Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum-1

  • Thread Author
கனடா..

“நான் சொல்ல வருவது உனக்கு புரியுதா..? இல்லையா…? லிங்கா ..” என்று தன் தாய் மாமன் கலைசெல்வன் கேட்கும் கேள்விக்கு, பதில் அளிக்காது அமைதியாக இருந்தான் நம் கதையின் நாயகன் லிங்கேஷ்வரன்…



கலைசெல்வனுக்கு காலையில் இருந்து தன் அக்கா மகனிடம் இதை பற்றியே திரும்ப திரும்ப பேசியதில், அவர் தான் சோர்ந்து போனாரே தவிர.. லிங்கா வாயில் இருந்து அவர் கேட்டதற்க்கு சம்மதம் என்ற பதிலை அவரால் அவனிடம் இருந்து வாங்க முடியவில்லை.

இவ்வளவு நேரமும் கணவன் பேச்சில் இடை புகாது மதியம் உணவை தயாரித்து கொண்டு இருந்த புவனா.. தன் கணவனின் சோர்ந்த முகத்தை கவனித்து, இருவருக்கும் பழச்சாற்றை தயாரித்து இருவர் கையில் கொடுத்த பின் தன் கணவனிடம்..



“நீங்க கேட்டதற்க்கு உடனே சம்மதம் என்று சொல்ல கூடிய அளவுக்கு நீங்க சின்ன விசயத்தை லிங்காவிடம் கேட்கல..?” என்ற மனைவியிடம், அக்கா மகனிடம் காட்ட முடியாத கோபத்தை காட்டினார்..



“நான் ஒன்னும் அவனை நரகத்திற்க்கு போ என்று சொல்லலே. அவன் வீடான இந்தியாவுக்கு தான் போக சொல்றேன்..” என்று சொன்ன கலைசெல்வனிடம்..



லிங்கா இத்தனை நேரம் தன் தாய் மாமன் கெஞ்சி… கொஞ்சி… மிரட்டி… என்று வித விதமாக பேசியவரிடம் பாராது … வாய் திறவாது இறுக்கமாக கை கட்டி கொண்டு நின்று இருந்தவன்.. கலைசெல்வனின் இந்த பேச்சுக்கு..

“ நரகம் போ என்று நீங்க சொல்லி இருந்தால் கூட போய் இருப்பேன் மாமா..” என்ற அவன் பேச்சில், வேதனையுடன் தன் மருமகனை பார்த்தார் கலைசெல்வன்..



லிங்கா அந்த வார்த்தையை மேம்போக்காக எல்லாம் கூறவில்லை.. அவன் மனதில் அடி ஆழத்தில் அவன் புதைத்து வைத்து இருந்த வேதனையின் வெளிப்பாடு தான் இந்த வார்த்தை.. அது கலைசெல்வனுக்கே தெரியும்..

ஒரு நிமிடம் தன் மருமகனை இப்படி வேதனைப்படுத்தி இவனை இந்தியா அனுப்ப வேண்டுமா..? என்று யோசித்தார் தான்..

ஆனால் தன் அக்கா செல்வ சங்கரியின் முகம் கண் முன் வர.. அதுவும் அவள் தூக்கில் தொங்கிய அந்த காட்சியும், சமீபத்தில் அவர் இந்தியா சென்று இருந்த போது, தன் அக்கா வீட்டில் தன் அக்கா வாழ்ந்ததிற்க்கு உண்டான அடையாளம் சுத்தமாக அழிக்கப்பட்டு இருந்ததை பார்த்த பின்..



அவர் மனது இதை தான் கூறியது.. அவ்வளவு தானா..? தன் அக்கா அந்த வீட்டில் ஒரு வருடம் இரண்டு வருடம் கிடையாது.. பதினைந்து வருடங்கள்.. அந்த வீட்டின் மருமகளாக வாழ்ந்தாள்.. அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் ஒன்றுமே இல்லையா..?



இருக்கிறது தான்.. தன் அக்காவின் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பவன் இதோ என் முன் நிற்கிறான்.. ஆனால் அங்கு இல்லாது இங்கு… அதுவும் எப்படியான ஒரு சூழ்நிலையில் தான் தன் அக்கா மகனை இங்கு அழைத்து வந்தேன் என்று நினைக்கும் போது, இன்றும் அவர் நெஞ்சம் பதற தான் செய்தது..

அப்படி இருந்தும் இந்தியா போ என்று சொல்கிறேன் என்றால், இவன் புரிந்து கொள்ள வேண்டாமா..? என்று இன்று காலை லிங்காவின் தாத்தா சோமசுந்தரம் அழைத்ததில் இருந்து பேசி பார்த்தாயிற்று.. ஆனால் இவன் அசைவேனா என்று இருந்தால் தான் என்ன தான் செய்ய முடியும்..?



