அத்தியாயம்…8
அக்னியை பற்றி நினைத்து கொண்டே இருந்தவள் அவன் அழைத்ததுமே உடனே அவனின் அழைப்பை ஏற்றவள் தன் கையில் இருந்த அந்த மோதிரத்தை தடவிக் கொண்டு இருப்பதை மட்டும் அவள் நிறுத்தவில்லை…
அதை பார்த்த அக்னி…. “ அதை நான் என் கையால் கூட போடல… அதை ஏன் இப்படி தடவி கொண்டு இருக்க…? என்று ஆணவன் கேட்டதற்க்கு.
ஸ்வேதா…” நீங்க போடலேன்னாலுமே இதை நீங்க வாங்கி கொடுத்தது தானே…” என்று பதில் அளித்தவளிடம்..
அக்னி…. “ அப்போ நான் வாங்கி கொடுத்த பொருளுக்கே இத்தனை பாக்கியம் கிடைக்குதுன்னா… எனக்கு….” என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டவனுக்கு பெண்ணவளாள் பதில் சொல்ல முடியாது தலை குனிந்து அமர்ந்து இருந்த பெண்ணவளை பார்க்க பார்க்க.
“ எப்போதடா இந்தியாவுக்கு போவோம்.. எப்போ அவளை நேரில் பார்ப்போம்… “ அதன் பின் என்ன என்னவோ ஆசைகள் அவன் மனதில் குவிந்து கிடந்தது…
அக்னிஷ்வரேன் முப்பதை தொட்ட முழுமையான ஆண் மகன்… கடந்த பத்து ஆண்டுகளாக வெளி நாட்டில் எத்தனை எத்தனை வெளிப்படையான காதல் காட்சிகளை எல்லாம் நேரில் பார்த்து இருக்கிறான்..
முதலில் தான் இங்கு படிக்க தான் வந்து இருக்கேன் என்ற முடிவோடு .. .. அதில் மட்டுமே அவன் கவனம் இருந்தது.. பின் தன் குடும்ப பொறுப்பு தங்கை திருமணம் வீடு கட்டுவது என்று இருந்தவனுக்கு… எப்போது ஸ்வேதா அவன் மனதில் வந்தாளோ… அன்றில் இருந்து ஒரு சில காட்சிகளை பார்த்தால் அவன் மனது தள்ளாட தான் செய்யும்…
அப்போது எல்லாம் அவள் படித்து கொண்டு இருக்கிறாள்… இப்போதே இந்த வேட்கை எல்லாம் வேண்டாம். காலம் வரும் என்று காத்து கொண்டு இருந்தவனுக்கு.
அந்த காலம் வந்த பின்னுமே அவளை நேரில் பார்க்க முடியாது தன் நெஞ்சில் சாய்த்து கொள்ள முடியாது போனதில் அவஸ்த்தை கொண்டது மனம்..
அதுவும் அவன் அலுவலகத்தில் இன்று சொன்ன விசயமாக கல்யாணத்திற்க்கு இரண்டு நாள் முன் தான் அவன் இந்தியாவிற்க்கு செல்வது போல் இருப்பதும்.. திருமணம் முடிந்துமே இங்கு ஒரு மாதம் வேலை செய்வது போலான நிலையில் இருப்பதும்..
போனா போகுது என்று திருமணம் முடிந்து ஒரு பதினைந்து நாள் கழித்து வேண்டும் என்றால் இங்கு வாங்க…” என்று இவனுக்கும் மேல் உள்ள அதிகாரி பேசியதில் அவனின் மண்டை அத்தனை சூடாக ஆகிவிட்டது..
இருந்தும் அந்த வெளிநாட்டுக்காரனை ஒன்றும் சொல்லாது அனைத்திற்க்கும் தலையாட்டிக் கொண்டு தான் வரும் படியானது.
காரணம்… இதற்க்கு என்று அவன் கொடுக்கும் டாலர்… இந்த ஒரு வருடத்தில் இங்கு சம்பாதிக்கும் அளவுக்கு இருந்தது…
அதை பற்றி தன்னவளிடம் பேச தான் பெண்ணவளை அக்னி அழைத்தது… இப்படி வெட்கப்பட்டு அமர்ந்திருப்பவளை பார்த்த பின்..
