Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Pirithariyaa Pithana Podhum...17

  • Thread Author
அத்தியாயம்…17

அந்த காவல் அதிகாரி சுவாமி நாதனிடம் சிவ பிரகாஷ் .. சாதரணமாக பேசிய வாறு கண் சாடை காட்டிய பின் தனியாக அழைத்து செல்ல பார்த்தவரை தடுத்து நிறுத்திய லிங்கேஷ்வரன்..

“எது என்றாலும் என் கேபினுக்கு வாங்க பேசி கொள்ளலாம்..” என்று காவல் அதிகாரியை அழைத்தான்..

இப்போது அந்த காவல் அதிகாரி என்ன என்பது போல் திரு திரு என்று விழித்து கொண்டு இருக்க… சிவ பிரகாஷ் தான்..

“ இவர் அந்த தற்கொலை கேசை ஹான்டில் செய்யும் போது நான் தானே இந்த காலேஜ் சேர்மேனா இருந்தேன். அப்போது அந்த தற்கொலை அதை பற்றியதான விசயம் எனக்கு தானே தெரியும்.. அது தான் என் கிட்ட பேச நினைக்கிறார்..” என்று அவரை தனியே அழைத்து செல்வதற்க்கு காரணத்தை கூறினார்..

அதற்க்கு லிங்கா.. “ முதல்ல அப்போ கூட நீங்க இந்த காலேஜ் சேர்மேன் கிடையாது.. தாத்தாவுக்கு உதவியா நீங்க இருந்திங்க,.. அவ்வளவே தான்..” என்று அழுத்தம் திருத்தமாக சொன்ன லிங்கா.



இப்போது அந்த காவல் அதிகாரியை பார்த்து.. “முன் நீங்க செய்த அந்த விசாரணையை பத்தி தான் எனக்கு தெரிய வேண்டி இருக்கு,. அப்போ முறையா அதன் விவரங்கள் நீங்க என் கிட்ட தானே சொல்லனும் சர்..” என்றவனின் வார்த்தையில் இருந்த அந்த பணிவு குரலில் காட்டாது கூறினான்..

இப்போது அந்த போலீஸ் அதிகாரிக்கு குழப்பம் ஏற்பட்டது.. என்ன இது.. ஒரே குடும்பத்தவர் தானே.. முன் செய்த விசாரணை தோண்டினால் பிரச்சனை இவர்களுக்கு தானே.

இப்போது விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி தன்னிடம் முன் செய்த விசாரணையை பற்றிய விவரம் தேவை என கேட்டது தான் அவர் இங்கு வர காரணம்..ஆனால் இங்கு நடப்பதை பார்த்தா யோசனையுடன் அவர் சிவ பிரகாஷ், லிங்காவை பார்த்தார்..

லிங்காவோ சிவ பிரகாஷ் பேச்சை சட்டை செய்யாது அந்த காவல் அதிகாரியிடம்.. “ இப்போ நம்ம கேபினுக்கு போகலாமா.?” என்று கேட்டான்..



அந்த காவல் அதிகாரிக்கு இப்போது தான் விசயம் மெல்ல மெல்ல பிடி படலாயிற்று.. நாம் இங்கு வந்தது தவறோ என்று நினைத்து கொண்டே தான் அவர் லிங்காவின் ஆபிஸ் அறைக்கு சென்றது..

பின் லிங்கா முன் நடந்ததை பற்றி கேட்டதும் ஒரு பதிலும் அந்த காவல் துறை அதிகாரியிடம் ஒழுங்காக வரவில்லை..

முடிவில்.. “ நீங்க என்ன விசாரணை செய்து இருக்கிங்க ஆபிசர். எனக்கு புரியல. முதல்ல இறந்த பெண்ணை பற்றி நீங்க முறையா விசாரணை நடத்தி இருந்தால், அடுத்து இரண்டு பெண் மரணத்தை தடுத்து இருக்கலாமே..” என்ற லிங்காவின் பேச்சு கொஞ்சம் கோபத்துடன் தான் இருந்தது..

