Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham....17

  • Thread Author
அத்தியாயம்….17

ஸ்வேதாவின் முகம் சட்டென்று மலர்ந்த அடுத்த விநாடியே தெளிந்த முகபாவனையோடு… தன் கணவனை பார்த்தவள் தன் கண்ணீரை துடைத்து விட்டு ..

“ நான் அழ மாட்டேன்.. நீங்க போயிட்டு வாங்க…” என்று திடமாக சொன்னாள்…

அக்னி.. “ இல்ல டா.. நீ …” என்று ஆரம்பித்தவனின் வாய் மீது கை வைத்தவள்..

“முன் ப்ளான் பண்ணப்படியே நடக்கட்டும்…” என்று அழுத்தமாக சொன்னவளிடம்

“நீ இங்கு சமாளிச்சிப்ப தானே…?” என்று கேட்டான்..

“ம் சமாளிச்சிப்பேன்…” என்று சொன்னவளிடம்..

“பார்த்துக்கோ டா….” என்று விமானத்திற்க்காக அறிக்கை தொடர்ந்து வந்த வண்ணம் இருக்க… மனது இல்லாது தான் அக்னி விடைப்பெற்றான்.. அதே மனநிலையில் தான் ஸ்வேதாவுமே இருந்தாள்…

சத்தியமாக போன மாதம் இத்தனை தூரம் கணவனின் பிரிவு தன்னை வாட்டும் என்று சொல்லி இருந்தால், அவள் சிரித்து இருந்து இருப்பாள்.. ஆனால் அப்போதே அக்னி..

“ மேரஜிக்கு பின் உன்னை விட்டு எப்படி இங்கு இருக்க போறேன் என்று தெரியல டா….” என்று ஒவ்வொரு முறையும் சொல்லும் போது அவனின் காதலை பெண்ணவள் அனுபவித்தாளே ஒழிய.. அந்த காதலை அவள் உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

ஆனால் இப்போது.. வாழ்ந்தது எண்ணிக்கையிலான நாட்களான பதினைந்து நாட்கள் தான்.. ஆனால் ஏதோ வருடமாக தன்னோடு இருந்தவனை விட்டு பிரிவது போல் என்ன இது இத்தனை பாராமாக இருக்கிறது என்று தன் நெஞ்சை தொட்டு தடவிக் கொண்டே தான் வழி முழுவதும் வந்தாள்..

இந்த மனநிலையில் அவளின் மாமியார் வீட்டிற்க்கு செல்லும் மனநிலையில் அவள் சுத்தமாக இல்லை.. ஆனால் போய் தான் ஆக வேண்டும் என்று இருந்தவளுக்கு அவளின் அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது.

தங்கையின் மனநிலையை புரிந்தவன் போல் ஷ்யாம்… “ என்ன டா ப்ளீங்கா..?” என்று கேட்டவனின் தோரணையில் ஸ்வேதா..

“கேப்படா கேப்ப…?” என்று கோபமாக கேட்டால்..

அவளை விட அத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும், சில சமயம் அதிகப்படியான கோபம்.. அதிகப்படியான பாசம் என்றால் இப்படி தான் ஸ்வேதா தன் அண்ணனை டா என்று அழைப்பது…

அதனால் அதை கவனிக்காது… “ என்ன பாப்பா …?” என்று ஷ்யாம் மீண்டும் கேட்ட போது.

“உனக்கு என்ன கல்யாணம் முடிஞ்ச பின்னே கைய்யோட நீ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போயிட்ட.. உனக்கு என் ப்ளீங்ஸ் எல்லாம் புரியாது…” என்று சொன்னவளிடம்..

“நான் தான் முன்னவே சொன்னேன் தானே. உனக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுக்குறேன்… நீயும் இங்கு வந்ததே கிடையாது… ஹனி மூன் மாதிரியும் ஆயிடுச்சின்னு.. ஆனா நீ அதுக்கு நான் அம்மாவை விட்டு எல்லாம் அத்தனை நாள் வர மாட்டேன் என்று சொல்லிட்ட…” என்று கேட்டவனின் பேச்சு உண்மை தான்..

அவள் அண்ணன் அவளிடம் கேட்டான் தான்.. ஷ்யான் சொன்னது போல் அம்மாவை தனியே விட்டு எப்படி இருக்க முடியும்.. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவளின் அன்னைக்கு ஹார்ட் அட்டாக் வந்தது..

