Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...Pre Final...

  • Thread Author
Pre final….1

நடுயிரவு அழைப்பில் சொல்லப்பட்ட செய்தியில் ஒரு நிமிடம் வர்ஷினியின் மனம் திக் என்று தான் ஆனது.. அவளின் அந்த மனதில் அதிர்ச்சி குழந்தைகளை தாக்கியதோ என்னவோ.. முதல் முறையாக ஐந்தாம் மாதத்தில் இருக்கும் வர்ஷினி குழந்தைகளின் அசைவை உணர்ந்தாள்..

ஒரு நிமிடம் கண் மூடிக் கொண்டு தன்னை கொஞ்சம் அமைதி படுத்தி கொள்ள முனைந்தாள்… குழந்தைகளின் அசைவு நல்லது தான்.. அதுவும் முதல் முறை அசைவை உணர்வது ஒரு விசேஷமானதும் கூட தான்..

ஆனால் தான் மகிழ்ந்து குழந்தைகள் இது போல அசைந்தால், மகிழ்ச்சியில் அசைவதாகவும்.. குழந்தையை சுமக்கும் தாய் அழுதாளோ.. இல்லை இது போலான சமயத்தில் அதிர்ச்சியாகினாளோ அசைந்தாள். தங்கள் மனதின் தாக்கம் குழந்தைக்கு சென்று சேர்ந்து இருக்கிறது என்று சொல்வார்கள்..

வர்ஷினிக்கு சொன்னது வேறு யாரும் இல்லை… அவளின் அம்மா சுமித்ரா தான்.. அதுவும் அவளுக்கு என்று சொல்லப்படவில்லை…

அவளின் அக்கா கீர்த்தனா குழந்தை பேருக்கு என்று தாய் வீடு வந்த போது.. அவளின் அம்மா கீர்த்தனாவிடம் சொன்ன போது இவள் காதில் விழுந்த வார்த்தைகள்..

பெண் துணை என்று வீட்டில் யாரும் இல்லாது இருப்பவளுக்கு துணை நடத்துவது முன் அவளின் அம்மா கீர்த்தனாவிடம்.. இது போலான சமயங்களில் இது இது செய்ய வேண்டும் … இதை இதை செய்ய கூடாது என்றதை முன் கேட்டதை நியாபகம் படுத்திக் கொண்டவளாக தான் தன்னை கவனித்து கொண்டு வருகிறாள்..

அதன் படி இந்த அதிர்ச்சி குழந்தைக்கு நல்லது கிடையாது என்று தன்னை அமைதிப்படுத்தி கொண்டவள் பின் தான் மீண்டும் படுக்கை அறைக்குள் சென்றது..

இத்தனை நேரம். இத்தனை நேரம் என்றால், வர்ஷினியின் கை பேசி ஒசை எழுப்பியதுமே தீக்ஷயனுமே எழுந்து கொண்டு விட்டான் தான்..

எழுந்தவன் நேரத்தை பார்க்க அது மூன்று மணி என்று காட்டியதில், யார் என்பது போல மனைவியை தான் பார்த்தான்..

யார் என்று எல்லாம் கேட்கவில்லை.. வர்ஷினி பேசியின் ஒசையில் இரண்டு பக்கமும் தூங்கி கொண்டு இருந்த குழந்தைகள் எழுந்து விட போகிறார்கள் என்று… முதலில் தன் படுக்கையை விட்டு இறங்கி படுக்கை அறையை ஒட்டிய பால்கனிக்கு சென்றது தான்..

இங்குமே அந்த வீடு போலவே படுக்கை அறையை ஒட்டியது போல இருந்த ஆபிஸ் ரூமை மாற்றி படுக்கை அறையோடு இணைத்து அதே அளவில் தன் மனைவிக்கு பிடித்த இடமான பால்கனியாக மாற்றி விட்டான் ..

