Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...final

  • Thread Author
Final….

ஸ்ரீவச்சனோ மிக மிக சுருக்கமாக தன் நிலையை சொல்லி விட்டான்..

“என் குழந்தையை பார்த்தாலே எனக்கு உன் நியாபகம் தான் வருது வர்ஷி..” என்று அதோடு விடாது..

“பயமா இருக்கு..” என்றும் சேர்த்து சொல்லி விட..

சிறிது நேரம் வர்ஷினியிடம் அமைதி மட்டுமே.. தீக்க்ஷயன் தான் நேரத்தை காட்டி… “இவ்வளவு நேரம் முழுச்சிட்டு இருக்குறது நல்லது இல்ல வசி.. இது எல்லாமே ஒன்னும் இல்லாத விசயம் தான் புரியுதா…?” என்று தங்கள் முன் இருந்த அந்த நகைகளையும் அந்த செக்கையும் காட்டி கூறிவனின் பேச்சை ஏற்றவளாக..

மீண்டுமே அந்த நகைகளை தன் அக்காவிடமும்… செக்கை தன் அண்ணனிடம் கொடுத்து விட்டவள்..

“இது எனக்கு வேண்டாம்..” என்றும் சொல்ல..

இருவருமே பதறி தான் போய் விட்டனர்.. “ வர்ஷி எங்க மேல கோபம் இருக்கும் தான் வர்ஷி.. ஆனா மன்னிச்சிடு வர்ஷி… “ என்று இருவரும் அடுத்து என்ன சொல்லி இருப்பார்களோ…

வர்ஷினி அவர்கள் இருவரையும் பேசாதே போதும் என்று தடுத்தவள்..

“இப்போ தான் நீங்க இன்னுமே என் முன்னே சுயநலத்தின் மொத்த உருவமா தெரியிறிங்க… உனக்கு அம்மா குரல்…மட்டும் கேட்டு இருந்தா கூட இதை எல்லாம் எடுத்துட்டு இங்கு வந்து இருந்து இருக்க மாட்டே… உன் புருஷன் செத்து பிழைச்சி வந்ததுல உன் தாலியை காப்பாத்திக்க. இதை எல்லாம் எடுத்துட்டு இப்போ ஒடி நீ வந்து இருக்க.” என்று கீர்த்தனாவை பார்த்து கேட்டவள்..

பின் தன் அண்ணன் ஸ்ரீவச்சனை பார்த்து… “ எனக்கு செய்தது உன் பெண்ணுக்கு நடந்துடுமோ… யாராவது உன் காது பட சொல்லி இருப்பாங்க. வீட்டு பெண்ணை விட்டு விட்டா நம்ம பெண் நல்லா இருக்கா மாட்டான்னு..”

வர்ஷினியின் இந்த பேச்சில் ஸ்ரீவச்சன் முழுவதுமாக தலையை குனிந்து கொண்டு விட்டான். ஆம் உண்மை தான்.. ஒருவர் கிடையாது.. அப்பா அம்மா இறப்பு என்று பேசினாலே அடுத்து வர்ஷினியை பற்றிய பேச்சு தான் உறவுகள் ஆகட்டும் நட்புக்கள் ஆகட்டும் பேச்சு வரும்..

முதலில் “ அய்யோ மேரஜ் நின்னுட்டுச்சா..? என்று வருத்தமாக கேட்பவர்கள்..

பின் எங்கு இருக்கா என்ன செய்யிறா என்ற பேச்சில் தனித்து அவள் இருக்கிறாள் என்றாலே. என்ன ஸ்ரீவச்சன்… சின்ன பெண்… இப்படி விட்டு விடலாமா.. உனக்குமே ஒரு பெண் இருக்குப்பா.நாளைக்கு யாருக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாதுலே…” என்று சொல்ல ஆரம்பித்து விட்டாலே ஸ்ரீவச்சனின் உள்ளம் பதறி தான் போய் விடும்..

இப்போது தன் தங்கை தனித்து எல்லாம் செய்யும் இதை எல்லாம் தன் சின்ன குழந்தை செய்வது போல நினைத்தாலே போதும் வேண்டாம் வேண்டாம்.. என்று உள்ளம் துடித்து விடும் அவனுக்கு..

அதாவது வர்ஷினி சொன்னது போல இப்போது கூட தன் தங்கை கஷ்டப்படுகிறாள் என்று எல்லாம் இங்கு ஒடி வரவில்லை.. எங்கு தன் மகள் கஷ்டப்பட்டு விடுவாளோ என்று தான் இங்கு ஒடி வந்து உள்ளான் என்றதில் வர்ஷினி.

