Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam....final...1

  • Thread Author
Pre final….1

நடுயிரவு அழைப்பில் சொல்லப்பட்ட செய்தியில் ஒரு நிமிடம் வர்ஷினியின் மனம் திக் என்று தான் ஆனது.. அவளின் அந்த மனதில் அதிர்ச்சி குழந்தைகளை தாக்கியதோ என்னவோ.. முதல் முறையாக ஐந்தாம் மாதத்தில் இருக்கும் வர்ஷினி குழந்தைகளின் அசைவை உணர்ந்தாள்..

ஒரு நிமிடம் கண் மூடிக் கொண்டு தன்னை கொஞ்சம் அமைதி படுத்தி கொள்ள முனைந்தாள்… குழந்தைகளின் அசைவு நல்லது தான்.. அதுவும் முதல் முறை அசைவை உணர்வது ஒரு விசேஷமானதும் கூட தான்..

ஆனால் தான் மகிழ்ந்து குழந்தைகள் இது போல அசைந்தால், மகிழ்ச்சியில் அசைவதாகவும்.. குழந்தையை சுமக்கும் தாய் அழுதாளோ.. இல்லை இது போலான சமயத்தில் அதிர்ச்சியாகினாளோ அசைந்தாள். தங்கள் மனதின் தாக்கம் குழந்தைக்கு சென்று சேர்ந்து இருக்கிறது என்று சொல்வார்கள்..

வர்ஷினிக்கு சொன்னது வேறு யாரும் இல்லை… அவளின் அம்மா சுமித்ரா தான்.. அதுவும் அவளுக்கு என்று சொல்லப்படவில்லை…

அவளின் அக்கா கீர்த்தனா குழந்தை பேருக்கு என்று தாய் வீடு வந்த போது.. அவளின் அம்மா கீர்த்தனாவிடம் சொன்ன போது இவள் காதில் விழுந்த வார்த்தைகள்..

பெண் துணை என்று வீட்டில் யாரும் இல்லாது இருப்பவளுக்கு துணை நடத்துவது முன் அவளின் அம்மா கீர்த்தனாவிடம்.. இது போலான சமயங்களில் இது இது செய்ய வேண்டும் … இதை இதை செய்ய கூடாது என்றதை முன் கேட்டதை நியாபகம் படுத்திக் கொண்டவளாக தான் தன்னை கவனித்து கொண்டு வருகிறாள்..

அதன் படி இந்த அதிர்ச்சி குழந்தைக்கு நல்லது கிடையாது என்று தன்னை அமைதிப்படுத்தி கொண்டவள் பின் தான் மீண்டும் படுக்கை அறைக்குள் சென்றது..

இத்தனை நேரம். இத்தனை நேரம் என்றால், வர்ஷினியின் கை பேசி ஒசை எழுப்பியதுமே தீக்ஷயனுமே எழுந்து கொண்டு விட்டான் தான்..

எழுந்தவன் நேரத்தை பார்க்க அது மூன்று மணி என்று காட்டியதில், யார் என்பது போல மனைவியை தான் பார்த்தான்..

யார் என்று எல்லாம் கேட்கவில்லை.. வர்ஷினி பேசியின் ஒசையில் இரண்டு பக்கமும் தூங்கி கொண்டு இருந்த குழந்தைகள் எழுந்து விட போகிறார்கள் என்று… முதலில் தன் படுக்கையை விட்டு இறங்கி படுக்கை அறையை ஒட்டிய பால்கனிக்கு சென்றது தான்..

இங்குமே அந்த வீடு போலவே படுக்கை அறையை ஒட்டியது போல இருந்த ஆபிஸ் ரூமை மாற்றி படுக்கை அறையோடு இணைத்து அதே அளவில் தன் மனைவிக்கு பிடித்த இடமான பால்கனியாக மாற்றி விட்டான் ..

குழந்தைகள் காதில் விழாத தூரம் வந்த பின் தான் வர்ஷினி பேசியது.. தீக்ஷயன் யார் என்று கேட்கவில்லை என்றாலுமே அவனுமே மனைவியை பின் தொடர்ந்து வந்து விட்டான்..

மனைவி பேசியில் பேசியதை வைத்தே தெரிந்து கொண்டு விட்டான் விசயம் என்ன என்பது.. அதனால் அதை பற்றி கேட்காது மனைவியின் செயல்களை அமைதியாக எந்த இடையூறும் செய்யாது கவனித்து கொண்டு இருந்தான்..

முதலில் தான் இது போலான செயல்களில் என்ன வசி என்ன செய்யிற.? என்று கொஞ்சம் பதறியவனாக தான் கேட்டான்..

