Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Paniyum Pathikume......4 teesar

  • Thread Author
அத்தியாயம்….4

வீட்டில் வசீகராவுக்கு கடந்த மூன்று வருடங்களாகவே மாப்பிள்ளை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்… அவளுக்கு ஒரு ஐம்பது வரன்கள் பார்த்து இருப்பார்கள்…

இதில் நாற்பது வரன் அவளின் பையோடேட்டாவில் இருக்கும் நிறம் என்ற இடத்தில் இடம் பெற்று இருக்கும் மாநிறம் என்ற அதிலேயே பாதி வரன் தட்டி கழிந்தது என்றால், மறு பாதி அவளின் பார்க்க ஆரம்பிக்கும் போது பி.ஏ தமிழ் லிட்ரேச்சர் தான் முடித்து இருந்தாள்..

பின் தான் வீட்டில் இருந்தே எம்.ஏ தமிழ் லிட்ரேச்சர் முடித்தாள்…முதல் டிகிரி இரண்டாம் டிகிரி முடித்தும் எந்த வித்தியாசமும் இல்லாது தமிழில் எத்தனை படித்தும் என்ன உபயோகம் என்பது தான் மாப்பிள்ளை வீட்டவர்களின் எண்ணமாக இருந்து வேண்டாம் என்று மறுத்து விட..

மீதம் இருந்த அந்த பத்து வரன் அவளை பெண் பார்க்க வந்து இருக்கின்றார்கள் தான்… வீட்டிற்க்கு வந்து பேரம் பேசி…

ஆம் அதை பேரம் என்று தான் சொல்ல வேண்டும்…. முதல் பெண்ணை அத்தனை செலவு செய்து படிக்க வைத்து இருக்கிங்க…. கல்யாணம் செய்து கொடுக்கும் போது அந்த பெண் நல்லா சம்பாதித்தும் இருந்தது அழகுமே…. சின்ன பெண்ணை விட கூட..

அப்படி இருக்க இரண்டு பேருக்குமே ஒன்று போல தான் நகை போடுவீங்கலா…சின்ன பெண்ணுக்கு இரு நூறு சவரன் போட்டா …. பெண் பரவாயில்லையா இருந்தா கூட எங்களுக்கு பரவாயில்லை என்று என் மகனுக்கு பெண் எடுத்து கொள்கிறோம்…” என்று சொன்னதில் இவளே.. வேண்டாம்… என்று விட்டாள்…

அதனால் இன்று ஜெயேந்திரன் அவளை பதினொன்னாவது மாப்பிள்ளையாக தான் அவளை பார்க்க வருவதால் கொஞ்சமும் பதட்டம் இல்லாது தான் தன்னை தயார் செய்து கொண்டாள்..

சுபத்ரா … “ இன்னும் கொஞ்சம் முகத்திற்க்கு பவுடர் போட்டுக்க வேண்டியது தானே.. கொஞ்சம் லிப்ஸ்ட்டிக் போட்டுக்க.” என்று சொன்னதை எல்லாம் அவள் காதில் வாங்கி கொள்ளவில்லை…

முடிவில் எப்போதும் போல் சுபத்ரா… “ ஆனாலும் உனக்கு இத்தனை அழுத்தம் கூடாது டி…” என்று சொல்லி விட்டு சென்று விட்டார்…

ஆனால் இங்கு வசீகராவுக்கு எதிர் பதமாக ஜெயேந்திரன் தனக்கு உண்டான உடையை பார்த்து பார்த்து ஒன்னொன்றாக போட்டு போட்டு பார்த்தவன் கடைசியில் முடிவாக ராம்ராஜ் வேஷ்ட்டி சட்டையை தேர்தேடுத்தவன் அதையே அணிந்து கொண்டவன் கண்ணாடி முன்பு நின்று தன் சிகை அலங்காரத்தை இப்படியும் அப்படியுமாக மாற்றி மாற்றி சீவி கொண்டு பின் அனைத்தும் சலித்து போனவனாக கையில் இருந்த சீப்பை கீழே போட்டு விட்டு தன் கை கொண்டே அப்படியும் இப்படியுமாக ஒதுக்கி கொண்டவன்..

கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு அவனை பார்த்தவனுக்கு ஏனோ வெட்கமாக இருந்தது….

