Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham...23....2

  • Thread Author
அத்தியாயம்….23…2

ஆம் உஷாவின் குழந்தை கலைந்து விட்டது… ஸ்வேதாவுக்கு தன் அண்ணாவையா சொன்னான்… என்று நினைக்க நினைக்க பெண்ணவளுக்கு அத்தனை ஆத்திரம்.. இப்போதுமே அதை நினைத்தால் கோபம் தான் இப்போதுமே அகரனை பார்த்தால் அதே போல் செருப்பை கழட்டி அடிப்பாள் தான்.. அதே போல் தான் மரகதத்தையும் பார்த்து துப்புவாள் தான்..

ஆம் அன்று அகரனை தான் அடிக்க அடிக்க தன் அறையில் இருந்து வெளியில் வந்த உஷா பார்த்து சிலையாக முதலில் சுவற்றை பிடித்து கொண்டு நின்று விட்டாள்…

ஆனால் மரகதம் அது போல் நில்லாது.. “ என்ன டி என் மவனை அடிக்கிற அவன் இல்லாததையா சொல்லி விட்டான்…” என்றவரை அடிக்கவில்லை என்றாலும் அவளை அப்படி அருவெறுப்பான பார்வை பார்த்தவள் பின் அவள் முன் துப்பினாள்… உண்மையில் அந்த எச்சி மரகதத்தின் முகத்தில் துப்ப வேண்டியது..ஆனால் ஸ்வேதா அவர் முன் துப்பி விட்டார்.

அதை பார்த்த நீல கண்டன். “ என்னம்மா விட்டா “ என்றவர் அடுத்து என்ன பேசி இருப்பாரோ… ஆனால் ஸ்வேதா திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்தவர்..

பின்… “ இதுங்க பேசின பேச்சுக்கு இந்த வீட்டின் குடும்ப தலைவரா நான் செய்ததை நீங்க செய்து இருக்கனும்…” என்று விட்டார்.

பாவம் உண்மையில் ஒரு குடும்ப தலைவராக அங்கு அவர் தலை குனிந்து நின்று விட்டார்.

ஆனால் அவருக்கும் சேர்த்து மரகதம் கத்தோ கத்தோ என்று கத்த. பதிலுக்கு ஸ்வேதாவும் பேசி விட்டார்..

“ கல்யாணத்துக்கு முன்பே குழந்தையை கொடுத்தவன் எல்லாம் என் அண்ணனை பேசறதுக்கு யோகியத்தை இல்லை..” என்று இவள் இப்படி சொல்லவும் தான் உஷா தரையில் விழுந்தது..

உண்மையில் ஸ்வேதா அவள் விழுந்த நொடி பயந்து விட்டாள்.. அதோடு அனைவருக்கும் முன்பு அவள் அருகில் இவள் தான் ஓடினாள்… ஆனால் அகரன் அவளை பிடித்து தடுத்து விட்டவள் விழுந்து இருந்த தன் மனைவியை தூக்க.. கீழே இரத்தம் படிவம் படிந்து இருப்பதை பார்த்து தூக்கியவன் அப்படியே மீண்டும் கீழே இறக்கி விட்டவன்.. தலையில் அடித்து கொண்டு அழ..

மரகதமோ ஸ்வேதாவை அத்தனை பேச்சு… “ இப்போ சந்தோஷமா.. உனக்கு அவளை பார்த்து பொறாமை… உன் ராசி “ என்று அப்படி பேச்சு பேசி விட்டார்..

நீல கண்டனோ… “ நீ கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கனும்..” என்றதில் உஷாவை பார்த்து அமைதியாக நின்று இருந்தவள்.. அவரின் இந்த பேச்சில்..

“எப்படி உங்களை போலவா…” என்று விட்டாள்..

அத்தோடு இல்லாது இதோ தன் தாய் வீட்டிற்க்கும் வந்தும் விட்டாள். அவளின் அன்னை அந்த நேரத்தில் அதுவும் கோபமும் சோர்வுமாக வந்து நின்ற மகளை பார்த்து பதறி போனவராக..

கை பிடித்து வீட்டிற்க்கு அழைத்து சென்று தண்ணீர் கொடுத்து விட்டு..

“ என்னம்மா என்ன ஆச்சு..?” என்று அவர் கேட்டது தான் தாமதம்.

ஒன்று விடாது அவள் அனைத்தும் சொல்லி விட்டாள்…

மகள் சொல்ல சொல்ல கெளசல்யா மார்பின் மீது கை வைத்து அப்படியே அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டார்..

அதை பார்த்த ஸ்வேதாவுக்கு பயம் வந்து விட்டது.. காரணம் கெளசல்யா ஏற்கனவே ஆர்ட் பேஷண்ட் தான் சொல்லி மீண்டும் பிரச்சனை வந்து விட்டதோ என்று..

தன் கையில் இருந்த நீரை அன்னையிடம் கொடுத்து … “ ம்மா முதலில் இதை குடிங்கம்மா….” என்று சொன்னாள்…

கெளசல்யாவுக்கும் அது தேவையாக இருக்க மறுக்காது வாங்கி குடித்து முடித்தவர்..

