அத்தியாயம்…12
ஸ்வேதாவுக்கு தன் மாமியாரின் அந்த முரண்ப்பட்ட நடவடிக்கையின் யோசனைகள் எல்லாம் மாமியார் வீடு வரை தான்.. அதன் பின் அவளின் யோசனைகள் அனைத்தையும் நம் அக்னி ஆக்கிரமித்து கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும்…
மகாப்பல்லிப்புரத்தில் கடற்கரைக்கு ஒட்டியது போல் இருக்கும் ஒரு ரெசார்ட்டை தான் முன் நாள் மாலை தான் முன் பதிவு செய்து இருந்தான் அக்னி… அதுவும் என்ன காரணத்திற்க்காக என்று சொல்லி முன் பதிவு செய்ததினால் இவர்கள் செல்லும் போதே அதற்க்கு தோதாக தான் அந்த அறை தயாராக காட்சி அளித்தது…
அக்னிக்கு முன் நாள் தன்னவளிடம் எதுவும் பேசாது முத்தம் இட்டது ஆணவனுக்கு இனிதாலுமே, சின்ன பெண்… பேசி பழகி பின் தான் எல்லாம் என்று ஸ்வேதா நினைத்து இருக்கலாம்.. இப்படி அவசரப்பட்டு முத்தம் இட்டதை பற்றி பெண்ணவள் தன்னை பற்றி தவறாக நினைத்து கொண்டு இருப்பாளோ… என்று நினைத்தவன்..
நாளை இது போல் அவசரப்பட கூடாது… நேற்று நடந்ததிற்க்கு மன்னிப்பு கேட்ட பின்..
“உனக்கு டைம் வேண்டுமா….? என்று முதலில் அதை தான் கேட்க வேண்டும்.. டைம் கேட்டால் நம் நிலமை பரிதாபம் தான்..
அதுவும் இந்தியாவில் பதினைந்து நாட்கள் மட்டுமே தான் இருக்க போகிறோம்… டைம் கொடுத்து வாழ்க்கையை ஆரம்பிக்க எல்லாம் நேரம் அவனுக்கு இல்லை..
அதை விட மூன்று வருட காத்திருப்பு தன் எதிரில் இருந்தும் விரதம் இருப்பது என்பது கொடுமை தான். இருந்தும் அவள் விருப்பப் பட்டால் தான் எல்லாமே என்று நினைத்து கொண்டு இருந்த அக்னி…
அந்த அறையை பார்த்த பின்.. அவன் அனைத்தம் மறந்து தன் மனைவியை திரும்பி பார்த்தான்.
ஸ்வேதாவுமே அந்த அறையின் பிரம்மாண்டத்தை பார்த்து அதுவும் படுக்கையில் காதல் சின்னமான தாஜ்மாஹாலை சிவப்பு ரோஜாவினால் அலங்கரித்து இருப்பதை பார்த்து அதிசயமாக தன் சின்ன இதழை திறந்து விழி விரித்து தன்னை பார்த்தவளின் அந்த பாவனையில் அக்னி மொத்தமாக தன்னை இழந்தவன் மீண்டும் அவளின் இதழை தொட்டு விட்ட பின்பு தான்..
அந்த இதழ் தனக்கு கொடுத்த அந்த ஒத்துழைப்பில் தன்னவளுக்குமே இதில் சம்மதம் என்று அனுமதிப்பெற்ற பின்பு தன் மூன்று வருட காத்திருப்பின் பலனை அன்று முழுவதுமாக அனுபவித்தவன். தன்னவளையும் அதை உணர வைத்தவனுக்கு அத்தனை ஒர் ஆசுவாசம்..
ஏன் ஸ்வேதாவுக்குமே முதலில் தடுமாறி கொஞ்சம் கூச்சம் கொஞ்சம் தயக்கம் என்று இருந்தாலுமே தன்னவனின் அந்த ஆசை பார்வையிலும் மோகத்திலும் மொத்தமாக அடித்து கொண்டு அவளின் மனது மட்டும் அல்லாது அவளின் உடலுமே அவனிடம் சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…
ஏன் என்றால் ஒரு சில இடத்தில் கூச்சம் அதிகரிக்கும் சமயம் எல்லாம் மூளையானது அய்யோ இது எல்லாம் வேண்டாம் என்று நினைத்தாலுமே, அவளின் உடலானது ஆணவனின் செயல்கள் அனைத்திற்க்குமே உடன் பட்டத்தோடு வளைந்தும் கொடுத்தது..
