Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham....23....4

  • Thread Author
அத்தியாயம்….23….4

நீல கண்டன் தன் பேச்சை உலறல் என்றதுமே சுந்தரம்பாள் விடு விடு என்று உஷா இருந்த அறைக்கு சென்றவர் வரும் போது அவர் கையில் கருப்பு கவரில் சுற்றப்பட்ட ஒரு பொருளை கொண்டு வந்து அங்கு இருந்த டீப்பாவின் மீது வைத்தார்..

“இது பிரியட்ஸ் ஆனா உபயோகிக்கும் பொருள்…. எங்க காலத்துல தான் ஆம்பிள்ளை பிள்ளைங்க இது எல்லாம் பார்க்க கூடாது என்று பொத்தி பொத்தி மறைவா செய்வாங்க.. ஆனா இப்போ இது எல்லாம் புருஷனே வாங்கி கொடுக்கும் காலத்தில் இருக்கும் போது. இது என்ன என்று திறந்து பாருங்க….” என்றதும்..

நீல கண்டன்… “ இது உஷா வாங்கின பிரட் தானே… டெலிவரி பையன் கொண்டு வந்து கொடுக்கும் போது நான் தான் உஷா கிட்ட கேட்டேனே….” என்றவரின் பேச்சில்

சுந்தரம்பாள்… “ அது தான் அய்யா அது என்ன மாதிரியான பிரட் என்று தான் திறந்து பாருங்கலேன்….” என்று அவ்வளவு திடமாக சுந்தரம்பள் சொல்லவும்..

அக்னிக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தாலுமே அதை திறந்து பார்த்தான்.. சுந்தரம்பாள் சொன்ன பொருள் தான் அதில் இருந்தது.. அதுவும் பாதி உபயோகித்து மீதி தான் இருந்தது..

அதை பார்த்தவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்… கோபமாக தன் தந்தையின் கையில் திணித்தவன்.

“இந்தாங்க பிரட்… ரோஸ்ட் பண்ணி சாப்பிடுங்க…” என்று கோபமாக சொன்னவன்.

பின் சுந்தரம்பாளிடம். “ நன்றி ம்மா. எனக்கு எத்தனை பெரிய ரிலீப் நீங்க கொடுத்து இருக்கிங்க என்று உங்களுக்கு தெரியாது… அந்த பெண் அபார்ஷன் ஆனதுல என் மனைவி மீது துளி கூட சம்ம்பந்தம் இல்லை என்றாலுமே..

அந்த பிரச்சனையினால் ஒரு குழந்தை போயிடுச்சோ என்ற குற்றவுணர்ச்சி எனக்கு இருந்துச்சி… இதனால நாளைய பின்ன எங்களுக்கு ஒரு குழந்தை உண்டாகி பிறந்து.. அதன் தாக்கம் எங்கள் வாழ் நாள் முழுவதும் தொடருமோ என்று தான் நினச்சிட்டு இருந்தேன்.. ஆனா நீங்க சொன்ன விசயத்தில் அது எல்லாம் ஒன்னுமே இல்லேன்னு ஆகிடுச்சி… நன்றிம்மா..இப்போ நீங்க போங்க.. எப்போவும் போல நாளைக்கு வாங்க… உங்களுக்கு என்ன உதவி என்றாலும் தயங்கம்மா என் கிட்ட கேளுங்க…” என்று சொல்லி அனுப்பி வைத்தவன் பின் தந்தையின் பக்கம் பார்த்தான்..

அவரோ நம்ப முடியாது தன் கையில் இருந்த அந்த பொருளையே அதிர்ச்சி விலகாது பார்த்து கொண்டு இருந்தார்..

ஏன் என்றால் இரண்டு நாள் முன் உஷாவுக்கு டோர் டெலிவரியாக இது வந்த போது…

இவர் தான். அதை வாங்கி உஷாவிடம் கொடுத்தது.. கொடுத்தவர்… “ இது என்னம்மா…” என்று கேட்டார்..

பிள்ளை தாச்சி பெண் கண்டதை வெளி பொருட்களை சாப்பிட கூடாது என்று அகரன் அவன் அம்மாவிடம் சொன்னதை நீல கண்டன் கேட்டதினால்…

அதற்க்கு உஷா.. “ பிரட் மாமா… சாப்பிடனும் போல இருந்தது அது தான்.. “ என்று சொன்னவளின் ஒய்ந்த தோற்றத்தை பார்த்து…

“வீட்டிலேயே இருக்கேம்மா.. ஏன் ஒரு மாதிரி இருக்கே கனகா வீட்டிற்க்கு போயிட்டா… நான் வேணா ஏதாவது ஜூஸ் அடிச்சி எடுத்துட்டு வரட்டா…” என்று வேறு கேட்டார்..

