Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham....19

  • Thread Author
அத்தியாயம்….19

பார்த்து கொண்டே சென்ற ஸ்வேதாவை ப்ரீத்தாவுமே பார்த்தாள்… ஸ்வேதாவின் அந்த பார்வை ப்ரீத்தாவுக்கு ஏனோ சரியாக படவில்லை… அதை தன் அன்னையிடம் சொல்லவும் செய்தாள்..

“ம்மா என்னம்மா இவ இப்படி பார்த்துட்டு போறா….?” என்று கேட்டவளிடம் மரகதம்..

“என்ன பார்த்துட்டு போறா….? என்ன முறச்சிட்டு போனாளா….?” என்று கோபமாக கேட்ட மரகதம் ஸ்வேதாவின் அந்த பார்வையை கவனிக்கவில்லை…

“ இல்லேம்மா முறைக்க எல்லாம் இல்ல.. ஆனா…” என்று ஏதோ ஒன்று சொல்ல வந்த ப்ரீத்தா…

பின்.. “ சரிம்மா அது விடு….” என்றவள்..

“எங்கு போயிட்டு வராம்மா…?” என்று கேட்டாள்..

“அது தான் நீ வந்ததுமே சொல்லிட்டேனடி.. அவள் வண்டி என்னவோ அவ அம்மா வீட்டில் இருக்காம்.. அதை எடுக்க போறேன் என்று சொல்லிட்டு போனா….” என்று சொன்னவரிடம்..

ப்ரீத்தா… “ வண்டி எடுத்துட்டு வர இத்தனை நேரமா..? அவ வேறு எங்கோ போயிட்டு வந்து இருக்கா என்று எனக்கு தோனுதும்மா… பார்க்க ரொம்ப டையாடா இருக்கா….கூப்பிட்டு என்ன என்று கேளு.. இது எல்லாம் ஆரம்பித்திலேயே கேட்டு விடனும்மா…” என்று சொன்ன மகளிடம்..

மரகதம்… “ அம்மா வீட்டிற்க்கு போயிட்டு வெளியே போய் வரட்டும் நமக்கு என்ன டி வந்துடுச்சி.. எனக்கு நாம நினச்சது ஒன்னுமே நடக்கலையேன்னு இருக்கு.. இதுல இவ வேறு அவள் எங்கு போனா…? என்று என்னை விசாரிக்க சொல்றா.. என்னை கேட்டா அக்னி வர வரை அவள் அவ அம்மா வீட்டிலேயே இருந்தா கூட நல்லது தான்னு எனக்கு தோனுது.. இவளை பார்க்க பார்க்க எனக்கு பத்திட்டு வருது டி… நீங்க சொன்னது போல இவளாள் தான் அக்னி இங்கேயே வரான்னு மட்டும் எனக்கு தெரியட்டும் அப்புறம் இருக்கு பாரு அவளுக்கு…” என்று கோபமாக பேச….

அதற்க்கு ப்ரீத்தா “ தெரிஞ்சா என்னம்மா செய்ய முடியும் உங்களால… தோ இப்போ அந்த இடம் அக்னி என்ன அப்பா பேரிலேயே வாங்க போறான்… நீங்க அத்தனை சொல்லியும் உங்க பேச்சை கேட்டானா.. . அக்னி இங்கு வந்து செட்டில் ஆகறதா இருக்கட்டும்.. எல்லாமே அவன் இஷ்டப்படி தானே நடக்குது…?” என்று மரகத்தை இன்னுமே ஏத்தி விடும் பேச்சாக தான் ப்ரீத்தா பேசியது.

மரகதமோ அனைத்து மாமியார்கள் சொல்லும் வார்த்தைகளான.. “ உன் அண்ணன் என்னடி வானத்தில் இருந்தா குதிச்சான்.. நான் பெத்து வளர்த்து.. கஷ்டப்பட்டு படிக்க வெச்சதினால தான். இன்னைக்கு இந்த நிலையில் அவன் இருக்கான்..” என்று சொன்ன மரகதம் ஒன்று யோசிக்கவில்லை..

அது… அவர் பிள்ளைகளான மூன்று பேரையும் தான் பெத்து வளர்ந்து படிக்க வைத்தது.. ஆனால் ஒருவனை மட்டுமே அனைத்தும் உன் பொறுப்பு என்று அவன் தலையில் கட்டி விடுவது தவறு என்று..

