Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Nayaganin Nayagi-2

  • Thread Author
அத்தியாயம்…2

“நான் உன் சொல் பேச்சை கேட்டு இருக்கனும்… நான் தப்பு பண்ணிட்டேன் பத்து..தப்பு பண்ணிட்டேன்.” என்று சொல்லி அழும் சகோதரியை தேற்ற முடியாது அப்படியே நின்று விட்டாள்.நம் நாயகி பத்மினி…

தேற்ற பிடிக்கவில்லை என்பதை விட சற்று முன் தன் சகோதரி கீதா சொன்ன விசயத்தை அவளாளேயே ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவள் அதை ஏற்று பின் தெளிந்தால் தானே சகோதரியை சமாதானப்படுத்துவதோ...இல்லை…

“நான் தான் அப்போவே வேண்டாம் என்று சொன்னேன் கேட்டியா…?” என்று திட்டுவதோ முடியும்…

அவள் சொன்னது உண்மையா..?என்பது போல் தன் சகோதரியிடம் ஒரு தடவைக்கு இரு தடவை கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டாள்...இது ஒன்றும் ராம ஜெயம் இல்லையே சொல்ல சொல்லவும்..கேட்க கேட்கவும் புன்னியம் கிட்ட…

தான் ஒருவனிடம் என்பதை விட ஒரு குடும்பத்திடம் பெண்ணை கொடுத்து ஏமாந்த கதையை சொல்ல..அதுவும் அந்த ஏமாத்து என்ன மாதிரியானது…? இப்படியும் இருப்பார்களா…? இது போல் ஆனா விசயத்தை அவள் சினிமாவிலும் பார்த்தது இல்லை..கதைகளிலும் படித்தது இல்லை…

அப்படி இருக்க நிதர்சனத்தில் அதுவும் தன் குடும்பத்தில் எனும் போது தைரியமான பெண்ணான பத்மினியே அக்கா சொன்னதை கேட்டு கிடு கிடுத்து விட்டாள் என்றால் தன் சகோதரி…

தன் சகோதரியை நினைத்த உடன் அவள் பக்கம் தன் பார்வையை செலுத்திய பத்மினி… தன் சகோதரியின் ஓய்ந்த தோற்றத்திலும், கலங்கிய முகத்தையும் பார்த்து மற்றதை எல்லாம் மறந்தவளாய்..

இப்போது தான் தன் சகோதரி தைரியமாக இருக்க வேண்டும். இது நிலை தடுமாறும் சமயம் இல்லை..அவளுக்கு தைரியம் நான் தான் கொடுக்க வேண்டும்..அவளுக்கு மட்டும் இல்லை தன் தந்தைக்கும் இப்போது தைரியம் தேவை என்று நினைத்தவளாய்..

கீதா அருகில் சென்ற பத்மினி… “அக்கா இதோ பார்..பார்…” என்று அவளை அழைத்த வாறே கீதாவின் கன்னத்தை தட்டி அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பிய பத்மினி…

“உன் கணவனை விரும்புறியா…?” என்று கேட்டாள்..

“சேச்சே…” என்னவோ விரும்புறியா என்ற அந்த வார்த்தையே கேட்க கூடாத வார்த்தை போல் அருவெறுத்து கீதா காட்டிய முகபாவனையில் …

“ரொம்ப நல்லது...ரொம்ப நல்லது.” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள்..

அவள் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து காட்டி… “இதில் சென்டி மென்ட் ஏதாவது இருக்கா…?” என்று பத்மினி திரும்பவும் கேள்வி எழுப்பினாள்.

“இல்லை…”

இப்போது கீதாவிடம் இல்லை என்பது போல் தலையாட்டல் மட்டுமே பதிலாய் கிடைத்தது… பத்மினி தன் கணவர்..இல்லை இல்லை அந்த உறவு சொல்ல என்ன நினைக்க கூட அவளுக்கு அருவெறுப்பை இருந்த்து.