“அது எல்லாம் வேண்டாம் மாமா.” என்று சொல்லி தன் கையில் இருந்து வாங்கிய பொருளை ஒரு வித சோர்வுடன் நடந்து சென்று அவள் அறைக்கு சென்று கதவு அடைத்தது இப்போதும் நன்றாக அவரின் நியாபகத்தில் இருக்கிறது..

அப்போ இது தான் ஆர்டர் போட்டு வாங்கியதா.. கர்பமா இருக்கும் பெண்ணுக்கு இது தேவையில்லாதது ஆச்சே. அப்போ அப்போ அவருக்கு நினைக்க நினைக்க உண்மையில் நெஞ்சு அடைப்பது போலான நிலையில் தான் நீல கண்டன் இருந்தார்.

அது கொடுத்த தாக்கமானது தன் கையில் இருந்த பொருளை கீழே போட்டு விட்டவர்.. அப்படியே அங்கு இருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

மகனாக அக்னிக்கு அந்த தோற்றம் என்னவோ செய்தது.. கொஞ்சம் பதறி போனவனாக தான் அங்கு இருந்த தண்ணீரை எடுத்து கொடுத்து..

“ப்பா முதல்ல இத குடிங்க…” என்று சொல்லி கொடுத்தான்.

நீல கண்டனுக்கு அது மிகவும் தேவையாக இருக்க. வாங்கி குடித்து முடித்தவர் பெரிய மகனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்..

“ எனக்கு ரொம்ப பயமா இருக்கு அக்னி….” என்று வேறு சொல்ல. தந்தையின் அந்த பயந்த பேச்சும் ஓய்ந்த தோற்றமும்.. அக்னியை பலமாக தாக்கியது..

“ப்பா என்னப்பா பயம். ஏன் இப்படி பேசுறிங்க…?” என்று கேட்டவனிடம்..

நீல கண்டன் மருத்துவமனையில் அந்த மருத்துவர் சொன்னதை அனைத்தும் ஒன்றும் விடாது சொன்னவர்..

பின் “ குழந்தையை இந்த பெண்ணே கலச்சி இருக்குமோ..” என்று குரல் நடுங்க கேட்டார்..

அக்னிக்கு தந்தையின் பேச்சு யோசனையை தான் தந்தது.. அவனின் மனது உறுதியாக சொன்னது… உஷா இந்த குழந்தையை கலைத்து இருக்க மாட்டாள் என்று…

ஏன் என்றால் உஷா இங்கு வந்ததே இப்போது தான்.. அக்னியுமே தன் திருமணத்திற்க்காக தான் இந்தியா வந்தது.. திருமணம் முடிந்து தன் வாழ்க்கையை கூட அனுபவிக்க விடாது தன் வீட்டில் தொல்லைகள் கொடுத்தாலும், இடை இடையே இங்கு இருந்த அந்த ஒரிரு நாட்களில் அவன் கவனித்தது அந்த பெண் உட்காரும் போது கூட மெதுவாக வயிற்றை பிடித்து கொண்டு தான் அமர்வாள்.. அதே போல் தான் நடக்கும் போது மெல்ல பார்த்து பார்த்து நடப்பாள்..

ஒரு நாள் சாப்பிட்ட பொருள் வாந்தி எடுத்து விட.. மரகதம் வேறு தருகிறேன் உன் வாய்க்கு ருசியாக என்று சொன்ன போது உஷா..

“ இல்ல அத்த குழந்தைக்கு இது நல்லது என்று நீங்க தானே சொன்னிங்க… டாக்டருமே இது சாப்பிடு என்று சொல்லி இருக்காரு அத்த. அது கொடுங்க கண்ணை மூடிட்டு குடித்து விடுகிறேன் என்று சொல்லி அதை வாங்கி குடித்ததையும் அவன் பார்த்து இருக்கிறானே என்று அவன் யோசிக்கும் போதே நீல கண்டனும் இதை தான் சொன்னது..

“ என்னால நம்ப முடியல அக்னி.. அந்த பெண் குழந்தையை கலச்சி இருப்பான்னு.. ஏன்னா அப்படி பார்த்துக்கும் ப்பா அந்த பெண்….” என்று சொன்னவர் பின்..

