Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Prithariyaa Pithana Podhum-5

  • Thread Author
அத்தியாயம்…5

லிங்கா தன்னை மட்டும் நிற்கும் படி சொல்லவும் மறுத்து பேச முடியாத சூழ்நிலையில் தான் மது அவன் அறையில் தேங்கி நின்றது.. நின்றவள் அவன் முகத்தை பார்க்கவில்லை.. பார்த்தால் தானே அவன் தன்னை எங்கு பார்க்கிறான் என்று தெரியும்..

ஆனால் இந்த ட்ரஸ் கொஞ்சம் லூசா தான் இருக்கு.. அதோட துப்பட்டாவும் போட்டு இருக்கு, அதனால் பிரச்சனை இல்லை, என்ற நம்பிக்கையில் மனதில் கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது..

பேச வேண்டும் என்று இங்கு நிற்க சொன்னவன் தன்னிடம் பேசாது இருக்கவும், சிறிது நேரம் பொறுத்து பார்த்தவள் பின் மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள்..

அவனோ.. நல்ல வேலை அவன் கண் தன் முகத்தில் இருந்து கீழே போகவில்லை என்றதில், இப்போது தைரியமாகவே அவன் முகத்தை பார்த்தாள்..

அவள் தன்னை பார்க்கும் வரை பேசாது அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவன், மது தன்னை பார்த்ததுமே..

“ நீ ஏன் பல சமயம் கூன் போட்டது போல நிற்கிற…?” என்று சம்மந்தம் இல்லாது கேட்ட கேள்வியில், மது ஒரு நிமிடம் குழம்பி பின்.. மீண்டும் ஒரு மாதிரி சூழ்நிலையில் அவன் எதிரில் அவள் நிற்பது போல் உணர்ந்தாள்..இது எல்லாமா கவனிக்கிறான்.. அதுவும் தான் ஏன் அப்படி… என்று அவள் யோசிக்கும் போதே..

“ இதோ இப்போ நல்ல மாதிரி தானே நிற்கிற. அதே போல் வீட்டில் தோட்டம் யாரும் இல்லாத போது நல்ல மாதிரி நிற்கிற. ஆனால் சில சமயம் சரியா சொல்வது என்றால், நீ ட்ரஸ் டையிட்டா போடும் போது..

ஒரு சில ட்ரஸ். கண்ணாடி முன் நின்று பார்த்தாலே நீ உணர்ந்து இருப்ப. அது போல சமயம் நீ அது போல கூன் விழுந்தது போல நிற்கிற என்று எனக்கு தோனுது..” என்று லிங்கா பேச பேச மதுவுக்கு வாய் அடைத்து விட்டது..

ஆம் லிங்கா பேசி முடித்ததும் அவள் கை கொண்டு அய்யோ..” என்று சொல்லி வாய் மீது கை வைத்து பொத்தி கொண்டாள்.. என்ன என்ன பேசுகிறான் .. அதோடு எந்த அளவுக்கு கவனித்து பார்த்து இருந்தாள் சரியாக அப்படி சொல்வான்.. ஆம் லிங்கா சொன்னது சரியே..

மது உயரம் எடை என்று அனைத்தும் சரியான அளவில் இருக்கும்.. ஆனால் மார்பகம்.. அவள் மெல்லிய உடல் வாகுக்கு பொருத்தம் இல்லாது அளவில் பெரியதாக இருக்கும்..



அதனால் அவளின் உடையை பொருத்து தான் அவளின் நடை நிற்க்கும் போஸ் இருக்கும்.. தன் அம்மாவே தன்னை இந்த அளவுக்கு கவனித்து இருப்பார்களா என்று தெரியாது…

ஆனால் இவன் இந்தியா வந்து சில மாதங்கள் முடிந்து இருக்குமா…? அதுவும் வீட்டிலும் எப்போதும் பார்ப்பது இல்லை.. அப்படி இருக்க… இந்த அளவுக்கு எப்படி தன்னை கவனித்தான்..

அதுவும் முன் எல்லாம் வீட்டில் சாதாரணமாக தான் இருப்பாள்… லிங்கா வந்ததில் இருந்து தான் வீட்டிலும் தன்னை அவ்வப்போது குனிந்து பார்த்து கொள்வதும், சாப்பிடும் போது எதிரில் அமர்ந்து இருந்தால், அவள் முதுகு தன்னால் இன்னும் பென்டாகி தான் அமர்வாள்..

ஆனால் தன் செயலை இப்படி அவன் தேங்காய் உடைப்பது போல உடைப்பான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை..