அதுவும் தான் காதலிப்பதை விட எதிர் பக்கம் காதலிக்கப்படும் சுகம் என்ன என்பதை உணர்ந்தவள் அதில் இருந்து வெளி வர முடியாது இருந்தவளை அக்னியுமே கொண்டாடி தீர்த்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..
அதன் விளைவாக மூன்று நாட்கள் மட்டுமே அங்கு இருப்பது போல் தன் அண்ணன் ஷ்யாம் குடும்பத்துடன் அமெரிக்கா செல்லும் நாள் தான் தன் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தவளின் மனமும் மாறி கை பேசி வாயிலாகவே தன் அண்ணன் குடும்பத்திற்க்கு விடை கொடுத்து அக்னி ஒரு வாரம் காலமாக அவர்களின் தேனிலவு மகாபல்லிப்புரத்தில் கழித்து விட்டு தான் வீடு வந்தனர்..
ஒரு வாரமாக அக்னியின் குடும்ப உறுப்பினர் மொத்த பேருமே அங்கு தான் அனைவரும் இருந்தனர்…. ஒரு வாரம் சென்ற பின் புதுமணத்தம்பதியர் வீடு வந்ததுமே அவர்களுக்கு உற்சாகமான வர வேற்பு தான் …
ஸ்வேதாவுமே தன் அண்ணனின் திருமணத்திற்க்காக தான் அக்னியின் தங்கை வீட்டவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டவள்…
பெண்ணவளுமே மாமியாரின் முரண்பட்ட நடவடிக்கையை மறந்தவளாக அனைவரிடமும் நல்ல முறையில் தான் பேசினாள்..
ஆனால் அன்று மதியமே சாப்பிட்டு முடித்த பின் அக்னி..
“ம்மா ஈவினிங்க ஸ்வேதா வீட்டிற்க்கு போறோம்மா…” என்று பேச்சை ஆரம்பித்தவனிடம்..
மரகதம்.. “ அக்னி நீ அப்பா கிட்ட வீடு கட்ட அந்த இன்ஞ்சினியரை பார்க்க சொன்னலே… அப்பா அவரை பார்த்து கொட்டேஷன் வாங்கி வந்து இருக்கார்.” என்று அவர் பேச்சை ஆரம்பித்ததுமே.
அக்னியின் தந்தை நீலகண்டன்.. “ அவன் அங்கு போயிட்டு வரட்டும் மரகதம். இது எல்லாம் ஆர அமர பேச வேண்டிய விசயம்..” என்று பேச்சை முடிக்க பார்த்தவரிடம்.
அக்னியே…. “ இல்லேப்பா இதுல என்ன ஆர அமர பேச இருக்கு.. “ என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே..
மரகதம். “ஆமா இதுல என்ன பேச வேண்டி இருக்கு…?” என்று கணவரிடம் கேட்ட மரகதம்..
மகனிடம்.. “அக்னி அப்பா கிட்ட அந்த கொட்டேஷனை வாங்கி பாருப்பா… எழுபத்தி ஐந்து லட்சத்துக்கு கொட்டேஷன் கொடுத்து இருக்கார்… “ என்று மரகதம் பேசிக் கொண்டு இருக்கும் போதே..
அக்னி… “ என்னது எழுபத்தி ஐந்து லட்சமா….?” என்று அதிர்ந்து கேட்டான் என்றால் ஸ்வேதா அதிர்ந்து போய் பார்த்தாள் தான் மாமியாரை..
காரணம் இதுவுமே அக்னி… மகாபல்லிபுரத்தில் தன் மனைவியிடம்..
“அங்கு போய் இது போல இருக்க முடியுமான்னு தெரியல… என் தம்பி இங்கு தான் என்று முதல்லேயே தெரிஞ்சி இருந்தா முதல்லயே மூன்று ரூமா போட்டு இருப்பேன்.. செலவோடு செலவா போய் இருக்கும்..