பின் அவள் சொன்ன விசயமான .. “என்னை பார்த்துக்க லேடிஸ் இல்லலே தீனா… எனக்குமே அவ்வளவா தெரியாது.. என் அக்காவுக்கு அம்மா சொன்னதை நியாபகம் படுத்திக் கொண்டு தான் செய்யிறது தீனா… அம்மா இதமான பாட்டு.. நல்ல புத்தகம்.. கோபப்பட கூடாது இது எல்லாம் அக்கா கிட்ட சொல்லி இருக்காங்க. தீனா…”

வர்ஷினி இதை சாதாரணமாக தான் சொன்னாள்.. ஆனால் அதை கேட்ட தீக்ஷயனுக்கு தான் ஒரு மாதிரியான நிலை.. எத்தனை எத்தனை பிரச்சனை வந்தாலுமே, அதை கடந்து சென்று விடுகிறாள்.. அதோடு அதை ஒரு சாதாரண விசயங்களாக பார்க்கிறாள்.. ஆனால் அதில் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு விடுகிறாள் மனைவியின் இந்த பரிமானத்தில் தீக்ஷயன் தன் வசியக்காரியிடம் இப்போது எல்லாம் முழுவதுமாக சரணாகதி அடைந்து விடுகிறான் என்று தான் சொல்ல வேண்டும்..

அதனால் மனைவி கண்ணை மூடிக் கொண்டதில், அவள் சொல்லாமலேயே இப்போது எல்லாம் தீக்ஷயனுமே விசயத்தை புரிந்து கொண்டதில், இப்போது வசி தன் அப்பா அம்மா படத்திற்க்கு முன் தான் போய் நிற்பாள் என்று தீக்ஷயன் நினைத்தது போல் தான் வர்ஷினி ஹாலில் மாட்டி இருந்த தன் பெற்றோர்களின் புகைப்படத்தின் முன் போய் நின்றாள்..

அங்கேயும் சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டுவள் பின் சிறிது நேரம் கழித்து கண்ணை திறந்தவள் அவள் எதிர் பார்த்தது போலவே தன்னையே பார்த்து கொண்டு இருந்த கணவனின் கண்களை பார்த்தவள்..

“என்ன தீனா போகலாமா…? நீங்க கார் எடுத்து ரெடியா வைங்க நான் அத்தான் இல்ல மாமாவை எழுப்பி விசயத்தை சொல்லி குழந்தைகளுக்கு துணையா நம்ம ரூமில் படுக்க சொல்லிட்டு வந்துடுறேன்..” என்றவளின் பேச்சை தீக்ஷயன் மறுக்கவில்லை…

காரணம் இப்போது தான் என்ன சொன்னாலுமே மனைவி கேட்க மாட்டாள்.. அது தான் அவளின் அப்பா கிட்ட அனுமதி வாங்கிட்டு வந்து விட்டாளே என்று நினைத்து கொண்டே கீ ஸ்டாண்டில் தன் கார் சாவியை எடுக்கும் போது பின் திரும்பி தன் மாமபார் மாமியாரின் புகைப்படத்தை பார்த்தவன்..மனதார நினைத்து கொண்டான்..

“உங்க பெண்ணை நீங்க ரொம்ப நல்லா வளர்த்து இருக்கிங்க…” என்று.

வர்ஷினி மற்றவர்களுக்கும் செய்வாள்.. ஆனால் தன்னையும் தன் குடும்பத்தையுமே பார்த்து கொள்வாள்.. அதுவும் ஐந்தாம் மாதம் இரட்டை குழந்தை என்றதில் யாரும் சொல்லாமலேயே கூடுதல் கவனத்தோடு தான் தன்னை கவனித்து கொள்வது..

அதனால் அநாவசியமா தீக்ஷயன்.. “ இதை செய்ய செய்யாத சாப்பிடாதே..” என்று எல்லாம் மனைவியிடம் சொல்வது கிடையாது..

தட்சணா மூர்த்தியுமே இரட்டை குழந்தை என்றதுமே கொஞ்சம் பயந்து தான் போய் விட்டார்.. சின்ன பெண்.. பெண் துணை இல்லாது எப்படி சமாளிப்பது என்று.

அதுவும் மகேந்திரன்.. “தன் பெண்ணுக்குமே தம்பி மனைவி செய்ய வேண்டியதா இருக்கே…. என்று கவலை பட.. இது எல்லாம் எனக்கும் ஒன்றுமே இல்லை என்பது போல் தான் அனைத்தையுமே அழகாக திட்டம் இட்டு செய்து கொண்டு இருப்பதை பார்த்து அவர்கள் இருவருக்குமே பெருமை தான்..

அதனால் தீக்ஷயன் மனைவியின் பேச்சில் காரை ரெடியாக மனைவி ஏற தோதாக நிறுத்த..

வர்ஷினியுமே கொஞ்சம் நேரம் கழித்து தான் காரில் வந்து ஏறினாள்.. அந்த கொஞ்சம் நேரம் ஏன் பிடித்தது என்பதற்க்கு காரணங்கள்.. இரவு உடையை மாற்றியவள் கூட இந்த சமயத்திற்க்கு தோதான உடையை உடுத்தி கொண்டு வந்தது தான்.. கூடவே அவள் கையில் வெளியில் சென்றால் எடுத்து செல்லும் அந்த பழரசம் பாட்டில் .. சிரித்து கொண்டான்..

