Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam-8

  • Thread Author
அத்தியாயம்-8

“என்ன டா நான் பாட்டுக்கு புலம்பிட்டு இருக்கேன்.. நீ எனக்கு என்ன வந்தது என்று இருந்தால் என்ன அர்த்தம்..?” என்று கெளதம் முன் இருந்த குரல் போல் இல்லாது சத்தமாக பேசிக் கொண்டே அவன் முன் இருந்த கணினியை பட்டென்று மூடியவனை நிமிர்ந்து பார்த்த தீக்க்ஷயன்..

“என்னை என்ன சொல்ல சொல்ற…?” என்று நிதானமாக கேட்ட நண்பனை கெளதம் ஆற்றாமையோடு பார்த்தான்..

“ஏன்டா இவ்வளவு நேரமா நான் எதை பத்தி பேசிட்டு இருக்கேன் என்று உனக்கு புரியலையாடா…? அந்த சுகன் சொல்றான்.. நாளைக்கு அவன் பிறந்த நாளாம்.. தன் விருப்பத்தை நம்ம எல்லோர் முன்னும் சொல்ல போறான் என்று சொல்றான்.. அதை கேட்டுட்டு எனக்கே அவனை பட்டு பட்டு என்று அரையலாம் போல இருக்கு.. ஆனா நீ என்னவோ புத்தனை போல அமைதியா இருக்க..?” என்று தன் ஆதங்கத்தை இன்னும் கொட்ட..

“கெளதம் அக்சுவலி இந்த புத்தன் போல நீ தான் இருக்க வேண்டும்.. ஏன்னா உன் பெயர் அர்த்தம் அது தான்..” என்று கிண்டலாக பேச.

“அதே தான் சொல்றேன் டா உன் பெயரில் மட்டும் தீயை வைத்து இருந்தா போதாதுடா உன் செயலிலும் அது இருக்க வேண்டும்.. நீ முதல்ல எல்லாம் அப்படி தானேடா இருந்த..? “ என்ற நண்பனின் பேச்சே தீக்க்ஷயனின் நினைவுகள் வேறு எங்கோ கொண்டு போக போதுமானதாக இருந்தது.

“நான் அப்படியே இருந்தா.. இப்போ என் குடும்பம் என்ற பெயர் அளவிலாவது ஊரில் இருக்கு.. அது இல்லாம போய் இருக்கும்.” என்ற நண்பனின் பேச்சில் கெளதம்.

“சாரிடா நான் ஏதோ நினைத்து பேச. உனக்கு எதேதோ நியாபகம் படுத்தி விட்டு விட்டேன்..” என்று வருந்தி சொன்னான்.. தீக்ஷயனை பற்றி அனைத்துமே அறிந்திருந்த கெளதம்.

பின் அவனே அதை எல்லாம் விடு தீக்க்ஷா.. இந்த சுகன் கொசுவிடம் சொல்லி விடு நான் வர்ஷியை விரும்புறேன்..” என்று சொன்னதோடு அவன் கை பற்றியும் இப்போதே சொல் என்பது போல் இழுக்க…

தீக்க்ஷயன்.. “நான் வர்ஷியை விரும்புறேன் என்று சொன்னா சுகனே சிரித்து விடுவான் டா..” என்று சொல்லி நண்பனின் கை பிடியில் இருந்து தன் கையை விடு வித்து கொண்டவன்..

மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்ட தீக்க்ஷயனின் முகத்தில் குழப்பமும்.. பரிதவிப்பும் சரி பாதியாக காணப்பட…

அதை பார்த்த கெளதமுக்கு தான்.. எப்படியாவது வர்ஷினியை இவனோடு சேர்த்து வைத்து விட வேண்டும் என்ற கங்கணம் கட்டிக் கொண்டவனாக..

