Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Nayaganin Nayagi

  • Thread Author
அத்தியாயம்…6

ஜெய்யுக்கு முன் இருந்த பயம், பத்மினியிடம் பேசியில் உரையாடிய பின் இல்லை. அதனால் அன்று மாலை பத்ம ப்ரியா சுட்டு கொடுத்த பஜ்ஜியை சட்னியில் தொட்டு நான்கை உள்ளே தள்ளிய பின் … “ப்ரியா கெளதம் சாப்பிடலயா…?” என்று கேட்டான்.

“ம் தூங்குறார்.. அவருக்கு அதை விட்டா வேறு என்ன தெரியும்.” என்று சலித்துக் கொண்டவளின் கைய் பற்றிய ஜெய்…

“அது தான் எனக்கு எல்லாம் தெரியுதுல..அப்புறம் என்ன…?” என்று கேட்டுக் கொண்டே அவளை இன்னும் அருகில் இழுக்கும் போது வாசலில் அழைப்பு சத்தம் கேட்டது…

“சே யார் அது… பூஜை வேலை கரடி மாதிரி…” என்று எரிச்சல் பட்டுக் கொண்டே கதவை திறக்க, தன் இருக்கையை விட்டு எழுந்தான்.

சட்னியை சமையல் அறையில் வைக்க கையில் எடுத்த பத்ம ப்ரியா… “உன் பொண்டாட்டி கரடியா தான் இருக்கும்.” என்ற பேச்சில்..

ஜெய் இருக்குமோ என்ற ஆர்வத்துடன் வாசலை நோக்கி விரைந்தவனின் காதில் பத்ம ப்ரியா சொன்ன… “என்ன தான் இருந்தாலும், தாலிக்கு தனி மவுசு தான்.” என்ற வார்த்தை காதில் விழுந்தாலும், சிரித்துக் கொண்டே கதவை திறந்தான்.

கதவின் அந்த பக்கம் தான் எதிர் பார்த்த கீதா இல்லை.மாறாக காக்கி உடை அணிந்த காவலர் இருவர் நின்று இருப்பதை பார்த்து யோசனையுடன்…

வீடு மாறி வந்து இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் “யார் வேண்டும்…?” என்று ஜெய் கேட்டான்.

அந்த காவலர்கள் கேட்ட… “கெளதம் இருக்கானா…?” என்று கேட்டு அவர்கள் வீடு மாறி வரவில்லை. சரியான முகவரிக்கு தான் வந்து இருக்கிறார்கள் என்று அறிந்துக் கொண்ட ஜெய்..அவர்கள் கேட்ட விதமான..

“கெளதம் இருக்கானா…?” என்ற அந்த மரியாதை அற்ற வார்த்தையில்…

“என்ன விசயமா அவரை தேடி வந்து இருக்கிங்க…?” என்ற ஜெய்யின் கேள்விக்கு பதில் அளிக்காது தன்னை ஒரு மாதிரியாக பார்த்த காவல் அதிகாரியிடம்..

மீண்டும்.. “சார் நான் கெளதமோட பிரதர்…” என்று ஜெய் சொல்லி முடிக்கவும் அந்த காவல் அதிகாரி..

“ஓ அது நீங்க தானா சார்…” என்று சொல்லி சந்தோஷத்துடன் ஜெய் கைய் பற்றிய அவர்கள்…

“உங்க மனைவி உங்கல பத்தி ரொம்ப பெருமையா சொன்னதா சொன்னாங்க சார்.” என்று அந்த காவல் அதிகாரி பேசிக் கொண்டு இருக்கும் போதே, தூக்கம் கலைந்து எழுந்து வந்த கெளதமும், என்ன யார் அப்போ கதவை திறக்க போனவன் இன்னும் உள்ளே வரல..என்று நினைத்து கணவன் மனைவி இருவரும் ஒரு சேர வாசலுக்கு வந்தனர்.

காவல் அதிகாரி பேச்சில் குழம்பி போன ஜெய் என்ன என்று யோசிப்பதற்க்குள் அங்கு வந்த கெளதம் காவல் அதிகாரிகளை பார்த்து… “என்ன விசயம் ஜெய்…?” என்று கேட்டான்.

அதற்க்கு ஜெய்… “கெளதம்.. “ என்று ஜெய் கெளதமின் பெயரை சொன்னது தான் தாமதம்..

அந்த காவல் அதிகாரி… “உங்கல செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் கூப்பிட்டு அனுப்பி இருக்காங்க…” என்று அவர் சொன்னதும்..