தீனாவின் சிரிப்பை பார்த்தவள் அவளுமே சிரித்தாள்.. பின்.. “ காரை மெல்லவே ஓட்டுங்க வேகம் வேண்டாம்…” என்று தன் மீது கை வைத்து கொண்டு கொண்டவள் ரிலாக்ஸ்ஸாக கண்ணையும் மூடிக் கொண்டாள்..

பேசியில் பேசும் போதே எந்த ஆஸ்பிட்டல் என்று தெரிந்ததினால் மனைவியின் அமைதியை கெடுக்காது காரை மருத்துவமனை வாயிலில் வந்து நிறுத்திய பின்..

மனைவியின் தோளின் மீது தீனா கை வைக்க. வசி அதே நிதானத்தோடு தான் கண் விழித்ததும் காரில் இருந்து இறங்கியதுமே..

பின் கணவன் காரை பார்க்கிங்கில் விட்டு வரும் வரை அந்த மருத்துவமனையின் முகப்பில் நின்று கொண்டு இருந்தாளே தவிர. அவசரமாக உள்ளே எல்லாம் செல்லவில்லை..

காரணம் இரட்டை குழந்தை என்பதினால் வயிறு இந்த ஐந்தாம் மாதத்திலேயே ஒன்பது மாதம் போல பெரியதாக இருப்பதினால், நடப்பதில் கொஞ்சம் சிரமம்.. அதோடு கீழே விழுந்தால், அந்த பயமும் வந்து விட்டதால், இப்போது வெளியில் யாரின் துணை இல்லாது அவள் செல்வது கிடையாது..

அதனால் கணவன் காரை விட்டு வரும் வரை பொறுத்து இருந்தவள் அவன் வந்த பின் நீட்டிய கணவனின் கையை பற்றிக் கொண்டே தான் மெல்ல மருத்துவனையில் உள் நுழைந்தாள்..

தீக்க்ஷயனுமே மனைவியை புரிந்தவனாக மெல்ல சிரித்து கொண்டே அவள் தன் கை பற்றுவாள் என்று புரிந்தவனாக தன் கை பற்றிக் கொள்ள தோதாக கை நீட்டிய வாறே தான் நடந்தது.. இது தான் என்று இருவர்ய்மே எதுவுமே சொல்லவில்லை என்றாலுமே இருவருக்குள்ளும் ஒரு நல்ல புரிதல் இருந்தது..

அந்த புரிதல் தான்.. இவர்களை சுற்றி இத்தனை நடந்துமே.. நீ தான் என்று வர்ஷ்னி கணவனின் பக்கம் கை காட்டாது இணைந்து வாழ வைத்து கொண்டு இருக்கிறது..

மருத்துவமனைக்குள் நுழைந்த தீக்ஷயனும் வர்ஷினியும் வரவேற்ப்பு பகுதிக்கு சென்றவர்கள்..

கீர்த்தனாவின் பெயரான. “கிருபா என்ற பெயரில் அட்மிட் ..” என்று தீக்ஷயன் ஆரம்பிக்கும் போதே அந்த வரவேற்ப்பு பெண்..

“பாம்பு கடித்து அட்மிட் ஆன கேசா. ?” என்று கேட்டவள்..

இவர்களின் பதிலை எதிர் பாராது.. “ ரூம் எல்லாம் இல்ல.. ரொம்ப சீரியஸ் அதனால ஐசியூல தான் இருக்கார்..” என்றும் கூறினாள்…
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
வர்ஷினி 🤗🤗🤗 அம்மா எப்பவோ அக்காவுக்கு சொன்னதை எல்லாம் நியாபக படுத்தி வயிற்றில் இருக்க குழந்தைகளை நல்லா பார்த்துக்கிறா 🤩🤩🤩🤩🤩

கீர்த்தனாவின் பெயரான கிருபா என்று போட்டு இருக்கீங்க அது கொஞ்சம் குழப்பமா இருக்கு 🤔 🧐 🤔 🤔 🤔 🤔

கிருபா கீர்த்தனா ஹஸ்பண்ட்டா அவரை தான் பாம்பு கடிச்சிடுச்சா 🤔🤔🤔🤔
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
வர்ஷினி அழகா பொறுப்பா தன்னையும் வயித்துல இருக்க குழந்தைகளையும் பார்த்துகிட்டு குடும்பத்தையும் பார்க்குறா.... 👍😍🤗

என்னாச்சு கீர்த்தனா ஹஸ்பண்ட்டை பாம்பு கடிச்சுடுச்சா.... 🙄

இப்போ தான் தங்கச்சி நினைப்பு வந்துச்சா...😒 ராத்திரில கர்ப்பிணி பொண்ணுக்கு போன் பண்றா அண்ணன் வரலையா... 🤨
 
Top