Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Poiyenum Perum Velicham

  • Thread Author




அத்தியாயம்…9

அப்போது தான் அக்னிக்கு ஒன்று நினைவில் வந்தது.. அது தான் இனி இங்கு தான் என்பதை தன் வீட்டில் சொல்லவில்லை என்று நினைத்தவன்.

சொல்ல ஆரம்பிக்கும் போது தான்… ப்யூட்டி பார்லரிடம் இருந்து அழைப்பு வந்தது… “ என்ன சார் நீங்களே இன்னும் சத்திரத்தில் இல்ல. ஜென்ஸ்ஸா இருந்தாலுமே எங்களுக்குமே ஒரு மணி நேரமாவது வேண்டும் சார்.” என்றதில்..

பொதுவாக… அனைவரையும் பார்த்து… “இதை பத்தி அப்புறம் பேசிக்கலாம்…” என்று சொல்லி விட்டு காரில் சென்று விட்டான்..

காரில் செல்லும் வழி முழுவதுமே வீட்டை பத்தி நினைக்கலையே… அம்மா அப்பாவுக்கு ஒரு ரூம் வேண்டும்.. எங்களுக்கு ஒரு ரூம் வேண்டும்… தம்பி வந்து இருக்கான்.. அவனுக்குமே ஒரு ரூம் வேண்டும்.. அப்போ மேல ஒரு ரூம் எழுப்பி விடலாம்…” என்று யோசித்தவன்..

அப்போது கூட தங்கைக்கு ஒரு அறை வேண்டும் என்று யோசிக்கவில்லை… அவன் நினைத்து கொண்டது.. தான் ஊருக்கு வந்தால் தானே ப்ரீத்தி இங்கேயே இருக்கிறாள்.. இல்லை என்றால் அவ்வப்போது தான் வந்து செல்கிறாள் என்று தான் அவன் நினைத்து கொண்டது..

ஆனால் ப்ரீத்தி அதே தெருவில் வீடு பார்த்து வந்ததே தன் வீட்டு செலவை மிச்சம் செய்ய வேண்டி தான் என்பதும்… அவளின் நாட்கள் பெரும் பொழுதும் இங்கு தான் செல்கிறது என்பதும் தெரியாது இன்னும் ஒரு அறை எழுப்பினால் போதும் அது வரை என்ன செய்வது இந்த எண்ணோட்டத்துடனே கல்யாண சத்திரத்திற்க்கு வந்து கொண்டு இருந்தவன் கல்யாண மண்டபம் வந்து இறங்கும் முன்பே அதற்க்கு ஒரு வழியும் செய்து விட்டான்….

சத்திரத்திற்க்குள் நுழைந்த நொடி அனைத்து யோசனைகளையும் மறந்து.. புது மணமாப்பிள்ளையின் மனநிலைக்கு சென்று விட்டான்..

காரணம்.. சத்திரத்தின் நுழைவாயிலில் ஷ்யாமின் மனைவி தேவி சித்ரா குழந்தையை வைத்து நின்று கொண்டு இருந்தாள்..

அந்த குழந்தை மைய்யூ.. இவனை பார்த்ததுமே… “ மாமா…” என்று இவனிடம் தாவிக் கொண்டு வர.. இவனுமே ஆசையோடு அந்த குழந்தையை அள்ளிக் கொண்டான்…

அமெரிக்காவில் கூடவே இருந்ததினால் குழந்தைக்கு அக்னி என்றால் அத்தனை பிடித்தம்…

சித்ராவும் எப்போதும் போல் இவனை கிண்டலாக பார்த்து.. “ என்ன அண்ணா கல்யாண மாப்பிள்ளை எப்படி இருக்கிங்க….?” என்று கேட்டாள்…

அக்னியுமே எப்போதும் சித்ராவிடம் பேசுவது போல்… “நல்லா இல்லையே….?” என்று சொன்னவனிடம்..

சித்ரா… “ ஏனாம்…?” என்று கேட்டாள்..

அதற்க்கு அக்னி… “ எங்கே பெண்ணையே கண்ணுல காட்டல….எப்படி நல்லா இருக்க முடியும்…” என்று சொல்லிக் கொண்டு இருந்த சமயம்..

அந்த இடத்திற்க்கு வந்த ஷ்யாம்…. “ நேத்து வந்தவரு இப்போ வரை பெண்ணை பாக்க எந்த முயற்ச்சியும் செய்யாத நீ எல்லாம் அதை பேச கூடாது ராசா…” என்று சொன்னவனின் தோளில் கை போட்ட அக்னி…

“உனக்கே தெரியும் நேத்து தான் என் கல்யாண ட்ரஸையே பர்ச்சஸ் பண்ணேன்னு…” என்றவனின் பேச்சில் ஷ்யாமுமே.

