந்தது..

ஆனாலுமே வலம் வந்த செலவை எல்லாம் அண்ணியிடம் சொல்ல முடியாது..

“இல்ல அண்ணி.. என் கிட்ட சேவிங்கஸ் இல்ல.” என்றதுமே..

அண்ணியின் அம்மா.. “ என் மக சொல்லுவா… என் நாத்தனாரு தாம் தூம் என்று தான் செலவு செய்வாள் என்று.. ஆனால் இப்படியா..?” என்று வாயின் மீது விரல் வைத்து கொண்டு விட்டாள்..

இதோ அண்ணியின் அம்மா சொன்ன வார்த்தை கூட சரியே.. ஆனால் செலவு செய்ததில் இவர்களுடையதுமே அடக்கம் தான்..

இதோ மகளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டு இருக்கிறானே இவள் அண்ணன்.. அந்த ரிமோட் கண்ரோல் கார்.. இதன் விலை இரண்டாயிரம்..

இவளின் அக்கா கீர்த்தனா தாய் வீடு வந்திருந்த போது.. பசங்களை காட்டி..

“பக்கத்து வீட்டு பசங்க என்னவோ ரிமோட் கண்ரோல் கார் வைத்து இருக்காங்கலாம் டி.. அது வேண்டும் என்று இரண்டும் ஒரே அடம்.. ஆனா உன் மாமா இரண்டாயிரம்.. ஒருவனுக்கு வாங்கி கொடுத்து விட்டு இன்னொருத்தனுக்கு வாங்கி கொடுக்காது இருக்க முடியாது.. நாலாயிரத்தை எல்லாம் ஒரு விளையாட்டு பொருள் மீது என்னால போட முடியாது என்று சொல்லிட்டாரு..”

“சின்ன பசங்க அதுங்களுக்கு என்ன தெரியும்.. அது விலை அதிகம் என்று.. ஏங்கி போகுதுங்க..” என்று அக்கா சொன்னதுமே..

“நான் வாங்கி தரேன் க்கா.. எந்த கடை..?” என்று வர்ஷினி கேட்டதுமே கீர்த்தனா தன் பேசியில் இருந்த ஆன் லைன் லிங்கை தங்கைக்கு அனுப்பி விட்டாள்..

இவளுமே உடனே நாலாயிரம் கொடுத்து அக்கா மகன்களுக்கு வாங்கி கொடுத்து விட்டாள்..

அப்போது வர்ஷினி யோசிக்கவில்லை.. தான் முப்பத்தி ஐந்து ஆயிரம் சம்பளம் வாங்குகிறோம்.. ஆனால் தன் அக்கா தன்னை போலவே ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவள் தான்..

அவள் தன்னை விடவே இரண்டு மடங்கு அவள் சம்பாதிக்கிறாள் என்பதை..

அக்கா மகனுக்கு வாங்கி கொடுத்தது தெரிந்ததும்.. அண்ணியும்..

“அவங்களை விட இவன் ரொம்ப சின்ன குழந்தை தானே வர்ஷி.. அந்த காரை பார்த்து இவன் ஏங்கி போயிட மாட்டானா..? அவங்க இரண்டு பேரும் விளையாடுவதையே பார்த்து கொண்டு இருக்கான்..”

ஒரு வயதே ஆனா குழந்தை என்ன ஏங்கி போக கூடும் என்று தெரியாது புரியாது.. அண்ணன் குழந்தைக்குமே வாங்கி கொடுத்தாள்..

ஆனால் இவளுமே சிக்கனம் இல்லை தான்.. அதனால் தான் தனக்கு ட்ரஸ் எடுக்கும் போது எல்லாம் அக்கா அண்ணி என்று மூன்று பேருக்கும் சேர்த்து தான் இந்த ஒன்னரை வருடமாக எடுத்து கொண்டு இருக்கிறாள்..

மேக்கப் சாதனத்தில் இருந்து. “எனக்கு எல்லாம் அலைந்து திரிந்து வாங்க நேரம் இல்ல. உனக்கு வாங்கும் போது எனக்கும் சேர்த்து வாங்கிடேன்.” ஒன்று போல் அண்ணி அக்கா சொல்ல.

