Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Nayaganin Nayagi-3

  • Thread Author
அத்தியாயம்…3

மூன்று பெண்களுக்கு நடுவில் அமர்ந்து இருக்கும் போது ஒரு ஆண் மகனாய் அந்த வார்த்தைகளை கேட்கும் போது ஒரு வித சங்கடத்துக்கு ஆளாகி தலை குனிந்து அமர்ந்தது அவன் மட்டும் இல்லை…

மூன்று பெண்களுமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது ஒரு வித தர்ம சங்கடமான நிலை அங்கு நிலவியது… அந்த சங்கடத்தையும் தான்டி பத்மினியின் மனதில் பெண்கள் அதுவும் இது போல் பெண்களின் வழக்கை வாதடுபவனிடம் நம் பிரச்சனையை எடுத்துக் கொண்டு போனால் என்ன ஆகும்…? என்று ஒரு பக்கம் யோசித்தாள் என்றால்..

இன்னொரு பக்கம் இவன் எப்படி…? அவனின் நடத்தை எப்படியோ… தன் அக்காவின் லாயராய் இவனை வைத்தால், கன்டிப்பாக இவனை பார்க்கும் சூழ் நிலை உருவாகும்..அக்கா தனியாக எல்லாம் இது போல் இடத்திற்க்கு வர மாட்டாள்..

போக நானும் விட மாட்டேன்..அப்பாவை அழைத்துக் கொண்டு அலை கழிக்க முடியாது. இரு பெண்கள் தனித்து வர தகுந்த இடமா இது…? என்பது போல் மனதில் யோசித்தவள்..

பின் தயங்கிய வாறே தன் பக்கத்தில் அமர்ந்திருந்த கிரிதரனிடம்…. “அண்ணா இவர்…” என்று பத்மினி தன் பேச்சை ஆராம்பிக்கும் போதே கிரிதரன்..

“இவர் பேச்சை வைத்து இவரை எடை போடாதே… நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாம நம்ம வீட்டு பெண் நமக்கு கிடைக்குனுமுன்னா… இவர் நம்ம கேச எடுத்தா கிடச்சிடும் என்று தைரியமா இருக்கலாம்.” என்று கிரிதரன் சொல்லவும்..

இது வரை பத்மினி நாம் இவரிடம் நம்ம கேசை கொடுக்கலாமா…? வேண்டாமா…? என்று யோசித்துக் கொண்டு இருந்தவள் கிரிதரன் சொன்ன நம்ம கேசை எடுத்தா…

“ஏன் நம்ம கேசை எடுத்துக்க மாட்டாரா…?” என்று ஒரு வித நைய்யான்டி தன்மையுடன் தான் பத்மினி கிரிதரனிடம் கேட்டாள்..அதன் மறை பொருள் அவன் என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்காரா என்பதே…

கிரிதனுக்கு பத்மினியின் நைய்யான்டி புரிந்ததோ என்னவோ… “ நீ இப்போ அவர் பேச்சை கேட்டு என்ன நினைக்கிறியோ தெரியல..ஆனால் இவர் நம்ம கேசை எடுத்துக்கிட்டா நல்லா இருக்குமே என்று நிறைய பேர் இவருக்காக காத்துட்டு இருக்கார்.. இவரிடம் வருபவர்கள் எல்லாம் பெரிய தலைங்க தான்…” என்று கிரிதரன் சொல்லி நிறுத்தவும்…

இது வரை இவர்களின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த கிரிஜா… “ அவ்வளவு பெரிய ஆள்..இது போல் சின்ன நம்ம கேசை எடுத்துப்பாரா…?” உங்க கேசை எப்படி எடுத்தார்…?” நம்ம ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லையே என்ற அர்த்தத்தில் தன் அண்ணனிடம் கேட்டாள்.

இப்போது தயங்கி தயங்கி என்றாலும் கீதா கிரிதரனின் முகம் பார்க்க… அவள் முகத்தை யோசனையுடன் பார்த்துக் கொண்டே கிரிதரன்… “இவர் பெண்கள் கேசுன்னா முதல் முன்னுரிமை கொடுப்பார்..அதனால தான் இங்கு தைரியமா உங்கல கூட்டிட்டு வந்தேன். என் கேஸ் எடுத்ததிற்க்கு காரணம்..நான் வாங்கின இடத்தில் அரசியல்வாதி பிரச்சனை செய்தான்..