இப்போது அந்த காவல் துறை அதிகாரிக்கும் கொஞ்சம் கோபம் எட்டி பார்த்தது.. தன்னை திறமை இல்லாதவன் போல் பேசிய லிங்காவின் பேச்சில்..

அதில் விளைந்த கோபத்தில்.. “ஆமா ஆமா முதல் பெண் இறந்த போதே நான் முறையா விசாரணை செய்து இருந்து இருந்தால் நீங்க சொன்னது போல அடுத்து இரண்டு பெண்கள் இறந்து இருக்க மாட்டாங்க தான்..” என்று அந்த காவல் துறை அதிகாரியின் பேச்சில் லிங்காவின் பார்வை அவரை ஆராய்ச்சியாக பார்த்தது.

காரணம்.. அடுத்து அவர் நல்ல விதமாக ஏதும் சொல்ல போவது இல்லை என்று தெரிந்ததினால்.. அவன் நினைத்தது போல் தான் அந்த காவல் அதிகாரி..

“ஏன்னா முன் விசாரணையிலேயே தான் உங்க காலேஜ் இழுத்து மூடி இருப்பிங்களே..” என்று எகத்தாளமாக சொன்னார்..

லிங்காவின் பேச்சில் இருந்தே இப்போதைய சேர்மேன் இவன் தான் எனும் போது.. பணம் கொழிக்கும் இதை இழக்க நினைப்பானா என்று நினைத்து தான் அவர் கூறினார்..

ஆனால் லிங்காவோ.. “அப்போ அது தற்கொலை கிடையாது கொலை.. அது தானே..?” என்று கேட்டவன்..

பின் லிங்கா… “ஒன்றை நீங்க நல்லா புரிஞ்சிக்கனும்.. இந்த காலேஜ் எனக்கு முக்கியம் தான்.. அது நான் இல்ல என்று சொல்லவில்லை.. ஆனால் உண்மை வெளி வந்தால் பிரச்சனை வரும் என்று இருந்தால் நான் அதை எதிர் கொள்வேன் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் என் கிட்ட காட்ட வேண்டாம்..” என்று லிங்கா காட்டமாக தான் பேசினார்.



“ நீங்க ஒரு போலீஸ் அதிகாரி கிட்ட பேசுறிங்க அதை முதல்ல நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்க.” என்ற அந்த காவல் அதிகாரியின் மிரட்டலில் லிங்கா சிரித்தவன்..

“கொஞ்ச நேரம் முன் நீங்க என் கிட்ட பேசுனதை காவல் துறை அதிகாரி மாதிரியா இருந்தது.. இந்த காலேஜ் சேர்மேன் போல தானே உங்கள் பேச்சு இருந்தது.” என்று லிங்காவும் சூடாகவே பதில் அளித்தான்..

பின் விரைத்து. அவர் எழுந்து கொள்ள.. “ நான் பண்ற மூவ்ல கண்டிப்பா நீங்க முன் விசாரணை பத்தின டீடையல் கொடுத்து தான் ஆக வேண்டும்… “ என்ற பேச்சை காதில் வாங்கி கொண்டு தான் அவர் வெளியில் வந்தது..

வெளியில் வந்தவருக்கு முகம் எல்லாம் வியர்த்து விட்டது.. லிங்காவிடம் வீராப்பாக அவர் பேசி விட்டாலுமே, உள்ளுக்குள் அவருக்கு பயமாக தான் இருந்தது..

இப்போது இதை ஹான்டில் செய்யும் போலீஸ் அதிகாரி.. விலை போகாதவர்.. அவர் உண்மையை கண்டு பிடித்து விட்டால், முன் நடந்ததையும் வெளியில் எடுப்பார்.. அதன் பின்.. எல்லோரும் அவர்கள் கல்லூரியை காப்பற்ற தான் முயல்வர்.. அந்த தைரியத்தில் தான் முன் சொன்னதை அவர் செய்து முடித்தது.. லிங்கா வெளிநாட்டில் இருந்து குத்திப்பான்.. அதுவும் அவன் இப்படி இருப்பான் என்று நினைத்தும் பார்க்கவில்லை.. ஒரு பயத்துடன் தான் அவர் சென்றது.

கனடாவில் இருந்து கலைசெல்வன் பேசியில் லிங்காவை அழைத்தவர்.

