Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi....22

  • Thread Author
அத்தியாயம்….22

மனைவியின் எந்த ஒரு கேள்விக்குமே துகிலனால் பதில் அளிக்க முடியவில்லை… அவளின் ஒவ்வொரு பேச்சுமே துகிலனை சாட்டையினால் அடிப்பது போலான ஒரு உணர்வு.. அதுவும் கடைசியாக அவள் சொன்ன…

“இது போல பணக்காரன் ஆண்கள்… பார்த்து பிடித்து படுக்க மட்டும். இது போலான பேச்சு… இதில் குழந்தையை பற்றியும்,…”

அவனால் அதை முழுவதுமாக கூட அவன் மனதளவில் கூட நினைத்தும் பார்க்க முடியவில்லை… அந்த பேச்சை மனைவி எப்படி தாங்கி இருப்பாள்…?

அந்த பேச்சு மட்டும் இல்லை… அவளை தான் முறையாக திருமணம் செய்யவில்லை என்பது போலான பேச்சுக்கள்…

அதை பற்றி கேட்டான்…. “நம்ம மேரஜ் பத்திய இந்த பேச்சு எப்போது இருந்து பேசினாங்க …?” என்று கணவன் கேட்ட போது மஞ்சுளா உடனே எல்லாம் கணவனுக்கு பதில் அளிக்கவில்லை..

இன்னுமே நீ என்னை தான் கேள்வி கேட்டுட்டு இருக்கே… நீங்க எதுக்கு விவாகரத்து செய்திங்க என்று சொல்ல மாட்டிங்கலே… அந்த கடுப்பில் இறுகி போய் இருந்தவளின் கை பிடித்து கொண்ட துகிலன்..

“ப்ளீஸ் ம்மா.. ப்ளீஸ்…” முதல் முறை கணவன் இது போல தழைந்து தன்னிடம் பேசுகிறான் என்று பெண்ணவள் நினைத்த நொடி.. அவளின் நியாயமான மனது..

ஆமாம் ஆமாம் உன்னிடம் அவன் மணிக்கணக்கா உட்கார்ந்து பேசி இருக்கான்.. இதுல நீ இது போல என் புருஷன் இது போல முதல் முறை கெஞ்சிறான் என்று பீல் பண்ணிட்டு இருக்க…? என்று அவள் மனது நினைத்து முடிப்பதற்க்குள் மஞ்சுளா சொல்லி முடித்து இருந்தாள்..

அதாவது தங்களின் திருமணம் ஆன நாளில் இருந்தே இந்த பேச்சு தொடங்கி விட்டது.. உறவு முதல் அக்கம் பக்கம் வரை அனைவரும் பேசிய பேச்சை சொன்னவள்..

கூடவே… “அவங்க மேலும் தப்பு இல்ல… உங்களை போல யாருமே விவாகரத்து ஆன பொண்ணை கையை பிடிச்சிட்டு சுத்திட்டு இருக்க மாட்டாங்க..” இதை மிக காரமாக தான் பெண்ணவள் சொன்னது..

துகிலனுக்கு அய்யோ என்று தான் ஆனது.. அதோடு மஞ்சுளா சொன்ன அதனால தான் அம்மா அப்பா அன்னைக்கு உங்க வீட்டிற்க்கு வந்தது.. வரவேற்பு வைத்தாலாவது இது போல பேச மாட்டாங்க என்று..”

மனைவியின் இந்த பேச்சில் துகிலன் தலை மீது கை வைத்து கொண்டான்… அன்று மஞ்சுளாவின் அம்மா அப்பா அப்படி பேசியதில் தன்னை நம்பவில்லையா என்ற கோபத்தில் தானே இன்று வரை வரவேற்பு வைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தவன் கூட அதை பற்றி யோசிக்காது இருந்து விட்டான்..

