Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi....21....2

  • Thread Author
அத்தியாயம்….21…2

“நீ பேசுறது சரியில்ல மஞ்சுளா….” என்று சொன்ன கணவனை தான் மஞ்சுளா இப்போதும் அதே ஆழமான பார்வை பார்த்து கொண்டு இருந்தவள்…

கணவனின் இந்த பேச்சுக்கு சிரித்து விட்டாள்… அவளின் அந்த சிரிப்பு மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இல்லை… கிண்டலின் வெளிப்பாடாக தான் இருந்தது..

.அதை துகிலனும் கண்டு கொண்டவன் பல்லை கடித்து கொண்டு தன் கோபத்தை அடக்கி கொண்டான்.. தன் மனைவி இப்போது கர்பமாக இருப்பதினால் தன் கோபத்தை காட்டாது இருந்தான்..

ஆனால் மஞ்சுளா… எதை பற்றியும் யோசிக்கும் மன நிலையில் அவள் இல்லை.. அவளுக்கு தனக்கும் தன் குழந்தைக்கும் ஒரு முறையான ஒரு அங்கிகாரம் வேண்டும்.. அவ்வளவே…

அதனால் மீண்டுமே அதே கேள்வியான…. “ டைவஸ் எதுக்கு ஆச்சு…?” என்று கேட்டவளிடம் துகிலன்…

“எங்களை நீ சந்தேகப்படுறியா…?” என்று கேட்டான்..

அதற்க்கு மஞ்சுளா. மீண்டும் ஒரு கிண்டலாக சிரித்தவள்… தான் இருந்த இருக்கையை விட்டு இன்னுமே முன் நோக்கி தன் உடலை நகர்த்தி கொண்டவள்..

“நான் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்… எனக்கு கல்யாணத்துக்கு முன் ஒரு லவ் இருந்தது என்று வைத்து கொள்ளுங்கள்…” என்று மஞ்சுளா சொல்லும் போதே துகிலனின் முகம் மாற தொடங்கியது..

அதை மஞ்சுளாவுமே கவனித்தாள் தான்.. ஆனால் அதை எல்லாம் பார்க்காது… “ அதுவும் அவன் என் சின்ன வயசுல இருந்தே பழகின பிரண்ட் என்று வைத்து கொள்ளுங்கள்…

ஒரு வயதுக்கு அப்புறம் அவன் மீது எனக்கு காதலும்… என் மீது அவனுக்கு காதலோ காதல் என்று வந்து.. நாங்க இரண்டு பேரும் லவ்வோ லவ் பண்ணி..

ஆனால் ஒரு கால கட்டத்தில் அந்த லவ் ப்ரேக் ஆகி..” என்று சொன்னவள் பின் அவளே…

“அது என்ன ஏதோ ஒரு கால கட்டம். என் அக்கா இது போல பண்ணியதில் என் அம்மா அப்பா அழ. குடும்ப மானம். நீ எங்க பேச்சு தான் கேட்கனும் என்று ஒரு எமோஷனல் ப்ளாக் மெயிலில் நான் அந்த காதலை ப்ரேக் பண்ணிட்டேன்.. ஆனா நான் இன்னுமே அவன் கூட தொடர்பில் தான் இருக்கேன். காரணம் இடையில் வந்த எங்க காதல் தான் ப்ரேக் ஆகிடுச்சி.. சின்ன வயசுல இருந்தே இருக்கும் எங்க நட்பு அப்படியே தான் இருக்கு.. அதை வாடாம நாங்க பார்த்துக்குறோம் என்று நானும் அவனுமே எப்போவுமே கையை பிடிச்சி திரிஞ்சிட்டு இருந்தா நீங்க ஒத்து கொள்வீங்கலா…?” என்று மஞ்சுளா தன் கணவனை பார்த்து கேட்டாள்….

தன் மனைவி பேச பேச துகிலனின் முகம் மெல்ல மெல்ல மாறியது… அவனால் அதை கற்பனை கூட செய்ய முடியவில்லை….

அதில் திக்கி திணறி…. “ நீ என்ன சொல்ற….?” என்று கேட்டவனின் முகத்தில் வியர்வை துளிகள்… தன் முன் இருந்த ட்ஷ்யூ பேப்பரை எடுத்து அவனிடம் தந்த பெண்ணவள்…

பின்… “ உங்களுக்கு தான் இது போல திக்கி பேசினா பிடிக்காதேங்க….” என்றும் கேட்டாள்…

துகிலனுக்கு மனைவியின் அந்த பேச்சில் இருந்து வெளி வர சிறிது அகவாசம் தேவைப்பட்டது..