“இவள் பிராண்ட்..?” என்று இழுக்க.

“நீ யூஸ் பண்றத வாங்கு வர்ஷி..” இதுவுமே ஒன்று போல் தான் இருவரும் சொன்னது. பின் ஏன் சொல்ல மாட்டார்கள்…? இவள் வாங்குவது தரமானது விலை உயர்ந்ததும் ஆச்சே.. இவை எதற்க்குமே பணம் இது வரை கொடுத்தது கிடையாது இருவருமே.. இவள் பணம் என்ற ஒரு விசயத்தை இவள் யோசித்தது கிடையாது என்பது வேறு விசயம்..

இப்போது அனைத்திற்க்கும் சேர்த்து யோசித்தாள்.. தன்னை ஊதாரி என்று அண்ணி அவள் அம்மாவிடம் சொன்னார்களா..? ஏன் இதை அப்போது சொல்ல வேண்டியது தானே.. ஒன்றும் சொல்லவில்லை.. பேசவில்லை.. தன் அண்ணனை தான் பார்த்திருந்தாள்..

இது வரை மனைவி மாமியாரை விட்டு பேச விட்டவன்.. பின் பொன் வார்த்தையாக “ நாளை ஏடியமில் இருந்து எடுத்து தருகிறேன்..”

ஓப்புக்கு கூட. இந்த பணம் வேண்டாம் என்று அவளாள் சொல்ல முடியவில்லை.. அவர் அவர் அறைக்கு சென்ற பின் தனித்து ஹாலில் அந்த ஷோப்பாவில் இரவில் உறங்க படுத்த சமயம் கடைசியாக இந்த பத்தாயிரம் தன் திருமணத்திற்க்கு என்று ட்ரீட் என்று செலவு செய்த பணம் நியாபகத்தில் வந்தது..

அதோடு மாதம் அழகு நிலையத்தில் அவள் செலவு செய்த மாதம் மாதம் சில ஆயிரமும் நியாபகத்தில் வந்த சமயம்.

தன் வண்டியை கொண்டு வந்து கொடுத்த போது அந்த அழகு நிலைய பெண் தயங்கி தயங்கி சொன்ன.

“அன்று உங்களுக்கு செய்த அந்த பேசியல் ஹார் கலரிங்க எல்லாம் காஸ்லி.. மொத்தம் நான்கு ஆயிரம்.. ஆச்சு.” என்றதும்.

“சேலரி வந்ததும் கொடுத்து விடுகிறேன்..” என்றதும் நியாபகத்தில் வந்து..

மறு நாள் அண்ணன் கொடுத்த அந்த பத்தாயிரத்தில் மிக எளிமையாக இரண்டு சுடி தார் எடுத்தவள்..

டூவீலரில் சென்றால் இந்த ஒரு வாரத்திற்க்கு பெட்ரோலே அதிகம் செலவு ஆகும் என்று ட்ரையினில் சென்ற போது தான்…

மக்கள் வேலைக்கு எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு சென்று வருகிறார்கள் என்று வாழ்க்கையின் நடை முறைகளை மெல்ல மெல்ல படித்துக் கொண்டும் இதோ இரண்டு வாரம் வேலைக்கு சென்று..

இதோ இன்று ஒரு மாதம் முடிவில் வாழ்க்கையின் போக்கை பாதி கற்றுக் கொண்டு விட்டவள் மீதம் கற்க்கும் நிகழ்வாக இன்று தன் பெற்றோரின் ஒரு மாதம் முடிவில் அப்பா அம்மாவுக்கு பிடித்ததை சமைத்து வைத்து என்று அனைத்தும் முடிந்து அனைவரும் சென்று விட்ட நிலையில்..

அனைத்தும் நல்லப்படியாக நடந்து இருந்தால், இன்று காலை தன் கழுத்தில் தாலி ஏறி இருக்கும்.. அதை கட்ட கூடியவன் எதிரில் அமர்ந்து இருக்க. இவர்களை சுற்றி வீட்டின் பெரியவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்..

