Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

paniyum pathikume....21

  • Thread Author
அத்தியாயம்….21

ஜெய் தன் அன்னை சொன்னது போல் தான் தன் மனைவி வசீயையும் கீர்த்தனாவின் இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தன் மாமியார் வீடு சென்றான்.. . குழந்தைகளுக்கு பள்ளி வேறு திறந்து விட்டது..

அங்கு அவன் வீட்டிலும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தொடங்கி விட்டனர்… குழந்தைகளும் மற்ற குழந்தைகளோடு இருந்த போது மறந்து இருந்தது வேறு நியாபகத்தில் வந்து விட்டன போல்..

அதன் தொட்டும் குழந்தைகளோடு மாமியார் வீடு வந்த ஜெய்க்கு முன்பு இல்லாத வர வேற்பு அவனின் மாமியார் வீட்டில் இருந்து கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்..

ஆடம்பரமாக வாழ்ந்து தன் மகளின் வாழ்க்கையை தொலைத்து விட்டு, தங்களின் எதிர் காலத்திற்க்கு என்று வைத்திருந்த சேமிப்பையும் இழந்த பின்.. தான் ஜெய்யின் அருமை சுபத்ராவுக்கு மட்டும் கிடையாது கீர்த்தனாவுக்கும் கிடைத்தது போல்..

அதனால் தான் தன் அறையிலேயே முடங்கி கொண்டு இருந்த கீர்த்தனா ஜெய் குரல் கேட்ட உடனே ஹாலுக்கு வந்தவள்..

“வாங்க ஜெய்…” என்று வர வேற்றதோடு தன் தங்கை வசீயிடமும்..

“இப்போ வாந்தி நின்னுடுச்சா வசீ.. இது போல நேரத்தில் நாங்க தான் உனக்கு உதவி செய்யனும்.. ஆனா என் பசங்களை பார்க்க வெச்சி இன்னும் கஷ்டத்தை கொடுத்துட்டேன்…” என்று பேசிய அக்காவின் இந்த பேச்சு வசீக்கு புதியதாக தான் இருந்தது..

கீர்த்தனாவின் இந்த பேச்சில் வசீயின் மனது ஆச்சரியம் பட்டாலுமே, அதை முகத்தில் காட்டாது..

“அக்கா பசங்களுக்கு நான் புதுசா.. என் கல்யாணத்திற்க்கு முன் இங்கு வந்தா என் கூட தானே இருப்பாங்க. அதோட அங்கு இவர் அண்ணன் பசங்க.. அக்கா பசங்க கூட இருந்ததால் அடமே பண்ணல க்கா…” என்று விட்டாள்..

இது உண்மை தான்… கீர்த்தனா அம்மா வீட்டில் வந்து விட்டாள்.. அவளின் குழந்தைகளை வசீ தான் பார்த்து கொள்வாள்.. சுபத்ராவும் வேலைக்கு செல்வதால், என்ன தான் சமையல் செய்யும் பெண்மணி சமையல் செய்து விட்டு சென்றாலும்,

சமைத்து வைத்ததை கூட கீர்த்தனா தன் குழந்தைகளுக்கு எடுத்து தர மாட்டாள்… குழந்தைகள் ஏதாவது கேட்டால் கூட கீர்த்தனா.

“போய் சித்தி கிட்ட கேளுங்க…” என்பவள்.. தங்கையிடமும்..

“என் வீட்டுல தான் நான் பார்த்துக்குறேன் இங்கு வந்தா நீ இது கூட செய்ய மாட்டியா….?” என்று கேட்பவள்.. இதை தன் அம்மா சுபத்ராவிடமும் பத்த வைத்து விட…

உடனே சுபத்ரா…. “ ஏன் வசீ குழந்தையை பார்த்துக்க என்ன..?” என்று கேட்பார்..

வசீ… “ இல்லேம்மா ஸ்கூலில் இன்னைக்கு டெஸ்ட் வெச்சேன்… அதை கரைக்ஷன் பண்ணிட்டு இருந்தேன்…” என்று சொல்லி விட்டாள் போதும்..

“பதினைந்து ஆயிரம் சம்பளத்துக்கு அங்கு பண்றது பத்தாது என்று வீட்டுல வேறு கொண்டாது வேலை செய்யிறியா…? நம்ம வீட்டில் சமையல் செய்யும் அம்மாவுக்கு நாம பன்னிரெண்டு ஆயிரம் சம்பளம் கொடுக்கிறேன்… இரண்டே மணி நேரத்தில் சமச்சி கொடுத்துட்டு போயிடுறா..” என்று சொல்பவர்..