இப்போ நமக்குன்னு மேல ஒரு ரூம் எடுக்கனும்.. அதுக்கு ஒரு பத்து லட்சம் ஆகும்…” என்று சொன்ன போது..
அதற்க்கே ஸ்வேதா “என்ன.. பத்து லட்சமா….? ஒரு ஸ்கையர் பிட் 2200க்கு செய்து கொடுப்பாங்க.. ஒரு ரூம் பத்துக்கு பத்து கட்டினா போதும் அட்டாச் பாத் ரூம் என்று வெச்சா கூட ஒரு நாளு லட்சத்துக்கு மேல ஆகாது.. அதுக்கு எதுக்கு பத்து லட்சம்…?” என்று இவள் கணக்கு சொல்லி கேட்ட போது.
அக்னி…. “ ஒரு சிலதுக்கு நாம கணக்கு பார்க்க கூடாது டா செல்லம். இந்த காலம் தான் நாம நமக்காக வாழும் காலம்… அதுவும் கூட்டு குடும்பமா இருக்கும் போது எல்லாமே பார்த்து பார்த்து தான் நடக்கும் படியா இருக்கும்.. மேல தான் நம் ராஜ்ஜியம்.. அது கொஞ்சம் வசதியா கட்டிக்கிறதுலே தப்பு இல்லேடா…” என்று சொன்னவன் பின் அவனே…
“என்ன இது நானே பணத்தை பார்த்து பார்த்து தான் செலவு செய்வேன்… நீ எனக்கு மேல இருப்ப போல….” என்று சொன்னவனிடம்..
அவளுமே எந்த வித தயக்கமும் இல்லாது தன் தந்தை இறந்த பின் அவள் குடும்பம் பட்ட கஷ்ட்டத்தை சொன்னவள்..
“எங்க சொந்தத்துக்கு முன்பு நாங்க தலை நிமிர்ந்து வாழனும்ங்க. அது தான் என் ஆசை.. அண்ணாவுக்கு இப்போ தான் ஒரு நல்ல வேலை கிடைச்சி இருக்கு.
நீங்க எனக்காக அமெரிக்கா வேலையை விட்டு விட்டு இங்கு டிப்பார்மெண்ட் ஸ்டோர் வைக்க போறிங்க. இதுல நாம வின் பண்ணி ஆகனும்ங்க..
நீங்க முன்பு சொன்னது போல டிப்பார்மெண்ட் ஸ்டோர் வைக்க நிறைய செலவு ஆகும்.. அதோடு நம்ம மொத்த சேமிப்பையுமே கரைச்சிட கூடாது… கொஞ்சம் கை இறுப்பு வெச்சிக்கனும். அது தான் ஒரு ரூமுக்கு இத்தனை செலவு செய்யனுமான்னு இருக்கு.?” என்று கேட்டவளிடம்..
அக்னி தான் பேசி அந்த பத்து லட்சம் வீடு பட்ஜெட்டுக்கு சம்மதிக்க வைத்தது… அப்படி இருக்க எழுபத்தி ஐந்து லட்சத்தில் வீடு கட்ட இவங்க கொட்டேஷன் வாங்கி இருக்கேன் என்று சொன்னால், பெண்ணவள் அதிர தானே செய்வாள்..
அதிர்ந்தாலுமே பெண்ணவளின் வாய்…. தன் மாமியாரை பார்த்து… “ உங்க கிட்ட அத்தனை பணம் இருக்கா….?” என்று கேட்க தான் நினைத்தது. இருந்துமே புதுப்பெண்ணாக அவள் அமைதி காத்தலுமே தாங்கள் மகாபல்லிப்புரம் சென்ற அன்று சிடு சிடு என்று இருந்த மாமியாரின் முகம் கணவன் வீடு கட்டுவதை பற்றி பேசியதுமே மகிழ்ச்சியாக தங்களுக்கு விடை கொடுத்ததுக்கு உண்டான காரணம் பெண்ணவளுக்கு புரிந்தாலுமே பேசாது கணவன் என்ன சொல்கிறான் என்பதை கவனிக்கலானாள்..
அக்னியுமே எழுபத்தி ஐந்து லட்சம் என்று சொன்னதுமே அதிர்ந்தாலுமே பின்… தன் தந்தையை பார்த்து..
