Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....1

  • Thread Author
அத்தியாயம்….1

தங்கள் முன் இருந்த அந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தையும் அதன் பின் எழுதி இருந்த அந்த மாப்பிள்ளையின் விவரங்களையும் தான்… பெண் வீட்டவர்கள் பார்த்தும் படித்தும் கொண்டு இருந்தனர்…. பெண் வீட்டவர்கள் என்றால் நம் நாயகியின் வீட்டவர்கள் தான்… ஆம் நம் நாயகியான வசீகரி வசிக்கும் வீடு தான் அது….

உயர் மத்திய வகுப்பினர்… அவளின் தாய் சுபத்ரா வங்கியில் வேலை பார்க்கிறார்… தந்தையான பார்த்திபன் ரெயில்வேயில் வேலை பார்க்கிறார்…. இருவருமே அரசு உத்தியோகத்தினர்… அதனால் தங்களின் இரண்டு பெண்ணும்.. ஒரு ஆணுமாக இருந்த தன் பிள்ளைகளை எந்த வசதி குறைவும் இல்லாது படிக்க வைக்க முடிந்தது..

தன் மூத்த பெண்ணான கீர்த்தனாவை … நல்ல தரமான கல்லூரியில் இன்ஞ்சினியர் படிக்க வைத்து அந்த கல்லூரியிலேயே கேம்பஸ்ஸில் செலக்ட் ஆகி ஐடியில் வேலை பார்க்க தொடங்கிய உடனே… கீர்த்தனாவுக்கு கல்யாணத்திற்க்கு இடம் பார்க்க தொடங்க…. பார்த்த முதல் இடமான கிஷோரோ முடிந்து விட்டது..

இப்போது அவர்களின் மூத்த பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் … அதனால் இப்போது தன் வேலையை விட்டு விட்டு முழு இல்லத்தரசியாக கீர்த்தனா இருக்கிறாள்…

பெற்றோருக்கு தன் மகள் வேலையை விட்டது வருத்தம் தான்.. சுபத்ரா அடிக்கடி சொல்லுவாள்…

“இன்னும் நான் வேலை பார்த்துட்டு இருக்கேன்.. நான் உங்க மூன்று பேரையும் பார்த்துட்டு வேலைக்கு போகலையா…? இந்த காலத்தில் எல்லாம் இரண்டு பேர் சம்பாதித்தா தான் நல்லா இருக்க முடியும்…” என்று.

ஆனால் அதற்க்கு கீர்த்தனா சொல்வது… “ ம்மா அப்போ நம்ம அப்பா என்ன தான் ரெயில்வேயில் வேலை பார்த்தாலுமே சம்பளம் கம்மி தான். அதோட உங்க வழி மூலமோ… அப்பா வழி மூலமோ சொத்து எல்லாம் இல்ல. நீங்களே தான் இடம் வாங்கி வீடு கட்ட வேண்டிய சூழல்… அதனால நீங்க போய் தான் ஆக வேண்டிய நிலை.

ஆனால் என் நிலை அப்படி இல்லையே… என் கணவரும் என் மச்சினரும் இரண்டே பசங்க…. இரண்டு பசங்களுக்கும் இரண்டு வீடு என் மாமனார் வைத்து இருக்கார்… உங்க மாப்பிள்ளை இரண்டரை லட்சம் சம்பாதிக்கிறார்… இத்தனை வைத்து இருக்க நாங்க ஏன் குழந்தைகளை வைத்து கொண்டு அல்லாடனும்….?” என்று கேட்ட கீர்த்தனாவின் கேள்வியும் நியாயமானது தான்.. இருந்துமே சுபத்ரா..

“அதுக்கு இல்லேடி…” என்று இழுக்கும் போதே… இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே அங்கே வந்த பார்த்திபன்..

“கீது சொல்றது தான் சரி… இவளை பத்தி கவலை பட ஒன்னுமே இல்ல. நாம இனி யோசிக்க வேண்டியது நம்ம சின்ன பொண்ணு வசீகராவை பத்தி தான்….” என்று சொல்லவும்.. சுபத்ராவின் முகமும்.. கணவனின் பேச்சில் கவலை கொண்டது.

