Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam-5

  • Thread Author
அத்தியாயம்..5

வர்ஷினி சொல்ல வேண்டியது தன் கடமை என்று தான் தன் அக்கா அண்ணனிடம் சொன்னது… அதனால் தான்.. அவர்கள் அந்த அளவுக்கு பட்டுக் கொள்ளாத போது வர்ஷினி கவலை படவில்லை..

முன் எல்லாம் இரண்டு வாரம் சென்றால் போதும் அண்ணன் குழந்தை அக்கா குழந்தையை பார்க்காது அவள் இருந்தது கிடையாது..

ஆனால் இரண்டு வாரம் எல்லாம் பார்க்காது அவளின் அக்காவும் அண்ணனும் விட்டது இல்லை என்பது வேறு விசயம்… இரண்டு வாரத்திற்க்கு முன் குடும்பமாக அம்மா வீட்டிற்க்கு வந்து விடுவார்கள்..

வர்ஷினி தான் குழந்தைகளை குளிப்பாட்டுவது முதல் ஊட்டுவது முதல் கொண்டு ஏன் தூங்குவதுமே இவளிடம் தான்..

அண்ணி அக்காவுக்கு அங்கு வந்தாலே முழு ஓய்வு தான்.. சமையலை அவள் அன்னை பார்த்து கொள்ள.. மேல் வேலைக்கி வேலையாள் இருக்க.. இவர்கள் இருவருக்கும் வேறு என்ன வேலை இருக்க போகிறது அங்கு..

இப்போது அதை நினைத்தவளுக்கு இவள் குழந்தைகளை பார்த்து கொண்டது எல்லாம் பெரியதாக தெரியவில்லை..

ஆனால் குழந்தைகளை காட்டி. கீர்த்தனா.. “வர்ஷி சித்தியை பார்க்கனும் வர்ஷி சித்தி கிட்ட பேசனும்..” என்று போன் செய்து தன்னிடம் கொடுக்கும் அக்கா.

அதே போல போனில் அக்கா பிள்ளைகளும்.. “சித்தி இது வேண்டும் அது வேண்டும்..” என்று தனக்கு வேண்டியதை சொல்லி விட்டு.

“சித்தி நாங்க அம்மம்மா வீட்டிற்க்கு வரும் போது இது எல்லாம் வாங்கி வைத்து இருக்கனும்..”

அப்போது அதை எல்லாம் குழந்தைகள் தன்னிடம் உரிமை எடுத்து கொள்கிறார்கள்.. என்று ஆசையாக வாங்கி வைப்பாள்.. அண்ணன் குழந்தைக்கு அவள் கேட்கும் வயது இல்லை என்றாலுமே ஒரு அனுபவம் கொடுத்ததில் அவளுக்கும் சேர்த்தே வாங்கி வைத்து விடுவாள்..

ஆனால் இன்று அன்று தன்னை தேடிய குழந்தைகள் இந்த ஐந்து மாதத்தில் ஒரு நாள் கூடவா தேடவில்லை…? அப்போ முன் தேடியது.. புரியவில்லை.. அதனால் குழந்தைகளை பற்றிய பேச்சை வர்ஷினி எடுக்கவில்லை..

பின் வீடு விற்ற பணம் கொடுக்கும் போது மட்டும்.. அவளின் அண்ணன் ஸ்ரீவச்சன்..

“பார்த்து வைத்து கொள்..” என்று சொல்ல..

அண்ணியோ.. “நகை வாங்கிக்கோ.. அது விலை பாட்டுக்கு ஏறிட்டே போகுது..” என்று சொன்ன பிரபா..

பின் உடனே.. “எல்லாத்துக்குமே நகையா வாங்கி வைத்து கொள்ளாதே… சிக்கனமா கல்யாணம் செய்யனும் என்றாலும், ஒரு பத்து லட்சமாவது தேவைப்படும்..” என்று சொன்னார்.

பிரபா.. எதற்க்கு இதை சொல்கிறாள் என்பது மனிதர்களை படிக்க தொடங்கி விட்ட வர்ஷினி புரிந்து கொண்டு விட்டாள்.. எங்கு கல்யாணன் செலவு தன் கணவன் தலையில் விழுந்து விட போகிறது என்ற பயத்தில் தான் அண்ணி இப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டாலுமே.