“எனக்கு புரியல நீ வர்ஷினியை லவ் பண்ணா அவன் ஏன் சிரிக்கனும்.. அவன் அவளை லவ் பண்ண தகுதி இருக்கும் போது நீ லவ் பண்ண தகுதி இல்லையா என்ன..?” என்று கெளதம் கேட்ட அடுத்த நொடி..

தீக்க்ஷயன்.. “ இல்ல. தான்.. அவன் இன்னுமே பேச்சிலர் .. ஆனா நான் மனைவியை இழந்து ஒரு குழந்தைக்கு அப்பா… எனக்கு இன்னொரு வாழ்க்கை வேண்டும் என்றால், என்னை போல ஒரு பெண்ணை தான்.. திருமணம் செய்து கொள்ள முடியும்.. கன்னி பெண்ணுக்கு புருஷன் ஆகும் தகுதி என் கிட்ட இல்ல..” என்ற நண்பனிடம்..

“என்ன டா கல்யாணம் ஆனவன் நீ.. அந்த கல்யாணமே ஒரு பேர்ஜரிடா. அதுவும் அந்த பெண்ணுடன் என்ன டா நீ பெருசா வாழ்ந்துட்ட.. நான்கு முறை.. ஐந்து முறை.. அதுல ஒரு குழந்தை உண்டாகி விட்டது.. இதுல ஒரு கன்னி பெண்ணை கல்யாணம் செய்ய உன் தகுதி போய் விட்டதா. என்ன..?

கல்யாணம் ஆகாத எல்லா பையனுமே வர்ஜின் என்று உன்னால திட்டவட்டமா சொல்ல முடியுமா…?” என்று கேட்டவனுக்கு பதில் தீக்க்ஷயனிடம் இல்லை தான்..

ஒரு வகையில் கெளதம் சொல்வதும் சரி தான்.. திருமணம் ஆகாத பையன்கள் அனைவருமே.. நான் எல்லோரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை… பெண்களை தொட்டதே இல்லை என்று எல்லாம் சொல்ல முடியாது தான்..

ஆனால் ஒரு வகையில் பார்த்தால், தீக்க்ஷயன் சொல்வதும் உண்மை தான். எந்த பெண்ணுமே ஒரு குழந்தையோடு இருக்கும் தந்தையை விரும்ப மாட்டாள் தான்.. எந்த பெண்ணுக்குமே தன் கணவன் தன் குழந்தை என்று புதியதாக வருங்கால வாழ்க்கையை தான் திட்டமிடுவர்.

இருவரும் நினைப்பதுமே சரி எனும் போது எது சரி என்பதை நம் வர்ஷினி தான் முடிவு செய்ய வேண்டும்.. பார்க்கலாம் அவள் முடிவையுமே அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா.? அப்படி ஏற்றுக் கொண்டாலுமே, அதை எப்படி பார்ப்பார்கள் அவளை எப்படி நடத்துவார்கள் என்பது பின் தானே தெரிய வரும்..

சரி இப்போது கதையான இதோ இன்று சுகனின் பிறந்த நாள்.. அங்கு வந்த அனைவருக்குமே யாருக்கு பிறந்த நாளோ அந்த நபரின் அறையில் தான் மற்றவர்கள் அனைவரும் இருப்பர்..

பன்னிரெண்டு மணிக்கு கேக் கட் செய்து விட்டு ஒய்ன் .. ஒரு மணி நேரம் வரை கொண்டாடி அவர் அவர் அறைக்கு சென்று விடுவர்..

இன்றும் அதே போல் அனைவரும் சுகன் அறையில் தான் அனைவரும் அமர்ந்து எப்போது மணி பன்னிரெண்டு ஆகும் என்று காத்திருக்க. இதில் தீக்க்ஷயன் கெளதம் மட்டுமே பன்னிரெண்டை அங்கு மாட்டி இருந்த கடிக்கார முள் நெருங்க நெருங்க.. மனது அடித்து கொண்டது..