ஒரு வழியாக யோசித்து… “ அகரன் அந்த பெண் கிட்ட சொல்லிட்டே இருப்பான் அக்னி.. ரொம்ப யோசிக்காதே குழந்தை பத்திரம் பத்திரமுன்னு… ஒரு வகையாக இதை சொல்லி மிரட்டினான் என்று கூட சொல்லலாம்…” என்ற தந்தையின் பேச்சில் அக்னி அவரை யோசனையுடன் பார்த்தான்..

பின் ஏதோ யோசித்தவனாக… “ இப்போ கொஞ்ச நேரம் முன்ன வந்தவங்க பேச்சை நீங்க கவனிச்சிங்கலான்னு தெரியல.. நான் நோட் பண்ண விசயம். இதற்க்கு முன் கூட அந்த பெண் உஷாவை வெச்சி தான் அகரன் கிட்ட மிரட்டி பணம் வாங்கி இருக்காங்க… அவங்க பேச்சில் உஷா வாந்தி வாந்தி எடுத்தா… அப்போ கூட நாங்க விடலையே என்று சொன்னாங்க.. அந்த சமயம் இந்த பெண் கன்சீவா இருந்து இருப்பான்னு நினைக்கிறேன்… இந்த பிரச்சனையில் அபார்ஷன் ஆகி இருந்து இருக்கும்..

அது தான் அகரன் அதை வைத்து மிரட்டலா சொல்லி இருந்து இருப்பான்…



என் கெஸ் சரின்னா அந்த பெண் இங்கு இருக்கிறது யாருக்கும் சொல்லி இருக்காது… அந்த ஊரை விட்டு வந்ததே.. இந்த காரணத்துக்காக தான் இருக்கும்… எப்படியோ அந்த பெண் இங்கு இருக்குறது அவங்களுக்கு தெரிஞ்சி இருக்கும்.. ஏன்னா இங்கு வந்த போது வாசல்ல இருந்தவன் என் கிட்ட சொன்ன விசயம். இது மூதையார் சொத்துன்னு தெரிஞ்சி இருக்கு கூடவே நான் வெளி நாட்டில் வேலை பார்க்கும் விசயமும் தெரிஞ்சி இருக்கு… இந்த வீடு வேண்டும் என்றால் அகரன் பங்கை



நீ கொடுத்துட்டு போன்னு தான் என் கிட்ட சொன்னது… அந்த பெண்ணுக்கு அவங்களுக்கு தெரிந்த இங்கு வரும் விசயம் யார் மூலமாவது தெரிஞ்சி இருக்கும். அந்த பயத்துல மன அழுத்தம் ஆகி அபார்ஷன் ஆகி இருக்கலாம்… நீ தான் சொன்னிங்கலே.. அகரன் எப்போதும் குழந்தை பார்த்து பத்திரம் பத்திரம் என்று சொல்லி இருக்கான்னு… குழந்தை இப்படி ஆகுமோ பயந்து போய் தான் மறச்சி இருக்கு.. அன்னைக்கே ஸ்வேதாவுக்கும் அகரனுக்கும் நடந்த சண்டையை வெச்சி இப்படி ப்ளான் பண்ணி பழியை என் பொண்டாட்டி மேல போட்டுட்டு இருக்கா…” என்று அக்னி இப்படி இருக்கும் என்று சொல்ல சொல்ல நீல கண்டனின் விழிகள் விரிந்து தான் போயின.



நீல கண்டன். “ எனக்கு ரொம்ப பயமா இருக்கு அக்னி… அந்த பெண்ணை இங்கு விட்டது தப்போ அக்னி.. புதைகுழியில் காலை விட்டது போல ஆகிடுச்சே…” என்று பயந்து போய் பேசியவரிடம் அக்னி மருந்துக்கும் அப்படி இல்லை என்று சொல்லவில்லை.



காரணம் ஒரு விசயம் ஆராய்ந்து என்ன ஏது என்று கூட பார்க்காது வீட்டு பெரியவராக இருந்த போதும் மொத்த பழியையுமே தன் மனைவி மீது தானே போட்டார்.. இதோ தான் வந்த போது கூட அப்படியாக தானே பேசினார்..