வர்ஷினி.. “சரிங்க அண்ணி.” என்று தான் தன் பேச்சை முடித்தாள்..

ஆனால் ஸ்ரீவச்சனுக்கு தங்கையிண் இந்த அமைதி அவனுக்கு என்ன உணர்த்தியதோ..

“ஒரு இரண்டு வருஷத்தில் வேறு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செய்துக்கலாம்.. உனக்கு இப்போ என்ன வயசு ஆகுது.. இருபத்தி மூன்று தானே…” என்றவனின் பேச்சில் மனதில் சிரித்து கொண்டாள்..

அதனால் அமைதியாக நின்று விட.. பின் அவள் ஜார்டன் செல்லும் நாளில் தான் வர்ஷி தன் அக்கா அண்ணாவை அழைத்து.
“நான் இன்று செல்கிறேன்..” என்றது..

குறைந்த பட்சம்.. அங்கு எங்கே தங்குற.. பாதுக்காப்பா இது போல வார்த்தைகள் எல்லாம் அவர்கள் கேட்கவில்லை..

கேட்டது “அங்கு என்ன சேலரி கொடுப்பாங்க..?” என்று தான்.. முன் என்றால் சொல்லி இருப்பாள்..

ஆனால் இப்போது சொல்லாது.. நான் இந்த ஹபர் ஏற்றதே ஒரு எக்ஸ்பிரியன்ஸ்க்காக தான்..” என்று பொதுவாக சொல்லி விட்டாள்..

ஆனால் உண்மையில் அது இல்லை.. பணம்.. பணத்திற்க்காக தான்.. இவளே தன் டீம் மேனஜரிடம் கேட்டு போவது..

அவர்களும் இவள் கேட்டால் என்று இந்த வாய்ப்பை இவளுக்கு கொடுத்து விட வில்லை..

இவள் திருமணம் நிச்சயம் ஆகும் சமயமே. அவள் ஆபிஸ் இவளை ஜார்டனுக்கு போக வாய்ப்பு கொடுத்தது..

வர்ஷினி அப்போது மனிதர்களை புரிந்து கொள்வதில் தான் தவறி விட்டாள்.. ஆனால் படிப்பும் ஆகட்டும் வேலையாகட்டும்.. மற்றவர்களோடு விரைவாகவும்.. தவறு இல்லாதும் தன் வேலைகளை முடித்து கொடுத்து விடுவாள்..

இவள் தன் வேலைகளை விரைந்து முடித்து கொடுத்ததை கவனித்து தான்.. வர்ஷினியின் மேனஜர்.. ஜார்டன் போக இவளை ரெகமெண்ட் செய்தது..

இவளோ.. அப்போது நோ “இன்ரெஸ்ட்டடு” என்று விட்டாள்..

அந்த வாய்ப்பை மிக சுமாராக வேலை பார்க்கும் ஒருத்திக்கு இவள் அந்த வேலைகளை கற்று கொடுக்க… அவள் ஜார்டனுக்கு அனுப்பப்பட்டாள்..

அவள் அங்கு சென்ற பின் கூட அவள் பார்க்கும் வேலைகளில் பிரச்சனையோ… தெரியவில்லை என்றாலோ.. இவளை தான் அழைத்து விடுவாள்..

இந்த விசயம் இவள் டீம் லீடருக்கும் தெரியும்.. மேனஜருக்கும் தெரியும்.. அதனால் தான் ஜார்டன் சென்ற அந்த பெண்ணிடம்..

“உன் பாதி சேலரியை நீ வர்ஷினிக்கு தான் கொடுக்க வேண்டும்..” என்று சொல்லி கிண்டலும் செய்து இருக்கின்றனர்..

வர்ஷினியின் பெற்றோர் இறந்தது.. பின் திருமணம் நின்று விட்டது.. என்று தெரிந்த இவளின் டீம் லீடரும்.. மேனஜரும்.. இவள் கேட்டதுமே..

அவர்கள் பக்கத்தில் இருந்து இவள் ஜார்டன் போக என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தனர்.. இவள் வீட்டில் எரிந்ததில் எரிந்த பொருட்களில் இவளின் பாஸ்போர்ட் ஆதார் பான்கார்ட் என்று அனைத்துமே எரிந்து விட்டது தான்.