பின்… “ என் மானம் போகுது டி… உன் சம்பளத்தை வெளியில் சொல்ல முடியல….” இப்படி எல்லாம் நடந்து உள்ளது..

வசீயின் இந்த பேச்சில் கீர்த்தனாவுக்கு மட்டும் அல்லாது சுபத்ராவுக்குமே அனைத்தும் நியாபகத்தில் வந்தது.. அதில் இருவருக்குமே குற்றவுணர்வாகி போனது… தான்..

ஆனால் அவர்களின் இந்த குற்றவுனர்ச்சியானது தொடர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.. சுபத்ராவினால் பிசாத்து பதினைந்து ஆயிரம் சம்பளம் என்று சொன்ன வசீயின் சம்பளமானது அவள் எந்த செலவும் செய்யாது சரியான விதத்தில் முதலீடு செய்ததால் தற்போது அது பெரும் தொகையாக வந்து கீர்த்தனாவுக்கு பெரிதும் உதவியது என்று தான் சொல்ல வேண்டும்…

இதோ அடுத்து ஜெய்…. அவனின் அம்மா சொன்ன கிஷோர் வீட்டவர்களை அழைக்க தன் மாமியார் மாமனாரிடம்…. கீர்த்தனாவின் முன் நிலையில் தான்..

“மாமா கிஷோர் பத்தி இன்னும் ஒரு தெளிவு இல்லாம தான் இருக்கு… பணம் எந்த அளவுக்கு அங்கு போய் இருக்கு.. அந்த லேடி என்ன நினச்சிட்டு இருக்கா.. கிஷோர் நிலைப்பாடு இது எல்லாம் நமக்கு தெரிஞ்சா தான் நாம அடுத்து என்ன என்று யோசிக்க முடியும் மாமா…” என்று சொன்னான்..

சுபத்ராவுக்கும் பார்த்திபனுக்கும் ஜெய் சொன்னது தான் சரி என்று இருந்தது. கீர்த்தனாவும் மருத்துவமனையில் இருந்து வந்த இந்த ஒரு வாரம் காலமாக தன் அதிர்ச்சியில் இருந்து வெளியில் வந்து அடுத்து என்ன என்று தான் யோசித்து கொண்டு இருந்தாள்.

அவளும் ஒரு முடிவு எடுக்க கிஷோரின் நிலைப்பாடு தெரிய வேண்டி இருந்தது.. அதன் தொட்டு ஜெய்யின் இந்த பேச்சில் பார்த்திபன்.. தன் மகளை பார்த்து…

“நீ என்னம்மா சொல்ற….?” என்று கேட்டதற்க்கு கீர்த்தனா…

“வர சொல்லுங்க அப்பா…” என்று விட்டாள்..

அதன் படி ஜெய் தான் கிஷோரை மட்டும் அல்லாது அவனின் அன்னை தந்தை தம்பியையும் பேசியில் அழைக்க..

இதோ ஜெய்யின் அழைப்பின் படி கிஷோரின் குடும்பம் பார்த்திபன் வீட்டில் வந்து விட்டனர்…. வந்தவர்களை கடமைக்கு என்று… தான் சுபத்ராவும் பார்த்திபனும்..

“வாங்க…” என்று அழைத்தனர்.. கிஷோரை பார்த்து அந்த அழைப்புமே இல்லை தான்..

முன் எல்லாம் கிஷோரின் தலையை கண்டு விட்டால் போதும்…. வேலை செய்யும் பெண்மணியிடம்..

“அது செய். இது செய்….” என்று அத்தனை வர வேற்பு இருக்கும்… ஆனால் இன்று பார்க்க பார்க்க அப்படி பத்தி கொண்டு வந்தது இருந்துமே அமைதியாக தான் இருந்தனர்.

முதலில் யார் முதலில் பேசுவது என்ற தயக்கத்திலேயே சிறிது நேரம் கழிந்தாலுமே , மெல்ல முதலில் ஜெய் தான் பேச்சை தொடங்கி வைத்தான்..