ஆனால் தன் அறைக்கு வந்த ஸ்வேதா அதை தான் யோசித்தாள்..தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு முதலில் தன் சகோதரனை தான் அழைத்தது.

“ண்ணா அவர் எத்தனை மணிக்கு அங்கு ரீச் ஆகுறாருண்ணா.” என்று கேட்டு தெரிந்து கொண்டு அண்ணி குழந்தையிடம் பேசிய பின்.. தன் அன்னைக்கு அழைத்து…. “ சாப்பிடிங்கலா..? மாத்திரை போட்டுட்டிங்கலா…” என்று விசாரித்து விட்டு மீண்டும் கூடத்திற்க்கு வந்தாள் சாப்பிட வேண்டி.

அப்போது சாப்பிடும் மேஜையில் அனைவரும் அமர்ந்திருந்தனர். ஆனால் சாப்பிட இன்னும் ஆரம்பிக்கவில்லை.

அதை யோசனையுடன் பார்த்து கொண்டும்.. இவங்க என்னை சாப்பிட கூட கூப்பிடல என்று மனதில் நினைத்தும் கொண்டும் தான் அவள் சாப்பிட அமர்ந்தது.. இப்போதும் உஷாவின் அருகில் இருந்த இருக்கை தான் காலியாக இருந்தது … பெண்ணவள் அதில் தான் அமர்ந்தாள்..

மூன்று வகை உணவுகள் மூன்று வகை சைட்டிஷ் வகைகளை மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

கனகா சுட சுட பூரியை சுட்டுக் கொண்டு வந்தவள் சுந்தரம் தட்டில் வைத்தவள் மீண்டும் சமையல் அறைக்கு போக பார்த்தவளிடம்..

ஸ்வேதா.. “ எனக்கு பூரி வேண்டாம் சப்பாத்தி கொண்டு வாங்க…” என்றதும் சமையல் செய்யும் பெண்மணி கனகா தயங்கி நின்றவள் தயக்கமாக மரகதத்தை பார்த்தாள்.

எப்போதும் வேலையாட்கள் யார் கையில் சம்பளம் வாங்குகிறார்களோ அவர்கள் தான் முதலாளியாக நினைத்து அவர்கள் பேச்சை கேட்டால் தான் வேலை நீடிக்கும் என்று அவர்கள் கண்பார்வையில் தான் வேலை பார்ப்பார்கள்.. கனகாவுமே அதே மனநிலையில் இருந்ததால் மரகதத்தை பார்த்தாள்..

காரணம் அனைத்து மாவையும் பூரிக்கு என்று தரட்டி வைத்து விட்டாள்… இப்போது என்ன செய்வது என்று தயங்க.

மரகதமும்… சிடு சிடு என்று… “ என்ன இது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னா. பூரி பிடிக்கலேன்னா. அது தான் இத்தனை இருக்கே… அதுல ஒன்ன சாப்பிடுவது…” என்று சொன்ன மரகதம்.

அதோடு விடாது.. “ உங்க வீட்டில் எல்லாம் ஒன்னே ஏதாவது செய்து வெச்சி அதை வெச்சி தானே சாப்பிடுவ…?” என்று ஒரு மாதிரி சொன்ன மாமியாரின் அந்த வார்த்தையில் ஸ்வேதாவுக்கு கோபம் வந்தது..

ஆனால் அடக்கி கொண்டவள்.. மரகதம் பேசவே இல்லை என்பது போல் ஸ்வேதாவின் பேச்சு மீண்டும் கனகத்திடம் தான் சென்றது..

“ என்னம்மா சப்பாத்தி கேட்டா நிற்கிற….” என்ற கேள்விக்கு கனகா திக்கி திணறி…

“இல்லே மாவை பூரிக்கு போல தரட்டி வெச்சிட்டேன்…அது தான்..” என்று இழுத்தவளிடம் ஸ்வேதா அவ்வளவு தானே..

“எனக்கு சின்னதா இருந்தா கூட போதும் அதுலேயே சப்பாத்தி போட்டு எடுத்துட்டு வா.” என்று சொன்னவள் அன்றைய இரவு உணவாக ஸ்வேதா சப்பாத்தி தான் சாப்பிட்டது..

மரகதத்திற்க்கோ… தான் இத்தனை சொல்லியும் அடமாக அவள் நினைத்ததை சாதித்து விட்டு போகிறாளே… அப்போ எனக்கு என்ன மரியாதை என்று.

