Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume....3

  • Thread Author
அத்தியாயம்….3

“இத்தனை சம்பாத்தியம் இருந்தால் தான், அந்த பெண் என்னை கட்டிக்கனும் என்றால், எனக்கு அப்படிப்பட்ட பெண் வேண்டாம் ம்மா….” என்று சொன்னவனின் பேச்சில் அத்தனை அழுத்தம் இருந்தது…

மகன் ஒரு முடிவை அத்தனை எளிதாக எடுக்க மாட்டான்… அப்படி எடுத்து விட்டால், யார் என்ன சொன்னாலுமே அதை அவன் மாற்றிக் கொள்ளவும் மாட்டான் என்று அன்னையாக கெளசல்யா உணர்ந்து இருந்தாலுமே,

அதே அன்னையின் தன்மையில் ஒன்றான அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்ததும் மகனின் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சியை நினைத்து…

“இல்லேப்பா… என்ன தான் இருந்தாலுமே, இந்த காலத்திற்க்கு….” என்று பேசிக் கொண்டு வந்தவர்… அடுத்து அவர் என்ன சொல்லி இருந்து இருப்பாரோ..

ஆனால் அதற்க்குள் ஜெயேந்திரன்… “எந்த காலத்துக்குமே தன் மனைவி பணத்திற்க்காக தான் என்னை கல்யாணம் செய்து கொண்டா என்பது … இழுக்கு தான்ம்மா.. அதுவும் எனக்கு.. ம் வேண்டாவே வேண்டாம்…” என்று சொன்னவைன் அந்த மறுப்பில் முன்பு இருந்ததை விட இன்னுமே அதிகம் தெரிந்தது..

மகன் இப்படி சொல்லி விட்ட பின்பு அடுத்து என்ன செய்ய முடியும்…? கெளசல்யா மட்டும் அல்லாது அனைவருமே அமைதியாகி தான் விட்டனர்..

ஆனால் இரண்டு நாட்கள் பின் கெளசல்யா பெண் வீட்டில் இருந்து இன்னுமே எந்த ஒரு செய்தியும் வராது போய் விட.. இந்த இடம் அவ்வளவு தான் போல என்று நினைத்து கொண்டு… அன்று தன் மூத்த பெண்ணை கை பேசியில் கூப்பிட்டு.. தன் மன தாங்களை கொட்டினார்…

அப்போது அவர் பக்கத்தில் குடும்ப உறுப்பினர் அனைவரும் தான் இருந்தனர்.. நம் ஜெயேந்திரனை தவிர….

பெரிய மகள் வித்யா…. “ ம்மா விடுங்கம்மா. இதையே நினச்சி உங்க உடம்பை கெடுத்துக்காதிங்க… என்னை கேட்டா அந்த பெண்ணுக்கு நம்ம வீட்டிற்க்கு வர கொடுத்து வைக்கல என்று தான் நான் சொல்லுவேன்… தம்பி சொல்றதும் சரி தான் ம்மா. விடுங்க… சும்மா இதை பத்தியே பேசிட்டு இருக்காதிங்க…” என்று தன் பெரிய மகளும் இப்படி கூறி விட…

பின் அங்கு இருந்த அனைவருமே அதையே தான் சொன்னார்கள்… அதுவும் அந்த வீட்டின் மூத்த மருமகள் சொன்ன..

“அந்த பெண்ணை ஜெய்க்கு பிடிச்சி இருக்கு .. பிடிச்சு இருக்கு என்று திரும்ப திரும்ப அதையே சொல்லாதிங்க அத்தை…. அது ஜெய் தம்பி மனசு இன்னுமே அந்த பெண் ஆழ பதிந்து போய் விட போகிறது… ஆழ பதிந்து.. சரி எல்லாம் சொல்லியாவது அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று எல்லாம் யோசிப்பவரும் இல்ல உங்க சின்ன மகன்.. நான் என்ன சொல்ல வரேன் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்..” என்று ஜெயந்தி சொன்னதுமே… கெளசல்யா அடுத்து அதை பற்றி வாயே திறக்கவில்லை…

வசீகராவை பிடித்து இருக்கிறது என்று இவர்கள் தரகரிடம் சொல்லி ஒரு வாரம் இரண்டு வாரம். கடந்து இதோ ஒரு மாதமும் தொட்டு விட… இந்த இடம் அவ்வளவு தான் முடிவு செய்து விட்டனர்.

