அத்தியாயம்…19
மேகாவின் புகைப்படத்தை பார்த்தும் லிங்காவுக்கு அந்த பெண்ணின் முகம் பார்த்த முகமாக தோன்றியதே தவிர.. யார் என்ற அடையாளம் அவனுக்கு தெரியவில்லை..
பின் சிவ பிரகாஷ் பெண்ணின் பெயர் மேகா.. என்று சொல்லவும் அவனின் பார்வை புகைப்படத்தில் இருந்து சிவ பிரகாஷிடம் சென்றது..
சிவ பிரகாஷோ மச்சான் மகனுக்கு நல்லது செய்து விட்டு தான் நான் மறு வேலை பார்ப்பேன் என்பது போல்..
லிங்காவிடம்.. “ எனக்கு தெரியும் லிங்கா.. உனக்கு இந்த பெண்ணை பிடித்து விடும் என்று. அது தான் உன் மனது அறிந்து இடத்தை கொண்டு வந்தேன்.. இப்போது மேகா நம்ம ஸ்கூல்ல தான் வேலை பார்க்குது..” என்று கூடுதல் தகவலும் மேகாவை பற்றி கூறினார்..
அனைத்தும் பொறுமையாக கேட்டு கொண்டு இருந்த லிங்காவிடம் மேலும்… சிவ பிரகாஷ்.. “ மேகா நம்ம பள்ளியில் தான் வேலை பார்க்குது ..” என்றதில்..
“எப்போதிலிருந்து..?” என்று கேட்டவனுக்கு சொன்ன நாள் தான் இந்தியா வந்த பின் என்று தெரிந்து கொண்டவன்..
பின் தன் தாத்தாவிடம்.. “ ஸ்கூல் காலேஜ் வேலையில் எடுப்பதற்க்கு யார் எந்த அடிப்படையில் தேர்வு செய்யிறாங்க தாத்தா..?” என்று ஒரு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டி கேட்டான்..
“முறையா இன்டர்வ்யூ வைத்து தான் லிங்கா.. அவசர தேவைக்கு அதாவது பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு ஆசிரியர்கள் இடையில் ஏதாவது அவசர காரணத்திற்க்காக பள்ளியில் இருந்து வேலையை விட்டு சென்று விட்டால், உடனே அந்த வகுப்பு ஆசிரியரை நியமித்து விடுவோம்..
அந்த அதிகாரம் சிவ பிரகாஷ் மருமகனுக்கு நான் கொடுத்து இருக்கிறேன் லிங்கா.?” என்று அவன் கேட்காத கேள்விக்கும் தாத்தா விளக்கம் அளித்தான்..
தாத்தாவின் பேச்சில் சிவ பிரகாஷை பார்த்து கொண்டே. “ மருமகன்..?” என்று இழுத்தவனுக்கு விளக்கமாக சிவ பிரகாஷ்..
“என் மகள் சவுந்தர்யா கணவன் சேதுபதி.” என்று விளக்கம் கொடுத்தார்.
இது வரை அவன் கேள்வி படாத நபர்… பாட்டி இறப்புக்கு வந்து சென்று இருப்பாராய் இருக்கும்.. ஆனால் இவன் பார்த்து அந்த சேதுபதி இந்த வீட்டில் லிங்கா பார்த்தது கிடையாது,.
உண்மையை சொல்வது என்றால், இது வரை அந்த கேரைக்ட்டர் பத்தி லிங்கா யோசித்து பார்த்தது கிடையாது.. அப்படி தான் யோசித்தும் பார்க்காத நபர்.. தங்கள் பள்ளியில், ஆசிரியரை நியமிக்கும் அளவுக்கு அதிகாரம் இருக்கிறது.. தான் இன்னும் அனைத்திலுமே கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்து கொண்டவன்..
இப்போது “மேகாவை அப்படி தான் தேர்வு செய்து இருக்கிறாரா மிஸ்டர் சேது பதி.” என்று சிவ பிரகாஷிடம் கேட்டான்..