“ப்பா பெரிய வீடு எல்லாம் இல்லேப்பா… ஒரே அறை தான்.. அதுவும் மாடியில்… இவர் பெரிய பட்ஜெட் தான் செய்வார் என்றால் வேறு பார்த்துக்குறேன்ப்பா…அதுவும் நான் அமெரிக்கா போய் வந்த பிறகே… அது வரை நாங்க ஸ்வேதா வீட்டில் இருந்துக்குறோம்…” என்றவனின் இந்த பேச்சில் இந்த முறை அக்னி குடும்பத்தினர் அனைவருமே அதிர்ந்து விட்டனர் தான்.
ஏன் நம் அக்னியின் தந்தை நீலகண்டனுமே. “ என்னப்பா சொல்ற..?” என்று தான் கேட்டார்..
மரகதம். “ என்னடா சொல்ற ஒரு ரூமா… அது எதுக்கு பத்தும்… அதுவும் இல்லாம்மா நீ ஒரு வருஷமோ இல்ல இரண்டு வருஷமோ கழிச்சி தான் இந்தியாவுக்கே வருவ. வந்த பின்ன இது எல்லாம் வேலைக்கு ஆகாது அக்னி.. கையில் காசு இருக்கும் போதே வீடு கட்டிக்கனும்… புரியுதா அப்பா வாங்கி வந்த அந்த கொட்டேஷனை பாரு… “ என்று கட கட என்று சொல்லிக் கொண்டு இருந்தவரின் பேச்சை அக்னி..
“ம்மா உங்க எல்லோர் கிட்டேயும் முதல்ல ஒன்னு சொல்லிக்கிறேன்… இனி என் வாழ்க்கை இந்தியாவில் தான்… நான் அங்கு பேப்பர் போட்டுட்டேன்.. ஒரு சில பெண்டிங் வேலை இருக்கு அதை முடிச்சி கொடுக்க தான் இந்த முறை போறேன்.. போயிட்டு ஒரு மாசத்தில் இந்தியாவுக்கு வந்துடுவேன்..
இங்கு செட்டில் ஆக தான் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் பார்க்க சொன்னேன்.. அதோடு என் சேமிப்பு எல்லாமே அதுலேயே போயிடும்.. அதோடு பணமே இருந்தாலுமே எதுக்கு எழுபத்தி ஐந்து லட்சம் கொடுத்து வீடு கட்டனும்.. உங்க இரண்டு பேருக்கு கீழே இரண்டு ரூம் இருக்கு… “ என்று தன் பெற்றோரையும் தம்பியையும் காட்டி சொன்னவன்…
பின்.. “ எங்களுக்கு மேல ஒரு ரூம் கட்டினால் போததா…?” என்று கேட்டு அந்த பேச்சை முடிக்க தான் பார்த்தான்..
ஆனால் அதற்க்கு அவன் குடும்பத்தினர் விட வேண்டுமே… அதுவும் இது வரை அக்னியின் பேச்சில் அதிர்ச்சியில் இருந்த ப்ரீத்தா.
“என்ன அண்ணா சொல்ற…? இந்தியாவிலேயே செட்டில் ஆக போறியா…? ஏன்...? இதை ஏன் முன்னவே எங்க கிட்ட சொல்லலே….? என்று முழு அதிர்ச்சி விலகாததால் தன் மனதில் இருப்பதை கேட்க.
இப்போது அக்னி தன் தங்கையை ஒரு மாதிரியாக பார்த்தவன்…
பின்… “ எனக்கு புரியல.. எதுக்கு நீ இப்படி அதிர்ச்சி ஆகுற…?” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டவனுக்கு.
ப்ரீத்தா பதில் சொல்லும் முன்பே… நீல கண்டன்… “ இப்போ அதை பத்தி எதுவும் பேச வேண்டாம்.. இந்த விசயத்தை கொஞ்சம் ஆற போட்டுட்டு பின் பேசலாம்…” என்று சொன்னார்.
அவருக்குமே… மகன் செய்வது முட்டாள் தனமாக தான் தோன்றியது.. வெளி நாட்டில் படித்து விட்டு நல்ல வேலை நல்ல சம்பளத்தை விட்டு இது என்ன என்ற எண்ணம் தான்.
