Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Prrithariyaa Pithana Podhum-12

  • Thread Author
அத்தியாயம்…12

லிங்காவின் அதிர்ந்த முகத்தை பார்த்த படி மது.. “ஆமா ஈஷ் அத்தான்.. அவள் உயிரை மட்டுமே பரிக்கப்படல.. அவள் மானத்தையும், ஒழுக்கத்தையுமே பறித்து விட்டது..

அவள் மும்பையிலேயே இருந்து இருந்தால் நல்லா இருந்து இருப்பாள்.. ஆனால் நான் இங்கு கூட்டிட்டு வந்து அவளை இங்கே தனியா விட்டுட்டு நான் போயிட்டு.. போனில் என்னை கூப்பிடும் போது அதை எடுக்காது.. அவளை தொலைச்சிட்டேன்.. ஈஷ் அத்தான்..

அவள் என்னை போனில் கூப்பிடும் போது எந்த பிரச்சனையில் மாட்டி இருந்தாளோ.. நான் போன் அட்டெண் செய்து இருந்தால்,” என்று பேசியவளின் வேதனை ததும்பிய முகத்தை லிங்காவால் பார்க்க முடியவில்லை..

“ஏய் மது என்ன இது..?” என்று கண்டிப்பது போலான குரலில் அதட்டி அவளின் கண்ணீரை துடைத்து விட்டாலுமே, லிங்காவுக்கு மது சொன்ன விசயம் தான் மனதில் இருந்தது..

மது சஜனா அழைப்பை ஏற்று இருந்து இருக்கலாம் என்று.. ஆனால் இப்போது அப்படி செய்து இருக்கலாம்… இப்படி செய்து இருக்கலாம் என்று யோசித்து என்ன பயன்…? இனி என்ன செய்ய வேண்டும்.. அது தானே விசயம்.. என்று இவன் எண்ணம் ஒடும் வேளை..

மது.. “இப்போ இறந்த பெண்ணோட பரிசோதனை ரிசல்ட் கூட. அந்த பெண் மூன்று முறை அபார்ட் செய்து இருக்கா.. பாய் பிரண்ட்.. அதுவும் ஒன்னும் இல்ல எண்ணிக்கையின் நீளம் நீண்டு இருக்கும் பாருங்க..” என்ற மதுவின் பேச்சில் சஜனாவுக்கு என்ன நடந்தது என்பதை லிங்காத்தினால் அனுமானிக்க முடிந்தது..

அதையே தான் மதுவும் கூறினாள்..

“அம்மா சொல்ல யாரோ பெண் என்று தான் கேட்டுட்டு இருந்தேன் ஈஷ் அத்தான்.. ஆனால் கடைசியா தான் சஜனா. ஸ்டேட் பஸ்ட்டா வந்து என்ன பிரயோசனம் என்று சொன்னாங்க.

அப்புறம் நானே என்ன ஆச்சி என்று பர பரப்ப கேட்டதற்க்கு நீ ஏன் இப்படி பதட்டப்படற். நீ பதட்ட படுவது போல அந்த பெண் ஒன்னும் அவ்வளவு ஒழுங்கு இடையாது..

ப்ளஸ் டூவில் இருந்தே ஆண் நண்பர்கள் ஒரு முறை அபார்ட் என்று செய்து இருக்கா…” என் கிட்ட என் அம்மா என் சகோதரியை பத்தி இப்படி சொல்றாங்க ஈஷ் அத்தான்..



ப்ளஸ் டூ. நான் அவள் கூட தான் இருந்தேன்.. நானாவது சர். இவங்களை பார்த்து நல்லா இருக்காங்கலே என்று சொல்லி இருக்கேன் ஈஷ் அத்தான்.. ஆனால் அவள் சீ என்ன பேச்சு என்று என்னை அதட்டுவா..