ஆனால் அதன் அனைத்து காப்பியும் அவள் கை பேசியில் இருந்ததினால், பிரச்சனை இல்லாது அனைத்துமே வாங்கி கொண்டு விட்டாள்..

என்ன ஒன்று அதை வாங்க அரசாங்க அலுவகத்திற்க்கு அலைந்தது.. அங்கு கொடுக்க வேண்டிய லஞ்சம் என்று… அந்த நிகழ்வுகள் கூட வர்ஷினிக்கு ஒரு பாடமாக தான் அமைந்தது.

பணம்.. பணத்தை கொண்டு தான் அனைத்தும் சுழல்கிறது என்பதை. ஆனால் ஒட்டு மொத்தவர்களையும் இப்படி சொல்லி விட முடியாது..ஒரு சில நல்லவர்களையும் பார்த்தாள் தான்…

இந்த இடைப்பட்ட நாட்களில் ஒருவர் சமையல் தெரிந்து வைத்து கொள்வது எவ்வளவு முக்கியமானது என்பதைம் புரிந்து கொண்டு விட்டாள்..

மூன்று வேலைக்கு மூன்று தினுசாக சாப்பிட்டவளுக்கு அவள் தங்கி இருந்த அந்த பெண்கள் விடுதியில் சாப்பிடும் சாப்பாடு… சாப்பாட்டை குறை சொல்ல கூடாது தான்.. ஆனால் உண்மையில் அவளாள் வாயில் வைக்க முடியவில்லை..

கடைசியாக தன் அன்னை சமைத்து சாப்பிட்ட அந்த பூரி வடகறியும்.. தான் வண்டி எடுக்கும் போது.

“சாப்பிட்டு போடி..” என்று சொன்ன வார்த்தைகளுமே வர்ஷினிக்கு மீண்டும் மீண்டும் நியாபகத்தில் வந்தது..

பழைய நினைவுகளிலும், புதிய பிரச்சனைகலிலுமே அவளை மூழ்கடித்ததில், ஒரு நல்ல விசயம் நடந்தது என்ன என்றால், தன் பெற்றோர்களை ஒரே சமயத்தில் இழந்த இழப்பையும், தன் கல்யாண கனவு கனவாகவே ஆகி விட்டது என்பதையும் அவளுக்கு நினைக்க கூட நேரம் இல்லாது போய் விட்டது..

இப்போது எல்லாம் வர்ஷினி தன் பணத்தை பார்த்து பார்த்து தான் செலவு செய்கிறாள்.. முன் எல்லாம் உணவு பிடிக்கவில்லை என்றால், ஸ்வீகி.. சோமோட்டா என்று ஆர்டர் செய்பவள்..

இப்போதோ பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ.. அவள் விடுதியில் கொடுக்கும் உணவை வைத்தே முடித்து கொள்பவள்..

தன் கம்பெனியில் காபி டீ மட்டும் தான் வெளியில் காசு கொடுத்து வாங்குவது… இதுவுமே தேவை என்றால் மட்டுமே.. அதே போல் தன் பங்காக வந்த பணத்தை வங்கியிலும் மீச்சுவலிலும் பாதகம் வராத அளவுக்கு தான் போட்டவள்..

இதோ வர்ஷினி தன் அடுத்த கட்டமாக ஜார்டனை நோக்கி அவள் தன் பயணத்தை தொடங்கினாள்..

புதிய நாடு… முதல் முறை விமான பயணம்.. மனதில் பயம் எழ தான் செய்தது.. ஆனால் இனி வாழ்க்கை முழுவதுமே தனித்து தான் பயணம் எனும் போது.. இதற்க்கே பயந்தால் எப்படி என்று நினைத்தவள் தன் பயத்தை முகத்தில் கூட காட்டாது இதோ வெளிநாடான ஜார்டன் சென்றடைந்தாள்..

ஆனால் தனித்து தான் இனி உன் பயணம் என்று நீ நினைத்தால் மட்டும் போதுமா…? அதை நான் தானே முடிவு செய்வது. என்ற பிரம்மன்..

வர்ஷினியின் பக்கத்தில் தீக்க்ஷயன் என்று எழுதி இருந்தது போல என்ன ஒன்று கூடுதலாக தீராவின் பெயரும் இடம் பெற்று இருந்தது அவ்வளவே.