காரணம் கேக் கட் செய்து முதல் துண்டை வர்ஷினிக்கு ஊட்டி நான் என் காதலை சொல்ல போகிறேன் என்று கெளதம் தீக்ஷயனிடம்.. சுகன் கொஞ்ச நேரம் முன் தான் சொல்லி இருந்தான்..

முதலில் ஆண்கள் தான் சுகன் அறைக்கு வந்தது. பின் தான் பெண்கள் வந்தனர்.. எப்போதுமே வேலையை முடித்து விட்டு வந்த உடன் தீரா வர்ஷினியிடமே தான் இருப்பாள்.. அதே போல் இன்றுமே இருக்க வர்ஷினி தான் தீராவின் கை பற்றிக் கொண்டு சுகன் அறைக்கு வந்தது..

அந்த காட்சியை பார்த்த தீக்ஷக்யனுக்கு.. மனது நிறைந்து தான் இருந்தது.. ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் முன் வர்ஷினிக்கு சுகன் கேக் ஊட்டி விடும் காட்சியை தன்னால் பார்க்க முடியுமா என்ற அந்த காட்சியை நினைத்து பார்க்க கூட அவனால் முடியவில்லை.. அதை நினைத்தே அவனால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை..

ஆனால் வர்ஷினி இங்கு இருக்க.. இந்த அறையை விட்டு போகவும் அவனுக்கு மனது இல்லை.. இரு தலை கொள்ளி என்பார்களே அந்த நிலையில் தான் தீக்க்ஷயன் சுகன் அறையில் அமர்ந்திருந்தான்..

கெளதமுக்கு நண்பனின் மனநிலை நன்கு புரிந்தது.. அதில் தீக்க்ஷயனை ஒட்டியது போல அமர்ந்து அவன் காதருகில்..

“இப்போது கூட கெட்டு போகல தீக்ஷயா.. உன் விருப்பத்தை அவனுக்கு முன் நீ சொல்லி விடு..” என்றவனை தீக்க்ஷயன் தீயாய் முறைக்க..

“இந்த பார்வையை நீ என்னை பார்க்க கூடாது அவனை தான் பார்க்க வேண்டும்..” என்று சொல்லி சுகன் பக்கம் கை காட்டினான்.

அனைத்தும் நிறைந்து இருந்தும்.. தீக்க்ஷயனுக்கு தன் காதலை வர்ஷினியிடம் சொல்ல முடியாது தவித்து கொண்டு இருந்த போது தான் இதோ பன்னிரெண்டு மணியாக சிறிது நேரமே இருக்க..

கேக் எடுத்து வைத்து கேண்டில் ஏத்தி அதற்க்கு தோதான பொருட்களோடு கேக் கட் செய்தால் அனைவருக்கும் கொடுக்க சின்ன சின்ன தட்டுக்கள் என்று தயாராக இருந்த போது தான் சுகன்.

வர்ஷினி பக்கம் பார்த்தவன். தன் பக்கம் வா என்பது போல் அழைத்தான். தீக்க்ஷயனுக்கு அந்த காட்சியை பார்த்த போதே.. அப்படி ஒரு கோபம் ஆவேசம். சுகனை அடித்து விடலாம் போன்ற எண்ணம் தான்..

ஆனால் பாவம் வர்ஷினியோ.. தன்னை பார்த்து அழைத்த சுகனை புரிந்து கொள்ளாது தன் மடியில் அமர்ந்திருந்த தீராவை தான் அழைக்கிறான் என்று நினைத்து..

தீராவிடம்.. “அங்கிள் உன்னை கூப்பிடுறார் போறியா லட்டூ..?” என்று கேட்டாள்.. இந்த பேச்சு அனைவரும் கேட்க தான் நடந்தது..

அவளின் இந்த பேச்சில் தீக்க்ஷயனின் கோபம் இருந்த இடம் தெரியாது மறைந்து போக… அடுத்து தீரா…

“நோம்மா நான் உன் மடியில் தான் இருப்பேன்.” இந்த ஆறு மாத காலத்தில் தீராவின் பேச்சு கொஞ்சம் தெளிவாகவே பேச தொடங்கி இருந்தாள்..