நான் கூட மும்பையில் இருந்த பெண்ணா என்று கேட்டு இருக்கேன்.. பார்க்க அவ்வளவு அழகு ஈஷ் அத்தான்.. எனக்கு தெரிந்து எத்தனை பையன்கள் அவள் பின்னாடி சுத்தி இருக்காங்க தெரியுமா..?

ஆனால் அவள் யாரையும் திரும்பி கூட பார்க்க மாட்டா. அவள் மொத்த கவனமும் படிப்பில் தான் இருந்தது.. அப்பட்டி பட்டவளை பற்றி என் கிட்ட சொல்றாங்க அவள் படிக்கும் போதே சரியில்ல… அதுவும் அபார்ஷன் .. என்னால மறுத்து சொல்ல முடியல.

என் கிட்ட சஜனா சொல்லி இருக்கா ஈஷ் அத்தான்.. நான் யார். என்ற விவரம் உங்க வீட்டில் தெரிய கூடாது.. அதே போல் உனக்கு தத்து பெண் என்ற விசயம் தெரிந்த விசயம் அவங்களுக்கு தெரிய கூடாது..

இப்படி எப்போதும் எந்த விசயம் செய்தாலும் மத்தவங்க பக்கமும் யோசிப்பா. ஆனா யாருமே அவளை பத்தி யோசிக்கல ஈஷ் அத்தான்.. யோசிக்கவே இல்ல.’ என்று கதறி அழுத்தவள் முன் ஏதோ நியாபகம் வந்தவளாக தன் பேசியில் தான் சேமித்து வைத்து இருந்த வீடியோவை..

லிங்காவிடம் காண்பித்தாள்.. அதில் ஒரு மத்திய வயதுடைய பெண்மணியும் அதே போல் மத்திய வயதுடைய ஆணும் அந்த வீடியோவில் இருந்தனர்.

பார்த்த உடன் தெரியவில்லை என்றாலுமே, அவர்களிடம் மீடியா கேட்ட கேள்வியின் மூலம் அவர்கள் யார்..? என்று லிங்காவுக்கு தெரிந்தது.

சஜனாவின் பெற்றோர்கள்.. அவளுக்கு மட்டுமா பெற்றோர்கள். என்றவனின் நினைகவுகளில் தன்னால் லிங்காவின் பார்வை பேசியில் இருந்து மதுவின் முகத்திற்க்கு சென்றது.

அதுவும் மீடியா அவர்களிடம் கேட்க பட்ட கேள்வியான. “ உங்க பெண்ணின் நடத்தை மும்பையில் சரியில்லை என்று தான் சென்னையில் படிக்க வைச்சிங்களா..

உங்களுக்கு தெரியுமா . உங்கள் பெண் அபார்ட் ஆன விசயம்..” என்று மீடியா கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அந்த பெற்றோர்கள் கூனி குறுகி போவதை அவர்கள் முகத்திலும் அவர்கள் உடல் மொழியை கவனித்ததிலுமே லிங்கா தெரிந்து கொண்டான்..

“என்னால ஒன்னும் செய்ய முடியல ஈஷ் அத்தான். அவங்கல பாருங்க எப்படி எப்படி. இது எல்லாமே என்னால தான் ஈஷ் அத்தான்.ஆ இன்னொன்னு முக்கியமான விசயம். பெரிய அக்காவுக்கு நிச்சயம் ஆனது என் கிட்ட சஜனா சொன்னா.

நானும் மாப்பிள்ளை போட்டோ எல்லாம் பார்த்தேன்.. என்னால அவங்க சந்தோஷத்தில் பங்கு பெற முடியாதுல. கொஞ்சம் ஏக்கமா தான் இருந்து ஈஷ் அத்தான்..

ஆனா கல்யாணம் நடக்கல.. சஜனா விசயத்தில் இந்த பெண் போல தான் அக்காவும் இருப்பாங்க என்று..”கதறியவளை அணைத்து இப்போதைக்கு தேற்றுவதை தவிர லிங்காவுக்கு வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.. ஆனால் செய்வான் கண்டிப்பாக சஜனாவுக்கு என்ன ஆனது.. கண்டிப்பாக கண்டு பிடித்து ஆக வேண்டும்..