“என்ன இது வீடா ஓட்டலா… ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு செய்ய….?” என்று கத்தியதில்..

தன் அறைக்கு என்று இருந்த ஸ்வேதா மீண்டும் கூடத்திற்க்கு வந்தவள்…

மேஜையில் அடுக்கி வைத்திருந்த உணவு வகைகளை காண்பித்து… “ அது தான் நானுமே சொல்றேன்.. இது என்ன வீடா ஓட்டலா…?” என்ற அந்த கேள்வியில்..

மரகதம் மட்டும் அல்லாது வீட்டவர்களுமே அதிர்ந்து தான் போய் விட்டனர்… ப்ரீத்திக்கோ பயம்.. இது என்ன இப்போ தான் வந்தா வந்ததுமே இப்படி கணக்கு பார்க்க ஆரம்பித்து விட்டாள்..

இதை வளர விட கூடாது என்று… “ என் அம்மாவுக்கு தெரியாதா…? இப்போ வந்தவ நீ கேள்வி கேட்கிற….?” என்று கோபமாக கத்த ஆரம்பிக்க..

நீல கண்டன். தான்.. “ விடுங்கல.. ஒரு சப்பாத்திக்கு இத்தனை பேச்சு தேவையா…?” என்று இடையில் புகுந்து கலைத்து விட்டது..

அவருக்கு என்னவோ நல்லதாக படவில்லை.. நீல கண்டனுமே.. முதலில் சமையல்க்காரி தேவையா என்று தான் தன் மனைவி மரகதத்திடன் கேட்டார்..

அவர் உடனே… “ அப்போ தான் நான் அத்தனை கஷ்டப்பட்டேன்… பசங்களை வளர்த்துட்டு வீட்டில் வேலை செய்துட்டு வெளியிலும் வேலைக்கு போயிட்டு.. அல்லாடிட்டு இருந்தேன்.. இப்போ பையன் வெளிநாட்டில் சம்பாதிக்கவும்.. கொஞ்சம் வசதியா இருக்கலாம் என்று பார்த்தா உங்களுக்கு பொருக்காதே….” என்று தன் வாயை அடைத்து விடும் மரகதததைத்தை நினைத்து அவருமே…

“பாவம் அவளுமே தன்னோடான வாழ்க்கையில் என்ன அனுபவித்தாள்… அவள் மட்டும் அன்று எக்ஸ்போர்ட்டுக்கு வேலைக்கு செல்லவில்லை என்றால் கண்டிப்பாக தன் மூன்று பிள்ளைகளையும் நல்ல படியாக படிக்க வைத்து கரை சேர்த்து இருக்க முடியாது பாவம் அனுபவிக்கட்டும் என்று விட்டு விட்டார்.

பின் சமையல் ஆளுக்கு இத்தனை சம்பளம் கொடுக்கிறேன் என்று சொல்லி அத்தனை வகைகள் செய்ய சொல்லி… இத்தனையும் நம்ம இரண்டு பேருக்கா என்று மகளிடம்.

“நீ ஏன்டி தள்ளி இருக்க.. இதே தெருவில் வீடு பார்த்துட்டு வந்துடு… நீ தனியா உலை வைக்காதே…” என்று சொல்ல.

அன்றில் இருந்து ப்ரீத்தா வாடகை பார்த்து வந்த வீட்டிற்க்கு தூங்க மட்டும் தான் செல்வது.. சாப்பாடும் இங்கேயே குழந்தையையும் பார்த்து கொள்ள ஆள் வைக்காது அம்மா வீட்டிலேயே விட்டு விட்டு தன் சம்பளம் தன் கணவன் சம்பாத்தியம் அனைத்துமே சேமிப்பாக ஆக்கியதால் தான் இத்தனை விரைவில் வீடு கட்டியது.

நல்ல வேலை அக்னி இந்த வீட்டை இரண்டு படுக்கை அறை கொண்டதாக கட்டினான். இல்லை என்றால் ப்ரீத்தாவுக்கு வாடகை பணமும் மிச்சம் ஆகி இருக்கும்..

நீல கண்டன் இதை எல்லாம் பார்த்து…. “ மரகதம் நீ ரொம்ப பண்றது போல இருக்கு. நீ கேட்க கேட்க அவன் பணம் அனுப்புறான் என்று நீ இதை எல்லாம் செய்யாதே.. அவன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சிட்டா அவ்வளவு தான்.. அதோடு அவனுக்கு என்று ஒரு பெண் வந்தா. இது எல்லாம் நாளை பிரச்சனையில் தான் முடியும்.” என்று நீல கண்டன் அன்றே சொன்னார் தான்.