“என்ன மாப்பிள்ளை ரூமை இங்கு ரிசர்வ் செய்து விட்டு அங்கு ஒரு ப்லோரே ரெடி செய்துட்ட போல..” என்று கலாய்க்க.. மருமகனும் மாமாவின் கலாட்டாவில் கலந்து கொண்டவனாக பேசினான்.

கலைசெல்வனுக்கு லிங்காவின் பேச்சுலும் குரலிலும், இன்று ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார்.. ஏதோ என்றால், நல்ல விதமாக தான்

“என்ன மாப்பிள்ளை பேச்சில் ஒரு குதுகலம் தெரியுது..” என்று அதை வெளிப்படையாகவே கேட்டு விட்டார்..

மாமனின் பேச்சில் லிங்கா ஒரு நிமிடம் அமைதியானவன்.. பின் இன்னும் குதுகலமான குரலில்..

“அப்படி வெளிப்படையாவா தெரியுது..?” என்று கேட்க..

கலைசெல்வனோ.. “ மாப்பூ. என்ன என் மகளை பார்த்துட்ட போல..?” என்று கேட்டவருக்கு..

“எங்கே நீங்க மகளை பெத்து வெச்சிங்க.. இரண்டு தடி பயளை தான் பெத்திங்க.. பெண் பெத்து இருந்தா நான் இப்படி மத்தவங்க கிட்ட மாட்டி இருக்க மாட்டேன் தானே..” என்று லிங்கா தன் கிண்டல் பேச்சின் மூலம் கலைசெல்வனின் பேச்சை ஒத்து கொண்டான்..

அதை கேட்டதும் கலைசெல்வன் உள்ளார்ந்த மனதோடு மகிழ்ந்து.. “ மாப்பிள்ளை ரொம்ப சந்தோஷம் பா.. இப்போ தான் என் மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.” என்று கலைசெல்வனின் பேச்சின் மூலமே அவர் எந்த அளவுக்கு இந்த விசயம் அவருக்கு மகழ்ச்சியை கொடுக்கிறது என்பதனை லிங்காவினால் புரிந்து கொள்ள முடிந்தது..

கலைசெல்வன் ஒரு யூகத்தில் தான் மருமகனிடம் கேட்டது.. அப்படி இருக்குமோ என்று.. ஆனால் மருமகனின் அப்படி தான் என்ற பதிலில் அவருக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது என்பதனை லிங்காவினால் கூட புரிந்து கொள்ள குடியாது.

லிங்கா கனடாவில் இருந்த போது டிப்பார்ட்மெண்ட் முழுவதும் லிங்காவின் கீழ் தான் இருந்தது.. கலைசெல்வனே வந்து சும்மா ஒரு மேற்பார்வை பார்ப்பார் அவ்வளவே.

அப்படி அங்கு அவர் இருந்த போது.. பெண்கள் லிங்காவை ஆர்வமுடன் பார்ப்பது.. ஏன் ஒரு சில பெண்கள் டேட்டிங்க கூட அழைத்து இருக்கிறார்கள்.. ஆனால் இவன்..

“ எனக்கு இன்டர்ஸ்ட் இல்லை..” என்று சொல்லி மறுத்து விடுவான்..

அப்போது எல்லாம் கலைசெல்வன் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.. இன்னும் கேட்டால் பெருமை தான் பட்டார்.. வாய்ப்பு இல்லாது நல்லவனாக இருப்பதில் என்ன அதிசயம். அது வாய்த்து உத்தமனாக இருப்பதில் தான் இருக்கிறது பெருமை..

ஆனால் இரண்டு பெண்கள் காதல் சொல்லி திருமணம் என்று சொன்ன போதும் லிங்கா மறுத்த பின் தான் கலைசெல்வன் தன் மருமகனை கவனிக்க ஆரம்பித்தார்.

இந்த வயதில் இருக்கும் எந்த உணர்வும் இல்லாது ஒரு இயந்திர தன்மையுடன் அவன் இருப்பதே அவருக்கு உரைத்தது.