துகிலனுக்கு புரிந்தது… நாணயத்திற்க்கு இரண்டு பக்கம் இருப்பது போல தான் இதுவுமே… நர்மதாவின் பக்கம் பார்த்த நான் என் மனைவியின் பக்கம் பார்க்கவில்லை.. அவளின் மனதை கூட நான் கூறு போட்டு தான் இருக்கேன் என்று நினைத்தவன்..

என்ன நினைத்தானோ… மஞ்சுளாவின் முன்பே நர்மதாவுக்கு அழைத்தான்… மஞ்சுளா பார்த்து கொண்டு தான் இருந்தாள்..

நர்மதா போனை எடுத்ததுமே… “நம்மூ நாம ஏன் டைவஸ் செய்தோம் என்று என் ஒயிப் கிட்ட சொல்லட்டுமா…?” என்று கேட்டதற்க்கு நர்மதா ஒரே வார்த்தையில்..

“துகி நீ இன்னுமா மஞ்சு கிட்ட சொல்லலே… எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்று கேட்டது நான் மத்தவங்களை பேஸ் செய்வதற்க்கு தான் துகி…

உன் ஒய்ப் கிட்ட நியாயமா நீ நம்ம டைவ்ஸ் பண்ணதுக்கான ரீசன் சொல்லிட்டு தான் மேரஜ் செய்து இருந்து இருக்கனும்… நியாயமா பார்த்தா மஞ்சு ரொம்ப அமைதி தான் போல. நானா இருந்தா என் கூடவே நீ சுத்தினதுக்கு செருப்பால அடிச்சி இருந்து இருப்பேன்.” என்று சொல்லி வைத்து விட்டாள்..

துகிலன் இதை ஸ்பீக்கரில் போட்டு தான் பேசியது.. அதனால் மஞ்சுளாவுக்குமே நர்மதா பேசிய அனைத்துமே கேட்டது… இதில் மஞ்சுளா சந்தோஷம் எல்லாம் பட முடியவில்லை…

தன்னிடம் சொல்ல கூட நம்மூ கிட்ட கேட்டுட்டு தான் சொல்லனுமா…? அப்படி கேட்டுட்டு எதுவுமே எனக்கு சொல்லவும் வேண்டாம்.. எனக்கு எதுவும் தெரியவும் வேண்டாம் என்று நினைத்து கோபத்துடன் எழ பார்த்தவளை மீண்டும் கை பிடித்து அமர வைத்த துகிலன்..

மீண்டும்.. “ப்ளீஸ் சில்க்கி கோபப்படாதே… எனக்கு இப்போ புரியுது.. நான் உன்னை பத்தி நினைக்கவே இல்ல என்று…” என்று ஆணவன் பேச்சில் கோபமாக அவனை பார்த்த மஞ்சுளா..

“இப்போ கூட நீங்க என் பக்கம் பார்க்கலே… உங்க நம்மூ கிட்ட நான் சொல்லலாமா…? வேண்டாமா.?” அவங்க கிட்ட அனுமதி கேட்டுட்டு இருக்கிங்க..” என்று சொன்னவள்..

“அப்படி நீங்க உங்க எக்ஸ் மனைவி கிட்ட அனுமதி கேட்டுட்டு தான் நீங்க என் கிட்ட சொல்லனும் ன்னா… அது எனக்கு நீங்க எப்போவும் சொல்ல தேவையில்லை. எனக்கு தெரியவும் தேவையில்லை.”என்று விட்டவள் இந்த முறை மஞ்சுளா இருக்கையில் இருந்து எழும் மனைவியை துகிலன் கை பிடித்து எல்லாம் தடுத்து நிறுத்தவில்லை.