தன் மகன்களை போல பத்திலும். பதினைந்து வயதிலும் இருக்கும் பிள்ளையா..? அடித்து புரிய வைக்க.. அந்த விதத்தை இந்த நாட்டில் நடை முறை படுத்தவும் முடியாது.. அது வேறு விசயம்.. அப்படி இருக்க முப்பதை தான்டியவனிடம் இதற்க்கு மேல் கட்டாயப்படுத்த முடியாது போனதால் சோர்ந்து போய் விட்டார்..



காலையில் இருந்து கலைத்து போன மாமனை பார்த்து லிங்கேஷ்வரனுக்கு என்ன தோன்றியதோ.. அவர் அருகில் சென்றவன்..

“மாமா உங்களுக்கே என்னை புரியலேன்னா” என்று லிங்கேஷ்வரன் பேசிக் கொண்டு இருக்கும் போதே கலைசெல்வன் கை பேசிக்கு மீண்டும் சோமசுந்தரத்திடம் இருந்து அழைப்பு வந்தது..

காலையில் லிங்காவின் பாட்டி வேதவல்லி சீரியஸ் என்று சொன்னவர்… இப்போது இறந்து விட்டார் என்று சொல்ல..

அந்த செய்தியை கேட்ட பின் லிங்கேஷ்வரனின் கண் தன்னால் மூடிக் கொண்டன.

மூடியவனின் உள்விழிக்கு தெரிந்த பாட்டியை பற்றியதான காட்சிகள்.. எதுவும் நல்லவிதமாக இல்லை.. இறந்து விட்டால், அவர்களை பற்றி தவறாக சொல்ல கூடாது.. ஆனால் மனது.. அவர்கள் செய்ததை தானே நினைவு கூறுகின்றன..



இருந்தும் தன் பாட்டியின் இறுதி சடங்கில் பங்கு கொள்ள பதி மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தான்..வரும் போது தன் மாமாவிடம்..

“அங்கு செய்ய வேண்டிய சடங்கு எல்லாம் முடிந்த பின் திரும்ப இங்கு தான் வருவேன்,.. நான் மொத்தமா போயிட்டேன் என்று என் ரூமை உங்க சின்ன மகனுக்கு கொடுத்து விடாதிங்க..” என்று சொல்லி விட்டு இந்தியா வந்தவனுக்கு தெரியவில்லை..



இனி அவன் வாழ்க்கை இந்தியா தான் என்றும்.. இந்த கனடாவில் ஒரு அறைக்கு சொல்லி விட்டு வந்தவன்.. இங்கு தனக்கு என்று ஒரு தளத்தையே கட்டி வசிக்க போகிறான் என்றும்.. அதோடு தனக்கு என்று ஒரு தனி முத்திரையை இந்தியாவில் பதிக்க போகிறான் என்றும்..

************************************************************



இந்தியா…

நடு கூடத்தில் என்பது வயது வரை வாழ்ந்த அந்த பெரிய மனிஷியான வேதவல்லியின் பூத உடல் கிடத்தி இருக்க. அவரின் மேல் தடித்த ரோஜா மாலை ஒன்று கிடக்க.. வந்தவர்கள் போட்ட மாலை பாதத்தில் வைத்து விட்டு செல்ல செல்ல.. அதற்க்கு என்றே பணிக்க பட்ட பணியாள் ஒருவன் அந்த மாலையை உடனுக்கு உடன் அப்புறப்படுத்தி கொண்டு இருந்தான்..

வேதவல்லியின் உடலை சுற்றி உறவு முறை பலர் அமர்ந்து இருந்தனர்.. நெருங்கிய சொந்தம் என்று வேதவல்லியின் கணவர் மட்டும் பூத உடலின் பக்கம் ஒரு இருக்கையை போட்டு அமர்ந்து இருந்தார்..



வந்தவர்கள் அவர் கை பற்றி அவரின் துக்கத்தை போக்குகிறேன் என்று நினைத்து வேதவல்லியை பற்றியதான விசயத்தை எடுத்து கூறி இன்னுமே அவர் வேதனையை அதிகப்படுத்திக் கொண்டு இருந்தனர்..



பின் மற்றவர்கள் எங்கே என்று வந்தவர்கள் கேட்டதற்க்கு சோமசுந்தரம் முதலில் ஆட்களை விட்டு அழைத்து வர சொன்னவர்.. பின் மீண்டும் மீண்டும் அதையே செய்ய முடியாது வந்தவர்களுக்கு பதில் அளிக்காது அமைதி காத்தார்..