ஜார்டனுக்கு தனித்து சென்ற அவளின் அந்த விமான பயணம் இந்தியா திரும்பும் போது தீக்க்ஷயன் தீராவோடு தான் திரும்புவாள் என்று தெரியாது.. ஜார்டன் வந்து இறங்கியதுமே அங்கு நிலவிய குளிரை தாக்கு பிடிக்க.

அதற்க்கு உண்டான உடையை எடுத்து அணிந்து கொண்டவள் தன் கம்பெனியில் முன் சென்றவர்கள் சொன்ன வழிகாட்டுதலோடு தன் பேசியில் அவர்கள் கம்பெனியில் கொடுத்த அவள் வேலை செய்யும் இடத்திற்க்கு மிக அருகாமையில் இவர்கள் கம்பெனி ஏற்பாடு செய்து இருந்த அந்த ஒட்டலின் பெயரை சொன்னதோடு அந்த ஒட்டலின் முகப்பையும் அந்த கார் ஓட்டுனரிடம் காட்டினாள்.

அவர்கள் பாஷை.. இவளுக்கு புரியாததினாலும். அந்த ஓட்டுனருக்கு ஆங்கிலம் தெரியாததினாலும். விமான நிலையத்திற்க்கும் இவள் வேலை செய்யும் இடமும் வெகு தூரம் போல. இரண்டரை மணி நேரம் கழித்து தான் அவள் தங்க வேண்டிய ஒட்டல் வந்து சேர்ந்தது.

முன் சென்றவர்கள் இதை சொன்னார்கள் தான்.. ஆனாலுமே வர்ஷினி அந்த இரண்டு மணி நேரத்தை பயந்தே தான் செலவிட்டாள்..

சரியாக தான் தங்கும் ஒட்டலில் வந்து நின்றாலுமே, தன் கை பேசியில் பதிவு செய்து வந்த பெயரும் அந்த புகைப்படத்தில் இருப்பது போல முகப்பும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்த பின் தான் காரை விட்டி இறங்கியதும்.. பின் அந்த நாட்டு பணமாக கம்பெனி கொடுத்து விட்டதில் இருந்து எடுத்து கொடுத்தவள்..

இரண்டு சூட் கேசும். ஹான் லக்கேஜையும் எப்படி கொண்டு செல்வது என்று இவள் தயங்கி நிற்கும் போதே.

இவள் பயிற்ச்சி கொடுத்த பெண்ணான வித்யா இவளை பார்த்து ஓடி வந்தாள்.. இவளை பார்த்ததில் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி…

சிரித்து கொண்டே. “வா வர்ஷி..” என்று சந்தோஷமாக வர வேற்றவள்.. பின் அவளின் முகம் உடனே மாறி..

“சாரி வர்ஷி நான் கேள்வி பட்டேன்..” என்ற வார்த்தை எதற்க்கு என்று புரிந்து கொண்டவள் அமைதியாக விட.. ஆனால் வித்யா அடுத்து பேசிய..

“அந்த மேரஜ்..” என்று தயங்கி பேச்சை ஆரம்பிக்கும் போதே வர்ஷினி திட்டவட்டமாக..

“அது முடிந்து விட்டது… வித்யா. அந்த பேச்சு வேண்டாமே..” என்று திட்டவட்டமாக பேசியவளையே வித்யா வித்தியாசமாக பார்த்தாள்..

இவளுக்கு இப்படி அழுத்தி எல்லாம் பேச வருமா என்பது போல. எப்போதுமே சிரித்து கொண்டும்.. கொஞ்சிக் ..கொண்டும் தான் அவள் பேச்சுக்கள் இருக்கும்.. ஆனால் என்று யோசிக்கும் போதே..

வர்ஷினி தன் லக்கேஜை தூக்கி கொள்ள. வித்யாவும் அவளுக்கு உதவி செய்ததால் வர்ஷினி அவளுக்கு என்று கொடுக்கப்பட்ட தன் அறைக்குள் எளிதாகவே தன் பொருட்களை கொண்டு வந்து விட்டாள்..

வித்யா அலுவலகம் செல்ல தான் வெளியில் வந்தது. அந்த ஒட்டலும் அவர்கள் வேலை பார்க்கும் அந்த ஐடி நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்தது தான்.. அதனால் கம்பெனிக்கு என்று இங்கு இருக்கும் பேங்கில் வேலை பார்க்க இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அனைவருமே அங்கு தான் தங்கி இருக்கிறார்கள்..

