Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi....20

  • Thread Author
அத்தியாயம்….20

எழுந்து அமர்ந்த மஞ்சுளாவின் கை தன்னால் அவளின் வயிற்றின் மீது தான் படிந்தது… என்னவோ இப்போதே குழந்தையின் இதய துடிப்பை அவளின் உள்ளங்கை உணர்ந்தது போலான ஒரு உணர்வு அவளுக்கு…

இத்தனை நேரம் இருந்த சோர்வு, பயம், பதட்டம் அனைத்தும் மறைந்தது போல் சடுதியில் எல்லாம் மறைந்து மாயமானது போல் அவள் மனது உணர்ந்தாள்..

இத்தனை நாளாக சோகத்தை பூசிக் கொண்டு இருந்த அவளின் முகம் சடுதியில் புன்னகை வந்து ஓட்டி கொண்டது…

தன் உலகில் சஞ்சரித்து கொண்டு இருந்ததினால் கூடத்தில் அவளின் அத்தை அடுத்து பேசிய பேச்சான….

“இன்னிம் காலம் தாழ்த்தாதே அண்ணி.. மஞ்சு கிட்ட கேட்டு அது தான்னா…. உங்க சம்மந்தி வீட்டிற்க்கு போன் செய்து உடனே இந்த விசயத்தை சொல்லிடுங்க.. அண்ணனை விட்டு நேரிடையா மாப்பிள்ளை கிட்ட சொல்ல சொல்லுங்க.. நம்ம மஞ்சு பொண்ணே போன் செய்து அவ புருஷன் கிட்ட சொல்லுவா தான்..

ஆனா அவள் இங்கு இருக்கும் போது நமக்கு முதல்ல தெரிந்த விசயத்தை முறையா சொல்றது தான் மரியாதை…. “ என்று சொன்ன சுப்பம்மா..

விடைபெறும் போது கூட… “நேரம் தாழ்த்தாதிங்க அண்ணி.. அண்ணன் கடைக்கு தானே போய் இருக்கார்… வீட்டிலேயே இது போல குழந்தை உருவாகி இருக்கா என்று பார்க்க முடியுமா… அதே மெடிக்கல் ஷாப்பில் இருந்து அண்ணனை வாங்கிட்டு வர சொல்லு… திரும்ப சொல்றேன் அண்ணி… எது இந்தாலுமே சீக்கிரம் சம்மந்தி வீட்டுக்கு சொல்லுங்க… இவளையுமே அவள் புகுந்த வீட்டிற்க்கு அனுப்பி வைங்க..

குழந்தை உண்டாகி இருந்தா அவங்களுமே வரப்வேற்பை காலம் தாழ்த்தாம வெச்சிடுவாங்க.” என்ற அத்தையின் பேச்சு எதுவும் அறையில் இருந்த மஞ்சுளாவின் காதில் விழவில்லை.

மஞ்சுளாவுக்கு சின்ன குழந்தை என்றால் அத்தனை பிடிக்கும்.. அதுவும் அவளின் அக்கா தீஷாவை தாய் வீடான இங்கு தானே பிறந்தாள்…

சின்ன சின்ன கால் கை. மெத்து மெத்தன்ற குழந்தையின் உடல் தொட்டு தொட்டு பூரித்து போவாள்..

அப்போது எல்லாம் மாலினி… “ என்ன இது குழந்தையை தூங்க விடாது தொட்டுட்டே இருக்க.. போ போய் படிக்கும் வேலையை பாரு… பப்ளிக் எக்ஸாம்.. அது உனக்கு நியாபகம் இருக்கா…? ” என்று அதட்டுவார்..( அப்போது மஞ்சுளா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள்…)

அதற்க்கு . “போம்மா சும்மா சும்மா. என்னை பாப்பா கிட்ட விட மாட்டேங்குற… போங்க எனக்கு பாப்பா வரும் பாருங்க. அப்போ உங்களை யாரும் தொட கூட விட மாட்டேன் போங்க…” என்று சொன்னவளின் பேச்சில் மாலினி அவள் தலையில் கொட்டி…

“போடி என்ன பேசுறது என்று கூட விவஸ்த்தை இல்ல….” அறியாத வயதில் தெரியாது பேசினாலுமே, அனைவருக்குமே குழந்தை என்றால் பிடித்தம் தான். ஆனால் அப்போதே அந்த குழந்தையை அன்னையாக மடி ஏந்த துடித்தவள் மஞ்சுளா..