வந்தவர்கள் கேட்ட உறவான.. சோமசுந்தரத்தின் மூத்த மகள் காஞ்சனா. அவர் கணவன் சிவப்பிரகாஷ் அவர்களின் மகன்.. சிவக்குமார்… மகள் சவுர்ந்தர்யா… மற்றும் பெரியவரின் கடைசி மகளான காயத்திரி அவர் கணவன் சத்தியதேவன்.. இவர்கள் இருவருக்கும் இடைப்பட்டு பிறந்த மகனான லிங்கேஷ்வரனின் தந்தை ஜெய்பிரகாஷூம் அவரின் இரண்டாம் மனைவி சுகந்தியும் ஒரு பெரிய அறையில் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டும் தர்க்கம் செய்து கொண்டும் இருந்தனர்..



அவர்கள் பேசிய விசயம் இது தான்.. அதாவது இந்த பெரியவர் எதற்க்கு அவனை அழைத்தார் என்பதே.. அவனை என்று இவர்கள் குறிப்பிட்டவன் லிங்கேஷ்வரன் தான்..



காஞ்சனா… “ வயது ஆக ஆக என் அப்பாவுக்கு ஏன் புத்தி இப்படி போகுதுன்னே தெரியல… போனவனை ஏன் வம்படியா கூப்பிடுறார்..” என்று தன் தம்பி மகன் இங்கு வருவது தனக்கு பிடிக்கவில்லை என்ற தன் விருப்பமின்மையை தன் தம்பி எதிரிலேயே கூறினார்..



காஞ்சனாவின் தம்பி அதாவது லிங்கேஷ்வரனின் தந்தைக்கு அவன் இங்கு வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதால் அவர் எதுவும் சொல்லாது அமைதி காத்தார்..

ஆனால் அவரின் இரண்டாம் மனைவி சுகந்தியோ தன் கணவனுக்கும் சேர்த்து வைத்து பேசினார்… கடைசியாக அவள் சொன்ன

“ எங்க சொந்தத்தில் ரொம்ப பேருக்கு நான் இவருக்கு செகண்ட் ஒபைப் என்பதே தெரியாது..” என்ற இந்த பேச்சுக்கு மட்டும் அங்கு இருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டனர்..



கடைசி மகள் காயத்திரி மட்டும்.. “ லிங்காவும் பேரன் தானே.. அதுவும் அவன் தான் மகன் வழி பேரன்… சாங்கியம் எல்லாம் அவனை வைத்து தானே செய்யனும்..” என்று காயத்திரி சொன்னது தான் தாமதம்.. ஆள் ஆளுக்கு அவளை பிலு பிலு என்று பிடித்து விட்டனர்..

அவர்கள் பேச்சை அதற்க்கு மேல் தொடர விடாது.. வேலையாள் ஒருவன் இவர்கள் அறைக்கு வெளியில் நின்று..

“சின்ன ஐய்யா வந்து விட்டார்..” என்று தெரியப்படுத்தியதில், லிங்கேஷ்வரன் இங்கு வந்ததில் கோபமா… ? இல்லை வேலையாள் அவனை சின்ன ஐய்யா என்று சொன்னதில் கோபமா..? சொன்னவனை காரணமே இன்றி திட்டினாலுமே, அனைவரும் ஒன்றாக கூடத்திற்க்கு வந்தனர்..

வந்தவர்கள் கண்ட காட்சி பூத உடலுக்கு ஒரு பக்கம் இருந்த இருக்கையில் சோமசுந்தரம் அமர்ந்து இருந்தார் என்றால், மறுப்பக்க இருக்கையில் லிங்கேஷ்வரன் அமர்ந்து இருந்தான்..

அந்த காட்சியை பார்த்தவர்கள் கண்ணுக்கு யாரும் சொல்லாமலேயே பதிமூன்று ஆண்டுகள் கழித்து பார்த்தாலுமே, அவனை அனைவருக்கும் அடையாளம் தெரிந்தது .. காரணம்.. அச்சு அசல் அவன் சோமசுந்தரத்தை போலவே இருந்தது தான் காரணம்..



உயரம் மட்டும் சோமசுந்தரம் ஆறு அடி என்றால் லிங்கா.. இரண்டு இன்ச் அதிகமாக இருந்தான்.. அவ்வளவே.. மத்திய நிறம் ஆகட்டும்.. உடல் கட்டு ஏன் அந்த மேனலிசம் கூட அச்சு வார்த்தது போல் சோமசுந்தரத்தையே ஒத்து இருந்தான்..

இப்போது வந்த உறவுகள் அனைவருமே சோமசுந்தரத்தின் கை பிடித்து ஆறுதல் சொன்னவர்கள் ஒன்று போல் லிங்காவின் கை பிடித்தும் தான் சென்றனர்..