வித்யா அதை பற்றி ஏதோ சொல்ல வர. “உனக்கு ஆபிசுக்கு நேரம் ஆகுது பாரு. நீ கிளம்பு இனி நான் பார்த்து கொள்கிறேன்..” என்று சொல்லி அவளை அனுப்பி விட்டவள்.. பின் தான் தனக்கு என்று கொடுப்பட்ட அந்த அறையை பார்த்தாள்..

அதை அறை என்பதை விட.. ஒரு சூட் என்று சொன்னால் சரியாக இருக்கும்.. கிச்சன் ஒரு படுக்கை அறை முன் ஒரு சிறிய ஸ்போஸ் என்று ஒரு கம்பர்ட்டபுலாக தான் இருந்தது.

முதலில் சமையல் அறைக்கு சென்று அங்கு இருந்த ஸ்டவ்வை வேலை செய்கிறதா என்று சரி பார்த்து கொண்டாள்.. அங்கு எல்லாம் இன்டெக்ஷன் ஸ்டவ் போல் தான் இருக்கும்… ஆனால் அளவில் சிறிது பெரியதாக.இங்கு அது தான் அவ்வப்போது மக்கர் செய்யும் என்று முன் இங்கு வந்தவர்கள் சொல்ல கேட்டவள்..

அதனல் அது சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்தாள்.. அப்பாடா. வேலை செய்கிறது.. ஒரு நிம்மதி.. பின் என்ன செய்வது என்று யோசித்தாள்.. வந்த சோர்வு.. இந்த குளிருக்கு சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் போல இருந்தது,

வெளியில் மட்டும் தான் குளிர்.. இங்கு அறை முழுவதுமே ஹிட்டர் போட்டு கொஞ்சம் வெப்பமாக தான் இருந்தது,..

ஆனால் வர்ஷினி பொதுவாகவே குளிரை தாங்க மாட்டாள்… இந்தியாவிலேயே கொஞ்சம் மழை பெய்தால் கூட ஸ்வெட்டரை எடுத்து மாட்டி கொண்டு தான் வீட்டில் நடமாடுவது..

அவள் அம்மா கூட.. “ உனக்கு பனி கொட்டும் ஊரா தான் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும்..” என்று கிண்டல் செய்வார்..

பின் தனக்கு நிச்சயம் ஆனதில்.. இவள் தாயை கிண்டலாக.. “பார்த்திங்கலா நான் இந்தியாவிலேயே எனக்கு மாப்பிள்ளை அமைந்து விட்டது..” என்று தன் அம்மாவை வெறுப்பு ஏற்றியது…

அதை நினைக்கயிலேயே.. “ம்மா நீங்க சொன்னது போல வெளி நாடு குளிர் பிரதேசத்துக்கு தான் வந்து இருக்கேன் ம்மா. ஆனால் கல்யாணம் ஆகி இல்ல… “ என்று நினைத்தவள்.

இல்ல இல்ல இது போல நான் சோர்வாக கூடாது. இன்னும் இருக்கு.. இன்னுமே இருக்கு என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள்..

பின் நடை முறைக்கு மீண்டும் திரும்பி வந்தவளின் மனது அடுத்து என்ன என்று யோசனைக்கு சென்றது.. நாளை தான் வேலையில் சேர வேண்டும்..

அதனால் முதலில் சூடாக குடிக்க பால் பவுடர் சர்க்கரை காபி தூள் இது எல்லாம் வேண்டும் என்று நினைத்தவள்..

சமையல் பொருட்களை மட்டுமே வைத்து இருந்த சூட்கேசை படுக்கை அறையில் இருந்து சமையல் அறைக்கு தள்ளிக் கொண்டு வந்தவள்..

அங்கு இருந்த ஷெல்பில் வரிசையாக ஒவ்வொன்றாக அடுக்க தொடங்கினாள், இப்போது காபி கலக்க தேவைப்படும் பொருட்களை மட்டும் சமையல் மேடையில் வைத்தவள் பின் அனைத்துமே அடுக்கி முடித்து விட்டு, அவள் நாவு கேட்ட காபியையும் கலந்த பின் படுக்கை அறைக்கு வந்தவள் அதை ஆர அமர குடிக்க தொடங்கினாள்..