ஜெயேந்திரனுக்குமே அந்த எண்ணம் வந்து விட்டது… என்ன தான் பணத்தை வைத்து தனக்கு இந்த பெண் வேண்டாம் என்று சொல்லி விட்டாலுமே, அவன் அதை சொல்லும் போதே அவன் மனதில் அழுத்ததை அவன் உணர்ந்தான்…

ஒரு நம்பிக்கையும்… ஏன் நாம் இப்படி நினைக்க வேண்டும் பார்க்கலாம்.. பார்க்கலாம்.. இந்த பெண் தான் எனக்கு மனைவி என்றால் கண்டிப்பாக மனைவியாக ஆவாள் என்று இத்தனை நாள் அவன் கொண்ட அவனின் அந்த நம்பிக்கையானது நாள் போக போக அது கரைந்து.. இதோ இன்று இல்லை… அந்த பெண் தனக்கு இல்லை என்று முடிவுக்கு வந்தவன்.

இனி இந்த பெண் புகைப்படம் தன் அறையில் இருப்பது தவறு.. இங்கு இருந்தால் நான் அடிக்கடி எடுத்து பார்க்கிறேன்… இது நல்லதிற்க்கு கிடையாது.. என்று நினைத்து அந்த புகைப்படத்தை வெளியில் எடுத்து செல்ல தான் கையில் எடுத்தது..

பின் கடைசியாக ஒரு முறை பார்த்து கொள்கிறேன் … இனி பார்க்க முடியாது தானே என்று சொல்லி பார்க்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் கடந்த பின்னுமே… அவனின் பார்வை அந்த புகைப்படத்தில் மட்டுமே இருந்தது.

வசீகராவை பார்க்க பார்க்க பேசாது தன் சம்பாத்தியம்.. தான் வாங்கி வைத்து இருக்கும் இடத்தை சொல்லியே இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா…? நான் நேரம் தாழ்த்தும் இந்த நேரத்தில் இந்த பெண்ணுக்கு வேறு யாரோடாவது என்று நினைத்தவனால் அதற்க்கு மேல் நினைவினால் கூட அடுத்து அவன் மனது யோசிக்க முடியவில்லை..

அதில் சட்டென்று தன் அறையை விட்டு வெளியில் வந்து விட…. அங்கு கூடத்திலோ… அவனின் அம்மா முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன்..

“ம் சரிங்க தரகரே… சரிங்க தரகரே… ரொம்ப சந்தோஷம்… ம் நானே நாள் பார்க்கிறேன்…” என்று சொன்னவர் பின் ஏதோ யோசனை வந்த பாவனையில்…

“நாளைக்கு கூட முகூர்த்த நாள் தான் போல.. ஒரு விசேஷத்திற்க்கு பத்திரிக்கை வந்து இருக்கு… நான் பார்த்துட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களை அழச்சி சொல்லிடுறேன் தரகரே.. நீங்க பெண் வீட்டவங்க கிட்ட சொல்லிடுங்க….” என்று அனைத்தும் அப்போதே திட்டம் இட்டு முடிப்பது போல் சொல்லி முடித்த கெளசல்யா தன் கை பேசியை வைக்கும் அணைக்கும் போது அப்படி ஒரு நிம்மதி அவர் முகத்தில் தெரிந்தது…

தன்னையே ஆவளோடு பார்த்து கொண்டு இருந்த தன் கணவன் மகங்கள் மருமகள்கள் அனைவரையும் மீறி…. பாதி குழப்பமும் மீதி ஒரு வித எதிர்பார்ப்புமாக தன்னையே பார்த்து கொண்டு இருந்த சின்ன மகனிடம் வந்த கெளசல்யா…

எக்கி ஜெய்யின் மோவாயை பிடித்து கொண்டு கொஞ்சியது போன்ற பாவனையில்…

“பெண் வீட்டவங்க… நம்மளை பெண் பார்க்க வர சொல்லி இருக்காங்க. இப்போ தான் தரகர் போன் பண்ணி சொன்னாரு ஜெய்…..” என்று சொல்லி விட்டு தன் மகனின் கேசம் கோதி விட்டு…. பின் தான் அனைவரிடம் சொன்னவர்…