ஆனால் நின்றாள் அவன் சொன்ன.. “எங்க மேரஜ் ஆன இரண்டு வருஷம் கழிச்சி ஒரு நாள் நையிட் நம்மூ என் கிட்ட சொன்னா…. எனக்கு உங்களை பார்த்தா எந்த ஃபீல் வரல. உங்களை மட்டும் இல்ல.. எனக்கு எந்த ஆணையும் பார்த்தும் அந்த மாதிரி ஃபீல் வர மாட்டேங்குது.. ஆனா பெண்களை பார்த்தா வருது என்று சொன்னா…” என்ற அந்த வார்த்தையில் மஞ்சுளா அதிர்ச்சியாகி விட்டாள் என்று சொல்வது எல்லாம் சின்ன வார்த்தை.. அவள் எது மாதிரியாக உணர்கிறாள் என்றே வரையறுக்க முடியாது திக் பிரம்மையாக நின்று விட்டவளை துகிலன் தான் இப்போதுமே கை பிடித்து இருக்கையில் அமர வைத்து விட்ட அவளுக்கு தண்ணீரை எடுத்து கொடுத்தான்…

துகிலன் தான்.. “தோ பாரு சில்க்கி நான் அதை எல்லாம் கடந்து விந்துட்டேன். இப்போ நான் சொல்வது எல்லாம் நடந்து முடிந்த விசயங்கள்.. இதை நீ மனசுல நல்லா ஏத்திறதா இருந்தா தான் என்னால எல்லாமே சொல்ல முடியும்…” என்று சொன்ன கணவனிடம் சரி என்பது போல தலையாட்டிய மஞ்சுளா..

“அவங்க ஒமசெக்ஸ்வாலிட்டி.. (ஓரினசேர்க்கையாளர்..) என்று உதடு நடுங்க கேட்டவளிடம்..

“சில்க்கி எமோஷனல் ஆகாதே… பேபி இருக்கு அதை மனசுல வை…” என்று மீண்டும் சொன்னவன் பின்…

அவள் கேட்டதற்க்கு பதில் சொல்லாது…. “நம்மூவே நீ சேரியில் பார்த்து இருக்கியா…? இல்ல . குறைந்த பட்சம் சுடி…” என்று கேட்டவனுக்கு இல்ல…என்று தலையாட்டியவளிடம் துகிலன் சிரித்து கொண்டே சொல்ல தொடங்கினான்…

“இப்போ இல்ல சின்ன வயசுல இருந்தே…. அவள் என் உடை தான் உடுத்துவா… உன் கூட தான் சுத்துவா.. அவளுக்கு என்று தனி பிரண்ட் எல்லாம் கிடையாது.. என்னுடைய பிரண்ட் தான் அவளுக்கும் பிரண்ட்.. என் தங்கை பாட்டு க்ளாஸ் வீணை க்ளாஸ் என்று போனா. இவள் என் கூட கராத்தே நீச்சல் இது போல தான் வருவா..

என் ட்ரஸ் கூட நம்மூ தான் செலக்ட் பண்ணி தருவா… உண்மையை சொல்லனும் என்றால் ஒரு ஆண் எந்த மாதிரி ட்ரஸ் பண்ணா எடுத்து கொடுக்கும் என்று என்னை விட நம்மூக்கு தான் தெரியும்/..

வளர வளர. என் சைஸ் நம்மூக்கு பெருசா இருக்கும்.. அதனால என் உடைக்கும் நம்மூ உடைக்கும் அளவு தான் வித்தியாசம் படும்.. ஒரு மாதிரி தான் எடுத்துப்போம்..

போக போக என் அம்மா அத்தை எல்லாம் என்ன டி ஆம்பிள்ளை போல இது என்ன என்று திட்டுவாங்க. அது எல்லாம் நம்மூ காதிலேயே வாங்கிக்காது நம்மூ எப்படி இருக்க வேண்டும் என்று தோனுதோ.. அப்படி தான் இருப்பா…. அவள் நினைப்பது போல காதில் கையில் ஏன் பொட்டு கூட நம்மூ வைத்து கொண்டது இல்ல…

நம்மூக்கு இருபத்தி மூன்று வயசுல இருந்தே தான் கல்யாணத்துக்கு இடம் பார்த்தாங்க. ஆனா யாரை பார்த்தாலுமே வேண்டாம் வேண்டாம் என்று தான் மறுத்தா நம்மூ.. நான் கூட ஒரு சிலது எல்லாம் இவனுக்கு என்ன நம்மூ குறச்சல்.. பார்க்க நல்ல ஹன்சமா இருக்கான்.. பேசி பாரு. பிடிச்சி இருந்தா பார்க்கலாம் தானே என்று கூட சொல்லி இருக்கேன்.