பெரியவர்கள் என்றால், இவள் முறையில் அண்ணன் அண்ணி… அக்கா மாமா.. இரண்டு வீட்டு சம்மந்தி வீட்டவர்கள்..

மாப்பிள்ளை வீட்டின் சார்பாக மாப்பிள்ளையின் அம்மா அப்பா மாப்பிள்ளையின் அண்ணன்.. மாப்பிள்ளையின் பெரியம்மா.. அதாவது தீக்ஷயனின் அன்னை இருந்தனர்..

மாப்பிள்ளை வீடு மிகவும் நல்ல மாதிரி என்று அவள் அப்பா சொன்ன போது பெரியதாக இவள் எடுத்து கொள்ளவில்லை..

ஆனால் இப்போது அனுபவத்தில் உணர்ந்த போது அவள் கண்கள் கலங்கி விட்டது.. மாப்பிள்ளை வீட்டவர்களை நினைத்து கிடையாது தன் தந்தை மனிதர்களை எப்படி இவ்வளவு சரியாக எடைப்போட்டு உள்ளார் என்று நினைத்து..

ஆனால் தன் பெற்றோர்களை நினைத்து கவலை பட கூட அவளுக்கு நேரம் இல்லாது அவள் முன் பிரச்சனைகளின் அணிவகுப்பாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது..

இதோ மாப்பிள்ளையின் அன்னை கேட்டது ஒன்றே ஒன்று தான்.. சம்மந்தி அந்த சத்திரத்திற்க்கு பாதி அமெண்ட் கொடுத்து விட்டாங்க. அதே போல் தான் பூ அலங்காரம் கேட்டரிங்க என்று கொடுத்து இருக்கார்..

மீதி கொடுத்து விட்டு திருமணத்தை மூன்று மாதம் கழித்து வைத்து கொள்ளலாம். சம்மந்திக்கு நான் ரெகமெண்ட் செய்து தான் இந்த சத்திரம் கேட்டரிங்க என்று பார்த்தது.. எனக்கு தெரிந்தவங்க தான். நான் பேசிக் கொள்கிறேன்.. அதோடு சவரன் எழுபது ஐம்பது எல்லாம் வேண்டாம்.. இருபத்தி ஐந்து போடுங்க போதும்..” என்று மாப்பிள்ளை வீட்டவர்கள் சொன்னது ஒன்றும் தவறு கிடையாது…

அதற்க்கே அண்ணியின் அம்மா.. “என்னது இருபத்தி ஐந்தா…?” என்று அதிர்ந்து கேட்டதோடு வாய் மீதும் கை வைத்து கொண்டு விட்டார்.. பின் இது அவருக்கு பெரியது தான்..

அவரின் மூன்று மகள்களுமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.. படித்து வேலைக்கும் சென்றவர்கள். அவர்கள் சம்பாத்தியத்தில் பெண்களே நகை வாங்கி கொள்ள காதல் மாப்பிள்ளையே திருமணம் செய்து கொண்டதால், இந்த இருபத்தி ஐந்து சவரன் பெரியதாக தெரிகிறது போல..

இவரின் அதிர்ச்சியை பார்த்து பாவம் மாப்பிள்ளையின் அம்மா தான் மிக அதிகமாக தான் கேட்டு விட்டோம் போல. என்று..

“நகை வேண்டாம். ஆனா நாங்களுமே சமீபத்தில் தான் பெரிய வீடு ஒன்று கட்டி முடித்து இருக்கோம்.. அதனால பணம் கொடுத்து நான் வர்ஷ்னிக்கு நகை வாங்கி போட முடியாது.. என் கிட்ட இருப்பதை மாத்தி வேணா கல்யாணம் செய்து கொள்கிறோம்..” என்ற இந்த வார்த்தையில் மனிதர்களில் தான் எத்தனை வகைகள் என்று வாய் அடைத்து அவரை பார்த்தார்..

