Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi...24...2

  • Thread Author
அத்தியாயம்….24…2

நரேனே… ( நர்மதா…) மஞ்சுளா தன்னை முத்தம் இடுவாள் என்று எதிர் பார்க்கவில்லை… ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போய் விட்டான்… ஆணோடு கை கோர்த்து கொண்டு பழகும் நரேனுக்கு ( நர்மதா…) மஞ்சுளாவின் இந்த முத்தம் ஒரு வித கூச்சத்தை கொடுத்தது…

அதுவும் துகிலன் மஞ்சுளாவை முறைத்த முறைப்பில் தன் கூச்சம் போய் குறும்பு வந்து ஓட்டி கொள்ள….

“ என்ன துகி…?” என்று சிரித்து பேச… துகிலனுமே நரேனின்… (நர்மதா) விளையாட்டு பேச்சில் இணைந்து கொண்டு சிறிது நேரம் பேசிய பின்… தான் இந்தியாவில் இல்லாத போது.. இனி என்ன என்பது போல பேசி இருந்து விட்டு நரேன்… ( நர்மதா..) அந்த அறையை விட்டு சென்று விட்டான்…

நரேன் ( நர்மதா…) சென்றதும் மஞ்சுளாவின் பக்கம் கோபமாக திரும்பியவன்… தன்னை பாவம் போல பார்த்து கொண்டு இருந்த மனைவியின் பாவனையில் தன் கோபம் மறந்து…

“யம்மா உனக்கு சந்தோஷம் வந்தால் எத்தனை முத்தம் கூட எனக்கு தா வேறு யாருக்கும் கொடுக்காதே….” என்று சொன்னவனிடம்..

“நம்ம நர்த்தகனுக்குமா…?” என்று ஒரு மாதிரி முகத்தை வைத்து கேட்டு கொண்டவளின் பாவனையில், துகிலனுக்கு தங்களின் தேன் நிலவு நாட்கள் அவனின் நியாபகத்தில் வர. சிறிது நேரம்… கொஞ்சி கொண்டான்.. தன் மனைவியை…

“என்ன திடிர் என்று. ராசாவுக்கு ஆசை வந்துடுச்சி….?” என்று கேட்டாள் மஞ்சுளா..

மஞ்சுளா தன்னை அழைத்த அந்த அழைப்பில்.. “ இது என்ன டி ராசா…?” என்று கேட்டவனிடம்..

“ஏன் நல்லா இல்லையா….?” என்று கேட்க.

“ம் நல்லா தான் இருக்கு… ஆனா அந்த ராசாவுக்கு முன் மன்மதன் என்று போட்டு கூப்பிட்டா நல்லா இருக்கும்…” என்று சொன்ன துகிலனிடம்.

மஞ்சுளா.. “ என்னது மன்மத ராசாவா…?” என்று கேட்டவள்… அவனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்த மஞ்சுளா.

தன் கையை இல்ல இல்ல என்பது போல சைகை செய்தவள்.. கூட முகத்திற்க்கும் அது போலான பாவனை கொடுத்ததோடு…

“நீங்க அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டிங்க…” என்று வேறு சொல்ல…

துகிலன் சும்மா விடுவானா…. “ பாவம் ஆச்சே… குழந்தை உண்டாகி இருக்கிறாளே… அதுவும் பார்க்கவே ரொம்ப டையாடா இருக்கிறாளே என்று ஒரு மாசம் சும்மா விட்டா.. நீ என்னை என்னை….” என்று சொல்லி மஞ்சுளாவை கொஞ்சினாலுமே, துகிலன் அடுத்த கட்டத்திற்க்கு செல்லவில்லை.. அவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு… அவர்களின் வாழ்க்கை ஒரு வித நேர்கோட்டுக்கு வந்து விட்டது…

துகிலன் குழந்தையிடம் பேசியதோடு விடவில்லை.. மறு நாள் நர்த்தகனை பள்ளிக்கு துகிலன் தான் அழைத்து சென்றது…

நேற்று குழந்தை பள்ளியில் கிண்டல் செய்து பேசினார்கள் என்று சொன்னதில் ஒரு சில கூட படிக்கும் பிள்ளைகளின் பெயர்களை சொன்னான்.. ஆனால் கூடவே மிஸ் என்று கூட ஆரம்பித்தான் தான்.