ஆனா .. “எனக்கு பேச கூட தோனல துகி…” என்று சொல்லிடுவா…

அப்போ தான் வீட்டில் எங்க இரண்டு பேருக்கும் மேரஜ் செய்து வைத்தா என்ன என்று பேச்சு வந்தது.. நாங்க இரண்டு பேரும் இருக்கும் போது தான் பேச்சு வந்தது.. எங்க இரண்டு பேர் கிட்ட கேட்டாங்க. நாங்க இரண்டு பேருமே ஒரே மாதிரி யோசிச்சி இரண்டு நாளில் சொல்றேன் என்று சொன்னோம்..

ஆனா அந்த இரண்டு நாளில் நம்மூ என் கிட்ட மேரஜ் செய்வது பற்றி பேசல… நானுமே பேசல… ஆனா ஒத்து கொண்டோம்.. ஆனா பேசி இருக்கனுமோ… காலம் கடந்து நான் யோசிச்சேன்… இந்த யோசனை கூட எனக்காக இல்ல நம்மூக்காக.. நம்மூ பீலிங் கூட நான் விளையாடிட்டேனோ…. அதை நினச்சி நினச்சி… உண்மையில் நான் என்னை ரொம்ப ஷேமா உணர்ந்தேன்..

நம்மூ எதை நினச்சி என்னை மேரஜ் செய்ய ஒத்து கொண்டான் என்று எனக்கு தெரியாது.. ஆனா நான் ஒரு மனைவிக்கு நம்ம கருத்து ஒத்து போனா லைப் ஸ்மூத்தா போகும்… வெளியில் இருந்து பெண் எடுத்து எங்க இரண்டு பேரும் பேசி அண்டாஸ்டாண்ட் பண்றதுக்கு பதிலா. என்னை பத்தி நம்மூக்கு நல்லா புரியும்.. அதே போல தான் நம்மூவை பத்தி எனக்கு நல்லா தெரியும்… மேரஜ் பண்ண இது போதாதா …? என்று நினச்சி தான் நான் அந்த மேரஜிக்கு சம்மதம் சொன்னேன்..

ஆனா அதை எல்லாம் மீறி… காதல் இல்ல குறைந்த பட்சம் ஈர்ப்பாவது இருக்கனும் எங்க கல்யாணம் நடந்த அந்த முதல் நாள் இரவிலேயே நான் உணர்ந்துட்டேன்…

நீ இதை எப்படி எடுத்துப்ப என்று எனக்கு தெரியல சில்க்கி… எப்போவும் நம்மூ என் மீது சாய்வான்.. நானுமே… எனக்கு ஒன்னும் தோனுனது கிடையாது.. அதே தான் நம்மூவுக்குமே…

குறைந்த பட்சம் நான் பஸ்ட் நையிட் அன்னைக்கு நான் நம்மூவை தொட்ட போது அவள் எனக்கு கொஞ்சம் வளஞ்சி கொடுத்து இருந்து இருந்தா கூட பரவாயில்லை.. ஆனா பல்லை கடிச்சிட்டு… ஒரு மாதிரி இறுக்கமா.. கொடுமை சில்க்கி அது.. அதுவும் நான் நம்மூவை இரண்டாம் நாள் தொடும் போது தான் நான் உணர்ந்தேன்…

அதுக்கு அடுத்து நான் நம்மூ கிட்ட இது போல எண்ணத்தில் கிட்ட போகல.. அதுக்குள்ள பேபி உண்டாகிட்டா.. அடுத்து அடுத்து என்று குழந்தை பிறந்து.. குழந்தைக்கு ஒரு வயசு கூட ஆகிடுச்சி….