அடுத்து அடுத்து என்று தன் இரண்டு மகள்களுக்கு போன் செய்து சொல்லியதோடு இப்போதே வந்துடுங்க டி… நையிட் உங்களுக்கும் சேர்த்து டிபன் செய்து வைக்கிறேன்… நாளைக்கே பார்த்துட்டு வந்துடலாம்…” என்று சொன்னவரிடம் அவரின் இரண்டு மகள்களும் என்ன சொன்னார்களோ…

“ஏன்டி ஒரு நாளு உங்க பொண்ணுங்க ஸ்கூல்லுக்கு லீவ் போட மாட்டாங்கலாமா…. கல்யாணத்துக்கு எனக்கு பட்டு பாவடை வேண்டும் என்று என் மவன் முன்னாடி நிற்கட்டும் அப்போ பேசிக்கிறேன்….” என்று சொல்லி கொண்டு இருந்தவரிடம் இருந்து போனை வாங்கிய ஜெய்.

“சந்தோஷத்தில் நீங்க ரொம்ப பேசுறிங்க ம்மா….” என்று சொன்னவன் பின் கை பேசியின் தொடர்பில் இருந்த தன் பெரிய அக்காவிடம்…

“க்கா பசங்களுக்கு ஸ்கூல் என்றால் சன்டே பார்த்துக்கலாம் க்கா…” என்றவனின் பேச்சில் வித்யா.

“ஏன்டா நீயும்…நான் லீவ் போட சொல்றேன் என்று சொல்றதுக்குள்ள இந்த அம்மா இப்படி பேசுறாங்க டா. ஆனாலுமே இவங்க கொஞ்ச நாளா உனக்கு மட்டுமே அம்மாவா இருக்காங்கடா சொல்லிட்டேன்…” என்று சொன்னவளின் பேச்சில் கிண்டல் தான் அதிகம் இருந்ததை தவிர. அதில் பொறாமை என்பது ஒரு துளி கூட இல்லை…

அவனுமே சிரிக்க.. வித்யா. “இப்போ தான்ஜெய் எனக்குமே நிம்மதியா இருக்கு…” என்று சொன்ன வித்யாவிடம்

“இன்னைக்கே என்றால் எப்படி வர. சங்கரி அக்காவையும் நீயே கூட்டிட்டு வந்துடுறியா..?” என்று இவன் இங்கு பேசி முடிப்பதற்க்குள் கெளசல்யாவும் கோதண்ட ராமனும்… தன் மற்ற இரண்டு மகங்கள் மருமகளும் சேர்ந்து..

நாளைக்கு எத்தனை மணிக்கு செல்வது எப்படி போவது என்பது போலான விவரங்களை பேசி முடித்து அதை தரகரிடமும் சொல்லி முடித்து இருந்தனர்..

ஜெய்யும் அதன் பின் மீண்டும் தன் அறைக்கு வந்து இருந்தான்.. கையில் வசீகராவின் புகைப்படத்தோடு.. மீண்டும் முன் போல் தான் வசீகராவை பார்த்தான்..

ஆனால் முன் போல் எனக்கு நீ இல்லையா…..? நீ எனக்கு கிடைப்பியா… மாட்டியா…. சொந்தம் இல்லாதவளை இப்படி பார்க்கிற பாவத்தை எனக்கு கொடுத்து விடாதே…” என்று தன் பாட்டுக்கு மனதில் நினைத்து கொண்டு பார்த்து கொண்டு இருந்தவன்..

இப்போது சொந்தத்துடன் முழு உரிமையுடன் பார்த்து கொண்டு இருந்தான்…

***********************************************************************வசீகராவின் அன்னைக்கு பெண் பார்க்க வர சொல்லுங்க என்று தரகரிடம் சொல்லி விட்ட பின்பு கூட மனதில் முழு திருப்தி இல்லாத நிலை தான்.

அதுவும் தரகரிடம் சொன்ன சிறிது நேரத்திற்க்கு எல்லாம் தரகர் இவர்களை அழைத்து..