பின் கல்யாணம் என்னும் போது தான். ஒன்றன் பின் ஒன்றாக. அவளின் அக்கா கீர்த்தனா.

“இவருக்கு தோப்பு வீடுன்னா ரொம்ப பிடிக்கும்.. கோயம்பத்தூரில் ஒன்று வாங்கிட்டோம்.. அதுவே ஒன்னரை கோடி ஆகிடுச்சி.. என் ஆபிஸில் லோன் எடுத்து இவர் லோன் எடுத்து என்று எங்களுக்கே கழுத்தை பிடிக்கும் அளவுக்கு இருக்கு.. இதில் மத்தவங்களை எப்படி பார்ப்பது..” என்று வர்ஷினியின் அக்கா கீர்த்தனா தங்கையை ஒரே நிமிடத்தில் மற்றவர்களாக ஆக்கி விட்டாள்..

உனக்கு நான் குறைந்து போகவில்லை என்று… அண்ணன்.. “இந்த ப்ளாட் நான் வாடகைக்கு தான் வந்தேன்.. ஆனா இதன் ஒனர் இதை விற்க போகிறோம் காலி செய்.. என்று சொல்ல. இந்த ப்ளாட் எனக்கும் என் ஒய்ப்புக்கும் பக்கம்.. என் மாமியாருக்கும் இந்த இடம் ரொம்ப பிடித்து விட்டதினால், நானே வாங்கிட்டேன்.. முழு லோனில் தான் வாங்கினேன்.” என்று விட..

இப்போது மாப்பிள்ளையின் அன்னைக்கு இந்த திருமணம் நகை இது எல்லாம் பெரியதாக படவில்லை.. நகை வேண்டாம் என்றவருக்கு கோயிலில் திருமணத்தை முடிக்க தெரியும்..

இப்போது அவருடைய புதிய பிரச்சனை.. நாளை வர்ஷினியை மருமகளாக கொண்டு சென்றால், நாளை பின்னே.. நல்லது கெட்டது என்று எதற்க்கும் இவர்கள் முன் நிற்க மாட்டார்களா..? என்ற பெரிய கேள்வி என்பது மட்டும் கிடையாது.. அது அவருக்கு பெரிய பிரச்சனையாகவும் அவருக்கு தெரிந்தது.

ஆம் நகை பணம். இதை எல்லாம் அவர் எதிர் பார்க்கவில்லை.. ஆனால் பெண்ணுக்கு எதற்க்கும் முன் நிற்கவில்லை என்றால், ‘அவரின் பார்வை தன்னால் தன் பெரிய மருமகள் பக்கம் சென்றது..

மருமகளுக்கு தாய் இல்லை.. இதில் என்ன இருக்கு என்று பெண் எடுத்து கொண்டார்.. ஆனால் ஒரு பிரசவம் முதல் கொண்டு அனைத்துமே இவர் தான் இதோ இன்று வரை பார்த்து கொண்டு இருக்கிறார்..

அதுவும் மூன்று வருடம் முன்.. இவருக்கு முட்டி மாற்றும் அறுவை சிமிச்சை செய்து கொண்ட போது தான் பெரிய மருமகளின் பிரசவம்.. பாடு பட்டு விட்டார்… இன்று வரை கூட அனைத்துமே முடியாது தான் செய்து கொண்டு இருக்கிறார்.

இதில் இன்னொரு மருமகளையும் அது போல கொண்டு சென்றால் யோசித்தவர் கீர்த்தனா ஸ்ரீவச்சனிடம் கேட்டும் விட்டார்..

“நாளை பின்ன நல்லது கெட்டதுக்கு உன் தங்கைக்கு முன் இருந்து செய்து கொடுப்பிங்க. பார்த்திப்பிங்க தானே..” என்று… இருவருமே.

அவர் அவருக்கு குடும்பம் இருக்க.. எப்படிங்க தலை மேல இன்னொரு பாரத்தை சுமக்க முடியும்..” என்று ஒன்று போல் சொல்லி விட்டனர்..