இதுவரை இரு ஆடவர்களுக்கு பின் இருந்த பத்ம ப்ரியா முன் வந்து… “எதுக்கு இவர் அங்கு போகனும்…?” என்று கேட்டதும்..

அந்த காவல்துறை பத்ம ப்ரியாவிடம்… “நீங்க இவருக்கு யாரு…?” என்று கேட்டார்.

அதற்க்கு பத்ம ப்ரியா… “நான் இவர் மனைவி… “ என்றதும்..

அந்த காவல் அதிகாரி… கெளதமை பார்த்து… “கிளி மாதிரி பெண்டாட்டி வெச்சிட்டு தம்பி பெண்டாட்டி கிட்ட இப்படி அசிங்கமா நடந்து இருக்கியே உனக்கு வெக்கமா இல்ல…” என்ற அவரின் கேள்வியில்.. அனைவரும் அதிர்ச்சியாகி அப்படியே நின்று விட்டனர்..

“என்ன இது உலறல்.. ?” என்று ஜெய் கோபத்துடன் கேட்டான்.

கெளதமோ அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாது .. “நானா…?நானா…?” என்பது போல் அதிலேயே உழன்று போய் இருந்து விட்டான்.

பத்ம ப்ரியாவோ… “என்ன இது..அபாண்டமா பேசுறதுக்கும் ஒரு அளவு இருக்கு.. யார் அப்படி சொன்னது…?” என்று ஜெய்யோடு கோபத்துடன் அந்த காவல் அதிகாரியிடம் பத்ம ப்ரியா கேட்டாள்.

“பாருய்யா பாரு… உன் தம்பிக்கும், உன் மனைவிக்கும் உன் மேல எவ்வளவு நம்பிக்கை.. நீ எல்லாம்.” என்று அதற்க்கு மேல் பேசாது..

அனைவரையும் பார்த்து.. “எங்களுக்கு அதெல்லாம் தெரியாது..செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில்… “ ஜெய்யை காட்டி… “இவர் மனைவி தான் தன் கணவரின் அண்ணன் தனக்கு செக்ஸ்வல் டார்ச்சர் கொடுக்குறார்..நானும் என் கணவரும் அந்தரங்கமா இருந்ததை வீடியோ எடுத்து..

“என் கூடவும் இதே போல் இருக்கனும். இல்லேன்ன இதை சமூக வலை தளத்தில் போட்டுடுவேன் மிரட்டுறார் என்று சொல்லி கம்பிளையிண்ட் கொடுத்து இருக்காங்க… அங்கு வந்த தகவல் படி தான் நாங்க இங்கு வந்து இருக்கோம்.. ம் சீக்கிரம் வாங்க..” என்று அந்த காவல் அதிகாரி சொல்ல சொல்ல அனைவரின் முகமும் பேய் அரைந்த்து போல் ஆனது..

கெளதம் தான்.. “ஜெய் என்னடா இது…?” என்று தம்பியின் கையை பிடிக்க.. ஜெய்யின் கையில் இருந்து கெளதமின் கையை வெடுக்கென்று எடுத்து விட்டதோடு கெளதமை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றும் விட்டனர்.

செங்கல்பட்டு காவல்நிலையம்…

ஜெய் அங்கு இருக்கும் உயர் அதிகாரியிடம்.. “சார் இது எல்லாம் பொய். எனக்கும் என் மனைவிக்கு சின்ன பிரச்சனை.. அதனால் தான் இது போல் பொய் கேசு கொடுத்து இருக்காங்க… நான் சொல்றேன்.. இதோ இது எங்க அண்ணி இவங்க சொல்வாங்க கெளதம் அப்படி பட்டவன் இல்ல என்று…” என்று ஜெய் தன் அண்ணனுக்காக அந்த உயர் காவல் அதிகாரியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே..

அவனை ஒரு மாதிரியாக பார்த்த அந்த உயர் அதிகாரி… “நீ எல்லாம் என்னய்யா ஆம்பிள்ளை கட்டின பொண்டாட்டி உன் அண்ணன் என் கிட்ட தவறா நடக்க பார்க்கிறார்… சொல்றாங்க..அதுவும் சாட்சியோடு… “ என்ற அவரின் பேச்சில் ஜெய்..

“சாட்சியா..?” என்று கேள்வி கேட்க..

“ஆ சாட்சி தான். இப்போ கூட நீ இந்த கேடு கெட்டவனுக்காக தான் பேசிட்டு இருக்கலே… உன் மனைவி சொன்னாங்க… அவருக்கு அண்ணன் தான் தெய்வம்..அண்ணி அவருக்கு இன்னொரு அம்மா மாதிரி..நான் சொன்னதை அவர் காதிலேயே வாங்கிக்கல..

