அத்தியாயம்….6***
ஸ்வேதா தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வர ஒரு சில நிமிடங்கள் பிடித்தது… பின் வெளி வந்த பின்னும் தன் அண்ணனிடம் இதை பற்றி பேசவில்லை.. காரணம் தன் அண்ணனின் அருகில் அக்னிவேஷ் இருந்தால், அந்த தயக்கம் .. அதனால் பெண்ணவள் எதுவும் பேசாது அமைதி காத்தாள்..
ஷ்யாம் தான்… “ என்ன ஸ்வேதா….?” என்று பேச்சை ஆரம்பிக்கும் போதே இடையில் ஒரு தடங்கல்.. ஷ்யாமின்.
“அக்னி நான் தான் பேசிட்டு இருக்கனே …” என்ற பேச்சு.. இந்த வார்த்தை பெண்ணவளின் காதில் நன்றாகவே விழுந்தது..
அதில் ஸ்வேதா… ‘நல்ல வேலை நான் நினைத்தது போல் தான் பக்கத்தில் இருக்காங்க போல….’ என்று நினைக்கும் போதே அண்ணன் நான் பேசிட்டு இருக்கேன் என்று சொல்றாங்க.. அப்படி என்ன இவங்க செய்து இருப்பாங்க என்று நினைத்து கொண்டது எல்லாம் கை பேசியை காதில் வைத்து கொண்டு தான்..
அப்படி என்ன செய்தான் என்பது பெண்ணவளின் காதில் விழுந்த…
“நான் தான் பேசுறேன்.. உன் கிட்ட பேசனும்….” என்ற வார்த்தை காதில் விழுந்ததில் பெண்ணவளுக்கு தெரிந்தது என்ன காரணமாக அண்ணன் இப்படி பேசினான் என்பது…
இப்போது பெண்ணவளுக்கும் முன் இருந்த அந்த தயக்கம் இல்லை.. அவளுமே அவனிடம் பேசிட நினைத்தாள்..
காரணம் அக்னிவேஷ்வரனை நேரில் பார்த்தது கிடையாது.. அவனின் தனிப்பட்ட விசயங்கள் அதாவது குடும்ப விசயங்கள் தெரியவில்லை என்றாலும் படிப்பு வேலை.. என்ற பிற விவரங்கள் தெரியும் தானே..
தன் எதிர்காலம் பற்றி அவள் கொண்ட முடிவுக்கும் அக்னி வேலை இருக்கும் நாடு இவை அனைத்தும் தான் நினைத்த தனக்கு வரப்போகும் கணவனுக்கு எதிர் பதமாக இருக்கிறது..
அதை சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தாள்.. பாவம் பெண்ணவள் நினைத்து கொண்டது… அக்னியை மாப்பிள்ளையாக அண்ணன் பார்த்து கேட்டு உள்ளான் என்பது…
இவளை பற்றி விவரங்கள் அனைத்தும் தெரிந்து…
ஸ்வேதா நினைப்பது போல் பெண்ணவளை பற்றி தெரிந்த விசயங்கள் தன்னோடு சிறிதளவு கூட ஓட்டவில்லை என்று தெரிந்ததில் இருந்து தன் எதிர் கால வாழ்க்கையை அவளுக்கு பிடித்தது போல் மாற்றி அமைத்து கொள்ள மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தவன்..
அதற்க்கு உண்டான வேலைகளை பார்க்க தொடங்கி விட்டான் என்பது..
ஆம் மூன்று ஆண்டுகள் முன்பு ஷ்யாமின் திருமணம் வீடியோ மூலம் அவளை பார்த்தவனின் மனதானது நொடியில் அவள் மீது விழுந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
நொடியில் அவன் மனம் விழுந்தாலும் , இது எல்லாம் சரியாக வருமா என்று அவனே யோசித்தான் தான். அதுவும் தன் எதிர்காலம் இங்கு தான் என்று நினைத்து அதற்க்கு ஏற்றது போல் படித்து வேலை பார்த்து.. இன்னும் இன்னும் உயர அதற்க்கு உண்டான கோர்ஸ் படித்து கொண்டு இருக்கும் இந்த சமயத்தில்..
ஒன்பதாவது படிக்கும் போதே.. இந்தியாவில் இருப்பவனை தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன்… என்று சொன்னவள் அதற்க்கு அவள் சொன்ன காரணமும் சரியே..