மாப்பிள்ளையின் அம்மா மாப்பிள்ளையை பார்க்க மாப்பிள்ளை அம்மாவிடம் ஏதோ சைகை செய்ய.. மாப்பிள்ளையின் அம்மா தொண்டையை கன கணத்து கொண்டார்..

பாவம் அவர் நல்லவர் போல. அதனால் தான்.. இந்த இடம் எங்களுக்கு சரி வராது என்பதை சொல்ல தயங்க. வர்ஷினியோ அவருக்கு அந்த கஷ்ட்டத்தை கொடுக்காது.. தன் விரலில் இருந்த அந்த நிச்சய மோதிரத்தை கழட்டி தன் முன் இருந்த டீப்பாவின் மீது வைத்து விட்டவள்..

“சாரி.. முதல்ல நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்… இப்போ நான் இருக்கும் இந்த சூழ்நிலையில் கல்யாணம் செய்யும் மன நிலையில் நான் இல்ல.. அதனால சாரி.. நீங்க உங்க மகனுக்கு வேறு பெண்ணை பாருங்க..” என்று மாப்பிள்ளையின் அம்மாவை பார்த்து சொல்லி விட்டாள்..

பின் அடுத்த பேச்சு இல்லாது மாப்பிள்ளையும் தன் விரலில் இருந்த வர்ஷினி மாட்டி விட்ட மோதிரத்தை டீப்பாவின் மீது வைக்க..

இருவரும் அவர் அவர் மாட்டி விட்ட மோதிரத்தை எடுத்து கொண்டனர்.. முறைப்படி அனைத்தும் நல்ல மாதிரி நடந்து இருந்தால், இன்று அவர்களின் திருமணம் நடந்து முடிந்து இருக்க வேண்டியது.

ஆனால் செய்த நிச்சயத்தை முறித்து விட்டு சென்றனர்.. இதில் அண்ணியின் அம்மா கீர்த்தனா.

“நீ ஏன் அவசரப்பட்ட நகை இல்லாது கல்யாணம் செய்து கொள்வது எல்லாம் பெருசு. பெரியங்க நாங்க பேசி கோயிலில் முடித்து இருப்போம்..” இப்போது புதியதாக அவர்களுக்கு புதிய கவலை நகை போட்டு பணத்தை செலவு செய்து தாங்கள் திருமணம் செய்து வைப்பது போல ஆகி விடுமோ என்று..

ஆனால் அண்ணனோ… காரியத்தில் கண்ணாக எரிந்த வீட்டை இடித்து கட்டுவது எல்லாம் ஆகாத காரியம். ஒன்றுக்கு இரண்டு மரணம் ஏற்பட்ட வீட்டை கட்டுவதுக்கு பணத்தை கொட்ட முடியாது.. அதனால அதை விற்று மூன்றாக பிரித்து விடலாம்.. அப்பாவுக்கு செட்டில்மெண்ட் வரும் பணத்தையுமே மூன்றாக பிரித்து கொள்ளலாம்..” இதை சொல்லும் போது மட்டும் ஸ்ரீவச்சன் தங்கையின் முகத்தை பார்த்தான்..

சட்டப்படி திருமணம் ஆகாத பெண் இருந்தால், தந்தையின் வருவாய் அந்த பெண்ணை தானே சேரும்.. இது இவளுக்கு தெரியுமா என்று.. வர்ஷினிக்கு இது தெரியுமா தெரியாதா.? என்று தெரியவில்லை.. ஆனால் அண்ணனின் பேச்சை மறுக்க வில்லை.. அண்ணனின் பேச்சை என்ன யாரின் பேச்சையும் மறுத்து அவள் பேசவில்லை என்பது வேறு விசயம்..

பின் இது ஒரு வழியாக பேசி முடித்த பின் அடுத்து வர்ஷினி இனி எங்கு இருப்பாள். அடுத்து இந்த பேச்சு தான் ஸ்ரீவச்சன் பேச நினைத்தது..