அதன் விளைவு… “ நீங்க சொல்றதும் சரி தானுங்க… அது என்னவோ… தெரியல. இந்த பொண்ணு சின்ன வயசுல இருந்தே இங்கிலீஷ் என்றாலே இஞ்சி திண்ணது போல முகத்தை வெச்சிப்பா…”

தன் பெரிய மகளை காட்டி… “ இவள் படிக்கும் ஸ்கூல்ல தானே அவளை நாம சேர்த்தோம்… ஆனா அவளுக்கு இங்கிலீஷ் சுத்தமா வரவே இல்லேன்னு… அவள் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே அந்த ஸ்கூல் எச்.எம் நம்மை கூப்பிட்டு.. இந்த வருஷம் டீசி கொடுத்துடுறேன்..

நீங்க வேறு ஸ்கூல்ல உங்க பொண்ணை சேர்த்து விடுங்க. என்னை கேட்டா உங்க பொண்ணை நீங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்து விடுறது தான் நல்லது என்று நான் சொல்லுவேன்…ஏன்னா உங்க பொண்ணுக்கு தமிழ் மட்டும் தான் நல்லா வருதே…” என்று சொன்னவர்… சொன்னது போல அந்த வருடம் டிசியும் கொடுத்து விட.

அடுத்து வசீகாராவை அவர்கள் அந்த எச்.எம் சொன்னது போல கவர்மெண்ட் பள்ளியில் தான் தமிழ் வழியில் படிக்க வைக்கும் படி ஆகி விட்டது… வேறு வழி இல்லாது… காரணம் தனியார் ஆங்கில வழி பள்ளியில் சேர்க்க. அவர்கள் ஆங்கிலத்தில் ஒன்று இரண்டு கேள்விகள் கேட்க…

நம் வசீகராவோ… அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று புரியாது முழிக்க. பின் என்ன தங்களுக்கு விருப்பமே இல்லாது தான் அவர்கள் வசீகராவை அரசாங்க பள்ளியில் கற்பிக்கும் பள்ளியில் சேர்த்தனர்..

பின் அவர்களுக்கு வருத்தம் இருக்காதா…? தங்கள் வீட்டில் வேலை செய்யும் வள்ளியம்மா பெண்ணே தனியார் பள்ளியில் ஆங்கில வழி கல்வி பயிலும் போது தன் பெண் அரசாங்க பள்ளியில் தமிழ் வழி பயில்வது அவர்களுக்கு கெளரவ குறைச்சலாக தான் இருந்தது…

சொந்தங்கள் வேறு… “ என்ன நாங்களே எங்க பிள்ளைகளை எத்தனை கஷ்டப்பட்டாவது இங்கிலிஷ் மீடியத்தில் படிக்க வைக்கிறோம்…நீங்க இரண்டு பேரும் நல்லா தான் சம்பாதிக்கிறிங்க… உங்க சின்ன பொண்ணை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்து விட்டு இருக்கிங்க…

ஆனா முதல்ல இருந்தே உங்க சின்ன பெண் நிறம் கம்மியா பிறந்துட்டா என்று அவளை ஓரவஞ்சனையா தான் வளர்க்கிறிங்க… இது ரொம்ப தப்பு… சுபத்ரா.” என்று சுபத்ராவின் நாத்தனார்.. எப்போ எப்போ என்று பார்த்து கொண்டு இருந்தவர்.. அதற்க்கு வழியும் கிடைத்து விட… வைத்து பேசி விட்டார்..

பின் பார்த்திபன் தான்.. “ அக்கா நீங்க விசயம் தெரியாது பேசாதிங்க…” என்று சொன்னவர்.. பின் அனைத்தும் சொன்னதும்..