அப்போது அவள் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தாள். தனியே மிகவும் கஷ்டப்பட்டு விட்டாள் தான்…

உடனே ஷ்யாமுக்கு விசயம் சொன்னாலுமே டிக்கெட் கிடைக்க நேரம் பிடித்து அவன் இந்தியாவுக்கு வர இரண்டு நாட்கள் பிடித்து விட்டது..

அந்த இரண்டு நாட்களில் ஸ்வேதா தனியே அல்லாடி விட்டாள் தான்.. மருத்துவமனையில் சேர்த்து பின் பணத்திற்க்கும் அலைந்து என்று … ஆனால் எப்படியோ சமாளித்து அவளின் அன்னையை நல்ல முறையில் வீட்டிற்க்கு அழைத்து வந்தும் விட்டாள் தான்.

ஆனால் அன்றில் இருந்து அவளுக்கு ஒரு பயம். அதன் தொட்டு எங்கு இருந்தாலும் நாங்கு மணி நேரத்திற்க்கு ஒரு முறை அலை பேசியில் அழைத்து விடுவாள்..

அவளின் எண்ணமான வெளி நாட்டில் இருப்பவனை திருமணம் செய்ய மாட்டேன் என்ற எண்ணம் இன்னுமே வலுப்பெற்றது… அதன் தொட்டு அங்கே வர மாட்டேன் என்று சொல்ல ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் பணம்.

திருமணம் முடிந்து பதினைந்து நாளில் அக்னி மீண்டு அமெரிக்கா செல்ல போகிறான். பின் ஒரு மாதம் கழித்து திரும்ப இந்தியா வந்து விட போகிறான். இதற்க்கு அத்தனை பணம் செலவழிக்க வேண்டுமா என்று நினைத்தும் தான் ஸ்வேதா மறுத்தது. ஆனால் இன்று நாம் பணத்தை பற்றி யோசித்து இருந்து இருக்க கூடாதா என்று எண்ணம் தான்.. அதை அப்படியே தன் அண்ணனிடம் சொல்லவும் செய்தாள்…

“ஆமாம் சொன்னேன் தான் நான்… ஆனால் இப்போ தானே தெரியுது… இப்போ என்னால அவரை விட்டு இருக்க முடியலன்னு…” என்று பேசியளின் குரல் தழ தழப்பில்..

“பாப்பா..” என்று சொன்னது தான்.

“அண்ணா..” என்று அழுது விட்டாள்..

பின் என்ன நினைத்தாளோ. தன் அழுகையை அடக்கி கொண்டு.

“ண்ணா நான் அழுததை அவர் கிட்ட சொல்லாதே…” என்று சொன்ன தங்கையின் பாவனையில் ஷ்யாம் சட்டென்று விரித்து விட..

“ண்ணா “ என்றவளின் அழைப்பில்.

“ சொல்ல மாட்டேன் பாப்பா…” என்றவனிடம்..

ஸ்வேதா மீண்டும்.. “ ண்ணா அவரை பார்த்துக்கோங்கண்ணா…” என்று சொல்ல..

“பார்டா …” என்று ஷ்யாம் சொன்னாலுமே…

“நான் பார்த்துக்குறேன் பாப்பா.. அதே போல நீயும் உன்னை பார்த்துக்கோ என்ன….” என்று சொன்ன ஷ்யாமின் குரலில் அத்தனை மனநிறைவு..

கணவனின் பிரிவு தங்கையை இத்தனை தூரம் பாதிக்கிறது என்றால், அக்னியை தங்கைக்கு எத்தனை பிடித்து இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டான்..

அந்த மனநிறைவோடு முன் நண்பன் மட்டும் தான்.. இப்போது தன் மச்சானும்.. அது தந்த மகிழ்ச்சியில் அக்னியை வரவேற்க அவன் தயாராகினான்..

ஆனால் அதற்க்கு எதிர்பதமாக ஸ்வேதா கணவனின் வீட்டிற்க்கு சென்ற போது அவளுக்கு வர வேற்பு எதிர் பதமாக இருந்தது…

இவள் போகும் போது சாப்பிடும் மேஜையில் அவளின் மாமியார் மரகதம் மாமனார் நீல கண்டன் அகரன் உஷா அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்..