இதோ சுந்தரம்பாள் சொன்னத்தொட்டு உண்மை தெரிந்தது.. அவர் சொல்லாது போனால் தன் மனைவி மீது தானே பழி போடுவார். நமக்கும் அது காலம் முழுவதும் மன உருத்தல் இருந்துக் கொண்டு தானே இருக்கும்.. என்று அமைதியாக போக….



ஆனால் உன்னை அப்படி நாங்கள் அமைதியாக எல்லாம் இருக்க விட மாட்டோம் என்பது போல் மருத்துவமனையில் இருந்து வீடு வந்த அனைவரும் இங்கு என்ன நடந்தது ஏது நடந்தது என்று தெரியாது மரகதம் எடுத்த உடன்.. தன் பெரிய மகனிடம்…



“ அக்னி அந்த பெண் நம்ம வீட்டுக்கு செட் ஆக மாட்டா.. நீ என்ன செய்யிற அந்த பெண்ணை விவாகரத்து செய்யிற….” .. என்று சொன்னதுமே அக்னிக்கு சுர் என்று தான் ஏறியது..



இருந்தும் அமைதி காத்தவனாக.. “ ம் அப்புறம் அந்த பெண்ணை விவாகரத்து செய்துட்டு.. ம் என்ன செய்யலாம் சொல்லுங்க…” என்று சொன்னவனின் தோரணை தெரியாது..



“அடுத்து என்ன இருக்கு அக்னி.. நீ அம்பிள்ளை இன்னைக்கும் உனக்கு பெண் பார்த்தாலுமே நீ நான் என்று க்யூவில் நிற்பாங்க நீ அம்பிள்ளையா டா.. ஏன் முதல்ல உனக்கு பெண் கொடுக்குறேன் என்று சொன்ன ப்ரீத்தா ஒன்னு விட்ட நாத்தனாருக்கு கூட இன்னும் கல்யாணம் ஆகல.. அந்த பெண்ணை கேட் டா கூட கொடுத்து விடுவாங்க .. நம்ம ப்ரீத்தாவுக்குமே மாமியார் வீட்டு பக்கம் ஒரு மரியாதை இருக்கும்…” என்று சொல்லி முடித்தார்…

“ ம் பாருங்க நல்லா பாருங்க… ஆனால் பாருங்க நான் புதிய மாமியார் வீட்டிக்கு போறதுக்கு முன்ன இந்த வீட்டு ஆட்களை எல்லாம் என் மனைவி மொத்தமா மாமியார் வீட்டிற்க்கு அனுப்பி விடுவா பரவாயில்லையா ….” என்று கேட்டான்..

அது எந்த மாமியார் வீடு என்று மரகதத்திற்க்கு புரியாது போனாலும் அப்போது தான் காரில் இருந்து அனைத்து பொருட்களையும் கொண்டு வந்த அகரனுக்கு புரிந்து விட்டது..

“ஓ எங்களை ஜெயில்லுக்கு அனுப்பிடுவாளா….” என்று சொன்னவனை பார்த்த நொடி அக்னி பாய்ந்து அவன் தடுக்க கூட நேரம் கொடுக்காது சரமாறியாக அடித்து விட்டான்.. மற்றவர்கள் என்ன என்று யோசித்து முடிப்பதற்க்குள் அத்தனை அடிகள் அவன் மீது விழுந்து..

கண்கள் கருத்து உதட்டில் இருந்து ரத்தம் வழிந்து அவன் சட்டை கிழிந்து என்று சுந்தரம் ப்ரீத்தா மரகதம் இடையில் வந்து தடுத்துமே விடாது அடித்து முடித்தான்..

உஷா அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து எழுந்து வந்து அக்னியை பிடிக்க வரும் போது தான் அகரனை அடிக்காது உஷாவிடம் ஒற்றை விரலை நீட்டி..

“ தடுக்க கூட என்னை தொடாதே சொல்லிட்டேன்…” என்று தன் ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவனின் செயல் கோபமாக சொன்ன விதத்தில் உஷா தன்னால் இரண்டாடி பின் சென்றாள்..

அடி வாங்கி பேச கூட தெம்பு இல்லாது ஒய்ந்து போய் இருந்த சின்ன மகனை பார்த்த மரகதத்திற்க்கு அப்படி ஒரு கோபம்.. ஆத்திரம்…

“ என்ன டா நினச்சிட்டு இருக்க உன் மனசுல.. இந்த வீடு ஒன்னும் உன் வீடு இல்ல.. உன் இஷ்டப்படி எல்லாம் செய்ய… அவனுக்குமே இந்த வீட்டில் உரிமை இருக்கு.. இங்கு அவனை நீ அடிப்பியா…. அதுவும் அந்த கேடு கேட்ட பெண்ணுக்காக..” என்று சொன்ன்ச் நொடி ஆத்திரம் மிகுதியில் கோபமாக அவன் அன்னையின் பக்கம் செல்ல..