“எடுத்து செல்லுங்க. உங்க பயம் எனக்கு தெரியுதுண்ணா.. நான் சாபம் எல்லாம் இது வரை விட்டது கிடையாது..

இனியும் விட மாட்டேன்.. அதுவுமே நிச்சயம்..” என்று சொன்னவள் பின் இதையும் சொல்லி விட்டாள்.

தாய் தகப்பனை இழந்து தனித்து நின்ற போதில் இருந்து அவர்களை நினைத்தாளே.. கூடவே இதையும் தான் நினைப்பாள்..

“கூட பிறந்தவங்க இருந்தும் நான் அநாதையா தான் இருக்கேன்…கண்டிப்பா அதை நான் நினைச்சிக்குவேன்.. அப்படி நினைக்கும் போது எல்லாம்.. தன் அடி வயிற்றை காண்பித்து.. அப்படியே இழுத்து பிடித்து ஒரு மாதிரி இருக்கும்.. அது உங்களை தாக்கும் என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது..” என்று விட்டவள் பின் இதையும் தான் கூறினாள்..

“இப்போ இத்தனை இங்கு நடக்கும் போதும்.. நானும் என் குழந்தையும் நினைத்து தூங்கு என்று கூப்பிடுறார் பாருங்க. இது தான் உண்மையான அக்கறை பாசம்.. ஆனா இதை நீங்க தூக்கிட்டு வரும் போது கூட தான் கரு உண்டானதை சுட்டி காட்டி இந்த மாதிரி இருக்கும் சூழ்நிலையில் இந்த நேரத்துக்கு போறோமே.., அவள் தூக்கம் கெடாதா…? என்று நினைக்காது… ஒரு நாள் கூட லீவ் போடாது ஆபிஸ்க்கு போயிட்டு வந்து… இங்கு வந்து இருக்கிங்க.. அதாவது கூட பிறந்தவங்களுக்காக ஒரு நாள் கூட ஆபிஸ் லீவ் போட கூடாது.. ஆனால் உங்க பாவ கணக்கு தீர்ந்து போயிடனும்..” என்று சொன்னவள்..

கணவனின் கை பற்றிக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தவளையே பார்த்திருந்தனர் கீர்த்தனாவும், ஸ்ரீவச்சனும்..

எட்டு ஒன்பது என்று வர்ஷினிக்கு மாதங்கள் கடக்க கடக்க வர்ஷினியின் வயிற்றை பார்ப்பவர்களுக்கே பயம் கொள்ளும் படி தான் இருந்தது.. அத்தனை பெரியதாக .. இவர்கள் சொல்லாமலேயே குழந்தை இரட்டையாக தான் இருக்கும் என்பதை பார்த்தவர்கள் தெரிந்து கொண்டு விட்டனர் தான்..

இதில் என்ன ஒரு அதிசயம் என்றால், ஒரு சிலர் மூன்று குழந்தையா என்று கேட்கும் அளவுக்கு வயிறு பெரியதாக போய் கொண்டு இருந்தது..

வர்ஷினி சரியான எடையை கொஞ்சம் கொஞ்சமாக தான்டி கொஞ்சம் அதிக அளவில் தான் சென்று கொண்டு இருந்தாள்..

என்ன தான் நடைப்பயிற்ச்சி சின்ன சின்ன உடல் பயிற்ச்சி என்று செய்தாலுமே எடையை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை..

தீக்க்ஷயனுக்கு பயம் தான் ஆனால் மருத்துவர் இது எல்லாம் கற்பகாலத்தில் இருப்பது தான். நீங்க சத்தான உணவும்.. நான் சொல்லுவதை மட்டும் செய்யுங்க ஒன்றும் பிரச்சனை இல்லை… உங்க மனைவியின் ஆரோக்கியத்திற்க்கும் மன தைரியத்திற்க்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.. உங்க பயத்தை உங்க மனைவி கிட்டே கடத்தாம இருந்தாலே அவங்களுக்கு நார்மல் பிரசவம் ஆகி விடும்” என்று சொல்ல அந்த மருத்துவர் சொன்னது போல் தான். ஒரு நல்ல நாளில் இந்த குழந்தைகள் அது என்னவோ பகலில் எல்லாம் சமத்தாக இருப்பவர்கள் நடுயிரவு வந்தால் மட்டும் ஆட்டம் பாட்டம் ஆடுவார்கள் போல..