சுகனை பார்த்த வர்ஷினி… “பாப்பா என் கிட்டேயே இருக்கேன் என்றா..” என்றதுமே சுகனுக்கு நான் இவளை தானே அழைத்தேன்.. இவளை அழைத்ததை புரிந்து கொள்ள முடியவில்லையா.? இல்லை புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறாளா.? என்ற சந்தேகம் வந்தாலுமே.

“நீயும் வா…” என்று விட்டான் சுகன்..

அதாவது குழந்தையையே அவன் அழைத்தது போலவும்.. குழந்தை தனித்து வர முடியாது என்றாலுமே நீ வைத்து இரு… என்பது மாதிரி பேச.

தீக்க்ஷயனின் பல் மீண்டும் அரைப்பட்டு கொண்டு இருக்க. இன்னும் அரை படாதவாறு..

வர்ஷினி.. தீக்க்ஷயனிடம்.. “நீங்க பாப்பாவை கூட்டிட்டு போங்க..” என்று சொல்லி விட்டாள்..

குழந்தையோடு என்றாலுமே சுகன் பக்கம் வர்ஷினி நிற்க விரும்பவில்லை.. அதுவும் அவன் தன்னை பார்க்கிறான் என்று தெரிந்த பின் நிற்பது அவனின் விருப்பத்திற்க்கு மறைமுகமாக ஒத்து கொள்வது போல் அவன் நினைத்து விட கூடாது..

தன் எந்த செயலும் சுகனுக்கு நம்பிக்கை அளிப்பது போல் அமைந்து விட கூடாது எந்த வகையிலும் தான் அவனுக்கு நம்பிக்கையை கொடுத்து விட கூடாது என்பதில் வர்ஷ்னி மிக தெளிவாகவே இருந்தாள்..

அவளின் அந்த தெளிவில் தீக்ஷயனின் கோபம் குறைந்ததோடு, அவள் சுகனுக்கு எந்த விதத்திலுமே நம்பிக்கை கொடுக்கவிரும்பவில்லை என்பது அவன் புரிந்து கொண்டான் தான்..

அதில் மகிழ்ச்சியே. ஆனால் அவனிடமே மனம் செல்லாது இருப்பவள் தன்னை எப்படி..? அதுவும் உன் குழந்தைக்கு நான் ஆயா வேலை பார்க்க மாட்டேன்.. இந்தியாவில் அவனுக்கு பெண் பார்த்த போது பெண்கள் சொன்னது வேறு இவன் நியாபகத்தில் வந்தது.

அவர்கள் சொன்னது அவன் மனதை காயப்படுத்தவில்லை.. இன்னும் கேட்டால், அவர்கள் சார்பாக கூட தான் யோசித்தான்..

தன் பெண்ணுக்கு நாளை மாப்பிள்ளை பார்க்கும் போது இப்படிப்பட்ட மாப்பிள்ளையை பார்ப்போமா என்று.. ஆனால் இன்று இப்போது வர்ஷினி என்று வரும் போது என் மகள் தீராவை இவள் அப்படி சொல்லி விடுவாளா..? அது எப்படி சொல்லுவாள்.. இப்படியாக தான் நினைத்தான்.

அதாவது உன் பெண் உனக்கு பாராமா.. ஒரு தந்தை தன் மனைவியிடம் கோபம் கொள்ளும் விதமாக தான் அவன் மனது யோசித்தது.. அனைத்தும் யோசித்துக் கொண்டே தான் வர்ஷினியிடம் குழந்தையை தீக்க்ஷயன் வாங்கி கொண்டது..

தீக்க்ஷயனுக்கு தான் தெரியுமே.. சுகன் தன் குழந்தையை அருகில் அழைக்கவில்லை என்பது.. அதனால் தூக்கி கொண்டவன் கெளதம் பக்கம் வந்து நின்று கொண்டான்..