அதனால் தானோ என்னவோ… துகிலனை திருமணம் செய்ய முடிவான பின் நர்த்தகனை தன் மகன் என்று அவள் மனது உடனே ஏற்று கொண்டது.. ஆனால் பாவம் இவள் நான் தாயாக இருக்கிறேன் என்று சொன்னவளிடம் அந்த குழந்தையை தரவில்லை…

தன் வயிற்றை தடவி விட்டு கொண்டவள்…

“தீஷாவை பிரிச்சிட்டாங்க.. நர்த்தகன் என் கிட்ட பேச கூட விட மாட்டேங்குறாங்க. ஏன்னா எனக்கு அந்த குழந்தை மீது உரிமை கிடையாது.. ஆனா நீ நீ எனக்கு உரிமையான குழந்தை… என் கிட்ட இருந்து உன்னை யாராலுமே பிரிக்க முடியாது டா செல்ல குட்டி….” என்று கொஞ்சி கொண்டு இருக்க.

மாலினி அப்போது தான் மகளின் அறைக்கு வந்தார்.. வந்தவரின் பார்வையில் அந்த காட்சியும் விழுந்தது.. மகளின் முகத்தையும் பார்த்தார்.. முன் இல்லாத ஒரு மகிழ்ச்சி மகளின் முகத்தில் இருப்பதை பார்த்தவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி…

அடுத்து அடுத்து அனைத்துமே சரியாகி வருவது அவருக்கு அத்தனை நிம்மதியை கொடுத்தது…

சுப்பம்மா சொன்னது போல கணவனிடம் சொல்லி மெடிக்கல் ஷாப்பில் அந்த கர்பம் உறுதி செய்பவை வாங்கி வர சொல்ல வேண்டும் தான். பின் சம்மந்தியிடமும் சொல்ல வேண்டும் தான். ஆனால் அதற்க்கு முன் மகளிடம் கேட்டு தெளிவு படுத்தி கொண்டு இது அனைத்தும் செய்ய நினைத்தவருக்கு தான் கேட்காமலேயே அவருக்கு உறுதியாகி விட.

மகளின் அருகில் சென்றவர்.. “ எத்தனை நாள் தள்ளி போய் இருக்குடா…?” என்று கேட்ட அன்னையிடம் மஞ்சுவினால் உடனே பதில் சொல்ல முடியவில்லை..

ஒரு வித கூச்சம் ஓட்டிக் கொண்டது.. பன்னிரெண்டாவது படிக்கும் போது என் குழந்தை நான் கொடுக்க மாட்டேன் என்ற பெண் தான்…

ஆனால் அது விவரம் புரியாத வயது அது… குழந்தை பிறப்பு அது பற்றியதான தெளிவு அப்போது மஞ்சுளாவிடம் கிடையாது..

ஆனால் இப்போது… மெல்ல கூச்சத்துடன்.. “ கல்யாணத்துக்கு முன் மென்சஸ் ஆனது தான் ம்மா அப்புறம் ஆகல..” அதை சொல்லும் போதே கணவன் திருமணம் ஆன அன்றே தான் தூக்க கலக்கமாக இருக்கும் போதே தன்னை அபகரித்து கொண்டது நியாபகத்தில் வந்து விட்டது…

மாலினியுமே அதற்க்கு அடுத்து எதுவும் கேட்டு மகளை தொந்திரவு படுத்தாது…

“அப்பா கிட்ட அந்த கிட் வாங்கிட்டு வர சொல்றேன் டா…” என்று மகிழ்ச்சியுடன் கதவு வரை சென்றவரிடம் மஞ்சுளா..