“எனக்கு உங்க டாலரே வேண்டாம் போடா..” என்று சொல்லி விட்டு இப்போதே இந்தியாவுக்கு ஓடி விடலாமா என்று கூட நினைத்து விட்டான் தான்..
ஆனால் நினைத்ததை எல்லாம் செயல் படுத்தி விட அவன் ஒன்னும் டீன் ஏஜில் இல்லையே… இந்த பணம் இருந்தால் தங்கள் எதிர் காலத்திற்க்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்து கொண்டு இருக்க.
வீடியோ அழைப்பில் இருந்த நம் நாயகியோ என்ன இது எந்த பதிலும் இல்லை என்று தலை குனிந்து கொண்டு இருந்தவள் நிமிர்ந்து வீடியோ கால் பார்த்தவளுக்கு யோசனை படிந்த அக்னியின் முகத்தை தான் பார்த்தது…
அதுவும் நீண்ட நேரமாக தன்னையே அவன் பார்த்து கொண்டு இருந்தாலும், அவன் யோசனை வேறு எங்கோ இருப்பது போல் தெரிய…
என்னவோ ஏதோ என்று பயந்து போய்… “ என்னங்க ஏதாவது பிரச்சனையா…?” என்று கேட்டாள்..
இங்கு அக்னி அவளின் பயந்த குரலை கேட்ட பின்பு தான் தன் நிலைக்கு வந்தவன்.. முதலில் ஒன்னும் இல்லை என்று சொன்னவள் ..
பின்… தன் அலுவலகத்தில் இன்று சொன்ன விசயமும்.. கிடைக்கும் அதிகபடியான வருமானமும்.. சொல்லியவன்..
பின்… “ மெயினில் இடம் பார்க்கனும்.. நான் பெரிய டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரா இருக்கனும்.. என்று நினைக்கிறேன்… நம்ம ஸ்டோரில் இல்லாத பொருளே இருக்க கூடாது.. அதுக்கு பெரிய இடமா பார்க்கனும் பில்டிங்கும் பெருசா கட்டனும்…” என்று சொன்னவன்.
பின் தன் கையிருப்பாக இத்தனை கோடி இருக்கு என்று சொன்ன தொகையானது சுந்தர் சொன்னதை விட மூன்று மடங்கு பெரிய தொகையாகும்..
சுந்தரம் அக்னி இத்தனை சம்பளம் டாலராக வாங்கி இருக்க கூடும்.. அது நான்கு ஆண்டுகளில் இத்தனை சேர்ந்து இருக்கும் என்று நினைத்த கணக்கு சரி தான். .. ஆனால் அதை அக்னி ஷேர் மார்க்கெட்டில் போட்டு… அதன் தொகை இப்போ நான்கு மடங்காக உயர்ந்து இருப்பது சுந்தரத்திற்க்கு தெரியாது தானே ..
அக்னியுமே இது வரை எனக்கு இத்தனை வருமானம் என்று தன் வீட்டில் சொன்னது கிடையாது.. ஆனால் அவர்கள் தேவைகள் அனைத்தையுமே அவன் நிறைவாகவே செய்து கொண்டு தான் இருக்கிறான்..
ஆனால் தன் வீட்டவர்களிடம் சொல்லாத அனைத்தையுமே அக்னி தன் வருங்காலத்திடம் சொல்லியவன்..
பின் வரும் தொகையையும் சொல்லி… “ இது இருந்தால் கொஞ்சம் கூட லோன் போட தேவையில்லாது போய் விடும்..” என்று சொன்னவனிடம்..
“நீங்க யோசிச்சது தான் சரிங்க… என்ன கல்யாணம் ஆகி பதினைந்தாம் நாளில் திரும்ப அமெரிக்கா போக போறிங்க. ஒரு மாசம் கழிச்சி திரும்ப இங்கேயே தானே வந்துட போறிங்க. அதுக்கு ஏன் இவ்வளவு யோசனை..” என்று சொன்னவளை பார்த்து இருந்தவன் மனதில் நினைத்து கொண்டான்.