என் நண்பன் மூலம் தான் இவரிடம் வந்தேன்… இவரும் அரசியவாதிங்களுக்காக வாதாடி இருக்கார்..நான் என் பிரச்சனை சொல்லி நான் என் சேமிப்பு மொத்தத்தையும் போட்டு தான் வாங்கினேன்.. இப்போ அந்த அரசியல் தலைவர் பிரச்சனை செய்யிறார்.” என்று என் நிலமையை சொன்னதும்..

என் எதிரில் தான் அந்த அரசியல் வாதியிடம் பேசியில் குரு சார் பேசினார்… “நம்ம வாங்கின இடத்தின் பெயர் சொல்லி..நீங்க மோதும் அளவுக்கு எல்லாம் பெரிய இடம் இல்ல..பாவம் அவர் இடத்தை அவர் கிட்ட கொடுத்துடுங்க…” என்று குரு சார் அந்த அரசியல் வாதி கிட்ட முதலில் மிக தன்மையா தான் பேசினார்..

ஆனால் அவர் என்ன சொன்னாருன்னு தெரியல… இங்கு குரு சார்… “ஓ அப்படியா… என்னால என்ன கழட்ட முடியுது… பு**க முடியுதுன்னு கோர்ட்ல காட்டுறேன்னு.” சொல்லி பேசியை வெச்சிட்டார்…

“உங்க கேசை எடுத்துக்குறேன்னு அந்த அரசியவாதிக்கிட்ட சவால் விட்டதுக்காக தான் என் கேசை எடுத்தார்…” என்று கிரிதரன் சொல்லவும்..

இப்போது தயங்கி தயங்கி கீதா… “ என்னுடையத எடுத்துப்பாரா…?” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

“ம் எடுத்துப்பார்..அவர் பெண்கள் கேசுன்னா முதல் சலுகை கொடுப்பாருன்னு வெளியில் பேச்சு இருக்கு..நானே கேசு விசயமா இரண்டு முறை அவரை பார்க்க போன போது ரொம்ப சின்ன விசயம்..அந்த பெண்ணை இரண்டு பேர் கொஞ்சம் மேல எல்லாம் கை வெச்சி இருக்காங்க போல..பசங்க பெரிய இடம் கம்பிளையின்ட் கூட வாங்கிக்கலேன்னு இவர் கிட்ட வந்தாங்க..

அப்போ ஏதோ பெரிய இடம் போல அடுத்து அவர் வாதடனும்..இப்போ எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் போக முடியாதுன்னு அவர் ஜூனியர் சொன்னதுக்கு வாய்தா வாங்கு..” என்று சொல்லி விட்டு அவங்க கூட போயிட்டார்…

அப்போ தான் கேள்வி பட்டேன்..எவ்வளவு பெரிய கேசா இருந்தாலும் பெண்கள் இது போல் பிரச்சனை என்று வந்தா அதுக்கு தான் முன்னுரிமை கொடுப்பாருன்னு..நீங்க கவலை படாதிங்க . நம்ம கேசை .கண்டிப்பா எடுத்துப்பார்.” என்று கிரிதரன் கீதாவுக்கு தைரியம் வழங்கினான்.

அப்போது ஒருவர் வந்து.. “உள்ளே போங்க…” என்று சொன்னதும்..

கிரிதரன் மூன்று பெண்களுடன் உள்ளே நுழைந்தான்… குருமூர்த்தி மூன்று பெண்களுடன் உள்ளே நுழைந்த கிரிதரனை யோசனையுடன் பார்த்த வாறே யோசித்தவன்… பின் சிரிப்புடன்..

“நீங்க அந்த இடம் லாக் ஆன பார்ட்டில…” என்று கிரிதரனை வரவேற்க..கிரிதரன் இதை எதிர்பார்க்கவே இல்லை..எட்டு மாதம் முன் வந்தது..எத்தனையோ கேசில் நானும் ஒருவன் இன்னும் கேட்டால் என் கேஸ் எல்லாம் அவருக்கு ஒரே கேஸ்சே கிடையாது..

