Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi....18

  • Thread Author
அத்தியாயம்….18

மாலினியின் இந்த பேச்சை கேட்டு வசந்தி கோபம் படும் முன்பே அவரின் மகன் பிரதீப்புக்கு கோபம் வந்து விட்டது… அது என்னவோ பிரதிப்புக்கு மஞ்சுளாவை மனதில் கூட மரியாதை கொடுப்பதில் அவனுக்கு விருப்பம் கிடையாது..

காரணம் அவர்கள் பொருளாதார வசதியோ… இல்லை தன் தங்கை இடத்தில் வந்து இருக்கிறாள் என்ற இந்த இரண்டையும் தான்டி… அந்த இரண்டாம் தாரம்… இது என்னவோ… இரண்டாம் தாரம் கீழாக தான் அவன் மனது நினைத்தது…

அதனால் மாலினியின் இந்த பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்க தான் அவன் நினைத்தான்..

ஆனால் அதற்க்குள் துகிலனின் காலடி சத்தம் கேட்டதில், தன்னை அடக்கி கொண்டு இருந்து விட்டான்..

ஆனால் வசந்தி மகன் போல அமைதியாக எல்லாம் இல்லை… வசந்தி ஒரு சமயம் துகிலன் வருவதை கவனிக்கவில்லையோ.. இல்லை கவனித்தும் இது என் தாய் வீடு.. அதோடு இந்த வீட்டு பெண் என் வீட்டில் வாழ்கிறாள் என்ற மமதையோ.. தெரியவில்லை…

வசந்தி தைரியமாகவே …. “ இத்தனை எல்லாம் மரியாதை தெரிந்த உங்களுக்கு.. நீங்களும் மரியாதையா நடந்து கொள்ளனும் என்று தெரியவில்லையே….?” என்று கேட்டார்…

தன் சட்டையின் கை பகுதியை மேலே தூக்கி விட்ட வாறு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டு இருந்த துகிலன் அப்போது தான் மாலினியையும் ஷண்முகத்தையும் பார்த்தான்..

அவர்கள் இருவரும் கண்ணில் பட்டதுமே அவன் கண்களின் தேடல் மற்ற பக்கமும் சென்று பின் மீண்டும் தன் நடையின் வேகத்தை கூட்டி விடு விடு என்று நடந்து வந்த போது தான் மாலினி பேசியது.. அதற்க்கு வசந்தியும் பதில் கொடுத்தது..

இது எல்லாம் ஒரு சில நொடியில் நடந்து முடிந்து விட்டது.

மாலினியும் ஷண்முகமும் வசந்தியின் பேச்சில் என்ன நாங்க மரியாதை கொடுக்கல என்று கேட்க வரும் முன்பே துகிலனை அவர்கள் பார்த்து விட.

மாப்பிள்ளைக்கு மரியாதை தரும் பொருட்டு அமர்ந்து இருந்தவர் எழுந்து நின்றனர்..

துகிலன்.. “உட்காருங்க.. எதுக்கு எழுந்து நின்னுட்டு….” என்று சொன்னவன் அவர்கள் இருவரும் அமர்ந்த பின்பு தான் அவன் அமர்ந்தது.

இவர்களின் இந்த செயல் கூட வசந்திக்கு நடிப்பாக தான் தெரிந்தது.. காரணம் வீட்டு மாப்பிள்ளைக்கு மத்தியதர வர்க்கத்தில் கொடுக்கும் மரியாதையின் முறை அவருக்கு தெரியாததினால் கூட இருக்கலாம்..

கூட வசந்தி தானுமே சொந்தத்தில் திருமணம் முடித்து தன் மகளையுமே தன் அண்ணன் மகனுக்கு கொடுத்த பின் கூட துகிலனை தன் வீட்டு மாப்பிள்ளையாக பார்க்காது தான் தூக்கி வளர்த்தவனாக பார்த்ததினால் மாலினி ஷண்முகத்தின் இந்த மரியாதை அவர் கண்ணுக்கு நடிப்பாக தான் தெரிந்தது…

எடுத்த உடன் துகிலன் அமர்ந்ததுமே…. தன் மாமியார் மாமனாரை பார்த்து “ நானே மஞ்சுவை இன்னிக்கு கூட்டிட்டு வர நினைத்து இருந்தேன்… மார்னிங்க பேபியை வெளியில் கூட்டிட்டு போறேன்.. ஈவினிங்க அங்கு வரேன்….” என்று இருவரையும் பொதுவாக பார்த்து பேசியவன் முறை வைத்து எல்லாம் அழைத்து பேசாது பேசினான். இது எல்லாம் அவனுக்குமே புதியது தான்.. எடுத்த உடன் உறவு முறை வைத்து அழைத்து பேச தெரியவில்லை…

(ஆனால் மனைவிக்கு மட்டும் சில்க்கி என்று பெயரை வைக்க தெரியும்..)