“ம்மா ஆஸ்பிட்டல் போயே கன்பாம் பண்ணலாமே….” இதை சொல்லும் போது இன்னுமே அன்னையை முகத்தை பார்க்க முடியாது அங்கும் இங்கும் பார்த்து கொண்டு சொல்லி முடித்தாள்..

“ம் சரிம்மா.. .” என்று சொன்னவன்..

“ உன் அக்கா…” என்று ஆரம்பித்து விட்டு பின் அதை சொல்லாது..

ஜெயமாலினிக்கு பார்த்த அந்த மருத்துவனையிலேயே பார்த்து விடலாம். ஆரம்பத்தில் இருந்து அங்கேயே பார்க்கலாம்.. முதல் பிரசவம் தாய் வீட்டில் தானே செய்ய வேண்டும்..

அது நல்ல மருத்துவமனை… என்ன ஒன்று சென்னையை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும்… ஆனால் மற்ற மருத்துவமனையை போல எடுத்த உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்க மாட்டர்கள்.. அதனால் தான் மூத்த பெண்ணுக்கு தள்ளி இருந்தாலுமே அங்கு பார்த்தது. அது தரமான மருத்துவமனையும்.. மஞ்சுளாவுக்குமே அங்கேயே பார்த்து விடலாம்.. அனைத்துமே முடிவு செய்த மாலினி.

உடனே அந்த மருத்துவமனையில் இருக்கும் மருத்துவரிடம் முன் பதிவும் வாங்கி கொண்டார்… நாளையே முன் பதிவும் கிடைத்து விட்டது..

கடைக்கு சென்ற ஷண்முகம் வீடு வந்ததும் இந்த விசயத்தை சொல்ல.. அவருமே மனைவி நினைத்ததை தான் நினைத்தார்.. இனி அனைத்தும் சரியாகி விடும் என்று…

பின் ஷண்முகம். “ மாப்பிள்ளைக்கும் சம்மந்தி வீட்டிற்க்கும் சொல்லனும் தானேம்மா..” என்று கேட்ட கணவரிடம் மாலினி..

“ஆஸ்பிட்டல் போய் கன்பாம் பண்ணிட்டு சொல்லலாமுங்க….” என்று சொன்ன மாலினி.

“ஏதாவது ஸ்வீட் செய்யலாமுங்க..”

“முதல்ல கன்பாம் பண்ணலாம் மாலு… நீ கொஞ்சம் அமைதியா இரு…” ஷண்முகம் கை பிடித்து உட்கார வைத்தார்..

அறையில் இருந்த மஞ்சுளாவுக்கும் தந்தை அன்னையிடம் சொன்னது அனைத்தும் கேட்டது தான்… இப்போது அவளுக்குமே கணவனிடம் சொல்ல வேண்டும்…

அன்னையிடம் மருத்துவமனைக்கு போய் உறுதி படுத்தி கொள்ளலாம் என்று சொன்னாலுமே, அவளுக்கு உறுதி தான் . இது குழந்தை என்பதில் ஒரு துளி சந்தேகம் இல்லை அவளுக்கு…

அதனால் இப்போதே கணவனிடம் சொல்லலாமா வேண்டாமா..? என்று இரண்டு தரப்பாக யோசித்து யோசித்து கடைசியில் தன் வெட்கம் பயம் அச்சம் அனைத்தையும் விட்டு விட்டு.. தன் கணவனுக்கு அழைத்து விட்டாள்.. அதுவும் வீடியோ கால்…

மஞ்சுளா துகிலனை அழைக்கும் போது அவன் சென்னையிலேயே இல்லை… வெளி மாநிலத்தில் இருக்கும் அவர்களின் இன்னொரு பிரான்ச் ஒட்டல் அறையில் தான் நர்மதாவோடு இருந்தான்…

அங்கு நீச்சல் குளத்தில் ஒரு மூன்று வயது பெண் குழந்தை மூழ்கி இறந்து விட்டாள்..

அதனால் நர்மதாவும் துகிலனும் உடனே டெல்லி வர வேண்டியதான நிலை.. அந்த குழந்தை இறப்புக்கு ஓட்டல் நிர்வாகத்தின் மீது ஒரு தவறும் கிடையாது..

