Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Mogathin Monam...

  • Thread Author
எபிலாக்…

மூன்று வருடங்கள் கடந்து…

புதிய வீடு… அன்று தான் கிரகபிரவேசம்… இரட்டை குழந்தைகளின் பிறந்த தினம்.. மற்றும் ஸ்ருதியின் மஞ்சள் நீராட்டு வைபோகமும்.. கூட…

சென்னையில் மெயினான இடத்தில் அந்த இடம் தீக்க்ஷயன் ஜார்டன் சென்ற போது சம்பாதித்த பணத்தை கொண்டும், முன் சேமிப்பு, அதோடு இந்த மூன்றாடுகளில், தீக்ஷயனின் வருமானங்கள் வரிசையாக அவனின் சேலரி.. பின் இரு வீட்டின் வாடகை.. தந்தை அவனுக்கு என்று கடையில் வந்த லாபம் போட்டு கொண்டு வருவது.. அதோடு மூன்று ஆண்டுகள் முன் வர்ஷினி வாங்கி கட்டிய வீட்டில் கிடைத்த வாடகை.. என்று அனைத்து சேமிப்பையும் சேர்த்து தான் இந்த வீடு வாங்கியது…

பாதி கட்டிய நிலையில் இருந்த வீட்டை தான் இவர்கள் வாங்கியது.. இந்த வீட்டை விற்றவர்கள் இந்த வீடு கட்ட ஆரம்பித்ததில் இருந்தே பிரச்சனை மேல் பிரச்சனையாக இருந்தது.. பாதி கட்டிய நிலையில் இந்த வீடு கட்டுபவரின் மனைவியே இறந்து விட…

பயந்து விட்டார் போல.. அதனால் பாதிய கட்டிய நிலையிலேயே விற்க முடிவு எடுக்க. வாங்குபவர்களும் பயந்து விட்டனர்..

ஆனால் வர்ஷினி கணவனிடம் வாங்குங்க.. “ என்று சொன்னால், காரணம் உழைத்த பணத்தில் அவர் வீடு கட்டவில்லை… அதனால் அது பாதகமா போய் விட்டது.. நாம உழைத்த பணத்தை கொண்டு தானே வாங்க போகிறோம் நமக்கு அது சாதகமா தான் ஆகும்..” என்று சொல்லி ஒரு ஆண்டுக்கு முன் இந்த இடத்தை கணவன் பெயரில் பதிவு செய்து விட்டதை கட்டி முடிக்கவே இந்த ஒரு ஆண்டுகள் பிடித்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்…

வர்ஷினி சொன்னது போல அந்த இடம் வாங்கியது இவர்களுக்கு சாதகமாக தான் போனது… மகேந்திரனின் கடை பக்கம் தான் இந்த வீடு கட்டுவது என்பதால், தீக்க்ஷயன் அவ்வப்போது தன் அண்ணனை தான் போய் பார்த்து விட்டு வர சொல்வான்..

என்ன தான் முழுவதுமாக கண்டாக்ட்டில் விட்டு விட்டாலுமே, நாமும் அவ்வப்போது பார்த்து வர வேண்டும் அல்லவா.

அப்படி போக வர பார்த்தவனின் கணிணில் விழுந்தவள் தான் தாமரை.. சித்தால் வேலை பார்ப்பவள்.. ஐந்து வயது பெண் குழந்தை.. கணவன் குடித்து குடுத்தே செத்து விட்டான்.. இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது…

அப்போது குழந்தைக்கு மூன்று வயது.. கணவனுமே சித்தால் வேலை தான் செய்து கொண்டு இருந்தான்.. படிப்பு அறிவு கிடையாது.. அதனால கணவன் இருக்கும் போது எப்போதாவது இந்த வேலைக்கு வந்தவள் இப்போது இதுவே தன் வாழ்வாதாரம் என்றாகி விட்டது..

மகேந்திரன் தம்பி சொல்லி வந்த போது மகேந்திரன் தாமரையின் பெண் விளையாடிக் கொண்டு இருக்க.

யார் இந்த பெண் என்று அந்த குழந்தையிடம் பேச கிட்ட நெருங்கியது தான் தாமதம் .. இரண்டாவது தளத்தில் செங்களை தூக்கி கொண்டு போனவள் அதை அப்படியே போட்டு விட்டு அப்படி ஒடி வந்து விட்டாள் குழந்தையின் பக்கம்..

