அத்தியாயம்…2
ஜெயேந்திரனுக்கு என்று பார்த்த முதல் பெண் வசீகரா தான்…திருமணத்திற்க்கு என்று பார்க்கும் முதல் பெண் என்பதினால் ஜெயேந்திரனுக்கு சின்ன வயதாக இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம்… அது எல்லாம் முப்பது நிறைவு பெற்று விட்ட வயது தான் அவனுக்கு ஆகிறது…
அது என்னவோ இது வரை அவன் அன்னையும் தந்தையும் “பெண் பார்க்கட்டுமா…?” என்று கேட்கும் போது எல்லாம் …இவன்… “ இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் ம்மா ப்பா….” என்று மூன்று வருடங்களாக சொல்லி கொண்டு வந்தவன்..
சென்ற மாதமும் அவனின் பிறந்த நாள் அன்று அவனின் அன்னை கெளசல்யா … “என்னப்பா வயசு முப்பது ஆகிடுச்சு… இப்போவாவது உனக்கு பெண் பார்க்கட்டும்மா இல்ல அப்புறம் பார்க்கட்டுமா….?” என்று அவன் நெற்றியில் கோபமாக திருநீரை இட்ட வாறு கேட்ட அன்னையிடம் தன் நெற்றியை குனிந்து தன் மூக்கின் மீது கை வைத்து பணிவுடன் அன்னை இட்ட அந்த திருநீரை வாங்கி கொண்டவன்…
பின் சிரித்த வாறே நிமிர்ந்து தன் அன்னையை பார்த்து… “இல்லேம்மா இனி பார்க்க ஆரம்பித்து விடுங்க….” என்று கூறின்னான்.
ஜெயேந்திரனின் அந்த பேச்சை அவனின் அன்னை கெளசல்யாவே நம்பாது மகனை பார்க்கும் போது, அவனின் இரண்டு அண்ணன்களான தீபக் ராஜ், மாதவனும் அண்ணிகளான ஜெயந்தி, கோமதியுமே நம்பாது தான் அவனை பார்த்தார்கள்…
இவனின் பிறந்த நாளுக்கு என்று வந்து இருந்த அவனின் இரண்டு சகோதரியான வித்யா அவர் கணவன் ஸ்ரீதர், அடுத்த அக்காவான சங்கரியும் அவள் கணவன் ராகவ்வும் அவனின் இந்த பேச்சை நம்பினால் தான் ஆச்சரியமே..
அவன் சொன்னது உண்மை தானே. என்று தெளிவு படுத்திக் கொள்ள வேண்டி அவனின் தந்தையான கோதண்ட ராமன்..
“உண்மையாவா சொல்ற. பெண் பார்க்கலாமா..?” என்று கேட்ட அவனின் தந்தையை ஜெயேந்திரன் இப்போது முறைத்து பார்த்தவன்.
"இப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை…? பெண் பார்க்கட்டுமா..? பார்க்கட்டுமா.? என்று கேட்டுட்டே இருந்திங்க… நான் கொஞ்ச நாள் போகட்டும் என்று சொன்ன போது என்னை திட்டுனிங்க… இப்போ சரி நாமும் மேரஜ் லைப்ல போகலாம் என்று பார்க்க சொன்னா. என்னவோ நான் சொல்ல கூடாததை சொன்னது போல மொத்த குடும்பமும் என்னை இப்படி பார்த்து வைக்கிறிங்க….” என்று கேட்டவன்..
பின் ஒரு மாதிரி சிரித்து கொண்டே… “ ஒரு வேலை நான் கல்யாணத்தை தள்ளி போட்டதினால.. என் உடம்பு மேரஜ் லைப்புக்கு பிட் இல்ல… “ என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே கெளசல்யா அவனின் வாயிலேயே ஒரு அடி வைத்து விட்டு..
“பிறந்த நாள் அதுவுமா என்ன பேச்சு பேசுற ஜெய்…” என்று கோபமாக கேட்டவரின் தோள் பற்றி கொண்டவன் கை மீது அவருமே கை பதித்தவர்..
பின்…” விளையாட்டுக்கு கூட இது போல பேசாதே ஜெய்….” என்று கண்டிப்புடன் சொன்னவரிடம்.
“சரிம்மா சரி சாரி இனி இது போல பேச மாட்டேன் செரிங்கலா…?” என்று மன்னிப்பு கேட்டவன். அன்னையின் முன் தோப்புகரணத்தையும் போட ஆரம்பித்து விட..
அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை ஸ்ரீதர்…. “ மச்சான் இப்போவே பொண்டாட்டிக்கு முன் தோப்புகரணம் போடுவதை பிராக்ட்டிஸ் எடுக்கிறார் போல…” என்று ஜெயேந்திரன் காலை வாரி விட நினைக்க.
நம் ஜெயேந்திரனோ…. “ நீங்க தினம் தினம் போடுவதை ஒரு நாள் நான் பார்த்தாலே நான் கத்துக்க மாட்டேன்..” என்று சொல்லி தன் மாமனின் காலை வாரினான்..
இது தான் ஜெயேந்திரனின் குடும்பம்…. அதற்க்கு என்று சண்டையே இல்லாத குடும்பம்.. என்று எல்லாம் சொல்லி விட முடியாது.. இங்குமே சின்ன சின்ன சண்டைகள் சச்சரவுகள் வரும் தான்..
ஆனால் அதை அந்த வீட்டு பெரியவர்கள் வளர விட மாட்டார்கள்… என்ன ஏது என்று கேட்டு தெளிவு படுத்தி விடுவார்கள்.. முடிந்த அளவுக்கு அனைவரையும் ஒன்றாக நடத்துவார்கள்.. அப்படி இருந்தாலே… பெரும் பாலும் பிரச்சனை வராது தானே…
இதோ ஜெயேந்திரன் தன் பிறந்த நாளான ஒரு மாதம் முன் தனக்கு பெண் பார்க்க அனுமதி கொடுத்து விட.. கெளசல்யா முதல் வேலையாக அன்றே மகனின் ஜாதகத்தை எடுத்து ஜாதகம் பார்த்து விட..
பார்த்த ஜோதிடர்… “இன்னும் மூன்று மாதத்தில் இந்த ஜாதகருக்கு கல்யாணம் முடிந்து விடும்….” என்று அவர் அடித்து கூறிய அந்த பேச்சில் …
கெளசல்யாவோ… “இன்னும் நாம பெண்ணே பார்க்க ஆரம்பிக்கல….இவர் என்ன மூன்று மாதத்தில் கல்யாணம் முடிந்து விடும் என்று சொல்றார்..” என்று தன் கணவரிடம் சொல்லி கொண்டே வந்தவர்.
போகும் வழியில் ஆஞ்சநேயர் கோயிலை பார்த்த கெளசல்யா. “என்னங்க இன்னைக்கு நம்ம ஜெய்யோட பிறந்த நாள்… அதோட அவன் கல்யாணத்திற்க்கு என்று அவன் ஜாதகம் பார்த்துட்டு வந்து இருக்கோம்… நம்ம ஜெய்க்கு ஆஞ்சநேயர் என்றால் ரொம்ப பிடிக்கும் அவன் பேருக்கு ஒரு அர்ச்சணை பண்ணிட்டு வீட்டிற்க்கு போகலாமே…” என்று சொன்ன தன் மனைவியின் பேச்சுக்கு தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினாலும்..
“கல்யாணம் நடக்கனும் என்று நீ இந்த சாமீயை கும்பிடனும் என்று சொல்றியே கெளசல்யா….?” என்று கேட்டு விட்டு தன் மனைவியிடம் ஒரு முறைப்பையும் வாங்கி கொண்டு சன்னிதி வந்தவர்.. மனைவி சொன்னது போல் ஜெயேந்திரன் பெயருக்கு அர்ச்சனை செய்து விட்டு கோயிலை சுற்றி முடித்து சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்லலாம் என்று அமர்ந்த போது தான்…
இவரின் மூத்த மகனுக்கு பெண் பார்த்து கொடுத்த தரகர் அங்கு வந்தது… இப்போது எல்லாம் பெரும்பாலோன குடும்பங்களில் பெண்பார்க்கும் படலம் இது போல கோயிலில் தாமே நடக்கிறது..
அன்று அது போலான ஒரு நிகழ்வு தான் அங்கு நடந்து கொண்டு இருந்தது… அந்த வரனை பார்த்து முடித்த தரகர் அவர் தான் என்பதினால் அவருமே அங்கு வந்து இருந்தார்…
அவர் வந்த விசயமும் நல்ல மாதிரியாகவே நடந்து முடிந்து விட்டதில் மகிழ்ச்சியாக அமர. அப்போது தான் அவர் ஜெயேந்திரனுன் அன்னை தந்தையை பார்த்தது…
பார்த்ததுமே தரகர் தன் வேலையை தொடங்கி விட்டார்.. “உங்க கடைசி மகனுக்கு இன்னும் பார்க்க ஆர்ம்பிக்கலையா….?” என்று கேட்டு…
கெளசல்யாவுக்கு இதுவே நல்ல சகுனமாகவே பட்டு விட… அப்போதே தன் கையில் இருந்த தன் மகனின் ஜாதகத்தை கொடுத்து..
