அத்தியாயம்…1
அந்த வீட்டின் மூத்த மருமகள் மாதுரி சமையல் அறையில் தான் இருந்தாள்.. ஆனால் வேலை எதுவும் செய்யவில்லை… அவளின் மனதில் அத்தனை ரணம்…
சமையல் செய்யும் பெண்மணியான ராணியும் அதே சமையல் அறையில் தான் இருந்தாள்… வந்ததில் இருந்து எதுவும் செய்யாது, தன்னிடம் எதுவும் சொல்லாது, கவனத்தை எங்கோ வைத்து கொண்டு இருந்த மாதுரியை ஓரவிழி பார்வையில் பார்த்து கொண்டே வேலை செய்து கொண்டு இருந்த ராணியுமே ஒரு நிலைக்கு மேல் என்ன…? என்று தெரியாது இனி வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்தவளாக மெல்ல மாதிரியிடம் பேச்சு கொடுத்தாள்…
“என்னம்மா அங்கு உங்க நாத்தனாரும் இந்த வீட்டின் ஒரே மாப்பிள்ளையும் வந்து இருக்காரு.. நீங்க இங்கே இருக்கிங்க…?” என்று கேட்டவளின் கேள்வியில், ஏதோ நினைவில் இருந்த மாதுரி அதில் இருந்து மீண்டு ராணியை பார்த்தாள்..
அந்த பார்வையில் ராணி என்ன நினைத்தாளோ சட்டென்று தன் பேச்சு திசையை மாற்றியவளாக.
“இல்லேம்மா மாப்பிள்ளைக்கும், ப்ரியா அம்மாவுக்கும் ஏதாவது செய்ய சொல்ல வந்திங்கலோ… நான் வேறு ஏதோ செய்து கொண்டு இருப்பதை பார்த்துட்டு சொல்லாமல் தயங்கி நிற்கிறிங்கலோ என்று நினச்சிட்டேன் மாதுரியம்மா…” என்று ராணி தன் பேச்சின் வாத திறமையில் சமாளிக்க தான் பார்த்தாள்..
ஆனால் மாதுரியோ.. “நான் உன் கிட்ட வேலை சொல்ல தயங்கி நிற்கிறேன்.. ஆமா. ஆமா… “ என்று எடக்காக கேட்ட மாதுரி..
பின் “பேசாது வேலையை பார்.” என்றும் கண்டிப்புடன் சொல்லி விட்டு கூடத்திற்க்கு வந்து நின்றாள்…
மாதுரி இப்படி ராணியிடம் பேசியதால், வேலை செய்பவர்களை கீழாக நினைத்து பேசினால் என்று எல்லாம் நினைத்து விட முடியாது. மாதுரிக்கு தெரியும் ராணி எந்த காரணத்திற்க்காக தன்னிடம் இப்படி போட்டு வாங்க பார்க்கிறாள் என்று.. அதனால் தான் அப்படி கண்டிப்புடன் பேசியது..
மற்றப்படி மாதுரி நல்ல பெண் தான். என்ன ஒன்று இந்த நல்ல பெண்ணை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை.. ஆனால் கணவனே.. புரிந்து கொள்ளாது நேற்று இரவு பேசியதை தான் மாதுரியால் பொறுத்து கொள்ள முடியவில்லை..
என்னை பற்றியதான கணவனின் அபிப்பிராயம் இவ்வளவு தானா..? என்ற ஆதங்கம் மாதுரிக்கு.. அதுவும் புதியதாக திருமணம் முடிந்து நேற்று நான் சொன்னதற்க்கு அப்படி தன்னிடம் கேட்டு இருந்து இருந்தால் கூட பரவாயில்லை…
என்னை பற்றி இவருக்கு என்ன தெரியும்…? இப்போது தானே வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறோம்.. போக போக ஒருவர் ஒருவரை புரிந்து கொள்ளலாம் என்று விட்டு விடலாம்..
மாதுரி நேற்று இரவு தன் கணவன் தன்னை கேட்ட அந்த கேள்வியையும் , அவள் பெரிதாக எடுத்து கொண்டும் இருந்து இருக்க மாட்டாள்.