அதை பற்றி பேசவும்.. பள்ளியின் தலமை ஆசிரியர்களிடமும் ஒரு சிலது சொல்ல வேண்டி இருந்ததால் குழந்தையை அவன் தான் அழைத்து சென்றது…

மஞ்சுளாவுக்கு தெரிந்து விட்டது.. எதற்க்கு குழந்தையை பள்ளிக்கு கணவன் அழைத்து செல்கிறான் என்று..

அதனால்… “ நானும் உங்க கூட வரேன்…” என்று சொல்லி மஞ்சுளா காரின் அருகில் போய் நின்று கொண்டாள்…

நரேனுக்கும், ( நர்மதா..) புரிந்தது… அதனால்… “ பார்த்து பேசு துகி…. இது எல்லாம் அவன் கடந்து தான் வரனும்… நேத்தே நீ குழந்தைக்கு புரிவது போல சொல்லிட்டே தானே.. இன்னும் என்ன….? எல்லாத்துக்குமே நீ கூட கூட நிற்க கூடாது துகி… அவனை பார்த்து பேசும் பேச்சை அவனே தான் பேஸ் செய்யனும்….” என்று சொன்ன நரேன்… ( நர்மதா..) பேச்சையும் துகிலன் கேட்பதாக இல்லை..

அதோடு… “ குழந்தைக்கு என்ன வயசு ஆகுது… சொல்… ஃபேர் இயர்ஸ். ரொம்ப பெரிய மனுஷன் அவன் எல்லாத்தையும் பேஸ் பண்ணிப்பான். என்று நாம சும்மா நிற்க…?” என்று கோபமாக பேசியவன்.

பின்.. “ நான் நேத்து பேபிக்கு புரிவது போல சொன்னேன் தான்… அது இது வரை பேசியதை தெளிவு படுத்த வேண்டி தான். இனியும் புரிஞ்சிப்பான் தான். ஆனா எத்தனை பேச்சு அவன் புரிந்து கொள்வான்… அவன் குழந்தை… நாமும் போய் சொல்லனும்… இதை நாம முன்னவே செய்து இருக்கனும்.. இதுவே லேட் தான்..” என்று சொல்லி…

ஊருக்கு முன் காரின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த மனைவியிடம்…. “ நீ வந்தா மட்டும் நான் பேசுறதை பேசாம வந்துட போறேனா….” என்று மனைவியை சத்தம் போட்டு தான் அழைத்து சென்றது…

துகிலன் நர்த்தகன் அவன் வகுப்பு அறைக்கு செல்லும் வரை பள்ளியின் வளாகத்தில் காத்து கொண்டு இருந்தவன்.. அவன் வகுப்பு அறைக்கு சென்ற பின்..

தலமை ஆசிரியரின் அறைக்கு சென்றான்… சென்றவரை அந்த பள்ளியின் தலமை ஆசிரியர்…

ஒரு புன்னகையோடு வர வேற்று அமர வைத்தார்… அவருமே நரேன்… ( நர்மதா..) விசயம் தெரியும்… அதே போல் மஞ்சுளாவை மணந்து இருப்பதும் தெரியும்…

அதனால் துகிலன் சிற்றி எல்லாம் வளைக்காது… நேரிடையாகவே தலமை ஆசிரியரிடம்… நடந்தது அனைத்தையும் சொன்னவன்..

இதையும் சொன்னான்… “ கூட படிக்கும் பிள்ளைகள் இது போல சொன்னால் கண்டிக்கும் ஒரு ஆசிரியரே.. இது போல பேசினா.. எப்படி…? இவர்களுக்கே நாகரிகம் பண்பு தெரியாத போது இவர்கள் எப்படி பிள்ளைகளுக்கு அதை எல்லாம் சொல்லி கொடுப்பார் …” என்றும் காரமாக கேட்க.