“இப்போ தான் ஜாதகம் பார்த்துட்டு வந்தோம் தரகரே… மகனுக்கு குரு பலன் வந்துடுச்சி மூன்று மாசத்தில் முடிஞ்சிடும் என்று தான் அவர் சொன்னார்….” என்று மகிழ்வுடன் சொன்ன கெளசல்யாவின் கரத்தில் இருந்து ஜெயேந்திரனின் ஜாதகத்தை வாங்கி கொண்ட தரகரும்…
ஜெயேந்திரனின் ஜாதகத்தை பார்க்க தொடங்கினார்….அதை பார்த்த கோதண்ட ராமன்…
“உங்களுக்கு ஜாதகம் பார்க்க தெரியுமா….?” என்று கேட்டவரிடம்… அந்த தரகர்…
“இந்த கல்யாண தரகர் தொழிலை இருபத்தி ஐந்து வருஷமா பார்க்கிறேன் சார்….ஜாதகத்தை பார்த்து பார்த்து நானுமே கத்திக்கிட்டேன்… ஏன்னா மாப்பிள்ளை வீட்டவங்க கிட்ட என் கிட்ட இருக்கும் எல்லா பெண் ஜாதகத்தையும் கொடுத்து விட முடியாது…
பொருத்தம் வரும் ராசி நட்சத்திரம் இதை பார்த்து தான் கொடுக்க முடியும்… அதே போல் தான் பெண் வீட்டவங்க கிட்டேயும் பார்த்து கொடுக்கனும்.. அப்படி கத்திக்கிட்டது தான்….” என்று கோதண்ட ராமனிடம் சொன்னவர் பின்…
இருவரையும் பொதுவாக பார்த்து…. “ ஆமா குருபலன் வந்துடுச்சி தான்… உங்க மகன் ஜாதகத்தோடு சேரும் ஜாதகமா என் கிட்ட ஒரு பெண் ஜாதகம் தான் இருக்கு…” என்று சொன்னவர்..
பின்… “ ஆனால்…” என்று இழுத்து நிறுத்தியவரிடம்.. இருவரும்.
“என்ன ஆனா….?” என்று கேட்க..
அதற்க்கு அந்த தரகர்… “ இல்ல உங்க பெரிய மகனுக்கு கல்யாணம் முடிக்கும் வைக்கும் போது உங்க சின்ன மகனை பார்த்து இருக்கேன்.. நல்லா சிவப்பா அழகா இருப்பாரு… ஆனா என் கிட்ட இருக்கும் இந்த பெண் நிறம் கம்மி தான்…” என்று சொன்னதும் கணவன் மனைவி இருவருமே…
“எங்களுக்கு பெண் லட்சணமா இருக்கனும் தரகரே… நிறமா இருந்தா தான் அழகு என்று எல்லாம் எங்களுக்கு கிடையாது… உங்க கிட்ட இருக்கும் அந்த பெண் ஜாதகமே கொடுங்க… போட்டோ இருந்தாலுமே கொடுங்க….” என்றும் கூற..
உடனே அந்த தரகர் தன் கையில் இருந்த வசீகராவின் ஜாதகமும் கூடவே அவரிடம் இருந்த புகைப்படத்தையுமே சேர்த்து கொடுத்தார்…
கொடுக்கும் போதே…. “ மூன்று வருஷமா பார்க்கிறாங்க. ஆனா முடியல… படிப்பும் எம்.பி.ஏ தமிழ் லிட்சரேச்சர்…” என்று சொன்னவரிடம் கோதண்ட ராமன்..
“அந்த படிப்புக்கு என்ன குறச்சல்…?” என்று கேட்டுக் கொண்டே தான் அவர் வசீகராவின் ஜாதகத்தையும் புகைப்படத்தையும் வாங்கிக் கொண்டவர்.
ஜாதகம் பின் இருக்கும் மற்ற விவரங்களை படிக்க தான் வைத்து கொண்டு புகைப்படத்தை தன் மனைவியிடம் கொடுத்தார்.
கெளசல்யாவோ முதலில் இருந்த உற்சாகம் இல்லாது தான் அந்த புகைப்படத்தை வாங்கினார்.