ஆனால் அவள் இந்த வீட்டின் மூத்த மருமகளாக வந்து வருடங்கள் பத்து தொட உள்ளது… கூட மாதுரி தன் கணவன் தமிழ் மாறனுக்கு அத்தை மகளும் கூட… அத்தை மகளாக தன்னிடம் அதிகம் பேசியது எல்லாம் கிடையாது தான்.. பார்க்கும் சமயமும் எப்போதாவது ஏதாவது விசேஷத்தில் தான். அதிலும் தமிழ் மாறன் அனைத்து விசேஷத்திற்க்கும் வந்து விட மாட்டான் தான்..
ஆனாலும் திருமணம் முடிந்த இந்த பத்து வருடத்தில் என்னை பற்றி புரிந்து கொண்டது இவ்வளவு தானா… என்ற ஆதங்கம் தான் இப்போது மாதிரியின் மனதில் வேர் ஊன்றி இருந்தது..
ஆனால் இதை எதையும் அவள் தன் முகத்தில் கூட காட்டாது தான் நடமாடிக் கொண்டு இருந்தாள். அப்படி தான் இருந்து ஆக வேண்டும்… என்ன செய்வது இரண்டு குழந்தைகளின் தாயாக அடங்கி போய் தான் ஆக வேண்டும் என்று அவள் மனது சொன்னதை கேட்டு கொண்டவளாக தான் மனதில் வேதனையை காட்டாது ஆழ மூச்செடுத்து கொண்டு கூடத்திற்க்கு சென்றது..
அவள் சென்ற போது அந்த வீட்டின் ஒரே பெண்ணான ப்ரியா…. “ என்ன அண்ணி நான் வந்த போது காபி கொடுத்திங்க… அப்புறம் ஆளையே காணல…” என்று சிரித்து கொண்டு கேட்ட நாத்தனாரிடம் மாதுரியுமே சிரித்து கொண்டு.
“டிபன் வேலை எந்த அளவுல இருக்கு என்று பார்த்திட்டு வந்தேன் அண்ணி…” என்று சொன்னவள்..
அப்போது தான் பாட்டு கிளாஸ்க்கு சென்று வந்த தன் மகள் சிந்தியாவை கவனிக்கும் சாக்கில் அங்கு இருந்து நழுவிக் கொண்டு விட்டாள்..
கல்யாணம் ஆகி இந்த பத்து ஆண்டுகளில் அவள் படித்த கலைகளில் இதுவும் ஒன்று. பிரச்சனையில் மாட்டி கொள்ளாது எப்படி நேக்காக தப்பித்து கொள்வது என்று..
அப்படியாக தப்பித்து கொள்ள தன் ஒன்பது வயது சிந்தியாவை அழைத்து கொண்டு தங்கள் அறைக்குள் சென்றவள் அதன் பின் கூடத்திற்க்கு பக்கம் தன் தலையை காட்டவில்லை…
ப்ரியா தான் மீண்டும் மாதுரியை பார்க்காததினால் தன் அண்ணன் தமிழ் மாறனிடம்…. “ என்ன ண்ணா அண்ணியை காணும்… என் மேல ஏதாவது கோபமா ண்ணா…?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.
தமிழ் மாறனும்… மற்றவர்களுக்கு தெரியாத மனைவியின் முக மாற்றத்தை கவனித்து கொண்டு தான் இருந்தான். அதில் நேற்று இரவு தான் அதிகப்படியாக பேசி விட்டோமோ என்று கூட மனதில் நினைத்தான் தான்..
ஆனால் உடனே இப்போதைய மனைவியின் ஒதுக்கத்தை பார்த்து… ‘இப்படி நடந்தா நான் அப்படி தானே நினைப்பேன்.. நான் கேட்டதில் என்ன தவறு இருக்கு…?’ என்று ஒரு ஆண் மகனாக அவனுக்கு யோசனை இப்படி தான் சென்றது.. மனைவியின் பக்கம் யோசனை சென்றதில் தங்கையின் கேள்விக்கு பதில் அளிக்க மறந்து போய் விட்டான்..
அதில் ப்ரியா இன்னுமே பதட்டமானவளாக... “ ண்ணா நான் ஏதாவது தப்பு செய்துட்டேனா ண்ணா…?” என்று கவலையுடன் கேட்டவளின் பேச்சில்.. தான் தமிழ் மாறன்.
“சீ சீ என்ன இது கேள்வி.. நீ என்ன தப்பு செய்த. பாரு மாப்பிள்ளை உன் பேச்சு கேட்டுட்டு என்ன என்று பார்க்கிறதை..” என்று அந்த வீட்டின் மாப்பிள்ளையான ஸ்ரீ வச்சனை காட்டி கூறியதும்..