அதை வைத்து பத்மினி பேச பேச தான் கேட்டது...பார்த்தது… என்று ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வர..அவள் உடம்பு கூசி போனது..அவனோடவா ஆறுமாதம் குடும்பம் நடத்தினேன் என்பதில்…

கீதாவின் உடல் உதறலில்… “அக்கா இனி இது போல் எல்லாத்துக்கும் பயந்தா எல்லாம் வேலைக்கு ஆகாது..சாக்கடையில் காலை வைத்து விட்டோம்..அதை எப்படி எடுக்கனும்...அதை மட்டும் தான் இப்போ யோசிக்கனும்… நடந்ததை நினைப்பதை விட .. நடக்க போவதை தான் இனி பார்க்கனும்.” என்று சகோதரிக்கு மட்டும் அல்லாது தன் தந்தைக்கும் தைரியம் அளித்தாள் பத்மினி..

பாவம் அவளுக்கு தெரியவில்லை தன் சகோதரி காலை விட்டது சாக்கடையில் இல்லை..அது ஒரு கூவம் என்று… அதில் விழுந்தவர்கள் தன் உடல் முழுவதும் நாறி தான் எழுந்துக் கொள்ள முடியும் என்று…

தந்தைக்கும் சகோதரிக்கும் தைரியம் அளித்ததோடு உணவையும் கொடுத்து தானும் உண்டு முடித்தவள்… வீட்டின் முன் இருக்கும் தன் ஜெராக்ஸ் கடையில் போய் அமர்ந்தாள்.

கை பாட்டுக்கு மாணவ மாணவியர்கள் கொடுத்து சென்றதை நகல் எடுத்துக் கொண்டு இருந்தாலும், மனது முழுவதும் நாம் இந்த இடம் வேண்டாம் என்று சொல்லோடு விட்டு இருக்க கூடாதோ..இன்னும் அழுத்தமாக.. “இந்த இடம் வேண்டாம் என்று சொல்லி இருக்கனுமோ…” என்று அவள் மனது நினைக்கும் போதே அவளுக்கு அவளே…

நடந்ததை நினையாதே.. இனி நடப்பதை தான் பார்க்க வேண்டும்..முதலில் ஒரு நல்ல லாயரா பார்க்க வேண்டும்..முறைப்படி விவாகரத்து நோட்டிஸ் அனுப்ப… முதல் அடி நம்மடோதா தான் இருக்குனும்..

நம் நேரம் கடத்த கடத்த அதுவே அவங்க சாதகமா மாத்தவும் செய்வாங்க..இப்படி பட்டவங்க எதுக்கும் துணிவாங்க… என்று நினைத்து ஒரு முடிவு செய்தவளாய்… கொஞ்சம் வெளிவட்டாரத்தில் நல்ல பழக்கம் உள்ள தன் தோழியை தொடர்பு கொண்டவள்..

எடுத்த உடன்… “எனக்கு ஒரு நல்ல லாயர் அட்வைஸ் தேவைப்படுது..உனக்கு யாரையாவது தெரியுமா…?” என்று கேட்டாள்…

ஒரு நிமிடம் யோத்தவள் பின்… “எனக்கு ஒரு லாயரை தெரியும்...உனக்கே தெரியும் என் அண்ணன் ரியல் எஸ்டேட் பிசுனஸ் பண்றாருன்னு..ஒரு இடம் விசயத்தில் வில்லங்கம் ஏற்பட்டு அப்போ ஒரு வக்கீல் தான் அதை ஒன்னும் இல்லாம ஆக்குனார். அப்போ அண்ணன் அந்த லாயரை பத்தி நல்ல திறமையானவர் என்று ரொம்ப நல்ல விதமா தான் சொன்னார்… ஆனா பேச்சு தான் நாகரிகம் இல்லாம இருக்கும்.” என்று பத்மினியின் தோழி கிரிஜா சொன்னதும்..