ஆனால் மரகத்ம் பொறுத்த வரை அது என்னவோ அக்னி இத்தனை சம்பாதிப்பதுக்கு காரணம். நான் தான்.. ப்ரீத்தா நகை.. இது தான் அவர் ஆழ் மனதில் பதிந்து விட்டது…

அதையே தான் கணவனிடம் சொன்னது. கூடவே. “ எவன் எவனோ என் பையன் பணத்தில் தின்றான்.. “ ஷ்யாமை வைத்து சொல்ல..

நீல கண்டனுக்கோ.. இது எங்கு போய் முடிய போகிறதோ என்று நினைத்தது.. இதோ இன்று அவருக்கு புரிந்து விட்டது.. கண்டிப்பாக குடும்பம் கூடிய சீக்கிரத்தில் பிரிய தான் போகிறது என்று.

ஆனால் அதை மரகதம் உணர்வது போல் தெரியவில்லை.. பத்து வருடமாக தான் கேட்ட போது எல்லாம் பணம் கொடுத்த மகன் மீது அத்தனை நம்பிக்கையா….? மகன் வீட்டிற்க்கு கொடுக்கும் பணத்டை பற்றி ஒன்றும் கேட்க மாட்டான் என்று நினைத்து விட்டார்.

உண்மையில் மரகதம் நினைத்தது போல் அக்னி தன் அன்னை பணம் கேட்ட போது எல்லாம் என்ன ஏது என்று கேட்காது பணம் அனுப்பினான் தான்.

ஆனால் அதற்க்கு காரணம்.. அன்னை தந்தையை ஒரு மகனாக வைத்து கொள்வது தன் கடமை என்று நினைத்தான்.. அடுத்து மாதம் இத்தனை பணம் செலவு செய்ய மாட்டார்கள்… அவர்களுக்கு என்று வைத்து கொள்ள தான் அத்தனை கேட்கிறார்கள்.. கூடவே அம்மா அப்பா பெயரிலும் கொஞ்சம் டெப்பாசிட்டாக இருந்தால் நல்லது தானே…

நாளை ஏதாவது மருத்துவ செலவு என்று வந்தால் அதை வைத்து கொள்வார்கள்… கூடவே அத்தனை கஷ்டப்பட்ட தன் அன்னை பணத்தை இப்படி செலவு செய்வார்கள் என்று அவன் நினைக்கவில்லை..

ப்ரீத்தா பக்கத்திலேயே வந்த போது… ப்ரீத்தா இதை தான் அக்னியிடம் சொன்னது.. அதாவது.

“ நீ வெளி நாட்டில் இருக்க…? அகரன் சுயநலமா அவன் பாட்டுக்கு போயிட்டான்.. வயசான காலத்தில் அம்மா அப்பா கிட்ட இருந்தா ஏதாவது ஒன்னுன்னா நான் ஓடி போய் பார்த்துக்க வசதியா இருக்கும் அதுக்கு தான் வந்தேன்..” என்று தான் சொல்லி வைத்து இருந்தாள்… அவனுக்கு தெரியாதது. ப்ரீத்தா குழந்தைக்கு கேர் டேக்கராக தன் அன்னையும் தந்தையும் தான் இருக்கிறார்கள் என்று…

அதே போல் தான் சமையல்க்காரியை வைத்ததில் அவனுமே பாவம் அம்மா … முதல்ல ரொம்ப உழச்சிட்டாங்க. இப்போ ரெஸ்ட் எடுக்கட்டும் என்று தான் நினைத்தான். அதோடு சமையல் செய்யும் பெண்மணிக்கு கொடுக்கும் சம்பளம் பற்றியும் தெரியாது…

கூடவே அக்னி இந்தியாவுக்கு வரும் போது நிறைய உணவுகள் சமைப்பது.. ப்ரீத்தா இங்கு சாப்பிட்டது என்று அனைத்துமே தான் வந்ததினால் தான் ப்ரீத்தா தனக்காக இங்கு வருகிறாள் சாப்பிடுகிறார்கள் என்று நினைத்து கொண்டான்.

