Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru jodi... 23.2

  • Thread Author
அத்தியாயம்…23.2
துகிலன் வீட்டிற்க்குள் நுழையும் போதே தெரிந்து விட்டது.. நர்மதா விசயத்தை சொல்லி விட்டாள் என்று… துகிலனுக்கு இதுவும் தெரியும்… கண்டிப்பாக நர்மதா தன்னை பற்றி கூடிய விரைவிலேயே அனைவருக்கும் சொல்லி விடுவாள் என்று..
ஆனால் அவனுமே எதிர் பார்க்காதது.. அவள் இன்றே சொல்லி விடுவாள் என்பது… துகிலனுக்கு வீட்டிற்க்குள் நுழையும் போதே ஆயாசமாக தான் இருந்தது..
தொடர் பயணம்.. அதோடு தூக்கமும் சரி வர இல்லாதது… அதோடு அவன் தனக்கு மஞ்சுளாவோடான திருமணத்தை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்… அதற்க்கு அடுத்த வாரமே தங்களின் வர வேற்ப்பை வைத்து விட வேண்டும் என்றும் எண்ணி இருந்தான்…
மஞ்சுளா சொன்னது போல என் திருமணம் நர்மதாவோடு அத்த கோலகாலமாக நடந்து முடிந்தது… ஆனால் எங்களுக்கு விவாகரத்து ஆன விசயம்.. நெருங்கிய உறவை தவிர வேறு யாருக்கும் தெரியாதெ…
ஏன் தொழில் முறையில் தங்களோடு தொடர்பில் இருப்பவர்களுக்கும் இன்னும் விசயம் தெரியாது..
அப்படி இருக்க தன்னை மஞ்சுளாவோடு வெளியில் பார்த்தால் அவளை தவறாக தாமே எண்ண தோன்றும்.. இது எல்லாம் ஏன் எனக்கு தோனவில்லை…
சரி போனதை சரி செய்திட முடியாது… அதனால் தான் தன் வரவேற்ப்பை அனைவரையும் அழைத்து வைக்க நினைத்து இருந்தான்..
அப்போது அனைவருக்கும் தெரிய வரும் நர்மதோடான என் விவாகரத்து.. பின் ஏன் என்ற கேள்வியும் வரும் என்று..
ஆனால் நர்மதா இன்று அவள் விசயம் தெரியப்படுத்தி இப்படி இதையும் இன்றே அதையும் சமாளிக்க வேண்டி இருக்கும் என்று நினைக்கும் போதே துகிலனுக்கு கண் கட்டியது..
அவன் நினைத்தது போல் தான் அவனை பார்த்ததுமே குடும்பத்தின் மொத்த பேருமே அவனை சூழ்ந்து கொண்டனர்..
வசந்தி தான். “துகிலா என்ன துகிலா இது.? இவள் என்ன என்னவோ சொல்றா துகிலா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு துகிலா. இது போல எல்லாம் நடக்குமா என்ன….? இவள் பொய் தானே சொல்றா துகிலா… நீ சொல் துகிலா இவள் பொய் தானே சொல்றா….?
நர்மதா இந்த விசயம் வீட்டில் சொல்லி ஒரு மணி நேரம் ஆகிறது… இந்த ஒரு மணி நேரமாக வசந்தி முதலில் நர்மதாவிடம் தான்..
“ஏதுல விளையாடுறது என்று இல்லையாடி… முக்கியமான விசயம் சொல்லனும் என்று எங்க எல்லோரையும் கூப்பிட்டு வெச்சிட்டு இது என்ன டி விளையாட்டு….” என்று வசந்தி முதலில் நம்பவில்லை..
வசந்தி என்ன வீட்டில் யாருமே என்ன சொல்றா இவள் என்பது போல தான் பார்த்தனர்… அதில் நம் வைஷ்ணவியுமே அடக்கம் தான்…
விவாகரத்து செய்ய காரணம் சொல்லாத போது ஆளுக்கு ஒரு காரணமாக இதுவா இருக்குமோ..? அதுவா இருக்குமோ..? என்று யோசித்தார்களே தவிர… இது என்று நினைத்தும் பார்க்கவில்லை…
சாதாரணமாக நர்மதா பெண்கள் உடையை விரும்பமாட்டாள் தான்.. ஜீன் ஷர்ட்… பனியன் இது போல தான் உடுத்துவது.. அதே போல் தான் அணிகலங்களும்… அது வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியும்..