ஒரு அன்னையாக தன் மகளின் வாழ்வை நினைத்து பயம்.. அதோடு சொந்தங்கள் சொன்ன… “ எங்க பேச்சி மீறி கைக்கு மீறிய இடமா கொடுக்குற நாளைய பின்னே ஏதாவது பிரச்சனை ஆனா நாங்க பஞ்சாயத்துக்கு வர மாட்டோம்…” என்று சொன்னதும் நியாபகத்தில் வந்தது..

.அவர்கள் சொன்னது போல் நாம் கொடுத்து விட்டோமோ… இப்போது தன் மகளின் வாழ்க்கை என்ன ஆவது… தன் மகனை அப்படி பேசியதில் ஒரு தாயாக அவருக்குமே அவ்வளவு கோபம் தான்.. ஆனால் அதையும் தான்டி பெண் அந்த வீட்டு ஆண்மகனை செருப்பால் அடித்து விட்டாளே… நாளைய பின் இது தானே முதலில் வந்து நிற்க்கும்…

என்ன தான் மாப்பிள்ளை தன் மகள் மீது ஆசை வைத்து இருந்தாலும், தன் தம்பியை அடித்து விட்டது தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற பயம் அதிகம் இருக்க.

மகளிடம்.. “ இத்தனை கோபம் ஆகாதுடி ..” என்று விட்டார்..

அவ்வளவு தான் ஸ்வேதா…. “ என்னம்மா இப்படி சொல்றிங்க…? நம்ம அண்ணாவை அவன் அப்படி பேசி இருக்கான்.. நீங்க இப்படி சொல்றிங்க…” என்று கத்த..

கெளசல்யா… “ எனக்கும் தான்டி பெத்த வயிறு என் மகனை இப்படி பேசினாங்கலா என்று பதறுது… ஆனா நீ அடிச்சதுல பதறுதுடி…” என்று சொல்லி அழுபவரை ஸ்வேதா தான் தேத்தினாள்..

“ உங்க மாப்பிள்ளை என்னை விரும்பி தானே கல்யாணம் செய்தார்.. பார்க்கலாம் அவர் விருப்பம் எந்த அளவுக்கு இருக்கு என்று..” சொன்னவளையே இப்போது கெளசல்யா பயந்து போய் பார்த்தார்..

சரியாக ஷ்யாம் எப்போதும் அழைப்பது போல் அன்னையை அழைக்க. அழைப்பை ஏற்றவரால் தான் ஒன்றும் பேச முடியவில்லை… அழுகை மட்டும் தான் வந்தது..

இவனை என்ன மாதிரி சொல்லி விட்டார்கள்… என்று மகனின் குரலை கேட்டதுமே துக்கம் தொண்டையை அடைக்க. அவருக்கு வார்த்தைகள் வரவில்லை…

அன்னையின் இந்த அழுகையில் அங்கு இருந்தவன் பதறி போய் விட்டான்.

“ம்மா என்னம்மா பிரச்சனை என்ன விசயம்…. உடம்பு சரியில்லையா..? . இருங்க நான் ஸ்வேதாவை கூப்பிடுறேன்… ம்மா கட் பண்ணாதிங்க லைனிலேயே இருங்க…” என்றவனிடம்.

கெளசல்யா… “ அவள் இங்கு தான் இருக்கா ஷ்யாம்…” என்று சொன்னவரின் குரலில் தெரிந்த வேதனையில் ஷ்யாமுக்கு தெரிந்து விட்டது.. அன்னையின் உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை… ஸ்வேதாவுக்கு தான் என்று.. தன் பதட்ட குரலில் தன் பக்கம் வந்து நின்ற அக்னியையே ஒரு வித யோசனையுடன் பார்த்ததுக் கொண்டே..

“ம்மா என்ன பிரச்சனைம்மா…?” என்று கேட்டான்…

அதற்க்கு கெளசல்யா என்ன சொல்லி இருப்பாரோ அதற்க்குள் அன்னையின் கையில் இருந்தை கை பேசியை பிடுங்கிக் கொண்ட ஸ்வேதா.

ஆவேசமாக… “ எல்லாம் நீ பார்த்து வெச்சியே….” என்று தங்கை ஆரம்பிக்கும் போதே தன் பதட்ட குரலில் தன் அருகில் வந்து நின்ற அக்னியை பார்த்து கொண்டே கொஞ்சம் தூரம் விலகியன் பின் தன் அறைக்கு வந்து விட்டான்..

நண்பனின் அந்த செயல் அவனை பலமாக தாக்கியது.. அதுவும் ஷ்யாமின் மிக அருகில் அவன் நின்று கொண்டு இருந்ததினால், அவன் மனைவி தன் அண்ணனிடம் பேசியது தெளிவாகவே அவன் காதில் விழுந்தது…

இருந்தும் தை விட முக்கியமாக… ஸ்வேதா இந்த நேரம் அவள் அம்மா வீட்டிற்க்கு சென்று இருப்பதிலும், இப்போது தன் அண்ணனிடம் பேசிய பேச்சிலும் அக்னிக்கு தெரிந்து விட்டது தன் வீட்டில் தான் பிரச்சனை என்று..

உடனே தன் அன்னைக்கு கை பேசியில் அழைத்தான். அது யாரும் ஏற்காது இருக்கவும்… தன் தம்பிக்கு அழைத்தான். அவனுமே இவன் அழைப்பை ஏற்காது போக. கடைசியாக தான் தங்கையை அழைத்தான்..