மேஸ்த்திரி கூட. “ யார் உன் குழந்தையை என்ன செய்துட போறாங்க.. உன் பெண் பக்கத்தில் யார் போனாலுமே இப்படி ஒடி போற. முதல்ல வந்து வேலையை பாரு.. இல்லேன்னே பாதி சம்பளம் தான் கொடுப்பேன்…” என்று சொல்லி கூட போகாது தன்னை முறைத்து பார்த்து கைய்யோடு மகளை கோழி அடைக்காப்பது போல அழைத்து சென்றவளின் முதுகையே பார்த்திருந்த மகேந்திரன்.. பின் தம்பி சொல்லாமலே வர ஆரம்பிக்க…

முதலில் மறுத்த தாமரை. பின் தன் கதையை சொல்லி.. உன் பெண்ணுக்கு நான் நல்ல அப்பாவா இருப்பேன்..” என்று வாக்குறுதி கொடுத்து பின் தன் தந்தை தம்பி வர்ஷினியிடம் பேசி கடைசியாக தன் ஸ்ருதியிடம் விசயம் போனது..

அதுவுமே வர்ஷினி பக்குவமாக இந்த விசயத்தை கூற.. பத்து வயது முடிவடைந்த நிலையில் இருந்த பெண் சிறிது நேரம் யோசித்தவளிடம்..

“சித்தி என்றாலே தப்பானவங்க எல்லாம் இல்ல ஸ்ருதி..” எனும் போதே ஸ்ருதி..

“தெரியும் வசிம்மா.. எல்லா சித்தியுமே கெட்டவங்க கிடையாது… அதே போல எல்லா அம்மாவுமே நல்லவங்க என்று சொல்ல முடியாது. அதுக்குன்னு நான் எல்லா அம்மாவையுமே சொல்லலே வசிம்மா.. நீங்க நம்ம அகன் ஆத்மனை பார்த்துக்குறதை பார்த்த பின்.. நான் அப்படி சொல்ல முடியுமா…?

அதே சமயம் நீங்க தீராவை பார்த்துக்குறது என்னை பார்த்துக்குறது எல்லா சித்தியும் கெட்டவங்க இல்ல.” என்று சொன்ன அந்த சின்ன பெண்ணின் புரிதலில் மனது நிறைந்து தான் போயின வர்ஷினிக்கு.

சின்ன வயதிலேயே ஸ்ருதி பட்ட அனுபவம் தான் இவளின் இந்த பக்குவதற்க்கு காரணமோ.

பின்.. “ ஒகே வசிம்மா.. அப்பா அவங்களை மேரஜ் பண்ணிக்கட்டும் வசிம்மா. ஆனா வீடு நீங்க எங்கு இருக்கிங்களோ அந்த வீடு பக்கத்துல தான் இருக்கனும் எப்போவுமே..” என்று சொல்லி விட..

ஸ்ருதி இல்லாத சமயம் வர்ஷினி தீக்ஷயனிடமும்.. மகேந்திரன் மற்றும் தன் மாமனாரிடமும்.. “ ஸ்ருதியை நாங்களே வைத்து கொள்கிறோம் என்றதுமே..” மகேந்திரன் உடனே..

“அப்போ இந்த கல்யாணம் வேண்டாம் வர்ஷி… “ என்று விட்டான்.. பின் ஒரு வாறு பேசி தாமரை மகேந்திரனுக்கு திருமணம் முடிந்து ஆறு மாதம் கடந்து விட்ட நிலையில் தான் இந்த மூன்று விழாவுமே ஒரே நாளில் வைத்து விட்டனர்..

விடியற் காலையில் ஐய்யரை வைத்து கிரகபிரவேசம் செய்து முடித்து விட்டு. பின் ஸ்ருதிக்கு மஞ்சள் நீராட்டி விழா.. மாலை இரு குழந்தைகளுக்கும் பிறந்த நாள் விழா என்று முடிவு எடுத்து இதோ கிரகபிரவேசத்திற்க்கு முக்கிய உறவுகளான வர்ஷினியின் உடன் பிறந்தவர்கள்… தீக்க்ஷயன் உடன் பிறந்த மகேந்திரன் கூடவே தான் இருப்பது… சுப்ரியா தன் கணவனோடு வந்து இறங்கினாள்..

பார்க்கவே முன் போல இல்லாது தூங்காத கண்களும் உப்பிய முகமுமாக வந்து இறங்கிய சுப்ரியாவை பார்த்ததுமே தீக்ஷயனுக்கே ஒரு மாதிரியாக தான் இருந்தது.. இருந்தும் போய் பேசவில்லை என்ன என்று கேட்கவில்லை.

ஆனால் தந்தையால் அப்படி இருக்க முடியுமா…?