இதோ அதே போல் தான் ஒரு நாள் ஒன்பது மாதம் முடிவில் நடுயிரவில் வர்ஷினிக்கு பிரசவ வலி வந்து விட்டது

மீனாட்சி பாட்டிக்கு குழந்தை தான் இல்லை.. ஆனால் பிரவத்திற்க்கு என்ன என்ன எடுத்து கொண்டு போக வேண்டும் என்று அவருக்கு தெரியும்..

காரணம் அவர் தங்கை தம்பியின் மருமகள் மகள் என்று அனைவருக்கும் பார்த்து பார்த்து செய்து இருக்கிறார்.. என்ன ஒன்று வேலையை மட்டும் வாங்கிக் கொள்பவர்கள் பின் இவரை கண்டு கொண்டது கிடையாது…

அப்படி பட்டவர்களுக்கே மீனாட்சி பாட்டி பார்த்து பார்த்து செய்தவர்… தன்னை இந்த வீட்டு ஆட்களாய் மதித்து தன் வயதுக்கு மரியாதை கொடுத்து வைத்து கொள்பவர்களுக்கு செய்ய மாட்டாரா என்ன…?

முன்னவே எப்போது ஆனாலுமே பிரசவ வலி எடுக்க கூடும் என்று முன் ஏற்பாடாக அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு இருந்ததினால் பதறாது தான் மீனாட்சி பாட்டி..

பயந்த மூன்று ஆண்களையும் தைரியம் படுத்தி காரை எடுத்து ரெடியாக வைங்க என்று சொன்னவர்.. கசாயம் வைத்து கொடுத்து சாமீ முன் வந்து கும்பிட்டு விபூதி குங்குமம் என்று வர்ஷினிக்கு எடுத்து வைத்தவர்…

குழந்தைகளுக்கு துணையாக தட்சணா மூர்த்தியை விட்டு மற்றவர்கள் சென்றனர். போகும் முன் தீக்க்ஷயன் மனைவி மாதந்திர பரிசோதனை செய்த அந்த மருத்துவரை அழைத்து விட்டான்..

முன்னவே அந்த மருத்துவரிடம் அனைத்துமே சொல்லி விட்டான். தன் முன் மனைவி இறந்தது.. என்று.. ஏன் இப்படி பயப்படுறிங்க என்று கேட்ட போது.. அப்போது வர்ஷினி மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போது சொல்லி விட்டான் தன் பயத்தை…

அதனால் ஒன்றும் இல்லை உங்க மனைவிக்கு பிரசவ வலி எடுத்த உடனே என்னை அழைத்து விடுங்க.. அது எந்நேரம் ஆனாலுமே சரி என்று விட.

இதோ அழைத்து விட… மருத்துவமனைக்கு மிக அருகில் அந்த மருத்துவரின் இல்லம் போல இவர்களுக்கு முன் அந்த மருத்துவர் காத்து கொண்டு இருக்க. ஐந்து மணி நேரம் வலி எடுத்த பின் தான் வர்ஷினி இரட்டை ஆண்குழந்தைகளை பெற்றெடுத்து கொடுத்தாள்..

வலியில் வர்ஷினி துடித்ததோடு தீக்க்ஷயன் தான் பயத்தில் துடித்து விட்டான்.. சுக பிரசவம் ஆகும் என்று மருத்துவர் சொல்ல.. தீக்க்ஷயன் இல்லை இல்லை செசரியனே பண்ணிடுங்க.. பாருங்க எப்படி வலியில் துடிக்கிறா..

இத்தனை கத்தி அழுது என்று பார்க்காத தன் மனைவியை இன்று அப்படி பார்க்க பார்க்க.. அவனால் முடியவில்லை..

மருத்துவர் யோசிக்க.. மீனாட்சி சட்டென்று.. “ இல்ல டாக்டர்… அவருக்கு ஒன்னும் தெரியாது நீங்க சுகப்பிரசவத்திற்க்கே முயற்சி செய்ங்க.” என்று விட்டவர்,.. தீக்ஷயனிடம் தனியே.

“சுகப்பிரசவத்திற்க்கு இப்போ மட்டும் தான் தம்பி வலி.. ஆனால் அது எல்லாம் செய்தா காலம் முழுக்கும் பிரச்சனை தான் வேண்டாம்..” என்று மறுக்க அப்போது கூட மனைவியின் கதறல் கேட்க முடியாது தான் அங்கும் இங்கும் நடைப்போட்டு கொண்டு இருந்தான்..