போன உயிரை மீட்டு எடுக்க முடியாது. ஆனால் மானத்தை .. முடியும்.. அதோடு இறந்த சஜனாவுக்கு நியாயம் செய்ய வேண்டும். கூடவே உண்மை வெளி வந்தால் தான் இதோ தனக்கு தானே குற்றவுணர்வில் தத்தளித்து கொண்டு இருக்கும் இவளை வெளி கொண்டு வர முடியும் என்று நினைதவனுக்கு அப்போது தான் ஒன்று தோன்றியது..



“சஜனாவும் நீயும் ஐடியன்ட் ட்வீன்ஸா..?” என்று கேட்டான். அதற்க்கு ஒரு விரக்தி சிரிப்பை சிரித்து விட்டு.. “ அப்படி இருந்து இருந்தால், நான் அவளை இழந்து இருக்க மாட்டேனே ஈஷ் அத்தான்..

ஆம் ஒன்று போல இருந்தால், கண்டிப்பாக சஜனா இவர்கள் கல்லூரி, இவர்கள் பள்ளி என்று படித்து இருக்க முடியாதே..

“எங்களோட தோற்றத்தை பற்றி தெளிவு படுத்தி கொள்ள அவள் அப்பா பேசியில் இருந்து அவள் போட்டோவை என் இந்த அப்பா செல்லுக்கு அனுப்பினாள்..

நான் சொல்லும் நேரத்தில் அவள் அனுப்ப நான் பார்த்த உடனே அதை டெலிட் செய்து விட்டேன்.. அடுத்து தான் இந்த ப்ளானே போட்டது..”

ஆனைத்தும் நல்ல திட்ட மிடல் தான்.. அதுவும் யாருக்கும் தெரியாது.. யாரின் மனதையும் நோக அடிக்காது. என்று மதுவை விட சஜனாவின் பங்கு அதில் நிறைய இருப்பது மதுவின் பேச்சு மூலம் தெரிந்து கொண்டது..

இன்னொன்றும் நினைவு வர.. “ மது நீ உன் செல்லில் காண்பித்த அந்த வீடியோ சின்ன அத்தை மாமா பார்த்து இருப்பாங்க தானே.. அவங்களுக்கு சஜனா அப்பா அம்மாவின் முகம் தெரியும் தானே.

அப்போ சஜனா யார் என்றும் தெரிந்து இருக்கும் தானே..?” என்று தன் மனதில் எழுந்த சந்தேகங்களை ஒவ்வொன்றாக கேட்டு தெளிவு படுத்தி கொண்டு இருந்தான்..

ஆனால் இந்த லிங்காவின் சந்தேகத்திற்க்கு மது சொன்ன பதில்.. “எனக்கு தெரியல ஈஷ் அத்தான்.. நியாபகம் இருந்து அதை சொல்லாது போனாங்களா.. இல்லை வயதின் மாற்றத்தில் கண்டு பிடிக்க முடியலையா என்று எனக்கு புரியல..

இதை எப்படி அவங்க கிட்ட கேட்டு என்னால தெளிவு படுத்திக்க முடியும்.?” என்று கேட்க.

“ம்.. ஆமா..” என்றவன்..

“ சஜனாவை நீ தானே ப்ளஸ் ஒன் உன் பிரண்ட் சிஸ்டர் என்று நம்ம ஸ்கூலில் சேர்த்து விட்ட.. ஷவ் கிட்ட சொல்லி.. அந்த பெண் இறந்த பின் ஷ்வோ யாரோ சஜனாவை பற்றி உன் கிட்ட கேட்கலையா… “ என்று கேட்டதற்க்கு மது.

“ம் இது போல நிறைய பேர் சேர்ந்து இருப்பாங்க எல்லோரும் யார் யார் ரெக்கமெண்ட் என்று நியாபகத்தில் இருக்காது தானே ஈஷ் அத்தான்..” என்ற மதுவின் இந்த பேச்சை மட்டும் லிங்கா ஏற்று கொள்ளவில்லை..