“என்ன இப்படி இருக்க உடம்பு முடியலையா…?” என்று கேட்டது தான் தாமதம் யார் இருக்கிறார்கள் இல்லை என்று எல்லாம் பார்க்கவில்லை..

அப்படி ஒரு அழுகை.. “ ப்பா இவருக்கு வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்னோடு பழக்கம் இருக்குப்பா…” என்று சொன்னதுமே..

இது என்ன என்பது போல் தான் தட்சணா மூர்த்தி தன் மாப்பிள்ளை ராஜேஷை பார்த்தது.

அவனோ பதில் சொல்லாது ..” அடுத்து உங்க மகள் என்ன சொல்றா என்று கேட்டுட்டு அப்புறம் என்னை பாருங்க மாமா..” என்ற பேச்சுக்கு ஏற்றது போல் தான் அடுத்து அடுத்து சுப்ரியா பேசிய பேச்சுக்கள் இருந்தது..

எங்க வீடு பக்கத்தில் ஒரு டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்குலேப்பா.. அதுல பில் போடுற பெண் கூட சிநேகிதம் வெச்சி இருக்காருப்பா… அப்புறம் எங்க வீட்டு வேலை செய்யும் பெண்..” எனும் போதே தட்சணா மூர்த்தி..

“அவங்களுக்கு ஐம்பது வயது இருக்குமேம்மா…” என்று மகளின் பேச்சில் குழம்பி பின் பயந்து போனவராக கேட்டவரிடம்..

“ஆமாம் பா. கேளுங்கப்பா உங்க மாப்பிள்ளை கிட்ட ஊரில் ஒரு பொம்பளையை கூட விட்டு வைக்க மாட்டாரா…? என்று இதோ இப்போ கூட பாருங்க வர்ஷினி கிட்ட என்னம்மா வழிந்து வழிந்து.” எனும் போதே.

தட்சணா மூர்த்தி.. “ துடப்ப கட்டையாலேயே அடிப்பேன் ஜாக்கிரதை..” என்று மகளிடம் பேசாது தூரம் சென்று விட்டாலுமே புரிந்து விட்டது.. மகளுக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது..

காலையில் ஸ்வேதாவும் சரஸ்வதியும் வரவில்லை.. அழைக்கவில்லை.. ஆனால் ஸ்ருதியின் மஞ்சள் நீராட்டு வுழாவுக்கு இருவரையும் அழைத்து விட்டார்கள்… அழைக்க சொன்னது மகேந்திரன் தான்.. என்ன தான் ஆனாலுமே அவள் தாய் என்று..

யாரோ போல ஒரு தூரமாக ஸ்வேதாவும், சரஸ்வதியும் அமர்ந்து இருக்க. அந்த பெரிய ஹாலில் ஒரு மேடை அமைத்து அதில் இருக்கைகள் போட்டு நடுவில் ஸ்ருதி அமர வைக்கப்பட்டு இருக்க. இந்த பக்கம் தீரா அந்த பக்கம் தாமரையின் மகள் அமர்ந்து இருக்க தீரா ஸ்ருதியின் மடியில் அகன் ஆதன்.. இரு மகன்கள் அமர்ந்து இருக்க.. பார்க்கவே கண்களுக்கு நிறைந்து தான் தெரிந்தது..

அதுவும் ஸ்ருதியின் மடியில் அமர்ந்து இருந்த ஆதன் “ உச்சா போகனும்.” என்று சொன்ன போது ஸ்ருதி கூட்டி செல்ல பார்க்க.

தாமரை தான் பிடித்து அவளை அமர வைத்தவள் கண்டிப்புடன்.

“மடியில் உட்கார வை சொன்ன உட்கார வைத்து விட்டேன்.. குழந்தைக்கு ஏதாவதுன்னா எங்க கிட்ட தானே சொல்லனும்…?” என்று உரிமையுடன் சொன்னவளிடம் ஸ்ருதி..

“ தாமரைம்மா. தம்பிக்கு நான் தான் செய்வேன் தெரியும் லே.” என்று சிணுங்கியவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளி விட்டு…

“இன்னைக்கு நாங்க செய்தா ஒன்னும் கெட்டு போகாது. என்று விட்டு குழந்தையை பாத்ரூம் சென்று பின் வந்ததுமே மீண்டுமே ஸ்ருதி தாமரைம்மா என்று அழைத்து தம்பியை தன் மடியில் அமர வைத்து கொண்டாள்..