வசந்திக்கோ மூக்கு உடைப்பட்ட ஒரு உணர்வு… மாலினி தன் பேச்சுக்கு பதில் கொடுக்கவில்லை… அதோடு மாலினியின் பேச்சுக்கு துகிலன் இசைந்தது என்று அனைத்தும் சேர்ந்து….

மீண்டுமே வசந்தி…. “எங்க குடும்பத்துக்கு மரியாதை கொடுக்க தெரியும்…” என்று விட்டார்…

துகிலன் வசந்தி முன்பு பேசியதே காதில் விழுந்தது தான்.. ஆனாலுமே மஞ்சுளாவின் அம்மா அப்பா சென்ற பின்.. அதை பற்றி தன் அத்தையிடம் பேசலாம் என்று நினைத்து இருந்தான்…

அது கூட வசந்தியின் மரியாதை பொருட்டு தான் தன் மாமியார் மாமனார் எதிரில் பேச கூடாது என்று இருந்தவனுக்கு, வசந்தியின் இந்த பேச்சில் துகிலன் நர்மதாவை தான் பார்த்தது.

நர்மதாவுமே தன் அன்னையின் இந்த வேறு பட்ட பேச்சை கவனித்தாள் தான்… அவளுமே துகிலன் நினைத்தது தான் நினைத்தாள். வந்தவர்கள் போகட்டும் என்று…

மீண்டுமே வசந்தி பேச நர்மதாவும் தன் அன்னையை அடக்க நினைக்கும் சமயம் துகிலனும் பார்க்க.

“மாம் என்ன மாம்.. இது என்ன பேச்சு.?” என்று தன் அன்னையை நர்மதா கண்டித்தாள்..

அது வசந்திக்கு இன்னுமே மரியாதை குறச்சலாக போய் விட்டது போல.. ஆனால் இதையுமே தன் பேச்சுக்கு சாதகமாக மாற்றி கொண்டவராக..

“இது தாங்க. இது தான் என் மகள் பாருங்க….அவள் விட்ட வாழ்க்கையை வாழும் உங்க பெண்…” என்று வசந்தி சொல்லும் போதே அனைவரையும் விட மாலினி அமர்ந்து இருந்தவர் சட்டென்று எழுந்து நின்று விட்டார்…

எழுந்து நின்றவரின் முகத்தில் அப்படி ஒரு கோபத்தின் சாயல்.. இந்த அதிகப்படியா கோபத்தினால் மாலினிக்கு மூச்சு வாங்கியது தான்…

ஆனாலும் துகிலனை பார்த்து…. “ நான் என் பொண்ணை உங்களுக்கு தான் கல்யாணம் செய்து இருக்கேனுங்க…. உங்களுக்கு டைவஸ் ஆகிடுச்சி என்று தெரிஞ்சி தான் நான் பெண் கொடுத்தேன்… அது கூட உங்க பணத்தை பார்த்து எல்லாம் இல்லேங்க….”

மாலினி கோபமாக இருந்தாலுமே துகிலனிடம் நிதானமாக அழுத்தமாகவும் தான் தன் பேச்சை தொடங்கினார்..

ஆனால் கடைசி பேச்சு பேசும் போது மாலினியின் கண்கள் கலங்கி விட்டது…. அதை பார்த்த நொடி… துகிலன்..

“அத்தை என்ன இது.. அவங்க ஏதோ தெரியாது பேசுறாங்க….” என்று முன் அழைக்க தெரியாத அந்த உறவு முறை அழைப்பானது.. தன் மனைவியின் அம்மா கண்கலங்கியதில் வந்து விட்டது.

ஒரு நொடியில் துகிலன் மாலினியை அத்தை என்றும், வசந்தியை அவங்க என்றும் மாறி விட்டது.. இதை யார் கவனித்தார்களோ இல்லையோ… வசந்தி கவனித்து விட்டார். அதோடு மாலினி கண்கலங்குவது கூட அவர் கண்ணுக்கு நடிப்பாக தான் தெரிந்தது.