கிஷோரின் பெற்றோரை பார்த்து தான் அவன் பேச்சை ஆரம்பித்தது… “ என்ன நடந்தது.. என்ன ஆச்சு என்று உங்களுக்கு தெரியும் தானே….” என்று கேட்டதற்க்கு கிஷோரின் தம்பி தான்…

“ அது தான் ஊருக்கே தெரிவது போல வந்து விட்டதே….” என்று எடக்காக தான் அவன் பதில் அளித்தது..

அவனின் இந்த பதிலில் ஜெய் மட்டும் அல்லாது கிஷோர் வீட்டவரை தவிர்த்து மற்ற அனைவரும் என்ன இது என்று தான் பார்த்தனர்..

இந்த பேச்சுக்கு பெரியவர்களான கிஷோரின் பெற்றோர்கள் ஏதாவது பேசுவார் என்று பார்த்தால், அவர்களும் ஒன்றும் பேசாது இருப்பதை பார்த்து ஜெய் இப்போது தன் பேச்சை வேறு விதமாக தான் மாற்றி பேசினான்..

அதாவது… “ ஆமாம் ஆமாம் ஊரே தான் பார்த்தது… ஆனா பாருங்க.. அந்த ஊரு பார்த்தது உங்க பெரிய பையனை தான்…” என்றதில்…

கிஷோரின் அப்பா “ அப்படியா….?” என்று கிண்டலாக கேட்டவர்.

பின் சுபத்ராவை பார்த்து… “ என்னம்மா உங்க சின்ன மாப்பிள்ளை கிஷோரை எங்க வீட்டு பையன் என்பது போல பேசுறாரு….” என்ற பேச்சில் ஜெய்… இவர்களின் இந்த கிண்டல் கேலியான வார்த்தைக்குள் என்னவோ இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தன் மாமியாரை பார்த்தான்..

ஆனால் பாவம் சுபத்ராவுக்கு இவர்களின் இந்த பேச்சுக்கு தானும் தன் பெரிய மகள் கீர்த்தனாவும் தான் காரணம் என்று புரியாது..

“என்ன இது கிண்டலும் கேலியுமா பேசுறிங்க…. அசிங்கம் பண்ணது உங்க மகன்… அதனால பாதிப்புக்கு ஆனது என் மகள் மட்டும் கிடையாது உங்க பேரன்களும் தான்…” என்று கோபமாக பேசவும்..

வந்ததில் இருந்து அமைதியாக இருந்த கிஷோரின் அன்னை இப்போது… “ ஓ இப்போ தான் அவங்க எங்க பேரன் என்று தெரியுதாங்கலாம்மா..”

மேலும்… கிஷோரை காண்பித்து … “ இவனை இப்போ பேச்சுக்கு பேச்சு எங்க மகன் எங்க மகன் என்று சொல்ற நீங்க தான் கல்யாணம் செய்து வைத்தா மகனா இருந்தாலும் ஒரு பெண்ணின் புருஷன்.. உங்களுக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகும் முன்ன என் பெண் கிட்டேயும் உங்களுக்கு ஏதாவது வெளியில் போகும் ப்ளான் இருக்கா..? என்று கேட்டு இருக்கனும் என்று சண்டை பிடித்தது…” என்ற பேச்சில் சுபத்ரா அமைதியாகி விட..

சுபத்ராவின் அந்த அமைதியே சொன்னது அது உண்மை தான் என்று.. மேலும் மேலுமே..

“அவன் பெரிய மகனா எங்களுக்கு ஏதாவது செய்ய விட்டு இருக்காளா உங்க மகள்.. அதோடு ஏன் இத்தனை ஆடம்பரம் என்று கேட்டதுக்கு சொத்து பிரிச்சி கொடுத்தோடு எங்க வேலை முடிஞ்சது என்று உங்க பெண் சொல்லும் போதும் நீங்க இருந்திங்க தானே.. வீட்டுக்கு பெரியவங்கலா நீங்க உங்க பெண்ணுக்கு என்ன நல்லது சொல்லி கொடுத்திங்க என்று இன்னைக்கு இவன் செய்த அசிங்கத்துக்கு நான் நியாயம் செய்ய வரலேன்னு என்னை நீங்க கேள்வி கேட்கிறிங்க….” என்று கிஷோரின் அன்னை தந்தை தம்பி என்று அனைவரும் மாறி மாறி பேசியதில் பாவம் கீர்த்தனா வீட்டவர்கள் வாயை திறக்க முடியவில்லை .. அவர்கள் பொய் சொல்லவில்லையே மறுப்பதற்க்கு..