பின் தன்னை நிதானித்து கொண்டவனையே பார்த்து இருந்த பெண்ணவள்..

“சும்மா பேச்சுக்கு சொன்னதையே உங்களால் கற்பனையா கூட அதை ஏத்துக்க முடியல தானே….” என்ற அந்த வார்த்தையில் துகிலன் தன் மனைவியையே இப்போது பார்த்தான்..

மனைவியின் இயல்பு இது தானா…? பத்து நாட்கள் தன்னிடம் வாயை திறக்காது தன் ஆசைக்கு இணைந்து கொடுத்த மனைவிக்கும், இவளுக்கும் தான் எத்தனை வித்தியாசம்….?

உண்மையில் தன் மனைவியின் உண்மை தன்மை என்ன ….? என்று தெரியாது போனாலும் இந்த தன்மையும் துகிலனுக்கு மிகவும் பிடித்து தான் போனது….

இருந்துமே தன்னை சந்தேகப்படுகிறாளா….? இதில் தான் அவனுக்கு மனைவி மீது கோபம்..

அதை மீண்டும் தன் மனைவியிடம் கேட்டான்…

“அப்படி நம்மூ மீது இன்னுமே அது போலான விருப்பம் இருந்தால், நான் ஏன் நம்மூவை டைவஸ் செய்ய போறேன்… இன்னொரு பெண்ணை ஏன் என் வாழ்க்கையில் கொண்டு வர போறேன்.. ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் சவாரி செய்யும் அளவுக்கு நான் ஈனபிறவி இல்லை….” என்று சொல்லி கொண்டு இருந்த போது தான் மஞ்சுளாவின் கண்களில் ஒரு ஜோடி மாட்டியது…

அதுவும் ஒருவரின் மூச்சு காற்று மற்றவர் மீது விழும் அளவுக்கு மிக நெருக்கமாக தான் அந்த ஜோடி அமர்ந்து இருந்தனர்.. ஒருவரின் கை பிடியில் தான் இன்னொருவரின் கை இருந்தது…

மஞ்சுளாவின் பார்வை அங்கேயே இருக்க காரணம். அவர்களின் அந்த நெருக்கம் கிடையாது. இதை விட படுக்கை அறையில் செய்ய வேண்டியது எல்லாம் அங்கு அரங்கேறிக் கொண்டு இருக்கும் ஜோடிகளுமே அங்கு இருந்தனர் தான்..

அவர்களை பார்க்கும் போது இந்த ஜோடி ஒன்றும் இல்லை தான்.. ஆனால் இவர்களை மஞ்சுளா எங்கோ பார்த்தது போல்.. எங்கு என்று தேடியவளுக்கு நினைவுகளில் மாட்டவில்லை…

ஆனால் மனைவியின் பார்வை தன்னில் அல்லாது எங்கோ இருப்பதை பார்த்த துகிலன் அவனுமே தன் மனைவி பார்க்கும் திசையில் பார்க்க திரும்பி பார்க்க…

அங்கு இருந்த தன் தங்கை கணவன் சந்தீப்பும் அவனின் பி.ஏவான ஷர்மியும் இருப்பதை பார்த்து கோபத்துடன் எழ..

கணவனின் அந்த கோபம் முகத்தை பார்த்ததுமே பெண்ணவளுக்கு புரிந்து விட்டது. ஓ கணவனின் தங்கை கணவன்.. கூடவே அத்தை மாமன் மகன்… இவனின் எக்ஸ் மனைவியின் அண்ணன்.. என்று வரிசையாக துகிலனுக்கு இருக்கும் உறவுகள் நியாபகத்தில் வந்தாலும்..

கோபத்துடன் எழ பார்த்த கணவனின் கையை தன் இருக்கையில் இருந்தே எட்டி பிடித்து பெண்ணவள் கணவனை அங்கு போக விடாது தடுத்து நிறுத்தினாள்…

ஆணவனுக்கு அத்தனை கோபத்திலுமே மனைவி இப்படி எக்கி தன்னை பிடித்ததில் டேபுல் மீது பெண்ணவளின் வயிறு சாய்ந்ததில்..