அந்த வீட்டில் இருந்தா எனக்கு ஏதாவது நடந்து விடும் என்று தான் அவரை தனியா போகலாம் என்று கூப்பிட்டேன்.. ஆனா அவர் நான் தனி குடுத்தனத்துக்கு ஆசைப்பட்டு அவர் அண்ணன் மேல பழி சுமத்துறேன்னு என்னை தான் தப்பா நினைச்சார்.

அதனால கோச்சிட்டு எங்க வீட்டுக்கு வந்து விவாகரத்துக்கு நோட்டிஸ் விட்டேன்.. அப்போ கூட எனக்கு என் கணவரை பிரிய அந்த விவாகரத்து நோட்டீஸ் கொடுக்கல..அவர் ரொம்ப ரொம்ப நல்லவர்..அப்பாவி(வீ) இதை பார்த்து பயந்தாவது என் கூட தனியா வருவார் என்று தான் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பினேன்.

ஆனால் அதுக்கு பதில் அவர் அண்ணன் கிட்ட இருந்து என் தங்கை செல்லுக்கு ஒரு வீடியோ அனுப்பி...இது சமுகவலைதலங்களில் போடாம இருக்கனுமுன்னா உங்க அக்காவை ஒழுங்கா வீட்டுக்கு அனுப்பி வைய் என்று சொன்னதும்..

என் தங்கை தான் இது இப்படியே விட்டா பிரச்சனை என்று தகுந்த வக்கீலோடு காவல்துறையில் புகார் கொடுக்கலாம் என்று இங்கு வந்தேன்..” என்று உங்க மனைவி சொன்னாங்க.. என்று சொன்ன அந்த உயர் அதிகாரி…

திரும்பவும் ஜெய்யிடம்..”உங்க மனைவி அப்போ கூட என் கணவர் ரொம்ப நல்லவர்.. அப்படி தான் சொன்னாங்க.. அண்ணன் மீது பாசம் இருக்க வேண்டியது தான்.. ஆனா இப்படி கண் மூடி பாசம் இருந்தா உங்க தனிப்பட்ட வாழ்க்கை தான் பாதிக்கும்.” என்று அவரின் பேச்சில் அனைவரும் சிலையாகி விட்டனர்…

கம்பிகளுக்கு நடுவில் கெளதமின் முகம்.. “ ஜெய் என்னடா இது…?” என்று கோபம்.. ஆற்றாமை, இயலாமை.. என்று அனைத்தும் ஒன்று கூடி கேட்டான்.

“நான் பார்க்குறேன் கெளதம் கவலை படாதே.. நான் உன்னை இதில் இருந்து வெளி கொண்டு வந்துடுறேன்.” என்று சொல்லி அந்த காவல் நிலையத்தில் இருந்து ஜெய், பத்ம ப்ரியா வெளியே வந்தனர்.

நடந்தவைகளை பார்த்து பத்ம ப்ரியா கதிகலங்கி தான் போய் விட்டாள். கீதா வீட்டை விட்டு சென்ற போது இல்லாத பயம்.. அவளிடம் இருந்து விவாகரத்து நோட்டிஸ் வரும் போது இல்லாது பயம்.. இப்போது அவளிடம் வந்து விட்டது.

இது என்ன மாதிரியான வலை… ? இதில் இருந்து எப்படி தப்பிப்பது. யோசிக்க யோசிக்க தோல்வியே கிடைக்க.. பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த ஜெய்யின் கையை கெட்டியாக பற்றிக் கொண்டாள்.

“கவலை படாதே ப்ரியா… எல்லாம் சரி பண்ணிடறேன்.” என்று அவளுக்கு ஆறுதல் வழங்க..

“எப்படி..? எப்படி..? இதை எப்படி சரி பண்ண போற…? எப்படி சரி பண்ண போற ஜெய்...பயமா இருக்கு ஜெய்..எல்லாம் வெளியில் வந்தால் நம் குழந்தையின் எதிர்காலம்..அவன் படிக்கும் பள்ளிக்கூடம்..உனக்கு புரியுதா ஜெய்.” என்று பத்ம ப்ரியா விளக்கி சொன்னாள்.

ஆனால் ஜெய்யுக்கு அவள் விளக்காமலேயே அனைத்தும் விளங்கி விட்டது…

நான் கொஞ்சம் குறச்சி எடை போட்டுட்டேன்… பார்க்க பூனை மாதிரி பயந்தா மாதிரி இருந்துட்டு… என்ன மாதிரி வீடியோ அனுப்பியும்… அந்த வீடியோவை தைரியமான பெண் பார்த்தா கூட பயந்து போய் இருப்பாள்..