மரகதமே ஒரு நிமிடம் பயந்து விட்டார்.. எங்கே அடித்து விடுவானோ என்று… ஆனால் பக்கத்தில் வந்தவன் பின் என்ன நினைத்தானோ..

“உங்க கிட்ட எல்லாம் பேசுறது வேஸ்ட்…” என்ரு ஒரே வார்த்தையில் சொல்லி விட்டான்..

ஆனால் மரகதம் அதோடு விடுவதாக இல்லை… அடி வாங்கி சுந்தரம் கொடுத்த தண்ணீரை குடித்து முடித்து இருந்த சின்ன மகனின் பக்கம் சென்றவர்..

“ நீ ஸ்வேதா மீது கம்பிளையிண்ட் கொடுடா. என் மனைவிக்கு மன உளச்சல் கொடுத்து என் குழந்தை கலைய காரணமா ஆனாங்க …” என்று சொன்ன நொடி…

அக்னி… “ ம் கொடுங்க. நல்லா கொடுங்க.. நானுமே ஒன்னு கொடுக்கனும்.. நான் இந்த நாட்டில் இல்லாத போது இந்த குடும்பத்தை நம்பி விட்டு போன என் மனைவியையும் அவள் அண்ணனையும் தப்பா பேசி இந்த வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டாங்க என்று கொடுக்கனும் தான் நினச்சேன்…” என்ற பேச்சில்..

மரகதம்… “ நான் இல்லாததையா… சொன்னேன்…” என்றதும்..

அகிக்கு அப்படி ஒரு கோபம். அதையும் மீறி.. முப்பத்தி இரண்டு வயது வரை ஒரு தவறும் செய்யாது… விரும்பிய பெண்ணை வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொண்டது அவ்வளவு பெரிய தவறா..

தான் கூட பரவாயில்லை அவளை விரும்பினேன்.. ஆனால் ஸ்வேதா… இரண்டு பேருமே நேரில் பார்த்ததே.. எங்கள் திருமணம் உறுதி செய்த அன்று தானே… ஆனால் இது எப்படியான பெயர்.. அதுவும் ஷ்யாமுக்கு… தான் செலவு செய்தால் நயா பைசா கூட கணக்கு பார்த்து தன்னிடம் கொடுத்து விடுபவனுக்கு என்ன மாதிரியான பெயர்..

நினைக்க நினைக்க அப்படி ஒரு ஆத்திரம்.

அதில் அனைத்துமே கொட்டி விட்டான்..

“ பார்த்து பார்த்து இந்த குடும்பத்தை உயர்த்தி விட்டவனுக்கு இந்த பெயர்… ஆனா பாரு அக்கா நிச்சயத்துக்கு அன்னைக்கு கர்பமாக்கிய பெண்ணை கல்யாணம் செய்த வந்தவனுக்காக என்னை இப்படி பேசுறிங்க… அதுவும் கல்யாணத்துக்கு முன் நாள் என்னை பார்த்த பெண்ணை அப்படி பட்ட வார்த்தையை பேசுறிங்க.. கல்யாணத்துக்கு முன்னவே கர்பமான பெண்ணை கொண்டாடுறிங்க…” என்று அனைத்தும் பேசி விட்டான்…

மரகதமோ… “ என்ன டா உன் பொண்டாட்டி செய்த தப்பை இது எல்லாம் பேசு மூடி மறைக்க பார்க்குறியா அகரா அவள் மேல போலீஸ் கம்பிளையிண்ட் கொடுடா..” என்றதும்..

அகரனும் தன் போனை எடுத்தான்… தன்னை அடித்ததிற்க்கும் தன் குழந்தை கலைய காரணமானவளுக்கும்.. தன்னையும் தன் மனைவியையும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்பது போல் சித்தரித்து பேசிய பேச்சில் கோபம் கொண்டு தன் போனை எடுத்தவனை உஷா பதறி போய்.

‘” என்னங்க வேண்டாமுங்க….” என்று சொல்லி தடுத்து நிறுத்தினாள்….
 
Top