அந்த அரசியல்வாதி குருமூர்த்தியின் ஈகோவை தட்டி விட்டு விட்டார்..அதன் பொருட்டே தன் கேசை எடுத்தது என்று குருமூர்த்தியின் ஜூனியரில் ஒருவர் சொன்னார்..

அப்படி இருக்க தன்னை அடையாளம் தெரிந்து வரவேற்றதில் கிரிதரன் மகிழ்ந்து போய்… “ஆமாம் சார்.” என்று சொன்னதும்..

இப்போதும் குருமூர்த்தி யோசித்த வாறே… “என்ன திரும்பவும் லாக் ஆகிட்டிங்களா…?” என்று கேட்ட வாறே மூன்று பெண்களையும் கண்ணால் காட்டிய வாறே குருமூர்த்தி கிரிதரனிடம் கேட்டான்..

பெண்கள் இளம் பெண்கள் என்ற வகையில் தான் குருமூர்த்தி அவர்களை பார்த்தான்..பார்த்தான் தான் எந்த பெண்களையும் அவன் ஊன்றி கவனிக்கவில்லை..

கிரிதரன் அவசர அவசரமாக… “அய்யோ இல்ல சார்.” என்று பதறி கிரிதரன் குருமூர்த்திக்கு விடையளித்தான்.

“சரி சரி அதுக்கு எதுக்கு இப்படி பதற்றிங்க…” என்று கிரிதரனின் பதட்டத்தை தணித்து … “உட்காருங்க…” என்று சொல்லும் போது கூட குருமூர்த்தி எந்த பெண்ணின் முகத்தையும் கூர்ந்து பார்க்கவில்லை..

எப்போதும் குருமூர்த்தி அப்படி தான்..இதே பெண்களிடம் பேசும் போது மட்டும் அவர்களின் முகத்தை பார்த்து பேசுவான்… அப்போது கூட அந்த பெண்களின் முகவடிவை கவனிக்க மாட்டான்..அவர்கள் பேசும் பேச்சை தான் ஊன்றி கவனிப்பான்.. இப்போது அனைத்தும் கிரிதரன் பேச.. குருமூர்த்தியின் கவனம் மொத்தமும் கிரிதரனிடம் மட்டுமே….

ஆனால் பத்மினியோ அந்த அறையின் உள் நுழைந்தது முதலே அவளின் கண் குருமூர்த்தியிடம் மட்டுமே நிலைத்து இருந்தது..நிலைத்து இருந்தது என்றால் ஆசையாக அல்ல..ஆராய்ச்சியாய்...பார்த்து கொண்டு இருந்தாள்.

அவனின் முரட்டு தோற்றத்திலும், அந்த தழும்பு விழுந்த முக வெட்டிலும் முதலி ஒரு சுணக்கம்..அதுவும் குருமூர்த்தி கிரிதரனை பார்த்து பேசிய பேச்சான… “என்ன லாக் ஆகிட்டியா…?” என்ற அந்த வார்த்தையில் முகம் சுளித்தவள்…

வேறு ஒன்றையும் கவனித்தாள்..அவனின் முகத்தின் கலை..அதோடு அவன் பார்வை தங்கள் பக்கம் திரும்பாது கிரிதரனிடம் மட்டுமே நிலைப்பெற்று இருந்ததை…

இப்படியும் நினைத்துக் கொண்டாள்..கீதாவின் கணவன் ஜெய் பார்க்க அந்த அளவுக்கு தோற்ற பொலிவோடு பார்த்தலே..இவன் நல்லவன் என்று சொல்லும் படி இருந்த அவன் தோற்றமும்...பேச்சில் இருந்த நாகரிகமும்..அவனின் நடத்தையில் இல்லையே…

ஒருவனின் தோற்றத்தில் அதாவது நம் கண் அறிவிக்கும் அவன் அழகு பார்க்க நல்லவன் போல தான் இருக்கிறான்..என்று நம் விழித்திரை கூறுவதை நம்பியோ.. நம் சேவி கேட்கும் அவனின் நாகரிகமான பேச்சை நம்பியும் முடிவு செய்யும் நாம்…

மற்றவர்களின் கண்ணுக்கு புலப்படாத அவனின் குணத்தை அதே போல் மற்றவர்களின் கண்ணுக்கு தெரியாத நம்மில் இருக்கு மூளை கொண்டு முடிவு செய்வது இல்லை..