லிங்கா தன் தாத்தா இப்படி ஒரு சில உறவுகளை தவிர மற்றவர்களை அவன் உறவு வைத்து அழைப்பது கிடையாது.. அதே பழக்கத்தில் தான் சேதுபதிக்கு முன் மிஸ்டர் போட்டு குறிப்பிட்டது..
ஆனால் சிவ பிரகாஷ்.. “உனக்கு என் மாப்பிள்ளை அண்ணன் முறை ஆகனும் லிங்கா. சும்மா அண்ணா என்றே கூப்பிடு..” என்று அந்த உறவு முறை அழைப்பு தான் முக்கியம் என்பது போல் பேசியவரை கிண்டலாக பார்த்தவன்..
“சும்மா பேச்சுக்கு எல்லாம் முறை வைத்து அழைக்க கூடாது என்று என் சின்ன வயதில் என் அம்மாவுக்கு ஒருத்தர் சொல்லியது.. என் அம்மா அதை கடைபிடித்தாங்களோ இல்லையோ..
நான் அதை பாலோ செய்கிறேன்.. என் மனசுக்கு நெருக்கமாகவங்களை மட்டும் தான் நான் உறவு முறை வைத்து அழைப்பேன்..” என்று கூறியவன்..
சமையல் அறை பக்கம் பார்த்து.. “ துரை மாமா எனக்கு ஒரு ப்ளாக் டீ கொண்டாங்க..” என்று சொன்னான்..
லிங்கா பேச பேச.. அவன் யாரை குறிப்பிடுகிறான் என்பதனை சிவ பிரகாஷ் புரிந்து கொண்டு விட்டார்.. ஏன் என்றால் அவன் அம்மா செல்வ சங்கரி தன்னை. “ அண்ணா..” என்று அழைத்த போது..
“ என்னை அப்படி எல்லாம் கூப்பிடாதே..” என்று முகத்தில் அடித்தது போல் அன்று நான் சொன்ன போது..
“ முறைக்கு நீங்க எனக்கு அண்ணன் தானே ஆக வேண்டும்.” என்று அன்று விளக்கம் கொடுத்த செல்வ சங்கரியிடம்..
“என் தங்கை எல்லாம் கல்யாணம் முன் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையை நேருக்கு நேர் முகம் பார்த்தது கூட கிடையாது.. அப்படி பட்டவ என் தங்கை. என்னை எல்லாம் சும்மா அண்ணன் என்று கூப்பிட கூட ஒரு ஒழுக்கம் வேண்டும்..” என்று சொன்னார் தான்..
அப்போது அங்கு லிங்காவும் இருந்தான் தான். அப்போது அவனுக்கு எட்டு வயது.. இப்படி இவனுக்கு அதிகாரம் வரும் என்று தெரிந்து இருந்தால், இப்படி வார்த்தைகளை விட்டு இருக்க மாட்டார்..
அதோடு ஒரு சமையல் காரனை ..” மாமா..” என்று அழைத்தவன். இது வரை அந்த அழைப்பில் தன்னை அழைக்கவில்லை என்பதனையும் உணர்ந்தார்.. தன்னை மட்டும் அல்லாது தன் மனைவி குறிப்பாக தன் குடும்பத்தில் இருப்பவர்களை அழைக்கவில்லை..
அதே தன் மச்சினிச்சி குடும்பத்தினரை சின்ன அத்தையாம் சின்ன அத்தை.. அந்த அழைப்புக்கு காரணம் அவன் வயதுக்கு தோதாக பெண் இருக்கு.. என் மகள் அவனோட வயசு கூடல. அவர் புத்தி சிவ பிரகாஷை இப்படி யோசிக்க வைத்தது.
ஆனால் உண்மையான காரணம். முன் அதாவது லிங்காவின் அம்மா இருக்கும் போதே தன் அம்மாவை தவறாக பேசாதவர் யார் என்றால், அது சின்ன அத்தை குடும்பம் தான்..
அதோடு மதுவின் வாய் வழி மூலம் அவள் தத்து பிள்ளை என்ற விசயம் தெரிந்ததில் இருந்து. உண்மையிலேயே தன் சின்ன அத்தை குடும்பத்தின் மீது லிங்காவுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் வந்து விட்டது..