காரணம் தரகர் சொன்ன மூன்று வருடங்களாக இந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் இன்னும் முடியவில்லை என்றதில்..
நிறம் அழகு கிடையாது என்று சொன்னவர்… பெண் லட்சணமாக இருக்காதோ என்று நினைத்து தான் அவர் கையில் வாங்கினார்.. பார்த்ததும் ஏனோ தானோ என்று தான்..
ஆனால் பார்த்த நொடி….” இத்தனை அழகான பெண்ணுக்கு ஏன் சட்டென்று முடியவில்லை….” என்று தான் நினைக்க தோன்றியது…முற்காலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்..
ஒருவன் மனைவியை இன்னொருவர் கட்ட முடியாது என்று…நம் ஜெயேந்திரன் மனைவியாக வசீகரி இருக்கும் போது மற்றவர்களை எப்படி அவள் கவர்ந்து இழுப்பாள்…?
மனைவியின் முகபாவனையில் கோதண்ட ராமனும் தன் மனைவியின் கையில் இருந்த புகைபடத்தை பார்த்தார்.. அவருக்கும் பிடித்தது தான்…
ஆனால் அனவரையும் விட மகனுக்கு தான் பிடிக்க வேண்டும்.. அது தானே முக்கியம்… அதை தான் கோதண்ட ராமன் மனைவியிடம் சொன்னது…
“பெண் விவரம் எல்லாம் பார்த்துட்டேன் கெளசல்யா.. எல்லாம் ஒகே தான்… நம்ம மகன் கிட்ட இந்த போடோவை கொடுப்போம்… அவனுக்கு பிடித்து இருந்தால் மற்றதை பின் பேசலாம்…” என்று சொன்னவர்…தரகரிடமும் அதையே தான் சொன்னார்….
போகும் வழியில் பொருத்தம் பார்த்து விட்டு செல்லலாம்.. தரகர் பார்த்து சொன்னார் தான். இருந்துமே முழு ஜோதிடம் தெரிந்தவர்களிடம் பார்த்து விடுவது நல்லது தானே.
பின் மகனுக்கு பிடித்து விட்டு ஜாதகம் பொருத்தம் இல்லை என்று சொன்னால், அது நன்றாக இருக்காது என்று நினைத்து மீண்டும் முன் சென்ற ஜோதிடரிடம் செல்ல..
அவருக்குமே தன் வாக்கு பலிப்பதில் மகிழ்ச்சி தானே….
“என்னம்மா நான் மூன்று மாசத்தில் கல்யாணம் முடிந்து விடும் என்று சொன்ன போது நம்பாது என்னை பார்த்துட்டு போனிங்க.. இப்போ ஒரு மணி நேரத்திற்க்குள்ளேயே ஒரு ஜாதகத்தை கொண்டுட்டு வர்றிங்க….?” என்று சொல்லி வாங்கியவர்..
பின் சிறிது நேரம் ஜெயேந்திரன் வசீகராவின் ஜாதக கட்டத்தை மாறி மாறி பார்த்தவர் முகத்தில் முடிவில் ஒரு திருப்தியான பாவனை..
அவரின் அந்த முகபாவத்திலேயே கெளசல்யாவும், கோதண்ட ராமனுக்கும் புரிந்து விட்டது.. ஜாதகம் பொருந்தி விட்டது என்பதை… அவருமே அதையே தான் கூறினார்.
கூடுதல் தகவலாக.. “ இரண்டு பேருமே அப்படி மனசு ஒத்தி வாழ்வாங்கம்மா….” என்றும் சேர்த்து கூறியவரின் பேச்சில் அன்று மகிழ்ந்து வீடு வர.
பின் அன்று இரவே அனைவரும் சாப்பிட்ட பின் அனைத்து விவரங்களும் சொல்லி தங்களிடம் இருந்த வசீகராவின் ஜாதகம் போட்டோவை அங்கு இருந்த டீப்பாவின் மீது வைத்தார்…
அது ஒருவர் மாற்றி ஒருவர் கையில் சென்று கடைசியாக தான் ஜெயேந்திரன் கைக்கு வசீகராவின் புகைப்படமும், ஜாதகமும் அவனின் கைக்கு வந்தது….
ஜெயேந்திரனும் அவசரம் காட்டவில்லை… அவன் முதலில் பார்த்தது வசீகராவின் விவரங்களை தான்.. பின் தான் புகைப்படத்தை கையில் எடுத்தது.