அந்த தலமை ஆசிரியர் மன்னிப்பு கேட்ட பின்… நர்த்தகன் வகுப்பு ஆசிரியரை அழைத்து கண்டிக்கவும் செய்தார்…

“இனி அந்த குழந்தை மனசு நோகாம நடந்துக்க பாருங்க… அதே போல மத்த பிள்ளைகளுக்கும் இது எல்லாம் பெரிய விசயம் இல்ல என்று சொல்லி புரிய வைங்க…” என்று சொல்லி அனுப்பி வைக்க..

பின் மீண்டுமே அந்த தலமை ஆசிரியர் மன்னிப்பு கேட்டதற்க்கு…

“சரி இனி என் குழந்தை இது போல அழுது கொண்டு வராது பார்த்துக்கோங்க.. அது போதும்…” என்று சொல்லி விட்டு… குழந்தைக்கு இனி அடுத்து பிரச்சனை வராது பார்த்து கொண்டவன்..

அடுத்ததாக… மனைவிக்கு கிடைக்க வேண்டிய சமூகத்தில் இவள் தான் என் மனைவி என்று காட்டினால் மட்டும் போதுமா…? அது படி நடந்து கொள்ள வேண்டும் தானே…

அதன் முதல் படியாக. மனைவியை நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவளின் அம்மா வீட்டிற்க்கு அழைத்து சென்றான்… துகிலன் மஞ்சுளாவின் அம்மா வீட்டில் தங்கவில்லை என்றாலும், மனைவியை அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் போல இருக்கு என்று சொன்னால்..

இவன் அலுவலகம் செல்லும் போது மனைவியின் தாய் வீட்டில் விட்டு விட்டு வரும் போது அழைத்து கொண்டு வந்து விடுவான்…

அதனால் மஞ்சுளாவின் அக்கம் பக்கத்து வீட்டுனரும் முன் பேச்சு மறந்து.. இப்போது மஞ்சுளாவை மதிப்பாக தான் பார்க்கிறார்கள்… கூட..

ஒரு சில உதவியாக…. “ஏன் அண்ணன் பொண்ணுக்கு பிறந்த நாள் வருது… உன் புருஷன் ஓட்டல் வைத்து தான் நடத்துறார் தானே.. கொஞ்சம் சல்லிசா முடிச்சி கொடேன்…” என்று கேட்க.

மஞ்சுளாவுக்கோ… “ என்னது சல்லிசாவா….?” என்று அதிர்ந்து தான் போய் விட்டாள்… அவர் நடத்துவது நட்சத்திர ஓட்டல்… இதுல எப்படி சல்லிசா.. என்று நினைத்தவள்…

பின்… “ எனக்கு இது பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாதுக்கா…” என்று சொல்லி விட்டாள்..

முதலில் ஓட்டல் பற்றி கேட்டவரே பரவாயில்லை என்பது போல இன்னொரு பெண்மணி…

முதலில் “மஞ்சு உனக்கு நல்ல இடமா தழையனும் என்று எத்தனை தெய்வம் கிட்ட வேண்டி கிட்டேன் தெரியுமா….?” என்று ஆரம்பித்தார்..

மஞ்சுளாவோ… அந்த பெண் மணியின் பேச்சுக்கு ‘ நீ தானே…’ என்று மனதில் நினைத்து கொண்டார்.. இவளின் அக்கா ஓடி போனதை இந்த வீதி முழுவதுமே பரப்பிய பெருமை இவளை தான் சேரும்.அதோடு இந்த பெண் மணி தான் அன்று இரவு மொட்டை மாடியில்.

பணக்கார பசங்க பிடித்து இருந்தா பழகி பின் விட்டு விடுவாங்க.. என்ன ஏதூ என்று முதல்லையே கேட்டு தெளிவு படுத்திக்கோ… இப்போவே என்றால் குழந்தையை ஏதாவது…” அப்படி சொன்னது இந்த பெண்மணி தான்.

ஆனால் அதை பற்றி ஒன்றும் பேசாது சிரித்து இருக்க. இது தான் விசயம் என்பது போல மெல்ல….