அவள் அழைப்பை ஏற்றால் தான். ஆனால் என்ன விசயம் என்று ஒன்றும் சொல்லாது..

“நீ ஒன்னை கூட்டிட்டு வந்தியே அது இழுத்து வெச்ச பிரச்சனையில் ஆஸ்பிட்டலில் பிரச்சனை ஒடிட்டு இருக்கு… உன்னை அப்புறம் கூப்பிடுறேன்….” என்று சொல்லி வைத்து விட்டதில்..

அக்னி இன்னுமே தான் குழம்பி போனான்.. அதுவும் ஆஸ்பிட்டலில் பிரச்சனை என்றதும் என்னவோ ஏதோ என்று இருந்தாலுமே…

தங்கை சொன்ன… “ ஒன்னை நீ இழுத்து விட்டு இருக்கியே என்ற வார்த்தை என்ன இது ஆடு மாடு போல தன் மனைவியை பேசுறாள்.. அதுவும் கூட்டிட்டு வந்தியே… நான் என்ன யாருக்கும் தெரியாது இழுத்துட்டா வந்தேன் என்றும் நினைத்துக் கொண்டே நண்பன் சென்ற அறையை பார்க்க..

அப்போது சரியாக ஷ்யாமும் தன் அறையில் இருந்து கோபமாக வெளியில் வந்தவன் அக்னியின் சட்டையை பிடித்து கொண்டான்..

இவ்வளவு நேரமும் குழந்தைக்கு விளையாட்டு காட்ட அருகில் இருந்த பூங்காவுக்கு அழைத்து சென்ற தேவி சரியாக அந்த சமயம் வீட்டிற்க்கு வர… பார்த்தது என்னவோ தன் கணவன் அக்னியின் சட்டை காலரை பிடித்து கொண்டு இருப்பதை தான்.

தேவி தான் பதறி போய்… “ என்ன பண்றிங்க நீங்க.. அவர் முன்ன போல உங்க பிரண்ட் மட்டும் கிடையாது… உங்க தங்கையின் புருஷனுமே… அது முதல்ல உங்களுக்கு நியாபகத்தில் இருக்கா…?” என்று கேட்டவள் தன் கணவனின் கையையுமே அக்னியின் சட்டையில் இருந்து எடுத்து விட்டு இருந்தாள்..

மனைவியின் அந்த வார்த்தை அவனை இன்னுமே கோபத்தை தான் கூட்டியது..

அதில்.. “ அது தான்டி நான் செய்த பெரிய தப்பு…” என்று சொன்னவனின் பேச்சில் அப்போது அக்னிக்குமே கோபம் ஏறியது..

அதில்.. “ ஷ்யாம் வார்த்தை பார்த்து விடு.. தேவி சொன்னது போல இப்போ நாம பிரன்ஸ் மட்டும் இல்ல… புரியுதா….” என்று பேசியவனின் குரலின் கோபத்தில்..

தேவி அக்னி அருகில் சென்று அவன் கை பிடித்து… ஏதோ பேச வரும் போது ஷ்யாம் சொன்ன…

“ அவன் கையை விடு… இல்லேண்ணா உன்னையும் இவனுக்கு நான் கூட்டி கொடுத்தேன் என்று சொல்லிடுவாங்க…” என்று சொன்னது தான்..

தேவியை தான்டி கொண்டு அக்னி ஷ்யாமை அரைந்தான் என்றால் தேவி.. கணவனின் சட்டையை பிடித்து கொண்டு விட்டாள்…

ஷ்யாமோ… தன் மனைவியிடம்… “ நான் உன்னை எப்போவும் தப்பா நினைக்கல தேவி.. நினைக்கவும் மாட்டேன்…” என்று சொன்னவனின் இந்த பேச்சில் அக்னி தான் நண்பனை அடித்தும் கோபம் அடங்காது நின்று இருந்தவன் சிலையாக போனான்..

இதன் அர்த்தம் என்ன…? என்னை சந்தேகம் படுகிறானா….? இவன் என்னை சந்தேகம் படும்படியான அப்படி என்ன நடந்துக் கொண்டேன்..நினைத்தவன் கேட்டும் விட்டான்.

கூடவே…. “உன் தங்கையை கட்டும் முன்னவே நான் தேவியை தங்கையா தான் நினச்சேன் ஷ்யாம். இப்போ உறவிலும் அவள் என் தங்கை…”

அக்னியின் இந்த உணர்ச்சி மிகுந்த வார்த்தையில் ஷ்யாமும் முன் அளவுக்கு கோபம் இல்லை என்றாலும், தன் தங்கையின் வாழ்க்கை நினைத்தும் தன்னை பற்றி அக்னி வீட்டவர்களின் பேசிய பேச்சிலும்.. அத்தனை கோபம் அதங்கம்..

இந்த வார்த்தையை கேட்ட பின் தன் தங்கை எப்படி அந்த வீட்டில் இனி இருப்பாள்.. நானுமே முன் போல்.. நினைக்க நினைக்க தலை சுற்றுவது போல் இருக்க. தலையை பிடித்து அமர்ந்து விட்டான்..