இதை பார்த்த அவனின் சித்தி சுகந்திக்கு அந்த காட்சி ரசிக்கும் படி இல்லை.. அதனால் கணவனிடம்.. “ உங்க அப்பா பக்கத்தில் போய் உட்காரலாமே..” என்று அந்த வீட்டின் மருமகளாக பேசினார்..



அந்த பேச்சில் ஜெய பிரகாஷ் சுகந்தியை முறைத்து பார்த்தவர்.. பின் எதுவும் பேசாது அங்கு இருந்த இருக்கையில், அதாவது தூரம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டவரின் பார்வை முழுவதுமே தன் மகனிடம் தான்..



பதிமூன்று வருடங்கள்.. நீண்ட வருடங்கள்.. தன் சொந்த மகனை பார்க்காது இப்போது பார்க்கிறார்… இங்கு இருந்து போகும் போது பதினெழு வயது முடிந்து இருக்குமா..?



அப்போதே கொஞ்சம் உயரம் தான்.. ஆனால் அப்படி ஒல்லியாக இருந்தவனா இவன் என்று வித்தியாசம் தெரியாத அளவுக்கு மகனின் மாற்றம் இருந்தது..



மகனை பார்க்க பார்க்க ஏதேதோ எண்ணங்கள் அவர் மனது முழுவதும் ஆக்கிரமித்து கொண்டதில், தன்னால் அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது..



அதை துடைக்க கூட இல்லாது தான் அமர்ந்து இருந்தார்.. எழவு வீடு என்பதால், அவரின் இந்த அழுகையை வேறு மாதிரி பார்க்கவில்லை..



ஆனால் சுகந்திக்கு பார்க்க பார்க்க பக் பக் என்று தான் அடித்து கொண்டது.. ஜெய பிரகாஷ் பதிமூன்று ஆண்டுகள் கழித்து மகனை பார்த்ததில் ஒன்று நினைக்க..

அதற்க்கு எதிர் பதமாக சுந்தரி.. போனவன் வர மாட்டான் என்று நினைத்தால், வந்து நிற்கிறான்.. அதுவும் யாரும் சொல்லாமலேயே இவன் இன்னாரின் பேரன் என்ற அடையாளத்தோடு..



லிங்காவுக்கு வந்தவர்கள் கொடுத்த மரியாதை பார்க்க பொறுக்க முடியவில்லை சுகந்தியால்.. இன்னொரு மூலையில் நின்று கொண்டு இருந்த தன் இரு மகள்கள் அக்க்ஷயா அனன்யாவை பார்த்தவள் மகள்களை அழைத்து ..



“ தாத்தா பக்கத்கதில் நில்..” என்று சொல்ல..



“ போம்மா நீங்க தானே கிட்ட போகாதிங்க… இன்பெக்ஷன் ஆகும் என்று சொன்னிங்க.. இப்போ போ என்றிங்க.. அதுவும் இல்லாம… அந்த பூ.. பாட்டி மேல தெளிக்கும் பன்னீர் எல்லாம் ஒரு மாதிரி தலை வலியா இருக்கு மா..” என்று அந்த இடத்தை விட்டு அகன்று விட்டனர்…

மூத்தவள் அக்ஷாயாவுக்கு பதினான்கும் இளையவள் அனன்யாவுக்கு வயது பன்னிரெண்டே ஆனவர்களுக்கு பெரியவர்களுக்கு இடையே நிகழும் சூட்சுமம் எதுவும் தெரியவில்லை போலும்..



பின் வேதவல்லியின் பூத உடல் சகல மரியாதையோடு கணவன் மகன் மகள் பேரன் பேத்தி என்று சுற்றாத்தார் சூழ அவரின் இறுதி யாத்திரை முடிவடைந்து குளித்து அன்றைய இரவு உண்ணும் வேளயில்..



அந்த வீட்டின் மூத்த மருமகன் சிவபிரகாஷ்…லிங்காவிடம்… “உங்களுக்கு ஸ்டார் ஒட்டலில் ரூம் புக் செய்து விட்டேன்..” என்ற பேச்சில்..லிங்கா அவரை யோசனையுடன் பார்த்தான்..

பின் அவன் தன் தாத்தாவான சோமசுந்தரத்தை பார்க்க.. அவர் எதுவும் பேசாது அமைதி காக்கவும் லிங்கா.. “ நான் என் அறையிலேயே தங்கி கொள்கிறேன்..” என்று விட்டான்..

லிங்காவின் அந்த பதிலில் சுகந்தி.. “ உன் அறையா..?” என்று ஒரு மாதிரி இழுத்து கேட்கவும், லிங்கா சுகந்தியை பாராது தன் சாப்பாட்டில் கண்ணா இருக்க..