நீச்சல் குளத்தில் இத்தனை வயதுடைய. இத்தனை உயரம் இருப்பவர்கள் என்று சுற்றி எல்லை கோடுகள் வரைந்து தான் இருக்கும்..

அதோடு அந்த நீச்சல் குளத்தை சுற்றி பாதுகாப்பு வளையமும் கூடவே இருக்கும்.. அனைத்தையும் விட முக்கியமான விசயமாக.. குழந்தைகளை குழந்தைகளின் பெற்றோர் இல்லை யாராவது ஒரு துணை இல்லாது அங்கு அனுமதிக்க மாட்டார்கள்…

இதை கண்காணிக்கவே இரண்டு ஆட்களை நியமித்து உள்ளது ஓட்டல் நிர்வாகம்.. இது அந்த பிரான்ச் மட்டும் இல்லாது அனைத்து பிரான்சும் கடை பிடிக்கும் பொதுவான விதி முறை..

ஆனாலுமே பெற்றோர் உடன் இருந்தும்.. மூன்று வயது குழந்தையை தாங்கள் வரைந்து.. இங்கு இத்தனை அளவு ஆழம் என்று எழுதி வைத்துமே பாதுகாப்பு வளையம் இல்லாது குழந்தையை இறக்கி விட்டதோடு… பெற்றோர்கள் கவனிக்காது விட்டால் ஓட்டல் நிர்வாகம் என்ன செய்யும்..

இருந்தும். இருவருமே சென்று அனைத்து சட்டம் சார்ந்த பிரச்சனையை முடித்து விட்டு அப்போது தான் இருவரும் அந்த அறைக்குள் வந்தது..

வந்ததுமே… நர்மதா தான்.. “ துகி நீ புட் ஆர்டர் செய்.. நான் பிரஷ் ஆகிட்டு வரேன்..” என்று சொல்லி அவளுக்கு என்று அந்த ஓட்டலில் இருக்கும்.. துகிலனின் பக்கத்து அறைக்கு சென்று குளித்து முடித்த நர்மதா இரவு உடையான கீழ் உடை முட்டிக்கு கீழ் மட்டுமே வரும்… ஷாட்ஸ்.. மேல் உடையாக கை இல்லாது சீவ்லஸ் பனியனும் அணிந்து கொண்டு மீண்டும் துகிலன் அறைக்கே வந்து விட்டாள்..

நர்மதா சொன்னது போல துகிலனும்… உணவை ஆர்டர் செய்து விட்டு குளித்து விட்டு அவனுமே படுத்து உறங்க ஏதுவாக இரவு உடையை தான் அணிந்து கொண்டான். என்ன ஒன்று நர்மதா போல் கீழ் உடை அரையாக இல்லாது முழுதாக நீண்ட கால்சட்டையும், அவனுமே மேல் உடையாக கட் வைத்த பனியனுமே அணிந்து கொண்டு இருந்தான்.

இருவருக்குமே இது போலான உடையில் பார்ப்பது புதியது இல்லையே… அதனால் சாதாரணமாக தான் உணவு வந்த பின் இருவரும் ஒன்றாக சாப்பிட்ட பின்..

அடுத்தது ஓட்டல் நிர்வாகத்தை பற்றியது பற்றி இருவரும் பேசிக் கொண்டு இருந்த சமயத்தில் தான் நம் மஞ்சுளா துகிலனுக்கு வீடியோ அழைப்பு விடுத்தது…

அப்போது துகிலன் தன் கை பேசியில் தான் நர்மதாவுக்கு ஏதோ காட்டி கொண்டு இருந்ததினால், உடனே தன் மனைவியின் அந்த அழைப்பை பார்த்தான்.. அதுவும் வீடியோ காலில் அழைத்தவளின் அந்த அழைப்பை உடனே ஏற்காது அதையே பார்த்து கொண்டு இருக்க்ச்..