அக்னி தான்… நண்பனின் பக்கத்தில் அமர்ந்தவன்… “ ஷ்யாம் என்ன பிரச்சனை சொன்னா தானே எனக்கு புரியும்.. பத்து வருஷமா நாம ஒன்னா இருக்கோம்.. நான் கோபம் பட்டாலுமே நீ கோபம் பட மாட்டியேடா…. அதுவும் இல்லாம தேவியை வெச்சி என்ன மாதிரி பேச்சுடா…” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்த ஷ்யாமின் முகத்தில் அப்படி ஒரு வேதனையின் சாயல்..

அதனை பார்த்த அக்னி.. “ ஷ்யாம்…” என்று அவன் தோள் மீது வைத்தான் என்றால் தேவி கணவனின் மறுப்பக்கம் அமர்ந்துக் கொண்டு .

“என்னங்க என்ன விசயம்..?” என்று அவள் கேட்டால் என்றால் அக்னி..

“ ஸ்வேதாவுக்கு அங்கு ஒரு பிரச்சனையும் இல்லையே என்று கேட்டான்..

தேவி தான்.. “ ஸ்வேதாவுக்கா ஸ்வேதாவுக்கு என்ன அங்கு பிரச்சனை..?”பாவம் இப்போது தான் வீட்டிற்க்கு வந்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

அக்னி தான் கொஞ்சம் நேரம் ஷ்யாம் அவனின் அம்மாவுக்கு அழைத்தது அவன் அறைக்கு சென்று பேசியது சொன்னவன். மறந்தும் தன் மனைவி அவன் அண்ணனிடம் தன்னை பற்றி பேசியது சொல்லவில்லை..

ஒரு மாதம் தன் கல்யாண வாழ்வை குறைத்து பேச அவனுக்கு பிடிக்கவில்லை..

ஆனால் அவனின் அம்மாவோ அவனின் அம்மாவும் தம்பியும் அவனின் கல்யாண வாழ்கையே முச்சந்தியின் நிற்க வைத்து இருப்பது தெரியாது..

அக்னியின் பேச்சில் தேவி… “ நான் அத்தைக்கே போன் செய்து என்னன்னு கேட்கிறேன்…” என்று சொல்லி விட்டு எழ இருந்த மனைவியின் கை பிடித்து தடுத்து நிறுத்துய ஷ்யாம்..

“ வேண்டாம்..” என்பது போல் தலையாட்டியவின் செயலில் மீண்டும் தேவிக்கு கோபம் தான் வந்தது..

அதில்.. “ இப்போ உங்களுக்கு என்ன தாங்க பிரச்சனை.. நீங்களும் என்ன என்று சொல்ல மாட்டிங்க..? என்ன பிரச்சனை என்று அத்தைக்கிட்ட கேட்கலாமுன்னா வேண்டாம் என்று சொல்றிங்க…” என்று கத்தியவளிடம்..

இப்போது அவளுக்கும் அதிகமாக ஷ்யாம் கத்தினான்..

“இப்போ என்ன என்று என்னை சொல்ல சொல்ற தேவி… ஒரு அண்ணனுக்கு வர கூடாத பழி எனக்கு வந்து இருக்கு.. அத எப்படி சொல்வேன் டி… எனக்கே இப்படின்னா என் அம்மாவுக்கு பாவம் வயசானவங்க டி அவங்க.. இந்த வயசுல இந்த வார்த்தை எல்லாம் கேட்கனுமா.. இதுல அவ வாழ்க்கையுமே…” என்று சொன்னவன் மீண்டும் தலையில் அடித்து கொள்ள போக பார்த்தவனின் கை பிடித்து தடுத்து நிறுத்திய அக்னி..

“ ஷ்யாம் என்ன சொல்ற… என்ன பேச்சு உனக்கு வந்து இருக்கு..?” என்று கேட்டவனிடம்..

“ம் உனக்கு நான் மாமா வேலை பார்த்தேனாம்.. ஆ உனக்கு மட்டும் இல்ல என் தங்கைக்குமே நான் அண்ணன் இல்லையாம் மாமாவாம்..” என்று சொன்ன நொடி அக்னி ஷ்யாமின் கன்னத்திலேயே அரைந்தான்..

அரைந்துமே அக்னியின் கோபம் குறையவில்லை… “என்ன பேச்சுடா இது…? அசிங்கம்மா இருக்கு,….? என்று சொன்னவன் எழுந்து அங்கும் இங்கும் நடந்தவனின் முன் போய் நின்ற ஷ்யாம்..

“ அசிங்கம்மா இருக்கா… இதை நான் சொல்ல உனக்கு அசிங்கம்மா இருக்கா. ஆனா பாரு உன் அம்மாவும் உன் தம்பியும் என் தங்கை கிட்ட இதை தான் சொல்லி இருக்காங்க..” என்று சொன்ன நொடி தேவி.

“என்னங்க சொல்றிங்க..?” என்று பதறி போய் எழுந்து வர.

அக்னிக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.. ஷ்யாமின் வார்த்தையை கிரகிக்கவே ஒரு நிமிடம் பிடித்தது.. புரிந்த பின்..

ஷ்யாமின் சட்டையை பிடித்தவன்.. “ இப்போ இப்போ நீ என்ன சொன்ன…? என்ன சொன்ன…?” என்று ஆவேசமாக கேட்டனுக்கு பதில் சொல்லாது தன் சட்டையில் இருந்த அக்னியின் கையை எடுத்தவன்.