மீண்டும் சிவ பிரகாஷ் தான்… “ இப்போ அந்த அறையில் தான் அக்ஷ்யா அனன்யா இருக்காங்க..” என்ற பதிலில்..

“ சரி நான் கெஸ்ட் ரூமில் தங்கி கொள்கிறேன்..” என்று விட்டான்..



அவனின் அந்த பதிலில் ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு ஏக கொண்டாட்டமாக ஆகி விட்டது.. முதல் நாளே அவனை கெஸ்டாக ஆக்கி விட்டதில்..



பின் அடுத்து அடுத்து வேதவல்லிக்கு ஆன சடங்குகள் ஒன்று கூட குறையில்லாது நடந்து கொண்டு இருந்தன.. லிங்கேஷ்வரனிடம் இருந்து பேச்சுக்கள் அதிகம் இல்லை..



ஆனால் அனைத்தையுமே கவனித்து கொண்டு தான் இருந்தான்… உறவு முறைகளை மனதோடு உள்வாங்கி கொண்டும், அவர்களை சின்ன வயதில் தான் பார்த்ததிற்க்கும் இப்போது இருப்பதிற்க்கு இருக்கும் வித்தியாசங்களையும்..



பெரிய அத்தை காஞ்சனாவுக்கு ஒரு மகன் ஒரு மகள்.. அவன் தந்தை ஜெய பிரகாஷுக்கும் காஞ்சனாவுக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால், அவர்கள் பிள்ளைகளுக்கு இவன் கனடா செல்லும் போதே திருமண வயதை எட்டி இருந்தனர்..



இப்போது அவர்களுக்கு திருமணம் முடிந்து இருவருமே பிள்ளை குடும்பம் என்று ஆகி விட்டனர்.. அது எல்லாம் ஒன்றுமே இல்லை அவனுக்கு.. அவன் கவனித்தது இது தான்.. அனைவருமே இங்கு தான் இருந்தனர்..



பாட்டியின் காரியத்திற்க்கு இருக்கிறார்களோ என்று அவன் எண்ணும் படி எல்லாம் அவர்கள் பேச்சுக்கள் கிடையாது.... இங்கு தான் இருப்பது போல் தான் அவ்வளவு உரிமையான பேச்சுக்கள் இருந்தன..



அடுத்து இதோ அவன் இங்கு வந்து பதினைந்து நாள் கடந்து விட்டது.. வீட்டை சுற்றி பார்க்கும் சாக்கில் அனைத்து அறைகளைகளுக்கும் வளம் வந்து விட்டான்..



எங்கும் அவன் அன்னையின் ஒரு சின்ன புகைப்படம் கூட அந்த வீட்டில் அவன் கண்ணில் மாட்டவில்லை.. ஏதோ ஒரு முடிவில் உதவாத பொருட்களை போட்டு வைத்து இருக்கும் அறையில் போன போது உடைந்த அவனின் அன்னையின் புகைப்படம் அவன் கண்ணில் பட்டது..



அதை பார்க்க பார்க்க அவன் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் அலை மோதி நின்றது தான்.. இதற்க்கு தான் இங்கு வர அவன் தயங்கியது..



ஆனால் இங்கு நடப்பதை பார்க்க பார்க்க அப்படி ஒரு கோபம் அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்தது.. இதற்க்கு தான் தன்னை நாட்டை விட்டே போகும் படி செய்தார்களா என்ற சந்தேகம் வந்த முதல் நாளே அவன் மனதிற்க்குள் வந்து விட்டது..



போக போக.. அவன் நினைத்தது தான் சரி என்பது போலான நகழ்வுகள் தான் அங்கு நடந்தேறியது..



முதலில் இருந்தே அவன் தாத்தா அவனையோ அவன் அன்னையையே ஒரு வார்த்தை தவறாக பேசியது கிடையாது.. திட்டியதும் கிடையாது..



அதனால் இந்த நாளில் அவர் அவனிடம் பேசும் போது இவனும் பேசினான்… இவர்கள் பேசும் போதே எங்கு இருந்து யார் பார்ப்பார்களோ… யாராவது ஒருவர் இடையில் வந்து சோமசுந்தரத்திடம்..



தாத்தா.. மாமா அப்பா என்ற அழைப்பில் “ எவ்வளவு நேரம் உட்கார்ந்துட்டு இருப்பிங்க.. முதுகு வலிக்கும் தானே படுங்க “ என்று அவரை அவர் அறைக்கு அனுப்பி விடுவர்..