துகிலன் தன் கை பேசியில் நர்மதாவிடம் தானே காட்டி கொண்டு ஏதோ பேசிக் கொண்டு இருந்தான். அதனால் நர்மதாவுமே மஞ்சுளா அழைப்பை பார்த்தாள்… அதுவும் சில்க்கி என்று பெயரோடு பதிவு செய்து வைத்து கொண்டு இருந்ததை பார்த்தவள் துகிலனை பார்த்து ஒரு நமுட்டி சிரிப்பு சிரிக்க..

அதில் துகிலனுக்கு வெட்கம் வந்து விட்டது… “ நம்மூ..” என்று கோபமாக ஆரம்பித்த துகிலனின் பேச்சு பின்…

“நம்மூ சும்மா இருக்க மாட்டே.” என்று முடித்தவனின் பேச்சில் ஒரு துளி கூட கோபம் இல்லாது இருக்க.

நர்மதா. “ஓ சா ர் வெட்கம் எல்லாம் படுறார். யப்பா தாங்க முடியல டா சாமீ… சரி மத்ததை நாளைக்கு பேசிக்கலாம். நீ பேசு நான் என் ரூமுக்கு போறேன்.” என்று சொல்லி விட்டு நர்மதா தன் அறைக்கு செல்ல தான் பார்த்தான்.

ஆனால் துகிலன் தான். “ ஏய் இரு. இன்னும் நாம அந்த லாண்ட் பத்தி பேசி முடிக்கல.. ஒர்த்தான ப்ளேஸ் தான்.. ஆனா அவங்க சொல்ற அமெளண்ட்க்கு அந்த இடம் ஒர்த்தா… தெரியல.. இப்போ தான் ஓட்டல் இன்னொரு பிரான்ச் ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்.. பைனன்ஸ் எல்லாம் ஓகேவா பார்க்கனும்.. அந்த லேண்ட்க்காரன் கிட்ட நாளைக்கே வேண்டுமா..? வேண்டாமா…? என்று சொல்றேன் என்று நான் அவங்க கிட்ட சொல்லி இருக்கேன்..

அதை பத்தி இப்போவே பேசி முடிவு செய்து விடலாம் நீ போகாதே…” என்று சொல்லி துகிலன் நர்மதாவை அந்த அறையை விட்டு அனுப்பவில்லை..

அதற்க்குள் மஞ்சுளாவின் அழைப்பு நின்று போய் விட. சரி நாமே அழைக்கலாம் என்று துகிலன் முயன்ற போது மீண்டுமே மஞ்சுளாவிடம் அழைப்பு… இந்த முறையும் வீடியோ காலில் தான் அழைத்து இருந்தாள்..

இது வரை இவள் தன்னை பேசியில் அழைத்து இருக்கிறாளா…? இவர்களுக்கு திருமணம் முடிந்தே ஐம்பது நாட்கள் தான் ஆகிறது…

அந்த ஐம்பது நாட்களில் இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக வாழ்ந்ததே அந்த பத்து நாட்கள் மட்டும் தான்.

அதுவும் இவனே முதல் முறை பேசியில் அழைத்து பேசும் போது…

துகிலனே…. “நம்மு ஆஸ்பிட்டலில் இருக்கா.. இப்போ அவள் வேலையும் நான் தான் பார்த்துக்குறேன்.. இதுல அவளையுமே நான் தான் பார்த்துக்குறேன்… நானே எனக்கு நேரம் கிடைக்கும் போது போன் செய்யிறேன்.” என்று சொல்லி விட்டதால், மஞ்சுளா கணவனுக்கு அழைத்தது இல்லை..

ஆனால் இன்று இந்த நேரம் அழைக்கிறாள் எனும் போதே அழைப்பு நின்று விட்டது.. பின் எத்தனை நேரம் தான் அதுவுமே அடித்து கொண்டு இருக்கும்…

சரி தான் அழைக்கலாம் எனும் போது மீண்டும் மஞ்சுளாவிடம் இருந்து அதே வீடியோ கால் அழைப்பு வந்தது..

நர்மதா சிரித்து கொண்டே.. “ திரும்ப கட் ஆவதற்க்குள் அட்டண் செய் துகி…” என்று சொல்லி விட்டு பால் கனிக்கு சென்றவள் தன் மகனை அழைத்து பேச தொடங்கி விட்டாள்..