அதோடு இது இந்தியா. ஒரு சில விசயங்களை அப்பாவிடமே பேச கூச்சப்படுவார்கள்… அது போலான விசயத்தை இவன் என்ன சர்வ சாதாரணமாக தன்னிடம் பேசுக்கிறான் என்று நினைத்து கொண்டே அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது அவன் முகத்திலேயே தன் பார்வையை நிலை நிறுத்தி வைத்து இருந்தாள்..

லிங்கா திரும்பவும் அதே கேட்க.. மது இப்போது தன் அதிருப்தியை முகத்தில் அப்பட்டமாக காட்டியவள்..

“கல்லூரி தயாளனா இருந்தா இது எல்லாம் கூட தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன…” என்று ஏளனமாக கேட்டவளிடம் ஒன்றும் சொல்லாது கை கட்டி அவளையே பார்த்து கொண்டு இருந்தவன்..

பின்.. “ இதே கல்லூரி தயாளனிடம் தான் நீங்க போடும் உடையை என் அனுமதி கேட்டு இங்கு வந்தது.. அது நியாபகத்தில் இருக்கா..?” என்று கேட்டவனை முறைத்து பார்த்தாள் மதுமதி…

எதுக்கு எது இணை கூட்டுகிறான் பாரேன் என்பது போல் அவனை பார்த்திருக்க.

அவனோ.. “அன்னைக்கு நம்ம வீட்டில் நீ போட்டியே ஒரு ட்ரஸ் அது போட்டு கொண்டு வந்தா.. அது என் கல்லூரியை பாதிக்கும் தானே.. அப்போ நான் கேட்க வேண்டிய இடத்தில் தானே இருக்கேன்..” என்று சொன்னவன்..

பின் சிறிது நேரம் கழித்து சிரித்த வாறு.. “ அதோட நீ என் கல்லூரியின் மாணவியாக மட்டும் இல்லாது என் அத்தையின் மகளாகவும் இருந்து.. நாமே ஒரே வீட்டிலும் இருப்பதாலும் , நீ அப்படி உடை உடுத்துவது எனக்கு ..” என்று பேசிக் கொண்டு இருந்தவன் பேச்சை பாதியில் விட்டவன்.. பின் தன் இரு தோள்களையும் குலுக்கிய பின் மீண்டும் மேஜையின் மீது சாய்ந்து நின்றவன்..

“ட்ரஸ் என்பது நம்ம கம்பர்டபுலுக்கு தான் இருக்கனும். அழகுக்கு என்று போட்டுக் கொண்டு, மத்தவங்க முன். முதுகை வலைத்து நெளிந்து, பின் உன் கை கொண்டு மறைத்து ஏன்..?

நீ அது போல செய்வது தான் பார்க்காதவங்களை கூட பார்க்க தூண்டுது.. அது உனக்கு தெரியுமா…?” என்றவனின் பேச்சில் மது விக்கித்து தான் நின்று விட்டாள்..

அவளின் நின்ற தோற்றத்தை பார்த்த லிங்கா என்ன நினைத்தானோ.. “ சரி போ..” என்று விட்டான் ..

விட்டால் போதும் என்று அந்த அறையை விட்டு மது விரைந்து கதவுப்பகுதியை அடையும் போது லிங்கா சொன்ன.

“ மத்தவங்க கிட்ட இது போல பேசி இருப்பேனா. எனக்கு தெரியல.. நீ என்பதால் தான் நான் இவ்வளவு சொன்னேன்.” என்ற பேச்சு அவள் காதில் விழ விரைந்து நடந்தவள் ஒட்டம் பிடித்தாள்.. அவள் பின்னே அவனின் சிரிப்பொலி அவளின் காதில் விழுந்தன.

இரவு உணவு உண்ட பின்.. லிங்கா தனக்கு என்று ஒரு தளம் கட்டிய தளத்தில், அதுவும் குறைந்த நாட்களில் மூன்று ஷிப்ட் வைத்து ஆட்களை வைத்து வேலை வாங்கி… தன் தளத்தில் அனைத்தும்.. நீச்சல் குளத்தில் இருந்து உடற்பயிற்ச்சி கூடம் வரை அமைத்து அவ்வளவு பிரமாண்டமாக கட்டி முடித்து விட்டான்..

அதோடு அந்த தளம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தெரியும் படி தன் அன்னையின் புகைப்படங்கள் மாட்டி இருந்தான்.. அந்த தளம் மட்டும் அல்லாது இந்த பங்களாவின் நுழைந்த உடனேயே கண்ணுக்கு பளிச்சென்று தெரியும் படியும் தன் அன்னையின் திருமணம் புகைப்படத்தை மாட்டி இருந்தான்.