“நான் கேள்வி பட்டேன்… k.v க்ரூப் உங்களுடையது என்று….”

அந்த பெண்மணியின் கேள்விக்கு… “ ஆமாம்…” என்று தலையாட்டிய மஞ்சுளா.. இவங்க என்ன குண்டை தூக்கி போட போறாங்க என்று நினைத்ததிற்க்கு ஏற்ப தான் அந்த பெண்மணியின் அடுத்த பேச்சு இருந்தது..

“அந்த க்ரூப் வீடு எல்லாம் கூட கட்டி கொடுக்குதாம்மே என் மவன் சொன்னான்… உனக்கே தெரியும்.. என் மவன் இரண்டு வருஷமா தான் வேலைக்கு போயிட்டு இருக்கான்… எனக்கு அவனுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்கனும் என்று ஆசை. ஆனா அவன் சொல்றான் வீடு வாங்கிட்ட பின் தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று தீர்த்து சொல்லிட்டான்…

வயசு வேறு ஏறிட்டே போகுது…” என்று அந்த பெண்மணியின் பேச்சு நீண்டு கொண்டே போக..

மஞ்சுளாவுக்கோ இவங்க என்ன சொல்ல வராங்க என்று குழப்பம்..

ஆனால் கடைசியாக அந்த பெண்மணி சொன்ன…. “ இல்ல உங்க வீட்டுக்காரர் கட்டி முடிச்ச வீடுல விற்காதது இருக்கும் லே… அதை பாதி விலைக்கு எங்களுக்கு கொடுக்க சொல்லேன்…” என்ற பேச்சில் மஞ்சுளா என்ன இது என்று தான் அதிர்ந்து பார்த்தாள் என்பதை விட.. இவங்க புரிந்து பேசுறாங்கலா..? இல்லை புரியாது பேசுறாங்கலா….?

புரியாது பேசும் அளவுக்கு விவரம் தெரியாத பெண்மணி இல்லை என்று மஞ்சுளாவுக்கு தெரியும்… இது என்ன துணியா. ஸ்டாக் க்ளியரன்ஸ் போட… நினைத்ததை கேட்டும் விட்டாள்..

அதன் பின் என்ன.. முன் வேறு மாதிரி பேசியது.. இப்போது இவர்களின் ஓட்டலில் பிறந்த நாள் விழா வைக்க கேட்ட பெண்மணியும் வீடு குறைந்த விலைக்கு கேட்ட பெண்மணியும்…

“அர்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானா. அது போல இருக்கு… அக்கா ஓடி போய் கல்யாணம் ஆகாது இருந்தது எல்லாம் மறந்து போயிடுச்சி போல..” என்று பேசிக் கொண்டனர்..

இதுவுமே மஞ்சுளாவின் காதில் விழுந்தது தான்.. மனதிற்க்குள் சிரித்து கொண்டாள்…. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்… உலகில் மிக பெரிய சிறை நம் மனச்சிறை தான்…

இவர்கள் என்ன நினைப்பார்கள்… அவர்கள் என்ன நினைப்பார்கள் என்றே மனது நினைத்து கொண்டு இருந்தால், நாம் சுதந்திரமாக வாழ முடியாது… இவர்கள் இவ்வளவு தானா…

இதோ தானே பெண் கேட்டு பின் தன் அக்கா செய்த செயலின் மூலம் தன்னை விலக்கி வெளியில் பெண் எடுத்த அவளின் அத்தையும் மாமாவும் இவளை பார்க்க வீட்டிற்க்கு வந்தனர்…

அவர்கள் தான் நேரத்திற்க்கு தகுந்தது போல அவ்வப்போது மாறிக் கொண்டு இருந்தார்கள்.. ஆனால் மஞ்சுளாவின் பெற்றோர்கள் எப்போதும் போல தான் அன்றும் நடத்தினார்கள் ..இதோ இன்றும் வந்தவர்களை வர வேற்று முதலில் தண்ணீர் கொடுத்து பின் காபி கலந்து கொடுத்தவர்கள் அவர்கள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து பின் என்ன விசயம் என்று கேட்ட போது தான் அத்தையின் கணவன்…