மகேந்திரன் கூட. “நீ வெளியில் போய் நில்லு.. குழந்தை பிறந்ததும் நான் உன்னை கூப்பிடுறேன்… “ என்று சொல்ல.

அதற்க்கும்.. “ இல்ல இல்ல நானும் இருப்பேன்..’ என்று சொல்ல. இப்படி என்று அனைவரையும் பதற…

அங்கு வீட்டிலோ எழுந்த உடனே தட்சணா மூர்த்தியிடம்.. ஸ்ருதி தீரா வர்ஷியை தான் கேட்டது.

“அம்மாவுக்கு பாப்பா பிறக்க போகுதுலே.. அதுக்கு தான் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயி இருக்காங்க.” என்று சொன்னார் தட்சணா மூர்த்தி..

பெரியவர்கள் குழந்தைகள் இருவரிடமும் முன்பே சொல்லி விட்டனர்.. பேபியை நீங்க தான் பார்த்து கொள்ள வேண்டும் என்றும்..

அதன் படி.. “ஐய் ஐய் என்று சந்தோஷத்தில் கத்தியவர்கள்..

“வாங்க தாத்தா நாமுமே போய் பேபியை பார்க்கலாம் என்று இருவரும் தன் தாத்தாவை அழைத்தார்கள்..

தட்சணா மூர்த்திக்குமே வீட்டில் இருக்க முடியவில்லை தான்.. குழந்தைகளுக்கு துணை வேண்டுமே என்று தான் இத்தனை நேரம் வீட்டில் இருந்தார்..

தாய் இல்லாத பெண்.. தாயாக இருக்க வேண்டிய தன் மனைவியே இப்படி செய்ய நினைத்தது.. வீட்டில் இருந்தே.. வர்ஷினி தாய் தகப்பன் முன் நின்று தான்..

உங்க பெண்ணுக்கு துணையா நீங்க தான் இருப்பிங்க.. தெரியும் நீங்க இல்லேன்னாலுமே உங்க பெண்ணுக்கு நீங்க தான் வழிகாட்டிட்டு வர்றிங்க என்று.. உங்க பெண் தைரியமானவள் தான்.. ஆனாலுமே ஏற்கனவே வாழ்க்கையில் ரொம்ப வலியை அனுபவித்து விட்டாள்.. இந்த வலியாவது கொஞ்சம் குறைத்து கொடுங்க என்று வேண்டிக் கொண்டு தான் தன் இரு பேத்திகளோடு தட்சணா மூர்த்தி மருத்துவமனைக்கு சென்றது…

இவர்கள் சென்ற ஐந்து நிமிடத்திற்க்கு எல்லாம் ஒன்றான் பின் ஒன்றாக இரட்டை ஆண்குழந்தைகளை ஈன்ரெடுத்தால் வர்ஷினி..

அப்படியே தீக்ஷயனையே கொண்டு தான் இரண்டு குழந்தைகளும் இருந்தது..

முதலில் குழந்தைகளை கையில் வாங்கி கொண்டது தீராவும் ஸ்ருதியுமே.. அதை பார்க்கவே அவ்வளவு கவிதையாக இருந்தது.. .

தீராவும் ஸ்ருதியும் இரண்டு குழந்தைகளை கையில் வைத்து கொண்டவர்கள் கை மீது தட்சணா மூர்த்தி மகேந்திரன் கை வைத்து கொண்டனர்..

திக்ஷயனோ முதலில் தன் மனைவியின் நலத்தை பார்த்த பின் தான் குழந்தை என்று மருத்துவர் .. “உங்க மனைவியை போய் பார்க்கலாம்..” என்று சொன்னதுமே முதல் ஆளாக தீக்ஷயன் தான் அந்த அறைக்கு சென்றது..

சோர்வோடு வர்ஷினி படுத்து கொண்டு இருந்தாலுமே, தெளிவாக தான் பேசினாள்.. எழுந்து அமர்ந்து கொள்ள முயன்றவளின் தோளை பிடித்து கொண்டவன்..

“இப்போ என்ன அவசரம் வசி.. படுத்து இரு… இப்போ தான் குழந்தை பிறந்து இருக்குற பச்சை உடம்பபு வசி.. இது போல எல்லாம் சட்டுன்னு எல்லாம் எதுவுமே செய்ய கூடாது..” என்று கண்டித்த கணவனையே காதலாக பார்த்து கொண்டு இருந்த தன் தீனாவையே பார்த்தவளை இப்போது அவளின் தீனாவுமே பார்க்க..