சுகனுமே தீக்க்ஷயனிடம்.. “குழந்தையை என் அருகில் அனுப்பு என்று சொல்லவில்லை… பின் பன்னிரெண்டு மணியாக கேக் கட் செய்தான்.. தான் ஆசைப்பட்ட தன் பிறந்த நாளில் தான் கட் செய்யும் முதல் கேக் துண்டை வர்ஷினிக்கு ஊட்ட முடியாது போனதில் கொஞ்சம் வருத்தம் தான்..

அதோடு இப்போது தான் அழைத்ததை புரிந்து கொண்டு தவிர்க்கிறாளா.? என்று சந்தேகமும் அவனுக்கு.

பார்க்க நன்றாக இருப்பவன்.. வீட்டிற்க்கு ஒரே மகன்.. அவன் அம்மா அப்பா என்று அரசாங்க வேலையில் இருப்பவர்கள். பூனாவிலேயே இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு இரண்டு தனித்து வீடு இருக்கிறது.

தனக்கு திருமணம் செய்து வைத்தால் தனிக்குடித்தனம் தான் வைத்து விடுவேன் என்று நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனக்கு இருக்கும் சொத்து மதிப்பு முதல் கொண்டு தன் அன்னை கூறுவது.. பின் என்னை மேரஜ் செய்யும் பெண்ணுக்கு எந்த பிக்கல் பிடுங்கல் என்று எதுவும் கிடையாது என்று அனைவரும் இருக்கும் போது பொதுவாக கூறினாலும், அவன் சொன்ன இந்த விசயங்கள் அனைத்தும் யாருக்கு போக வேண்டும் என்று நினைத்து பேசும் வர்ஷினி அந்த இடத்தில் இருக்கும் போது சொல்லுவான்..

ஒரு சிலர்.. “ஏன்டா இவன் என்ன லூசா…? இல்ல தற்பெருமையாடா..?” என்று கூட கேட்பார்கள்..

ஆனால் இவன் எதற்க்கு சொல்கிறான் என்பது தீக்க்ஷயனுக்குமே புரிந்து விட்டது தான்.. அவன் சொல்வது போல. இந்த காலத்து பெண்கள் இதை தானே எதிர் பார்க்கிறார்கள்.. அனைத்து தகுதியுமே இருப்பவன் தான் சுகன்.. என்று நினைப்பவன்..

ஆனால் நான் தன்னை ஏற்றால் ஒரு குழந்தைக்கு தாயாக தான் என் வாழ்க்கையில் அவளாள் நுழைய முடியும்.. இந்த காலத்து பெண்கள் திருமணம் செய்தால், கணவனின் அம்மா அப்பா கூடவே இருக்க விரும்புவது கிடையாது.. இதில் பெண்ணோடு.. இதை எல்லாம் யோசித்து தான் தன் விருப்பதை வர்ஷினியிடம் அவன் சொல்லவில்லை.

சுகனுக்கோ… தீக்ஷயனின் மனநிலைக்கு நேர் மனநிலையில் அவன் இருந்தான். வர்ஷினி தன்னை மறுக்க என்ன காரணம் இருக்க முடியும்…

அதுவும் பெற்றோர் இல்லாது இருப்பவள்.. தன் காதல் அவளுக்கு ஒரு வரம் தான் என்று நினைத்தவன் தைரியத்தை வர வழைத்து கொண்டு..

பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த பின் அனைவரும் செல்ல முதல் ஆளாக சுகன் அறையில் இருந்து செல்ல பார்த்த வர்ஷினியிடம்..

“வர்ஷி நான் உன் கிட்ட தனியா பேசனும்…” என்று அனைவரின் முன்னும் சொல்லி விட..

சுகன் சொன்னதுமே வர்ஷினியின் பார்வை சட்டென்று தீகக்ஷயன் பக்கம் தான் சென்றது.. வர்ஷினி சுகன் அறையை விட்டு செல்ல பார்த்ததில் அவளையும் விட தீக்க்ஷயன் தான் நிம்மதி அடைந்தான்..