“ அவங்க நாளை காலையிலேயே பெண் பார்க்க வராங்கலாம்….” என்று சொன்னதற்க்கு சுபத்ரா…

“எத்தனை மணிக்கு…?” என்று கேட்டு அவர்கள் வருவதற்க்கு சம்மதம் சொல்லி விட்டு கை பேசியை வைத்த சுபத்ராவின் முக பாவனையை பார்த்த அந்த வீட்டின் பெரிய மகள்…

கீர்த்தனா… “ம்மா சும்மா சும்மா இப்படி முகத்தை வெச்சிக்காதிங்க..எனக்கு கிடச்சது போல கிடைக்கனும் என்று நீங்க ஆசைப்படுவது எல்லாம் பேராசை ம்மா…. ஸ்ரீ காந்த் இப்போவே புலம்ப ஆரம்பிச்சிட்டான்… இன்னும் எத்தனை வருஷம் அவளுக்கே பார்த்துட்டு இருப்பிங்க என்று…

நீங்க இந்த இடத்தையும் முடிக்காது போனா இன்னுமே நீ அவளுக்கே தான் பார்த்துட்டு இருக்கனும்… அப்புறம் உங்க மகன்.. அவன் பாட்டுக்கு ஏதாவது ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து நிற்க போறான் பார்த்துக்கோங்க….” என்று சொன்னதுமே சுபத்ராவின் அத்தனை தயக்கமும் பறந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…

சுபத்ராவுக்கு தன் தாய் வீட்டு முன்நிலையிலும் சரி தன் மாமியார் வீட்டு முன் நிலையிலும் சரி ஒரு சின்ன மரியாதை குறை நடந்து விட கூடாது… இதில் எப்போதுமே அவர் கவனமாக இருப்பார்.

மகன் பாட்டுக்கு இப்படி செய்து விட்டால், அவ்வளவு தான்… வசீகராவுக்கு இந்த இடத்தையே முடித்து விடலாம் என்று அவருமே ஒரு முடிவோடு தான் இருந்தார்.

இத்தனை இவர்கள் முடிவு எடுக்க. முடிவு எடுக்க வேண்டிய நம்ம வசீகராவோ… அதுவும் மாப்பிள்ளை வீட்டிற்க்கு சம்மதம் சொல்வதற்க்கும் முன்பு அவளிடம் மாப்பிள்ளையின் போட்டோவை காட்டி அவளுக்கு சம்மதமா என்று கேட்ட பின்பு தான் சம்மதம் சொல்லி இருக்க வேண்டும்..

ஆனால் இங்கோ… முதலில் கணவன் பெரிய மகள் மகன் மாப்பிள்ளை என்று இந்த ஒரு மாதகாலமாக இவர்களே… பேசி… முடிக்கலாமா… வேண்டாமா…. என்று யோசித்து ஒரு முடிவு எடுத்து. அதை மாப்பிள்ளை வீட்டவர்களிடம்… சொன்ன பின்பு தான்..

இதோ கடைசியாக வசீகரியை அழைத்து அவளிடம் மாப்பிள்ளையில் புகைப்படத்தை கொடுத்தனர்…

வசீகரிக்கு மாப்பிள்ளையின் புகைப்படம் தான் கையில் கிடைக்கவில்லை… ஆனால் அனைத்து விசயங்களுமே முன்பே அவளுக்கு தெரிந்து இருந்தது தான்..

அதுவும் மாப்பிள்ளையின் புகைப்படன் தன்னிடம் கொடுக்காததிற்க்கு காரணமாக அவளின் அம்மா அப்பாவிடம் சொன்ன.

“இந்த மாப்பிள்ளை மத்ததில் எப்படியோ ஆனால் பார்க்க நல்லா இருக்கான். இன்னும் நாமே இங்கு பெண்ணை கொடுக்கலாமா என்று ஒரு முடிவுக்கு வரல… இதுல போட்டைவை வசீ கிட்ட கொடுத்து அவள் எனக்கு இந்த இடமே முடிச்சுடுங்க என்று வந்து சொன்னா என்ன செய்யிறது….”

அதற்க்கு கீர்த்தனாவுமே. “ ஆமாம் ஆமாம் வந்த இடம் எல்லாம் இவளை ரிஜெக்ட் செய்து விட்டாங்க… இவர் ஒருத்தர் தான் பிடிச்சி இருக்கு வேறு சொல்லி இருக்காரு….” என்று சொன்னவளின் இந்த பேச்சுக்கு

சுபத்ரா….. “ கீர்த்து என்ன இது பேச்சு…?” என்று அதட்டினாலுமே, கீர்த்தனா இதற்க்கு எல்லாம் நான் அடங்க மாட்டேன் என்பது போல்..