இப்போது தன் தளத்தில் அன்னை மட்டும் தனித்து இருக்கும், அந்த படத்தை பார்த்த வாறே படுத்து கொண்டு இருந்தவனுக்கு,. முதலில் இன்று கல்லூரியில் மதுவிடம் பேசிய பேச்சுக்களே மனதில் வட்டமிட்டு கொண்டு இருந்தது..



மதுவிடம் சொன்னது போல. மது இல்லாது வேறு பெண்ணிடம் நான் இது போல் பேசி இருப்பேனா. என்று யோசித்தவனுக்கு முடியாது என்ற பதில் தான் அவன் மனது சொன்னது.

வேறு பெண் என்ன,, இத்தனை ஆண்டுகள் வெளி நாட்டில் இருந்தாலுமே, பெண்கள் பழக்கம் என்பது அவனுக்கு சுத்தமாக கிடையாது..

தங்கள் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் அதிக அளவில் வேலை செய்வது பெண்கள் தான்.. அதே போல் பொருட்களை வாங்க வருவதில் அதிக எண்ணிக்கை பெண்கள் தான்.. அதனால் தொழில் முறையில் பேசுவதோடு சரி..

மற்றப்படி தனிப்பட்ட பேச்சு எந்த பெண்ணிடமும் அவன் பேசியது கிடையாது.. அதற்க்கு காரணம் தன் மீது விழுந்த பழியா..? இல்லை டீன் ஏஜில் தான் செய்த சின்ன செயல்..

அதை வைத்து தன் அம்மாவை பேசிய பேச்சுக்கள்.. இது எல்லாம் சேர்ந்ததால் பெண்கள் என்றால் கொஞ்சம் விலகி தான் இருப்பான்..

ஆனால் மதுவிடம்.. பேச்சிலும் சரி.. பார்வையிலும் சரி.. நான் என் வர முறையில் இல்லை என்பது அவனுக்கு நன்றாக தெரிந்தது.. அதற்க்கு காரணம் என்ன என்பதும் அவனுக்கு புரிகிறது தான்.. ஆனால் இது சரிப்பட்டு வருமா..?

தன் அன்னையின் புகைப்படம் முன் நின்றவன்.. தன் அன்னையிடம் கேட்டானா..? . இல்லை தனக்கு தானே கேட்டு கொண்டானா தெரியாது..

ஆனால் அம்மாவின் படத்தை பார்க்க பார்க்க அவன் மனது ரணமாக வலித்தது. இந்த ரணம் அவனுக்கு இன்று வந்தது கிடையாது… புத்தி தெரிந்த வயதில் இருந்தே தன் அன்னையை பற்றி மற்றவர்கள் பேசும் பேச்சை கேட்டு கேட்டு ரணமாகி விட்டது.

அந்த ரணத்தில் ஆசிட் ஊத்தியது போலான விசயம் அவனின் பதினெழாவது வயது நடக்க. இந்த வீட்டையும் இங்கு உள்ளவர்களையும் மொத்தமாக வெறுத்து தான் இந்தியாவை விட்டு சென்றது..

பின் இந்தியா வந்தது.. அதோடு இங்கேயே இருக்கும் படியானதோடு பெரிய விசயம்.. இதே வீட்டு பெண்ணை அவனுக்கு பிடித்து இருப்பது…

தன் அம்மாவையே பார்த்து கொண்டு இருந்தவனின் கண்கள் கலங்கி தான் போனது…தன் அன்னையின் வேதனைகளை பார்த்து வளர்ந்தவன் ஆயிற்றே அவன்..அது நடந்து ஆண்டுகள் பல கடந்தாலுமே, அதனால் அவன் பட்ட அவமானம்.. இன்னும் மிச்சம் சொச்சம் அவன் மனதில் இருக்க தான் செய்தது..

ஏதோ நினைவுகளில் ஆழ இருந்தவனை அவன் கை பேசி அழைத்தது.. எடுத்து பார்த்தவனின் முகத்தில் வேதனையையும் மீறி சிறு புன்னகை அவன் முகத்தில் தன்னால் வந்து போயின..

அழைப்பை ஏற்றதும் .. அவனை அழைத்த கலைசெல்வன்.. “ மாப்பிள்ளை நீ ஒகே தானே..?” என்பது தான்..

அது எப்படி தான் தன் மனது வேதனை படும் போது எல்லாம் சரியாக அவர் அழைத்து விடுகிறாரே. எப்போதும் போல தன் மாமனின் அன்பில் இந்த மருமகன் நெகிழ்ந்து தான் போய் விட்டான்..