குழந்தைகள் காதில் விழாத தூரம் வந்த பின் தான் வர்ஷினி பேசியது.. தீக்ஷயன் யார் என்று கேட்கவில்லை என்றாலுமே அவனுமே மனைவியை பின் தொடர்ந்து வந்து விட்டான்..

மனைவி பேசியில் பேசியதை வைத்தே தெரிந்து கொண்டு விட்டான் விசயம் என்ன என்பது.. அதனால் அதை பற்றி கேட்காது மனைவியின் செயல்களை அமைதியாக எந்த இடையூறும் செய்யாது கவனித்து கொண்டு இருந்தான்..

முதலில் தான் இது போலான செயல்களில் என்ன வசி என்ன செய்யிற.? என்று கொஞ்சம் பதறியவனாக தான் கேட்டான்..

பின் அவள் சொன்ன விசயமான .. “என்னை பார்த்துக்க லேடிஸ் இல்லலே தீனா… எனக்குமே அவ்வளவா தெரியாது.. என் அக்காவுக்கு அம்மா சொன்னதை நியாபகம் படுத்திக் கொண்டு தான் செய்யிறது தீனா… அம்மா இதமான பாட்டு.. நல்ல புத்தகம்.. கோபப்பட கூடாது இது எல்லாம் அக்கா கிட்ட சொல்லி இருக்காங்க. தீனா…”

வர்ஷினி இதை சாதாரணமாக தான் சொன்னாள்.. ஆனால் அதை கேட்ட தீக்ஷயனுக்கு தான் ஒரு மாதிரியான நிலை.. எத்தனை எத்தனை பிரச்சனை வந்தாலுமே, அதை கடந்து சென்று விடுகிறாள்.. அதோடு அதை ஒரு சாதாரண விசயங்களாக பார்க்கிறாள்.. ஆனால் அதில் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு விடுகிறாள் மனைவியின் இந்த பரிமானத்தில் தீக்ஷயன் தன் வசியக்காரியிடம் இப்போது எல்லாம் முழுவதுமாக சரணாகதி அடைந்து விடுகிறான் என்று தான் சொல்ல வேண்டும்..

அதனால் மனைவி கண்ணை மூடிக் கொண்டதில், அவள் சொல்லாமலேயே இப்போது எல்லாம் தீக்ஷயனுமே விசயத்தை புரிந்து கொண்டதில், இப்போது வசி தன் அப்பா அம்மா படத்திற்க்கு முன் தான் போய் நிற்பாள் என்று தீக்ஷயன் நினைத்தது போல் தான் வர்ஷினி ஹாலில் மாட்டி இருந்த தன் பெற்றோர்களின் புகைப்படத்தின் முன் போய் நின்றாள்..

அங்கேயும் சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டுவள் பின் சிறிது நேரம் கழித்து கண்ணை திறந்தவள் அவள் எதிர் பார்த்தது போலவே தன்னையே பார்த்து கொண்டு இருந்த கணவனின் கண்களை பார்த்தவள்..

“என்ன தீனா போகலாமா…? நீங்க கார் எடுத்து ரெடியா வைங்க நான் அத்தான் இல்ல மாமாவை எழுப்பி விசயத்தை சொல்லி குழந்தைகளுக்கு துணையா நம்ம ரூமில் படுக்க சொல்லிட்டு வந்துடுறேன்..” என்றவளின் பேச்சை தீக்ஷயன் மறுக்கவில்லை…

காரணம் இப்போது தான் என்ன சொன்னாலுமே மனைவி கேட்க மாட்டாள்.. அது தான் அவளின் அப்பா கிட்ட அனுமதி வாங்கிட்டு வந்து விட்டாளே என்று நினைத்து கொண்டே கீ ஸ்டாண்டில் தன் கார் சாவியை எடுக்கும் போது பின் திரும்பி தன் மாமபார் மாமியாரின் புகைப்படத்தை பார்த்தவன்..மனதார நினைத்து கொண்டான்..

“உங்க பெண்ணை நீங்க ரொம்ப நல்லா வளர்த்து இருக்கிங்க…” என்று.