“ஒய் என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு..?” என்று கேட்டவளிடம்..

“ஏன் பார்க்க கூடாதா…?” என்று கேட்டவளின் நெற்றியில் முத்தம் இட்ட தீனா.

“பார்க்கலாம் வசி.. நீ பார்க்கலாம்… நீ மட்டும் தான் பார்க்கலாம்..” என்று காதல் வசனம் பேசியவனின் பேச்சில் சிரித்த வர்ஷினி..

“இப்போ இந்த வசனம் என்ன எந்த வசனம் பேசினாலுமே ஒரு தம்புடிக்கு பிரயோசனம் இல்லை.. பார்த்துக்கோங்க.. “ என்று கிண்டலோடு என்று பெசி இருவருமே ஒரு சேர தான் தங்களின் குழந்தைகளை பார்த்தது…

தீராவிடமும் ஸ்ருதியிடமும் முன்னவே குழந்தைகளின் வருகையை பற்றி தெரிவித்து விட்டதால், பொறாமை படாது அப்படி இரண்டு அக்காக்களும் இரண்டு தாயாக மாறி தான் அந்த இரட்டை குழந்தைகளை பார்த்து கொண்டனர்..

வீடு வந்த பின்னுமே பள்ளியை விட்டு வந்த உடனே குழந்தைகளின் அருகில் தான் சென்று விடுவார்கள்..

ஆனால் வர்ஷினி எவ்வளவுக்கு எவ்வளவு அன்பாக பார்த்து கொள்வாளோ அதே அளவுக்கு கண்டிப்பும் காட்டி விடுவாள்..

வந்ததுமே பள்ளி சீருடையை மார்றிக் கொண்டு முகம் கால் அலம்பி சாப்பிட்ட பின் தான் குழந்தையின் பக்கத்தில் வர வேண்டும்..

அதே போல ஆறு மணி ஆனதுமே படிக்கும் பை எடுத்து விட வேண்டும்.. தூங்கும் நேரம் என்று அனைத்திலுமே கண்டிப்பு காட்டுவாள்..

முதலில் குழந்தைகள் முகத்தை சுளித்தாலுமே பின் அந்த பழக்கத்தை தொடர்ந்தனர்..

வர்ஷினிக்கு குழந்தைக்கு தன் பால் கொடுக்கும் வேலை மட்டும் தான்.. குழந்தையை குளிப்பாட்ட வைப்பது.. குழந்தையை தூங்க வைப்பது என்று மீனாட்சி பாட்டி தான் செய்வது.

வர்ஷினி கூட. “ பாட்டி நீங்க கொஞ்சம் ஒய்வெடுங்க..” என்று சொன்னாள் கூட அவர் கேட்க மாட்டார்.

“உன் புருஷனும்..” இரட்டை பிறப்பான குழந்தையை காண்பித்து இவன் பெரியப்பனும் தாத்தனும் வந்துட்டா என் கிட்ட எங்கே குழந்தை இருக்கு… அவங்க கூட பரவாயில்லை. இவனுங்களோட இரண்டு அக்காங்க. அப்பப்பா என்று பெருமையாக அளுக்கு கொண்ட அந்த பாட்டி..

“ அப்போ எல்லாம் எனக்கு ஒய்வு தானே ராசாத்தி.” என்று வர்ஷினியின் தாடையை பிடித்து சொன்னவர்..

பின் கர கரத்த குரலில்.. “வெயில்ல தெரு தெருவா சுத்திட்டு இருந்த என்னை.. இதோ வீட்டில் உட்கார வைத்து நல்ல சாப்பாடு.. மரியாதை என்று வீட்டு ஆளா நடத்திறியே கண்ணா.. இந்த குழந்தைகளை பார்க்கவே நான் சேர்ந்து போயிட போறேன்.. நீ தான் பிள்ளை பெத்த பச்சை உடம்பு காரி உனக்கு தான் ஒய்வு தேவை..” என்று கூறிவரின் கையை வர்ஷினி கெட்டியாக பிடித்து கொண்டவர்..

“நீங்க என் சொந்தம் தான் பாட்டி… ரத்த சொந்தம் என்ன பாட்டி ரத்த சொந்தம்..” குழந்தைகளை காட்டி..