ஒரே வீட்டில் இருக்கும் தங்கை உறவில் இருக்கும் பெண்.. ரெக்கமெண்ட் செய்தவளை எப்படி மறக்க முடியும்.. அதுவும் சாதாரணமாக படித்து அவள் கடக்கவில்லை.. மாநிலத்தில் முதலாவதாக வந்த பெண் பள்ளிக்கு பெருமை தேடி தந்தவள் எனும் போது..

இந்த பெண்ணை எப்படி அவ்வளவு ஈசியாக மறக்க முடியும்.. என்று பல சந்தேகங்கள் லிங்காவின் மனதில் உதித்தாலுமே, நேரம் நல்லியிரவு கடந்து வெகு நேரம் ஆகி விட்டதில்.

மதுவிடம்.. “ போய் தூங்கு மது.. ரொம்ப நேரம் ஆகி விட்டது.. என்று ஒரு குட் நையிட் சொல்லி அனுப்பி விட்டவன் தானும் தன் அறைக்குள் உறங்க சென்றான்..

சென்ற சிறிது நேரத்திற்க்கு எல்லாம் தன் அறை கதவை தட்டும் சத்தம் கேட்க எழுந்து கதவை திறந்தவன் கதவின் அந்த பக்கம் மது நின்று இருக்க..

“என்ன மது வேறு ஏதாவது முக்கியமானதை சொல்ல மறந்து விட்டாயா..?” என்று கேட்டான்..

“இல்ல அத்தான் இல்ல.. நான் இங்கு இருப்பது தெரியாம மாடி கதவை பூட்டிட்டாங்க..” எனும் போது லிங்காவின் முகம் யோசனைக்கு தாவியது..

புருவத்தை தடவி கொண்டே. “ லிப்ட் தான் இருக்கே அதுல போ..” என்று சொல்ல..

“ நான் அதை முயற்ச்சி செய்யாது இருப்பேனா.. அது என்ன என்று தெரியல ஒர்க் ஆகல..” என்று மது என்னவோ கூலாக தான் சொன்னவள்..

பின்.. “ உங்க கிட்ட அதோட வேறு கீ இருக்க ஈஷ் அத்தான்..” என்றும் கேட்டாள்..பாவம் இதை வேறு விதமாக போய் முடியும் என்று அவள் யோசனை செல்லவே இல்லை..

ஆனால் லிங்காவுக்கு மாடியின் கதவு மூடி இருக்கிறது என்று மது சொன்ன உடனேயே.. இதில் ஏதாவது வில்லங்கம் இருக்கா என்ற சந்தேகம் தான் அவனுக்கு எழுந்தது.

அதுவும் மது மின்தூக்கியும் வேலை செய்யவில்லை என்றதில் அவனின் சந்தேகம் உறுதியாகி விட்டது..

மீண்டும் மது.. “வேறு கீ இல்லையா ஈஷ் அத்தான்.” என்று கேட்க.

“ இல்ல ..” என்று தலையாட்டிவன் அறிவான்.. கண்டிப்பாக கீழ் தளத்தில் அனைவரும் இருப்பார்கள் என்று..

தான் மட்டுமே இருந்தால் பரவாயில்லை.. ஆனால் மது.. தன்னோடு மது பெயர் அடிப்பட்டால் அவனுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது.

அவன் மனம் அவனுக்கு தான் தெரியுமே. அவளை தான் திருமணம் செய்ய போவது அவனுக்கு உறுதியே.. மதுவுக்கு தன்னை பிடிக்கிறது.. தன் தொடுகை..தன் அணைப்பில் அடங்கியது..

தன் நெற்றி முதத்திற்க்கு கண் மூடி அமைதியாக நின்றது.. என்று எல்லா செயல்கள் மூலம் அவளுக்கு தன்னை பிடித்து இருக்கிறது என்று அவள் தனக்கு உணர்த்தி விட்டாள் தான்..ஆனால் அது அவளுக்கே தெரியுமா என்று அவனுக்கு தெரியவில்லை..