அதற்க்கும் அவர்.. “ பாரேன்… எங்களுக்கு வசதி கொடுக்கல… ஆனா எங்க பசங்க முத்து முத்தா படிக்குதுங்க… உங்களுக்கு ஒரு சம்பாத்தியத்துக்கு பதிலா இரண்டு சம்பாத்தியம்… அதுவும் கவர்மெண்ட் சம்பளம்… படிக்க வைக்க வசதி இருக்கு… ஆனா பாரு.. உங்க பசங்க மக்கா இருக்குங்க…”

இரு வழி சொந்தத்தில் இவர்கள் குடும்பம் மட்டும் தான்.. அடுத்த கட்ட நகர்வாக பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டு இருக்கின்றனர்.. அந்த பொறாமை இரு பக்க சொந்தத்திற்க்குமே உண்டு… அதன் தாக்கத்தில் பார்த்திபனின் சகோதரி இப்படி பேசி விட..

இத்தனை பேச்சையும்… அப்போது பன்னிரெண்டு வயதில் இருந்த கீர்த்தனா கேட்டுக் கொண்டு இருந்தவள்… தன் அத்தையின் இந்த பேச்சில்..

“நானும் தம்பியும் மக்கு கிடையாது… நாள் ஸ்கூல் பஸ்ட்… என் தம்பி க்ளாஸ் பஸ்ட்…” என்று சொன்னவள்… வீடு வந்ததும்.. தன் தங்கையை வைத்து அத்தனை பேச்சு பேசி விட்டாள்…

“இவளாள் எங்க மானமும் போகுது…” என்று….பெறோர்களும்… தன் பெரிய மகளின் பேச்சுக்கு அமைதியாக தான் இருந்தனர்.. அவர்களுக்குமே தன் சின்ன மகளாள் தங்கள் கெளரவம் குறைந்து விட்டதாக தான் நினைத்தனர்…

“நானும் நிறம்… இவரும் நிறம்… இவள் எப்படிம்மா.. நிறம் இல்லாது பிறந்தா….” என்று வசீகரி பிறந்த அன்றே சுபத்ரா தன் அன்னையிடம் கேட்டார்… அவர் தான்..

“என்ன பேச்சு இது… அதோட அந்த அளவுக்கு எல்லாம் கருப்பு கிடையாது.. மாநிறம் தான்….” என்று சொன்னார்..

அந்த பாட்டி சொன்னது போல் வசீகாரா மாநிறம் தான்… முகமும் அவள் பெயருக்கு ஏற்றது போல வசீகரமாக தான் இருக்கும்..

ஆனால் அழகு என்றால் வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்று நினைக்கும் இந்த உலகம்.. அவளின் அந்த களையான முக வடிவையோ… உயரத்தையோ… வளர வளர.. அவளின் உடல் வடிவமானது… கல் சிலை போல வடிவாக இருப்பதையோ கவனிக்க மறந்து விட்டனர்..

அதுவும் அவளின் கூந்தல் நீண்டு அத்தனை அடர்த்தியாக இருக்கும்.. ஒரு கை கொண்டு எல்லாம் அவளின் கூந்தலை பிடிக்க முடியாது… அத்தனை அடர்த்தியாக இருக்கும்.. ஆனால் அவளின் நிறம் பெரியவளை விட கம்மியாக போனதில், நம் வசீகரியின் இத்தனை சிறப்பும் யாரின் கண்ணுக்கும் தெரியாது போயிற்று.

அதோடு ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே அறிவாளி என்று நினைக்கும் நம் சமூகத்தில் எம். ஏ தமிழ் லிட்ரேச்சர் படிப்பானது… அவளை மக்காக தான் பார்க்க வைத்தது..

ஒரு வேளை கொண்டவன் கண்ணுக்கு மட்டும் தான் நம் நாயகியின் அழகும், அறிவும் புலப்படுமோ பார்க்கலாம்.. ஆனால் அதற்க்கு முன்பு…. இவள் பி.ஏ படித்து முடித்ததுமே கணவன் சொன்ன.

“நம்ம பெரிய பெண் பத்தி எல்லாம் கவலை படாதே… முதல்ல சின்ன பெண்ணுக்கு இடம் பார்க்க ஆரம்பிக்கலாம்…பெரிய பெண் போல முதல் இடமே முடிந்து விடாது… இவளுக்கு கொஞ்சம் அலைய தான் வேண்டி இருக்கும்…” என்ற கணவன் கருத்துமே சுபத்ராவுக்கு இருந்ததால், உடனே வசீகராவுக்கு இடம் பார்க்க தொடங்கி விட்டனர் தான்..