அவன் புகைப்படத்தை பார்க்கும் போதே அவனின் பெரிய அண்ணி… “ என்னப்பா எங்க முன்னவே பார்க்குறிங்க.. உங்க ரூமுக்கு போய் பாருங்க தம்பி.. நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்….’ என்று கிண்டல் பேசியவளிடம்…
ஜெயேந்திரன்… “ பிடித்து இருந்தால் ரூமுக்கு தான் கொண்டு போக போறேன் அண்ணி….” என்று சொல்லி தான் வசீகராவின் புகைப்படத்தை ஜெயேந்திரன் பார்த்தது… உண்மையில் பார்த்த நொடியே அவனை வசியம் செய்து விட்டாள் தான்..
கைய்யோடு புகைப்படத்தை ஜெயேந்திரன் தன் அறைக்கு கொண்டு சென்று… அனைவருக்கும் தனக்கு பெண்ணை பிடித்து இருக்கிறது என்பதை சொல்லி விட..
அடுத்து கெளசல்யாவும் கோதண்ட ராமனும் அந்த தரகர் மூலம்… பெண் பிடித்து இருப்பதை செய்தி அனுப்பி விட.
தாங்கள் செய்தி அனுப்பி ஒரு வாரம் சென்று கூட. பெண் வீட்டவர்களிடம் இருந்து எந்த ஒரு செய்தியும் வராது போனதில், கெளசல்யா தான்.
“என்னங்க இது இன்னும் அவங்க கிட்ட இருந்து ஒரு செய்தியும் வரல.? நம்ம ஜெய்யுக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சி இருக்குங்க… அவன் முகமே… அத்தனை பிரகாசமா இருக்கு.. இரண்டு நாள் முன்னாடி வேறு… பெண் வீட்டில் எப்போ பெண் பார்க்க வர சொன்னாங்க… என்று வேறு கேட்கிறான்….எனக்கு தான் என்ன சொல்வது என்று தெரியாது.. அவங்க நல்ல நாள் பார்த்து தான் ஜாதகமே பார்ப்பாங்கலா என்று ஒரு மாதிரி சொல்லி சமாளித்து வைத்து இருக்கேன்….” என்று ஒரு மாதரியான குரலில் சொன்ன மனைவியிடம்…
“கவலை படாதே கெளசல்யா… எல்லாம் நல்ல செய்தியா தான் வரும்…” என்று சொன்ன கோதண்ட ராமனுக்குமே என்ன டா இது…. சும்மா இருந்தவன் மனதை பெண்ணின் போட்டோவை காட்டி கெடுத்து விட்டோமோ என்று தான் இருந்தட்து..
கூடவே என் மகனுக்கு என்ன குறை…. பார்க்க நன்றாக இருக்கிறான்.. ஆம் அவர் நினைப்பது போல் ஜெயேந்திரன் ஆண் அழகன் போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு தான் அவனின் உயரம் ஆகட்டும் தினம் தினம் உடற்பயிற்ச்சி செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்து கொண்டு அவ்வளவு அழகாக இருப்பான். நிறம் இவர்கள் பெரியதாக நினைக்க மாட்டார்கள் தான்..
ஆனா அவனை பார்ப்பவர்கள் அதை தான் பெரியதாக கூறுவார்கள்… என்ன இது இத்தனை நிறமா.. அதுவும் வெளியில் சுத்திட்டு வர பையன் இருப்பது ஆச்சரியம் தான் என்று அவர்கள் சொல்வது போல் தான். வெளியில் சென்று விட்டு வீட்டிற்க்கு வந்தால் முகத்தில் வரும் வியர்வை தொட்டு முகம் அலம்பி விட்டு டவளை கொண்டு அவன் முகத்தை துடைக்கும் போதே முகம் சிவந்து இருக்கும்.
அதுவும் அவன் அந்த சிவந்த முகத்திற்க்கு எதிர் பதமாக கரிய நிறத்தில் அடர்த்தியாக இருக்கு அந்த மீசை அவனின் அழகுக்கு இன்னுமே அழகூட்டும் என்று தான் சொல்ல வேண்டும்…
படிப்பு எம். காம் படித்து ஒரு தனியார் கம்பெனியில் ஐம்பது ஆயிரம் சம்பளம் வாங்குகிறான் என்று கோதண்ட ராமன் மகனின் வருமானத்தை பற்றி நினைக்கும் போதே.