வர்ஷினி மற்றவர்களுக்கும் செய்வாள்.. ஆனால் தன்னையும் தன் குடும்பத்தையுமே பார்த்து கொள்வாள்.. அதுவும் ஐந்தாம் மாதம் இரட்டை குழந்தை என்றதில் யாரும் சொல்லாமலேயே கூடுதல் கவனத்தோடு தான் தன்னை கவனித்து கொள்வது..

அதனால் அநாவசியமா தீக்ஷயன்.. “ இதை செய்ய செய்யாத சாப்பிடாதே..” என்று எல்லாம் மனைவியிடம் சொல்வது கிடையாது..

தட்சணா மூர்த்தியுமே இரட்டை குழந்தை என்றதுமே கொஞ்சம் பயந்து தான் போய் விட்டார்.. சின்ன பெண்.. பெண் துணை இல்லாது எப்படி சமாளிப்பது என்று.

அதுவும் மகேந்திரன்.. “தன் பெண்ணுக்குமே தம்பி மனைவி செய்ய வேண்டியதா இருக்கே…. என்று கவலை பட.. இது எல்லாம் எனக்கும் ஒன்றுமே இல்லை என்பது போல் தான் அனைத்தையுமே அழகாக திட்டம் இட்டு செய்து கொண்டு இருப்பதை பார்த்து அவர்கள் இருவருக்குமே பெருமை தான்..

அதனால் தீக்ஷயன் மனைவியின் பேச்சில் காரை ரெடியாக மனைவி ஏற தோதாக நிறுத்த..

வர்ஷினியுமே கொஞ்சம் நேரம் கழித்து தான் காரில் வந்து ஏறினாள்.. அந்த கொஞ்சம் நேரம் ஏன் பிடித்தது என்பதற்க்கு காரணங்கள்.. இரவு உடையை மாற்றியவள் கூட இந்த சமயத்திற்க்கு தோதான உடையை உடுத்தி கொண்டு வந்தது தான்.. கூடவே அவள் கையில் வெளியில் சென்றால் எடுத்து செல்லும் அந்த பழரசம் பாட்டில் .. சிரித்து கொண்டான்..

தீனாவின் சிரிப்பை பார்த்தவள் அவளுமே சிரித்தாள்.. பின்.. “ காரை மெல்லவே ஓட்டுங்க வேகம் வேண்டாம்…” என்று தன் மீது கை வைத்து கொண்டு கொண்டவள் ரிலாக்ஸ்ஸாக கண்ணையும் மூடிக் கொண்டாள்..

பேசியில் பேசும் போதே எந்த ஆஸ்பிட்டல் என்று தெரிந்ததினால் மனைவியின் அமைதியை கெடுக்காது காரை மருத்துவமனை வாயிலில் வந்து நிறுத்திய பின்..

மனைவியின் தோளின் மீது தீனா கை வைக்க. வசி அதே நிதானத்தோடு தான் கண் விழித்ததும் காரில் இருந்து இறங்கியதுமே..

பின் கணவன் காரை பார்க்கிங்கில் விட்டு வரும் வரை அந்த மருத்துவமனையின் முகப்பில் நின்று கொண்டு இருந்தாளே தவிர. அவசரமாக உள்ளே எல்லாம் செல்லவில்லை..

காரணம் இரட்டை குழந்தை என்பதினால் வயிறு இந்த ஐந்தாம் மாதத்திலேயே ஒன்பது மாதம் போல பெரியதாக இருப்பதினால், நடப்பதில் கொஞ்சம் சிரமம்.. அதோடு கீழே விழுந்தால், அந்த பயமும் வந்து விட்டதால், இப்போது வெளியில் யாரின் துணை இல்லாது அவள் செல்வது கிடையாது..

அதனால் கணவன் காரை விட்டு வரும் வரை பொறுத்து இருந்தவள் அவன் வந்த பின் நீட்டிய கணவனின் கையை பற்றிக் கொண்டே தான் மெல்ல மருத்துவனையில் உள் நுழைந்தாள்..