அதாவது ஒருவரை பற்றி மற்றவர்கள் சொல்வதை கேட்டு..பார்த்து… இவன்(ள்) இப்படி தான் என்று முடிவு செய்வது என்றால் நமக்கு மூளை என்ற வஸ்த்தை ஆண்டவன் நமக்கு ஏன் கொடுத்து இருக்கிறான்…? என்று எப்போதும் அவள் அவளுக்குள் கேட்கும் கேள்வி இது..

..அந்த கேள்வி சரியாக இப்போது அவளுக்கு தோன்றியது..ஏன் இப்போது தோன்றியது என்று தெரியாமலே பத்மினி குருமூர்த்தியையே பார்த்திருக்க..கிரிஜா…

“பத்து… பத்து…” என்று இரண்டு முறை அழைத்த பின் தான் ஏதோ நினைவில் குரு மூர்த்தியையே பார்த்திருந்த பத்மினி நடைமுறைக்கு வந்தவளாய் கிரிஜாவை திரும்பி பார்த்தாள்.

கிரிஜாவோ எதுவும் பேசாது அந்த பக்கம் பார்..அந்த பக்கம் பார் என்று ஜாடை காட்ட அவளின் ஜாடையை ஒரு முறைக்கு இரு முறை பார்த்த பின் புரிந்த பத்மினி தன் பக்கத்திக் அமர்ந்திருந்த கிரிதரனையும், பின் எதிர் பக்கம் அமர்ந்திருந்த குருமூர்த்தியையும் மாறி மாறி பார்த்தாள்.

இது வரை வந்த பெண்களின் முகத்தை கவனிக்காத முருமூர்த்தி கிரிதரன் “பத்து பத்து…” என்று குறைந்தது பத்து முறை அழைத்தும் அவள் பக்கத்தில் இருந்து பதில் வராததை பார்த்து அப்போது தான் குருமூர்த்தி பத்மினியை ஊன்றி கவனித்தான்..

பார்த்ததும் அழகான பெண்..அவ்வளவு தான் அவன் நினைத்தது…அதற்க்கு மேல் நினைத்திட அவன் பிறந்த ழூழல்.. வளர்ந்த சூழல் இடம் கொடுக்கவில்லை… மேலும் பத்மினியோடு அழகான பெண்களை எல்லாம் பார்த்திருந்தவனுக்கு பத்மினியின் அழகு எல்லாம் அவனை பெரிதும் ஈர்க்கவில்லை என்பதா…?பாதிக்கவில்லை என்பதா…?தெரியவில்லை.

அழகான பெண்களை பார்த்து இருக்கிறான் என்றால், தவறான முறையில் இல்லை. அவனிடம் கேசை எடுத்துக் கொண்டு வரும் பெண்கள் பெரும்பாலும் அழகான பெண்களாய் தான் இருப்பர்.

அந்த அழகு கொடுத்த ஆபத்தால் தான் அந்த பெண்கள் அவனை தேடியும் வந்திருக்கின்றனர்… குருமூர்த்தி அவர்களிடம் இருக்கும் பிரச்சனையை தான் பார்ப்பானே தவிர வேறு எதுவும் பார்த்தது கிடையாது.

பத்மினியை கிரிதரன் அழைத்தும் அந்த பெண் தன்னையே பார்த்திருப்பதை பார்த்து… என்னடா பெண் அழகா இருக்கு நம்மல பாக்குது...என் முகத்தில் இருக்கும் இரு வெட்டு காயத்தையும் மீறி பாக்குது...என்று நினைத்துக் கொண்டே இன்னும் பத்மினியை ஊன்றி கவனித்தான் குருமூர்த்தி…

இப்போது குருமூர்த்தி தன்னை கவனிப்பதை பார்த்த பத்மினி நிலமையை சகஜம் ஆக்கும் பொருட்டு குருமூர்த்தியை பார்த்து சிரித்து வைத்தாள்..பதிலுக்கு குருமூர்த்தியும் சிரிக்க… அவன் சிரிக்கும் போது கொஞ்சம் இந்த முரட்டு தோற்றம் காணாமல் போவது போல் அவள் உணரும் சமயம் குருமூர்த்தியின் சிரிப்பு மறைந்து கிரிதரனிடம்..