இல்லை மாத்திரை… சாப்பிடும் நேரம்… என்று ஏதாவது ஒரு காரணம் அவர்களுக்கு இருக்கும்.. இதில் லிங்கேஷ்வரன் கவனித்தது இது தான்..



தாத்தா தன்னிடம் நெருங்கும் போது தான் இது போலான நிகழ்வுகள் நடந்தன… இதில் இருந்து அவன் தெரிந்து கொண்டது தாத்தா தன்னை நெருங்குவது பிடிக்கவில்லை என்பதும்..



அதோடு தான் அந்த வீட்டிற்க்கு வந்த விருந்தாளி தான் என்பது போலான ஒரு தோற்றத்தை கொடுப்பது போல் தான் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் பேச்சுக்கள் இருந்தன..



அதோடு அந்த வீட்டில் அடுத்த தலை முறையானவர்களையும் அவன் கவனித்தான்.. அதில் பெரிய அத்தைகளின் பிள்ளைகள் குடும்பம் என்று ஆகி இருக்க தன் தந்தையின் இன்னொரு குடும்பதின் பெண்கள் அக்க்ஷயா அனன்யா .. அந்த வயதிற்க்கே உரிய பேச்சுக்கள் .. பொழுது போக்குகள் என்று கழித்தார்கள் என்றால், சின்ன அத்தையின் பெண் மதுமதி..



அனைவரையுமே லிங்கா கவனித்தான் தான்.. ஆனால் மதுவின் மீது அவனின் பார்வை படியும் போது மட்டும் அவன் கண்கள் அவள் மீது சிறிது அதிகமாகவே படிந்து மீண்டது..



காரணம் அந்த வீட்டில் மற்றவர்களை விட அந்த பெண் தனித்து அவன் கண்களுக்கு தெரிந்தாள்…



மற்றவர்கள் சின்னவர் முதல் பெரியவர்கள் வரை,, அந்த வீட்டில் தான் தான் உரிமைப்பட்டவர்கள் போல் தான் நடந்து கொண்டனர்.. ஆனால் மதுமதி … சிறிது தள்ளி வைத்து , அதாவது தன்னை போல் அனைவர்களையும் கவனிப்பது போல அவனுக்கு தோன்றியது.. அதோடு அவளை பார்க்கும் போது எல்லாம் தான் இந்தியாவை விட்டு செல்லும் போது இவளுக்கு என்ன வயது இருக்கும்.. எட்டு ஒன்பது…



அதோடு தான் இந்தியாவை விட்டு செல்ல முடிவு எடுக்க மற்றொரு காரணம் இவளை வைத்தும் தன்னிடம் பேசிய அந்த பேச்சுக்களும் தானே… லிங்கா அவளை கவனிப்பதற்க்கு இது மட்டும் தான் காரணமா.. கண்டிப்பாக இல்லை..



லிங்கா அனைவரையும் பற்றி அவன் கணித்து கொண்டு இருந்த போது அவன் பாட்டியின் காரியமும் முடிவடைந்து அடுத்து மறுநாள் எண்ணைய் சீயக்காய் குளியலோடு கறு சோறு சேர்ப்பும் முடிவடைந்த அன்று.



எப்போதும் போல் அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை சிவ பிரகாஷ் லிங்காவிடம்..



“ அப்புறம் பா.. இத்தனை நாள் நீ இந்தியா இருந்ததில் உன் மாமா தான் அந்த சூப்பர் மார்க்கெட்டை தனியா பார்த்து கொண்டு திண்டாடி போய் இருப்பார் .. பாவம்..” என்று தன் பேச்சை ஆரம்பித்தார்..



லிங்காவின் மாமா கலைசெல்வன் கனடாவில் சொந்தமாக ஒரு சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறார்.. லிங்கா படித்து முடித்ததும், அதன் முழு பொறுப்பையும் லிங்கா தான் ஏற்று கொண்டான்.. இவன் பொறுப்பு ஏற்ற பின் ஒரு சூப்பர் மார்க்கெட்டாக இருந்ததை மூன்றாக ஆக்கி விட்டு பொருளாதாரத்தில் தன் மாமனை இன்னும் வளர்த்தி விட்ட பெருமை லிங்காவையே சேரும்..



அதை குறிப்பிட்டு சொன்ன சிவ பிரகாஷ் பின் பேச்சோடு பேச்சாக.. “ ப்ளைட் டிக்கெட் எப்போ புக் செய்து இருக்க லிங்கா..?” என்று கேட்க..



இங்கு வந்ததில் இருந்து லிங்கா என்ன செய்தானோ.. அதையே தான் இப்போதும் அவரை பேச விட்டு கேட்டு கொண்டு இருந்தான்..