இந்த பேச்சில் ஜெய்க்கும் புரிந்து விட்டது தான்.. தன் மாமியார் வீட்டவர்கள் ரொம்ப தான் செய்து இருக்காங்க என்று..

ஆனால் எதற்க்கு என்றாலுமே கிஷோர் செய்தது சரி என்று ஆகி விடாது தானே.. அதை தான் ஜெய்..

“ அப்போ அதுக்கு இது சரியா போயிடுச்சி என்று சொல்றிங்கலா நீங்க…?” என்று கேட்டதற்க்கு கிஷோரின் தம்பி சுகுமாரன்…

ஜெய்யிடம் மரியாதையாக… “ உண்மையை சொல்லனும் என்றால் நான் ஒரு ஆறு மாசம் முன்னாடி.. அதாவது உங்க கல்யாணத்து அன்னைக்கு “ கீர்த்தனாவை காட்டி. இவங்க கிட்ட ஒரு இன்ட் கொடுத்தேன்.. ஆமாவா.? இல்லையா.? என்று கேட்டு சொல்லுங்க… என்றவனின் பேச்சில் ஜெய் கீர்த்தனாவை பார்த்தான்..

கீர்த்தனாவோ… “ இல்ல இவர் சொன்ன லேடியை உங்க கல்யாணத்து அன்னைக்கு காண்பித்தார்… வயது நாற்பது.. அதோடு அந்த லேடி இவர் கூட வேலை பார்க்கிறவங்க என்று எனக்கு தெரியும்.. கூடவே அவங்க யூடியுப் சேனலில் அவங்க செய்யும் ஸ்க்ஸைஸ் நானுமே பார்ப்பதினால் எனக்கு அவங்க மேல ஒரு பிரமிப்பு.. இந்த வயதிலும் எவ்வளவு பிட்னஸா இருக்காங்க என்று.. எல்லாத்தையும் விட கிஷோரை காண்பித்து அவங்களை இவர் ட்ராப் செய்யும் அன்னைக்கு என் கிட்ட சொல்லி இருக்காரு ஜெய்…. அப்படி இருக்க என்னால எப்படி தப்பா நினைக்க முடியும்.

சொன்ன இவரை தான் தப்பா நினைத்தேன்…. நாங்க நல்லா இருக்கிறது பிடிக்கல பொறாமையில் இப்படி பேசுறாங்க….” என்று சொன்னவள்..

பின் முடிவாக… “ தப்பு தான்… மேல் பார்வை வைத்து எல்லாமே நினைத்தது.. நான் நடந்து கொண்டது என்று எல்லாமே தப்பு தான்…” என்று தன் தப்பை ஒத்து கொண்ட கீர்த்தனாவை அடுத்து என்ன சொல்ல முடியும்…

கீர்த்தனா பேசி முடித்த பின் ஜெய் மீண்டுமே கிஷோர் வீட்டவர்களை தான் பார்த்தவன்..

கீர்த்தனாவை காண்பித்து…. “ இவங்க என்ன தான் உங்களை கவனிக்காம.. கொஞ்சம் ஆடம்பரமா நடந்து கொண்டு இருந்தாலுமே, உங்க மகனின் பங்கும் இதுல இருக்கு.. அதோட. இதை எல்லாம் காண்பித்து உங்க மகன் செயலை நியாயம் என்று சொல்லி விட முடியாது.. இதே தப்பை எங்க வீட்டு பெண் செய்து இருந்தால், என்ன நடந்து இருக்கும்…

இவங்களை வீட்டுக்குள் விட்டு இருப்பிங்க.. ஆனா பாருங்க நாங்க உங்களை கூப்பிட்டு வைத்து பேசிக் கொண்டு இருக்கோம்.. காரணம்.. இரு குழந்தைகளையும் காண்பித்து இவங்களுக்காக..” என்ற ஜெய்யின் பேச்சு நியாயமாக இருந்ததினால்.

இப்போது அவர்களுமே… கிஷோரை பார்த்து… “ என்ன டா சொல்ற…? உன் கிட்ட பேச கூடாது… என்று தான் நினைத்து கொண்டு இருந்தோம்.. இந்த தம்பி சொன்னது போல் பேரனுங்களுக்காக பேச வேண்டி இருக்கு…” என்று கேட்டதற்க்கு.