காபி குடிக்கும் போது மீண்டும் அந்த அறையின் வசதியை தான் பார்த்தாள்.. இவள் ஒருத்திக்கு இந்த அறை அதிகம் தான் என்பது போல மிக வசதியாகவே இருந்தது..

இந்த தங்கும் இடம் கம்பெனி பார்த்து கொள்ளும்.. உணவு இவர்களுடையது… இவளுக்கு பேசப்பட்ட சம்பளம் இரண்டரை லட்சம்..

அவர் அவர் உணவு செலவு போக எவ்வளவு மிச்சம் பிடிக்கிறார்களோ.. அது அவர் அவர் திறமை..

அனைத்துமே தெரிந்து விசாரித்து தான் வர்ஷினி ஜார்டன் வந்து இறங்கி இருக்கிறாள்..

அதனால் இங்கு இந்திய வகை உணவு பொருட்கள் வாங்களை தான் கொண்டு வரும் எடைக்குள் எது விலை அதிகமோ.. அதை எல்லாம் எந்த அளவுக்கு வாங்க முடியுமோ வாங்கி வந்து விட்டாள்..

முன் வித்யா தான் வேலை விசயமாக வர்ஷினிக்கு போன் செய்து கொண்டு இருப்பாள்..

ஆனால் இந்த ஒரு மாத காலமாக வர்ஷினியே வித்யாவுக்கு அழைத்து அனைத்தையுமே தெரிந்து கொண்டாள்..

அதன் படி மளிகை பொருட்கள் இங்கு என்ன விலை அதிகமோ அனைத்தையும் வாங்கி கொண்டவள்..

உடை என்பது தேவையான அளவுக்கும்.. ஆனால் குளிருக்கு பாதுகாப்பு உடையை மட்டும் தரத்தோடும் வாங்கிக் கொண்டாள்..

பின் காபி குடித்த பின் மதியம் சிறிது நேரம் உறங்கியம் எழுந்து இரவுக்கு தேவையான உணவாக அரிசி பருப்பு இரண்டையும் ஒன்றாக வேக வைத்தவள்.. அதில் சிறிது கடுகு காஞ்ச மிளகாய் போட்டு தாளித்து உப்பையும் சேர்த்து கலந்து வைத்தவள் இரவு உணவாக சமைத்த பின்.. அறையிலேயே இருப்பது அவளுக்கு ஒரு மாதிரியாக இருக்க.

அந்த தளத்தில் சிறிது நடந்து வரலாம் என்று நினைத்து வெளி வந்தவள்.. அந்த தளத்தில் நடக்கும் போது தான் ..

“ம்மா…” என்று மீண்டும் தீராவின் அழைப்பை கேட்டது…
















 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Ninaichen… same hotel la than Theekshanyan iruppan nu…

One doubt… Jordan Middle East la thane irukku… adhu cool country illaiye. Hot country… Nov Dec Jan la than cool ah irukkum… mathapadi romba heat… Like Dubai Qatar
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
இந்த எபில ஹீரோ ஹீரோயின் மீட் பண்ணுவாங்க என்று எதிர் பார்த்தேன் 🧐 🧐 🧐 🧐

சம்பளம் எவ்வளவு என்று தெரிஞ்சா அதை சுரண்ட என்ன வழி என்று திட்டம் போட்டு இருப்பாங்க 🥶🥶🥶🥶

தீரா குட்டி அம்மாவை பார்த்துட்டா 🙂🙂🙂🙂🙂🙂இனி அப்பா கூட சேர்த்து வைக்கிற வேலைய அவளே பார்த்துக்குவா 😍😍😍😍😍
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
அண்ணனுக்காவது கொஞ்சம் குற்ற உணர்ச்சி இருக்கும் போல தங்கச்சி முகம் பார்த்து ஆனா அக்கா சுத்த வேஸ்ட்......
சம்பளம் எவ்வளவாம் பணத்துல தான் குறி....

தீரா பேபி அம்மாவை பார்த்துட்டா...... 😍😍😍😍
ஒரே இடத்துல வேற தங்கியிருக்காங்க இனி விட மாட்டா..
....🙂
 
Top