மதுவின் இந்த பிரச்சனையை தீர்த்து வைத்த பின் தன் காதல் சொல்லி மணந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தான்..

அதோடு மது ஏற்கனவே மன உளச்சலில் இருக்கிறாள்.. இதில் இதுவும் சேர்ந்து கொண்டாள் .. அந்த கவலையும் லிங்காவுக்கு..

தன் பேச்சுக்கு எதுவும் சொல்லாது ஏதோ யோசனையில் இருந்த லிங்காவை உலுக்கி.. “ என்ன ஈஷ் அத்தான் அப்போ நான் எப்படி கீழே போவது மணி வேற ஆகுது.. நான் தூங்கனும் ..



நாளைக்கு காலேஜ் வேற இருக்கு. அதுவும் இப்போ புதுசா நிர்வாகம் வேறு கை மாறி இருக்கு.. அவர் ரொம்ப ஸ்டிட் தெரியுமா.?” என்று சிறிது நேரம் இருந்த அந்த இறுக்கமான மனநிலையை மாற்ற வேண்டி மது கிண்டலாக பேச.

ஆனால் அதன் எதிர் ஒலி தான் லிங்காவிடம் இல்லை.. மது அவனையே பார்த்து கொண்டு இருந்தவள் பின் தன் பேசியை எடுத்து யாருமோ அழைப்பு விடுக்க முயன்றாள்..

ஆம் முயன்றாள் தான்.. ஆனால் லிங்கா அதற்க்குள் மதுவை தடுத்து நிறுத்தியவன்..

“ வேண்டாம்.. என் கெஸ் சரின்னா.. கொஞ்ச நேரம் கழித்தால் மாடி கதவும் திறந்து இருக்கும் லிப்ட்டும் ஒர்க் ஆகும்.. கூடவே அவங்க அவங்க அறையில் தூங்க வேண்டியவங்க அனைவரும் ஹாலில் நம் வரவுக்காக காத்து கொண்டு இருப்பாங்க.” என்று லிங்கா பேச பேச தான் மதுவின் கண்கள் விரிந்து அவன் சொல்ல வரும் சராம்சத்தை புரிந்து கொண்டவள்.. அதிர்ந்து போய் லிங்காவை பார்த்தாள்..

மதுவின் பார்வையில். “ இது மாதிரி நேரத்தில் தான் நாம தைரியமா இருக்கனும் மது.. யார் பேச்சையும் நாம நம்ம அறிவுக்குள் புகுத்தி கொள்ள கூடாது.. புரியுதா.? என்று கேட்டவனுக்கு புரியுது என்று தலையாட்டினாலும்.

மது. “ ஏன்..?” என்று கேட்டாள்..

“இது உனக்காக வைத்த பொறி இல்ல. எனக்காக வைக்கப்பட்டது.. “ என்று சொன்னவன் அவள் கை பிடித்து மாடியின் கதவை நோக்கி சென்றான்..

லிங்கா சொன்னது போல தான் இப்போது தாழ் போடாது இருந்தது.. அதே போல் தான் மின்தூக்கியும் வேலை செய்தது.. அனைத்தும் அவன் சொன்னது போல இருந்ததில் இருந்தே தெரிய வேண்டாம் அவன் கணிப்பு படி இருவரும் கீழ் தளத்திற்க்கு வரும் போது மொத்த குடும்பமும் இவர்களை வர வேற்க ஹாலில் காத்து கொண்டு இருந்தனர்..












 
Well-known member
Joined
May 12, 2024
Messages
330
Siva Prakash than girls ah thappa use panni miratti iruppar 😖😖😖
 
Member
Joined
May 11, 2024
Messages
83
அருமை... மது உங்க வீட்டு மிக்ஸர் மாமா எதுக்கு இருகார்...
 
  • Like
Reactions: grg
Top