அதுவும் இன்று அளவும் கூட அவளின் அந்த கொள்கையில் இருந்து மாறாது இருக்கிறாள் என்று எப்போதும் போல் ஸ்வேதாவின் விசயம் ஷ்யாம் பேசும் போது தெரிந்து கொண்டவனின் மனதானது ஷ்யாமின் மூலம் தெரிந்து கொண்டதில் தன் விருப்பம் எப்படி நிறைவேறும்.. என்று ஒரு பக்கம் யோசித்தவனின் மனதானது இன்னொரு பக்கம் இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசமான எட்டு வயதும் அவனின் தயக்கத்திற்க்கு தீணி போட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
ஆனால் இத்தனை வித்தியாசத்தையும் மீறி தன் வாழ்வு அவளோடு மட்டும் தான் என்பதை முடிவு செய்ய அவனுக்கு ஒரு வாரம் காலமே அதிகம் என்பது போல்…
தேவிக்கு அண்ணன் முறையில் இருப்பவன் ஸ்வேதாவிடம் காதல் சொன்னான் என்று ஷ்யாம் பேச்சு வாக்கில் சொல்ல…
அக்னிக்கு அப்படி ஒரு கோபம்.. “ நீ எல்லாம் ஒரு அண்ணனா டா…. அவனை இழுத்து வைத்து அரையிறதை விட்டுட்டு என் கிட்ட கதை சொல்ற….” என்று ஆவேசமாக ஷ்யாமிடம் கத்தியவன்..
பின் எந்த வித்தியாசம் இருந்தால் என்ன… எனக்கு அவள் தான் என்று முடிவு செய்த பின்.. என்னுடைய வயதை மாற்ற முடியாது..
ஆனால் மற்றதை மாற்றிக் கொள்ளலாம்… அவளுக்கு பிடித்தது போல் என் எதிர்கால வாழ்வு இங்கு இல்லாது இந்தியாவில் மாற்ற முடியும் தானே…
அவளுமே படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள் வேலைக்கு சென்று தான் திருமணம் என்று அவளின் அண்ணனிடம் சொல்லி இருக்கிறாள்..
அதற்க்குள் இந்தியாவில் தான் ஏதாவது தொழில் செய்யும் அளவுக்கு பணத்தை சேர்த்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தவன் எப்போதும் ஒர் அளவுக்கு பணம் சேர்ந்த பின் தன் அம்மா அப்பாவிடம்..
“இந்த இடத்தில் இத்தனை பட்ஜெட்டில் இடம் பாருங்க..” என்று சொல்பவன்… அவனுக்கு ஏற்றது போல் கிடைத்தால் இந்தியா சென்று… லீகல் எல்லாம் பார்த்து விட்டு ஒரு மாதத்தில் தன் பெயருக்கு இடத்தை வாங்கி விடுவான்..
இரண்டு இடமும் இப்படி தான் வாங்கியது.. இந்த முறை அப்படி செய்யாது பணத்தை சேர்த்து வைக்க…
இவனின் அம்மா மரகதமே… “ நம்ம வீடு எதிர்த்தாப்பல ஒரு இடம் வருது அக்னி அதை பார்க்கலாமா….?” என்று கேட்ட அன்னையிடம்..
“இல்லம்மா வேண்டாம்… நான் அங்கு ஒரு டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்…” என்ற மகனின் பேச்சில் மரகதம் உண்மை நிலை தெரியாது மகிழ்ந்து போய்…
தன் மகள் ப்ரீத்தியிடம்…. “ உன் அண்ணன் உன் அப்பாவுக்கு டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வெச்சி கொடுக்க போறான் டி….” என்றார்..
ஆம் மரகதம் தன் மகன் அக்னி இப்படி பிசினஸ் அதுவும் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் என்றதும் தன் கணவன் அதில் தானே வேலை பார்த்தார்.. அதன் தொட்டு தன் தந்தைக்கு அதை வைத்து கொடுக்க நினைக்கிறான் என்று அவர் புரிந்து கொண்டார்..
இதில் அவர் மீதும் தவறு சொல்லி விட முடியாது.. காரணம் அக்னி எத்தனை கஷ்டப்பட்டு அமெரிக்காவில் படிக்க சென்றான்… அவனின் எதிர்கால கனவு லட்சியம் என்ன என்பது தான் குடும்பத்திற்க்கு தெரியுமே….
இத்தனை தெரிந்த அவன் குடும்பத்திற்க்கு தன் மகன் காதல் வயப்பட்டது தெரியாது போயிற்று.. காதலுக்காக தன் கனவையே மாற்றிக் கொண்டு விட்டான் என்று புரியாது தன் மகளிடம் பெருமை பேசிக் கொண்டு இருந்தார்..
பாவம் தெரிய போகும் நேரம் வெகு அருகில் உள்ளது என்பது தெரியாது..