ஆனால் இவள்.. நான் அனுப்பிய மூன்று மணி நேரத்தில், அந்த வீடியோ வெச்சே ஒரு கதை பிண்ணி .அதில் நம்மளை எவ்வளவு அழகா மாட்டி வெச்சி இருக்கா.. என்று நினைத்தவன்..

அந்த வலையை பிண்ணி கொடுத்த வக்கீல் முன் பத்ம ப்ரியா உடன் போய் நின்றான்…

ஜெய் தன்னை அறிமுகம் படுத்தும் முன்னவே குருமூர்த்தி.. தன் முன் இருக்கும் இருக்கையை காட்டி… “உட்காருங்க ஜெய்…” என்று சொன்னதும், அவனின் முகத்தை பார்த்த படியே இருவரும் அமர்ந்தனர்.

ஜெய்யை பார்த்து… “என்ன விசயமா வந்து இருக்கிங்க…?” என்று ஜெய்யை பார்த்து கேட்டான்.

ஜெய்… “சார் என்னை உங்களுக்கு தெரியுதுன்னா.. நான் வந்த விசயமும் என்ன என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும்.” என்று ஜெய்யும் நேரிடையாக விசயத்து வந்து விட்டான்.

“குட் வெரி குட்…” என்று சொன்ன குருமூர்த்தி… “இப்போ நீங்க என் கிட்ட பேச வேண்டிய விசயம் தெரியும். ஆனால் என்ன பேச போறிங்க…?அது நீங்க சொன்னா தானே எனக்கு தெரியும்.” என்று குருமூர்த்தி சொன்னதும்..

“அது வந்து சார்..இவங்க என் அண்ணி…” என்று ஜெய் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே குருமூர்த்தி…

“அப்படியா…?” என்று கேட்டானே ஒழிய அந்த பத்ம ப்ரியாவை திரும்பி கூட பார்க்கவில்லை. அவன் பார்வை மொத்தமும் ஜெய்யிடம் மட்டுமே இருந்தது.

“கீதா எங்களுக்குள்ள தப்பான உறவு இருக்குன்னு…” என்ற சொல்லிக் கொண்டு வந்த ஜெய்யை மேலும் பேச விடாது கை நீட்டி தடுத்த குருமூர்த்தி..

பத்மினியின் பேசியில் ஜெய் பேசிய அனைத்தும் தன் பேசியில் ரெக்கார்ட் செய்து வைத்திருந்த்தை ஓட்டி காட்டிய குருமூர்த்தி…

“இப்போ பேசுங்க..இந்த ஒழுங்கு சீகாமணி நான் தான் என்பது போல பேச்சை விட்டு விட்டு என்ன என்று பேசுங்க.” என்று குருமூர்த்தியும் நேரிடையாக விசயத்துக்கு வந்து விட்டான்.

ஏற்கனவே காவல்நிலையத்தில் தன் அண்ணன் மீது பதிவான வழக்கை சொன்ன ஜெய்… “இது நியாயமா…? என்றதற்க்கு…

“தெரியுமே… உன் அண்ணன்…” ஜெய்யின் பக்கத்தில் அமர்ந்திருந்த பத்மப்ரியாவை காட்டி… “இவளையே அப்படி பார்க்க மாட்டான் அது நல்லாவே தெரியும். அப்படி இருக்கும் போது தம்பி பொண்டாட்டியவா பார்க்க போறான்.” என்ற குருமூர்த்தியின் பேச்சில்…

பத்மப்ரியாவும் சரி, ஜெய்யும் சரி வெல வெலத்து போய் விட்டனர்.. என்ன…? “ திக்கி திணறலான பேச்சில்…

“ஏன்டா நாதறி பயல… உன் ஆண்மை அற்ற அண்ணாவுக்கு ஒரு கல்யாணம் பண்ணது தெரியாம பண்ணிட்டிங்க.. அப்புறம் தான் அவனால முடியல என்ற பட்சத்தில் அவன் ஹாஸ்பிட்டல் போய் பார்த்து தான் தெரிந்தது.. அப்புறம் உங்களுக்குள்ள ஒரு டீல். அது வரை எல்லாம் சரி.

ஆனா இதுல உங்க சாக்காடை குடும்பத்தில் இதோ இந்த தெருவிளக்கு இருக்கும் போது ஏன்டா குத்து விளக்கை கொண்டு வந்திங்க…” என்ற குருமூர்த்தி பேச்சில்..