“பேச்சு எப்படி இருந்தாலும் பரவாயில்ல கிரி...எனக்கு திறமையான வக்கீல் வேண்டும்.” என்று பத்மினி கேட்க…

“கொஞ்ச நேரம் கழித்து நானே போன் பண்றேன் பத்து..அண்ணனுக்கு தான் அந்த லாயரோட போன் நம்பர் தெரியும். கேட்டு சொல்றேன்.” என்று சொல்லி போனை அணைத்து விட்ட பின் சொன்னது போலவே சிறிது நேரம் கழித்து அவள் கைய் பேசிக்கு அழைப்பு வந்தது கிரிஜாவின் பேசியில் இருந்து…

“சொல்லு கிரி..அண்ணா கிட்ட இருந்து லாயர் நம்பர் வாங்கிட்டியா…?” என்று பத்மினி கேட்டதும்…

“நான் கிரிஜா அண்ணன் கிரிதரன் பேசுறேன்மா…” என்று சொன்னதும்..

சிறிது தயங்கிய பத்மினி… “சொல்லுங்க அண்ணா…” என்று பத்மினியின் குரல் மெல்ல ஒலித்தது…

பத்மினிக்கு நட்பு வட்டம் என்பது மிக சிறியதே...அதில் கிரிஜா முக்கியமானவள்...கிரிஜா வீட்டுக்கு சென்ற போது ஒரு சில முறை அவள் அண்ணன் கிரிதரனை பார்த்து இருக்கிறாள்.

பார்த்தால் சிரிப்பது.. கூடுதலாய்… “எப்படி இருக்கேம்மா…?வீட்டில் அப்பா அக்கா நல்லா இருக்காங்களா…?” என்ற கேள்வியோடு தன் பதிலை பெற்றுக் கொண்டு போய் விடுவான்.

இவள் அவனை அண்ணன் என்று தான் அழைப்பாள்..கிரிஜாவின் அண்ணனும் நாகரிகமானவன் தான்..தப்பான இரு பார்வை பார்த்தது கிடையாது பேசியது கிடையாது.

ஆனால் இப்போது கிரிதரனே பேசவும்..பத்மினிக்கு கொஞ்சம் தயக்கம்.. எதுக்கு லாயர் என்று கேட்டால் என்ன சொல்லுவாள்…இனி சொல்லி தான் ஆகவேண்டும்… விவாகரத்து என்று வரும் போது அனைவருக்கும் இந்த விசயம் தெரிய தான் போகிறது.

ஆனால் கிரிஜா கேட்டால் சொல்லி விடுவாள்..ஆடவன் இவனிடம் எப்படி என்று அவள் யோசிக்கும் போதே கைய் பேசியில் அழைப்பில் அந்த பக்கம் இருந்த கிரிதரன்…

“என்னம்மா நம்பர் நோட் பண்ணிட்டியா…?” என்ற கேள்வியில் தான் நிகழ் உலகத்துக்கு வந்த பத்மினி…

“சாரிண்ணா சாரி..நான் கவனிக்கல..இருங்க அண்ணா நான் பேப்பர் பேனா எடுத்துக்குறேன்.. .” என்று சொல்லி தன் கடையில் டேபுல் மீது எப்போதும் இருக்கும் பேப்பரை தான் எழுதும் வாகாக வைத்தவள்.. அங்கு இருந்த பென்னையும் எடுத்துக் கொண்டு…

“ஆ சொல்லுங்க அண்ணா…?” என்று கேட்டு கிரிதரன் எண்கள் சொல்ல சொல்ல அந்த பேப்பரில் எழுத்திக் கொண்டதும்.. திரும்ப ஒரு தரம் எண் சரி தானா என்று கிரிதரனிடம் கேட்டு தெளிவு படுத்திய பின்…

“சரிம்மா நான் வெச்சிடுறேன்.” என்று அழைப்பில் அந்த பக்கம் இருந்த கிரிதரன் சொன்னதும்…

பத்மினி கொஞ்சம் தயங்கி… “அண்ணா நீங்களும் சரி..கிரியும் சரி..நான் ஏன் லாயரை கேட்டேன்னு கேட்கவே இல்லையே…” என்று தன் மனதில் தோன்றியதை கேட்டாள்.