அதன் முதல் படியாக…. தன் அண்ணனிடம் ஸ்வேதா அக்னி தான் மாப்பிள்ளை என்றால் வேண்டாம் நான் எல்லாம் அங்கு வர மாட்டேன் என்று தான் தன் அண்ணனிடம் பேச நினைத்தாள்..
ஆனால் பேசியது என்னவோ அக்னியிடம் தான்.. அதுவும் வேண்டாம் என்று மறுக்க நினைத்த பெண்ணவளை…
“ சரி…” என்று ஒத்துக் கொள்ளும் படி செய்து விட்டான் நம் அக்னிவேஷ்வரன்.. அதுவும் ஒரு முறை பேச்சிலேயே..
ஆம் அன்று… “ இரு டா நான் தான் பேசறனே.” என்ற பேச்சுக்கு நடுவில்.
“எங்க மேரஜ் பற்றி தானே பேச போற. அதை நாங்கல பேசிக்குறோம்… தான்….” என்ற வார்த்தை ஆழ்ந்தும் அழுத்தமாகவும் முதல் முறையாக அக்னியின் குரல் ஸ்வேதாவின் காதில் விழுந்தது… ஆம் முதல் முதலாக தான் ஸ்வேதா அக்னியின் குரலை அத்தனை தெளிவாக கேட்கிறாள்…
குரலை கேட்டதும் ஸ்வேதாவுக்கு காதல் வந்து விட்டதா என்று சொல்ல முடியாது.. ஆனால் வார்த்தைகள் குழலாது…. தயக்கம் காட்டாது கணீர் என்ற அந்த குரலில் ஏதோ இருக்கிறது என்பதை பெண்ணவள் உணர்ந்தாள் போல்.. அதன் தொட்டு அண்ணன் கேட்ட..
“ம்மா அவன் பேசனுமாம்….?” என்றதற்க்கு ஸ்வேதா சரி என்று தான் சொல்லி இருப்பாள்..
ஆனால் அந்த பக்கம் அக்னி ஷ்யாமிடம் இருந்து கை பேசியை பிடுங்கி கொண்டு… “ நான் பார்த்து கொள்கிறேன்…” என்ற பேச்சும்… அதன் அடுத்து அக்னி நடக்கும் ஓசையும் கதவை சாத்தும் ஓசையும் ஒன்றன் பின் ஒன்றாக ஸ்வேதாவின் காதில் கேட்க..
பெண்ணவள் புரிந்து கொண்டாள்.. அக்னி தனித்து பேச தன் அறைக்கு வந்து உள்ளான் என்று.. கூடவே மனதில் இவனுக்கு ரொம்ப தைரியம் தான்… அண்ணன் போனில் அவன் எதிரில் என் கிட்ட பேச தனியா வராது என்று நினைத்து கொண்டவளின் மனது அவனின் அந்த தைரியம் பிடித்து இருந்தது தான்..
பெண்களுக்கு வழ வழ கொழ கொழ என்று பேசுவதும்.. எதற்க்கும் தயங்கி கொண்டு இருக்கும் ஆண்களை பிடிக்காது… இது போல தைரியமானவனை தான் பிடிக்கும்.. அந்த பிடித்தம் பெண்ணவளுக்கு வந்தது தான்..
ஆனால் அப்போது தெரியவில்லை.. எந்த ஒரு ஆணும் குடும்பம் என்று வந்து விட்டால், அதுவும் அம்மா அப்பா கூட பிறந்தவர்களின் மத்தியில் ஒருவர் மட்டும் சம்பாதித்து நல்ல முறையில் சம்பாதிக்கும் போது தன் குடும்பத்தை காப்பது தன் கடமை என்று நினைப்பவர்களுக்கு பாசம் கண் மறைக்குமோ என்னவோ அதன் தொட்டோ என்னவோ அதில் இடையில் வரும் குடும்ப அரசியலை கவனிக்காது இப்போது வந்த பெண் தானே மனைவி… அதனால் அவளை தவறாக புரிந்து கொண்டு விடுகிறார்கள்…
பெண்ணவளை பற்றி இத்தனை தெரிந்து வைத்து இருப்பவன் தன் குடும்பத்தவர்களை பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்து இருக்கலாம்… அப்படி தெரிந்து வைத்து இருந்தால், பின் நாளில் அவனின் குடும்ப வாழ்க்கை சிக்கலில் மாட்டிக் கொண்டு இருந்து இருக்காது.. என்ன செய்ய ஒரு சிலருக்கு பட்டால் தானே புத்தி வருகிறது…
“நான் பேசலாமா…?” என்ற அவனின் முதல் பேச்சுக்கு பெண்ணவள் தன்னால் சம்மதம் தெரிவித்து விட்டாள்..
அதோடு ஸ்வேதா… “ நான் அம்மாவை விட்டு…” என்று ஆரம்பிக்கும் போதே அக்னி..