துகிலனுமே திரும்ப துண்டித்து விட போகிறது என்று அழைப்பை ஏற்றான்… ஏற்றவன் உடனே பேச எல்லாம் இல்லை.. அவனால் பேச முடியவில்லை… பார்த்தான் மனைவியின் முகத்தை பார்த்தான்.. ஏன் இத்தனை சோர்வாக இருக்கிறாள்..

உடம்பு சரியில்லையா….? ஒரு வித பதட்டம் துகிலனிடம்… ஆனால் மஞ்சுளாவோ எந்த வித பதட்டமும் இல்லாது தன் கணவனையே பார்த்து கொண்டு இருந்தாள்… கணவனாக இருந்தவன் இப்போது தன் குழந்தைக்கு தந்தையாக மாறியவனையே பார்த்து கொண்டு இருந்தவளுக்கு கண்கள் கலங்கி போய் விட்டது.. ஆனால் முகத்தில் ஒரு நிறைந்த புன்னகை…

துகிலனுக்கு ஒன்றும் புரியவில்லை… அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அந்த மெல்லிய திரை விலகி விட்டது போல. மனைவிக்கு ஏதோ பிரச்சனையோ என்ற அந்த நினைப்பு….

அதனால் தான் பதட்டத்துடன்… “சில்க்கி உடம்பு ஏதாவது பண்ணுதா…?” கேட்டான்…

மஞ்சுளா. “ம் பண்ணுது… என்ன என்று சொல்ல தெரியல….” இது வரை கணவனிடம் இது போல பேசியது கிடையாது மஞ்சுளா… இது வரை என்றால் அவனோடு வாழ்ந்ததே பத்து நாட்களும் அவர்கள் தேனிலவில் இருந்த நாட்கள் தான். அந்த நாட்களில் பேச்சே முக்கியம் என்பது போல தான் இருந்தார்கள்..

அதனால் இது போல சொந்தமான பேச்சுக்கள் எல்லாம் மஞ்சுளா கணவனிடம் பேசியது இல்லை… இப்போது மஞ்சுளாவுக்கு பேச துணிவு கொடுத்தது கூட அவன் குழந்தைக்கு அவள் அன்னையாக ஆக போகிறாள் என்பதினால் கூட இருக்கலாம்.

இப்போத் துகிலனுக்கு மனைவிக்கு உடலில் பிரச்சனை கிடையாது என்று தெரிந்து விட்டது.. மனைவியின் மலர்ந்த முகத்தை பார்த்து..

ஆனால் ஏன் ஒரு மாதிரி இருக்கா….? என்று யோசித்தவனுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது.. விசயம் என்ன என்று தெரியாது.

அதனால்.. “ நீ போனை வைய் நான் உன் அம்மாவை கூப்பிடுறேன்.. அவங்க விசயத்தை சொல்லுவாங்க…” என்று துகிலன் சொன்ன நொடி ..

மஞ்சுளா.. “ நீங்க அப்பா ஆக போறிங்க. “ என்று சொல்லி விசயத்தை போட்டு உடைத்து விட்டாள்..

உண்மையில் மஞ்சுளா தன் கணவனிடம் இது போல் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை… எப்படி எப்படியோ சொல்ல திட்டம் தீட்டி கொண்டு இருந்தாள்.

அது என்னவோ இந்த விசயத்தை நான் தான் கணவனிடம் சொல்ல வேண்டும்… அது அன்னையாக இருந்தாலுமே அவர் மூலம் தன் கணவனுக்கு தெரிய கூடாது என்ற எண்ணத்தில் சொல்லி விட்டாள்..

சொல்லி விட்டவள் வீடியோ காலில் தன் கணவன் முகத்தை பார்க்காது குனிந்து கொன்டு விட்டாள்.. கொஞ்ச நேரத்திற்க்கு அமைதி.