“என்ன விசயம் கிரிதரன்…?” என்று நேராக விசயத்து வந்து வட்டான்..

கிரிதரனும் பத்மினியின் பக்கத்தில் அமர்ந்து இருந்த கீதாவை காட்டி… “இவங்களுக்கு ஆறு மாதம் முன் தான் திருமணம் நடந்தது… நேற்று நேற்று… விவாகரத்து ” என்று கொஞ்சம் பேச்சை இழுத்து நிறுத்த..

இப்போது குருமூர்த்தி கீதாவின் பக்கம் பார்வையை திருப்பிய வாறே… “நீங்க சொல்லுங்க…” என்று இப்போது கீதாவின் முகத்தை நேர்க் கொண்டு பார்த்த வாறு கேட்டான்..

கீதா தயங்கி தயங்கி பக்கத்தில் அமர்ந்திருந்த பத்மினியை பார்த்தாள்..அக்காவின் பார்வையில் பத்மினி என்ன கண்டாளோ… பத்மினி… குருமூர்த்தியை பார்த்து…

“சார்…” என்று ஏதோ பேச ஆராம்பிக்கும் போதே தன் கை கொண்டு அவளின் பேச்சை தடுத்து நிறுத்திய குருமூர்த்தி…

“இப்போ விவாகரத்து யாருக்கு வேண்டும் உங்களுக்கா…? அவங்களுக்கா…?” என்ற குருமூர்த்தியின் கேள்வியில் பத்மினி வாய் தன்னால் மூடிக் கொண்டாள்.

இப்போது குருமூர்த்தி மீண்டும் தன் பார்வையை கீதாவின் பக்கம் திருப்பியவன்…

“தோ பாருங்க..எதுக்கு விவாகரத்து…?என்ன காரணத்துக்கு விவாகரத்து வேண்டும்…? ஒரு லாயரா என் கிட்ட சொல்லவே நீங்க இப்படி யோசிச்சா உங்க கேசை நான் எப்படி எடுத்துக்குறது..? அப்படி எடுக்கும் பட்சத்தில் மீட்சுவல் டைவஸ்ன்னா பிரச்சனை இல்ல..

அந்த பக்கத்தில் இருந்து எதிர்ப்பு வரும் போது அவங்க வைக்கும் லாயர் கேட்கும் கேள்விக்கு நீங்க எப்படி பதில் சொல்ல முடியும்..உங்கல நம்பி நான் எப்படி உங்க கேசை எடுத்துக்க… ஒன்று தெரியுங்களா…? இது வரை நான் எடுத்த எந்த தோத்தது கிடையாது…

பெண்கள் சென்டி மென்ட் என் கிட்ட இருக்கு தான்...ஆனாலும் அந்த சென்டி மென்ட் என்னுடைய கேரியரை பாதிக்கும் என்றால்….” அடுத்து பேசாது தன் கை இரண்டையும் விரித்து தன் தோளை குலுக்கியவனாய் தன் பேச்சை அவன் முடித்துக் கொண்டான்…

இப்போது கீதா தன்னை தைரியப்படுத்திக் கொண்டவளாய்..இந்த சேரில் இருந்து நாம் மீள வேண்டும் என்றால் நாம் பேசி தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்தவளாய்…

“எனக்கு கல்யாணம் முடிந்து ஆறு மாசம் தான் ஆகி இருக்கு..இந்த இடம் எட்டு மாசத்துக்கு முன்ன வந்தது..மாப்பிள்ளை பெயர் ஜெய்… அப்பா அம்மா இல்ல… ஒரு அண்ணன் மட்டும் தான்…சொந்த வீடு நல்ல வேலை எங்களோட நல்ல வசதி பார்க்கவும் ரொம்ப நல்லா இருந்தார்..

எனக்கு போட்டோ பார்த்த உடனே இந்த இடம் எங்கு எனக்கு முடியும்





…?பார்க்க சுமாரா இருக்கிறவனே என்னை அழகு இல்லேன்னு அவ்வளவு நகை கேட்பான்..இவன் அழகுக்கு எங்க வீட்டை எழுதி வெச்சா கூட போதாது போல… நினச்சி அப்பா கிட்ட கேட்டேன்..