ஆனால் வர்ஷினி.. “இங்கு இருந்து என் ஆபிஸ் ரொம்ப தூரமா இருக்கு.. அதனால நான் பக்கத்திலேயே ஒரு லேடிஸ் ஹாஸ்ட்டல் பார்த்துட்டேன்.. இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் கிளம்பிடுவேன்..” என்றதும்..

அண்ணியின் அம்மா. “ஆமா ஆமா அவ்வளவு தூரம் போக வர கஷ்ட்டம் தான்..” என்ற பேச்சோடு ஒருவழியாக அன்றைய பேச்சு முடிவடைந்தது தான்.

ஆனால் இவள் மிகவும் கம்மியான தன் உடை கை பை தன் வண்டி என்று தன் அண்ணன் ஸ்ரீவச்சன் வீட்டில் இருந்து கிளம்பும் சமயம்..

பைனல் டச்சாக… “வீட்டை வித்து உனக்கு சேர வேண்டிய பணம்.. அப்பாவின் செட்டில் மெண்ட் பணம் என்று உனக்கு வரது எல்லாத்தையுமே நீ பார்த்து வைத்து கொள்ளனும்.. புரியுதா..? அதை வைத்து தான் உனக்கு கல்யாணம்.. அதே மாதிரி வரும் சம்பளத்தில் மாதத்தை ஓட்ட பாரு… என்னாலேயும் மாசம் மாசம் பத்தாயிரம் என்று கொடுக்க முடியாது. ஏன்னா எனக்குமே ஒரு பெண் இருக்கா…?

ஓரே ஒரு முறை வாங்கிய அந்த பத்தாயிரத்தை பற்றியும், ஒன்னரை வயதே ஆன மகளுக்கு இப்போது தான் சேர்த்து வைப்பதை பற்றியும்.. சொல்லியே தான் அனுப்பி வைத்தனர்..

வர்ஷினி இதோ இந்த பெண்கள் விடுதியில் தங்கி தன் அலுவலகம் சென்று வந்து கொண்டு இருக்கிறாள்.. இந்த நான்கு மாதமாக. ஆம் அவள் பெற்றோர் இறந்து ஐந்து மாதமும்.. தனித்து அவள் வாழ்க்கையில் போராட தொடங்கி நான்கு மாதமும் ஆகிறது.

இந்த நாங்கு மாதத்தில் அவளின் அண்ணன் தாய் தந்தையரின் வீட்டை விலை பேசி விற்று விட்டான்.. அதோடு தந்தைக்கு வந்த பணம் என்று அன்று ஸ்ரீவச்சன் சொன்னது போல் தான் மூன்றாக பிரித்து கொடுத்து விட்டாள்..

மூன்று பங்காக முறையாக தான் பிரித்தான்.. அதில் எல்லாம் சரி தான். ஆனால் இதற்க்கு என்று அவன் வெளியில் அலைந்த போது போய் வந்த ட்ரவல்.. அதாவது ஓலோ… கேப்.. பின் உணவு ஏன் தண்ணீர் பாட்டில் கொண்டு தனியாக ஒரு ரசீதை கொண்டு வந்து கீர்த்தனா வர்ஷினியிடம் கொடுத்து விட்டான்..

கீர்த்தனா.. “சீ இப்படி பண்றான் அசிங்கமா.?” என்று தன்னிடம் சொல்ல. வர்ஷினி அதற்க்கு ஒன்றும் சொல்லவில்லை..

வர்ஷினி மேலும் அண்ணன் கொடுக்க சொன்ன பணத்தோடு பத்தாயிரத்தையும் சேர்த்து கொடுத்தவள்..

“அன்னைக்கு நீங்க கொடுத்திங்கல ண்ணா. பத்தாயிரம்..” என்று சொல்லி வர்ஷ்னி அண்ணிடம் கொடுக்க.

அந்த பணத்தை ஸ்ரீவச்சம் வாங்கும் போது கை நடுங்கியதோ… தெரியவில்லை ஆனால் அண்ணி.. பிரபா..