இப்போது பெரும் பாலும் பெண்கள் நர்மதா அணிவது போல தானே அணிந்து கொள்கிறார்கள்… அதோடு அந்த உடைக்கு நகைகள் செட்டாகாதும் தானே. அதனால் நர்மதாவின் இந்த செயல்கள் யாருக்குமே வித்தியாசமாக தெரியவில்லை…
ஆனால் வசந்தி மட்டும் அடிக்கடி இது சொல்லுவார்.
“ஏன்டி எப்போ பார்த்தாலும் ஆம்பிள்ளை பசங்க கூடவே இருக்க.. சாரு கூட பேசு…. அவள் எப்படி இருக்கா… ஆம்பிள்ளை கணக்கா இருக்காதேடி….” என்று சொல்லுவார் தான்..
ஆனால் இது ஒரு சாதாரணமான வார்த்தை… வீட்டு பெண்கள் அடங்காது இருந்தால், வெளியில் அதிகம் அலைந்தால் இது போல ஒரு சில அம்மாக்கள் தன் பெண்ணை சொல்லுவார்கள் தான்…
ஆனால் உண்மையில் நர்மதா.. “ நான் ஆணாக மாறிக் கொண்டு இருக்கேன்…” சத்தியமாக இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை யாராலுமே.
வைஷ்ணவி கூட.. நர்மதாவை அதிர்ந்து தான் பார்த்தாள்..
அவளுக்கு நர்மதாவை பிடிக்காது தான்… அது தன்னை விட இந்த வீட்டில் நர்மதாவுக்கு முன்னுரிமை கொடுப்பதால் தான்..
இன்னும் கேட்டால் இருவருக்கும் இடையே சண்டை என்பது கூட இது வரைக்கும் வந்தது கிடையாது… இப்போது நர்மதவை பற்றி தெரிந்ததில் அய்யோ என்று தான் ஆகிவிட்டது…
ஒருவர் வெளியில் இருப்பவர்களோடு எத்தனை சண்டை வேண்டும் என்றாலும் போடலாம்… ஆனால் தனக்குள் போராடுவது என்பது நரக வேதனை தான்.. இது வரை நர்மதாவை பொறாமையாக பார்த்து கொண்டு இருந்த வைஷ்ணவி இப்போது பாவமாக பார்த்தாள்..
வைஷ்ணவியே இப்படி என்றால் வீட்டில் இருப்பவர்களின் மற்றவர்களின் மன நிலையை சொல்ல வேண்டுமா என்ன…
முதலில் நம்பாது பின் நர்மதா அனைத்து உண்மையும் சொல்லி தன் மருத்துவ அறிக்கையும் காட்டிய பின் நம்பினார்கள் தான்.. ஆனால் அதன் தாக்கம் அனைவரின் முகத்திலுமே எதிர் ஒளித்தது…
ஆனால் வசந்தி தான் நம்பவே இல்லை மகள் கொடுத்த மருத்துவ அறிக்கையை கையில் கூட வாங்காது…
“இந்த பேப்பர் சொல்லனுமா… நீ பையனா பெண்ணா என்று.. நான் உன்னை பெத்தவடி…. நான் உன்னை பெத்தவ….உன் அப்பா ஊரில் இல்ல. நீ எனக்கு சுகப்பிரசவத்தில் தான்டி பிறந்த.. உன்னை வெளியில் எடுத்தது எல்லாம் எனக்கு தெரியும் டி…. அந்த டாக்டர் அம்மா சொன்னாங்கலே… பெண் குழந்தை பிறந்து இருக்கா… வாழ்த்துக்கள் என்று…
கீழே கிடந்த அந்த மருத்துவ அறிக்கையை கை காட்டி…. “ இந்த டாக்டர் சொல்றார் என்று சொல்ற..என் கிட்ட சொன்னதுமே ஒரு டாக்டர் தானே டி… அப்போ அது பொய்யா…?” என்று ஆவேசமாக நர்மதாவிடம் கேட்டவர்..