“லாயர பார்க்கனும் என்றால அது முக்கால் வாசி நல்ல விசயத்துக்கு இருக்காது…அது தான் சொல்ல கூடிய விசயமா இருந்தா நீயே சொல்லி இருப்ப…” என்று சொல்லி நிறுத்திய கிரிதரன்..

“தப்பா எடுத்துக்கலேன்னா நான் ஒன்னு சொல்றேன்மா...கிரி சொல்லி இருக்கா உங்க அப்பா உடம்பு முடியாதவர் என்று… உன் அக்காவுக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியும்..ஏதாவது பிரச்சனை என்றால் அக்கா வீட்டுக்காரரை கூப்பிட்டுக்க..

இல்ல அது வசதி படாதுன்னா..இப்போ நீ பேச்சுக்கு பேச்சு அண்ணா போட்டு அழைக்கிறிய அந்த முறையில் ஏதாவது பிரச்சனை என்றால் என்னை கூப்பிடு.” என்று கிரிதரன் சொன்ன விநாடி பத்மினி கதறி அழுது விட்டாள்.

பத்மினி தைரியமான பெண் தான்.. அவள் தாய் அவளின் பன்னிரெண்டாவது வயதில் ஒரு விபத்தில் இறந்து விட்டார். அதுவும் மருத்துவமனையில் இருக்கும் கணவருக்கு உணவு சமைத்து எடுத்துக் கொண்டு செல்லும் போது விபத்தில் போய் சேர்ந்து விட்டார்.

அந்த விபத்து அவளின் அக்கா கீதா கண் எதிரில் நடந்ததாலோ என்னவோ கீதாவுக்கு எதை பார்த்தாலும் பயப்படுவாள். தைரியம் என்பது அவளிடம் துளியும் கிடையாது.

இவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தந்தை கொஞ்சம் சுகவீனம் அற்றவர் தான். சிறிய வயதில் தாயை பரிகொடுத்து விட்டு பயந்த சுபாவம் உள்ள அக்காவை பார்த்ததாலோ என்னவோ… நாம் தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அவள் தான் அனைத்தும் முன் நின்று நடத்துவாள்.

இன்னும் கேட்டால் அவளுக்கும் அவள் அக்காவுக்கு ஆறுவயது வித்தியாசம்..ஏதாவது ஒன்னு என்றால் கீதா தான் பத்மினியிடம் வருவாள்..சிறுவயதிலேயே பெரிய மனுஷியாய் தன்னை உணர ஆரம்பித்தாளோ…

இல்லை அப்படி மற்றவர்களிடம் காட்டிக் கொண்டாளோ..என்று தெரியாது.ஆனால் அவ்வீட்டின் அனைத்து முடிவுகளும் பத்மினி தான் எடுப்பாள். தந்தை தொடர்ந்து வேலை செல்ல முடியாத நிலையில் அவர் உடல் நிலை இருந்ததால்…

போரூரில் மெயின் இடத்தில் இருந்த அவர்கள் இடத்தை விற்று செங்கல்பட்டில் கொஞ்சம் குறைந்த விலையில் கிடைத்த ஒரு கிரவுண்டில் இடம் வாங்கி… அதில் முன் பக்கம் மூன்று கடையும் பின் பக்கம் மூன்று போஷனாக வீடு கட்டியும் அங்கு சென்றார்கள்.

மூன்று போஷன் என்றால் பெரிய அளவில் எல்லாம் இல்லை..சிறிய அளவில் தான்..அதாவது ஒரு படுக்கை அறை கூடம்..சமையல் கட்டு அவ்வளவு தான்..மூன்று போஷனும் அப்படி தான் இருக்கும். அதில் ஒரு பகுதியில் இவர்கள் இருக்க மற்ற இரு பகுதியோடு கடையும் வாடகைக்கு விடப்பட்டது…

இந்த அனைத்து ஏற்பாட்டின் வழிகாட்டி நம் பத்மினி தான்..இன்னும் கேட்டால் அப்போது அவள் வயது பதினாறே..தந்தையின் உடல் நிலையின் பொருட்டு சேமிப்பு என்பது இல்லவே இல்லை.