“அப்பா அவங்க வீட்டுக்கு என் போட்டோவை கொடுத்திங்கலான்னு..”

அதுக்கு அப்பா… “கொடுத்தேன்..பிடிச்சி போய் தான் பாக்க வர்றாங்க..ஏன் உன் மனச வீணா போட்டு குழப்பிக்கிற… உனக்கு இந்த இடம் தான் முடியும்னா முடியும்.” என்று சொன்னார்.. அப்போ கூட எனக்கு நம்பிக்கை இல்லாம தான் ஏனோ தானோன்னு நான் என்னை அலங்கரிச்சிக்கிட்டேன்..” என்று சொன்ன கீதா தன் பக்கத்தில் அமர்ந்திருந்த பத்மினியை காட்டி…

“இவள் என் தங்கை எப்போவும் என்னை யாராவது பெண் பார்க்க வந்தா வீட்டில் இருக்க மாட்டா..இப்போ தான் அவளுக்கு தனியா கடை இருக்கு..அப்போ எங்க வீட்டு முன் கடையில் ஒரு கடை பேன்ஸி ஸ்டோருக்கு வாடகை விட்டு இருந்தோம்.. அவ அங்கு தான் இருப்பா...

ஏன்னா ஒரு வாட்டி என்னை பாக்க வந்தவங்க… அப்பா கிட்ட உங்க சின்ன பெண்ணை தான் என் மகனுக்கு பிடிச்சி இருக்கு...உங்க சின்ன பெண்ணை கொடுக்குறதா இருந்தா மேற்க்கொண்டு பேசலாம்.” என்று அவங்க என் தங்கையை கேட்கும் போது அப்போ அவளுக்கு பதினெழு வயது தான்..

அப்போதிலிருந்தே என் தங்கை என்னை பார்க்க மாப்பிள்ளை வீடு வந்தா வீட்டில் இருக்க மாட்டா அவ கடையில் தான் இருப்பா..அவங்க வந்த அன்னைக்கு கூட இவ வீட்டில் இல்லை..ஆனா அவங்களுக்கு தெரியாம இவள் எப்படியாவது மாப்பிள்ளையையும் அவங்க குடும்பத்தையும் பார்த்துடுவா..

அதே போல் இவங்களையும் பார்த்துட்டா.. ஜெய் வீட்டில் இருந்து வந்தவங்க எங்களுக்கு பெண்ணை ரொம்ப பிடிச்சி போயிடுச்சி இப்போவே தட்டை மாத்திக்கலாம் அடுத்த மாசம் கல்யாணத்தை வெச்சிக்கலாம்.” என்று சொன்னதை கேட்டதும்.. என்னால் நம்ப முடியவில்லை.” என்ற அவளின் வார்த்தையில்…

“ஏன் நம்ப முடியவில்லை….?” என்று கேட்டான்.

இது வரை கீதா பேச பேச எந்த இடையூறும் செய்யாது அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த குருமூர்த்தி கீதா சொன்ன… “அவங்களுக்கு என்னை பிடிச்சி இருக்குன்னு..” சொன்னதை நம்ப முடியவில்லை என்று சொன்னதுமே… குருமூர்த்தி கேள்வி எழுப்ப…

அவனின் கேள்வியில் கீதா கொஞ்சம் தயங்கி பின்… “நான் பார்க்க சுமாரா தான் இருக்கேன்..ஆனா மாப்பிள்ளை பார்க்க அவ்வளவு அழகா இருந்தார்..படிப்பாகட்டும் அந்தஸ்த்தாகட்டும் எல்லாம் என்னை விட கூடுதல் .அப்படி இருக்கும் போது பிடிச்சது என்று சொன்னதும் நமக்கு நம்ப தானே முடியாது.” என்று கீதா சொன்ன விளக்கத்தில்…

குருமூர்த்தி …“அப்படியா….?” என்று அவன் ஒரு கேள்வி எழுப்பியதில். அங்கு இருந்த அனைவருக்கும் இவன் அப்படியா…?என்று கேட்டது ,கிண்டலிலா…? தெனவெட்டில்லா… என்று தெரியாது முழித்திருக்க..