“ம் எனக்கு தெரியும்.. உனக்கு வெளி நாட்டு மாப்பிள்ளை வேண்டாம்… உள் நாடு தான் அதுவும் குறிப்பா சென்னை தான்…” என்றவனின் பேச்சுக்கு…
ஸ்வேதா… “ அப்போ எப்படி…?” என்று கேட்டவளிடம்..
அக்னி… “ அது அப்படி தான்…” என்றவனின் பேச்சு பெண்ணவளுக்கு புரியவில்லை..
அதை சொல்ல.. அக்னி… “ நானுமே இந்தியாவில் தான் இனி.. அதுவும் உனக்கு பிடிச்ச சென்னையில் தான் எங்க வீடும் இருக்கு… அதனால இனி.. அதை நினச்சி குழப்பம் இல்லை தானே…?” என்று கேட்டவனுக்கு பெண்ணவள் உடனே எல்லாம் சம்மதம் தெரிவிக்கவில்லை..
அதனால் அக்னி வீடியோ காலில் வந்து விட. ஆடியோ மட்டும் என்று பேசியதில் பெண்ணவளுக்கு இந்த கூச்சம் வெட்கம் எல்லாம் படவில்லை.. ஆனால் முகத்தை பார்த்து பேசும் படியான நிலையில் பெண்ணவள் அந்த அழைப்பை ஏற்க தயங்கினாள்…
அதன் தொட்டு அழைப்பு நின்று விட.. மீண்டும் அக்னி இடம் இருந்து ஆடியோ காலில் அழைப்பு வர.. இப்போது பெண்ணவள் சட்டென்று எடுத்து விட்டாள்..
எடுத்ததுமே அக்னி… “ ஏன் வீடியோ கால் எடுக்கவில்லை….?” என் று தான் கேட்ட து…
அதற்க்கு பெண்ணவள்… “ நான் யோசிச்சிட்டு எடுக்குறதுள்ளே நின்னுடுச்சி… இப்போ நீங்க வீடியோ கால் பண்ணி இருந்தாலுமே நான் எடுத்து இருப்பேன்…” என்று ஸ்வேதா சொன்னது தான் தாமதம்..
அக்னி ஆடியோ காலை கட் செய்து விட்டு மீண்டும் வீடியோ காலில் அழைக்க பெண்ணவளும் இப்போது தயங்காது எடுத்து விட்டாள்..
அக்னி எதற்க்கு வீடியோ காலில் பேச விருப்பம் பட்டான் என்று தெரியாது.. ஆனால் ஸ்வேதா நான் ஒரு சிலதை பேசி தெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.. அதற்க்கு ஆடியோ காலை விட வீடியோ காலில் பேசுவது தான் சரி… தன் பேச்சுக்கு எந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறான் கேட்கிறான்.. சொல்லும் பதில் உண்மையா என்பது குரலை மட்டுமே வைத்து கொண்டு கண்டுப்பிடிக்க முடியாது..
முகத்தை பார்த்து என்றால் ஒரளவுக்கு தான் சொன்னதற்க்கு சரி என்றாலுமே அது உண்மையா….? இல்லை பொய்யா…? என்று தெரிந்து விடும் என்று தான் சட்டென்று வீடியோ காலை எடுத்தது ..
ஆனால் ஆணவனின் முகம் அவள் கை பேசியில் தெரிந்த அந்த நொடி பெண்ணவளுக்கு தான் பேச வேண்டும் என்பதை மறந்தவளாக தான் பார்த்தது பார்த்த படி பார்த்து கொண்டு இருந்தாள்..
ஆணவனுக்கும் அதே நிலை தான்.. இருந்துமே ஷ்யாமின் திருமண வீடியோவின் மூலம் வந்த பெண்ணவளின் வரி வடிவத்தை தன் கை பேசியில் பிடித்து கொண்டவன்.. அவ்வப்போது அதை திரும்ப திரும்ப பார்த்து கொண்டு இருந்ததினாலோ என்னவோ பெண்ணவளை போல் திகைத்தது திகைத்தப்படி எல்லாம் இல்லாது அதில் இருந்து சட்டென்று மீண்டு கொண்டவன் என்ன நினைத்தானோ…
கண் அடித்தான்.. கண் அடித்தது எல்லாம் ஒரு நொடி தான்.. அதுவும் அந்த குறும்பை தன் முகத்தில் காட்டாது சாதாரணமான முகத்தை வைத்து கொண்டு செய்ததில் பெண்ணவள் தான் திணறி போய் விட்டாள்…
முன் தயக்கம் இன்னும் தான் கூடியதே தவிர குறையவில்லை…ஆணவல் தான் பின் ஒரு வழியாக பேசி… அவளையும் பேச வைத்து இந்த திருமணத்திற்க்கு சம்மதிக்க வைத்தான்..