உனக்கு இது பெரியவங்களா பார்த்து வைக்கும் அரெண்ஜ்ட்டு மேரஜ். பட் எனக்கு.. மூன்று வருஷம் மூன்று வருஷ .காதல். அதுவும் ஒரு தலையா காதல்.. அந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சி இருக்கு..
அந்த கல்யாண நிகழ்வுகள் எல்லாமே அவள் கூட நான் இருந்து ஒவ்வொண்ணா ரசிச்சு. கேலி கிண்டல் நிறைய காதல் கொஞ்சம் காமம் என்று அவளிடல் சில சேஷ்டைகளை செய்து அந்த கல்யாண நாளை அவளோடு ஆவலோடு எதிர் பார்த்து கல்யாணம் செய்வதை விட்டு விட்டு இப்படி..
அங்கு அவள் இருக்க.. நான் இங்கு இருக்க.. அவளுக்கு வேண்டியதை என் அம்மா கிட்ட சொல்லி..
அவங்க இது எதுக்கு…? அது எதுக்கு…? என்று கேள்வி கேட்டுட்டு.. அதுக்கு நான் பதில் சொல்லிட்டு. எரிச்சலா இருக்காதா.? அதே போல் வீடியோ காலிலேயே பத்திரிக்கை டிசைன்… எல்லாம் பார்த்து சொல்லி என்ன டா இது என்று நான் இருக்க.?
இவள் என்ன என்றால் இதுக்கா இவ்வளவு யோசனை என்று கேட்கிறாள்… என்று நினைத்து கொண்டவன்..
அவளிடம் பின் சாதாரணமாக பேசி வைத்து விட்டவனுக்கு தெரியாது.. பெண்ணவளுமே ஒவ்வொரு கல்யாண நிகழ்வின் போதும் அக்னியை அவள் எவ்வளவு எதிர் பார்த்தாள் என்பது..
அதுவும் அவளின் தோழிகளிலேயே இவளுக்கு தான் முதலில் திருமணம் நடக்கிறது.. ஆனாலுமே அவர்களின் அக்கா அண்ணன் திருமணத்தின் போது ஜோடியாக சேர்ந்து அனைத்தும் வாங்கியதை சொல்லி கூடவே அவர்களுக்குள் நடந்த ரொமன்ஸ் சொல்லி சிரித்து இருக்கிறார்கள்..
அது போல் தனக்கு நடக்கவில்லை என்ற மனது வருந்தினாலும், அதையும் தான்டி சிறு வயதில் தந்தையை இழந்து பொருளாதார ரீதியாக அவர்கள் பட்ட கஷ்டம். அவமானம்..
சின்ன வயதில் ஒரு சின்ன பொருள் ஆசைப்பட்டாலுமே அதை தன் அன்னையிடம் கேட்க அவள் அவ்வளவு யோசித்து இருக்கிறாள்..
ஏன் சில சமயம் உறவு முறையில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் அவளின் அன்னை அழைத்தால், ஏதாவது ஒரு காரணம் சொல்லி போகாதது போல பார்த்து கொள்வாள்..
காரணம் அவள் வயது உடைய பெரியப்பா மகள்.. அத்தை மகள்கள்
“இந்த ட்ரஸ் தானே நீ போன பங்கஷனுக்கு கூட போட்டுட்டு வந்த…?” என்று ஒருத்தி கேட்டாள் என்றால்,
மற்றோருத்தியோ… “ இது என்ன தங்க கம்பல் இப்படி பழசா இருக்கு.. இதுக்கு நீ விற்கிற கம்பலே போட்டுட்டு வந்து இருக்கலாம்..” என்று கூறுவாள்…
அதற்க்கும் வாங்க பணம் வேண்டும் என்று இவர்களுக்கு யார் சொல்வது என்று நினைத்து கொள்பவள்.. அடுத்து அது போல் பங்கஷனை தவிர்த்து விடுவாள்.
அது போல் பணத்தின் அருமை தெரிந்து வளர்ந்ததினால் தான் அக்னி சொன்னவற்றை புரிந்து கொண்டு.. அவள் மனதிலும் ஆசை இருந்தும் சாதாரணமாக காட்டிக் கொண்டாள்..