அதனால் அவனுமே இதற்க்குள் தூங்கி விட்ட குழந்தையை தூக்கி கொள்ள முயன்ற போது தான் சுகன் பேச்சு காதில் விழ.. சட்டென்று அவனுமே அப்போது வர்ஷினியை தான் பார்த்தான்..

அவள் பார்வையில் தெரிந்த அந்த பரிதவிப்பில் தீக்ஷயனுமே நின்று விட்டான்.. அவள் பார்வையில் அவன் வர்ஷினி கண்ணில் தன்னை பார்க்கும் போது பார்த்த அந்த பரிதவிப்பான பார்வை.. அதோடு ஒரு வித கலக்கம்..

அவனுமே ஏதோ ஒரு முடிவு எடுத்தவனாக குழந்தையை தூக்காது நின்று விட.. கெளதமுமே அந்த இடத்தை விட்டு செல்லாது தீக்க்ஷயனின் காதில்.

“டேய் இப்போவாவது சொல்லுடா. பாவம் டா அந்த பெண்.. நீ பார்த்த தானே சுகன் பேசியதும் அவள் உன்னை தானேடா பார்த்தா. அவள் உன்னை தான்டா க்ளோஸா நினைக்கிறா.? அது உனக்கு புரியலையாடா…?” என்ற கெளதம் சொன்னது ஒரு வகையில் உண்மை தான்..

அது தீக்க்ஷயனுக்குமே புரிய தான் செய்தது.. ஆனால் தன்னை நெருக்கமாக எந்த விதத்தில் நினைக்கிறாள்.. அது தான் அவனுக்கு தெரியவில்லை..

தீராவின் தந்தை என்ற முறையிலா.? இல்லை இங்கு இருக்கும் ஆண்களில் தன்னை தான் இங்கு வரும் முன்னவே தெரியும் என்பதினாலா..? இதை நினைத்து வர்ஷினி தன்னிடம் இந்த நெருக்கம் என்று நினைத்து இருந்தால் கூட தீக்க்ஷயன் கவலை பட மாட்டான்..

ஆனால் மூன்றாவதாக நினைத்த… “தான் திருமணம் ஆனவன்.. ஒரு பெண் குழந்தைக்கு தந்தை.. நான் அவளை வேறு பார்வை பார்க்க மாட்டேன் அணுக மாட்டேன் என்று நினைத்து தன்னிடம் நெருக்கம் காட்டுகிறாள்.. என்ற நினைப்பு தான்.. அவனுக்கு சங்கடத்தை கொடுத்தது..

இதோ கெளதம் சொன்னது போல அந்த அறையில் அத்தனை பேர் இருக்க. தன்னை தான் பார்க்கிறாள்.. தீக்ஷக்யனுமே அதை உணர்கிறான். ஆனால் எந்த விதத்தில். என்று தீக்க்ஷயனுக்கு தெரியவில்லை.. இருந்தாலுமே அது எந்த விதமாகவும் இருந்து விட்டு போகட்டும்.

ஆனால் நான் இருப்பேன் நின்று விட்டான்.. தீக்க்ஷயனின் உடல் மொழியில் வர்ஷினிக்கு கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது தான்..

அது கொடுத்த தாக்கத்தில் வர்ஷினியுமே. “ம் பேசலாம் மிஸ்டர் சுகன். ஆனால் தீனா இருக்கட்டும்.” என்று விட்டாள்..

இது வரை தீக்க்ஷயனை வர்ஷினி பெயர் வைத்து அழைத்தது கிடையாது.. தன்னிடம் பேசும் போது வாங்க போங்க என்ற அழைப்பு தான் அவளிடம் இருந்து வெளிப்படும்..