எனக்கு முப்பது வயது… என் பர்த்டேக்கு நம்மூ ஏதோ கிப்ட் வாங்கி கொடுக்கும் போது தான் நான் செக்ஸ் பத்தி பேசினேன்.வெளிப்படையா பேசினேன்.. ஏன்னா எனக்கு தேவைப்பட்டுச்சி… கல்யாணம் ஆகும் போது இருபத்தி ஏழு.. அப்போ கூட எனக்கு பெருசா தெரியல.

ஆனா பிசினஸ் பணம் சொத்து என்று ஓடி ஒடி போகும் போது எல்லாம்.. எனக்கு வெறுமையா ஒரு ஃபீல்… நான் இதை பத்தி சொல்லும் போது தான் நம்மூ நானே உன் கிட்ட இதை பத்தி பேசனும் என்று இருந்தேன் துகி…

எனக்கும் தெரியுது.. நீ இதனால அழுத்தமா இருக்க என்று… அதனால தான் அப்போ அப்போ நம்ம ஓட்டலிலேயே நீ தங்கிக்குற என்றும் தெரியும்…

நானுமே உன் கிட்ட அது போல இருக்கனும் என்று தான் நினைக்கிறேன் துகி.. ஆனால் என்னால முடியல… சொன்ன நம்மூ அப்போ தான் என் கிட்ட இது சொன்னது..

அதாவது உன் கிட்ட அந்த ஃபீல் வரல. உன் கிட்ட மட்டும் இல்ல. எந்த ஆம்பிள்ளையை பார்த்தாலும் வர மாட்டேங்குது.. ஆனா பெண்களை பார்த்தா வருதுன்னு சொன்னா…. நானுமே நீ நினச்சதை தான் நினச்சேன்…

ஆனா இல்ல என்று ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்டை நம்மூ என் கிட்ட தந்த போது.. சத்தியமா… இதுவா அதுவா என்று யோசிச்சேன் ஆனா இது போல யோசிக்கல…

திருநம்பி….ஆணுக்கும் பெண்ணும் உள்ள வித்தியாசம் நம்ம உடல் வேற்றுமையில் மட்டும் தெரியிறது இல்ல. இன்னும் கேட்டால் உடல் பாகம்… நீ ஆணா பெண்ணா என்று மத்தவங்க பார்வைக்கு தெரிவது.

ஆனா யாருக்கும் தெரியாது.. நாம உணரும் ஒரு ஃபீல்…. அது தான் நாம ஹார்மோன் மாற்றங்கள் என்று எல்லோருக்கும் புரிவது போல சொல்றோம்.. ஆனா இதையே மெடிக்கல் மொழியில் நிறைய இருக்கு… மொத்ததில் அதுல இருந்தது இது தான்.. நம்மூ உடல் உறுப்பில் பெண் ஆனா அவள் உணர்வில் ஆணா தான் இருக்காங்க என்பது தான்….

அந்த மெடிக்கல் ரிப்போர்ட் காண்பிச்ச அன்னைக்கே நம்மூ உன் லைப் வேஸ்ட் பண்ணிக்காதே துகி.. நாம டைவஸ் பண்ணிக்க்கலாம்..

ஆனா இதை எப்படி நான் பேஸ் பண்ண போறேன் என்று தெரியல… குடும்பம் மட்டும் இருந்தா கூட பரவாயில்லை.. ஆனா பிசினஸ்… என்னால இந்த பிசுனஸை விட முடியாது துகி.. என் கிட்ட நம்மூ சொன்னது இது தான்…

எனக்குமே ஒரு லைப் பார்ட்னர் தேவையா இருந்தது சில்க்கி… நீ கூட கொஞ்ச நேரம் முன்ன சொன்னலே போன் செய்த போது கூட பேசினது அது போலான விசயமா தான் என்று…

ஆமா எனக்கும் தெரியுது தான் சில்க்கி. ஆனா நான் இது வரை இது பத்தி யார் கிட்டேயும் பேசுனது இல்ல. நம்மூ கிட்ட எல்லா விசயமும் பேசி இருக்கேன் ஆனா பாரு.. இது பேசுனது இல்ல.. இதுல நம்மூவையும் நான் குற்றம் சொல்ல முடியாது….