மேலும் அவர்களை முழித்து இருக்க வைக்காது… “ம் அப்புறம் சொல்லுங்க.” என்ற குருமூர்த்தி திரும்பவும் தன் கேசில் பக்கம் திசை திருப்பியதில்..

கீதா தான் குழம்பி போய் பின்… “ அப்புறம் தான் பத்து கிட்ட சொல்லி கடையில் இருந்து வந்தா… அவங்க பிடிச்சது என்று சொன்னதில் அப்பாக்கு ரொம்ப சந்தோஷம்…”

இப்போது குருமூர்த்தி.. “உங்களுக்கு…?” என்று மீண்டும் கேள்வி எழுப்பினான்..

“எ..னக்கும் தான்.” என்று இப்போது அதை சொல்லும் போது கீதாவின் குரலில் அவமானமே மேலோங்கி இருந்தது..இதுவே இத்திருமணம் முடிவான போது இக்கேள்வியை கேட்டு இருந்தால் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லி இருப்பாள்...பெண்களின் மனநிலையை அறிந்தவனாய் குருமூர்த்தி நினைத்தான்.

“ஆனா நாங்க பட்ட சந்தோஷத்தை என் தங்கை படவில்லை.” என்ற கீதாவின் பேச்சில்…

“ஏன்…” என்பது போல் குருமூர்த்தி பத்மினியின் பக்கம் பார்வையை திருப்ப…

அவள் நிமிர்ந்து பார்த்தால் தானே… குருமூர்த்தி பார்ப்பது தெரிவதற்க்கு, தன் அக்கா பேச ஆராம்பித்த உடன் தலை குனிந்தவள் தான் நிமிரவே இல்லை..

இவள் இதை சொல்ல சொல்ல அவள் மனதில் இருக்கும் ரணம் மேலும் கிளறி விடுவது போல தானே ஆகும்...ரணத்தை அப்படியே விட்டால் அது சீழ் பிடித்து மேலும் பிரச்சனையை ஏற்படுதுவது போல..கீதா பேசினால் தானே அவள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்… என்று அவளின் அறிவு எடுத்துரைத்தாலும்..

யாரோ முன் இவள் அடுத்து தன் அந்தரங்கத்தை பகிர வேண்டும் என்ற அந்த நினைவிலேயே தலை குனிந்தவள் நிமிரவில்லை..

பத்மினியின் பக்கம் பார்வையை திருப்பிய குருமூர்த்தி பத்மினி தலை குனிந்து இருப்பதை பார்தது…

”பெண்கள் தலை குனிந்து இருப்பதை பார்த்தா எனக்கு பிடிக்கவே பிடிக்காது.” என்ற குருமூர்த்தியின் பேச்சில் பத்மினி நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“தட்ஸ் குட்.” என்று சொன்ன குருமூர்த்தி தொடர்ந்து… “உங்களுக்கு ஏன் இந்த சம்மந்தம் பிடிக்கலே…” என்று அவளிடம் கேட்டதும்..

கொஞ்சம் யோசித்த பத்மினி… “தெரியல..ஆனா என் மனசுக்கு ஏதோ தப்பா தோனுச்சி.. அதான் அப்பா கிட்ட வேண்டாமுன்னு சொன்னேன்..அதுக்கு அப்பா ரீசன் சொல்லு அப்படின்னு சொன்னார்..

அவர் கேட்டதும் நியாயம் தானே.. ஒரு மத்தியவர்க்கத்தின் தலைவராய் இரு பெண்களின் தந்தையாய் தன் மகள்களை கட்டி கொடுக்க வேண்டும்..இது தான் அனைவரின் பெற்றோர்களின் எண்ணமும்..அதே எண்ணம் தான் எங்க அப்பாவுக்கும்..

அதுவும் இல்லாம அப்பா கொஞ்சம் சுகவீனம் இல்லாதவர்..அக்காவுக்கு ஐந்து வருடமா இடம் பார்த்துட்டு இருந்தோம்..ஏதோ ஒரு காரணத்தால அக்காவின் கல்யாணம் தள்ளி போயிட்டே இருந்தது.