தீக்க்ஷயனுமே மனைவியை புரிந்தவனாக மெல்ல சிரித்து கொண்டே அவள் தன் கை பற்றுவாள் என்று புரிந்தவனாக தன் கை பற்றிக் கொள்ள தோதாக கை நீட்டிய வாறே தான் நடந்தது.. இது தான் என்று இருவர்ய்மே எதுவுமே சொல்லவில்லை என்றாலுமே இருவருக்குள்ளும் ஒரு நல்ல புரிதல் இருந்தது..

அந்த புரிதல் தான்.. இவர்களை சுற்றி இத்தனை நடந்துமே.. நீ தான் என்று வர்ஷ்னி கணவனின் பக்கம் கை காட்டாது இணைந்து வாழ வைத்து கொண்டு இருக்கிறது..

மருத்துவமனைக்குள் நுழைந்த தீக்ஷயனும் வர்ஷினியும் வரவேற்ப்பு பகுதிக்கு சென்றவர்கள்..

கீர்த்தனாவின் கணவன் பெயரான. “கிருபாகரன் என்ற பெயரில் அட்மிட் ..” என்று தீக்க்ஷயன் ஆரம்பிக்கும் போதே அந்த வரவேற்ப்பு பெண்..

“பாம்பு கடித்து அட்மிட் ஆன கேசா. ?” என்று கேட்டவள்..

இவர்களின் பதிலை எதிர் பாராது.. “ ரூம் எல்லாம் இல்ல.. ரொம்ப சீரியஸ் அதனால ஐசியூல தான் இருக்கார்..” என்றும் கூறியவள் எந்த பக்கம் செல்ல வேண்டும் என்று வழியையும் கூறினாள்…

வர்ஷினிக்கு மீண்டுமே மனதில் ஒரு சிறு பதட்டம்.. கண் முன் அக்காவின் இரண்டு குழந்தைகள் வந்து நின்றனர்.. மனைவியின் தோளைப்பற்றிய தீக்க்ஷயன்..

“ஓன்னும் இருக்காது வசி…” என்று ஆறுதல் படுத்த..

“ஓன்றும் இருக்க கூடாது..” என்று சொல்லி மீண்டுமே கணவனின் கை பற்றி கொண்டு அந்த வரவேற்ப்பு சொன்ன வழியாக சென்றவர்களின் தளத்தின் ஆரம்பித்திலேயே இவளின் அக்கா அண்ணன் அண்ணி.. என்று கூடி இருந்தனர்..

அக்காவின் இரண்டு பக்கமும் இரு ஆண் பிள்ளைகள்.. முறையே ஏழு நான்கு வயதுடையவர்கள்.. இவளை பார்த்ததுமே.

“சித்தி..” என்று அழுதுக் கொண்டே பெரியவன் இவளை நோக்கி ஓடிவந்தவனை சட்டென்று தான் பிடித்து நிறுத்திக் கொண்டான்.. ஏழு வயது குழந்தை வந்த வேகத்திற்க்கு வர்ஷினியினால் பேலன்ஸ் செய்ய முடியாது.. அதோடு பையனின் உயரம் வர்ஷினியின் வயிற்று பகுதிக்கு சரியாக இருக்க.. முட்டிக் கொள்ளவும் கூடாது என்று தான் பிடித்து கொண்ட தீக்ஷயன்..

“ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல அப்பா நல்லா ஆகிடுவார்.” என்று சமாதனமும் செய்தார்.

அந்த பையன் தீக்ஷயனை யார் என்பது போல் தான் பார்த்தான்.. திருமணத்தில் தூரம் நின்று பார்த்தது.. அதோடு சின்ன பையங்கள் மணமேடையாய பார்ப்பார்கள்.. அவர்க:இன் கவனம் எல்லாம் அவனின் வயது ஒத்தவர்களுடன் விளையாடுவதில் தானே இருக்கும்.. அதனால் கவனிக்கவில்லையோ.. இல்லை கவனித்தும் மறந்து விட்டானா.? என்று தெரியாது..