“இவங்க ரத்த சொந்தம் தானே கருவிலேயே அழிக்க பார்த்தது.. நீங்க தானே பாட்டி எனக்கு காப்பாத்தி கொடுத்தது… அப்படி என்று பார்த்தா என் மகன்களுக்கும், மகள்களுக்கும், நீங்க தான் பாட்டி கொல்லு பாட்டி “ என்றவளை ஆதரவாக பார்த்த அந்த பாட்டி..

“கடைசி காலத்தில் எனக்கு யாரு கொள்ளி வைப்பா… அநாதை பொணமா தான் போகனும் போல நினச்சி இருக்கேன்மா. ஆனா இப்போ போற வழிக்கு வெளிச்சம் கொடுக்க கொள்ளு பேரன் கொள்ளி பேத்தி.. போதும் ராசாத்தி எனக்கு இது போதும்..” என்று சொன்னவர் அழுதே விட்டார் ஒரு வித மன அமைதியில்.

நாம் என்ன விதைத்தோமோ அதை தான் நாம் அறுவடை செய்ய முடியும்.. நல்லது விதைத்தால் நல்ல பலன் கிட்டும்.. இல்லை என்றால்,

இதோ யாரும் இல்லாத இந்த மூதாட்டி தன் நல்ல செயலால் தனக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி கொண்டு விட்டார்.

ஆனால் சரஸ்வதியும், ஸ்வேதாவுமே செய்த வினைபலனாக கிடைத்த நல்ல வாழ்க்கையை இழந்து யாரோ மூலம் சரஸ்வதிக்கு தனக்கு இரண்டு பேரன் பிறந்து உள்ளது என்பது கேள்விப்படுமே பார்க்க முடியாது தான் இருந்தார்..

அது என்னவோ தெரியவில்லை.. வயிற்றில் இருக்கும் போது வர்ஷினி குழந்தையாக அழிக்க நினைத்த சரஸ்வதி பேரன்கள் பிறந்து இருக்கிறான்.. அதுவும் தன் மகன் தீக்க்ஷயன் போலவே என்று தன் தங்கை சாந்தாவின் மூலம் கேள்விப்பட்டதில் இருந்து, பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆம் அவரின் தங்கை சாந்தி மூலம் தான் இப்போது வர்ஷினி வீட்டில் நடப்பது சரஸ்வதிக்கு தெரிகிறது..

போன வாரம் தான் குழந்தைகளுக்கு தீட்டு எடுத்து தொட்டி போடும் விழா செய்தனர்..

அந்த விழாவுக்கு தீக்ஷயன் தன் சித்தி ஏன் தன் தான் மாமன் மாமியும் தன் தங்கை என்று அனைவரையும் அழைத்து தான் அந்த விழா செய்தது.

வர்ஷினி பக்கமாக தன் அக்கா அண்ணாவையும் அழைத்தாள் தான்.. நீ என் அக்கா அண்ணன். அந்த முறைக்கு அழைத்தேன் என்பது போல் தான் வர்ஷினி அழைத்தது.

தீக்ஷன் தன் தங்கையிடமும் அண்ணனிடமும்.. “ அவங்க.” எனும் போதே…

மகேந்திரன்.. “வேண்டாம் டைவஸ் ஆன பின் என்ன இருக்கு.?” என்று விட்டான்.

ஆம் விவாகரத்து ஆகி விட்டது தான்.. தந்தை மகன் இருவருக்குமே.. தட்சணா மூர்த்தியோ..

“என் வழி என்றால் வேண்டாம்.. எனக்கும் அவளுக்கும் இனி ஒன்னும் இல்ல.. ஆனா உனக்கு அம்மா அந்த உறவு மாறாது..” என்று அவர் சொல்லி விட்டார்..

தீக்ஷயனுக்குமே அழைக்க விருப்பம் இல்லை தான்..தனக்கு தாய் தான்.. ஆனால் ஒரு தாயின் கருவை கருவறுக்க பார்த்தவரை தன் குழந்தைகளை பார்க்க விட விருப்பம் இல்லை தான்..

என்ன தான் சட்டத்தில் பிரிந்தாலுமே அப்பாவின் மனதில் என்ன இருக்கு என்று தெரியவில்லை தாமே அதனால் கேட்டான்..