அதனால் தான் முன் தயக்கத்தோடு சின்ன அத்தை என்று அழைத்தவன்… இப்போது எந்த வித தயக்கமும் இல்லாது அழைக்கிறான்.
ஆனால் சிவ பிரகாஷுக்கு இது எல்லாம் எங்கு தெரிய போகிறது.. அவரின் முழுகவனம் எல்லாம் லிங்காவுக்கு மேகாவை திருமணம் செய்து வைப்பதிலேயே தான் இருந்தது.
லிங்காவுக்கு பிடித்த பெண் மேகா. அந்த வயதிலேயே இவன் அந்த பெண்ணிடம் லவ் லெட்டரை நீட்டியவன்.. அவளை திருமணம் செய்து வைத்து விட்டாள்..அவன் மொத்த கவனமும் அந்த பெண்ணிடம் மட்டுமே இருக்கும்.
மேகாவுக்கு வெளி நாட்டில் வாழ ஆசை.. அவளை கொஞ்சம் முடுக்கி விட்டால் போதும்.. மொத்தமாக இருவரையும் மீண்டும் கனடாவிற்க்கே அனுப்பி வைத்து விடலாம்..
முன் ஒரு முறையும் இந்த பெண்ணால் தான் லிங்காவை இந்தியாவை விட்டு அனுப்பியது.. இந்த முறையும் அதே டெக்னீக்கை கொஞ்சம் மாற்றி யோசித்து செயலாக்க நினைத்தார்..
பாவம் அவருக்கு தெரியவில்லை.. அன்றைய லிங்காவின் வயது வெறும் பதினெழு.. அந்த வயதில் தன் அன்னையை பற்றி தவறாக பேச்சை கேட்டாலே மனது உடைந்து போய் விடுவான்..
ஆனால் இன்றைய லிங்கா.. அவன் அம்மாவை பற்றி தவறாக பேசினால் என்ன பேச நினைத்தாலே அவர்களை அவன் சும்மா விட மாட்டான் என்று. அவருக்கு தெரியாது போய் விட்டது..
முன்னது செய்த தைரியத்தில் மேகாவை வைத்தே லிங்காவை லாக் செய்ய சிவ பிரகாஷ் நினைத்தார்.
அதனால் .. மீண்டும் … “ஜாதகம் எல்லாம் பார்த்து விட்டேன்.. பொருத்தம் அப்படி பொருந்தி இருக்கு.. அதோட நான் சொன்னதற்க்கு எல்லாம் அவங்க செய்யிறேன் என்று சொல்லி விட்டாங்க மாமா.” என்று சோமசுந்தரத்திடம் சொன்னார்.
லிங்கா ஏனையதை விடுத்து சிவ பிரகாஷ் சொன்ன நான் சொன்னதற்க்கு என்றதை மட்டும்..” அது என்ன நீங்க சொன்னது..” என்ற கேள்வியில் சிவ பிரகாஷால் உடனே பொய் சொல்ல முடியாது திரு திரு முழித்து இருந்தவரை பார்த்து..
“எல்லாம் பொருத்தத்தை விட மனது பொருத்தம் தான் முக்கியம்.. நான் அந்த பெண் கிட்ட பேசுறேன்..” என்று சொல்ல. எவ்வளவு நேரமும் மனது திக் திக் என்று சத்தம் இட இவர்களின் பேச்சை சாப்பிடுவது போல கேட்டு கொண்டு இருந்த மது.. லிங்கா சொன்ன பேசுகிறேன் என்ற வார்த்தையில் மனது கூம்பியவளாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.
அதை சிவ பிரகாஷ் மகிழ்ச்சியோடு பார்க்க. லிங்காவோ மது சென்றதையும் பார்த்தான்.. அவள் சென்றதில் சிவ பிரகாஷ் மகிந்ததையும் கவனித்தான்..