இது போல் அவர் அவர் ஒவ்வொரு மனநிலையில் இருக்க இன்னும் திருமணத்திற்க்கு இரண்டு நாள் முன் நாள் தான் அக்னி மட்டும் அல்லாது அவளின் அண்ணன் அண்ணி குழந்தை என்று அனைவரும் ஒன்றாக இந்தியாவுக்கு வந்து இறங்கியது.
காரணம் ஷ்யாம் அந்த புதிய வேலையில் சேர்ந்து விட்டதினால், நீண்ட நாள் விடுமுறை எல்லாம் எடுக்க முடியாது நான்கு நாட்கள் தான் விடுமுறை என்றதில் இதோ இன்று தான் வந்து இந்தியா வந்து இறங்கினான்..
இதில் ஷ்யாமுக்கு தான் மனது கஷ்டமாகி போய் விட்டது.. தந்தை கூட இல்லாது தங்கையில் திருமணத்தை நாம் முன் நின்று வேலைகளை செய்ய முடியவிலையே என்று..
இருந்தும் விடுமுறை எடுத்து செல்லவும் முடியாத நிலை அவனுக்கு.. இது போல நல்ல வேலைக்கு தானே அவன் நீண்ட வருடமாக காத்து கொண்டு இருந்தான்..
அவனின் வருத்தம் பேசியில் பேசும் போது வெளிப்பட .. ஸ்வேதாவும் கெளசல்யாவும் தான்..
“கல்யாணம் அவங்க தானே செய்யிறாங்க.. அதனால பெரிய வேலை எல்லாம் இல்ல ஷ்யாம்.. சேலை நகை வாங்க இரண்டு நாள் வெளியில் போனதில் முடிச்சிட்டோம்… பத்திரிக்கை வைக்கிறது கூட ஸ்வேதா முக்கியமானவங்களுக்கு மட்டும் நேரில் கொடுத்தா போதும் என்று சொல்லிட்டா…
மத்தவங்களுக்கு போஸ்ட்டுல அனுப்பிடலாம் என்று சொல்லிட்டா… அதுவுமே கார் புக் பண்ணி தான் அனுப்பினா … சாமீ கூட விட்டோட தான் கும்பிட்டோம் ஷ்யாம்.. அதனால இங்கு ஒரு கஷ்டமும் இல்ல.
இதை எல்லாம் யோசித்து வேலையில் கவனத்தை விட்டு விடாதே ஷ்யாம்.. அது முக்கியம் பார்த்து…” என்று கூறி விட்டார்.
இப்படியாக அக்னி ஷ்யாம் தன் குடும்பத்தோடு இந்தியா ஒன்றாக இறங்கினாலும் அடுத்து அவர்கள் பார்த்து கொண்டது திருமண நிகழ்வில் தான்..
அவர்கள் மட்டும் என்ன அக்னியே இந்தியா வந்த பின்பும் ஸ்வேதாவை நேரில் பார்க்க முடியாத சூழல் தான்..
அவனுக்கான திருமண உடையை இந்தியா வந்த அன்று தான் ரெடிமேடில் எடுத்தான்.. அதுவும் போட்டு பார்த்து ஒரு சில மாற்றங்கள் சொல்லி என்று வந்த நாள் ஓடி விட.. அடுத்த நாள் பந்தகால் வைத்து விட்டு போக கூடாது என்று வீட்டில் சொல்லி விட.. பின் எங்கு இருந்து செல்வது.
அதுவும் எப்போதும் இந்தியா வரும் போது சாக்லேட்.. விளையாட்டு பொருட்கள் செண்ட் என்று வாங்கி கொண்டு வருபவன்…
இந்த முறை தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை முடிப்பதிலும் தன் வேலைகளை இன்னொர் நபருக்கு சொல்லி கொடுப்பதிலேமே நேரம் சரியாக இருந்ததினால், தனிப்பட்டு வெளியில் செல்ல முடியாது போய் விட்டது.