ஸ்ரீ வச்சனோ… தமிழ் மாறனிடம். “ என்ன மச்சான் அண்ணன் தங்கை பேச்சில் நான் ஏன் பார்க்க போறேன்… கூட பிறந்த பிறப்புக்கு நடுவில் யாரும் வர முடியாது… வந்தா என்ன ஆகும் என்று எனக்கு தெரியாதா என்ன….?”
ஸ்ரீ வச்சனின் இந்த பேச்சை கேட்டு கொண்டே தான் மாதுரி மீண்டும் கூடத்திற்க்கு வந்தது.. மகள் காலையில் போன் வீட்டா குடித்து விட்டு சென்றது.. இன்னுமே எதுவும் சாப்பிடவில்லை..
ஏதாவது கொடுக்க தான் உறங்கி எழுந்த தன் மூன்று வயது மகன் ஷரத்தையும் தயார் செய்து சாப்பிட அழைத்து கூடத்திற்க்கு வந்த போது தான் மாதுரியின் காதில் ஸ்ரீ வச்சனின் இந்த பேச்சு கேட்டது..
அந்த பேச்சை மாதுரி சாதாரணமாக கூட விட்டு இருந்து இருப்பாள்.. ஆனால் தன் தலை பார்த்ததும் ஸ்ரீ வச்சன்.. தன்னிடம் கேட்ட.
“நீ என்னம்மா சொல்ற.. அண்ணன் தங்கைக்குள் இப்போ வந்த நாம போக முடியுமா…?” என்ற கேள்வி கேட்காது இருந்து இருந்தால்,
மாதுரியும் இதற்க்கு என்ன பதில் சொல்ல கூடும் …? ஆமாம் என்று தலையாட்டுவதை தவிர…
தன் மகளுக்கும் மகனுக்கும் மட்டும் காலை உணவை வைத்தால், கண்டிப்பாக அதற்க்கு ஒரு பஞ்சாயத்தை தன் மாமியார் பாக்கியலட்சுமி ஆரம்பித்து விட கூடும் என்பதினால், ப்ரியாவையும் ஸ்ரீ வச்சனையும் பார்த்து..
“அண்ணா அண்ணி உங்களுக்கும் டிபன் வைக்கட்டுமா…” என்று என்று சாப்பிட அழைத்தாள்…
அவள் எதிர் பார்த்தது போல் தான் ப்ரியா..” நான் பெரிய அண்ணன் கூட சாப்பிடுறேன் அண்ணி.. நீங்க சாப்பிடுங்க.” என்றும் சொல்ல.
அவளின் இந்த பதிலை எதிர் பார்த்ததினால் அவளை சாப்பிட எதிர் பாராத தொட்டு தன் பிள்ளைகளுக்கு சாப்பிட வைத்து விட்டு தானுமே ஒரு தட்டில் பூரி கறி குருமாவை கொஞ்சம் வைத்து சாப்பிட தொடங்கி விட்டாள்..
தமிழ் மாறன் தன் தம்பிகள் , தம்பி மனைவிகள்… அம்மா தங்கை மாப்பிள்ளை அனைவரின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தாலும், பார்வை என்னவோ தன் மனைவி மீது தான் இருந்தது…
தமிழ் மாறனின் மனைவி மீதான இந்த பார்வை மனைவி கோபமாக இருப்பதினாலோ.. இல்லை நேற்று தான் அப்படி பேசி விட்டதில். சமாதானம் படுத்தவோ பார்க்கும் பார்வை கிடையாது..
தமிழ் மாறன் வீட்டில் இருந்தாலே அவனின் பார்வை மனைவியின் மீது தான் இருக்கும்… இது அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்குமே தெரியும்.. ஏன் மாதுரிக்குமே தெரியும்.. கணவனின் பார்வை..