“சும்மா கிண்டல் தான் செய்தேன் அக்னி..” என்றான்..

ஆனால் சித்ரா விடாது… “ அதெல்லாம் விடுங்க அண்ணா. இங்காவது கொஞ்சம் சீக்கிரம் வந்து இருக்கலாம் தானே…. நாங்க இங்கு வந்து டூ ஹவர்ஸ் ஆகுது.” என்று சொன்ன சித்ரா….

அந்த இரண்டு மணி நேரம் என்பதை அழுத்தமாக சொல்லவும் தான் நம் அக்னிக்கு மணி அடித்தது..

ஆமாம் லே… அழகு நிலையத்தில் இருந்து நமக்கே குறைந்தது ஒரு மணி நேரம் ஆகுதுன்னா பொண்ணுக்கு…என்ற நினைத்த நொடி… சத்திரத்திற்க்குள் விரைந்தவன்..

பெண் அறை என்று எழுதி இருந்த அறைக்குள் முன் வந்து நின்றவன்.. இப்போது அலங்காரம் எல்லாம் முடிந்து இருக்குமா…? அறைக்குள் யார் யார் இருப்பாங்க. யாராவது ட்ரஸ் மாத்திட்டு இருந்தா.. ஏன் ஸ்வேதாவே… என்று நினைத்த நொடி மனதில் இந்த தயக்கம் எல்லாம் இன்று ஒரு நாள் மட்டும் தான். நாளைக்கு எல்லாம் அவள் எப்படி இருந்தாலுமே பார்க்கலாம்… என்று மனதில் நினைத்த நொடி.. உடல் முழுவதும் அணலும்… கூடவே அதில் ஜில் என்ற குளிர்ந்த நீரிம் விழுந்தால் எப்படி இருக்குமோ. அப்படியான ஒரு நிலையில் தான் அவன் உடல் மட்டும் இல்லாது மனதும் இருந்தது..

அது தந்த தாக்கத்தில் அவன் அப்படியே நின்று விட. அப்போது தான் ஸ்வேதாவின் அன்னை கெளசல்யா.

தன் மகளுக்கு காபி கொடுத்து விட்டு பெண் அறையில் இருந்து வெளியில் வந்தவர் அக்னி அறையின் வெளியில் நின்று கொண்டு இருப்பதை பார்த்து விட்டு..

அவருமே பதட்டத்துடன்.. “ வாங்க மாப்பிள்ளை. வாங்க மாப்பிள்ளை…” என்ற அழைப்பிலும் அவர் குரலிலும் அத்தனை பதட்டம் தெரிந்தது.

அக்னியுமே கெளசல்யாவின் குரலில் தன் நிலையில் இருந்து மீண்டவன்.. அவர் குரலில் இருந்த பதட்டத்தையும் கவனித்து விட்டு…

“எதுக்கு அத்த இத்தனை பதட்டம்…?” என்று என்னவோ நேரில் நெடு நாள் பார்த்து பழகியது போல் சகஜமாக பேசினான்..

ஆனால் கெளசல்யாவுக்கு தான் அப்படி பேச முடியவில்லை.. இன்னும் கேட்டால் அக்னியோடு இந்த பத்து ஆண்டுகளாக பேசியில் பேசி இருக்கிறார் தான்.. மாப்பிள்ளை என்று முடிவு செய்யும் முன்பு கூட வீடியோ காலில் அக்னியை பார்த்து இருக்கிறார் தான்… ஆனால் நேரில் இன்று வரை பார்த்தது கிடையாது..

அதன் தொட்டோ இந்த பதட்டம் என்று கேட்டால், இல்லை… நேற்று மாப்பிள்ளை வந்து விட்டார் என்று தெரிந்ததும்.. அவர்கள் வீட்டிற்க்கு வந்து இருந்த அவரின் மூத்தார் ஒரவத்தி நாத்தனார் என்று அனைவரும்..

“நம்ம முறைப்படி இன்னைக்கு மாப்பிள்ளைக்கு நலங்கு வெச்சிட்டு வந்துடலாம்… அதோடு நாங்க இது வரை மாப்பிள்ளையை பார்த்தது கூட இல்ல… முதல்ல மாப்பிள்ளையை பார்த்துட்டு தான் கல்யாணம் பேசனும்.. இங்கு தான் எல்லாம் தலை கீழா நடக்குதே… இந்த முறையாவது முறையா செய்துட்டு வந்துடலாம்..” என்று இதை சொன்ன கெளசல்யாவின் மூத்தார்.. ஒரு வித காட்டமாக தான் சொன்னார்.