“ஏய் குழந்தை இருக்கு உனக்கு நியாபகம் இருக்கா…? இல்லையா…? இப்படி எக்குற.?” என்று இருக்கும் இடத்தை மறந்து கத்தி விட்டான்.

இவன் கத்தலை கேட்ட பிரதீப் சட்டென்று தன் பி.ஏவின் கை பிடித்து அந்த இடத்தை விட்டு அகன்று விட.. அவர்களை பின் தொடர்ந்தால் மனைவியை தனியே விட்டு போகும் படி ஆகி விடும்.. கூடவே அழைத்து செல்லலாம் என்றால் கண்டிப்பாக பிரதீப் தன் காரை பறக்க தான் விடுவான்..

தான் அவன் பின் அப்படி வேகமாக தன் காரை ஓட்ட முடியாது.. தன் மாமியார் காரை மெல்ல ஓட்டு என்று தான் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள் என்று அமர்ந்தவனுக்கு அத்தனை கோபம்…

அதில் தன் முன் இருந்த டேபுலின் மீது குத்த… மஞ்சுளாவுக்குமே பிரதீப் அந்த பெண்ணுடன் அத்தனை நெருக்கமாக அமர்ந்து கொண்டு இருந்தது சரியாக படவில்லை தான்..

ஆனாலுமே உனக்கு வந்தால் ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியாடா….? என்று தான் அவள் மனது நினைக்க தோன்றியது..

அதில் கணவனிடம்… “ எதுக்கு இத்தனை கோபப்படுறிங்க….?” என்று கேட்டவள் ஆணவன் முன் தண்ணீரை நகர்த்தி வைத்தவள்.

“குடிங்க…” என்றும் சொன்னாள்..

“என்ன கிண்டலா… ? அவன் என் சிஸ்டர் ஹஸ்பண்ட்.. அவன் அவன் இன்னொரு பெண்ணோடு அவ்வளவு நெருக்கமா இருக்கான்.. நீ என் கிட்ட ஏன் கோபப்படுறிங்க என்று கேட்கிற…?” என்று மனைவி கொடுத்த தண்ணீரை குடித்த பின்னுமே கோபம் அடேங்குவேணா என்று இருந்தது…

ஆணவனின் அந்த கோபத்தையே தன் முகத்தில் எந்த பாவனையும் காட்டாது பார்த்து கொண்டு இருந்தாள் பெண்ணவள்..

துகிலனுக்கு சிறிது நேரம் பின் தான் மனைவி ஏன் அமைதியா இருக்கா என்பது போல அவளை நிமிர்ந்து பார்த்தான். பார்த்தவன் தன் கோபம் குறையட்டும் என்று காத்து கொண்டு இருக்கிறாள் போல என்று நினைத்து கொண்டவன்..

முதலில் மனைவியிடம் பேசி விடலாம்… இது போல் இருக்கும் போது மனைவியுமே மனது நிம்மத்தியுடன் இருக்க வேண்டும்.. என்று அவனுமே பெண்ணவள் நினைத்ததையே தான் நினைத்தது..

அதனால் தங்கை கணவன் பின் பார்த்து கொள்ளலாம் என்று மனைவியிடம் தங்கள் விசயத்தை பேச தொடங்க..

ஆனால் பெண்ணவளோ…. குறைந்து இருந்த கணவனின் கோபத்தை ஏற்றும் வகையாக….

“ அவர் கூட இருக்கும் அந்த பெண் கூட நம்ம கல்யாணத்துக்கு வந்து இருந்தாங்க தானே…?” என்று கேட்டதும் துகிலன் பட பட என்று..

“ஆமாம் அந்த பெண் இவனின் பி.ஏ தான்.. இவனோடு படித்த பெண்ணும்.. வேலையில் கெட்டி தான்.. அதனால தான் முதலாளியே கெட்டியா பிடிச்சிட்டா போல….” என்று பல்லை கடித்து கொண்டு சொன்னான்.

மஞ்சுளாவோ… “ ஏன் நீங்க இதை தப்பா பார்க்கிறிங்க….? வேலை விசயமா கூட ஒன்னா வந்து இருந்து இருக்கலாம் தானே…?” என்று கேட்டாள் பெண்ணவள்..