அதோடு அந்த டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் தனக்காக தான் தன் மகன் வைத்து கொடுக்கிறான் என்று நினைத்து கொண்டு இருந்தவருக்கு. மகன் தனக்காக தான் என்று சொன்னது ஒரு வித ஏமாற்றத்தை அவருக்கு கொடுக்கத்தான் செய்தது.. இருந்தும் அனைத்தையும் விட குடும்ப அமைதி தான் முக்கியம் என்று எதுவும் சொல்லவில்லை…
ஆனால் மற்றவர்களுமே அது போல நடந்து கொள்ள வேண்டுமே.. அதுவும் இத்தனை நாளும் அந்த டிப்பார்மெண்ட் ஸ்டோருக்கு உண்டான இடத்தை தன் மாமனாரின் பெயரில் வாங்கி விடலாம்… அதில் பாகமாக தன் மனைவிக்கு வரும்.. கூடவே அக்னி அமெரிக்காவிலே இருந்து விட்டால் இங்கு வாங்கி போடும் சொத்துக்கு அனைத்தையுமே தான் பார்த்து கொண்டு அதில் கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்று இருந்தவனுக்கு மொத்தமாக எதுவும் இல்லை என்றதில்…
சட்டென்று…. “ க்ரீன் காட் அமெரிக்கா வேலையை விட்டு விட்டு இந்தியாவில் வருவது என்பது எல்லாம் முட்டாள் தான் செய்வாங்க….” என்ற வார்த்தையை விட்டு விட.
இத்தனை நேரமும் தன் தாய் தந்தையை மட்டுமே பார்த்து பேசிக் கொண்டு இருந்த அக்னி… அதுவும் பொதுவாகவே தம்பியின் திருமணம் தொட்டு அதிகப்படியாக நகை கேட்டு வாங்கிய சுந்தரத்திரத்தின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதினால் அவனை கூடிய மட்டும் தவிர்த்து விடுவான்…
இன்றும் அது போல் தான் அக்னி சுந்தரத்தை தவிர்த்தான்.ஆனால் தன்னை முட்டாள் என்று பேசிய அந்த வார்த்தையில் இருக்கையில் அமர்ந்து இருந்தவன் சட்டென்று எழுந்து விட்டான்..
தன்னை முட்டாள் என்று சொன்ன அந்த வாயை உடைக்க தான் அவனின் கை துடித்தது.. ஆனால் அதன் பின் நடக்கும் பின் விளைவுகள் அதுவும் தன் அன்னை பெண் வாழ்க்கை என்று பேசுவதை கேட்கும் மனநிலையில் அவன் இல்லாததினால், ஆனால் தன்னை முட்டாள் என்று சொன்னதை சும்மாவும் அப்படியே விட்டு விட முடியாது…
“ இந்த முட்டாள் கிட்ட தான் ஆறு மாசம் முன் வீடு வாங்க பத்து லட்சம் நீங்க வாங்கினது.. அதுவும் அடுத்த மாசம் ஒரு பிக்ஸ்செட் டெப்பாசிட் முடிஞ்சிடும் அது வந்ததும் தந்துடுறேன் என்று சொல்லி வாங்கி இன்ன வரை தராது இருக்கிறிங்க..
ஆனா அது பத்தி ஒரு வார்த்தை கேட்காம இருக்கேன்ல நான் முட்டாள் தான்…” என்று சொன்னவன் ..
பின் சூட்டோடு சூட்டாக.. “ அந்த பத்து லட்சத்தை எப்போ தர போறிங்க….?” என்றும் கேட்டு விட்டான்..
உண்மையில் சுந்தரம் அதை தரவேண்டும் என்று எல்லாம் வாங்கவில்லை. வெளி நாட்டில் அவ்வளவு சம்பாதிக்கிறான்… தங்கைக்கு ஒரு பத்து லட்சம் தர மாட்டானா…? என்று தான் கையில் பணம் இருந்தும் அதற்க்கு வருங்காலத்தில் தங்கம் ஏறும் என்று காயினாக வாங்கி விட்டு அக்னியிடம் வாங்கி வீட்டை வாங்கியது…
இப்போது தா என்று கேட்கவும்.. என்ன சொல்வது என்று அவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே..