காரணம் நமக்கு கீழ் உள்ளவர்கள் நமக்கு கீழே தான் இருக்க வேண்டும் என்று தான் ஒரு சில மனித மனம் நினைக்கும் போல்.. அது மீறும் போது இது போலான காட்டமான வார்த்தைகள் வந்து விழ தான் செய்யும்.. அது போலான வார்த்தையை தான் அவர் பேசினார்..

கெளசல்யாவுமே உறவு முறைகளை அழைத்து கொண்டு இன்று மாப்பிள்ளை வீட்டிற்க்கு செல்ல வேண்டும் என்று நினைத்து கொன்டு இருந்ததினால்.

அவருமே …” சரி மாமா. எதுக்கும் சம்மந்தி வீட்டில் ஒரு வார்த்தை சொல்லிடுறேன் ..” என்று சொல்லி விட்டு..

அவர்கள் முன் தான் மரகத்திற்க்கு அழைத்தது.. அந்த சமயம் தான் இங்கு அக்னி எதுவும் தங்கைக்கு தம்பிக்கு என்று வாங்கி கொண்டு வராததை பற்றி ப்ரீத்தி தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள்..

அதோடு இத்தனை ஆண்டுகள் கழித்து அவன் தம்பியிடம் சரியாக பேசாது அறைக்குள்ளும் புகுந்து கொள்ள. அதை பார்த்து மரகதம்..

கூட பிறந்தவன் மீது பாசம் இல்ல. அதுவும் தம்பி அத்தனை கஷ்டப்படுகிறான் என்று நான் அத்தனை சொல்லி இருந்தேன்.

அதை பற்றி இன்னும் பேசாது அவன் பாட்டுக்கு ரூமுக்கு போயிட்டானே.. என்று புகைந்து கொண்டு இருந்தார்.

அந்த சமயம் சரியாக கெளசல்யா அழைக்க.. இங்கு மரகதம் அழைப்பை ஏற்றதும்.. கெளசல்யா…. “ எங்க வீட்டு ஆளுங்க மாப்பிள்ளைக்கு முறை செய்யனும் என்று சொல்றாங்க அண்ணி… உங்களுக்கு எப்போ நேரம் தோதுப்படும் என்று சொன்னா…

நாங்க வந்து மாப்பிள்ளையை பார்த்துட்டு முறையை செய்துட்டு போகலாம் என்று பார்க்கிறோம்… “

கடந்த இடைப்பட்ட நாட்களில் ப்ரீத்தி சொன்னதற்க்கு ஏற்ப மரகதம் தன்னை கட்டுப்படுத்தி கொண்டு கெளசல்யாவிடம் நல்லப்படியாகவே நடந்து கொண்டதால், கெளசல்யா அண்ணி என்று அழைத்து நல்ல முறையில் பேசும் அளவுக்கு வந்து விட்டு இருந்தது..

அதன் படி இன்றும் பேசினார் கெளசல்யா.. ஆனால் இன்று மரகதம் தன் மகளின் வார்த்தைகளை எல்லாம் யோசித்து பேசும் நிலையை எல்லாம் கடந்து விட்டு இருந்தார்..

அதன் தொட்டு … “என்ன முறை வேண்டி இருக்கு.. இங்கு எல்லாம் முறையாவா நடக்குது…? இதுல மட்டும் என்ன முறை வேண்டி இருக்கு…இங்கு வர போவ என்ற காசு கூட செலவு வேண்டாம்… நீங்க நேரா கல்யாண சத்திரத்துக்கே வந்துடுங்க…” என்று மரகதம் ஒரு மாதிரியாக பேசிய பேச்சுக்கு இங்கு கெளசல்யாவினால் பதில் அளிக்கவும் முடியவில்லை…

“ஏன் இது போல எல்லாம் பேசுறிங்க…? என்ன விசயம்…?” என்று கூட கெளசல்யாவினால் கேட்க முடியவில்லை.. காரணம் மொத்த உறவு முறைகளும் இவர் முகத்தையே கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தினால்,

ஸ்வேதாவுக்கு இந்த இடம் முடிந்ததில் இருந்து உறவு முறைகளுக்கு கொஞ்சம் பொறாமை தான்.. தன் மகள் மகனோடு… இவர்கள் பிள்ளைகள் மேலோங்கி இருப்பார்களோ என்று.. அதன் தொட்டு என்ன கிடைக்கும் என்று காத்து கொண்டு இருந்ததினால் , மரகதம் இத்தனை பேச்சுக்கும் எதுவும் பேசாது…

“சரி அண்ணி.” ’ என்று சொல்லி விட்டு தான் இங்கு கெளசல்யா கை பேசியை வைத்தது.