அதே ஆவேசத்துடன் துகிலன் அன்னை துர்காவிடம்.
“அண்ணி நீங்க சொல்லுங்க. அண்ணி நீங்க சொல்லுங்க.. ஸ்கூல்ல இருந்து வந்த அன்னைக்கு… அப்போ கூட நம்ம துகிலா தானே இவளை அழச்சிட்டு வந்தான்..
மிஸ் அவன் கிட்ட தானே விசயம் சொல்லி அவன் கூட அனுப்பி வைத்தது… துகிலா என் கிட்ட .. “ அத்தை நம்மூ ஏஜ் அட்டண் பண்ணிட்டா… “ என்று சொன்னதுமே நான் உங்க கிட்ட தானே அண்ணி ஓடி வந்தேன்.
இது எல்லாம் அம்மா பார்க்க கூடாது.., அத்தை நீங்க தான் பார்க்கனும் என்று.. நீங்க தானே அண்ணி பார்த்து சொன்னிங்க…. இவள் இப்போ வந்து நான் பெண்ணே இல்ல என்று சொல்றா… அது எப்படி என்று கேளுங்க அண்ணி கேளுங்க…” என்று ஆவேசத்துடன் கத்தியவர் பின்…
கண்கள் பள பளக்க…. நர்மதாவிடம்…. “ ஏன்டி யார ஏமாத்த சொல்ற…. நர்த்தகன் ஆம்பிள்ளை சிங்கம் போல இந்த வீட்டுக்கு வாரிசா ஒரு ஆம்பிள்ளை பிள்ளையை பெத்துட்டு நான் பெண் இல்ல என்று சொல்றதை நம்ப நான் என்ன முட்டாளா முட்டாளா..?” என்று கத்தி கொண்டு இருந்த வசந்தியின் பேச்சுக்கு ஆதரவாக பேச தான் ஒருவர் இல்லை…
அது தான் மருத்துவ அறிக்கை விளக்கமாக சொல்லி இருக்கே… அதோடு இது சாத்தியமா என்று அவர் அவர் தங்கள் கையில் இருந்த கை பேசியின் மூலம் கேட்டு தெரிந்த பின்.. அமைதியாகி போகும் போது தான் துகிலன் அங்கு வந்தது…
துகிலனிடமும் வசந்தி அனைவரிடமும் சொன்னதையே சொன்னவர்.. பின் ஏதோ யோசித்தவர்…
“துகிலா துகிலா நீ தான் என் பெண்ணை இப்பட் சொல்ல வெச்சியா. நீ ஒன்னு கேட்டா அது எது இருந்தாலுமே செய்து கொடுத்துடுவாளே நான் பெத்த பெண்.. ஆனா இது இது அதிகம் துகிலா இது ரொம்ப ரொம்ப அதிகம்…” என்று ஆவேசத்துடன் பேசிக் கொண்டு இருந்தவர் திடிர் என்று துகிலனின் சட்டையை பிடித்துக் கொண்டு விட்டார் வசந்தி..
அனைவருக்கும் முன் துர்கா தான் முன் வந்து.. “ என்ன அண்ணி பண்றிங்க.. முதல்ல என் மகன் சட்டையில் இருந்து கையை எடுங்க….” என்று கத்தியவர் பின் அவரே எடுக்கவும் வைத்தார்…
துகிலன் எதுவுமே சொல்லவில்லை… வசந்தியின் நிலை துகிலனுக்கு புரிந்தது.. இத்தனை வருடமாக பெண்ணாக வளர்த்து கட்டி கொடுத்து பேரன் எடுத்த பின்… நான் பெண் இல்லை என்று சொன்னால் யாராக இருந்தாலுமே அதை மனம் உடனே ஏற்று கொள்ளாது… அதுவும் ஒரு அம்மா முடியவே முடியாது…
அதனால் அமைதியாக இருக்க. துகிலனின் இந்த அமைதியை வசந்தி வேறு விதமாக அர்த்தம் புரிந்து கொண்டு..