சாந்தா தன் இரண்டு மகங்கள் மருமகள் பேரன் பேத்தி என்று அனைவரும் தான் சென்றது.. சாந்தாவுக்கு வர்ஷினி தன் குழந்தைகளை மட்டும் தீரா மூத்தார் குழந்தையை பார்த்து கொள்வது.. வந்தவர்களை வர வேற்று உபசரிப்பதில், தன் மகனை கூட பார்த்து நல்ல மாதிரியாக பேசியது.. என்று பார்க்க பார்க்க தான் தவற விட்டது வைரம் என்று புரிந்ததது தான்..

அதுவும் தன் மருமகள் கவிதா முன் வர்ஷினியின் செயல்களை எல்லாம் பார்த்து ஒரு பெரும் மூச்சு தான் அவரால் விட முடிந்தது..

சுப்ரியாவின் வாழ்க்கை வேறு விதமாக இருந்தது…இப்போது ராஜேஷ் ஒரு தப்பும் செய்யவில்லை தான். ஆனாலுமே அவ்வப்போது கணவனின் பேசியை எடுத்து எடுத்து பார்ப்பது… ராஜேஷ் அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் தாமதமாக வந்தாலுமே எவளை பார்த்து விட்டு வர என்று கேட்பது.. கொஞ்சம் நன்றாக உடை உடுத்திக் கொண்டு அலுவலகம் சென்றால், யாரை பார்க்க போற என்று கேட்பது.. சந்தேகம் மனதில் மட்டும் அல்லாது உடல் முழுவதும் பரவி விட்டது போல தான் அவள் பேச்சுக்கள் இருந்தது.

சந்தேகம் என்று ஒன்று மனதில் வந்து விட்டால், அதை விட நரகம் வேறு உண்டா என்ன. சுப்ரியா தானும் வாழாது கணவனையும் வாழ விடாது என்று அவளின் வாழ்க்கை நரகம் போல் தான் செல்கிறது.

கீஇங்கு ர்த்தனாவும் ஸ்ரீவச்சனுமே என்ன தான் தன் தங்கையிடம் ஒட்டி உறவாட நினைத்தாலுமே. வர்ஷினி அவர்களை எட்ட தான் நிறுத்தினாள்…

அழகான குடும்பமாக வர்ஷினி யாரும் இல்லாது இருந்தவளுக்கு காதலனே கணவனாக.. தந்தை போல் மாமனார்.. சகோதரம் இடத்தை நிரப்ப மூத்தார்… அனைத்தையும் விட நானிஉ குழந்தைகளுக்கு அன்னையாக மடி தாங்கும் தாயாக மீனாட்சி பாட்டி என்று வர்ஷினி இருக்க. அதை புகைப்படத்தில் இருந்த அவளின் அன்னை தந்தைய் கண்குளிர பார்த்து கொண்டு இருந்தனர் போல.. அவர்கள் படத்தில் இருந்த பூ ஒன்று கீழே விழுந்து அனைவரும் ஆசிர்வாதம் செய்யும் போது விழுந்து.. அவர்களுமே தன் மகளை ஆசீர்வாதம் செய்தனர்..

நாளை எபிலாக்…
 
Active member
Joined
Jul 13, 2024
Messages
165
Arumaiyana Kathai. Good nose cut for Sree vathsan and keerthana. Vasi, you could have taken your mom’s jewel alone. It is in the hands of undeserving person

Two girls and two boys . Super ma!!!!

Epilogue kekka ninaichom. Neengalae kudukkiringaa. Thank you. If you have a loving husband, nothing else matters.
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
இந்த வயசுல விவாகரத்து தனிமை ஒதுக்கம் தேவையா சரஸ்வதிக்கு கொஞ்சம் புத்தியோட பிழைச்சு இருக்கலாம்.... மருமகளை எதிரியா பார்த்து பெரும் பாவத்தை செய்யப் போய் இப்போ எல்லாத்தையும் இழந்துட்டு நிக்குறாங்க....
ஸ்வேதா தேவை தான்.....

கீர்த்தனா., ஸ்ரீவத்சன் தங்கச்சி உறவை சுமையா நினைச்சு எல்லாம் பண்ணிட்டு இப்போ ஒட்டி உறவாட ஆசைப்படுறாங்க....