ஆனால் ஆணவனோ… “ என்னது வேலை விசயமாவா….? நீ பார்த்த தானே.. அத்தனை நெருக்கமா உட்கார்ந்துட்டு இருக்காங்க என்னவோ கை விட்டு விட்டா தொலைந்து போயிடறது போல பிடிச்சிட்டு…. இது உன் கண்ணுக்கு வேலை விசயமா தெரியுதா…” குறையாத கோபத்திடன் கணவன் கேட்ட போது மஞ்சுளா.

இப்போது முன் பேச வந்த தங்களின் பிரச்சனையை பற்றி பேசினாள்..

அதாவது…. “ வெட்ட வெளியில் கை பிடிச்சிட்டு நெருங்கி உட்கார்ந்துட்டு இருப்பது உங்க பார்வைக்கு தப்பா தெரியுது… இன்னும் கேட்டா அவர் உங்க மாமா மகன்.. பக்கத்து பக்கத்து வீடு வேறு… சின்ன வயசுல இருந்து கூட வளர்ந்தவங்க… அவங்களை பத்தி எல்லாம் தெரியும் உங்களுக்கு… அந்த எல்லா விசயமும் நல்லா இருக்க தொட்டு தான் உங்க தங்கையை அவருக்கு கல்யாணம் செய்து கொடுத்து இருப்பிங்க..

அப்படி எல்லாம் தெரிந்து கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் கழித்து நீங்க நல்லவர் என்று கொடுத்த ஒருத்தர் ஒரு பெண் கூட… அதுவுமே அவருடைய பி.ஏவோடு பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்துட்டு இருப்பது.. உங்களுக்கு தப்பா தெரியுது..

ஆனா எனக்கு உங்களை பத்தி ஒன்னுமே தெரியாது… பத்து நாள் தான் நான் உங்க கூட சேர்ந்து இருந்தேன். அந்த பத்து நாளுமே நாமே பேசினோம்… இல்ல. பேசவே இல்ல.. என் உடம்புல எத்தனை மச்சம் இருக்கு என்று தெரிஞ்சிட்டிங்க.. ஆனா என்னை பத்தி… ம் இல்ல.

அதே தான் நானுமே உங்க வேகம் தெரிந்த அளவுக்கு உங்களை பத்தி தெரியல.. நம்ம ஹனி மூனுலேயே நான் பேச நினச்சேன் தான்.. ஆனா நீங்க என்னை பேச விடல. பேசவா நாம இங்கு வந்தோம் என்று தான் நீங்க கேட்டிங்க..

சரி இந்த நாட்கள் இதுக்கானது.. இதுவுமே ஒரு கணவன் மனைவிக்கு உண்டான ஒரு அங்கம் தானே…. உங்களை பற்றி தெரிஞ்சிக்.க காலம் இருக்கு. இந்தியா போன பின் தெரிஞ்சிக்கலாம் என்று இருந்தேன்..

ஆனா பாருங்க. இந்தியா வந்த இறங்கிய அன்னைக்கு பார்த்த உங்க முகத்தை இன்னைக்கு தான் நான் இந்த முகத்தை பார்க்கிறேன்….

ஆனா நீங்க உங்க எக்ஸ் மனைவிக்கு உடம்பு சரியில்ல என்று என்னையும் பார்க்க வரல.. வீட்டிற்க்கும் அழைக்கல….தினம் போன்.. அதுவும் எதை பத்தியான பேச்சு.. என்னை மிஸ் செய்யிறதா சொல்லுவீங்க.. ஆனா எதுக்கு மிஸ் செய்ததா சொல்லுவீங்க.. கொஞ்சம் யோசிச்சி பாருங்க…

நம்ம இரண்டு பேருக்கும் முறையா தானே கல்யாணம் நடந்தது…? நான் உங்க சட்டப்படியான மனைவி தானே…ஆனா பாருங்க இதை என் வீட்டு உறவு முறையிலும் நம்பல… வீட்டு அருகில் இருப்பவங்களும் நம்பல….” என்று சொன்ன மனைவியிடம்..

துகிலன் .. “ எனக்கு புரியல மஞ்சுளா… முதல் மனைவியை விவாகரத்து செய்துட்டு தான் நான் உன்னை கல்யாணம் செய்து கொண்டேன்…அந்த சீப் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி பீப்பிள் சொன்னதை எல்லாம் கேட்டுட்டு நீ என்னை சந்தேகப்படுவீயா.?” என்று மீண்டும் கத்தினான்..