“ம் வாங்குங்க.. தனியா இருந்ததில் உங்க தங்கைக்கு பொறுப்பு வந்துடுச்சி போல.” என்று சொன்னதில்..

வர்ஷினி அதை மறுக்கவில்லை.. “உண்மை தான் அண்ணி… அப்பா சொன்ன போது புரியாத தெரியாத பல விசயத்தை அவர் போய் எனக்கு புரிய வைத்து விட்டார்…”

பின் தன் அக்கா அண்ணாவிடம்.. “அடுத்த வாரம் நான் ஜார்டன் போறேன் .. இந்தியா வர டூ இயர்ஸ் ஆகும்.” என்றும் கூறினாள்.

(இப்போது ஜார்டனில் தான் நம் நாயகன் தீக்க்ஷயனும்.. அவன் பேபியுடன் இருக்கிறான்..)








 
Member
Joined
May 11, 2024
Messages
68
❤️❤️❤️
Rombave pattutaa namma nayagi.. appo nammalum Jordan poromaa super❤️❤️❤️
 
Last edited:
Member
Joined
Jun 2, 2024
Messages
77
Nalla poguthu story...Jordan based epis ku waiting...intha onnukum udhavatha annanukum akka kum nalla punishment kedaikanum...
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
Nalla poguthu story...Jordan based epis ku waiting...intha onnukum udhavatha annanukum akka kum nalla punishment kedaikanum...
நன்றி பா.. கண்டிப்பாக அண்ணன் அக்காவுக்கு இருக்கு.. நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
Herova parka flight yera porala😍 marriage and property kuda piranthavamgala yeppadi mathiduthu😏nice interesting ud sis ❤️
Herova parka flight yera porala😍 marriage and property kuda piranthavamgala yeppadi mathiduthu😏nice interesting ud sis ❤️
நன்றி பா.. ஐந்தாவது அத்தியாயம் வருது இன்னும் சந்திக்காதது இருந்தால் தெய்வம் குத்தம் ஆகிடும்லே
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
பிசாசுங்க கூடப் பிறந்ததுங்களா இதுங்க.... 😈😈😈😈😈👹👹👹👹👹 இருக்குற வரைக்கும் பெத்தவங்ககிட்ட மட்டும் இல்லாம கூடப் பிறந்தவ கிட்டயும் சுரண்டிட்டு இப்போ ஒதுங்கிடுச்சுங்க... 🤮🤮🤮🤮🤮🥶🥶🥶🥶
இவங்களால நடந்த ஒரே நல்லது வர்ஷினி மனுஷங்களை புரிஞ்சுக்கிட்டா....

ஹீரோவைத் தேடி பறந்துட்டா..... 🤩🤩🤩🤩
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
வர்ஷினி இப்போ தான் உலகத்தை புரிஞ்சுக்க ஆரம்பித்து இருக்கா 🤗🤗🤗

அந்த நகை பணம் எல்லாம் எரிஞ்சது நல்லது தான் 🤗 🤗 இல்லன்னா அண்ணன் அக்கா இரண்டு பேரும் அதிலும் பங்கு புடுங்கிருப்பாங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶

வர்ஷு நல்லா சம்பாதிக்கிறா அதனால் அவளை வீட்டோட வச்சிக்கிட்டு சம்பளம் மொத்தத்தையும் ஆட்டைய போட்டுருவாங்களோ என்று நினைத்தேன் 🥺 🥺 🥺 🥺 நல்ல நேரம் அவளை ஹாஸ்டலுக்கு போக சொல்லிட்டாங்க 🤩 🤩 🤩 🤩 🤩


நல்ல குடும்பத்தில் தான் சம்பந்தம் பேசி வச்சிருந்திருக்காங்க 🙂🙂🙂 பரவாயில்லை தம்பி இல்லன்னா என்ன அண்ணன் இருக்காரே அவரை தட்டி தூக்கிடலாம் 😍😍😍😍😍😍😍
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
வர்ஷினி இப்போ தான் உலகத்தை புரிஞ்சுக்க ஆரம்பித்து இருக்கா 🤗🤗🤗