ஆம் சம்மதிக்க வைத்து விட்டான்… காதலிப்பதை விட காதலிப்பட்டடுவதில் சுகம் அதிகம் தானே.. அதை தான் பெண்ணவள் உணர்ந்தாள்…
அதுவும் மூன்று வருடங்கள் முன்பு “ நான் உன்னை உன் அண்ணன் கல்யாண வீடியோவில் பார்த்தேன் பிடித்தது..” என்றதில் ஆரம்பித்து..
தன் கனவை சொல்லி பின் தனக்காக அதை மாற்றிக் கொண்டது என்று அனைத்தையும் சொன்னவன்.. கடைசியாக.. “ எனக்கும் உன் அண்ணன் வயசு தான்.. அதாவது உனக்கும் எனக்கும் எட்டு வயசு வித்தியாசம்…” என்ற அந்த வயது வித்தியாசம் ஸ்வேதாவுக்கு பெரியதாக தெரியவில்லை…
“ உங்களை பார்த்தா தேர்ட்டி ப்ளஸ் என்று சொல்ல முடியாது…” அவன் உருவத்தை பார்த்து கொண்டே சொன்னவளின் பேச்சில் ஆணவனின் மனம் கர்வம் கொண்டது..
அது கொடுத்த தாக்கத்தில்… “ அப்போ எத்தனை தெரியுது….” என்று கேட்டவனிடம் ஸ்வேதா..
“அதை நேரில் பார்த்து சொல்கிறேன்…” என்ற பெண்ணவளின் பேச்சில் தான் அக்னி…
“ஸ்வேதா எனக்கு மேரஜை தள்ளி போடுவதில் விருப்பம் இல்லை….” என்றவனின் பேச்சில் ஸ்வேதாவுமே இத்தனை நேரம் இருந்த தன் மயக்கம் தெளிந்து…
“எனக்குமே ஒரு சில கமிட்மெண்ட் இருக்குங்க…” என்று சொல்ல.
அக்னியுமே.. “ ம் தெரியும்.. நீ மேரஜ் ஆனாலுமே வேலைக்கு போவ… செலரியில் ட்வென்டி தவுண்ட்ஸ் உன் அம்மா கிட்ட கொடுப்ப.. கூட அம்மா தனியா இருப்பதினால அப்போ அப்போ போய் பார்த்துட்டு வருவ.. அது தானே.. இதுல எந்த வித பிரச்சனையும் எனக்கு இல்ல ஸ்வேதா..” என்று அக்னி சொல்லி விட.
பின் என்ன…. தன்னை இத்தனை காதலிப்பவன் கணவனாக… தன் மீது இருக்கும் காதலினால் தன் கனவை துறந்து இந்தியாவிலேயே பிசினஸ் ஆரம்பிக்க்கிறேன்.. அதற்க்கு உண்டான வேலைகளையும் பார்க்க ஆரம்பித்து விட்டேன் என்பவனை மறுக்க அவளுக்கு என்ன இருக்கு.
அனைத்தையும் விட கூடுதலாக தன் அண்ணனின் பத்து வருட நண்பன்… ஷ்யாம் அக்னியை பற்றி நிறைய சொல்லி இருக்கிறான்.. படிப்பு நடத்தை .. எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவன் இதற்க்கு மேல் என்ன வேண்டும் என்று..
“சரி…” என்று தலையாட்டி விட அக்னி விடவில்லை..
“இந்த தலையை ஆட்டுவது எல்லாம் வேண்டாம்.. சொல் பிடிச்சி இருக்கா இல்லையா….?” என்று பெண்ணளை கேட்டான்..
அதற்க்கு ஸ்வேதா “ அண்ணன் பார்த்து இருக்கும் மாப்பிள்ளை… பார்க்க நல்லா இருக்கிங்க. எனக்காக உங்க கனவை விட்டு இந்தியாவில் செட்டில் ஆக போறிங்க.. இது வரை ஒகே தான்.. அதுக்கு கல்யாணம் செய்துக்கலாம்.. ஆனா பிடிச்சி இருக்கான்னு சொல்றதுக்கு…” என்று பேசிக் கொண்டு இருந்தவள் தன் பேச்சை பாதியில் விட..
அக்னிவேஷ்வரன் அந்த பேச்சை…. “ அப்போ கல்யாணம் செய்துக் கொண்டு பிடிக்க வைத்து விடலாம்…” என்று அந்த பேச்சை முடித்து வைத்தான்..