ஆனால் சோமசுந்தரம் மனைவி இறந்ததில் இருந்து எந்த பேச்சுக்கும் அமைதி காத்து கொண்டு இருந்தவர் மூத்த மாப்பிள்ளையின் இந்த பேச்சுக்கு..



“ இல்ல மாப்பிள்ளை வக்கீலை வர சொல்லி இருக்கேன்.. அவர் வந்து போன பின் மத்தது பேசிக் கொள்ளலாம்” என்று அவர் சொன்னது தான் தாமதம்..



ஆள் ஆளுக்கு… “ இப்போ இதுக்கு என்ன அவசியம்…? நீங்க இருக்கும் போது இது எல்லாம் வேண்டாம்…ஏன் இந்த அவசரம்..?” என்று இது போலான வார்த்தைகள் தான் அவர் அவர் உறவு முறை வைத்து சோமசுந்தரத்திடம் சொன்னது..



சோமசுந்தரமோ… “நான் நல்லா தான் இருக்கேன்.. ஆனா எப்போதும் இது போல் இருப்பேன் என்று சொல்ல முடியாது தானே.. வயது ஆகுது… என் காலத்திற்க்குள் அவர் அவருக்கு சேர வேண்டிய உரிமையை கொடுத்து விட்டால் என் இறுதி காலமாவது நிம்மதியாக இருக்கும்..” என்று அவர் சொல்லி முடிக்கவும், அவர் குடும்ப வக்கீல் வரவும் சரியாக இருந்தது..



வந்த வக்கீல் உடனே எல்லாம் சோமசுந்தரம் எழுதி இருக்கும் உயிலை வாசிக்கவில்லை…. சேமங்கள் விசாரித்த பின் மது கொடுத்த காபியை அருந்தி விட்டு பின் .. படிப்பு தொழில் என்று பேசி முடித்த பின் தான் தன் கையில் இருந்த சோமசுந்தரம் சொல்லி தான் எழுதிய உயிலை வாசித்தார்..



அதாவது தியேட்டர் பெரிய மகளின் வாரிசுக்கும் கல்யாண மண்டபம் சின்ன மகளின் வாரிசுக்கும், மால் ஊரில் இருக்கும் நிலங்கள் பின் ஷேர் மார்க்கெட்டில் இவர்களுக்கு இருக்கும் பங்குகள், பல் வேறு இடத்தில் இருக்கும் வீடுகள் அனைத்தும் மகனின் பெண் வாரிசுகளுக்கு சேரும் என்று வாசிக்க..



இவ்வளவு சொத்து வந்த பின்னும் சோமசுந்தரத்தின் பிள்ளைகள் யாரின் முகத்திலும் மகிழ்ச்சி என்பது இல்லை… இந்த குடும்பத்திற்க்கு என்று ஊரில் ஒரு நல்ல பெயர் இருக்கிறது..



அந்த பெயரை பெற்று தந்ததா..? இல்லை பெற காரணமாக இருந்ததா..? என்று பிரித்து அறிய முடியாது.. ஆனால் இந்த குடும்பம் என்றால் அனைவரின் வாயில் இருந்து வரும் பெயர்..



S.M பள்ளியும், கல்லூரியும் .. பின் இந்த வீடும் தான்.. சென்னையில் முக்கியமான இடத்தில் ஏக்கரில் வளைத்து போட்டு கட்டிய இதை வீடு என்பதை விட மாளிகை என்று சொன்னால் சரியாக இருக்கும்..



குடும்ப பெயர் ஒரு பக்கம் என்றால், இதன் மதிப்பு இதோ இத்தனை நீண்டு வக்கீல் படித்தாரே உயிர் அனைத்துமே ஒன்று சேர்ந்தாலுமே, ஈடாகாது..



அப்படி பட்ட இரண்டை உயிலில் எழுத காணும் எனும் போது அனைவரும் அதிர தானே செய்வர்…


 
Well-known member
Joined
May 11, 2024
Messages
265
யார் இந்த வீட்டின் விருந்தினர் என்பதை புரியாம இருக்குதுங்க இந்த கும்பல்
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
யார் இந்த வீட்டின் விருந்தினர் என்பதை புரியாம இருக்குதுங்க இந்த கும்பல்

யார் இந்த வீட்டின் விருந்தினர் என்பதை புரியாம இருக்குதுங்க இந்த கும்பல்
புரிய வைத்து விடுவான் நம் நாயகன்.. நன்றி பா.. தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்.. மீண்டும் நன்றி
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
Wow... Super start.... 🥰🥰🥰🥰