“ நீ என் சட்டையை பிடிக்க கூடாது. உன் தம்பி உன் அம்மா இது சரி தான் என்பது போல வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்கலே உங்க வீட்டு ஆளுங்க அவங்க கிட்ட போய் உன் இந்த கோபத்தை காட்டு..” என்று சொன்னவன்..

பின் தன் மனைவியின் பக்கம் திரும்பியவன்.. அக்னியை காட்டி… “ இவன் என் தங்கையை கட்டிக்க கேட்ட போது நான் கொஞ்சம் தயங்கினேன்.. உனக்கு நியாபகம் இருக்கா தேவி…” என்று கேட்ட கணவனுக்கு தலையை ஆட்டியவள்..

பின் “ நான் கூட கேட்டேனே. அண்ணாவுக்கு என்ன குறை ஏன் நீங்க யோசிக்கிறிங்க…?” என்று..

“ம் கேட்ட. கேட்ட தான். நான் யோசிச்சது எல்லாம் இவங்க வீட்டு ஆட்களை நினச்சி தான்..” என்று சொன்ன நண்பனையே அக்னி யோசனையுடன் பார்த்து இருந்தான்.. அதிர்ச்சி விலகாது…

இது என்ன அதிர்ச்சி இன்னும் இருப்பது போல் தான் ஷ்யாமின் அடுத்த அடுத்த பேச்சு இருந்தது.

“படிக்க வெச்சிட்டு இவனை வெச்சி அவங்க செட்டில் ஆகிட தான் அவங்க பார்த்தாங்க. .. நான் கவனிச்ச வரை அந்த வீட்டில் இருப்பவங்க எல்லோரும் செல் பிஷ் தான்… இதை வெச்சி நாளை பின்ன என் தங்கைக்கு பிரச்சனை வர கூடாது பாரு. அதுக்காக தான் யோசிச்சேன்.. ஆனா பாரு அவங்க நான் நினச்சி கூட பார்க்க முடியாதப்படி இருக்காங்க..”என்ற கணவனின் பேச்சில் அக்னியின் முகம் அப்படியே மாறி விட்டது..

அக்னியினால் ஒன்றும் பேச முடியாத நிலையில் தான் அவன் இருந்தான்.. அப்படியான பேச்சை எப்படி அவர்கள் பேசினார்கள் … ஏன் என்று இவன் யோசிக்கும் போது தான் ஷ்யாம் தொடர்ந்து..

“இவன் வேலையை எனக்கு விட்டு கொடுத்தானாம்.. என்ன வேடிக்கை பார்த்தியா….? இது சொன்னது படிக்காதவன் கிடையாது.. மெத்த படிச்ச இவன் தம்பி தான்.. அந்த வேலைக்காக தான் நான் என் தங்கையை இவ…” என்று பேசியவன் தொடர்ந்து கூட அந்த வார்த்தையை சொல்ல முடியாது நிறுத்தி விட்டவன்.

தன் மனைவியிடம்…. “ நாம இந்தியாவுக்கு போக போறோம் .. குழந்தையும் நீயும் ரெடியாகு தேவி.. நான் இந்தியாவுக்கு டிக்கெட் கிடைக்குதா என்று பார்க்கிறேன்..” என்று இவன் சொல்லி முடித்த சமயம்.

அக்னி அனைவருக்கும் இந்தியாவுக்கு போக டிக்கெட் புக் செய்து விட்டான்..

அதை சொல்லவும் செய்தான். “ நான் புக் செய்து விட்டேன்..” என்ற நொடி ஷ்யாம் அதற்க்கு உண்டான பணத்தை உடனே அவனியின் வங்கி கணக்கில் போட்டு விட.

அக்னி அவனின் கை பேசி அவனிடம் இருந்ததினால் உடனே பார்த்து விட்டவன் வெறுமையாக அவனை ஒரு பார்வை பார்த்தான்..

ஷ்யாம் எப்போதும் அக்னி செலவு செய்யும் பணத்தை அனுப்பி வைத்து விடுவான் தான்… ஆனால் இது போல் கைய்யோடு எல்லாம் கிடையாது.. இப்போது ஏன் அனுப்பினான் என்று தெரிந்ததினால் ஒன்றும் சொல்ல முடியாது அவன் அமைதியாக இருந்தான்..

ஆனால் ஷ்யாம் அக்னியை போல் எல்லாம் அமைதியாக இருக்காது…. அக்னியின் எதிர்காலம் கொண்டு..

“ இன்னும் த்ரீ டேஸ்ல உனக்கு கொடுத்த வேலை எல்லாம் முடிச்சி கொடுத்துடுவே தானே.. இப்போ நீ இந்தியாவுக்கு வந்தா இங்கு ஏதாவது பைன் கொடுக்க வேண்டியதாகிடும் அக்னி…” என்று சொன்னவனின் பேச்சில் அக்னிக்கு என்னவோ போல் தான் ஆனது.

இவனையா தன் வீட்டில் அப்படி பேசினார்கள் என்று…

“அங்கு என் வாழ்க்கையே ஊஞ்சலாடிட்டு இருக்கு இதுல இது எல்லாம் எம்மாத்திரம்…” என்று சொன்னவன்..