இதை நீ எப்படி எடுத்துப்ப என்று தெரியல…. சில்க்கி… பேருக்கு தான் இது எனக்கு செகண்ட் மேரஜ் ஆனா… அந்த ஃபீல் உண்மையில் எனக்கு கொடுத்தது நீ தான். நினைப்பேன்… சீ நாம அவளை பேச விடுறது இல்ல பேசனும்.. அவளை பத்தி புரிஞ்சிக்கனும்.. அதே போல என்னை பத்தியும் சொல்லனும் என்று..

ஆனா உன்னை பார்த்தா…. எல்லாமே எனக்கு மறந்துடுது…. இன்னொன்னு இதோ இப்போ கேட்டலே… டைவஸ் ஏன் ஆச்சு..? என்று…. அதை நீ கேட்டு விட போற என்ற பயம் சில்க்கி… ஆனா இப்போ தோனுது நான் பேசி இருக்கனும்.. கண்டிப்பா பேசி இருக்கனும்

முதல்ல நம்மூவை பத்தி உணராது நான் அவள் உணர்ச்சியோடு விளையாடிட்டேன்.. இப்போ உன் கிட்ட உண்மை சொல்லாது உன் மனதோடு விளையாடிட்டேன்…”

துகிலன் பேச பேச மஞ்சுளாவுக்கு என்ன சொல்வது என்று கூட புரியவில்லை… சத்தியமாக மஞ்சுளா இப்படியான ஒன்றை எதிர் பார்த்து இருக்கவில்லை…

அனைத்தும் சொல்லி முடித்த துகிலன் கடைசியாக.

“நான் ஏன் நம்மூ கூட உன்னை அதிகம் நெருங்க விடுறது இல்ல தெரியுமா..? நம்மூ எப்போ பார். துகி நீ பேர் வெச்சது சரி தான்… அவள் கை பிடிச்சேன் உண்மையில் அத்தனை சாப்ட்டா இருக்கு என்று சொன்னான்….” என்று துகிலன் சொன்னதும் மஞ்சுளாவுக்கு இதற்க்கு என்ன எதிர் வினை ஆற்றுவது என்று தெரியாது அமர்ந்திருந்தாள்…

இதுவும் சொன்னான்… நம்மூவின் நிலை தெரிந்து மூன்று வருஷம் ஆகுது. சமயதுக்கு நான் நம்மூவை அவள் என்பது போல தான் சொல்லுவேன்.. அது நம்மூக்கு பிடிக்காது… டா போட்டு பேசு துகி என்று தான் சொல்லுவா…”ஏன்றவனிடம் மஞ்சுளா சொன்னது இது தான்…

“ஏன் கிட்ட திக்கி திணறுனா பிடிக்காது என்று சொன்னவங்க ஏன் அவங்க கிட்ட நான் அவன் தான் என்று தைரியமா சொல்லு என்று ஏன் உங்க பிரண்ட் கிட்ட சொல்லவில்லை…” என்று கேட்டாள்….