அதில் இன்னுமே பேச ஆரம்பிக்கும் முன்பே துகிலன் அதை உணர்ந்து நர்மதாவை பார்த்து…

“நம்மூ…” என்று அவன் அழுத்தி அழைத்ததில், தன் அண்ணனை பார்த்த நர்மதா.

“என்ன சண்டையை வேடிக்கை பார்த்துட்டு இருக்க… உங்க அம்மாவை கூட்டிட்டு போ…” என்று சொன்னாள்..

பிரதிப்புக்கும் தன் அன்னையை அவமதித்தது போல் தான் ஆனது.. அதில் நர்மாதாவிடம்…. “உனக்கும் அவங்க அம்மா தான்.. அது நியாபகத்தில் இருக்கட்டும்..” என்று சொன்னவன் தன் அன்னையை அழைத்து போகும் போது தன் மனைவியை பார்த்து முறைத்து விட்டும் சென்றான்…

இப்போது மீண்டும் துகிலன்.. “ அத்தை அவங்க தெரியாது பேசுறாங்க. இதை நீங்க பெருசா எல்லாம் எடுத்துக்க வேண்டாம். நான் ஈவினிங்க உங்க வீட்டிற்க்கு வந்து மஞ்சுவை அழச்சிட்டு வரேன்…” என்று சொன்னான் தான்.

ஆனால் மாலினிக்கு இது மட்டும் போதாதே.. வரும் போதே வர வேற்ப்பை பற்றி சம்மந்தி வீட்டில் பேச வேண்டும் என்ற முடிவோடு தானே அவர் இங்கு வந்தது… மாலினியின் இந்த முடிவானது வசந்தியின் இந்த பேச்சில் இன்னுமே உறுதி ஆயிற்று… என்ன ஆனாலுமே பரவாயில்லை. சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு கேட்க வேண்டியதை கேட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று மாலினி முடிவு எடுத்து விட்டார்..

அதனால் தான் பேச சொல்ல வந்ததை சொல்லி விட்டார்… “ நீங்க டைவஸ் ஆனவரு என்று எனக்கு தெரியும்.. ஆனா முதல் மனைவி இந்த பெண் என்பது எனக்கு சத்தியமா தெரியாது…” என்று நர்மதாவை காட்டி சொல்லி விட்டார்..

அந்த சொல்லானது துகிலனையும் நர்மதாவையும் ஒரு சேர தாக்கியது.. அதில் இருவரும் ஒன்று போல.

“தெரிந்து இருந்தால் பெண் கொடுத்து இருக்க மாட்டிங்கலா….?” என்று இருவரும் ஒன்று போல ஒரே சமயத்தில் கேட்ட அந்த ஒற்றுமையில் மாலினி தான் அடுத்து பேச வேண்டியதை கூட மறந்து அவர்களை பார்த்திருந்தார்..

மாலினியின் மனதில் குடையும் விசயங்களில் இதுவுமே ஒன்று… தோற்றம் பணம் அழகு.. இதை எல்லாம் விட மாலினியை யோசிக்க வைக்கும் விசயம்… இவர்கள் இருவரில் இருக்கும் இது போலான செயல் பேச்சுக்கள் தான்…

இருவரும் சொல்லி வைத்து தன்னிடம் இந்த கேள்வியை கேட்கவில்லை. நான் இது போலான கேள்வியை கேட்பேன் என்பதும் அவர்களுக்கு தெரியாது… ஆனால் தான் கேட்ட உடன் எப்படியான் கேள்வி இப்படி ஒற்றுமையாக கேட்டதில், மாலினியின் மனம் மிக சஞ்சசத்திற்க்கு ஆளானது.

அதில் தான் மகளிடம் அத்தனை முறை சொல்லி விட்டு வந்த. என் மகள் வாழ்க்கை நான் நிதானமாக தான் பேசுவேன் என்பதை மறந்து…

“கண்டிப்பா நான் என் பெண்ணை உங்களுக்கு கொடுத்து இருந்து இருக்க மாட்டேன்…” துகிலனை பார்த்து சொல்லி விட்டார்.