இப்போதும் தலை குனிந்து கொண்டு இருந்த கிஷோர் இப்போதும் அதே போல் தான் இருந்தான்… ஆனால் ஒரு மாற்றமா இத்தனை நேரம் வாய் திறக்காது இருந்தவன்..

“எனக்கு என்னைக்கும் கீர்த்துவும் என் குழந்தைகளும் தான் முக்கியம்.. என்ற அவனின் பேச்சில், அங்கு இருந்தவர்கள் அத்தனை பேருக்கும் பற்றிக் கொண்டு தான் வந்தது.

இதில் எப்போதும் அமைதியாக போகும் வசீயே.. “ எங்க அக்கா வேண்டும்.. ஆனா என் அக்கா மட்டுமே வேண்டும் இல்லை போல். அப்படி தானே…” என்று நறுக் கென்று கேட்டு விட்டாள்..

என்ன தான் அவளின் அக்கா இத்தனை நாள் தன்னிடம் பாசமாக நடந்து கொண்டது இல்லை என்றாலுமே, அவளுக்கு அக்காவின் மீது பாசம் இருந்தது தானே… அதோடு ஒரு பெண்ணாக தன் கணவன் இப்பயி செய்தால் எப்படி இருக்கும் அவளாள் அதை நினைத்து கூட பார்க்க முடியாது….

ஆனால் தன் அக்கா இதை சந்தித்து அதன் தொட்டு சாவின் வொளிம்பை தொட்டு என்று.. இருக்கிறவளுக்கு அவள் தானே கேள்வியும் துணையுமாக நிற்க வேண்டும்..

இதோ கேள்வி கேட்டு விட்டாள். இனி அனைத்திலுமே தன் அக்காவுக்கு நான் துணையாக இருப்பேன் என்பது போல் தன் அக்காவின் அருகில் நின்று கொண்டவள்..

அவள் கை பற்றி…. “ தைரியமா இருக்கா…. நீங்க எந்த முடிவு எடுத்தாலும் நாங்க உன் கூட இருப்போம் க்கா…. அது நீங்க தனியா இருந்தாலுமே இல்லை குழந்தைகளுக்காக இந்த வாழ்க்கை தொடர்ந்தாலுமே துணையா இருப்பேன்.. நான் இருப்பேன்…” என்று கடைசியாக பேசி முடிக்க.

கீர்த்தனாவுக்கோ தங்கையின் இந்த உயர்ந்த பேச்சில் தன்னை மிக கீழாக உணர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்…

இதே சூழ்நிலை தன் தங்கைக்கு வந்து இருந்தால் தான் என்ன செய்து இருந்து இருப்பேன்… எதுக்கும் உபயோகம் இல்லாத படிப்பை நீ படித்தாய்.. பார்க்கவும் கலரா இல்ல. அது தான் வேறு தேடி போய் விட்டான் என்று தானே சொல்லி இருப்பேன்..” கண்டிப்பாக என் பேச்சு இப்படியாக தான் இருக்கும்..

அதோடு… “இதோ பார் என் புருஷன் என்னை விட்டு வேறு யாராவது ஏரெடுத்து பார்த்து இருப்பாரா..? என்று மிக திமிறாக தானே பேசி இருந்து இருப்பாள்..

ஆனால் தன் தங்கை என்று நினைக்கிலேயே… கீர்த்தனா வசீயின் பிடியில் இருந்த தன் கையை இன்னுமே பிடித்து கொள்ள… வசீ என்ன நினைத்தாளோ அவளுமே தன் பிடியை இன்னும் அதிகம் கூட்டி…. உன்னோடு நான் எப்போதும் துணை இருப்பேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டாள்….






 
Active member
Joined
May 12, 2025
Messages
35
ஓஹோ இந்த கிஷோருக்கு இரண்டு பேருமே வேணுமாமா அவன் கெட்ட கேட்டுக்கு? அதான் கொஞ்சமாவது மனுஷ தன்மையுடைய நடந்துருந்தா எல்லாரும் கொஞ்சமாவது நல்லா பேசிருப்பாங்க. வசி, அவ அப்பா தவிர எல்லாமே ரொம்ப ஆயிருக்கும். அதான் இப்ப அடங்கிருக்கு
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
273
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
காலம் சிறந்த ஆசான். படிப்பினையை வலிக்கவலிக்க கத்துக்குடுக்குது.
 
Top