“நான் என்ன இல்லாததையே சொல்லிட்டேன்….” என்று வேறு சொல்லி விட்டு தான் சென்றாள்..

சுபத்ரா தான்… “ என்னங்க இவள் எப்போ பார்த்தாலும் இப்படியே பேசிட்டு இருக்கா….?” என்று கணவனிடம் இன்று குறைப்பட்டுக் கொண்டாலுமே,

இன்று கீர்த்தனா இப்படி பேச காரணமே… அன்று தான் பெரிய மகளை உயர்த்தி பேசியும் சின்ன மகளை தாழ்த்தி பேசிய பேச்சுமே தான் என்று புரியாது வருந்தினாலும்..

பார்த்திபனுக்கு தங்கள் தவறு இப்போது புரிந்து கொண்டு விட்டதால்…. “நாம பேசியது தான் சுபா..இப்போ அது இல்லை பிரச்சனை…முதல்ல இந்த இடத்தை பத்தி பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.. நாம வேண்டாம் என்றால் வேறு இடமாவது பார்ப்பாங்க தானே..?” என்று பார்த்திபன் கேட்ட பின்… தான் சுபத்ரா அனைத்து விசயத்திலும் யோசித்து பார்த்து இந்த இடமே முடித்து விடலாம் என்று முடிவு செய்து தரகரிடம் சம்மதம் சொன்னது…

கடைசியாக இதோ சின்ன மகளை அழைத்து அந்த புகைப்படத்தை கொடுத்த சுபத்ரா..

“மாப்பிள்ளை அழகுக்கு ஒரு குறச்சலும் இல்லை… ஆனால் வசதி தான்…” என்று சொன்ன அன்னையின் முகத்தை பார்த்த வசீகராவுக்கு இப்போது தான் இந்த போட்டோவை பார்ப்பதா….? வேண்டாமா…? என்று தான் நினைக்க தோன்றியது…

அதுவும் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த கீர்த்தனா…. “ உனக்கு இவர் அதிகம் தான்…. நாளைக்கு நீ உன்னை கொஞ்சம் கேர் எடுத்து ட்ரஸ் பண்ணிக்கோ… என்னை கேட்டால் இன்னைக்கு நீ ப்யூட்டி பார்லர் போயிட்டு வந்தால் நல்லது என்று தோனுது.” என்று வேறு சொன்னவளின் பேச்சில் வசீகரா தன் கையில் இருந்த புகைப்படத்தை மீண்டுமே தன் அன்னையிடம் கொடுத்து விட்டவள்…

பின்.. “ அது தான் அக்கா சொல்றாங்கலே…. என் அழகுக்கு இந்த மாப்பிள்ளை அதிகமுன்னு…” என்று சொல்லிக் கொண்டு வந்தவளின் தொண்டையை அடைத்தது போலான ஒரு உணர்வு…

இது போலான நிலை வந்தால், அவளுக்கு அடுத்து பேச்சு என்பது வராது… அப்படி வந்தாலுமே, அந்த பேச்சு அழுகையுடன் தான் வெளி வரும்…

அதனால் கூடிய மட்டும் இது போல் ஆனால் அவள் அடுத்து ஒரு வார்த்தை பேச மாட்டாள்… அமைதியாகி விடுவாள்… அவளின் இந்த நிலையை தான் வீட்டில்.

“உனக்கு அழுத்தம் தான்…” என்று சொல்வது…இன்றும் அதே போல் தான் கீர்த்தனா…

“நான் இப்போ என்ன சொல்லிட்டேன் என்று அம்மா போட்டைவை வாங்கு வாங்கு என்றாலும் அடமா நிற்கிற….?” என்று கேட்டும் வசீகரா வாய் திறக்காது போக..