இதோ இப்போது கூட குனிந்து சாப்பிட்டு கொண்டு பிய்த்து போட்டு கொடுத்த பின்னும் சரியாக சாப்பிடாது தட்டில் அந்த பூரியை அப்படியே வைத்து கொண்டு இருக்கும் ஷரத்தை ஒரு அதட்டல் போட்டவள்.. அவளே மகனுக்கும் ஊட்டி இடையே தானும் சாப்பிட்டு கொண்டு இருந்த மாதுரி இப்போதும் கணவன் தன்னை பார்த்து கொண்டு இருப்பது தெரிந்தாலுமே, கணவன் பக்கம் பார்க்காது சாப்பிட்டு முடித்தவள்…
மாமியாரிடம் மதியத்திற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு அனைத்தையுமே அந்த அந்த கடைக்கு போன் செய்து…” வஞ்சர மீன்… மூன்று கிலோ… ஆட்டு கறி.. இரண்டு கிலோ.. சுரா ஒன்னரை கிலோ மூளை நான்கு என்று சொல்லி விட்டு.. சமையல் அறைக்கு சென்று ராணியிடம்..
இப்போது இது எல்லாம் கடையில் இருந்து கொண்டு வந்து தந்து விடுவாங்க… அதில் எது எது என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொன்ன மாதுரி..
நாளை குழந்தைகள் பள்ளி செல்ல தேவையான யூனிபாம் அயன் செய்யவும் ஷூ துவைத்து காய வைத்ததில் பாலிஷ் போடவும் பின் நாளைக்கு தேவையான சாக்ஸ். டை .. பேட்ஜ் என்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும் மீண்டும் தன் அறைக்கு சென்ற மாதுரி செல்லும் முன் தன் மகள் சிந்தியாவிடம்..
“சத்தம் போடாது விளையாடனும்.. தம்பியையும் பார்த்துக்கனும்..” என்று சொல்லி விட்டு தான் சென்றாள்..
தமிழ் மாறன்.. மனைவியிடம் பேசாது போதும்.. மனைவியின் செயல்கள் அனைத்துமே பார்த்து கொண்டு இருந்தவனின் முகத்தில் லேசான ஒரு புன்னகை.. ஆனால் அதை அனைவரும் பார்க்க எல்லாம் சிரிக்கவில்லை…
தமிழ் மாறன் சாதாரணமாகவே அனைவரிடமும் அரட்டை பேச்சு… கத்தி .பேசுவது…. சத்தம் போட்டு சிரிப்பது… எல்லாம் கிடையாது.. சின்ன வயது முதலே அவன் அமைதியானவனும் அழுத்தமானவனும் கூட…
அவனை எல்லாம் அவன் விருப்பம் இல்லாது ஒன்றை செய்ய வைக்க முடியாது.. அதே சமயம் ஒன்றை செய்ய நினைத்து விட்டால், யார் தடுத்தாலும் அதை செய்யாதும் விட மாட்டான்.
அப்படி பட்டவனை போய்… நேற்று இரவு பிள்ளைகள் தூங்கிய பின்.. தங்கள் அறைக்கு வந்த மனைவியை கணவனாக நாடும் வேளையில்..
ஒரு மனைவியாக அந்த சமயம் தன்னிடம் நடந்து கொள்ளாது மந்திரி போல.. ஆலோசனை சொன்னால்,
அதுவும் மதியம் தன் அன்னையிடம் இதை செய்கிறேன் என்று ஒன்றை சொன்னதை..
“இது செய்யும் முன் கொஞ்சம் யோசிங்களேன்…” என்ற மனைவியின் அந்த பேச்சு தமிழ் மாறனுக்கு பிடிக்கவில்லையா…? இல்லை அந்த சமயத்தில் பேச்சே பிடிக்கவில்லையா…? என்று தெரியவில்லை..
ஆனால் பிடிக்கவில்லை… அதன் தொட்டு…. “ இந்த சமயம் நீ இது போல பேசினா உன் பேச்சை கேட்டுப்பேன் என்று நினச்சிட்டியா என்ன…?”
தன் இந்த பேச்சுக்கு தன்னை அதிர்ச்சியாக பார்த்தவளின் அந்த பார்வை அந்த இரவு நேரத்தில் மெல்லிய ஒளி தந்த இரவு விளக்கின் வெளிச்சத்திலும் தமிழ் மாறனுக்கு நன்கு தெரிந்தது தான். அதில் தான் அதிகப்படியான வார்த்தையை விட்டு விட்டோமோ என்றும் தமிழ் மாறன் நினைத்தான் தான்..