இதில் தங்கையுமே முகத்தை தூக்கி வைத்து கொண்டு… இருந்தாள்… இதில் புதியதாக சென்ற வாரம் இவன் அமெரிக்காவில் இருக்கும் போது மரகதம் கை பேசியில் பேசும் போது..
“தம்பியை கூப்பிடலாம் ப்பா. அவன் பாவம் தனியா கஷ்டப்டுறான்… அவன் பொண்டாட்டியோட அம்மா வீடு கூட எத்துக்கல போல.. அந்த குழந்தை கலஞ்சிடுச்சி போல… இன்னொரு குழந்தை கூட காணும். ஆஸ்பிட்டலுக்கு போய் பார்த்து இருக்காங்க போல…
அந்த டாக்டர்…. “ உங்க இரண்டு பேர் கிட்டேயும் எந்த குறையும் இல்ல… கரு உண்டாகி உண்டாகி கலையுதுன்னா அதுக்கு மன அழுத்தம் தான் காரணம்.. என்று சொன்னாங்கலாம்….” என்ற அன்னையின் பேச்சில் அக்னி இது வரை மரகதத்தின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தவன்…
இதற்க்கு மட்டும் அவனாகவே… “ உண்டாகி உண்டாகி கலையுதா…?” என்று கேட்டான்.
அதற்க்கும் மரகதம்… “ ஆமாம் அக்னி அந்த குழந்தை மட்டும் இல்லாம அடுத்து இரண்டு குழந்தையுமே கலஞ்சிடுச்சி… இப்போ நாள் கொஞ்சம் தள்ளி இருக்கு போல..இந்த குழந்தையுமே கலஞ்சிடுமோ என்று இரண்டு பேருமே பயப்படுறாங்க. பார்த்துக்கோ கூட ஆள் இல்ல.. இவள் வேலைக்கு போறா.. வீட்டிலுமே செய்துட்டு போறது இன்னுமே அழுத்தமா இருக்கு..” என்று சொன்னவரிடம்.
அக்னி. “ அப்போ வேலைக்கு ஒரு சின்ன கேப் விட சொல்லுங்கம்மா…” என்று சொல்ல.
இங்கு மரகதம் தான்.. “ தம்பிக்கு வேலையில் இன்னுமே இக்ரிமெண்ட் கொடுக்கல போல அக்னி.. உஷாவுமே இது போல குழந்தை உண்டாகி உண்டாகி கலைஞ்சி போயிடுறதுல வேலையில் அவள் கொஞ்சம் பின் தங்கி தான் இருக்கா போல. அதனால வாடகை கொடுத்துட்டு இது போல ஆஸ்பிட்டலுக்குமே போறதுல கொஞ்சம் பணமும் பத்தல போல…” என்ற இவரின் இத்தனை பேச்சுக்கு பின்னும் கூட அக்னி…
“அதுக்கு நம்ம என்னம்மா செய்ய முடியும்…?” என்று கேட்டதில் மரகததிற்க்கு கோபம் தான்..
முதல் பேச்சிலேயே…. “ அதுக்கு என்னம்மா இங்கு வந்து இருக்கட்டும்..” என்று அவனாக சொல்வான் என்று பார்த்தார் போல….
நம்ம என்ன செய்ய முடியும் என்று கேட்கிறான்… கூட பிறந்த தம்பிக்கு என்ன செய்ய கேட்கிறவன். அந்த மாமா பயலுக்கு மட்டும் கூடவே தங்க வெச்சி சோத்த போட்டுட்டு இருக்கான்… என்று ஷ்யாமை பற்றி கேவலமாக மனதில் நினைத்து கொண்டார்..
ஆம் மரகதம் இப்போது எல்லாம் ஷ்யாமை மனதில் மாமா பையன் என்று தான் நினைத்து கொள்கிறார்…
இதை மனதில் நினைத்தாலுமே தன் சின்ன மகனை தங்களோடு சேர்த்துக் கொள்ளும் பொருட்டு..