மஞ்சுளாவோ…. “ ஓ சீப் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி… இப்போ சார் கொஞ்ச நேரம் முன் என்ன செய்தாங்க.. இத்தனை பேர் நடுவில் கை பிடித்து கொண்டு இருந்தவரை பார்த்து உங்க ஹய் க்ளாஸ் மெண்டாலிட்டி அதை ஏன் பிராட் மைண்டா எடுத்துக்கல…..?” என்று கேட்க.

பின்… “ஆனா நாங்க உங்க பார்வையில் சீப் மிடில் க்ளாஸ் பீப்பிள்… டைவஸ் பண்ண பெண்ணையே பெண் பார்க்க அழச்சிட்டு வந்து… அந்த பெண் தான் என் எக்ஸ் ஒய்பா இருந்தவங்க. ஆனா அந்த இடையில் வந்த உறவு எங்களுக்குள் இப்போ இல்ல. ஆனா முதல்ல இருக்கும் அந்த நட்பு அத்தை மகள் மாமா மகள் உறவு இருக்கு.. அதனால எப்போவும் ஒட்டிட்டே தான் இருப்போம்…. இருப்பிங்க… ஆனா அதை நாங்க ஏத்துக்கனும்…

எனக்கு புரியல… ஒரு பேச்சு எனக்கு ஒரு எக்ஸ் லவ்வர் இருந்து இருந்தா என்று ஒரு உதாரணத்துக்கு சொன்னதற்க்கே உங்க முகம் அப்படி மாறி போயிடுச்சி… ஆனா நையிட்டில் அரையும் முறையுமான ட்ரஸ்… வெளி ஊரில் ஒரே அறையில் உங்க மனைவி நான் போன்லே நமக்கு குழந்தை வர போறத சொல்றேன்..

.ஆனா நீங்க உங்க சந்தோஷத்தை உங்க எக்ஸ் மனைவி கிட்ட அதுவும் நேரில் சொல்றிங்க.. உங்க நம்மூ ஒரு பக்கம் மார்பு உங்க இந்த பக்க தோளில் முழுசா படிஞ்சு என் கிட்ட நான் குழந்தை உண்டாகி இருப்பதற்க்கு வாழ்த்து சொல்றா… . நான் இதை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்காம… பிராட் மைண்ட் வைத்து பார்க்கனும்.. எனக்கு புரியல.. இது எல்லாம் கேட்டா நான் சந்தேகப் படுறேன்..

உங்க இந்த நடவடிக்கை எனக்கு மனைவி என்ற அங்கிகாரம் மட்டும் இல்ல. நம்ம குழந்தையோட அங்கிகாரத்தையுமே சேர்த்து பரிக்க பார்க்குது… அது ஏன் உங்களுக்கு புரியல….?”

அத்தனை நேரம் அமைதியாக பேசிக் கொண்டு இருந்தவள் உடைந்து அழ ஆரம்பித்து விட்டாள்..

“உங்க இரண்டு பேரையும் அப்படி பார்த்த பின் எனக்கு தூக்கம் வருமா…? தூக்கம் வரலேன்னு மாடிக்கு போனா பக்கத்து வீட்டு ஆன்ட்டி… கேள்வி பட்டேன்… நீ குழந்தை உண்டாகி இருக்க என்று… பார்த்து முதல்ல அந்தஒப்புக்கு உனக்கு தாலி கட்டியதா…..? அந்த பெண்ணை டைவஸ் பண்ணிடாரா என்று அந்த பேப்பரை வாங்கி பாருடியம்மா… நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்… ஏன்னா அவங்க இரண்டு பேரும் விவாகரத்து வாங்கலேன்னா இப்போவே இந்த குழந்.”

பெண்ணவளுக்கு அந்த பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னதை முழுவதுமாக கூட சொல்ல மனது வராது பாதியில் நிறுத்தி விட்டாள்..