இவளின் சோர்ந்த முகத்தை பார்த்த அவளின் மாமனார் நீல கண்டன்..

“வாம்மா சாப்பிடலாம்…” என்று அழைத்தார்.

அவளுக்குமே பசி தான் . விடியற்காலையில் எழுந்தது.

இங்கு போகும் போது ஒரு காபியாவது குடித்து விட்டு போங்க என்று யாரும் சொல்லவில்லை..

அவள் வீட்டில் எல்லாம் அப்படி கிடையாது… காலி வயிற்றோடு வெளியில் போக கூடாது என்றே ஏதாவது கொடுத்து தான் அனுப்புவார்..

ஆனால் இங்கு வெளி நாட்டிற்க்கு போகும் மகனுக்கு ஒன்றும் கொடுக்காது அவனோடு யார் அனுப்புவது என்ற சண்டையில் தான் இவர்கள் அனுப்பியே வைத்ததே.. இதில் மருமகளான தனக்கா சாப்பிட ஏதாவது கொடுத்து அனுப்ப போகிறார்கள் என்று நினைத்தை கொண்டவள்..

விமான நிலையத்தில் கணவரோடு குடித்த அந்த காபி மட்டுமே… என்பதினால் அவளுக்குமே பசித்தது….

அதனால் எந்த பிகுவும் செய்யாது சாப்பிடும் மேஜை நோக்கி செல்ல அடி எடுத்து வைக்கும் சமயம்..

மரகதம்.. “ என்னங்க இன்னுமா சாப்பிடாமா இருப்பா.. அது எல்லாம் அக்னி கூட சாப்பிட்டு இருப்பாள்…” என்றவரின் பேச்சில் அதிர்ந்து என்ன இது…? அதுவும் சாப்பிடு விசயத்தில்..

அப்படியே தான் சாப்பிட்டு வந்தாலுமே, அது ஜீரணம் ஆகி இருக்கும் வாம்மா சாப்பிட என்று தானே சொல்வாங்க… இந்த யோசனையில் அடுத்த அடி எடுக்காது அப்படியே நின்று விட்டாள்..

பின் தான் மரகதம்.. உஷாவிடம்… “ எலும்பு சூப்பும்மா குடி.. டாக்டர் குடிக்க சொன்னாங்கலாமே.. அகரன் சொன்னான்.” என்று சொல்லிக் கொண்டே ஒரு கோப்பையில் ஊற்றிக் கொடுப்பதை பார்த்த ஸ்வேதா எந்த வித தயக்கமும் இல்லாது அவளின் கால்கள் சாப்பிடும் மேஜையில் நோக்கி நகர்ந்தது..

நகர்ந்தது மட்டும் அல்லாது காலியாக இருந்த உஷாவின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தும் கொண்டவள்…

நான் சாப்பிட்டேன்.. சாப்பிடல என்று எதுவும் சொல்லாது மேஜையில் இருந்த ஒரு தட்டை எடுத்து தன் முன் வைத்தவள்..

மேஜையில் அடுக்கி வைத்திருந்த உணவு வகைகளின் மீது அவளின் கண்கள் வலம் வந்தது..

ஆம் வலம் வந்தது என்று தான் சொல்ல வேண்டும்.. ஏன் என்றால் அத்தனை வகையில் இருந்தது… அதுவும் மணி ஒன்பது தான் ஆகிறது.. காலையிலேயே இத்தனை வகைகளா…?” என்று அதிர்வோடு தான் அதை பார்த்தாள்..

பார்த்தவள் இடியாப்பாம் கால் பாயாவை மட்டும் தன் தட்டில் வைத்து கொண்டவள் அதை சாப்பிட்டு கொண்டே தன்னை அதிர்வுடன் பார்த்து கொண்டு இருந்த தன் மாமியாரை பார்த்து.

“நம்ம வீட்டுக்கு யாராவது விருந்துக்கு வந்தாங்கலா அத்தை…?” என்று கேட்கவும் செய்தாள்.. அவளின் கேள்வியில் மரகதத்தின் தலை தன்னால் இல்லை என்று மறுப்பாக தலையாட்டியவரிடம்..