ஆனால் அந்த பையனுக்கு தீக்க்ஷயனை தெரியவில்லை என்பது மட்டும் நிச்சயம்..

அதை புரிந்து கொண்ட வர்ஷினி தான்.. “ அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுடா செல்லம்.. அப்பா சரியாகிட்டு வந்து விடுவார்.” என்று சமாதானம் செய்து கொண்டு இருந்த போது தான் வர்ஷினியின் இரு பக்கமும் கீர்த்தனாவும் ஸ்ரீவச்சனும் வந்து நின்றது..

அவர்கள் பக்கம் வரவும் தீக்ஷயன் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு விட்டான்.. எதற்க்கு என்று புரிந்து கொண்ட வர்ஷினி தான் கணவனை முறைக்க..

தன் கண்களை மூடி திறந்தவன். ஒன்னும் இல்ல இங்கு தான் நிற்கிறேன்.. என்று தான் இருக்கும் இடத்தை குறிப்பிடவும் தான் வர்ஷினி தன் உடன் பிறப்புக்களை பார்த்தது.

கீர்த்தனா அழுத்து அழுது அப்படி ஓய்ந்து போய் காணப்பட்டாள்.. மிகவும் சிரியஸோ.. என்று வர்ஷினிக்குமே மனதில் கொஞ்சம் பயம் தான்..

இருந்தும் அதை வெளிக்காட்டாது… “ ஒன்னும் ஆகாது கவலை படாதிங்க… தரண் அப்பா குணமாகி வீட்டுக்கு வந்துடுவார்…” என்று தைரியம் அளித்தாள்..

இருந்துமே கீர்த்தனாவின் கண்கள் கலங்கி போனவளாக தங்கையின் கையை பற்றிக் கொண்டவள்..

“நீ நல்லா இருக்கியா வர்ஷி.. உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே…?” என்று சம்மந்தமே இல்லாது தன் நலனை விசாரித்த கீர்த்தானாவையே அதிசயத்து பார்த்து இருந்தாள் நம் வர்ஷினி…

நல்ல நாளிலேயே மற்றவர்களை பற்றிய யோசனை கூட கீர்த்தனாவுக்கு இருக்காது.. தன் நலம் தன் குடும்பம் எப்போதுமே அதை பற்றிய யோசனைகள் பேச்சுக்கள் தான் அவளிடம் இருக்கும்.. இதையே வர்ஷினி தங்கள் பெற்றோர் இறந்த பின் யோசித்ததில் புரிந்து கொண்டது ஆகும்…

அப்படி பட்டவள் இன்று அவளுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனையில் அவள் இருக்கிறாள்.. அதை விடுத்து தன் நலனை கேட்பது அவளுக்கு ஆச்சரியத்தை தந்தது.. அதில் வர்ஷினி தீக்ஷயனை பார்க்க.. தீக்ஷயனுமே அப்போது வர்ஷினியை தான் பார்த்து கொண்டு இருந்தான்..

விசாரித்ததிற்க்கு ஏன்..? எதற்க்கு.? என்று எல்லாம் கேட்காது..

“ம் நல்லா இருக்கேன்..” என்று மட்டும் சொல்லி கொள்ள. ஸ்ரீவச்சனுமே அதே முரையாக விசாரித்து..

“ஏதாவது வேண்டும் என்றால் என் கிட்ட கேளு வர்ஷி… ஆ பிரசவம் அம்மா வீட்டில் தான் பார்க்கனும்.. நீ நம்ம வீட்டிற்க்கு வந்துடு…”

கொஞ்ச நாளாக அண்ணனின் செயலில் சில மாற்றங்களை வர்ஷினி உணர்ந்தாள் தான்.. வாரம் ஒரு முறை பேசியில் அழைத்து பேசுவது.. பின் தான் தனித்து சென்ற இந்த இடைப்பட்ட நாட்களில் இரண்டு முறை நேரிலும் வந்து பார்த்து இருந்தான் தான்.. அதையே ஏன் எதற்க்கு என்று தெரியாது இருந்தவல்..