பேச்சை மட்டும் அல்லாது அடுத்த வாரமே அவன் குடும்பத்தை பெண் பார்க்க சொல்லி பின் அடுத்து திருமணமுன் நிச்சயம் செய்து விட்டான்.. அவன் இல்லாது..
இவளுமே … “ நீங்களும் இருந்தால் நல்லா இருக்கும்…” என்று அன்று பேசிய தொடர்ச்சியாக தினம் கை பேசியில் பேசிக் கொள்ளும் போது பெண்ணவள் சொன்னால் தான்..
ஆனால் அதற்க்கு.. “ நான் இங்கு பேப்பர் போட்டு விட்டேன் டா.. இந்த சமயம் லீவ் கொடுக்க மாட்டாங்க.. அதோடு நான் இந்தியா வரதுக்குள்ள என் வேலைகளை முடிச்சி கொடுக்குறதோடு என் அடுத்து இருக்கிறவனுக்கு ட்ரையினிங்க வேறு கொடுக்கனும்.. இங்கு எத்தனை எத்தனை சம்பளம் கொடுக்கிறாங்கலோ. அத்தனை அத்தனைக்கு நம்மளை பிழிஞ்சி எடுத்துடுவாங்க…” என்று சொன்னவனிடம்…
பெண்ணவள்…. “ அப்போ எல்லாம் முடிஞ்ச் பின்னவே. இது எல்லாம் வைத்து கொள்ளலாம் தானே…” என்று சொன்னதற்க்கு ஆணவன்..
“அப்போ எப்போ உனக்கு என்னை பிடிக்க வைக்கிறது… எவ்வளவு எவ்வளவு சீக்கிரமோ… அவ்வளவு அவ்வளவு சீக்கிரத்திமா என்னை உனக்கு பிடிக்கனும் டா… மூனு வருஷம் லவ்… எத்தனை நாளா நான் மட்டுனே பண்றதாம்…” என்ற பேச்சொ, பெண்ணவளுக்கு வெட்கம் வந்ததோடு..
இவன் பேசியே நம்மை பிடிக்க வைத்து விடுவான் போலவே என்று தான் நினைத்தாள்.. அந்த நினைப்பு ஆனது அவன் சொன்னதற்க்கு அனைத்திற்க்குமே அவளை தலையாட்ட வைத்தது… ஆனால் இதுவே அவளுக்கு பின் நாளில் வினையாக போகிறது என்று தெரியாது…
அக்னிவேஷ்வரன் திருமணம் விரைந்து முடித்து விட அவனே ஒரு நல்ல நாளை பார்த்து தன் வீட்டவர்களிடமும் ..
“ம்மா நாளை கழித்து நல்ல நாள் தான்ம்மா ஸ்வேதா வீட்டுக்கு போய் பூ வெச்சிடுங்க. ஒன் வீக்ல எங்கேஜ்டு வர போல பார்த்துக்கோங்க ஒன் மந்த மேரஜ் வரது போல பார்த்துக்கோங்கப்பா…” என்று ஸ்பீக்கரில் தன் தாய் தந்தையோடு சொல்லிக் கொண்டு இருந்தவனிடம் அவனின் தந்தை..
“ சரிப்பா…” என்று சொன்னால் என்றால் அவனின் தாய்…
“ஏனபா இத்தனை அவசரம்…?” என்று கேட்டதற்க்க்8உ அக்னிவேஷ்வரனிடம் எந்த பதிலும் இல்லாது போக இங்கு நீல கண்டன் தான்.
“என அவசரமா…? அவனுக்கு முப்பது முடிஞ்ச்டுச்சி. அது தெரியும் லே….” என்று சொன்னவரை மனைவி பல்லை கடித்து கொண்டு பார்த்தாலுமே திட்ட முடியவில்லை… பேசியில் மகன் இருப்பதால்…
அதனால் கூடிய மட்டும் கணவனை முறைத்து கொண்டே தான் மகனிடம்..
“சரிப்பா நீ சொல்றது போல செய்துடலாம்… “ என்று சொன்னவர் பின் பெண்ணை அழைத்து அக்னி சொன்னதை சொல்ல..
அருகில் இருக்கும் மகள் இதை பேசியில் பேச முடியாது என்று கணவனோடு தாய் வீட்டிற்க்கு வந்தவள்..
“என்னம்மா இது நல்ல நாளில் இருந்து அண்ணனே பார்த்து சொல்றார்.. அப்போ வீட்டு பெரியவங்க நீங்க எதுக்கு இருக்கிங்க….” என்று பட பட என்று பேசிய ப்ரீத்தா.