ஸ்வேதா …. “ இத்தனையும் நீங்க ஒருத்தவங்கலா செய்திங்க…?” என்று மீண்டும் கேள்வி எழுப்பினாள்…

இப்போது மரகதம் ஸ்வேதாவின் செயல்களில் அதிர்ந்து இருந்தவர்… மீண்டும் மீண்டும் ஸ்வேதா கேள்வி எழுப்பவும்.. அதிர்வில் இருந்து வெளி வந்து..

“நான் ஏன்ம்மா செய்யிறேன்… எனக்கு என்ன தலையெழுத்தா அது எல்லாம் சமையலுக்கு ஆள் இருக்கு…” என்று மிகவும் கெத்தாக சொன்னார்…

அதாவது அவர் பேச்சில் தான் இருக்கப்பட்டவர்.. உன்னை போல் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது…

அவரின் அந்த பாவனையில் ஸ்வேதா நன்றாக கேட்க தான் நினைத்தாள்.. ஆனால் எதுவும் கேட்கவில்லை.. அன்று அமைதியாக சாப்பிட்டு முடித்தவள் தன் அறைக்கு சென்று விட்டாள்..

மரகதம் மட்டும் அல்லாது ஸ்வேதாவின் செயல்களை அங்கு இருந்த அனைவருமே தான் பார்த்து கொண்டு இருந்தனர்.. நீல கண்டனுக்கு ஒன்று மட்டும் புரிந்து விட்டது. இனி இந்த குடும்பம் ஒற்றுமையாக இருக்காது என்பது..

தன் மனைவி மட்டும் அல்லாது தன் மகளும் அதற்க்கு விட மாட்டாள் என்று… இந்த பொண்ணும் இவர்கள் செயவதை பொறுத்து அமைதியாக போக கூடிய பெண்ணும் இல்லை என்பதை தெளிவாக புரிந்து விட்டது..

அதற்க்கு ஏற்றது போல் தான் மரகதம். “ என்னங்க இந்த பொண்ணு நம்ம கூப்பிடாமலேயே சாப்பிட்டு போகுது..” என்று கேட்டதும் மனைவியை நீல கண்டன் நன்றாக முறைத்தவர் பின்..

பின்… “ எனக்கு என்னவோ இனி நல்லதா நடக்கும் என்று தோனல ..” என்று சொன்னவரிடம்..

மரகதம்.. “ இனி தானா. அது தான் ஏற்கனவே நடக்க ஆரம்பித்து விட்டதே.. இந்த பெண்ணை தான் கட்டுவேன் என்று அவன் நின்னதுல இருந்து எது நல்லதா நடக்குது சொல்லுங்க பார்க்கலாம்.. டாலர் டாலரா சம்பாதிப்பதை விட்டு யாராவது இங்கேயே வரேன்னு சொல்லுவாங்கலா. எனக்கு என்னவோ இவள் தான் இதுல என்னவோ விளையாடி இருக்கா என்று தோனுது.. அது என்ன என்று கண்டுப்பிடிக்கிறேன்..” என்று சொன்ன மனைவியின் பேச்சில் தலையில் அடித்து கொண்ட நீல கண்டன்.

“கொஞ்சம் மெல்ல தான் பேசேன் டி.. அந்த பொண்ணு காதுல விழ போகுது.” என்று சொல்லியும் கூட மரகதம்.

“விழுந்தா எனக்கு என்ன ..?” என்று தான் கேட்டார்..

நல்ல வேலை நீல கண்டன் பயந்தது போல் ஸ்வேதா காதில் விழவில்லை… அந்த அறைக்கு சென்றதும் உடம்பு கச கச என்று இருப்பது போல் இருக்கவும் குளியல் அறைக்கு சென்று விட்டாள்.. அந்த அறையில் கதவு குளியல் அறையில் கதவு இரண்டும் மூடியதால் மரகதம் பேசியது ஒன்று கூட ஸ்வேதாவின் காதில் விழவில்லை…

ஸ்வேதா குளித்து விட்டு மீண்டும் வெளியில் செல்வது போல் வெளியில் வந்தவள்.. இன்னுமே சாப்பிட்டு முடித்த பின்னுமே கூடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த அனைவரிடமும் பொதுவாக..