இந்த இடம் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்களுக்கு பிடிச்சி போயிட அப்பாவுக்கு இந்த சம்மந்தத்தை விட மனசு இல்ல.. அப்போ கூட நான் டிடக்டீவ் ஏஜன்ஸி வெச்சி மாப்பிள்ளை பத்தி விசாரிச்சேன்.. அவங்க ஒன்னும் தப்பா சொல்லலே…அதனால நானும் ஒத்துக் கொண்டேன்.” என்று பத்மினி சொல்லவும்..

“அப்படியா…?” என்பது போல் பார்த்தானே தவிர அவன் வேறு எதுவும் பேசவில்லை.

இப்போது கீதாவிடம்… “இப்போ நீங்க எதுக்கு விவாகரத்து கேட்கிறிங்க…?”

கீதாவை இவ்வளவு நேரம் பேச விட்டு...பெண்ணின் மனம்..பெண்ணின் குணம் அறிய முயன்றவன்.. கீதாவின் இயல்பை ஒரளவுக்கு புரிந்துக் கொண்டவனாய் இப்போது தான் விசயத்துக்கு வந்தான்…

கீதா அந்த சாதரண விசயத்தையே கொஞ்சம் தயங்கி தயங்கி தான் சொன்னது..இப்போது இந்த விசயம்..அதுவும் இரு ஆடவர் முன்.. அதை நினைக்கும் போதே அவளின் கண்கள் தன்னால் கலங்கி தான் போனது..

திருமணம் ஆகாமலேயே இருந்து இருந்தால்..கல்யாணம் ஆகவில்லை..இது ஒரு கவலை மட்டும் தான்..ஆனால் ஆன பின்…நடுங்கிய தன் உதட்டை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்த அவளின் தோற்றம் குருமூர்த்தியை ஏதோ செய்தது தான்..

ஆனாலும் கீதா தானே இதை சொல்லி ஆகவேண்டும்.. என்ற பட்சத்தில் அமைதி காத்தான்..அதே எண்ணம் தான் கீதாவுக்கும் போல்…

“அவங்க அண்ணி கூட இருந்தாங்க…” என்று அவள் அதை சொல்லும் போதே அவள் குரல் உடைந்து விட்டது..

கீதா அண்ணி கூட இருந்தாங்க என்ற வார்த்தையின் அர்த்தம் கீதா விளக்காமலேயே குருமூர்த்திக்கு புரிந்து விட்டது… அவன் இது போல் எத்தனை கேசுகளை பார்த்து இருக்கிறான்.

“நீங்களே பார்த்திங்களா..?இல்ல யாரவது சொல்லி/…”

“இல்ல இல்ல நானே பார்த்தேன்…” என்று சொன்ன கீதாவின் குரலில் முன் இருந்த தயக்கம் இல்லை.

“நேரில் பார்த்திங்க..அதுக்கு முன்ன அவங்க நடவடிக்கையில் ஏதாவது உங்களுக்கு சந்தேகம்…” என்று குருமூர்த்தி கேட்க..

“கல்யாணம் ஆன நாளில் இருந்தே..அதாவது..எங்க கல்யாணம் ஆன அன்னைக்கு எங்க வீட்டில் அந்த சடங்கு… “ என்று சொன்னவளின் பேச்சு தடைப்பட தன் பக்கத்தில் அமர்ந்திருந்த பத்மினியையும் இந்த பக்கம் அமர்ந்திருந்த கிரிஜா...மறு பக்கம் பத்மினியின் பக்கத்தில் அமர்ந்திருந்த கிரிதரனையும் தயக்கத்துடன் பார்த்து.. இவர்கள் முன் எப்படி சொல்வது என்று தன் பேச்சை நிறுத்தினாள்…

இந்த நான்கு பேர் முன் சொல்லவே தயங்கும் கீதா நீதிமன்றத்தில் அத்தனை பேர் முன்நிலையில் எப்படி சொல்லுவாள்...ஜெய் இந்த விவாகரத்திற்க்கு சம்மதிக்காத பட்சத்தில்…?






























 
Active member
Joined
May 12, 2024
Messages
203
Guru treatment 🔥🔥🔥
Don’t judge a book by its cover…
Guru veliya than karadu muradu
 
Top