ஆனால் அவர்கள் சொன்னது போல் தான்.. கீர்த்தனா போல் எல்லாம் இடம் அமைந்து விடவில்லை… ஒன்று போல் மாப்பிள்ளை வீட்டவர்கள் சொன்னது இதை தான்.

“இந்த படிப்புக்கு எந்த வேலை கிடைக்கும்… நாங்க ஐடியில் வேலை பார்க்கும் பெண்ணை தான் எதிர் பார்க்கிறோம்…” என்று தான்..

இதோ இப்போது தங்கள் முன் இருக்கும் இந்த மாப்பிள்ளை வீட்டவர்கள் மட்டும் தான்.. “ பெண் வேலைக்கு போவது.. போகாதது.. அதே போல்… என்ன வேலைக்கு போவது எல்லாம் பெண்ணின் விருப்பம்…” என்று சொன்ன இடம்..

அதனால் தான் இந்த இடத்தையே முடித்து விடலாமா என்று முடிவு செய்ய தன் மூத்த மகள் மாப்பிள்ளையையுமே வீட்டிற்க்கு வர வழைத்து இருந்தனர்… வசீகராவின் பெற்றோர்…

முதலில் சுபத்ரா தான் வீட்டின் மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்க வேண்டி… “ நீங்க என்ன சொல்றிங்க மாப்பிள்ளை…?” என்று கிஷோரிடம் கேட்டு பேச்சை ஆரம்பித்தார்…

அதற்க்கு கிஷோர்… “ இல்ல அத்தை நீங்க கீர்த்தனாவுக்கு போடுவது போல தானே நூறு பவுன் போடுவீங்க…. அதுக்கு கொஞ்சம் பெரிய இடமாவே பார்க்கலாமே…” என்று சொல்லி தன் பேச்சை இழுத்து நிறுத்தினான்…

அதற்க்கு பார்த்திபன்… “அப்படி பார்க்காம இல்லையே மாப்பிள்ளை… இந்த மூன்று வருஷமா.. உங்களை போல தானே பார்த்தோம்.. ஆனால் அவங்க வசீயின் படிப்பை காரணம் காட்டி வேண்டாம் என்று சொல்லுறாங்க.. அவளுக்கு முடித்து விட்டு தானே.. இவனுக்கு பண்ணனும்…”

தன் இரு பெண்களுக்கும் நடுவில் பிறந்த தன் மகன் ஸ்ரீ காந்தை காட்டி சொன்னார்…

இத்தனை நேரம் அமைதியாக இருந்த கீர்த்தனா.. தன் தந்தையிடம்.. “ நீங்க இவரை போல மாப்பிள்ளை வரனும் என்றால் உங்க சின்ன பெண் என்னை போல வெள்ளையா இருக்கனும்.. படிச்சும் இருந்து இருக்கனும்…” என்று சொன்னாள்..

கீர்த்தனா நிறத்தில் வெள்ளை தான்.. ஆனால் முக வடிவம் என்பது நம் வசீகராவை போல் எல்லாம் வசியம் செய்யாது.. ஆனால் வெள்ளையாக இருந்தால் அழகாக இருப்பார்கள் என்ற சொல்லுக்கு ஏற்ப… அனைவரும்… உன் பெரிய பெண் வெள்ளையா அழகா இருக்கிறாள்…. நல்லா படிக்கிறா…. உங்க சின்ன பெண் இவளில் பாதி இருந்து இருக்கலாம்…” என்று அனைவரும் சொல்லி சொல்லி…. கீர்த்தனாவின் மனம் ஆனது… நான் தான் அழகு அறிவாளி…. என்ற எண்ணம் அவள் மனதில் ஆழம் பதிந்து விட்டது….

அவளின் இந்த எண்ணத்திற்க்கு அவளின் அன்னை தந்தையுமே தூபம் ஏற்ற. அது வளர்ந்து… என் வசதி போல் எல்லாம் அவளுக்கு வாழ்க்கை அமையுமா.. எல்லாத்திலுமே என்னை விட கீழ் என்றால் வசதி வாய்ப்புமே கீழாகா தானே வாய்க்கும்… அந்த எண்ணத்தில் இப்படி சொன்னவள்..