மீண்டும் மீண்டும் தன் மனைவிக்கு அழைப்பு விடுத்து கொண்டு இருந்தான்.. ஆம் ஷ்யாமின் பேசியில் மனைவியின் குரலை கேட்ட நொடியில் இருந்தே மனைவியை கை பேசியில் அழைத்து கொண்டு தான் இருந்தான்.. ஆனால் அந்த பக்கம் தான் அதை யாரும் ஏற்கவில்லை..

இங்கு உஷாவை எப்போதும் அவள் பார்க்கும் மருத்துவமனைக்கு தான் அழைத்து சென்றனர்…

அவளை பார்க்கும் மருத்துவரும் அங்கு இருக்க…. அவரே உஷாவை பரிசோதனை செய்து பார்த்து மருத்துவர். குழந்தை கலைந்து விட்டது என்று சொல்லி விட்டனர்..

அதை கேட்டதும் அகரன் அப்படியே அதிர்ச்சியாகி நின்று விட்டான்.. அவன் எதிர் பார்த்தது தான்.. காரில் அழைத்து வரும் போதே காரின் சீட்டில் அவ்வளவு ரத்தம் தான்..

இருந்தும் ஒரு நம்பிக்கை… ஏதோ ஒரு நடந்து விடாதா..? என்று. அது இல்லை என்று மருத்துவரின் வார்த்தையில் சிலையாக இருந்தவனிடம் .

மேலும் அந்த மருத்துவர் சொன்ன.. “ எனக்கு என்னவோ குழந்தை எல்லாம் தானா கலைவது போல இல்ல. “ என்றவரின் பேச்சில்..

இப்போது மரகதத்திற்க்கு கோபம் வந்து விட்டது.. “ என்ன சொல்றிங்க நீங்க… யாராவது குழந்தையை கலைப்பாங்கலா…?” என்று தன் வீடு போல் அந்த மருத்துவரிடம் மரகதம் சத்தம் போட்டார்..

அந்த மருத்துவரோ… “கலைப்பாங்க. என்ன தான் நாம படிச்சி வளர்ந்தாலுமே இன்னுமே பெண் குழந்தையா என்று கலைக்கிறவங்க இருக்க தான் செய்யிறங்க…” என்று சொன்னவரின் பேச்சில் அகரன்.

“என்ன டாக்டர் சொல்றிங்க.? நானே குழந்தை போச்சே என்று இருக்கேன். நீங்க என்ன என்னவோ சொல்லிட்டு இருக்கிங்க.. முதல்ல எனக்கு பெண் குழந்தை என்று நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுமே..” என்று சொல்லியும் கூட அந்த மருத்துவர் நம்ப தயாராக இல்லை..

ஏன் என்றால் முதலில் கலைந்த அனைத்து அந்த கருவுமே பெண் குழந்தைகள் தான்… உஷாவை முதலில் இருந்து பார்க்கும் அந்த மருத்துவர் என்பதினால் அவருக்கு தெரிந்து இருந்தது..

அந்த சமயம் தான் அக்னி அமெரிக்காவில் இருந்து முதலில் அன்னை தம்பிக்கு என்று அழைத்தது.. இவர்கள் தங்கள் கை பேசியை வீட்டில் வைத்து விட்டு வந்ததினால் எடுக்காது போக.

வேலையில் இருந்து வந்த ப்ரீத்தாவும் சுந்தரமும் இங்கு விசயம் தெரிந்து நேராக மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.. அப்போது தான் அந்த மருத்துவர் இது போல் பேசிக் கொண்டு இருந்தார்..

அந்த சமயம் தான் அக்னியின் அழைப்பு வந்து.. இப்படியாக பேசி வைத்தது…பின் ஒரு வழியாக விளக்கி தான் அந்த மருத்துவர் விட்டதே. அதுவும் அவ்வளவு எளிதாகவும் விடவில்லை.. பெண் குழந்தை என்று வெளியில் எங்காவது ஸ்கேன் எடுத்து தெரிந்து கொண்டு கலைத்து விட்டார்கலோ என்ற சந்தேகம் தான் அவருக்கு இப்போதும்..

ஒருவழியாக மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்கி செல்லுங்கள் என்று விட்டு சென்றார்.

பாவம் மனைவிக்கு மருத்துவம் பார்க்க கூட அப்போது அகரனிடம் பணம் இல்லை.. மரகதம் தான் கொடுத்தது.. அப்போது கூட மகனிடம் இல்லை என்று தெரியாது… வீட்டிலோ வங்கியிலோ இருக்கும் என்று தான் நினைத்து கொண்டார்.

ஆனால் மறுநாளே அனைத்தும் தெரிந்து விட்டது… அக்னி இந்தியா வந்து இறங்கியதும்.. தன் மனைவியை பார்க்க தான் முதலில் நினைத்தது..

ஆனால் இப்படி தன் மனைவியிடம் ஷ்யாமை பற்றி பேசியவர்களை பார்த்து ஏதாவது செய்தால் தான் ஆகும் என்ற மனகொதிப்பில் விமானநிலையத்தில் இருந்து நேராக தன் வீட்டிற்க்கு தான் சென்றான்..