வீடு சொந்த வீடு அதுவும் மூதையார் சொத்து இருக்க போய் வாடகைக்கு பிரச்சனை இல்லாது தந்தை சம்பாதித்த பணத்தில் பாதி வீட்டு செலவுக்கு போய் மீதி அனைத்தும் தந்தையின் மருத்துவ செலவுக்கே கரைந்து விடும்.

இன்னும் கேட்டால் தந்தையின் உடல் இந்த நோய் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது...மழை காலத்தில் வீசிங்கில் ஆரம்பித்து வெயில் காலத்தில் அலர்ஜியில் போய் முடியும்...

கீதா இருபது வயது கடந்த பின் தான் பத்மினியின் தந்தை பண்டரிநாதன் பெண்ணின் கல்யாணத்துக்கு ஒரு நையா பைசா இல்லையே என்று யோசிக்க..அந்த யோசிப்பில் அவர் உடல் நிலை பாதிக்க…

பின் நம் பத்மினி யோசித்து நாம் இருக்கும் இடம் மதிப்பு மிக்கது..இப்போ நாம இதை விற்று ஊரப்பாக்கம் தான்டி ஏதாவது இடம் வாங்கி வீடு வாடகைக்கு வருவது போல் பார்த்துக்கலாம்..என்று சொல்லவும்..

பண்டரிநாதன்.. “அப்போ என் வேலைம்மா…?” என்று அவர் தயங்கவும்..

“அப்பா நான் சொல்றேன்னு நீங்க வருத்தப்படாதிங்க..நீங்க வேலைக்கு போனா உங்க உடம்பு இன்னும் இன்னும் தான் பாதிப்புக்கு உள்ளாகுது..அதுக்கு மருத்துவ செலவும் ஆகுது… இந்த இடத்தை வித்து சிட்டிக்கு தான்டி நான் சொன்னது போல செஞ்சா பணம் மீதம் ஆகும் அதை வெச்சி அக்கா கல்யாணம் செய்யலாம். வாடகை வருவதை வீட்டு செலவுக்கு வைத்துக் கொள்ளலாம்.” என்று அந்த வயதில் பத்மினி ஆலோசனை வழங்க...அவளின் திட்டத்தின் செயல் வடிவம் தான்..

வீடு கடை என்று..சிட்டியை தான்டி இடம் வாங்கினாலும் கொஞ்சம் மெயின் ஆன தெரு..அதாவது மார்க்கெட் ரோடு பக்கம் இடம் வாங்கியதால் கடைக்கு கொஞ்சம் நல்ல வாடகையே வந்தது..

ஆடம்பரமாக இல்லா விட்டாலும் மற்றவர்கள் முன் கைய் ஏந்தாது கவுரவமாகவே அவர்கள் வாழ்க்கையை கடத்தினார்கள்…போன வருடம் தான் பத்மினி தன் பி.காம் படிப்பை முடித்தது… கடந்த ஐந்து வருடமாகவே கீதாவுக்கு இடம் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்..

அது ஏனோ ஒரு இடமும் முடியவில்லை… “நிறம் கம்மி கொஞ்சம் சவரன் நிறைய போடுங்க..” என்று வந்து பார்த்தவர்கள் சொல்வார்கள்… சவரன் அதிகம் போட்டால் அவள் நிறமா ஆயிடுவாளா…? இப்படி கேட்க தான் பத்மினிக்கு தோன்றும்.. ஒருவர் கேட்டால் இப்படி கேட்கலாம்..ஒவ்வொருவரும் கேட்டால்..போங்கடா என்று விட்டு விட்டாள்.