இப்போது இந்த இருவரின் பேச்சில் என்னவோ இருக்கிறது என்பது போல நினைத்தாலுமே.. அது என்னவாக இருக்கும் என்று எல்லாம் யோசிக்கவில்லை…

மாறாக தன் அக்கா பிள்ளைகளின் பக்கம் அமர்ந்து கொண்டு.. பிள்ளைகளிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.. அவர்களின் பயத்தை போக்கும் விதமாக..

அப்போ இப்போ என்று ஒரு வழியாக காலை எட்டு மணிக்கு கிருபாகரன் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டார்.. அத்தனை விசம் அவர் உடம்பில் ஏறி இருக்கு.. உயிரை காப்பாற்றி விட்டோம்.. ஆனால் இதன் எபெக்ட் எந்த அளவுக்கு இருக்கும் என்று இப்போ சொல்ல முடியாது..” என்பது போல மருத்துவர்கள் சொன்ன பின் தான் வர்ஷினி கணவனோடு தன் வீடு வந்து சேர்ந்தது.

அதன் பின் அக்கா கணவனை பார்க்க வர்ஷினி மருத்துவமனைக்கு எல்லாம் சென்று பார்க்கவில்லை… பேசியில் மட்டும் அக்கவிடம் பேசி விசயத்தை தெரிந்து கொண்டு விட்டாள்..

வர்ஷினிக்கு ஐந்து மாதம் முடிந்து ஆறுமாதம் தொடக்கத்தில் வர்ஷினியினால் முன் போல நடக்க முடியவில்லை வேலைகளையும் பார்க்க முடியவில்லை.. தீக்ஷயனுக்கே வயிறு என்ன இவ்வளவு பெருசா இருக்கு என்று பயந்து மருத்துவரிடம்..

“வசிக்கும் பேபிக்கும் ஒன்னும் இல்லையே.. ஏன் இவள் இப்போவே இப்படி இருக்கா.?” என்று ஆயிரம் சந்தேகம் அவனுக்குள்.. அதோடு புதியதாக ஒரு பயம்..

அவனின் முதல் மனைவி பவித்ராவுமே பிரசவத்தின் போது தானே இறந்து போனது.. என்ன தான் அவனின் படித்த அறிவு பவித்ரா உடல் நலன் சுகம் இல்லாதவள்.. அதுவும் மருத்துவரே குழந்தையை பெற்றுக் கொள்ள கூடாது என்று தான் சொல்லி இருக்கின்றனர்.. அதனால் அவள் இறந்து விட்டாள்..

ஆனால் வசி அப்படி இல்லை… இந்த காலத்தில் பிரசவம் என்பது எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை.. என்ரு சொன்னாலுமே வசி இரண்டு குழன்ந்தைகளை சுமந்து கொண்டு நடந்து வரும் போது பார்க்கும் போது எல்லாம் கொஞ்சம் பயம் வருவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

அந்த பயம் அவன் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது போல. வர்ஷினி தான் கணவனிடம்..

“இந்த காலத்தில் இது எல்லாம் ஒன்னுமே இல்லே தீனா.. என்ன இது.?” என்று கணவனுக்கு தைரியம் அளித்து கொண்டு இருந்தாள்..

ஒரு நிலைக்கு மேல் கணவனின் இந்த பயம் எதனால் என்பதும் புரிந்து கொண்டு விட்டான்.. கணவன் சொல்லாமலேயே. புரிந்து கொண்டு விட்டாள் வர்ஷினி.