ஜெய் ஏதோ பேச வர.. பத்மப்ரியா தடுத்து நிறுத்தி விட்டு… “ இதுல முதல்ல பாதிக்கப்பட்டது நான் தான். ஜெய் சொன்னாரு நீங்க பெண்கள் என்றால் அவங்களுக்கு தான் முன் உரிமை கொடுத்து வாதடுவிங்கன்னு… நானும் இதில் பாதிக்கப்பட்டு இருக்கேன்..

கல்யாணம் ஒவ்வொரு பெண்ணும் எத்தனையோ கனவோடு தான் அந்த வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்கிறா… அந்த கனவு மொத்தமா கலைந்த என்னோட நிலையை கொஞ்சம் யோசித்து பார்த்திங்களா…?” என்று பத்மப்ரியா நேரிடையாக குருமூர்த்தியை பார்த்து கேட்டாள்.

இப்போது குருமூர்த்தியும் பத்ம ப்ரியாவை நேராக பார்த்து… “உங்க விசயம் எது வரை சரி என்றால், உங்க கல்யாணம் அடுத்து உங்க தாம்பத்தியத்தில் கிடைத்த அந்த ஏமாற்றம்..அப்போ உங்க கணவன் கூட தன் குறை தெரியாம தான் உங்கல கல்யாணம் செய்து இருக்கார்.

அப்போ அதில் அவர் தவறும் இல்லை...அடுத்து தான் அவர் மருத்துவ பரிசோதனையில் அவரால் முடியாது என்று வந்து இருக்கு.” என்று சொன்ன குருமூர்த்தியை பத்மப்ரியா யோசனையுடன் பார்த்தாள்.

தன் மேசையின் இழுவையில் இருந்து ஒரு கோப்பை அவர் முன் எடுத்து போட்ட குருமூர்த்தி… “ஆறு வருடம் முன் உன் கணவர் செய்த மருத்துவ பரிசோதனையின் நகல் இது.” என்று சொன்னவன்…

“சரி அப்புறம் நீங்க என்ன செய்து இருக்கனும்.. அவரை விவாகரத்து செய்துட்டு வேறு கல்யாணம் செய்து இருக்கனும்…”

ஏதோ பேச வந்த பத்மப்ரியாவை தடுத்து நிறுத்தி விட்டு … “நான் தான் பேசுவேன்.” என்று சொன்னவன் தொடர்ந்து…

“சரி இவரையே கூட நீங்க கல்யாணம் செய்து இருக்கலாம். அதை விட்டு ஏதோ உங்களுக்குள்ள ஒரு டீல். சரி அந்த மானக்கெட்ட டீலோட அப்படியேவாது விட்டு இருந்தா இந்த பிரச்சனை எல்லாம் இல்ல..

அந்த பெண்ணை ஒரு நல்ல பெண்ணை. உங்க சாக்கடையில் உள்ள தள்ளி இருக்கிங்க பாருங்க..அது தான் நீங்க செஞ்ச மிக பெரிய தப்பு… உனக்கு நடந்தது தெரியாம இவங்க நடத்தினது..ஆனா கீதாவுக்கு நடந்தது… திட்ட மிட்டு நீங்க செஞ்ச சதி..

அதுவும் வசதி குறைவான பெண்ணா பார்த்து, ஏதாவது தெரிய வந்தா கூட கேட்க முடியாத இடத்தில் பெண் எடுத்து ..என்ன ஒரு வில்லத்தனம்… எல்லா சரியா திட்ட மிட்டு செஞ்ச நீங்க..அந்த வீட்டு சின்ன பெண்ணை விசாரித்து வைக்கல…

முதல்ல கீதாவுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்துட்டு உங்க விசயத்தை வெளியில் கொண்டு வந்து உங்க சொத்தில் பாதிய கீதாவுக்கு வாங்கி கொடுக்கனும் என்று தான் நினச்சேன்..ஆனா எப்போ கட்டுன பெண்டாட்டி கூட படுத்து இருந்ததை கூட வீடியோ எடுத்தியோ… உங்க மொத்த குடும்பத்தையும் சந்தி சிரிக்க வெச்சி.. மொத்த சொத்தையும் கீதாவுக்கு வாங்கி கொடுக்காம நான் விட மாட்டேன்.” என்று சொன்ன குருமூர்த்தி சொன்னதை செய்து முடித்து விடுவானா..?




















































































 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
914
Guru plan super 👌nice interesting ud sis ❤️hi hi hi.....oru ud thaana😜😜😜
தினமும் இரண்டு கொடுத்து விடுவேன் பா... ஒரு கதை கொடுத்த பின் ஒன்று என்று.. தளத்திற்கு வந்து பாருங்க பா.. கண்டிப்பாக எந்த கதையின் புதிய பதிவு இருக்கும்
 
Top