சகோதரிக்கு திருமணம் முடிந்தால் அப்பாவை தனியே விட்டு வேலைக்கு போக முடியாது என்று நினைத்து மூன்று கடைகளில் ஒரு கடையை தானே எடுத்துக் கொண்டு ஜெராக்ஸ் கடையை ஆராம்பித்து விட்டாள். படிக்கும் பிள்ளைகளை நம்பியே இந்த கடை ஓடுகிறது..நல்ல வருமானம் தான். அவர்களின் பொருளாதார நிலை பரவாயில்லை என்று வரும் போது தான் எட்டு மாதம் முன் கீதாவுக்கு இந்த இடம் முடிந்தது…

மாப்பிள்ளையின் பெயர் ஜெய் ...அம்மா அப்பா கிடையாது ஒரே அண்ணன் மட்டும் தான்..அண்ணனுக்கு திருமணம் முடிந்து நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்… நல்ல இடம்...பைய்யன் பி..ஈ...கம்பியூட்டர் சாப்ட்வேர் நல்ல வருமானம்..அதாவது ஒரு லட்சத்துக்கும் மேல்..மாம்பலத்தில் முக்கியமான இடத்தில் வீடு..கொஞ்சம் சொத்தும்..

மாப்பிள்ளையின் அண்ணன் பேங்கில் மேனஜர்… இவர்களோடு ஜெய்யின் குடும்பம் மேன்மையான குடும்பம் தான்… பார்ப்பதற்க்கு அவ்வளவு அழகாக இருந்தார்கள்..ஆம் இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்..

மாப்பிள்ளையாகட்டும் அவர் அண்ணனாகட்டும் அண்ணி அண்ணன் குழந்தை என்று பார்த்தாலே சொல்லும் மேல் தட்டு வர்கத்தின் சாயலில் அழகாக இருந்தார்கள்… “உங்க பெண்ணை மட்டும் கொடுங்க..” என்ற அவர்கள் பேச்சில் பத்மினிக்கு என்னவோ இடிப்பது போல் இருந்தது.. ஆனால் என்ன என்று தான் அவளுக்கு தெரியவில்லை…

“அப்பா இந்த இடம் வேண்டாம்பா…” என்று பத்மினி தன் தந்தையிடம் சொன்னாள்.

அதற்க்கு அவள் தந்தை… “ஏன்மா…?” என்ற அவரின் கேள்விக்கு பதில் தான் பத்மினியிடம் இல்லை. என்ன என்று சொல்லுவாள்..எனக்கு ஏதோ மனதுல இடிக்குதுன்னா…

“தோ பாரும்மா..நீ புத்திசாலியான பெண் தான் நான் ஒத்துக்குறேன்..இந்த இடம் வேண்டாம் என்பதுக்கு காரணம் சொல்லு நான் இந்த இடத்தை முடிக்கல…நான்கு வருடமா அவளுக்கு இடம் பார்த்துட்டு இருக்கோம்..இன்னும் முடியல..காரணமுன் உனக்கு தெரியும்…வந்த நல்ல இந்த இடத்தை விட சொல்றியாம்மா…

இவளுக்கு முடிச்சிட்டு இரண்டு வருடம் கழித்து உனக்கு முடிக்கனும்மா...வயசுலேயே என் உடம்பு அந்த அளவுக்கு சுகம் இல்லாதது..இப்போ சொல்லவே வேண்டாம் வயது ஆகிட்டு போவதில் இன்னும் என் உடம்பு பிரச்சனை தான் கொடுக்குது..

போவதற்க்குள் உங்க இரண்டு பேரையும் ஒருத்தன் கையில் பிடிச்சி கொடுத்தா நான் நிம்மதியா போய் சேருவேன்..” மத்திய தரவர்க்கத்தினர் நினைக்கும் சாதரண எண்ண போக்கில் தான் அவரும் நினைத்தார்.,.அது நியாயமும் கூட…

தந்தையின் பேச்சு சரி தானே என்று நினைத்து தன் சகோதரியை பார்த்தாள் பத்மினி..நான் எங்கு வேண்டாம் என்று சொல்லி விடுவேனோ என்ற பயம் அவள் கண்ணில் தெரிய.. ஒரு டிடக்டீவ் ஏஜன்ஸி மூலம் மாப்பிள்ளை பற்றி விசாரித்ததில் ஒரு குறையும் சொல்ல முடியாத தங்கமான பையன் என்று அவர்கள் சான்றிதழ் வழங்க… அதன் பின் நடந்தது தான் இத்திருமணம்..