தீக்க்ஷயன் முடிந்த மட்டும் தன் முதல் மனைவியான பவித்டாவின் பேச்சை தன் வசியிடம் பேச மாட்டான்.. என்ன தான் முதல் திருமணம் ஒரு கட்டாயத்தில் செய்து கொண்டு இருந்தாலுமே, அவளோடு நான் வாழ்ந்து ஒரு குழந்தையையும் பெற்று இருக்கேன்..

வசியை பிடித்து திருமணம் செய்து கொண்டாலுமே, அதை நான் அவளுக்கு உணர்த்தி இருந்தாலுமே, வசிக்கு பவித்ராவின் பேச்சு கண்டிப்பாக ஒரு வித சங்கடத்தை கொடுக்க தான் செய்யும் என்று நினைத்து கூடிய மட்டும் தவிர்த்து விடுவான்..

அதன் தொட்டு அவன் தன் பயத்தை சொல்லாது போக..ஆனால் இந்த முறை வர்ஷினி

“அவங்க உடல் நிலை சரியில்லாதவங்க தீனா.. நீங்க அதை நினைத்து பயப்படாதிங்க. “ என்று இவள் தான் அவனுக்கு தைரியம் அளிக்கும் படி ஆனது.

இதை பார்த்த தட்சணா மூர்த்தி தான் தன் பெரிய மகன் மகேந்திரனிடம்..

“என்னடா இவன் பைத்தியமா மாறிடுவான் போல..” என்று சொல்ல.

அதற்க்கு மகேந்திரன் ஒரே தட்டில் உணவை வைத்து கொண்டு தீராவுக்கும் ஸ்ருதிக்கும் உணவை ஊட்டிக் கொண்டு இருந்தவளை பார்த்து கொண்டே…

“அவனின் வசி மேல அவனுக்கு பைத்தியம் ப்பா.. ஆனா அதுக்கு வெர்த் தான் வர்ஷினி..” என்றும் கூறினான்.. அதற்க்கு அவனின் தந்தையுமே ஆமோதித்தார்..

வர்ஷினி தைரியம் அளித்தாலுமே தீனாவுக்கு வீட்டில் எப்போதுமே இருப்பது போல ஒரு பெண் துணை இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தான் தீக்க்ஷயன் …

சமையல் செய்ய மேல் வேலை செய்ய என்று வேலையாட்களை வைத்து உள்ளான் தான். அவர்கள் செய்து விட்டு சென்று விடுவார்கள்.. அதனாலே எப்போதுமே வீட்டில் ஒரு பெண் துணை இருந்தால் நல்லது என்பது அவன் எண்ணம்..

அதை அன்று இரவு அனைவரும் உண்ணும் போது பொதுவாக சொல்லி விட தட்சணா மூர்த்தியும் மகேந்திரனும். நாங்களுமே வர்ஷினிக்கு ஒரு துணை இருந்தால் நல்லது தான் என்று நினைத்து கொண்டு இருந்தோம் என்று சொல்ல.

எப்படி ஆளை தேர்வு செய்வது அதற்க்கு என்று ஏஜென்ஸி இருக்கிறது அதில் பார்க்கலாமா..? என்று ஆண்கள் மூன்று பேரும் பேசிக் கொண்டு இருக்க வர்ஷினி அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவள்..

பின் தன் யோசனையாக… “அந்த வீட்டிற்க்கு மீன் கொண்டு வந்து கொடுப்பாங்கலே.. அவங்க கிட்ட வேணா கேட்டுப்பார்க்கட்டுமா..” என்று சொன்னவளின் பேச்சை ஆண்கள் மூன்று பேரும் ஏற்றுக் கொண்டனர்..

அந்த பாட்டியினால் தானே.. இப்போது தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக வயிற்றில் வளர்கிறது… என்று இப்போது அந்த பாட்டியின் பேசியின் எண் வர்ஷினியிடம் இருக்கிறது.

அவ்வப்ப்போது பேசிக் கொண்டும் இருக்கிறாள்.. உடனே அழைத்து விட்டாள்..