உண்மையை சொல்ல போனால் நம் அக்னி மீதும் தப்பு இருக்கிறது… கேட்ட போது எல்லாம் பணத்தை கொடுத்து பின் செலவு பற்றி கேட்காது அவனே அதற்க்கு அவனுக்கு தகுந்தது போல் ஒன்றை யோசித்து கொண்டு இருந்தது தவறு தான்.. ஆனால் பாவம் அவனுமே.. இத்தனை கஷ்டப்பட்டவர்கள் இப்படி ஆடம்பரமாக செலவு செய்வார்கள் என்று அவன் நினைத்து பார்த்து இருக்க மாட்டான்..

ஆனால் ஒன்றை உறுதியாக சொல்லலாம். அக்னி அனைத்தையும் செய்து விட்டு இப்போது செய்யாது போனால் அனைத்து பழியும் வந்த பெண் மீது தான் விழும் என்பது நிச்சயம்…

இப்படி அவர் அவர் தனக்கு தகுந்தது போல் இருக்க. ஸ்வேதாவுமே தன் கணவரின் உழைப்பி வீணாக போகாது எப்படி அதை தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஆக்கபூர்வமாக மாற்றும் வழியை யோசித்து முடிவு செய்தாலுமே, பெண்ணவளுக்கு இன்னும் கணவனிடம் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.. ஏதாவது நினைத்து கொள்வானா..? என்ற பயமும் பெண்ணவளின் மனதில் எழ தான் செய்தது.

ஏன் என்றால் அவளுக்கு கணவனும் புதியவன் தானே. பத்து வருடம் கல்யாண வாழ்க்கையே புரிதல் இல்லாது எத்தனையோ இருக்கும் போது பதினைந்து நாளே ஆன மனைவிக்கு இந்த பயம் நியாயமான பயன் தான்..

ஸ்வேதா அனைத்தையும் நினைத்து தூங்க நேரன் ஆனாலுமே. விடியலில் சரியாக கணவன் அழைத்த ஒரே அழைப்பில் பேசியை எடுத்து விட்டாள்..

பெண்ணவள் உடனே எடுத்த அழைப்பில்… அக்னி. “ என்ன டா தூங்கலையா..?” என்று தான் கேட்டது.. கேட்டவனின் குரலில் கரகரப்பு…

பெண்ணவளுக்குமே அத்தனை தூரத்தில் இருந்து அதுவும் கை பேசி வழியாக கேட்ட கணவனின் குரலில் ஆணவன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாத் தொண்டை அடித்து கொள்ள. . அவள் தலையை மறுப்பாக ஆட்டினாள்..

பாவம் ஆடியோ காலில் அழைத்த அக்னிக்கு அவளின் சைகை தெரியாது .. “ என்ன டா….? என்ன ஆச்சி..?” என்று கேட்டவனின் பெண்ணவள்..

“நான் இல்லேன்னு தலையாட்டினேன்….” என்று சொன்ன பதில். அதை விட அவளின் அந்த குரல்… தன்னவளுக்கு அழுமை வருகிறது.. அதை தனக்காக அடக்கிக் கொண்டு பேசுகிறாள் என்பதை புரிந்து கொண்ட ஆணவன்..

சட்டென்று பேசியை கட் செய்து விட. அதில் இங்கு பெண்ணவள் தவித்து போய் விட்டாள். தான் தவறாக ஏதாவது பேசி விட்டோமோ என்று..

ஆனால் அவளை அதிகம் தவிக்கவிடாது.. அவன் வீடியோ காலில் வர.. மூக்கை உரிஞ்சிக் கொண்டே தான் ..” எதுக்கு இப்போ கட் பண்ணிங்க..” என்று கேட்டவளுக்கு பதில் அளிக்காது அக்னி பெண்ணவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான்.

என்ன இது எதுவும் பேசாது பார்த்துட்டு இருக்காரு.. நாம ஏதாவது தப்பு செய்து விட்டோமோ என்று நினைத்து பெண்ணவள் தான் குழம்பி போய் விட்டாள்…




 
Well-known member
Joined
May 11, 2024
Messages
217
சூப்பர் 👌👌👌👌👌👌👌சஸ்வேதா பதில்லடி சூப்பர் இனி மரகதம் என்ன செய்ய போறாறோ 🤔🤔🤔🤔🤔இதனால் அவர்கள் இருவரது வாழ்வு 🤔🤔🤔🤔🤔🌺🌺🌺🌺🌺
 
Well-known member
Joined
Jul 13, 2024
Messages
513
Super Swetha
 
Top