என்ன இது கணவன் ஒன்றும் சொல்லவில்லையே… தன் அளவுக்கு இந்த குழந்தை உண்டாகியதில் மகிழ்ச்சி இல்லையா என்று நினைத்து பதட்டத்துடன் பார்த்தவள் கண்ணுக்கு தன் கணவனின் முகம் மகிழ்ச்சியிலும்.. சிறிது வெட்கத்திலும் பூரித்து இருப்பதை பார்த்தவளுக்கு பெண்ணவளுக்கு சந்தோஷம்..

தன் மனைவி தன்னை பார்க்கட்டும் என்று நினைத்து இருந்தான் போல.மஞ்சுளா தன்னை பார்த்ததும் ஒரு முத்தம் கொடுத்தான்..

“நான் சென்னையில் இல்லாம போயிட்டேனே… இல்லேன்னா இப்போவே இப்போவே..” என்று கட்டுப்படுத்த முடியாது சத்தமாக பேச.

இத்தனை நேரம் மகனின் பேச்சில் மூழ்கி போய் இருந்த நர்மதா துகிலனின் இந்த சத்தத்தில் திரும்பி அவனை பார்த்தாள் .. துகிலனின் இந்த எல்லை இல்லாத மகிழ்ச்சியின் சாயலை இது வரை கண்டது இல்லை என்பது போலான ஒரு பொலிவுடன் பேசியின் பேசிக் கொண்டு இருந்தவனின் அந்த மகிழ்ச்சி. கூடவே அவன் முகத்தில் தெரிந்த அந்த வெட்கம்… பார்த்த நர்மதாவின் மனது நிறைந்து விட்டது..

நர்மதாவோடு பேசிக் கொண்டு இருந்த நர்த்தகனுக்கும் தந்தையின் குரல் கேட்டு விட்டது போல…

“மாம் டாடியுக் உங்க கூட தான் இருக்காரா மாம்.. டாடி கிட்ட போனை கொடுங்க மாம்.. நான் பேசனும்..” என்று சொன்ன மகனிடம்…

“டாடி ஒரு முக்கியமான பிசினஸ் மீட்டிங்கில் இருக்காரு பேபி… அப்புறம் பேசு… என்ன டா செல்லம். நீ தூங்குவியாம்.. டாடி உனக்கு மார்னிங்க போன் செய்வாங்க என்ன.” என்று சொல்லி விட்டாள்…

தன் மகனே ஆனாலுமே துகிலனின் இந்த மகிழ்ச்சியை கெடுக்க நர்மதாவுக்கு விருப்பம் இல்லை…

மகனை தூங்க சொல்லி விட்டு பேசியை வைத்து விட்ட நர்மதா துகிலனின் முகத்தையே மனநிறைவோடு பார்த்து கொண்டு இருந்தாள்

பாவம் நர்மதாவுக்கே தெரியாது .. இதோ இவர்களின் இந்த மகிழ்ச்சியான தருணத்தை கூட இன்னும் சிறிது நேரத்தில் கெடுக்க போகிறோம் என்று தெரியாது..

(நிறைய பெரியதா டைப் செய்தது டெலிட் ஆகி விட்டது பா.. அவசர அவசரமா இதை டைப் செய்தேன்… அடுத்த அத்தியாயத்தில் மஞ்சுளா பேசுவாள்.. கண்டிப்பாக தன் பக்கம் இருக்கும் நியாயத்தை.)










 
Well-known member
Joined
May 11, 2024
Messages
264
நர்மதா நல்லவளாவே இருக்கட்டும் ஆனா அவளை பற்றி மட்டுமல்ல இவனை பற்றியும் தெரியாத மஞ்சுக்கு தெளிவு படுத்திருக்கனும்
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
157
இப்போ இவங்களை ஒன்னா பார்த்தா அவ சந்தோசம் எல்லாம் காணாம போயிடும் 😔😔😔 ரெண்டு பேரும் பேசாம இந்த பிரச்சனை தீராது 🤷‍♀️
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
286
Enekku suthama pidikkala intha Thugilan Narmadha va….
enna than besties ah irunthalum limit irukku… entha wife ume ithai accept panna matta
 
Top