மரகதம் இடை புகுந்து… “ என்ன அக்னி இது வீட்டு மாப்பிள்ளை கிட்ட கடங்காரன் கிட்ட பேசுவது போல பேசுற….?” என்று கேட்டவரிடம் அக்னி..
“அப்போ என் கிட்ட வாங்கிய பணத்தை தாங்க என்று எப்படி கேட்கிறதும்மா….? சரி எனக்கு கேட்க தெரியல.. நீங்களே உங்க வீட்டு மாப்பிள்ளை கிட்ட கேட்டு வாங்கி தாங்க.. அதை வைத்து தான் மேல ரூம் எழுப்பனும்…” என்று சொன்னவனிடம்..
ப்ரீத்தா…. “ அண்ணா அந்த வீடு வாங்க நிறைய இடத்தில் பணம் வாங்கி தான் வாங்கியது ண்ணா.. அந்த டெப்பாசிட் பணத்தை ஒரு கடன்காரன் கிட்ட நான் தான் கொடுக்க சொன்னேன் ண்ணா….
அவர் கூட உங்க அண்ணன் கிட்ட அடுத்த மாசமே தரேன்னு தான் வாங்கினேன்.. இப்படி கொடுக்க சொல்றியே என்று சொன்ன போது கூட என் அண்ணா எல்லாம் தங்கைக்கு கொடுத்தது எல்லாம் கேட்க மாட்டாருன்னு சொன்னேன்.. ஆனா நீங்க இப்படி கேட்பிங்க என்று சத்தியமா நான் எதிர் பார்க்கலேண்ணா…. இது என் மாமியார் வீட்டுக்கு தெரிஞ்சா நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்கண்ணா… இது எனக்கு எவ்வளவு தலை இறக்கம்.” என்று தங்கை அழுது வடிந்து பேசிய பேச்சில்..
அக்னியே ஒரு நிமிடம்.. தான் தப்பாக கேட்டு விட்டோமோ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான்..
பின் தான்.. கொடுத்த பணத்தை தானே கேட்டேன்… என்று நினைத்தவன்.
அதை சொல்லவும் செய்தான். “ இதுல என்ன தல இறக்கம் ம்மா… கொடுத்த பணத்தை தானே கேட்டேன்… பெண் கொடுத்த இடத்தில் பணம் கேட்டு நான் உன்னை சங்கடப்படுத்தலலே….” என்று கேட்டவனிடம் யாராலும் ஒன்றும் சொல்ல முடியாது போக…
ஒரு சில நிமிடம் அங்கு அமைதி நிலவியது..
அந்த அமைதியை அக்னியின் தந்தை நீல கண்டன்… “நானுமே நீ இப்படி திருப்பி கேட்பேன் என்று நினைக்கலேப்பா..” என்ற பேச்சில் அக்னி என்ன இது என்பது போல் தான் பார்த்தான்… கொடுத்த பணத்தை கேட்டது தப்பா என்ற பாவனை தான் அதில் இருந்தது..
பாவம் இது யாருக்கு புரிந்ததோ இல்லையோ நம் ஸ்வேதாவுக்கு புரிந்தது.. ஆனால் ஒன்றும் பேசவில்லை.. நடக்கும் நாடகத்தை மட்டும் பார்த்து கொண்டு இருந்தாள்..
மாமியார் வீட்டிற்க்கு வந்து ஒரு அரை நாள் தான் ஆனது.. ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்களின் அனைவரின் மனநிலையையும் ஒரளவுக்கு புரிந்து கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
பேசிய பேசியவர்களை பற்றி மட்டும் அல்லாது பேசாது இருந்த அக்னியின் தம்பி அகரன் பற்றியும்.. அவனின் மனைவி உஷாவை பற்றியுமே புரிந்து கொண்டாள் தான்..
ஆம் அகரன் பேசாது இருந்தாலுமே, தன் கணவன் சுந்தரத்திடம் பத்து லட்சம் கொடுத்தேன்னே. அதை தான் என்று சொன்ன போது.
அகரன் முகபாவனையானது பத்து லட்சம் அக்கா கணவனுக்கு கொடுத்தானா…. அதிர்ந்து தன் மனைவி உஷாவை பார்க்க உஷாவுமே அதிர்ச்சியோடு தன் கணவனை பார்க்க.. அப்போ இவர்களுமே தன் கணவனிடம் பணத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு விட்டாள்..