ஆனாலுமே மனைவியிடம் மன்னிப்பு கேட்கவில்லை.. காரணம் தான் ஆண் என்ற ஆணாவமா…? இல்லை… தான் என்ன இவளையும் குழந்தைகளையும் அப்படி என்ன நிர்கதியாக நிறுத்தி வைத்து விடுவேனா என்ன..? தங்கை பெண்ணுக்கு இத்தனை செய்யும் நான்.. என் மகளுக்கு எப்படி எல்லாம் செய்ய நினைப்பேன்.. இது இவளுக்கு தெரிய வேண்டாமா…?
இவள் என்ன நேற்றா என் கையினால் தாலி கட்டி கொண்டு எனக்கு மனைவியா இங்கு வந்து இருக்கா. என்று தான் நினைத்தான்..
இதில் ஒன்றில் மட்டும் கணவனும் மனைவியும் ஒன்று போல தான் நினைத்தார்கள்…
அப்படி என்ன மாதுரி கேட்டு விட்டாள்… காதல் கொண்டு கட்டினால் இவளை தான் கட்டுவேன் என்று அடம் பிடித்து கட்டிய மனைவியிடம்.. இப்படி கேட்கும் அளவுக்கு..
அது ஒன்றும் இல்லேங்க. எல்லாம் வீட்டிலும் நடக்கும் குடும்ப அரசியல் தான் அந்த வீட்டிலும் நடக்கிறது…
அந்த வீட்டின் ஒரே பெண் ப்ரியா…. அந்த வீட்டின் மூத்த மகன்… நம் கதையின் கதாநாயகன் தமிழ் மாறன்… அடுத்த வருடமே பிறந்தது இரண்டு இரட்டையர்களான விமலன்…வர்மன்…என்று இரண்டும் ஆண்பிள்ளைகளாக இருக்க. மூன்று ஆண்பிள்ளைகளுக்கு அடுத்து கடைசியாக பிறந்த ப்ரியாவின் மீது அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்குமே பாசம் அதிகம் தான்..
அதன் தொட்டே…கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருந்த சமயம்… அந்த கல்லூரியின் பேருந்து வசதிக்காக கான்கிராட் எடுத்து இருந்த சந்திரசேகரின் மகன் ஸ்ரீ வச்சன். சில சமயம் ஓட்டுனர் தட்டுப்பாடு இருக்கும் சமயம். அப்போது தான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு இருந்த சமயத்தில் அவனே கல்லூரிக்கு பேருந்தை அவன் ஓட்ட எடுத்து விடுவான்…
அந்த சமயத்தில் தான் இந்த வீட்டு பெண் ப்ரியாவுக்கும் ஸ்ரீ வச்சனுக்கும் காதல் மலர்ந்தது…
அதில் ஓட்டுனர் வேலைக்கு வரவில்லை என்றால், மட்டும் கல்லூரி பேருந்தை ஓட்ட வரும் ஸ்ரீ வச்சன்… பின் அந்த ஓட்டுனருக்கு வலிய ஸ்ரீ வச்சனே விடுமுறை கொடுத்து விட்டு பேருந்தை ஓட்ட… அப்படி இவர்கள் காதல் வளர்ந்த சமயத்தில் ப்ரியா கல்லூரியில் செமஸ்ட்டரில் மூன்று சப்ஜெக்ட் அரியஸ் வைத்து விட..
அப்போது உயிருடன் இருந்த இவர்களின் தந்தை சீனிவாசன்…. “என்ன ப்ரியா.. மூன்று சப்ஜெக்ட் அரியஸ் விழுந்து இருக்கு…?” என்று கேட்டவர்… மேலும்… “உனக்கு என்ன பிரச்சனை …?” என்றும் கேட்டார்…
மகளின் படிப்பு இந்த அளவுக்கு எல்லாம் மோசம் இல்லை என்று தெரிந்த தந்தையாக கேட்டார்… ப்ரியாவுமே பயம் எல்லாம் கொள்ளாது..
“ப்பா எனக்கு என்னவோ படிக்க இன்ரெஸ்ட் இல்லேப்பா…” என்று பதில் சொல்ல…
மகளின் இந்த பதிலில் யோசனையான சீனிவாசன்… “அப்போ எதில் இன்ரெஸ்ட்.?” என்று கேட்டவரிடம்..
ப்ரியா… “மேரஜ் செய்து செட்டில் ஆக தான் ப்பா…” என்று விட்டாள்..