அந்த நகை பணம் எல்லாம் எரிஞ்சது நல்லது தான் 🤗 🤗 இல்லன்னா அண்ணன் அக்கா இரண்டு பேரும் அதிலும் பங்கு புடுங்கிருப்பாங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶

வர்ஷு நல்லா சம்பாதிக்கிறா அதனால் அவளை வீட்டோட வச்சிக்கிட்டு சம்பளம் மொத்தத்தையும் ஆட்டைய போட்டுருவாங்களோ என்று நினைத்தேன் 🥺 🥺 🥺 🥺 நல்ல நேரம் அவளை ஹாஸ்டலுக்கு போக சொல்லிட்டாங்க 🤩 🤩 🤩 🤩 🤩


நல்ல குடும்பத்தில் தான் சம்பந்தம் பேசி வச்சிருந்திருக்காங்க 🙂🙂🙂 பரவாயில்லை தம்பி இல்லன்னா என்ன அண்ணன் இருக்காரே அவரை தட்டி தூக்கிடலாம் 😍😍😍😍😍😍😍
வாங்க உதி டியர்....❤️ உங்க கமெண்ட் பார்த்ததும் ஹாப்பி....😍
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
வர்ஷினி இப்போ தான் உலகத்தை புரிஞ்சுக்க ஆரம்பித்து இருக்கா 🤗🤗🤗

அந்த நகை பணம் எல்லாம் எரிஞ்சது நல்லது தான் 🤗 🤗 இல்லன்னா அண்ணன் அக்கா இரண்டு பேரும் அதிலும் பங்கு புடுங்கிருப்பாங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶

வர்ஷு நல்லா சம்பாதிக்கிறா அதனால் அவளை வீட்டோட வச்சிக்கிட்டு சம்பளம் மொத்தத்தையும் ஆட்டைய போட்டுருவாங்களோ என்று நினைத்தேன் 🥺 🥺 🥺 🥺 நல்ல நேரம் அவளை ஹாஸ்டலுக்கு போக சொல்லிட்டாங்க 🤩 🤩 🤩 🤩 🤩


நல்ல குடும்பத்தில் தான் சம்பந்தம் பேசி வச்சிருந்திருக்காங்க 🙂🙂🙂 பரவாயில்லை தம்பி இல்லன்னா என்ன அண்ணன் இருக்காரே அவரை தட்டி தூக்கிடலாம் 😍😍😍😍😍😍😍
உதய் என்ன சொல்ல.. உங்களை போல நிறைய வாசகர்களின் கருத்தை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன்... உங்களின் வருகை கருத்துக்கு நன்றி பா.. தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்.. குறையிருந்தாலுமே.. மீண்டும் நன்றி
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
Pawam Varshini 😢😢😢
Avakitta irukkurappo avalai surandi eduthalunga… illainu vandhappo thurathi vittutunga…

Jordan porala?

Theekshanyan ku epdiyum news poi irukkum
இப்போது எல்லாம் ரத்த பந்தம் கூட தூரத்து உறவு போல தான் இருக்கு.. ஆனால் வர் ஷினி இனி தெளிந்து விடுவாள்.
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
பிசாசுங்க கூடப் பிறந்ததுங்களா இதுங்க.... 😈😈😈😈😈👹👹👹👹👹 இருக்குற வரைக்கும் பெத்தவங்ககிட்ட மட்டும் இல்லாம கூடப் பிறந்தவ கிட்டயும் சுரண்டிட்டு இப்போ ஒதுங்கிடுச்சுங்க... 🤮🤮🤮🤮🤮🥶🥶🥶🥶
இவங்களால நடந்த ஒரே நல்லது வர்ஷினி மனுஷங்களை புரிஞ்சுக்கிட்டா....

ஹீரோவைத் தேடி பறந்துட்டா..... 🤩🤩🤩🤩
சில உறவுகள் மட்டும் கிடையாது உடன் பிறப்புகளும் அப்படி தான் இருக்காங்க
 
Top