“அம்மா வீட்டிற்க்கு போயிட்டு வரேன்.. அங்கு என் வண்டி இருக்கு அது எடுத்துட்டு வரேன்…” என்று சொல்லி விட்டு சென்றாள்…

போகும் போது அந்த கூடத்தில் இருந்த சென்டர் ஏசியையும்.. அது இப்போதும் ஓடிக் கொண்டு இருப்பதையுமே பார்த்து கொண்டு தான் சென்றாள்…

ஸ்வேதாவின் தலை மறைந்ததும் மரகதம்.. “ பார்த்திங்கலா. போகட்டுமா என்று எல்லாம் கேட்கல போறேன் என்று சொல்லிட்டு போறா…” என்ற மனைவி கோபமாக தன்னிடம் கேட்டதில்..

நீல கண்டன்.. “ அது தான் சொல்லிட்டு போகுதுல வண்டி எடுத்துட்டு வரேன் என்று விடேன்.. தல வலிக்கிறது போல இருக்கு கொஞ்சம் டீ கொண்டாயேன்…” என்று மனைவியை திசை திருப்ப பார்த்தார்.

ஆனால் மரகதம் எழாது.. இருக்கையில் இருந்து கொண்டே … சமையல் அறையை நோக்கி .. “ காதுல விழுதா.. டீ கேட்டது.. கொண்டா.” என்று சமையலுக்கு என்று நியமித்து இருந்த கனகாவிடம் குரல் கொடுத்தவர்.

பக்கத்தில் அமர்ந்திருந்த உஷாவிடம். “ ஜூஸ் எடுத்துட்டு வர சொல்லட்டாமா…?” என்று இத்தனை நேரம் இருந்த குரல் கொடுத்ததிற்க்கு எதிர்பதமாக மென்மையாக கேட்க.

உஷாவும்.. “ ம் சரிங்க அத்த..” என்று சொல்ல.. மீண்டும் பழைய குரலில்..

“ம் கேட்டது தானே கொண்டா….” என்று சத்தமாக சொல்ல.

பாவம் நீல கண்டனுக்கு தான் மனைவியை திசை திருப்ப என்று சொன்ன தலை வலி உண்மையில் வந்து விட்டது.

மரகதம் சொன்னது போல் கனகா நீல கண்டனுக்கு டீயும்.. உஷாவுக்கு ஜூசும்… கொடுக்க. அப்போது அகரன்..

“எனக்கும் ஒரு டீ…” என்று கனகாவிடம் சொல்ல. பாவம் மீண்டும் சமையல் அறையை நோக்கி சென்றார் கனகா டீ வைக்க. மனதில் அதே முன்பே சொல்லி இருந்தா இரண்டு பேருக்கும் சேர்த்து வைத்து இருந்து இருக்கலாமே என்று நினைத்து கொண்டே.. மனதில் தான் நினைத்தாள்.. அதை முகத்தில் கூட காட்டவில்லை..

காரணம் இங்கு கொடுக்கும் சம்பளம் மட்டும் அல்லாது இவள் கொண்டு செல்லும் இங்கு இருந்து மீதம் ஆன சாப்பாட்டே அத்தனை வகைகள் இருக்கும்.. தன் மூன்று பிள்ளைகளும் வகை வகையா இந்த உணவு தான்.. கூடவே சுலையாக மாதம் ஆனால் பதினைந்து ஆயிரம்.

அதன் தொட்டு எத்தனை வேலைகளை வாங்கினாலும் கனகா அதை முகத்தில் கூட காட்டாது செய்து விடுவாள்.. அதே போலவே இன்று செய்ய சமையல் அறைக்கு செல்ல..

நீல கண்டன் தான் தன் சின்ன மகனிடம். “ எனக்கு சொல்லும் போதே நீயும் சொல்லி இருக்கலாமே அகரன்.. அந்த பொண்ணு ஒரே முட்டா வெச்சி இருக்கும்…” என்று சொன்னவரிடம் அகரன் பதில் சொல்லும் முன்பு மரகதம் தான்..

“ நம்ம கேட்கிறது செய்ய தான் அவளை வேலைக்கு வெச்சி இருக்கோம்… “ என்று முறைத்தவாறு சொன்ன மனைவியை இவருமே பதிலுக்கு முறைத்தாலுமே மனதில் ஸ்வேதா போகும் போது இந்த ஏசியை பார்த்து விட்டு சென்றதும் நினைவில் வர ஒரு பெரும் மூச்சு ஒன்று வந்தது…






 
Top