அதே போல் தீக்ஷயனை பற்றி மற்றவர்களிடம் சொல்லும் போது தீரா அப்பா என்று தான் சொல்லுவாள்…

வித்யா கூட சில சமயம் விளையாட்டாக சொல்லுவாள்..

“நாம வேலை பார்ப்பது ஐடி கம்பெனி வர்ஷி.. ஆனா நீ தீரா அப்பா என்று சொல்லி வீட்டில் இருக்கும் ஃபீல் கொடுக்குற..” என்று.. இருந்தும் தன் வழக்கத்தை இந்த ஆறு மாத காலமாக அவள் மாற்றவில்லை..

முதல் முறை தீக்க்ஷயனை வர்ஷினி பெயர் சொல்லி அழைத்தாள்.. அதுவும் தீக்க்ஷயனின் காதில் கேட்ட தன் பெயரான தீக்க்ஷயனை தீனா என்ற அழைப்புமே முதல் முறையாக தன் பெயரையே வித்தியாசமான அழைப்பில் கேட்கிறான்..

அவனுக்கு அது மிகவும் பிடித்தும் இருந்ததில்.. வர்ஷினியை பார்த்து சிரித்தவன் இப்போது சுகனிடம்..

“நி வசி கிட்ட என்ன பேசனும் சுகன்..?” என்று கேட்டான்..

இப்போது சுகனின் பார்வையில் அதிர்ச்சி.. அவனின் அந்த அதிர்ச்சி அவர்களின் பெயர் அழைப்பில் கிடையாது.. அதை எல்லாம் அவன் கவனிக்கவில்லை..

அவனின் அந்த அதிர்ச்சிக்கு காரணம் தீக்க்ஷயனுக்கு தெரியுமே நான் வர்ஷினியை காதலிப்பது.

அதுவும் இன்று நான் என் மனதில் இருக்கும் விருப்பத்தை வர்ஷினியிடம் சொல்வேன் என்று சொல்லி இருந்தேனே. இவன் என்ன புதுசா கேட்கிறான் என்று சுகன் தீக்க்ஷயனை அதிர்ந்து பார்த்தான் என்றால், கெளதம் சிரித்து கொண்டு பார்த்தான்..

காரணம் சுகன் தான் இவர்கள் இரண்டு பேரின் அழைப்புக்களை கவனிக்கவில்லை.. அவன் கவனித்து விட்டதில், ஏதோ ஒரு நம்பிக்கை.. இருவரும் ஒன்று இணைவார்கள் என்று.. பார்க்கலாம்.. ஒன்றிணைவார்களா என்று.. அப்படி ஒன்று சேர்ந்தாலுமே.. அதற்க்கு பின் அவர்களின் வாழ்க்கையில் காலம் அவர்களுக்கு என்ன எல்லாம் வைத்து இருப்பது என்பதும்..






 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
இரண்டு பேரும் வாயை திறந்து சொல்லலனாலும் செல்ல பெயர் வைக்கிறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை 🤗 🤣 🤗 🤣 🤗 🤣

அடேய் சுகன் இதுக்கு பிறகும் உனக்கு புரியலன்னா 😕😕😕

வர்ஷினி எப்படி பதில் கொடுக்க போறா 🤔 🤔 🤔 தீனாவை பிடிச்சுருக்கு என்று சொல்வாளா 🤭🤭🤭🤭
 
Last edited:
Active member
Joined
May 11, 2024
Messages
123
அருமை 👌👌👌, வர்ஷினி ❤️தீக்க்ஷன் இருவர் அவர்கள் பெயர் அழைப்பில் அவர்கள் மனதில் நேசம் இருக்கிறது இன்னும் அவர்கள் வெளிப்படுத்த வில்லை இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
தீனா வசி 🤩🥰
பாவம் பிறந்தநாள் அன்னைக்கு சுகனுக்கு ரெண்டு பேரும் ஷாக் குடுக்குறாங்க.... 🤭

இனியாவது தயக்கத்தை விட்டு காதலை சொல்வாங்களா..... 🙃
 
Top