தன் மனைவியிடம்… “ கெளசல்யா ஜெய் சம்பளம் கம்மி என்று நினச்சி தான் அவங்க கிட்ட இருந்து இன்னும் பதில் வரலையா….?” என்று கேட்டவரிடம்…
கெளசல்யா…. “அவன் வேலை பார்த்து சம்பாதிப்பதை விட அவன் டியூஷன் எடுப்பதில் வரும் வருமானம் ஒன்னரை லட்சத்துக்கு மேலே ஆச்சே… அவன் வருமானத்திற்க்கு என்ன குறை…?” என்று கேட்டவர் பின் அவரே கணவனை ஒரு மாதிரியாக பார்க்க…
அப்போது கோதண்ட ராமனும் மனைவியை அந்த பார்வை தான் பார்த்து கொண்டு இருந்தார்.. காரணம் கெளசல்யாவுக்கு இந்த கண் திருஷ்ட்டி படுவது இதில் எல்லாம் நம்பிக்கை மிக அதிகம்.
அதன் தொட்டு மகனின் விவரங்கள் எழுதும் போது… இது எல்லாம் நம்ம சொந்தக்காரனுங்க கூட பார்ப்பாங்க. அதனால அவன் வேலை பார்க்கும் சம்பளம் மட்டும் போடுங்க போதும்… இடம் பிடித்தால் நாம பெண் வீட்டவர்கள் கிட்ட சொல்லிக்கலாம்….” என்று சொல்லி விட்டார்…
இப்போது அது இருவருக்குமே நியாபகத்தில் வந்தது.. கோதண்ட ராமன்…
“அந்த பெண்ணின் அம்மா அப்பா எல்லாம் நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருக்கிறாங்க.. இரண்டு சொந்த வீடு என்று போட்டு இருந்தது… அந்த தரகர் கூட சொன்னாரே… இந்த பெண் அக்காவுக்கு நூறு சவரன் போட்டாங்க என்று.. அப்போ அந்த பெண்ணை நல்ல இடத்தில் தான் கட்டி கொடுத்து இருப்பாங்க.
இந்த பெண்ணுக்குமே அத்தனை சவரன் போடலாம்… அப்படி இருக்க இத்தனை குறைந்த சம்பளம் வாங்குறவனுக்கு ஏன் கொடுக்கனும் என்று யோசித்து இருக்கலாம் தானே….?” என்று அவர் சொன்னது அனைத்தும் வசீகரா வீட்டில் இருந்து கேட்டது போல் தான் உண்மையை சொன்னார்.
பின்… “ இதில் இத்தனை பேருக்கு ஒரே வீடு.. இப்படி யோசித்து இருந்து இருக்கலாம். நம்ம பசங்க எல்லாம் அவங்க அவங்க சம்பாதியத்தில் சேர்த்து தனி தனியா சொத்து வாங்கி போட்டது எல்லாம் அவங்களுக்கு தெரியது தானே…?” என்று கேட்ட கணவரின் கேள்வியில் இருந்த நியாயத்தில்.
கெளசல்யா ,… “ ஆமாங்க இது எல்லாம் நாம யோசிக்கலையே… நாம மத்த இரண்டு பசங்க வாங்கி போட்ட இடத்தை சொல்ல தேவை இல்லை… ஆனால் ஜெய் இரண்டு இடத்தில். அதுவும் முக்கியமான இடத்தில் இடம் வாங்கி போட்டு இருக்கான்.. கூட அவன் வேலை பார்த்து சம்பாதிப்பது கம்மி தான்.. ஆனா ட்யூஷனின் இவ்வளவு வருது.. கூட ஏசி மெக்கானிக்கல் தனிப்பட்ட கோர்ஸ் படிச்சி.. அதுவுமே சனி ஞாயிறு பார்க்கிறான்…. மாசம் மூன்று லட்சத்துக்கு மேல வரும் என்று தரகர் கிட்ட சொல்லலாம்.. அவர் சொல்லட்டும்… நம்ம பையனுக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சு இருக்குங்க… இந்த இடமே முடிச்சிடலாம்..” என்று சொன்ன கெளசல்யா…
தரகருக்கு போன் செய்யவும் முயலும் போது இவர்கள் பேச்சை கேட்டு கொண்டு அப்போது தான் வேலையில் இருந்து வந்த ஜெயேந்திரன் தடுத்து நிறுத்தியவன்…
“இத்தனை சம்பாத்தியம்.. இத்தனை சொத்து இருந்தா தான் இந பெண் என்னை கட்டிக்கனும் என்றால். அப்படி பட்ட பெண்ணே எனக்கு தேவையில்லை….” என்று சொல்லி விட்டான்…