பின்.. “ ம்மா பார்த்து இப்போவே இப்படிண்ணா அந்த பெண்ணை அண்ணா கல்யாணம் செய்கிட்டா… அவ்வளவு தான்… எல்லா அதிகாரமும் அந்த பெண் கிட்ட தான் போயிடும்.. அவ்வளவு தான் நான் சொல்வேன்..” என்ற மகளின் பேச்சு மரகதத்திற்க்கு புரிய தான் செய்தது.
ஆனால் தன் மகன் தன்னிடம் அபிப்பிராயமோ இல்லை ஆலோசனையோ எதுவும் கேட்கவில்லையே.. இது செய்து அது செய் என்று தானே சொல்கிறான்…
எனக்கும் எதுவும் பிடிக்கவில்லை தான். அதுவும் அந்த பெண் பிடிக்கவே இல்லை… என்ன செய்வது.. இந்த வசதி வாய்ப்பு என்று அனைத்துமே அவனால் தானே.. முன் சொந்தங்கள் இவர்களை அத்தனை மதித்தது கிடையாது..
ஏதாவது விசேஷத்திற்க்கு சென்றால் வா என்பதோடு முடித்து கொள்வார்கள்.. ஆனால் இன்று… வா என்பதோடு வராத குடும்ப உறுப்பினர்களை விசாரித்து..
பின் அக்னி எப்படி இருக்கான்.. கடையா இந்தியா எப்போ வந்து போகிறான்…” என்று விசாரித்து இறுதியாக..
“என் பெண்ணுக்கோ.. இல்லை அண்ணன் அக்கா என்று பெண்ணை சொல்லி இடம் பார்க்கிறார்கள் நம்ம அக்னிக்கு கூட முறையா தான் ஆகுது… என்பர்பகளின் பேச்சு எதற்க்கு என்று மரகதத்திற்க்கு தெரியாதா என்ன…?
ஆனால் தெரியாதது போல் கடந்து வந்து விடுவார்..
காரணம் அன்று எங்களை எத்தனை இழிவாக பார்த்தார்கள்..
“என்ன நீயுமே வேலைக்கு போறியாமே… டீ வாங்கி வர கூட சொல்லுவாங்க என்று கேள்வி பட்டேன்….”
அப்படி பேசியவர்கள்.. அதுவும் மகன் வெளி நாட்டுக்கு படிக்க அனுப்பும் போது எத்தனை பேச்சுக்கள்..
விரலுக்கு ஏத்த வீக்கம் வேண்டும்.. இருக்கும் பணத்தை படிக்க வைத்து விட்டு அங்கு வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது…? இங்கேயே பதினைந்து ஆயிரம் சம்பளத்திற்க்கு வேலையை ஆரம்பித்தால், அவனின் இருபத்தி எட்டாவது வயதில் அறுபது ஆயிரம் சம்பளம் வாங்குவான் என் மகனே அப்படி தான் என்று பேடி மரகத்ததையே பயம் காட்டியவர்கள்..
இன்று வசதி வாய்ப்பு வந்ததும் பெண் கொடுக்கிறேன் என்று சொன்னால் எடுத்து விட வேண்டுமா. இல்லை முடியாது..
என் மகனுக்கு படித்த பெண் வேண்டும் வசதியான பெண் வேண்டும்.. எந்த அளவுக்கு வசதியான பெண் என்றால், மகனுடைய சம்பளம் பணம் எல்லாம் ஒரு பணமே கிடையாது என்று நினைக்கும் அளவுக்கு வசதி வேண்டும்.. அப்படி பட்டப்பட்ட பெண் தான் மகன் தங்களுக்கு கொடுக்கும் காசுக்கு எல்லாம் கணக்கு கேட்க மாட்டாள் என்ற நினைப்பு…
அதை வைத்து எல்லாம் அக்னிக்கு பெண் தேடி தான் கிடைக்காது வயது முப்பதை தொட்டு விட.. இதோ மகன் காதல் என்று ஒரு பெண்ணை கை காட்டி விட்டான்..
அன்று பெண் கொடுக்கிறேன் என்று சொன்னவர்களின் பெண்ணையாவது எடுத்து இருந்து இருக்கலாம்.. தன் எதிர்பார்ப்பில் பாதியாவது இருப்பார்கள்..
ஆனால் இப்போது மகன் காட்டிய பெண்.. இவர் எதிர் பார்ப்பின் அருகில் கூட வர முடியாது.. இதில் இவருக்கு பிடிக்கவே பிடிக்காத அந்த ஷ்யாமின் தங்கை…
இது வரை அவன் மட்டும் தான் தன் மகனின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு இருக்கிறான். இனி குடும்பமே உறிய போகிறது என்ற பயமும் அவருக்கு.