ஆரம்பம் பேச்சாக எப்படி இருக்கிங்க என்று ஆரம்பித்தவள்.. பின் தன் தேவையை கூறினாள்..

“உங்களை நான் நல்லவிதமா பார்த்துக்குறேன் பாட்டி.. வேலை எல்லாம் அதிகம் இல்லை பாட்டி.. சமையலுக்கு வெளி வேலைக்கு ஆளுங்க இருக்காங்க… துணைத்து தான் பாட்டி..” என்று கேட்க..

பாட்டியுமே உடனே ஒத்து கொண்டு விட்டார்… “ என்னாலேயும் தெரு தெருவா மீன் விற்க முடியலேம்மா.. தெரு தெருவா சுத்தினதுக்கு வீட்டு வேலை எல்லாம் ஒரு விசயமா கண்ணு.. நான் பார்த்துக்குறேன் டா.” என்று சொன்னவர் இரண்டு நாளில் தீக்ஷயன் வீட்டிற்க்கும் வந்து விட்டார்..

முன் வேலை செய்தவர்கள் எப்போதும் போல வேலை செய்து விட்டு செல்ல. மீன் விற்க்கும் பாட்டியான மீனாட்சி பாட்டி…

பிள்ளை பெற வில்லை என்றாலுமே, வயதின் அனுபவத்தில் இது போலான நேரத்தில் சாப்பிட வேண்டிய சத்தான உணவை சமைத்து கொடுத்து என்று வர்ஷினியின் வாழ்க்கை இன்னுமே நல்ல முறையில் சென்று கொன்டு இதோ ஏழாம் மாதம் முடிவில் இருந்த சமயம் தான்ம்

வர்ஷினி வீட்டிற்க்கு அவளின் அக்கா கீர்த்தனாவும்.. அவளின் அண்ணன் ஸ்ரீவச்சனும் வந்தது.

ஸ்ரீவச்சன் கையில் வர்ஷினியின் பெயருக்கு பதினைந்து லட்சத்தில் ஒரு செக்கும்… கீர்த்தனா கையில் நகைபெட்டிகளும் இருந்தது…

தங்கையின் முன் அந்த நகைபெட்டிகளை வைத்த கீர்த்தனா அதை திறந்தும் காண்பித்தாள்.. அந்த நகைப்பெட்டியில் ஒரு சில நகைகள் இவளுடையது.. ஒரு சிலது அவளின் அம்மாவுடையதும் இருந்தது..






 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
அண்ணனுக்கு ஏற்கனவே கொஞ்சம் புத்தி வந்திடுச்சு 🤗 🤗 🤗 ஆனால் அக்காவுக்கு புத்தி வந்தது கொஞ்ச ஆச்சரியம் தான் 🤗 🤗 🤗 🤗

இப்போ என்ன திடீர்னு நகை பணம் எல்லாம் தூக்கிட்டு வந்திருக்காங்க 🤔🤔🤔🤔🤔
 
Last edited:
Member
Joined
Jun 2, 2024
Messages
77
Apo share pirikum podhu olunga kodukaama meedhiya aataya potu irkaanga pola...edhachum parigaram pana poitu paambu kadi agi irkum athan ipo gnanaodhaya vanthu irku...aana intha annanuku ennachum thidirnu ipdi manasu maara??
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
என்ன திடீர்னு திருந்திட்டாங்க அண்ணனும் அக்காவும்.... 🤔

அண்ணன் வீட்ல ஒரு சூனியக்கார கிழவி இருக்குமே அது பத்தாயிரத்துக்கு பதறி அடிச்சு ஓடி வரும் இப்போ எப்படி விட்டுச்சு... 😒

வர்ஷினி நகையும் அம்மா நகையுமா 🙄 இதையெல்லாம் எப்போ ஆட்டைய போட்டா கீர்த்தனா.... 😤
 
Member
Joined
May 11, 2024
Messages
61
ஏதோ kd வேலை பார்த்து இருக்காங்க
 
Top