இதோ நேற்று வரை நாம் தடுத்து இருந்தால் தன் சகோதரிக்கு இந்த நல்வாழ்க்கை கிடைத்து இருக்காதே என்று நினைத்திருந்தவளின் எண்ணத்தை பொய்பிக்கும் வகையில் நேற்று இரவு என்பதா..இல்லை இன்று காலை விடியற்காலை மூன்று மணிக்கு தன் வீட்டில் வந்து நிற்க்கும் சகோதரியை பார்த்து..

ஏதோ பிரச்சனை தான் நினைத்து கதவு திறந்ததும்… தான் கேட்காமலேயே கீதா சொன்ன..

“அவரையும் அவர் அண்ணியையும் நான் ஒன்னா பார்த்தேன்.” என்று அழுதுக் கொண்டே அவள் சொன்ன வார்த்தையின் வீரியம் அப்போது பத்மினிக்கு புரியவில்லை.

“என்ன பார்த்த எனக்கு புரியல அக்கா..புரிவது போல் சொல்.” என்று சொல்லி அவளுக்கு தண்ணிர் கொடுத்து விட்டு அவளை அமைதி படுத்த முடியவில்லை என்றாலும், அவள் பேசும் அளவுக்கு தெம்பு கொடுத்த பின் ..

“ஆ இப்போ சொல்..” என்று தான் சொன்னதும்..

கீதா சொன்ன… “அவரும் அவர் அண்ணியும் தப்பா நடந்துக்குறாங்க பத்து.” என்ற சகோதரியின் பேச்சில்…

“ சீ கண்ட படி பேசாதே...என்ன உளறல் இது….?” என்பது போல் தான் பத்மினி முதலில் கேட்டாள். ஆனால் கீதா அடுத்து அடுத்து சொன்ன பேச்சில் தன் நெஞ்சில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டாள்.

இவளுக்கே இந்த நிலமை என்றால் அவள் தந்தைக்கு…?அனைவருக்கும் தைரியம் கொடுக்க வேண்டும்..இனி தான் தைரியமா இருக்கனும் என்று விடியற்காலை மூன்று மணியில் இருந்து தனக்கு தானே ஒரு ஜபம் போல் சொல்லிக் கொண்டு இருந்தவளுக்கு.. கிரிதரனின் ஆதரவான அந்த பேச்சில் வெடித்து சிதறி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்…

கிரிதரன் பேசி மூலம்.. “பத்தும்மா பத்தும்மா…” என்று அழைப்பு கூட காதில் விழாது அழுதவளை இனி பேசியில் பேச முடியாது என்று முடிவு கட்டியவனாய் தன் தங்கையை அழைத்துக் கொண்டு பத்மினி வீட்டுக்கே வந்து விட்டான்.

இவர்களை பார்த்ததும் நின்று போன அழுகை மீண்டும் வருவது போல் இருந்தது பத்மினிக்கு..ஆனால் டீ வைப்பதற்க்கு என்று கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்திருப்பதால் தான் உடைந்தால் தன் தந்தையும் சகோதரியும் உடைந்து போய் விடுவார்கள் என்று நினைத்தவளாய் தன்னை தேற்றிக் கொண்டு..

வந்தவர்களை… “வாங்க…” என்று சொல்லி வர வேற்றாள்.

எப்போதும் ஒரு நிமிர்வுடன் பார்த்த பத்மினிக்கும் இன்று பார்க்கும் பத்மினிக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவனாய் அமர்ந்த கிரிதரன் என்ன பேச என்று தயங்கியவனின் கையி டீ கப்பை கொடுத்த பத்மினி ..