துகிலன்.. “ யார் அது.. அப்படி சொன்னவங்களை நீ சும்மாவா விட்ட. வா முதல்ல வா போகலாம்.” என்று எழுந்தவன் மனைவியை எழுப்ப…

எத்தனை பேரை நீங்க இது போல பேசாது செய்ய வைப்பிங்க. என் அப்பன் குதிருக்குள் இல்ல போலவா…

“ஒரு சிலர் இப்படியும் சொல்றாங்க… ஏதாவது ஒரு இடத்ட்தில் உன்னை பார்த்து இருப்பார். ஜஸ்ட் லைக் தட் பெண் நீ இல்ல என்று புரிஞ்சி இருக்கும்.. பெரிய இடத்துல இது எல்லாம் சகஜம் தான்..” மீண்டுமே பெண்ணவளின் கண்களில் கண்ணீர் அவளாள் கட்டு படுத்தவே முடியவில்லை…

மனைவியின் இந்த பேச்சில் துகிலன் ஸ்தம்பித்து நின்று விட்டான்.. சத்தியமாக இப்படி எல்லாம் ஒரு பேச்சு வரும் என்று அவன் நினைத்து பார்க்கவில்லை..

ஆனால் மஞ்சுளா சொன்னாள்… “ நீங்க எப்படி பேச்சு வராது என்று சொல்றிங்க..?” எங்க சைட் விடுங்க. உங்க முதல் கல்யாணம் எப்படி நடந்தது…?” என்று கேட்டவளிடம்..

துகிலன்.. “ சில்க்கி அது எல்லாம் விடும்மா…” என்று சொல்லியும்..

“இல்ல நீங்க சொல்லுங்க. உங்க பஸ்ட் மேரஜ் எப்படி நடந்தது..? கண்டிப்பா நமக்கு நடந்தது போல சிம்பிளா நடந்து இருக்காது.. அது உறுதி..” என்று சொன்னவளிடம் துகிலம்..

“ம் கிராண்டா தான் நடந்தது.. அப்போதைய எஜிகேஷன் மினிஸ்ட்டர்.. கூட அந்த மேரஜிக்கு வந்தார்…” எனும் போது மஞ்சுளா சிரித்தாள்… ஆனால் அந்த சிரிப்பில் உயிர்ப்பு என்பது தான் சுத்தமாக இல்லை..

ஆனால் துகிலன் மஞ்சுளாவின் இந்த சிரிப்பை தவறாக புரிந்து கொண்டவனாக.

“நீ உன் மேரஜ் கிராண்டா செய்யனும் என்று நினச்சி இருந்தியா டா…” என்று கேட்டவனுக்கு பதில் சொல்லாது அவனையே ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவள் பின் தன்னை நிதானம் படுத்தி கொண்டவள்..

“நான் சிம்பிள் மேரஜ் கிராண்ட் மேரஜ் இந்த கான்சப்ட்டுக்கே வரல.. அத்தனை பேரை அழச்சி அவங்களை நீங்க மேரஜ் பண்ணிங்க.. உங்க இரண்டு பேருக்கு டைவஸ் ஆனது…

உங்க அந்த பஸ்ட் மேரஜிக்கு வந்த அத்தனை பேருக்கும் தெரியுமா…/?” என்று கேட்டவளிடம் துகிலன் இல்லை என்று தான் சொன்னான்.. அவன் சொல்லும் போதே அதன் தவறு துகிலனுக்குமே புரிந்து விட்டது.. காரணம் நெருங்கிய உறவை தவிர நர்மதாவுக்கு இவனுக்கும் விவாகரத்து ஆன விசயம் தெரியாது.

அதோடு இந்த நெருங்கிய உறவு மட்டும் அழைத்து தான் அவன் இரண்டாம் திருமணமும் செய்து கொண்டது…

அதை தான் பெண்ணவள் சொன்னது… “ நாளைக்கு உங்களோடு வெளியில் யாராவது என்னை பார்த்தால், அவங்க என்ன நினைப்பாங்க….?” என்று…

“ இப்போவும் நீங்க உங்க நம்மூ கூட தான் சுத்திட்டு இருக்கிங்க.. எப்போவாவது ஒரு நாள் என்னோடு உங்களை பார்க்கும் போது அவங்க கண்ணுக்கு நான் யாரா தெரிவேன் …” என்றும் கேட்டாள்….




 
Well-known member
Joined
May 12, 2024
Messages
286
Warreh woah…. Manju kalakkitta… badhila sollu da ithukku…

Pradheep 😡😡😡 ne annaikku pondatti kitta innoru kalyanam pannuwenu sonnathu unnoda PA va thana??? 🥴🥴🥴

Oru idathula Pradheep ku Sandheep nu pottu irukkeenga… Sandheep Manjula thambi
 
Top