கூடவே…. “முதல்ல இந்த மாப்பிள்ளைக்கு நம்ம வசீயை பிடிச்சு இருக்கனும் என்று நினைங்க. ஏன்னா மத்ததில் எப்படியோ… ஆனா பார்க்க மாப்பிள்ளை போட்டாவில் அழகா இருக்காரு..” என்று சொல்லி கீர்த்தனா கிஷோரின் முறைப்பை வாங்கி கொண்டாள்..

கீர்த்தனாவின் இந்த பேச்சுக்கு இத்தனை நேரமும்… யாரோ யாரின் திருமணத்தை பற்றியோ பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது போல் தன் கை பேசியிலேயே பார்வையை பதித்து கொண்டு இருந்த ஸ்ரீ காந்த்….

கீர்த்தனாவின் இந்த பேச்சுக்கு மட்டும்… “ கூட ஐம்பது சவரன் போடுறது என்றாலும் போட்டுட்டு இந்த இடத்தையே முடிக்க பாருங்க..” என்று விட்டான்..

அவனுக்கு தங்கைக்கு முடிந்த பின் தான் தனக்கு என்றால், இப்போதே இருபத்தியெட்டு வயது… இன்னும் அவளுக்கே பார்த்துக் கொண்டு இருந்தால், தனக்கு எப்போது பார்ப்பது… அவனுக்கு அவன் கவலை…

இது தான் ஸ்ரீ காந்தின் சுபாவம்.. அவன் தங்கையை கீர்த்தனாவை போல் எல்லாம் மட்டம் தட்டிக் கொண்டு இருக்க மாட்டான்.. ஆனால் தனக்கு ஒன்னு என்றால் பேசி விடுவான்.. இதோ இவன் அந்த ஐம்பது சவரன் போடுவது போல் இருந்தால் இப்படி சொல்லி இருந்து இருக்க மாட்டான்..

ஆனால் அவன் சொன்ன அந்த ஐம்பது சவரன் அதிகம் போடுவது என்ற பேச்சுக்கு கீர்த்தனா சும்மா இருப்பாளா…? “அது எப்படி என்னை விட அதிகமா அவளுக்கு போட முடியும்…?” என்று கேட்க.

அதற்க்கும் ஸ்ரீ காந்த்… “ அது எல்லாம் போடலாம் போடலாம்… உன்னையும் என்னையும் பிரவேட் ஸ்கூல்.. பிரவேட் காலேஜ் சேர்த்து எத்தனை பணம் செலவு ஆச்சு… அது எல்லாம் சேர்த்து அவளுக்கு போடலாம்….” என்று சொல்ல… அதற்க்கும் கீர்த்தனா ஏதோ சொல்ல வந்தாள் தான்..

ஆனால் சுபத்ரா..” உங்க இரண்டு பேர் சண்டையை அப்புறம் தான் போடுங்கலே….” என்று அவர்களை கண்டித்தவர்..

பின்… “ எனக்குமே இந்த இடம் முடிச்சிடலாம் என்று தான் இருக்கு… ஆனாலுமே இந்த காலத்தில் இத்தனை பசங்க. அதுவும் ஒன்னா கூட்டு குடும்பமா இருப்பது…. நம்ம வசீ எப்படி சமாளிப்பா….?” என்று அவர் கவலை பட.

இங்கு மாப்பிள்ளை வீட்டில் நம் மாப்பிள்ளையான ஜெயேந்திரன் அவன் படுக்கையில் படுத்து கொண்டு நம் நாயகியான வசீகராவின் புகைப்படத்தை பார்த்து கொண்டு இருந்தான்….








 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
240
அருமையான ஆரம்பம் ❤️
சொந்த குடும்பமே வசீயை தாழ்வா தான் பார்க்குறாங்க அப்போ மத்தவங்களை சொல்லி என்ன 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
இவங்க எண்ணத்துக்கு கீர்த்தனாவை விட நல்ல லைப் அமையணும் வசீக்கு 😌
 
Top