ஷ்யாம் கூட என்ன இது என்று பார்த்த போது… “ நான் இதுக்கு ஒரு வழி செய்யாது அவள் முகத்தில் முழிக்க என்னவோ போல் இருக்கு..” என்று சொன்னவனிடம்..

ஷ்யாம்… “ வீட்டிற்க்கு போயும் நீ இதே மனநிலையில் இருக்கியா என்று பார்க்கிறேன்…” என்று தான் சொல்லி அனுப்பியது..

ஏன் என்றால் தன் தங்கை அகரனை அடித்ததை அவன் அன்னை அவனிடம் சொல்லி விட்டார்.. கூடவே உஷாவின் நிலையும் தான்…

ஆனால் ஷ்யாம் தான் இதை அக்னியிடம் சொல்லவில்லை. காரணம் தன் தங்கை அகரனை செருப்பால் அடித்தது தப்பு கிடையாது என்பது தான் அவன் எண்ணம் இன்னும் கேட்டால் அந்த செருப்பை ஏதாவது நுழைத்து அவனை அடித்து இருக்க வேண்டும்.. இது தான் அவன் நினைத்தது..

கூட உஷாவின் பிரச்சனைக்கும் தன் தங்கைக்கும் என்ன தொடர்பு… அகரன் அப்படி பேசினான்..அதற்க்கு அடித்தால்.. அந்த பெண் விழுந்தால் என் தங்கை மீது தவறா.. ஆனால் இவை அனைத்தும் தன் தங்கை மீது தவறாக தான் பினைப்பார்கள் என்று தெரிந்து தான் ஷ்யாம் அக்னியிடம் அப்படி பேசியது..

ஆனால் அக்னி தான்.. “ நான் எல்லாம் முடிச்சிட்டு வந்து உன் கிட்ட பேசிக்கிறேன் டா… அப்பாவது என்னை நம்பு…” என்று விட்டு தான் தன் வீட்டிற்க்கு வந்தது..

இவன் சென்ற நேரம் இவன் வீட்டு வாசலில் ஒரு ஐந்து பேர். நன்றாக வாட்ட சாட்டமாக இருப்பவர்கள் கத்தி கொண்டு இருந்தார்கள்..

பணம் கொடுக்கனும் அத்தனை லட்சம் கோடி என்று … இவனுக்கு ஒன்றும் புரியாது வீடு மாறி வந்து கத்திக் கொண்டு இருக்கிறார்களா என்று தான் அவன் நினைத்தான்…

ஆனால் தாங்கள் சரியாக தான் வந்து இருக்கிறோம் என்று அகரன் அவன் மனைவி உஷா அவளின் அப்பா வாங்கிய பணம் என்று சொல்லி. அதை அகரன் தான் கொடுக்கனும்..

இது மூதையார் சொத்து தானே.. அகரனுக்கும் இருக்கு தானே இந்த வீட்டை கொடுங்க. வீடு கொடுக்க விருப்பம் இல்லை என்றால் நீங்க தான் வெளி நாட்டில் சம்பாதிக்கிறிங்களே… பணம் இருக்கும் தானே கொடுங்க.” என்று கேட்டவனின் பேச்சில் அக்னிக்கு கோபமே வந்து விட்டது..

அடிங்க என்று அடிக்க கூட பாய்ந்து விட்டான்.. வீட்டில் கதவை சாற்றி கொண்டு இருந்த நீல கண்டன் தான் மகனின் குரலில் வெளி வந்து மகனை இழுத்து வீட்டிற்க்குள் சென்று கதவை அடைத்தது…

வீட்டிற்க்குள் வந்தவன்.. “ என்னப்பா இது எல்லாம்.. ? இவங்க எல்லாம் யாரு.. ? அவங்க என்ன என்னவோ சொல்றாங்க.. நான் இந்தியாவை விட்டு போய் இருபது நாள் தானேப்பா ஆகுது.. அதற்க்குள் என் வாழ்க்கையே குழி தோன்டி புதைக்கும் வேலை பார்த்து இருக்கிங்க..

அது என்ன என்று கேட்க வந்தா இது என்ன என்று கேட்க. “ அதற்க்கு நீல கண்டன் பதில் சொல்லும் முன்பு மீண்டும் கதவு தட்டப்பட்டது…

தட்டியவர்கள் காவல் துரையை சேர்ந்தவர்கள் என்பதினால் நீல கண்டன் கதவை திறக்கும் படியாகி விட்டது..

காவல் துரை என்பதினால் அக்னியுமே அமர வைத்து தான் பேசினான்.. கூடவே அந்த குண்டர்கள் முன் போல் எல்லாம் சத்தம் போடாது இருக்க… அக்னியும் காவல் துரையிடம் என்ன என்று விசாரிக்க..

அவர்கள் முழுவிவரமும் சொல்லி விட்டார்கள்… இவங்க கேரளாவில் இருந்து வந்து இருக்காங்க… உஷாவின் அப்பா இவர்களிடம் வாங்கிய கடன்.. மஞ்ச நோட்டிஸ் கொடுத்து விட்டது அனைத்தும் சொல்ல.