இது சொல்லாது மாலினி வர வேற்ப்பை பற்றி பேசி இருந்தால் கண்டிப்பாக துகிலன் எத்தனை வேலைகள் இருந்தாலுமே நடத்தி இருந்து இருப்பானோ என்னவோ…

ஆனால் இதை சொன்னதுமே துகிலனின் முகம் சட்டென்று கோபத்தை பூசிக் கொண்டது… அவன் கோபமாக இருப்பது அவன் வீட்டவர்களுக்கு தெரிந்தது….

பாவம் மாலினிக்கும் ஷண்முகத்திற்க்கும் தான் தெரியவில்லை… காரணம் அவன் கோபத்தை அவன் வெளிப்படையாக துகிலன் தன் மாமியார் மாமனாரிடம் காட்டவில்லை..

அதனால் தான் மாலினி சொல்ல வேண்டிய விசயத்தை சொல்லாது இது என்ன பேச்சு என்று நினைத்த ஷண்முகம் தான்..

“வந்த விசயத்தை விட்டுட்டு வேறு என்ன என்னவோ பேசிட்டு இருக்கோம்…. என்று பொதுவாக சொன்னவர்.

வீட்டின் மூத்தவர்கள். அதோடு கல்யாணம் பேசும் போது இவர்கள் தானே கல்யாணம் முடிந்து வர வேற்பு வைக்கலாம் என்று சொன்னது என்று நினைத்து ஷண் முகம் அவர்களிடமே…

“இல்ல நீங்க கல்யாணம் முடிந்து ரிசப்ஷன் வைக்கலாம் என்று சொன்னிங்க…. எப்போ என்று சொன்னால் எங்க உறவுகளை கூப்பிட எங்களுக்கு வசதியா இருக்கும்…” காலையில் இங்கு கிளம்பும் போது மனைவி மகளிடம் இப்படி தான் கேட்பேன் என்று சொன்னதை அவர் கேட்டதினால். அப்படியே சொன்னார்.

துகிலனுக்கு புரிந்து விட்டது.. தங்களின் திருமணத்தை உறுதிப்படுத்த வேண்டி தான் வர வேற்பு பற்றி பேசுகிறார்கள் என்று… அது தன்னை அவர்கள் சந்தேகப்படுகிறார் என்பதை தானே சொல்கிறது என்ற கோபம்… கூட எங்க கல்யாணத்தை நான் பதிவு தானே செய்து இருக்கேன்.. அப்போது கூட இவர்களுக்கு என் மீது நம்பிக்கை வரவில்லையா…? என்ற ஆத்திரத்தில்..

துகிலன் அவன் பெற்றோர் பதில் அளிக்கும் முன் … “ம் கண்டிப்பா ரிசப்ஷன் வைக்கிறேன்… அப்போ நான் ரிசப்ஷன் முடிச்சிட்டே மஞ்சுளாவை எங்க வீட்டிற்க்கு அழச்சிக்கிறேன்..” என்ற துகிலனின் இந்த பேச்சை கோபம் என்று கூட எடுத்து கொள்ளாது பாவம் அப்படியே ஏற்று மகிழ்ச்சியுடன் தான் மஞ்சுளாவின் பெற்றோர்கள் அங்கு இருந்து சென்றது..

ஆனால் மகனின் கோபம் அங்கு இருந்தவர்களுக்கு தெரிந்தது..

கனக சபை…. “துகிலா எப்போ இருந்தாலுமே ரிசப்ஷன் வைத்து தானேப்பா ஆகனும்.. அதை தானே அவங்க சொல்லிட்டு போறாங்க… அதுக்கு எதுக்கு நீ இப்படி கோபப்படுற…” என்று கேட்டதற்க்கு துகிலன் பதில் சொல்லவில்லை… காரணம் அவன் கோபமாக இருந்தும் அவன் எடுத்து எரிந்து பேசாது அவர்களிடம் பேச காரணம் அவர்கள் மஞ்சுளாவின் அம்மா அப்பா என்பதே… அதே காரணத்தினாலேயே தன் தந்தை சொன்னதற்க்கு அவர்களை பற்றி கோபமாக பேசாது இருந்தான்.

ஆனால் துர்கா. “ அவங்க நம்ம துகிலாவையும் நர்மதாவையும் சேர்த்து வைத்து சந்தேகம் பட்டுறாங்க… அது உங்களுக்கு புரியலையா…?” என்று கோபமாக கேட்டார்..