ஆம் இன்னும் கூட தன் மகனின் காசில் தான் அமெரிக்காவில் ஷ்யாம் காலத்தை ஓட்டுக்கிறான் என்ற நினைப்பு மரகதத்திற்க்கு.. அனைத்துமே மனதில் தான் நினைத்தது.. மகனிடம் சொல்லவில்லை.. ஒரு முறை சொல்லி வாங்கி கட்டிக் கொண்டது போதும் என்று நினைத்து கொண்டவர்..
ஆனால் இங்கு கணவனிடம் மகளிடமும் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அதை சொல்லி விடுவார்.. ஷ்யாம் ஒரு அட்டை பூச்சு தன் மகனின் உழைப்பு உறிஞ்சிக் கொள்கிறான் என்று…
இன்று அந்த அட்டை பூச்சியி தங்கை தான் தன் வீட்டு மருமகள் அவரால் ஏறுக் கொள்ளவே முடியவில்லை.. இருந்துமே ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.. குடும்பமே பெரிய மகனை நம்பி தான் இருக்கிறது.
மகள் இத்தனை கத்தலுக்கும் மரகதம்… “ இப்போ என்னை என்ன செய்ய சொல்ற… நான் உன் அண்ணன் கிட்ட சொல்லவா. அந்த பெண் வேண்டாம் என்று…” என்று இவருமே சத்தம் போட.. இதற்க்கு ப்ரீத்தியால் பதில் சொல்ல முடியவில்லை…
நாம் வேண்டாம் என்றாலுமே, அண்ணன் அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வான்… அது தன் அண்ணனை தங்களை விட்டு தூர விலக வைத்து விடும்.. பின் அண்ணனின் அனைத்துமே அந்த பெண்ணிற்க்கு மட்டும் என்று ஆகிவிடும் என்று அமைதியாகி போக.
மகளின் அந்த அமைதியில்… மரகதம்.. “ இப்போது புரிஞ்சுதா…? இனி தான் உங்க அண்ணன் சொல்றதை செய்து முடிக்கனும்.. அப்புறம் இன்னொரு விசயம்.. நேத்து பேச்சோடு பேச்சா அக்னி உன் அப்பா கிட்ட இங்கு டிப்பார்மெண்ட்க்கு இடம் பார்க்க சொல்லி இருக்கான்.. மெயின் ரோட்ல கட்டிடமா இருந்தா இன்னுமே வசதி.. இடமே டிப்பார்மெண்ட் ஸ்டோர் ஆரம்பித்து விடலாம்.. பணத்தை பத்தி கவலை வேண்டாம்.. பாதி லோன் கூட போட்டுக்கலாம்… இடம் மெயின்ல இருக்கனும்… என்று சொல்லி இருக்கான்.. உன் அப்பாவுக்கு என்று ஒரு தனொ தொழில்.. வேலை பார்த்தவர் இன்று முதலாளியா உட்கார போறார்…” என்று அன்னை சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டு இருந்தவள்.
மரகதம் சொன்ன பாதி லோன் போட்டு கூட வாங்கிடலாம் என்ற பேச்சில்.. “ அப்போ இதுவுமே அண்ணன் பெயரில் தானா….? அப்பா பெயரில் இருந்தால் எனக்குமே சொந்தமா ஆகும்மா அண்ணன் பெயரில் தான் எல்லாமும் ண்ணா… அப்போ அந்த பெண்ணுக்கு தானே எல்லாமும் போய் சேரும்..” என்று சொன்ன மகளின் பேச்சில் …
“அப்படின்னா நாளைக்கு உன் அப்பாவை அண்ணன் கிட்ட எவ்வளவு இருக்கு என்று கேட்டுட்டு அவ்வளவுக்கு மட்டும் இடம் பார்க்க சொல்றேன்… இந்த வாட்டி கண்டிப்பா உன் அப்பா பெயரில் தான் சொத்து வாங்க வைப்பேன் நீ கவலை படாதே.” என்று விட்டார்.
முன் என்றால் கூட பரவாயில்லை மகன் பெயரில் சொத்து வாங்குவது அத்தனை பாதிப்பை அவருக்கு ஏற்படுத்தவில்லை.. ஆனால் இன்று திருமணம் செய்த பின் அனைத்துமே மக்கன் பெயரில் என்றால் பின் தங்கள் நிலை. அதுவும் தனக்கு பிடிக்காதவனின் தங்கைக்கு இத்தனையுமே என்றும் சேர்ந்து கொள்ள இந்த முறை அந்த இடம் தன் கணபன் பெயருக்கு தான்.. தன் கணவருக்கு என்று ஒரு தொழில்.. அது அவர் பெயரில் தானே இருக்க வேண்டும் என்று அதற்க்கு ஒரு நியாயமும் சொல்லி கொண்டார்…