பின் ஒரு வழியாக சுபத்ரா தான்… “ இதோ பாரு வசீ… இவங்க பேச்சுக்கு அவங்க பேச்சுக்கு என்று எல்லாம் பார்க்க கூடாது… இது உன் வாழ்க்கை புரியுதா…. உன் படிப்பு விசயத்தில் தான் என் பேச்சை கேட்டு நீ நடந்துக்கல…. இன்னைக்கு பதினைந்து ஆயிரம் சம்பளத்துக்கு பக்கத்துல இருக்க ஸ்கூலுக்கு தமிழ் டீச்சரா போயிட்டு இருக்க…” என்று சுபத்ரா சொல்லி கொண்டு இருக்கும் போதே மீண்டுமே…

கீர்த்தனா… “ அந்த பதினைந்து ஆயிரம் எனக்கு… எல்லாம்… “ என்று அவள் ஆரம்பிக்கும் போதே சுபத்ரா.

“போ முதல்ல ரூமுக்கு போ…” என்று அவள் இங்கு வந்தால் தங்கும் அறைக்கு அனுப்பி வைத்த பின் மீண்டும் சுபத்ரா வலுக்கட்டாயமாக மகளின் கையில் கொடுக்க…

அவளுமே அதை வாங்கி கொண்டு தன்னை போல் தன் அறைக்கு வந்தவள்.. அம்மா சொன்னது போல் இது என் வாழ்க்கை… அக்கா அப்படி சொன்னாங்க என்று நான் பார்க்காது விட்டு விட்டு பின் அழ கூடாதுலே. என்று நினைத்து மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்த்த வசீகரா இதை தான் நினைத்தாள்…

இவருக்கு பாதி அழகு கூட இல்லாதவங்கள் எல்லாம் என் நிறத்தை காரணம் காட்டியோ.. இல்லை என் படிப்பை காரணம் காட்டியோ வேண்டாம் என்று சொல்லிட்டு போயிட்டானுங்க…

இவர் பார்க்க இத்தனை அழகா இருக்கார்.. இவர் எப்படி எனக்கு ஒகே சொல்லுவார்.. கூட மற்றவர்கள் எப்படியோ… தன் அம்மா சொன்ன இவர் சம்பளம்..

இவர் என் மனைவி நல்லா சம்பாதிக்கனும் என்று சொன்னா கூட அதுல நியாயம் இருக்கு.. ஏன்னா இவருக்கு வர போற மனைவி நல்லா சம்பாதித்தா இவருக்கு உபயோகமா இருக்கும்… என்று நினைத்தவளின் அன்றைய இரவு ஒரு மாதிரியாக தான் அனைத்தும் தன் பக்கமும் மாப்பிள்ளையின் பக்கமும் யோசித்து யோசித்து கழிந்தது…
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
211
ஜெயேந்திரன் ☺️☺️☺️ ஹீரோ குடும்பத்தில் எல்லோரும் அன்பானவங்களா இருக்காங்க ☺️ ☺️ ☺️ ☺️ ☺️

வசிகரி 😄😄😄 குடும்பத்தில் எல்லோரும் மோசமானவங்களா இருக்காங்க 🤨 🤨 🤨 🤨

கீர்த்தனா மோசமானவளா இருந்தாலும் அவ புருஷன் நல்லவனா தான் தெரியுறான் 🙂🙂🙂🙂

ஜெயேந்திரன் வருமானம் பத்தி முதலிலே சொல்லி இருந்தால் கீர்த்தனா இந்த சம்பந்தத்தை கெடுத்து விட்டுருப்பா 🙁🤭🙁🤭🤭

வசி உன்னோட குழப்பம் எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு தெளிவாகிடும் 😄😄😄😄😄😄😄
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
240
ரொம்ப பேசுறா 😤😤😤கீர்த்தனா இப்படி பேசுறதுக்கு இவங்களை பெத்தவங்க தான் காரணம் 😡

வசீ ரொம்ப யோசிச்சு குழப்பிக்காத நீ இத்தனை நாள் பட்ட கஷ்டத்துக்கு நல்ல குடும்பத்துல சந்தோசமா வாழப் போற 😊🤗
 
Active member
Joined
Mar 18, 2025
Messages
48
உண்மை தெரிந்தால் கீர்த்தநாவின் மூஞ்சி போகும் போக்கை பார்க்க இப்போவே ஆசையா இருக்கு.
எப்படியும் இந்திரன் குடும்பமே அவளை தாங்கத்தான் போகிறார்கள்
 
Top