இந்த பேச்சு நடக்கும் போது அனைவருமே அங்கு தான் இருந்தனர். தமிழ் மாறனும் அங்கு தான் இருந்தான்.. அப்போது யாருக்கும் திருமணம் நடந்து இருக்கவில்லை…
தங்கையின் இந்த பேச்சை கேட்ட தமிழ் மாறன் தான்.. “ உனக்கு என்ன வயசு ஆகுது என்று அதுக்குள்ள கல்யாணம் எல்லாம் பேசுற…?” என்று கேட்ட போது.
எந்த நீக்கு போக்கும் இல்லாது தேங்காயை உடைப்பது போல தன் காதலை விசயத்தை சொல்லி விட்டாள்..
“நான் ஒருத்தரை காதலிக்கிறேன்… அவருக்கு வீட்டில் பெண் பார்க்கிறாங்க… அவர் எங்க காதலை சொல்லி விட்டார்… அவங்க சொல்றது ஒன்னு தான் மகனுக்கு இப்போவே மேரஜ் செய்ய நினைக்கிறாங்க… அது என்னையா இருந்தா கூட ஒகே தான் சொல்லி இருக்காங்க…” என்ற ப்ரியாவின் பேச்சை குடும்பமே அதிர்ந்து கேட்டு கொண்டு இருந்தாலும் பின் அதே குடும்பம் பரவாயில்லை.. காதலித்து இழுத்து கொண்டு போகாது நம்ம கிட்ட சொல்லி கல்யாணம் செய்ய சொல்றாளே அது வரை பரவாயில்லை தான்..
அதோடு அந்த பையனும் நல்லவனாக தான் இருப்பான்.. தனக்கு பெண் பார்க்கும் போது காதலிக்கும் விசயத்தை சொல்லி இருக்கானே… பையனையும் பையன் வீட்டை பற்றியும் விசாரிப்போம்… நல்ல மாதிரியா இருந்தா கல்யாணம் செய்து வைத்து விடலாம்..
கல்யாணத்திற்க்கு பிறகு கூட படிக்கட்டும்.. என்று பேசி சொன்னது போல விசாரித்ததில் அனைத்துமே நல்ல மாதிரியாக இருக்க… ப்ரியாவின் திருமணம் அவள் தன் கல்லூரி படிப்பை முதல் வருடம் முடியும் முன்னவே முடிந்து விட..
அதற்க்கு அடுத்து படிக்க விடாது அடுத்த மாதமே மசக்கையில் ப்ரியா அவதிப்பட.. பின் என்ன…? முழு குடும்ப இஸ்த்திரியாகவே மாறி விட்டாள் ப்ரியா. அப்படி தாய் வீட்டில் மகள் ஆசைப்பட்டதை செய்ய துடிக்கும் போது ப்ரியா
தன் மகளின் மஞ்சள் நீராட்டு வைபோகத்திற்க்கு தன் தாய் வீட்டு சீராக இருபது சவரன் வைக்கனும் ம்மா… தாய் மாமன் சீரை பார்த்து என் மாமியார் வீட்டு மனுஷாளுங்க எல்லோரும் மூக்கு மேல விரலை வைக்கனும் ம்மா…” என்று மகளின் உரிமையில் தன் அம்மா பாக்கியலட்சுமியிடம் கேட்டாள்..
ஐந்து வருடத்திற்க்கு முன் தான் அந்த வீட்டின் குடும்ப தலைவர் தமிழ் மாறனின் தந்தை சீனிவாசன் இறந்து விட்டார்… அதில் இருந்து அந்த வீட்டின் நல்லது கெட்டது அனைத்தும் பார்ப்பது தமிழ் மாறன் தான்.. . சீனி வாசன் இருக்கும் போதே தமிழ் மாறன் தான் பார்த்தான். என்ன ஒன்று சீனிவாசன் எது செய்வது என்றாலும் கொஞ்சம் பார்த்து செய்வார்… அதோடு அவரின் சேமிப்பில் இருந்தும் கொஞ்சம் எடுத்து போட்டு தான் செய்வார்..