“ம் நல்லா இருக்கேன் மாமா.. “ என்று சொன்னவன்.. பின் என்ன நினைத்தானோ.. “ மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று வாய்க்கு வாய் கூப்பிட வேண்டியது.. ஆனா பெண்ணை பெத்து வைக்காது இரண்டு தடி மாட்டை பெத்து வைத்து இருக்கிங்க..” என்று பேசியவனின் பேச்சில் பெரும் குரல் எடுத்து சிரித்த கலைசெல்வன்..



“ அதுக்கு நான் என்னடா செய்வது… இன்னொரு பெண் குழந்தைக்கு உனக்கு ஆகும் என்று உன் அத்தை கிட்ட எவ்வளவோ பேசி தான் பார்த்தேன் தான் மாப்பிள்ளை.. ஆனா பார். உங்க அத்தை தான் ஒத்துழைக்கவில்லை..” என்று கலாட்டவாக பேச. பின் மாமன் மாப்பிள்ளை பேச்சுக்கள் கல கலத்து பின் தொழில் பற்றிய விசயங்கள் பேசி முடித்த பின்.

“அங்கு ஏதாவது பிரச்சனையாடா..? உண்மையை சொல். உன்னால் அங்கு இருக்க முடியலேன்னா அப்படி கஷ்டப்பட்டு எல்லாம் நீ அங்கு இருக்க வேண்டியது இல்ல மாப்பிள்ளை… நீ இங்கு வந்து விடு..” என்று தனக்கு தன் அக்காவின் வாழ்க்கையின் அர்த்ததோடு தன் மாப்பிள்ளையின் மன நிம்மதி தான் முக்கியம் என்பது போல பேசியவரின் பேச்சில் எப்போதும் போல்.. அந்த அன்பை உள்வாங்கி கொண்டவன்..

“ பெருசா எல்லாம் பிரச்சனை இல்லை மாமா.. தாத்தா எப்போதும் போல் நல்ல மாதிரி தான் இருக்கார்.. மத்தவங்க தான்.. அதுவும் இந்த சொத்து குறிப்பாக இந்த காலேஜ் ஸ்கூல்.. இது இவங்களுக்கு என்று இத்தனை வருடம் இருந்துட்டு மொத்தமா எனக்கு ஆனதால் சின்ன சின்ன பிரச்சனை செய்யிறாங்க.. அது எல்லாம் நான் சமாளித்து விடுவேன் மாமா.” என்று இருக்கும் நிலையை தன் மாமனிடம் சொன்ன லிங்கா..

திரும்பவும் பேசியை வைக்கும் முன் கடைசியாக.. “ நீ பெண் பெத்து வைத்து இருக்கலாம் மாமா.” என்று மீண்டும் அதையே லிங்கா சொல்லவும்.. கலைசெல்வனுக்கு லேசாக ஏதோ புரிவது போல் ஆனதில்..

சட்டென்று… “ உனக்கு அங்கு ஏதாவது பெண் பிடித்து இருக்கா லிங்கா.?” என்று கேட்டு விட்டார்..

தன் கேள்விக்கு பதில் அளிக்காது லிங்கா அமைதியாக இருப்பத்திலேயே கலைசெல்வனுக்கு புரிந்து விட்டது.. ஏதோ பெண்ணிடம் பையன் வகையாக மாட்டி கொண்டு விட்டான் என்று..தெரிந்த விசயத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.. அதனால் வந்த சிரிப்பில்..

“என்ன மாப்பிள்ளை உனக்கான பெண் இந்தியாவில் தான் இருக்கா போல.. அதனால் தான் இங்கு இருக்கும் எந்த பெண்ணையும் உனக்கு பிடிக்காது போயிடுச்சி… இதுல நீங்க பெண் பெத்து இருக்க வேண்டும் என்று என் கிட்ட சண்டைக்கு வந்து நிற்கிற..” என்று தன் மாப்பிள்ளையிடம் கல கலத்து கொண்டு இருந்த கலைசெல்வன்.

இப்போது தீவிரமான குரலில்.. “ எனக்கு பெண் இல்லை என்றால் என்ன லிங்கா. உனக்கு வர போகும் மனைவியை நான் பெண்ணா தத்து எடுத்துட்டு போயிடுறேன்..” என்று நெகிழ்ந்து போய் கூறியவரிடம்..

“உன் அக்கா இறப்புக்கு காரணமான இந்த வீட்டில் இருக்கும் பெண்ணா இருந்தாலுமேவா..? ” என்ற லிங்காவின் கேள்வியில் கலைசெல்வன் ஒரு நிமிடம் பேசாது மெளனம் காண்பித்தவர்..