‘இப்படி ஈஷிக்கிட்டே இருந்தா யாரு தான் சந்தேகப்பட மாட்டாங்க…?.’ இப்படி நினைத்தது சாட்சாத் நம் வைஷ்ணவி தான்…இத்தனை நேரம் ஏதாவது காரணம் கிடைக்கும் நாம் பேசலாம் என்று காத்து கொண்டு இருந்த வைஷ்ணவிக்கு ஆரம்பம் துகிலன் மஞ்சுளாவின் அப்பா அம்மாவுக்கு ஆதரவாக நர்மதாவின் அம்மாவை… வைஷ்ணவியை பொறுத்த வரை வசந்தி நர்மதாவின் அம்மா. அவள் அம்மாவை எதிர்த்தது நர்மதாவையே அடக்கியது போல் தான் மனதில் சந்தோஷப்பட்டு கொண்டாள்..

ஆனால் அடுத்து மாலினி பேசியதும்.. அதற்க்கு துகிலனின் கோபத்தையும் பார்த்து… அய்யோ என்ன திரும்ப கதை மாறுது என்பது போல் தான் நினைத்தாள்.. ஏதாவது வாயை திறந்து பேசலாம் என்று பார்த்தால், விக்னேஷ் அவள் பக்கத்திலேயே அமர்ந்து இருந்தவன் வாயை திறந்தால் உன்னை கொன்னே போட்டு விடுவேன் என்பது போல பார்த்து கொண்டு இருக்கும் சூழல் அவளுக்கு..

இப்படி அவர் அவர் சூழலுக்கும் பேச்சுக்கும்… வர வேற்ப்பு வைக்காது தள்ளி போக… முறையாக ஜனித்த ஒரு உயிரை முறையற்று ஜனித்தது போலான ஒரு பேச்சை மஞ்சுளா கேட்கும் சூழலுக்கு ஆளாகி விட்டாள்…






 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
112
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
அப்ப மஞ்சு பிரக்னட்டா? கடவுளே இந்த மிடில்கிளாஸ் லைஃப் பத்தி இவுனுக்கு எப்பதான் தெரியவருமோ?🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ நாக்குங்கிற தேள்கொடுக்கை வச்சுகிட்டு அக்கம்பக்கம் கொட்டி கொட்டி ஜீவனையே உறிஞ்சு எடுக்கறதை😔😔😔😔.
 

grg

Active member
Joined
Oct 18, 2024
Messages
96
😍😍😍
அவர் அவருக்கு அவர் அவர் ஞாயம்..... துகிலன் மஞ்சுவின் மன நிலையையும் யோசிக்கலாம்....
மஞ்சு கர்ப்பமா.... துகிலன் என்ன செய்ய போகிறான்.... Nice epi
Waiting for next ud mam❤️❤️❤️
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
157
ஆரம்பம் எல்லாம் நல்லா தானடா பேசிட்டு இருந்த..... 😬😬😬😬😬
எப்போ மத்தவங்க மனசை புரிஞ்சிக்கப் போற 😡
இவனுக்கு அவங்க வீட்டு ஆளுங்களையே தெரியாது மாமனார் மாமியார் கஷ்டமா தெரியப் போகுது.... 😤

வீம்புக்குனு ரிஸப்ஷன் வைக்காம மஞ்சுவை அங்கேயே விட்டுட்டான் போல.....🥶🥶🥶🥶

இருக்குற பிரச்சனையில குழந்தை வேற வரப்போகுது மஞ்சு எவ்வளவு பேச்சு வாங்குவாளோ 😐😐😐
 
Member
Joined
Mar 18, 2025
Messages
28
Ithil Manchuvaith thavira ellorukkum avar avar niyaam.
Paavam Manchu.
Matra vidayaththil sariyaaka nadakkum narmathaavum ingku ethuvum pesavillai.
Maalili sonnathu sari.
Kalakam vanthaalthaan niyaam pirakkum.
 
Well-known member
Joined
May 24, 2024
Messages
229
Adeii pithiyakara business la periya ala iruntha pathathu
Ulagam triyala unaku
Randanthaaaram ngeathu suthi irukavanga sonthakaranha vaiku aval
Nee periya apatakara irukalam ithu puriyalaye
Manju pregnent pola
HOom
Semmantham vathu perusa senju en pondati thanu ooruku jollu
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
286
Manju parents oda kavalaiyum nyayam thane… Thugilan ku ivvalavu kowam thevala…
Adhenna last la oru ikkanna
 
Top