ஆனால் கடந்த இந்த ஐந்து ஆண்டுகளாக குடும்ப செலவுகள் கன்னா பின்னா என்று போகிறது.. இதோ இன்று மகள் மாப்பிள்ளை மஞ்சள் நீராட்டு பத்திரிக்கை வைக்க வந்து உள்ளனர்.. அதற்க்கு என்று அசைவு உணவாக காலையிலேயே கோழி கறி குழம்பி… மட்டன் குருமா… என்று இரண்டு ஆயிரம். மதியத்திற்க்கு மாமியார் சொன்னதை ஆர்டர் செய்ததில் ஆறு ஆயிரம்.. இப்போது போகும் போது வீட்டு பெண்ணை வெறும் கைய்யோடு அனுப்ப கூடாது என்று ஸ்வீட் காரம் அதில் குறைந்தது ஐந்து ஆயிரமாவது வைத்து கொடுத்து தான் அனுப்ப வேண்டும் என்று மாமியார் சொல்லி விடுவார்கல்.. ஒரே நாளில் இருபது ஆயிரம் செலவு செய்தால்,, என்ன தான் தன் கணவனுக்கு தொழிலில் நல்ல வருமானம் வந்த போதும் இது அதிகம் தானே…
இவர் தான் வீட்டின் ஒரே மகன் என்றால் கூட பரவாயில்லை… இவரோடு ஒரே வயது தான் சின்னவர்கள் விமலனும்.. வர்மனும்… அவர்களுக்கும் இந்த வீட்டின் பொறுப்பை எடுத்து கொள்ள வேண்டும் தானே..
கேட்டால் இது வரை மாதிரி கேட்டது இல்லை தான்..கணவன் கேட்க மாட்டான் தான் இருந்தும் மாதுரியின் மாமியார் பாக்கியலட்சுமி சாதுர்யமாக…
“உன் தம்பிங்க இரண்டு பேரும் மாச சம்பளக்காரன் தமிழு… அதோடு வர்மனுக்கு அவனை போலவே இரட்டை. குழந்தை.. அதுவும் இரண்டுமே பெண் குழந்தைங்க.. விமலன் பத்தி நான் சொல்ல தேவையில்லை. குழந்தை பிறக்கவே அத்தனை வைத்தியம் பார்த்து அத்தனை லட்சம் செலவு செய்த பின் இப்போ தான் ஒரு குழந்தை பிறந்து இருக்கு. அதுவும் பெண் குழந்தை.. அது என்னவோ பிறக்கும் போதே நோஞ்சானா பிறந்து.. மாசத்துக்கு பாதி நாள் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் விமலன் சம்பாத்தியம் பாதி ஆஸ்பிட்டலுக்கே போய் விடுது….” என்று சொல்ல..
தமிழ் மாறனோ… “ம்மா இத்தனை விளக்கம் நீங்க எனக்கு சொல்லுனுமா…? நான் தான் நல்லா சம்பாத்திக்கிறேன்.. என் குடும்பத்துக்கு நான் செய்யிறேன்… இதுல என்ன இருக்கு..?” என்று மகன் இந்த பேச்சில் பாக்கியலட்சுமி மகிழ்ந்தாலும்.. இனியும் வேறு பேச்சு வர கூடாது என்று முன் எச்சரிக்கையாக..
“இல்ல தமிழு… தம்பிங்க உன் கூட பிறந்த பிறப்பு.. நீ செய்வ.. ஆனா வெளியில் இருந்து வந்தவங்க அது போல நினைக்கனும் லே.. அதுக்கு தான்…” என்று தன்னை பார்த்து கொண்டே மகனின் சொல்ல.
தமிழ் மாறனோ… “ மாது அப்படி எல்லாம் நினைக்க மாட்டாம்மா..?” ஒரே வார்த்தையில் தன் பேச்சை முடித்து கொண்டு விடுவான்.. பாக்கியலட்சுமிக்கும் இது போதும் என்பது போல தன்னை ஒரு பார்வை பார்த்து கொண்டே செல்லும் தன் மாமியாரை மாதுரியினால் பதில் பார்வை கூட பார்க்க முடியாது தான் இருப்பாள்.. இது வரை மாதுரி கணவன் செய்வதை எதையும் தடுத்தது கிடையாது.
இப்போது கூட மாதுரி எதுவும் செய்யாதே என்று கணவனை தடுக்கவில்லையே.. செய்வதை பார்த்து செய்ங்க. இதை தானே சொன்னது…
பத்து வருடம் குடும்பம் நடத்திய ஒரு மனைவிக்கு கணவனிடம் இதை சொல்ல கூட உரிமை இல்லையா…? அதற்க்கு வாய் கூசாது.. படுக்கையில் தன் காரியத்தை சாதிப்பது போல பேசுவது என்ன நியாயம்…?
.