வர்ஷினி தன்னோட குணத்தால பொறுமையால அழகா தன்னோட வாழ்க்கையை அமைச்சுக்கிட்டா..... 🥰🤗

தீக்ஷன் வசி சூப்பர் ஜோடி அவங்கபட்ட கஷ்டத்துக்கு எல்லாம் சேர்த்து நிறைவான வாழ்க்கை வாழறாங்க..... 💖💞

சூப்பர் ஸ்டோரி சிஸ்... 💕
 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
சரஸ்வதி, ஸ்வேதா, சுப்ரியா நல்ல வாழ்க்கை அமைஞ்சும் அதை உருப்படியா வாழ தெரியாமல் சுயநலமாக தொலைச்ச முட்டாள்கள் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 குறைந்த பட்சம் தப்பு என்று தெரிஞ்ச பிறகாவது அதை சரி செய்ய நினைக்காமல் இன்னும் அதையே செஞ்சிட்டு இருக்காங்க 😠😠😠😠

சரஸ்வதி இவ்வளவு வயசுக்கு அப்புறமும் என்ன வீம்பு🥺🥺🥺

கீர்த்தனா வத்சன் இவ்வளவு சுயநலம் 🥶 🥶 இதுக்கான பலனை நீங்கள் அனுபவிச்சு தான் ஆகணும் 😨 😨 😨 😨 😨

இரண்டு மகன் 🥰🥰🥰🥰 இரண்டு அக்காவும் சந்தோஷமா வளர்ப்பாங்க 😉😉😉😉

வர்ஷினியோட அப்பாவுக்கு இப்போ தான் மனநிறைவா இருக்கும் 🙂🙂🙂 ஏன்னா அம்மாவும் வர்ஷூ மாதிரி தத்தியா தான் இருந்தாங்க 😂 😂 😂

மகேந்திரன் வேற ஒரு கல்யாணம் செஞ்சுக்கலாம் 🙂🙂🙂🙂 ஆனால் ஸ்ருதி பத்தியும் யோசிச்சு செய்யுறது நல்லது 🤗 🤗 🤗

மீனாட்சி பாட்டி 🤩🤩🤩🤩அவ குழந்தைய காப்பாற்றி கொடுத்ததோடு கூடவே இருந்து நல்லா வளர்த்து கொடுக்கறாங்க 🙂🙂🙂🙂

வர்ஷினி தீஷன் ரொமான்ஸ் தான் மிஸ்ஸிங் 😍😍😍😍😍😍
 
Last edited:
Member
Joined
Jul 23, 2024
Messages
31
One of a nice story. And akka I want a story name I m asking you because I think it's your story
Hero father is died when he was still a child. Now he is with his father's parents he will call them as amma and appa, hero mother done a second marriage her husband doesn't want hero to come with his mother or to mother's parents house so he is angry on his mother. Our heroine is living with her sister child in a restaurant she is talking with her lover about her sister child that she will live with them after their marriage but the lover doesn't like that so she break up with him after seeing this hero is impressed with her and he want to marry her for this. On other hand his mother's second husband has been dead so his mother and her parents doesn't know what to do her second husband have many debates he have one girl child from first marriage and another one girl child from heros mother's so the money lenders want to take their daughters so heros grand father ask his help to secure the ladies so he will go there and help them the story goes like that
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
One of a nice story. And akka I want a story name I m asking you because I think it's your story
Hero father is died when he was still a child. Now he is with his father's parents he will call them as amma and appa, hero mother done a second marriage her husband doesn't want hero to come with his mother or to mother's parents house so he is angry on his mother. Our heroine is living with her sister child in a restaurant she is talking with her lover about her sister child that she will live with them after their marriage but the lover doesn't like that so she break up with him after seeing this hero is impressed with her and he want to marry her for this. On other hand his mother's second husband has been dead so his mother and her parents doesn't know what to do her second husband have many debates he have one girl child from first marriage and another one girl child from heros mother's so the money lenders want to take their daughters so heros grand father ask his help to secure the ladies so he will go there and help them the story goes like that
என் கதை தான் பா
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
One of a nice story. And akka I want a story name I m asking you because I think it's your story
Hero father is died when he was still a child. Now he is with his father's parents he will call them as amma and appa, hero mother done a second marriage her husband doesn't want hero to come with his mother or to mother's parents house so he is angry on his mother. Our heroine is living with her sister child in a restaurant she is talking with her lover about her sister child that she will live with them after their marriage but the lover doesn't like that so she break up with him after seeing this hero is impressed with her and he want to marry her for this. On other hand his mother's second husband has been dead so his mother and her parents doesn't know what to do her second husband have many debates he have one girl child from first marriage and another one girl child from heros mother's so the money lenders want to take their daughters so heros grand father ask his help to secure the ladies so he will go there and help them the story goes like that
அமேசான் தான் இருக்கு
 
Top