அனைத்தையும் நினைப்பில் மட்டும் வைத்து கொண்டவள்.. எதுவும் பேசவில்லை.. அமைதியாக அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்து விட்டது.. இங்கு நிறைய சமாளிக்க வேண்டி இருக்கும் என்பது….
இந்த யோசனையுடன் தான் மாமனாரின் இந்த பேச்சில். இவருமா…? என்று பார்த்தவள்… தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் கணவனையும் திரும்பி பார்த்தவள்.. அவன் முன் இருந்த தட்டையும் பார்க்க.. அதில் இரண்டு வாய் மட்டுமே எடுக்கப்பட்ட உணவை பார்த்தவள்…
இப்போது பெண்ணவள் வாய் திறந்தாள்… “ முதல்ல சாப்பிட்டுங்க….” என்ற வார்த்தையில் தான் நீல கண்டனுமே மகனின் தட்டை பார்த்தவர்.
அவருமே… “தம்பி முதல்ல சாப்பிடுப்பா…” என்றதும்..
அக்னி… “வயிறு நிறைஞ்சிடுச்சிப்பா…” என்றவன். எப்போதும் உணவை வீணாக்காதவன்… அன்று பாதி சாப்பாட்டில் எழுந்து கொண்டதும் பெண்ணவளும் எழுந்து கொண்டு விட்டாள்.. இதை பார்த்த நீல கண்டனுக்கோ ஒரு மாதிரியாகி விட்டது…
அக்னி தன்னோடு மனைவியும் எழுந்து கொள்ள இப்போது அவனின் பார்வை ஸ்வேதா சாப்பிட்டுக் கொண்டு இருந்த தட்டின் மீது பதிந்தது.
அங்கேயும்.. அவனை போலவே சிறிதே உணவு உண்டதின் சுவடு தெரிய. ஆணவனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது.
மாமியார் வீட்டில் வீட்டு சாப்பாடாக இது தான் கணவன் மனைவி ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தது.
முதல் உணவே இப்படி முழுமையாக சாப்பிட முடியாது… பாதியில் இருவரும் எழுந்து கொள்வது.. ஆணவனுக்கு ஒரு மாதிரியாக தான் ஆகிவிட்டது.. அது அவன் கண்களிலுமே வெளிப்பட.
ஸ்வேதா… “ அந்த அளவுக்கு பசி இல்லேங்க….” என்று சொன்னவளுக்கு பதில் எதுவும் சொல்லாது தன் அறைக்கு செல்ல பார்த்தவனின் கை பிடித்து தடுத்து நிறுத்திய நீல கண்டன்..
“தம்பி என் மேல கோபமாப்பா…?” என்ற கேள்வியில்.
எதுவும் பேச கூடாது.. ஸ்வேதா பயந்து விடுவாள்… என்று நினைத்தவனின் கண் முன் மனைவி சாப்பிட்டு விட்டு எழுந்த அந்த சாப்பாடு தட்டு விழ…
தன் அறைக்கு போக பார்த்தவன் திரும்பி தன் தந்தையை பார்த்தவன்.
“இப்போ என்ன சொல்ல சொல்றிங்க. கோபம் இல்லேன்னா….” என்று கேட்டவன்..
பின்.. “ பத்து லட்சம் கம்மி பணம் இல்லேப்பா..” என்று சொல்லி முடித்த அடுத்த நொடி…
அவனின் அன்னை மரகதம்… “வெளிநாட்டில் சம்பாதிக்கிறவனுக்கு பத்து லட்சம் எல்லாம் ஒன்னுமே இல்ல அக்னி… இப்போ நீ இந்த அளவுக்கு கணக்கு பார்க்குறேன்னா… அந்த வேலையை விடுற காரணம் தான்….” என்றதில்…
அக்னிக்கு மட்டும் அல்லாது இப்போது ஸ்வேதாவுக்குமே.. இவங்க எல்லாம் என்ன சொல்ல வராங்க என்று தான் நினைத்தாள்..
ஆனால் அக்னி நினைப்பது மட்டும் அல்லாமல் அதை கேட்கவும் செய்து விட்டான்..
“ம்மா இப்போ என்னம்மா சொல்ல வர்றிங்க…” என்று….