இதை எல்லாம் ஒரு வித ஏக்கத்தோடு பார்த்து கொண்டு இருந்தனர் ஸ்வேதாவும், சரஸ்வதியும்… முன் இருந்த வீட்டில் தான் இப்போது மாமியாரும் மருமகளும் இருப்பது.. தப்பு தப்பு முன் நாள் மாமியார் மருமகள் என்று சொன்னால் சரியாக இருக்கும்..

உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட என்பது போல் தான் அந்த வீட்டில் முன்னால் மாமியாரும் மருமகளும் தினம் ஒரு சண்டை தான் போட்டு கொண்டு இருகின்றனர்…

இதோ இப்போது கூட சரஸ்வதி.. “ நான் பாட்டுக்கு இருந்தேன் நீ தான் அவளுக்கு என்று ஒரு குழந்தை வந்தால் தீராவை நல்ல மாதிரி பார்த்துக்க மாட்டா… என்று அப்படி இப்படி பேசி என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்க…” என்று சொல்ல.

அதற்க்கு ஸ்வேதா. “ஆமாம் ஆமாம் நான் தான் நண்டு சூப்பு வெச்சி குழந்தை உண்டாகி இருக்குறவளுக்கு கொடுக்க சொன்னேன்… நீ ஆரம்பத்தில் இருந்தே வில்லி தான் போல. உன் கதையை விடு.. நீ வாழ்ந்து முடிச்சவ ஆனா நான்.. என் கண் எதிரில் என் புருஷன் என் பெண் என்று இருக்கு.. ஆனா எனக்கு உரிமை இல்லை…” என்று பேச. இப்படியாக அவர்கள் நிலை இருந்தது…

அதுவும் இங்கும் அங்கும் வர்ஷினியும் தாமரையும் வேலை செய்து கொண்டு இருப்பதை பார்த்தவர்கள்.. பரவாயில்லை என்பது போல ஒரு சிலர் மகிழ்ந்தாலுமே, ஒரு சிலர் வயிறு எரிந்து தானே போய் விடுவர்…

அதுவும் வர்ஷினி தீக்க்ஷயனை திருமணம் செய்து கொண்டதே பணத்தை பார்த்து தான்.. கூட வேலை செய்தவன் தானே.. தெரிந்து இருக்கும் கை இருப்பு… இதோ எவ்வளவு பெரிய வீடு.. அதுவும் மெயின் இடத்தில் உன்னால வாங்க முடியுமா..? என்னால வாங்க முடியுமா.. என்று புரளி பேசிக் கொண்டு இருந்தவர்கள் வர்ஷினியை பார்த்ததுமே.

“எப்படிம்மா இருக்க நல்லா இருக்கியா.? உன் நல்ல மனசுக்கு நீ நல்லா தான் இருப்ப..” என்று சொன்னவர்களிடம் வர்ஷினியுமே சிரித்து கொண்டு..

“எல்லாம் உங்களை போன்றவங்க ஆசீர்வாதம் தான்மா..” என்று விட்டு சென்றவளுக்கு தெரியும்.. இவர்கள் என்ன பேசினார்கள் என்பது..

தன் பின்னால் பேசிக் கொண்டு இருப்பவர்கள் எப்போதுமே பின்னால் பேசிக் கொண்டு பின் தங்கி தான் இருப்பர்.. இதோ இப்போது என்னை பின் பேசிக் கொண்டு அவர்கள் அந்த இடத்தில் தான் நிற்பர்..

இதோ என் தலை மறைந்ததுமே தன் பேச்சு தான் தொடரும் என்று வர்ஷினி நினைத்தது போல் தான்..

“ம் இன்னுமே மினு மினுப்பு கூடி போய் தெரியிறா பார்த்தியா..?” என்று அவர்கள் விட்ட பேச்சை பேச.. மற்றவள்..

“பின் இருக்காதா..? முன் கூலிக்கு வேலை பார்த்துட்டு இருந்தா.. இப்போ ஒரு கடைக்கு முதலாளியா ஆகி விட்டாளே … இந்த மினு மினுப்பு இருக்க தானே செய்யும்..” என்று பேசியவரின் பேச்சுக்கு இடையே.

“இந்த வீட்டுக்கு கீழே பார்க்கலையா.. ஒரு பெரிய ஹால் போல இருக்கே..அது என்ன தெரியுமா இங்குமே ஒரு டெக்ஸ்டைல்ஸ் ஆரம்பிக்கும் திட்டம் தானாம்..” என்று சொன்ன பேச்சு அனைத்துமே உண்மை தான்..

இதோ தட்சணா மூர்த்தியிடம் அவர் வயதுடைய ஒருவர்.. “ என்னப்பா இந்த வயசுல விவாகரத்து அது எல்லாம் தேவையா..?” என்று கேட்டவரிடம் தட்சணா மூர்த்தி..