“குடிங்கண்ணா...கிரி நீயும் குடி டீ..” என்று சொல்லோடு டீ குடித்து முடிக்கும் வரை வேறு எந்த பேச்சும் அங்கு எழவில்லை. அந்த அமைதியை பத்மினி தன் பேச்சு மூலம் கலைத்தாள்…

கிரிதரனையும் கிரிஜாவையும் பார்த்து பத்மினி … “லாயரை கேட்டது அக்கா விவாகரத்து விசயமா பேச தான்.” என்று பத்மினி சொன்னதும் கிரிதரன் கொஞ்சம் அதிர்ந்து போய் தான் கீதாவை பார்த்தான்..

அனைத்திலும் பத்மினிக்கு எதிர் பதமானவள் கீதா… ஒரே ஒரு முறை தான் கிரிதரன் பத்மினியோடு கீதாவை பார்த்தது..பார்த்த உடன் அவன் நினைத்தது இது.. கீதா மாநிறம் என்றால் பத்மினி எலுமிச்சை நிறம்… உயரமும் கீதா ஐந்து அடி என்றால் பத்மினி ஐந்தரையடி உயரத்தில் இருப்பாள்...

அதே போல் பத்மினி எப்போதும் பேசும் போது மற்றவர்களின் முகத்தை நேர்க் கொண்டு பார்த்து தான் பேசுவாள். ஆனால் கீதா பேச்சிலும் சரி பார்வையிலும் சரி ஒரு தடுமாற்றம்...அனைத்திலும் இருதுருவங்களாய் இருப்பவர்கள் அக்கா தங்கையா என்று நினைத்துக் கொண்டான்..

அதோடு கிரிதரன் கீதாவை இன்று தான் பார்க்கிறான்...அப்போதே கீதா கொஞ்சம் மெல்லிய உடல் வாகு தான்..ஆனால் அந்த வயதுக்கே உண்டான மினு மினுப்போடு கலையாக இருந்தவளின் முகம் இன்று மேலும் கறுத்து கலை இழந்து இருப்பதை பார்த்து ஒரு பெண்ணின் அண்ணனாய் பெண்ணின் நிலை உணர்ந்து கவலை கொண்டான்.

எது என்றாலும் அவர்களே சொல்லட்டும் என்று கிரிதரன் இருக்க..இப்போது பண்டரிநாதன்… “என்ன சொல்றது தம்பி...அந்த காலத்தில் அண்ணி என்றால் இன்னொரு அம்மா என்று சொல்வாங்க..ஆனா…” என்று அவர் தன் துண்டை வாயில் திணித்து அவர் துக்கம் அடுக்குவதிலேயே ஒரளவுக்கு விசயம் தெரிந்துக் கொண்ட கிரிதரன்.. இதற்க்கு விவாகரத்து ஒன்று தான் தீர்வு என்பது போல் அன்றே அப்போதே கீதா பத்மினியையை குருமூர்த்தியிடம் அழைத்து சென்றான்…

அடையாறில் இருக்கும் அவன் வீட்டின் முன் பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் வெளியில் போட்ட இருக்கையில் இவர்கள் அமர்ந்துக் கொண்டு இருக்கும் போது…

குருமூர்த்தி தன் எதிரில் இருக்கும் பெண்களிடம்.. “படுத்துட்டு காசு கொடுக்கல..இதுக்கு எல்லாம் கேசு போட முடியாது...காசு வாங்கிட்டு அப்புறம் கை வைக்க விடுங்க.. போங்க போங்க… “ என்று குருமூர்த்தி பேசுவது வெளியில் அமர்ந்திருந்த கிரிதரன்..கீதா..பத்மினி கிரிஜா இவர்கள் நான்கு பேரின் காதிலும் தெளிவாக விழுந்தது...கிரிதரன் தான் இந்த பேச்சில் மூன்று பெண்கள் முன் அமர்ந்து ஒரு சங்கடமான நிலைக்கு உள்ளானான்.






















 
Top