இதை கேட்ட நீல கண்டனுக்கு அதிர்ச்சி தான்.. அவர் யாரோ ரெளடி சத்தம் போடுறாங்க என்று தான் நினைத்தார். ஏதோ பணம் உஷா என்று ஒன்று இரண்டு வார்த்தைகள் தான் அவர் காதில் விழுந்தது..

ஆனால் இப்போது அனைத்தும் கேட்டவருக்கு அதிர்ச்சியாகி தன் மகன் அக்னியை தான் அவர் பார்த்தது..

ஆனால் அக்னி இதை கேட்டு அந்த அளவுக்கு அதிர்ச்சியாக வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அவனின் அதிர்ச்சி எல்லாம் ஷ்யாமை பற்றி தன் மனைவிடம் பேசியது தான்..

அதுவும் எப்படி அப்படி பேசலாம் என்பதிலேயெ தான் இருந்தது..

அதன் தொட்டு மிக சாதரணமாகவே அந்த காவல் அதிகாரியிடம்..

“ அதுக்கு ஏன் இவங்க இங்கு வந்து கத்திட்டு இருக்காங்க…?” என்ற அக்னியின் பேச்சில் நீல கண்டன் தான் அதிர்ந்து போனவராக என்ன என்று பார்த்தார்.

இது வரை அமைதியாக இருந்த அந்த குண்டர்களில் தலைவன் போல் இருந்தவன் தான் “ இல்ல இந்த வீட்டில் உங்க தம்பி அகரனுக்கும் பங்கு இருக்குல…? மாமனார் கடனை மருமகன் தானே அடைக்கனும்…” என்று பேசியதி.



நீல கண்டன். “ என்ன பேசுறிங்க..” என்று பேசியரை தடுத்து நிறுத்திய அக்னி.. தன் தந்தையிடம்..

“ இத்தனை பேச்சு நடந்துட்டு இருக்கு. இதுக்கு காரணமானவங்க எங்கே அவங்ளை வந்து பேச சொல்லுங்க… ஆனா இந்த வீட்டில் இல்லை.. வெளியில் போய் என்ன ஆனாலும் பேசிக்க சொல்லுங்க.” என்றவன் பின் பொதுவாக.

“ எதுன்னாலும் சம்மந்தப்பட்டவங்க கிட்ட தான் பேசனும். இப்படி ரோடுல சத்தம் போட கூடாது.” என்றவன்.

பின்… “ இந்த வீட்டை பத்தி இனி யாராவது பேசினிங்க அவ்வளவு தான் நான் சும்மா இருக்க மாட்டேன்…” என்று சொன்னவன்..

“அவன் வீட்டில் இல்லையா…?”

இத்தனை நேரம் வராது இருப்பதினால் தன் தந்தையிடம் கேட்டான்..

பெரிய மகனின் பேச்சு நீல கண்டனுக்கு அதிருப்தி தான்.. அதனால்.. “ ஆஸ்பிட்டலில் இருக்காங்க. இதுக்கு எல்லாம் காரணம் உன் மனைவி தான் என்று விட்டார்…

இது என்ன என்று தந்தையை பார்த்தாலும் அக்னி காவல் துரையிடம்.. “ கேட்டிங்கலே சார்… சம்மந்தப்பட்டவன் வீட்டில் இல்லை.. அதோடு இது சம்மந்தம்மா இனி இவங்க இங்கு வர கூடாது…” என்று சொல்லி அனைவரையும் அனுப்பி வைத்தவன்..

பின் தன் தந்தையின் பக்கம் திரும்பி… “ நீங்க என்ன புது கதை சொல்றிங்க….?” என்று கேட்டவனிடம்..

நீல கண்டன். “ புது கதை இல்லேப்பா நடந்ததை தான் நான் சொல்றேன்… உன் பொண்டாட்டி உன் தம்பியை செருப்பை கழட்டி அடிச்சா… உன் அம்மா முன் துப்பினா.. புருஷனை அடிச்சா அவன் பொண்டாட்டிக்கு எத்தனை அதிர்ச்சியா இருக்கும்.. அதுவும் கர்பமா இருக்கும் பொண்ணு வேறு… அதிர்ச்சியில் கீழே விழுந்து அபார்ஷன் ஆகிடுச்சி.” என்று பெரிய மகன் இப்படி ஒதுங்கியது போலான பேச்சில். நடந்த விசயத்தை தான் அவர் சொன்னது.. ஆனால் சொன்ன விதம் தான் வேறாக சொன்னாது..

அக்னிக்குமே தந்தை சொன்ன விசயம் அவனுக்கு அதிர்ச்சி தந்தது தான்.. ஆனால் அதை தன் தந்தையிடம் காட்டிக் கொள்ளவில்லை.. அவருமே தன் மனைவியின் மீது தான் முழு தவறும் இருக்கிறது என்பது போல் தானே பேசுகிறார்..

அதனால் தன் அதிர்ச்சியை காட்டாது… “ அகரனை செருப்பால அடிக்கும் படி அவன் என்ன செஞ்சான் என்று கேட்டான்…

இங்கு ஷ்யாம் வீடு வந்த பின்னும் ஸ்வேதா தன் அறையை விட்டு வெளியில் வரவில்லை…

தன் கையில் இருக்கும் அந்த சாதனத்தில் இருந்த இரு கோட்டினையே கண்களில் நீர் நிறைய அதை பார்த்திருந்தாள்…
 
Top