“இந்த வயது எந்த வயது என்பது இல்ல. எல்லா வயசுக்குமே மனசு நிம்மதி வேண்டும்.. அதுக்கு தான் என்ன செய்யனுமோ .. அதை செய்தேன்..” என்று அந்த பேச்சை நிறுத்தி கொண்டவரிடம்..

தொடர்ந்து.. “ இப்போ முழு நேரம் வீட்டில் தான் இருக்க போல. போர் அடிக்கல. அத்தனை சுறு சுறுப்பா இருந்த மனுஷன்..?” என்று கேட்டவரிடம்..

“இப்போவுமே நான் சுறு சுறுப்பா தான் வீட்டில் இருக்கேன்.. இரண்டு பேரப்பிள்ளைங்க.. மூன்று பேத்திக்கள் நடுவில் சுறு சுறுப்பா தான் இருக்கேன்..” தாமரையின் மகளையுமே தட்சணா மூர்த்தி தன் பேத்தி என்று தான் நினைப்பது…

“வீட்டை மட்டும் இல்லாம கடை எல்லாம் என் மருமகள் வர்ஷி பார்த்து கொள்கிறா.. அது அதுக்கு வேலையாட்கள்.. அவங்களை பார்த்துக்க மீனாட்சி அம்மா. வீடும்மே நல்ல மாதிரி போகுது.. மருமகள் கடையையுமே இன்னுமே நல்ல மாதிரி நடத்துறா.. எனக்கு இதுக்கு மேல என்னப்பா வேண்டும்..” என்று விட்டார்.

பின் அவருமே.. “ ஆமா ஆமா கேள்வி பட்டேன்.. இந்த வீட்டோட கீழ் தளம் கடையா தான் மாத்துறதா திட்டம் போல.” என்று சொன்னவரிடம்.

“ஆமாம் பா. எல்லா மருமகள் வர்ஷினி ஐடியா தான்.. மெயின் இடம் எதுக்கு வேஸ்ட் செய்யனும்.. என்று.. “ மிக பெருமையாக பேசினர்..

யார் யார் என்ன பேசினாலுமே வசி தீனாவின் வசியாக இன்னுமே இணக்கமாக அவர்களுக்குள் மனதளவில் இன்னுமே நெருக்க கூடி நல்ல இல்லர வாழ்க்கை வாழ்கின்றனர்..

இதோ இந்த வீட்டிலும் மனைவிக்கு பிடித்த பெரிய பால்கனியில் அதில் மர ஊஞ்சல் கட்டி குழந்தைகள் உறங்கிய பின்.. தீனாவின் மடி மீது தலை வைத்து கொண்டு அவர்களின் இனிமையாக அந்த இரவுகள் தொடர்கிறது தான்.

அவர்களின் அந்த இரவுகளில் மோகம் இருக்கிறதோ இல்லையோ.. காதல் நாள் செல்ல செல்ல இன்னுமே கூடிக் கொண்டு தான் போகின்றது அவர்களுக்கு இடையில்.

ஆம் இன்னுமே அவர்களின் இரவுகளில் பயந்து போய் தான் கலவியில் ஈடுப்படுகின்றனர்.. தீக்ஷயனுக்கோ மனதில் இதை பற்றி மனைவி வருத்தப்படுகிறாளோ என்ற நினைப்பில் ஒரு முறை கேட்க.

நான் மனதளவில் அன்று இன்றும் என்றுமே மோகத்தில் மோனம். தான் என்று.

நிறைவு…..
















 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
Mam! What is the next story mam?
அதை தான் யோசிக்கிறேன்... இரண்டு கதை மனதில் இருக்கு எதை முதலில் எழுதுவது.. தெரியவில்லை
 
New member
Joined
May 10, 2024
Messages
12
Simply superb madam. Yet another feather in your cap. Thanks a lot for making us to feel good through your stories. Padika rombha arumaya irundhadhu indha story. Nice characterisation. Lead characters kulla azhaghana oru purindhunarvu. Rombha nalla irundhadhu. Eagerly awaiting for your next work. Keep rocking. Best wishes and take care.
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
Adhuku naduvula innoru story eludhuveenghala. Sorry just a curiosity.
இன்றே எழுத தொடங்கினேன்.. கோயிலுக்கு கூப்பிட்டாங்க போயிட்டு இப்போது தான் வந்தேன் இனி இரவு உணவு முடிந்தால் இன்று எழுதுவேன் பா
 
Top