“இல்ல அக்னி… அவன் காதல் கல்யாணம் செய்துக்கிட்டான் என்று தான் இத்தனை நாள் அவனை தள்ளி வைச்சோம்.. ஆனா இப்போ நீயுமே தான் விருப்பப்பட்டு கல்யாணம் செய்துக்குற அவன் இதை சொன்னா..” என்ற மரகத்தை அக்னி அடுத்து பேச விடவில்லை..
“அழச்சிக்கோங்கம்மா.” என்று போனை வைத்து விட்டவனுக்கு மனது ஆறவில்லை.
அவனும் நானும் ஒன்றா.? படித்து வேலைக்கு சென்ற அதே ஆண்டே… அன்று அக்காவின் நிச்சயம் என்று கூட யோசிக்காது திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறான். அதுவும் தகப்பன் ஸ்தானத்தோடு…
நான் முப்பது வயதில்… எல்லாம் கடமையும் குடிச்சிட்டு…இவங்க கிட்ட சொல்லி முறையா கல்யாணம் செய்துக்க போறேன்.. இன்னுமே கல்யாணம் செய்யும் பெண்ணை நேரில் பார்க்க கூட இல்ல… என்னை அவன் கூட இணை சேர்க்கிறாங்கலா…? என்ற கோபத்தோடு தான் அக்னி இந்தியாவுக்கு வந்தது..
இதில் மறு நாள் ஸ்வேதாவை பார்க்க செல்ல நினைத்தவனிடம் பந்தக்கால் நட்டாச்சி இனி வெளியில் வேண்டாம்” என்று சொன்னதும் அமைதியாக தன் அறைக்கு சென்று விட்டான்..
இதில் நடுவில் அவன் தம்பியும் அவன் மனைவியும் இவன் காலில் விழ…. இவன் இது எல்லாம் என்னம்மா என்று விட்டான்.
இதில் மரகதத்திற்க்கு கோபம் காலில் விழுந்தவர்களுக்கு… இவன் ஒன்னும் கொடுக்காது விட்டு விட்டானாம்..
மதியம் இவன் சாப்பிடும் போது அவனின் அன்னை மரகதம்… “ முதன் முதலா உன் காலில் விழுந்தா ஆசிர்வாதம் செய்து ஏதாவது கொடுக்கனும் அக்னி….” என்றதில் அக்னி ஒன்றும் சொல்லாது தன் அன்னையை ஒரு பார்வை பார்த்தான்.
உடனே ப்ரீத்தியிடம் சுந்தரம் கண் காட்டியதில் அவள் தான். “ ம்மா அண்ணாவுக்கு அந்த பார்மால்ட்டிஸ் எல்லாம் தெரியாதும்மா.. தெரிந்தா கொடுக்காது இருப்பாங்கலா.?” என்று தன் அண்ணனுக்கு ஆதரவாக பேசியது..பின் தான் மரகதம்..
“நீ சாப்பிடு அக்னி…சாப்பிடுற நேரத்துல இந்த பேச்சை எடுத்து இருக்க கூடாது தான்.. ஆனா பாரு கர்பமா இருக்கும் பெண் காலில் விழுந்தும் நீ ஒன்னும் கொடுக்கலையே என்ற ஆதங்கத்தில் தான் பேசிட்டேன்..” என்று அந்த பேச்சை விட்டாலும்..
அன்று மாலையே அதுவும் ரிசப்ஷனுக்கு கிளம்பும் சமயம்… அடுத்த பேச்சாக…
“அன்னைக்கே நான் சொன்னேன் வீட்டை கொஞ்சம் பெருசா எடுத்து கட்டலாம் என்று இப்போ பாரு… இரண்டே அறை. இதுல பெண்ணும் மாப்பிள்ளை எங்கு தங்குவாங்க…குழந்தை உண்டாகி இருக்கும் பெண் அவளை வசதியா பார்த்துக்கனும்.. அதுவும் வசதியா வளர்ந்த பெண் வேற….நாங்க வயது ஆனவங்க.எங்களுக்குமே ஆஞ்சி ஒஞ்சி படுக்க வேண்டும்.. இதுல உனக்குமே ஒரு ரூம் வேண்டும்.. நீ இங்கு இருந்து போகும் வரை…” என்று அடுத்த பஞ்சாயத்தை எடுத்து விட்டார்….