ஆனால் கெளசல்யா எதுவும் பேசாத போதே.. அவருடைய முக பாவனையை வைத்தே பேசியவர்கள் ஏதோ பிரச்சனையாக தான் பேசிக் கொண்டு உள்ளார் என்று யூகித்து..

“அதுக்கு தான் விரலுக்கு ஏத்த வீக்கம் வேண்டும் என்று சொல்றது…. “ என்று ஒருவர் சொன்னார் என்றால்,

மற்றோருவர்… “ நம்ம தகுதிக்கு கொஞ்சம் கீழே தான் பெண் கொடுக்கனும்… அப்போ தான் அங்கு ஏதாவது நம்ம பொண்ணுக்கு பிரச்சனை என்று வந்தா கூட நம்ம கேள்வி கேட்க முடியும்.. இதோ என்னை பாரு எங்க வசதிக்கு இன்னுமே பெரிய இடமா கொடுத்து இருந்து இருக்கலாம்.

ஆனா பார் நான் எனக்கு கொஞ்சம் கீழே தான் பொண்ணு கொடுத்தேன்.. இதோ என் மாப்பிள்ளை நாங்க கிழித்த கோட்டையை தாண்ட மாட்டார்..” என்று காதல் திருமணம் புரிந்த பெண்ணின் தகப்பனும். கெளசல்யாவின் மூத்தாருமானவர்.. பேசினார்..

ஆனால் கெளசல்யா எதற்க்கும் பதில் கொடுக்காது.. அமைதியாக அடுத்து சத்திரத்திற்க்கு கிளம்பும் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தாலுமே, மனதில் தன் பெண் வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற பயம் மனதில் அந்த நிமிடத்தில் இருந்து வர தொடங்கி விட்டது..

இத்தனைக்கும் இடையில் பரவாயில்லை இந்த பேச்சை எல்லாம் கேட்க… மருமகள் பெண்ணை அழகு நிலையத்திற்க்கு அழைத்து கொண்டு சென்றது.. மகன் தனக்கும் அக்னிக்கும் உடை நகை எடுக்க கடைக்கு சென்றது ஒரு விதத்தில் நல்லதாகவே பட்டது..

காரணம் மகனும் சரி மகளும் சரி.. ஏன் மருமகளுமே… இது போலான பேச்சுக்கு பட்டென்று பதில் அளித்து விடுவார்கள்..

கெளசல்யாவுக்கோ.. தகப்பன் இல்லாத குடும்பம்… கல்யாணம் எந்த வித பிரச்சனையும் இல்லாது நடந்து முடிந்து விட வேண்டும் என்ற எண்ணம். இப்போது கூடுதலாக பெண் வாழ்க்கையை பற்றியும் பயம் எழ.. ஒருவித பதட்ட நிலையிலேயே இருந்ததினால், அக்னியை அப்படி சட்டென்று பார்த்தில் கொஞ்சம் பதட்டமாகி பேசினார்.

அக்னி தான். “ என்ன அத்த நான் என்ன உங்களுக்கு புதுசா.. பேசினவன் தானே அத்த…?” என்று சிரித்த முகமாக பேசியவன்.

பின்… “ நீங்க எப்போவும் போல என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க அத்த.” என்ற அவனின் தன்மையான இந்த பேச்சு கெளசல்யாவுக்கு அத்தனை ஆறுதல் அளித்தது.

ஒரு பெண்ணுக்கு எந்த உறவு சரியாக அமையா விட்டாலும், கணவன் நல்லப்படியாக அமைந்து விட்டால் போதும்.. எது வேண்டும் என்றாலும் சமாளித்து கொள்ளலாம் என்ற தைரியம் அவருக்கு வந்து விட்டது.

ஆனால் பாவம் அவருக்கு தெரியாத ஒரு விசயம்… அக்னி தன் மகள் மீது வைத்து இருக்கும் அளவுக்கு அதிகமாக காதல் அக்கறையினால் தான் நாளை தன் மகள் கேட்க கூடாத வார்த்தைகள் எல்லாம் கேட்கும் படியான நிலைக்கு வந்து அவள் வாழ்க்கையையே ஆட்டம் காண வைக்க போகிறது என்று தெரியாது..

அக்னியின் இந்த தன்மையான பேச்சில் மகிழ்ந்து போய் விட்டார்…
 
Top