சொந்தமா இதுங்க எல்லாம் பேராசை கூட்டங்க.... 🤮🤮🤮🥶🥶🥶🥶🥶

யார் வீட்டுல யாரை விருந்தாளி ஆக்கப் பார்க்குறீங்க..... 😤😤😤😤🤫🤫🤫🤫
இனி நீங்க எல்லாம் அவன் வீட்டுல ஒண்டிட்டு இருங்க.... 🤭🤭🤣🤣🤣


செத்து போன பாட்டியும் லேசுப் பட்டவங்க இல்லை போல.....🙄. சரியான வில்லியா இருந்துருப்பாங்களோ..... 🤔🤔🤔 மருமக தூக்குல தொங்கி இருக்காங்க..... 😓😓😓😓

ஜெயப் பிரகாஷ் வேஸ்ட்..... 🤐🤐🤐🤐🤐🤐🤐

லிங்கா அவனோட உரிமையை எடுத்துக்கிட்டு அவன் யாருன்னு எல்லாருக்கும் புரிய வைக்கணும்... 🤓🤓🤓🤓🤓
மது தான் ஹீரோயின் ஆ... 😍
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Ada loosunhala
Thatha tezhiva ezhithitar pola
Linga aaatam arambama
ஆம் உண்மை தான்.. தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும் நன்றி🙏💕
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Wow... Super start.... 🥰🥰🥰🥰

சொந்தமா இதுங்க எல்லாம் பேராசை கூட்டங்க.... 🤮🤮🤮🥶🥶🥶🥶🥶

யார் வீட்டுல யாரை விருந்தாளி ஆக்கப் பார்க்குறீங்க..... 😤😤😤😤🤫🤫🤫🤫
இனி நீங்க எல்லாம் அவன் வீட்டுல ஒண்டிட்டு இருங்க.... 🤭🤭🤣🤣🤣


செத்து போன பாட்டியும் லேசுப் பட்டவங்க இல்லை போல.....🙄. சரியான வில்லியா இருந்துருப்பாங்களோ..... 🤔🤔🤔 மருமக தூக்குல தொங்கி இருக்காங்க..... 😓😓😓😓

ஜெயப் பிரகாஷ் வேஸ்ட்..... 🤐🤐🤐🤐🤐🤐🤐

லிங்கா அவனோட உரிமையை எடுத்துக்கிட்டு அவன் யாருன்னு எல்லாருக்கும் புரிய வைக்கணும்... 🤓🤓🤓🤓🤓
மது தான் ஹீரோயின் ஆ... 😍
முன் நடந்ததை வைத்து அவனை சுலபமாக எடை போட்டு விட்டார்கள்
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Wow... Super start.... 🥰🥰🥰🥰

சொந்தமா இதுங்க எல்லாம் பேராசை கூட்டங்க.... 🤮🤮🤮🥶🥶🥶🥶🥶

யார் வீட்டுல யாரை விருந்தாளி ஆக்கப் பார்க்குறீங்க..... 😤😤😤😤🤫🤫🤫🤫
இனி நீங்க எல்லாம் அவன் வீட்டுல ஒண்டிட்டு இருங்க.... 🤭🤭🤣🤣🤣


செத்து போன பாட்டியும் லேசுப் பட்டவங்க இல்லை போல.....🙄. சரியான வில்லியா இருந்துருப்பாங்களோ..... 🤔🤔🤔 மருமக தூக்குல தொங்கி இருக்காங்க..... 😓😓😓😓

ஜெயப் பிரகாஷ் வேஸ்ட்..... 🤐🤐🤐🤐🤐🤐🤐

லிங்கா அவனோட உரிமையை எடுத்துக்கிட்டு அவன் யாருன்னு எல்லாருக்கும் புரிய வைக்கணும்... 🤓🤓🤓🤓🤓
மது தான் ஹீரோயின் ஆ... 😍
நன்றி பா நன்றி பா தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும் நன்றி பா🙏💕
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Sothuku urimaipattavan vanthutan....avana poyi guest ah treat panringale😎😎😎nice interesting start sis
உண்மை தான்.. தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும் நன்றி நன்றி பா🙏💕
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
330
Moootha marumagan…. Veetoda mappillaiya irukkira avarellam veettu vaarisai kelvi ketkirar 🥴🥴🥴

Linga and Madhu than pair pola

Linga ammavai yean vittanga??? Avan appa rendam kalyanam yean pannar? Avanga Canada pogum podhu Sunthari magal ku 1 year… 😖😖😖
 
Member
Joined
May 11, 2024
Messages
83
தாத்தா வும் சரி அப்பா வும் சரி லிங்காகிட்ட பேசவே இல்ல... சின்ன அத்தை மட்டும் தாசன் கொஞ்சம் ஆதரவா பேட்டி இருக்கார்... மது தான் ஜோடிப் போல் லிங்கா வுக்கு
 
Top