இத்தனை நேரம் இவன் அறை கதவு திறக்கும் என்று காத்து கொண்டு இருந்த இவனின் குடும்ப உறுப்பினர் இன்னும் இவன் வராது போகவும்…

“இன்னும் இவன் என்ன பண்றான்….” இவனின் பெரிய அக்கா வித்யா தன் அன்னையிடம் கேட்டாள்..

அதற்க்கு கெளசல்யா.. “தெரியல டி.. இரு நான் போய் பார்க்கிறேன்…ராகு காலம் பத்தரை பண்ணிரெண்டு… பத்து மணிக்குள் பெண் வீட்டில் இருப்போம் என்று அந்த தரகர் கிட்ட சொன்னேன்….ஆனால் இவன்.” என்று முனு முனுத்து கொண்டே மாடி ஏற போனவரை தடுத்து நிறுத்திய வித்யாவின் கணவன் ஸ்ரீதர்…

“நான் போய் மாப்பிள்ளையை கூடிட்டு வரேன் அத்தை…. “ என்று சொல்லி ஜெய் அறைக்கு ஸ்ரீதர் சென்ற போது தான் அவன் கண்ணாடி முன் நின்றுக் கொண்டு இருந்ததை பார்த்தது.

“மாப்பிள்ளை உங்க முகத்துல இப்போவே கல்யாண கலை வந்துட்டுச்சி….” என்று தோள் மீது கை போட்டு கொண்டு….

ஒரு வாடகை வேனை ஏற்பாடு செய்து இது எங்கள் குடும்பம் என்று பதினைந்து பேராக அதாவது அந்த குடும்பத்தில் பெண் ஆணுக்கு என்று அனைவருமே தலா ஒரு பெண் குழந்தைகளை பெற்று இருக்க. அனைவரையும் சேர்த்து பதினைந்து பேராக வசீகராவை பெண் பார்க்க அவள் வீட்டிற்க்கு வந்தனர்..

ஜெயேந்திரன் வீட்டிற்க்கு எதிர் பதமாக இங்கு பெண் மட்டும் தன்னை அலங்காரம் செய்யவில்லை…. பெண் வீடே அப்படியாக தான் இருந்தது..

மூத்த பெண்ணுக்கு மாப்பிள்ளை வீடாக கீர்த்தனாவை கிஷோர் பார்க்க வந்த போது வீட்டையே மாற்றி அமைத்தவர் தான் இந்த சுபத்ரா…

திரை சீலையில் இருந்து ஷோபா கவர்… கால் மிதியடி… என்று ஒரு வாரம் முன் இருந்தே வீட்டை வேலையாட்களை வைத்து ஒட்டடை அடித்து என்று வீட்டை பளிச் என்று வைத்திருந்தார்..

ஏன் அந்த வீட்டில் இருக்கும் அனைத்து படுக்கை அறையில் இருந்த படுக்கையின் விரிப்பை கூட புதியதாக தான் அன்று போட்டு இருந்தார்,..

பார்த்திபன் கூட…. “ வரவங்க பெட் ரூமுக்கு எல்லாமா போக போறாங்க….?” என்று கூட அன்று கிண்டலாக கேட்டார்….

ஆனால் இன்று.. இது எதையும் செய்யாது எப்போதும் போல் தான் காலை உணவை சாப்பிட்டு முடித்து விட்டு குளித்து அவர்கள் வந்தால் வரவேற்க என்று கூடத்தில் அமர்ந்து இருந்தனர்….
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
240
அம்மாவா இவங்க பெத்த பொண்ணுங்களுக்குள்ள ஓரவஞ்சனை பார்க்குறாங்க 😤😤
நம்ம ஜெய் குடும்பத்தை பார்த்து மிரண்டு போகணும்.... 😆
 
Active member
Joined
Mar 18, 2025
Messages
48
வசீ உனக்கு கிடைக்கும் வாழ்வைப் பார்த்து உங்க அக்கா மட்டும் இல்லை உன் அம்மாவே பொறாமைப் பட வேண்டும்
 
Active member
Joined
Mar 18, 2025
Messages
48
விஜிம்மா
Pls இந்த ஸ்டோரியாவையது
தொடர்ந்து போடுங்களேன்
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
190
ஏன் இந்த அசடையோ வசிகரி வீட்டில் பெண் பார்க்கும் வைப்பவத்தில் 🌺🌺🌺
 
Top