 
Active member
Joined
Mar 22, 2025
Messages
50
"என் கிட்ட திக்கி திணறி பேசுனா பிடிக்காதுனு சொன்ன நீங்க, அவுங்க கிட்ட தைரியமாக நீ "அவன் தான்" என்று தைரியமாக வெளியே சொல் என்று சொல்லவில்லை"

இப்படி தான் மஞ்சு துகி கிட்ட கேட்டாளா மேம் இப்போ புரிந்தது
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
131
நர்மதா துகிலன் இரண்டு பேரும் சின்ன வயசில் இருந்தே ப்ரண்டுங்கிறதால் அவங்களால் கணவன் மனைவியா ஃபீல் பண்ண முடியல அதான் பிரிஞ்சிட்டாங்க என்று நினைச்சேன் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ குழந்தை கூட செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்தான் என்று நினைச்சேன் 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️

மஞ்சுவோடு வாழும் போது அவன் முதல் முறையா ஒரு பொண்ணை பத்தி தெரிஞ்சுக்கிற மாதிரி ஃபீல் பண்ணதும் நர்மதாவோடு இவன் வாழவே இல்லை என்று தோணிச்சு 😣😣😣😣😣

நர்மதா எல்லா விஷயத்திலும் இவ்வளவு தெளிவா இருக்கிறா இந்த விஷயத்தில் மட்டும் எப்படி புரிஞ்சுக்காம போயிட்டா 😕😕😕😕😕

துகிலன் கூட தான் இவளுக்கு முதல்ல கல்யாண பேச்சு வந்திருந்தா கூட ப்ரண்டுன்னு ஏதோ ஒரு வேகத்தில் கல்யாணம் செஞ்சு செஞ்சு அப்புறம் தான் தன்னை பத்தி புரிஞ்சுக்கிட்டா என்று நினைக்கலாம் ஆனா இவளுக்கு நிறைய அலையன்ஸ் பார்த்து ரிஜக்ட் செஞ்ச பிறகு தான் துகி கூட மேரேஜ் ஆச்சு ☹️ ☹️ ☹️ ☹️ ☹️ அப்போ ஆரம்பத்திலே ஏன்னு யோசிச்சு இருக்கலாம் 😔 😔 😖 😔 😖 😖

இப்போ இந்த விஷயத்தை வச்சு வைஷ்ணவி என்ன எல்லாம் கேலி பேசுவாளோ 🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,164
"என் கிட்ட திக்கி திணறி பேசுனா பிடிக்காதுனு சொன்ன நீங்க, அவுங்க கிட்ட தைரியமாக நீ "அவன் தான்" என்று தைரியமாக வெளியே சொல் என்று சொல்லவில்லை"

இப்படி தான் மஞ்சு துகி கிட்ட கேட்டாளா மேம் இப்போ புரிந்தது
அதே தான் பா
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
112
அருமையான பதிவு 😮😮😮😮
இந்த ஆங்கிளை ரோசிக்கவே
இல்லை.
என்ன இருந்தாலும் மஞ்சு கிட்ட உண்மைய சொல்லி இருக்கனும் இவன்.
இதுல தொரைக்கு மொதப் வைப்பை மஞ்சுவோட பழகவுடாம பயந்து போய் தடுக்க நெனைச்சிருக்கான்.
 
Member
Joined
Jul 9, 2024
Messages
24
Y
"என் கிட்ட திக்கி திணறி பேசுனா பிடிக்காதுனு சொன்ன நீங்க, அவுங்க கிட்ட தைரியமாக நீ "அவன் தான்" என்று தைரியமாக வெளியே சொல் என்று சொல்லவில்லை"

இப்படி தான் மஞ்சு துகி கிட்ட கேட்டாளா மேம் இப்போ புரிந்தது
Yes. Ithu thaan ketaen
 
  • Like
Reactions: grg
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
157
இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல..... கல்யாணத்துக்கு அப்புறம் தான் நர்மதாக்கு இந்த உண்மை தெரிஞ்சதா 🤔
அதுக்கு முன்னாடியே உணர்ந்து இருப்பா தானே ஏன் துகிலன்கிட்ட கூட சொல்லல......

நர்மதாவோட பெர்சனல் ஆ இருந்தாலும் இங்க மஞ்சுவோட லைப் ம் சம்மந்தப்பட்டிருக்கு.... இவன் அவகிட்ட உண்மையை சொல்லி இருக்கணும்....
 
Top