“நீங்க ஏன் அண்ணி என்னை கோபப்படுறிங்க.. துகிலா எல்லாத்துக்கும் சட்டு சட்டு என்று கோபம் படுவான் தானே. நான் அவன் சட்டையை பிடிக்கிறேன்.. பாருங்க கோபம் படாது அமைதியா இருப்பது. இதுல இருந்தே தெரியலையா… யார் மீது தப்பு..” என்ற
வசந்தியின் இந்த பேச்சில் தான் துகிலன் கோபமாக தன் அத்தையை பார்த்தது.
பார்த்தவன். . “ இப்போ நீங்க என்ன சொல்ல வர்றிங்க…?” என்று ஒரு மாதிரியான குரலில் தான் இதை கேட்டதும்…
வசந்தி துகிலனின் இந்த குரலுக்கு எல்லாம் அச்சப்படவில்லை… அவருக்கு தன் மகள் வாழ்க்கையோடு… இது என்ன இப்படி ஒன்று…. அது உண்மையாக இருக்காது என்ற நம்பிக்கை.. இதில் வேறு ஒன்று ஏதோ இருக்கு என்று நினைத்தார்… அவரின் அந்த நினைப்பு உறுதி செய்வது போல துகிலனின் சட்டையை தான் பிடித்த பின்பும் கோபம் கொள்ளாது போனதில்..
சட்டென்று அவர் இதை தான் நினைத்தது…. துகிலன் கேட்டதும்… “ நீ மஞ்சுளாவை எங்கேயோ பார்த்து இருக்க.. அவளை பிடிச்சி இருக்கு உனக்கு…. உனக்காக தான் உன் நம்மூ எது என்றாலும் செய்வாளே…. அது தான் விவாகரத்து கொடுத்துட்டா… என் பெண் மஞ்சுளாவை விட எல்லா வகையிலுமே உயர்த்தி.. அதுக்கு தான் இந்த காரணம் சொல்ல சொன்ன என் பொண்ணு சொல்லிட்டா…” என்று கிடைத்த கொஞ்ச நேரத்தில் ஒரு கதையை பின்னி இது தான் என்றும் சொல்லி விட…
தொடர்ந்த அலச்சலில் துகிலனுக்கு அத்தையின் இந்த பேச்சு ஒரு வித சலிப்பை கொடுத்தது.. இப்போதுமே அவனுக்கு தன் அத்தையின் மீது கோபம் வரவில்லை…
நர்மதா சொன்னதை ஏற்று கொள்வது அவ்வளவு சின்ன விசயம் கிடையாது என்பது அவனுக்கு தெரியுமே… அதன் தொட்டு அமைதி காத்தான்.
எப்போதும் போல நர்மதா துகிலனை கண்டு கொண்டவளாக.
“துகி நீ போய் ரெஸ்ட் எடு…. சொல்றத நான் சொல்லிட்டேன்… அவங்க ஏத்துக்கவும் கொஞ்சம் டைம் எடுக்கும் தான். நீ அடுத்து என்ன செய்யனுமோ… அந்த வேலையை பாரு …” என்று விட்டாள்….
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
157
துகிலனுக்கு அவனோட தவறு புரிஞ்சு அதை சரி செய்ய நினைக்கிறான்....
இனி மஞ்சுக்கான அங்கீகாரத்தை எல்லாருக்கும் தெரியப் படுத்துவான் 😊


நர்மதா உண்மையை சொன்னது சூப்பர்..... வசந்தி ஏத்துகிறது கஷ்டம் தான்....
நர்த்தகனுக்கு எப்படி சொல்லப் போறாங்க....
 
Well-known member
Joined
Mar 3, 2025
Messages
112
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் ஈரோபயலே தூங்க போகதேடா. எப்பவுமே பிரச்சினையை சால்வ் பண்ணிட்டு போகனும் டா. தள்ளி போட்டா இன்னும் நெறைய குண்டு வெடிக்கும் டா மடையா🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
286
Narmadha too late… kalyanam mudiya munname ippdi problem irukku nu doctor te poai irukkalam… ippo Narthagan romba pawam…

Vasanthi oru thaaya thavikkiranga…
 
Top