முதலில் மதுவை சமாதானம் படுத்த தான் லிங்கா நினைத்தான்.. ஆனால் அவளிடம் இதை பற்றி பேசும் முன் தன் மனதின் விருப்பத்தை சொல்லிய பின் தான் அனைத்தும் மனது திறந்து பேச வேண்டும்…
இப்போது இருக்கும் பிரச்சனையில் அவளிடம் மனது ஒன்றி தன்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை… பிரச்சனை எல்லாம் முடிந்த பின் பேசலாம் என்று அவன் நினைத்தது.
ஆனால் தன் அறைக்கு வந்த மதுவோ தன் மீது விருப்பம் இருப்பது போல தானே அவன் பேச்சு இருந்தது.. இப்போது என்ன அந்த மேகாவை பத்தி பெரியப்பா பேசும் போது எதுவும் மறுத்து பேசாது இருக்கிறார்..
அதோடு தனியா பேசனும் என்று வேறு சொல்கிறார்.. அவள் எதிர் பார்த்தது. மேகா வேண்டாம் என்று உடனே மறுத்து விடுவான் என்று… கூடவே தன்னை.. என்று எதேதோ நினைத்து கொண்டு தான் அவர்கள் பேச்சை கேட்டு கொண்டு இருந்தாள்.. ஆனால் அவள் மனது ரணமானது தான் மிச்சம் என்பது போல் லிங்காவை எந்த கணக்கில் சேர்ப்பது என்று தெரியாது இருந்தாள்..
இங்கு மேகாவின் அம்மா. “ மாப்பிள்ளை உன் கிட்ட தனியா பேசனும் என்று சொல்லி இருக்கிறாராம்.. மாப்பிள்ளையின் பெரிய மாமா இப்போ தான் போன் பண்ணி சொன்னார்.” என்று சொல்ல…
அன்னையின் பேச்சு மேகாவின் மனதில் பூ மாறி பொழிந்தது போல் இருந்தது.
அன்று கல்லூரி நிர்வாகம் ஏற்கும் போது மேகாவும் அங்கு தான் இருந்தாள்.. லிங்கா மேகாவை பார்க்கவில்லை. ஆனால் மேகாவின் பார்வை முழுவதும் லிங்காவின் மேல் தான் இருந்தது.
அன்று பயந்து. “இவன் தான் லெட்டர் கொடுத்தான்.. எனக்கு ஒன்னும் தெரியாது என்று மொத்த பழியும் அவன் மேல் போட்டது தப்போ.. “ என்று அன்று அவனை பார்க்க பார்க்க.. தன் மட தனத்தை நினைத்து தன்னையே நொந்து கொண்டாள்..
அந்த வயது சின்ன வயது.. பயந்து விட்டேன்.. என்று தனக்கு தானே சமாதானம் படுத்தி கொண்டவள்.. ஒரு முறை லிங்கா தன்னை பார்த்தால் போதும்.. மீண்டும் அவனிடம் நான் நெருங்கி விடுவேன்.. என்று அவன் போகும் இடம் எல்லாம் அவன் பார்வை படும் இடத்தில் மேகா நின்றாள் தான்..
பாவம் அவன் முன் சென்ற போது கூட மேகாவை லிங்காவுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது தான் உண்மை..
ஆம் சிவ பிரகாஷ் போட்டோவை காட்டிய போது கூட அவனுக்கு மேகா என்று தெரியவில்லை.. சிவ பிரகாஷ் மேகா என்ற பெயரில் தான் அவள் யார் என்பதையும் சிவ பிரகாஷ் போடும் திட்டத்தையும் புரிந்து கொண்டு தான் அவர் வழிக்கு செல்வது போல் பேசியது.
அதோடு லிங்காவுக்கும் மேகாவிடம் ஒரு விசயம் தெளிவுப்படுத்த வேண்டியும் இருந்தது..
ஆனால் இது தெரியாது மது வருந்த. மேகா மகிழ என்று இரண்டு நாள் இப்படியே சென்றது. லிங்கா இதன் நடுவில் கொலைகளை தற்கொலையாக மாற்றியது யார். ? காரணம் என்ன என்பதை கண்டு பிடிக்கும் முயற்ச்சியிலும் இருந்தான்..