பின் என்ன நினைத்தாரோ… “ நீயே அந்த வீட்டவன் தான்டா.. உன்னை மாப்பிள்ளையாக்கி கொண்டவன்.. அந்த வீட்டு பெண்ணை மகளா ஏத்துக்க மாட்டேனா என்ன..? என்று கேட்டவர்..

பின்.. “ இது தான் மனச போட்டு குழப்ப காரணமாடா… காதலுக்கு ஜாதி மதம்.. அந்தஸ்த்து இல்லாதது போல. பகையும் இல்ல மாப்பிள்ளை.. பெண் பிடித்து இருந்தால் வேறு எதை பத்தியும் யோசிக்காத.” என்று தைரியம் அளித்த பின் தான் பேசியை வைத்தார்..

அவர்களின் அன்றைய உரையாடல்கள்.. இருவருக்குமே ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது.. அதுவும் குறிப்பாக லிங்காவின் அன்னை செல்வ சங்கரியை பற்றியதான எண்ணம் தான் இருவருக்கும்.

இருவருமே செல்வ சங்கரியை நினைக்காத நாள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் … ஆனால் அந்த நினைப்பின் அடி ஆழம் வரை மூழ்காது சட்டென்று நடை முறைக்கு வந்து விடுவார்கள்..

ஆனால் இன்று விடுபடும் எண்ணம் இல்லாது .. செல்வ சங்கரியை பற்றிய தொடக்கம் முதல் முடிவு வரை நினைத்தனர்..

ஆம் லிங்காவின் அன்னையின் பெயர் செல்வ சங்கரி தான்.. கலைசெல்வத்தோடு இரு வயது தான் மூத்தவள் செல்வ சங்கரி.

லிங்காவின் அப்பா ஜெய பிரகாஷுக்கும் செல்வ சங்கரிக்கும் நடந்த திருமணம் முழுக்க முழுக்க பெரியவர்கள் பார்த்து வைத்து நடத்தியது தான்.

ஆனால் செல்வ சங்கரி மண மேடை ஏறிய போது. லிங்காவை அவள் கருவில் மூன்று மாதம் சுமந்து கொண்டு தான் ஜெய பிரகாஷ் கையில் தாலியை பெற்று கொண்டார் செல்வ சங்கரி..
 
Active member
Joined
May 11, 2024
Messages
73
Nice update mam.. linga mm nalla note pannure.. madhu thaan fix aagite finalaa.. Amma flashback.. aarambame shocking..
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Nice update mam.. linga mm nalla note pannure.. madhu thaan fix aagite finalaa.. Amma flashback.. aarambame shocking..
நன்றி பா.. தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்🙏💕
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
ஜெயப்பிரகாஷ் அப்பா ஆனதுக்கு பிறகே கணவனாகிருக்காரா
அடுத்த அத்தியாயம் நாளை தெளிவு படுத்தினார் விடுவேன் பா.. நன்றி🙏💕
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
270
அத்தை பொண்ணு ரொம்பவே அட்ராக்ட் பண்ணிட்டா.... 🤩🤩🤩🤩லிங்கா அத்தை பொண்ணை சைட் அடிச்சுட்டு மாமா பொண்ணு வேணுமா கல்யாணத்துக்கு.....😏😏🤪🤪

கலை செல்வன் அருமையான கேரக்டர்.... 😍
மருமகனோட குழப்பத்தைத் தீர்த்து வச்சு காதலுக்கு பச்சைக் கொடி கட்டிட்டாரு..... 😇

Fb ஆரம்பமே அதிரடி தான்......
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
அத்தை பொண்ணு ரொம்பவே அட்ராக்ட் பண்ணிட்டா.... 🤩🤩🤩🤩லிங்கா அத்தை பொண்ணை சைட் அடிச்சுட்டு மாமா பொண்ணு வேணுமா கல்யாணத்துக்கு.....😏😏🤪🤪

கலை செல்வன் அருமையான கேரக்டர்.... 😍
மருமகனோட குழப்பத்தைத் தீர்த்து வச்சு காதலுக்கு பச்சைக் கொடி கட்டிட்டாரு..... 😇

Fb ஆரம்பமே அதிரடி தான்......
நன்றி பா... நாளை சரியாக 5 மணிக்கு கொடுத்து விடுவேன் பா.. மீண்டும் நன்றி பா🙏💕
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,454
Lovely update
Mama marumagan jonding supe
Athai magal kavuthuta ha ha
நன்றி பா.. தொடர்ந்து படித்து கருத்துகள் சொல்லவும்.. நானுமே தினம் ஒரு அத்தியாயம் கொடுத்து விடுவேன் நன்றி பா🙏💕
 
Top