பின் தள்ளி போடாது மருமகனிடம் தனியே விசாரித்தார்.. “அந்த பெண் தமிழ் பெண்ணா தானேடா இருந்தாங்க. பார்க்கவும் நல்லா இருந்தா பெண்..

அதோட அவங்க குடும்பத்தை எனக்கு தெரியும் நல்ல மாதிரி தான்.. ஏன் வேண்டாம் என்று சொல்ற.” என்ற கலைசெல்வனின் நீண்ட கேள்விக்கு லிங்கா..

“எனக்கு பிடிக்கவில்லை மாமா ..” என்று ஒரே வரியில் பதில் அளித்தான்..

“அப்போ நான் உனக்கு பெண் பார்க்கவா லிங்கா..?” என்று கேட்டதற்க்கும்

“ வேண்டாம்..” என்று விட்டான்..

அப்போதும் கலைசெல்வன் விடாது.. “ இப்போது வேண்டாமா.. இல்ல எப்போதும் வேண்டாமா..” என்ற கேள்விக்கு..

இது வரை கலைசெல்வன் முகத்தை பார்க்காது பேசிக் கொண்டு இருந்த லிங்கா.. இப்போது அவரை திரும்பி பார்த்த வாறு அமர்ந்து கொண்டவன்..

“ எனக்கு நிஜமா நீங்க கேட்டதற்க்கு பதில் தெரியல என்று தான் சொல்லனும் மாமா. இந்த கல்யாணம் அதன் பின் வாழ்க்கை இதுல எல்லாம் எப்போ எனக்கு நம்பிக்கை வருதோ.. எந்த பெண் அந்த நம்பிக்கையை எனக்கு கொடுக்கிறாளோ. அப்போ நான் அந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்வேன் மாமா..” என்றவனின் பேச்சில் கலைசெல்வனுக்கு அப்போது அவ்வளவு கவலை..

தன் அக்கா வாழ்ந்த வாழ்க்கையை பார்த்து தானே இவன் இப்படி பேசுகிறான்.. அதோடு அந்த பெண் மேகா.. பாசம் காண்பித்தவளிடம் அந்த பாசம் எப்போதும் வேண்டும் என்று தானே அவன் நினைத்தான்..

ஒரு சின்ன விசயம் அதை ஊதி இந்த அளவுக்கு பெரிது படுத்தி இருக்க தேவையில்லை… வேண்டும் என்று தான் செய்தது. இதுவும் தெரியும் தான்.. ஆனால் அவரால் ஒன்றும் செய்ய இயலாது தான் தன் மருமகனை கனடா அழைத்து வந்து விட்டார்..

இருந்தும் அதன் விளைவு இவனை இந்த அளவுக்கு பாதிக்கும் என்று அவர் நினைத்து பார்க்கவில்லை.. இப்போது தான் அவர் மனது நிம்மதி ஆனது..

பின் பெண் யாருடா என்ற விசாரணையில் இறங்கும் போது தான் லிங்காவுக்கு மதுவிடம் இருந்து தொடர் அழைப்பு வர. லிங்காவின் மனதில் ஏதோ சரியில்லை என்ற உணர்ந்ததும் மாமாவின் அழைப்பை துண்டித்து மதுவின் அழைப்பை ஏற்றதும்..,. மது சொல்லப்பட்ட விசயத்தில் லிங்கா பதறி அடித்து கொண்டு..



“இதோ வருகிறேன்.. நீ எதுவும் அவசரப்படாதே..” என்று விட்டு மது இருக்கும் இடத்திற்க்கு விரைந்தான்.
















 
Well-known member
Joined
May 11, 2024
Messages
207
லிங்கா தன் கல்லுரி பற்றி கவலை இல்லை ஆனால் போலீஸ்சிடம் தற்கொலை பற்றி தெரிய வேண்டும் என்று சொல்லுகிறான்,மது ஏன் அவசரம் என்று சொல்லுகிறாள் 🤔🤔🤔🌺🌺🌺
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
போலீஸ்காரர் மாதிரியா பேசுறாரு... 😡 எல்லாரையும் ஒரே மாதிரியா நினைச்சுட்டாரு.....

என்னாச்சு மதுவுக்கு... 🤔
 
  • Like
Reactions: grg
Top