“சின்ன மருமகள் வீட்டில் ரொம்ப பிரச்சனை பண்ணிட்டு இருக்காம்மா… வெளியில் போக சொன்னா. சொத்து பிரிச்சி கொடு என்று சட்டம் பேசுது இந்த வீட்டை தவிர மத்தது எல்லாம் என் சுய சம்பாத்தியம் தான்… நான் யாருக்கு வேணா கூட எழுதி வைக்கலாம். ஆனா பாழா போன இந்த மனசு தான் கேட்க மாட்டேங்குது என்ன செய்ய….?” தன் குறையை மனிதர் கொட்டினார்..

அவர் நான் சம்பாத்தியம் செய்தது.. உண்மையில் சி.ஓக்கு நிறைய சம்பளம் தான்.. ஆனால் அந்த சம்பளத்தை கொண்டு ஒருவர் சம்பாத்தியத்தில் இரண்டு பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து திருமணம் செய்து என்று முடித்து அவரிடம் இத்தனை சொத்துக்கள் இருப்பது என்றால்… நான் அது எப்படி வந்தது என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமோ…

எத்தனை பேர் வயிறு எரிச்சல் பட்டு கொண்டு அந்த லஞ்ச பணத்தை இவருக்கு தந்து இருப்பார்கள்.. அதன் மூலம் வந்த சொத்தை. இத்தனை செய்தும்… ஆசிரமம் முதியோர் இல்லம் இதற்க்கு எல்லாம் கொடுக்க விருப்பம் இல்லையாம்.. சிரித்து கொண்டாள்..

கணபதி கடைசியாக தான் வந்ததிற்க்கு உண்டான காரணத்தை சொல்லி விட்டார்…

அதாவது அவர் சொன்னதின் சாராம்சம் இது தான்… இப்போது அவர்கள் இருப்பது பரம்பரை சொத்தாம். அதை இப்போதே தங்களுக்கு தந்து தான் ஆக வேண்டும் என்று அவரின் இரண்டு பிள்ளைகள் சொல்றாங்கலாம். இவரும் தந்து விட முடிவு செய்து விட்டாராம்..

ஒரு முக்கியமான இடத்தின் பெயரை சொல்லி அங்கு ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி போட்டு இருக்கேன். நாங்க அங்கு வீடு கட்டிட்டு போகலாம். அதை மட்டும் தான் எங்களுக்கு வைத்து கொள்ள இருக்கேன்.. காரணம் அந்த இடம் மருத்துவமனை பின் அனைத்து வசதிகளும் இருக்கும் மெயினான இடம்…. வயதான காலத்தில் எல்லாம் பக்கம் பக்கம் இருந்தால் தான் எங்களுக்கு நாளை பிரச்சனை இல்லாது இருக்கும்… ஜீவனம் பண்ண கவர்மெண்ட் கொடுக்கும் பென்ஷன் பணம் போதும்..” என்று சொன்னவர் கடைசியாக.. மஞ்சுளாவிடம்..

“உன் வீட்டுக்காரர் கன்சேக்ஷனும் வைத்து நடத்துறார்லேம்மா… அவர் கட்டி கொடுத்தா நல்லா இருக்கும்.. வயசான காலத்தில் தெரியாதவங்க கிட்ட கொடுத்து எப்படி கட்டுறான். நல்ல பொருள் வைத்து கட்டுறானா என்று பார்க்க முடியாது லேம்மா. இதே உன் வீட்டுக்காரரா இருந்தா சொந்தம் நம்பி இருக்கலாம் அது தானும்மா..” என்று தான் வந்ததிற்க்கு உண்டான காரணம் கடைசியாக சொன்னார்.

மஞ்சுளாவோ மனதில் இவருமா என்று தான் நினைத்தாள்.. வெளியில்… “ நான் அவர் கிட்ட சொல்றேன் மாமா.” என்று வெளியில் நல்லவிதமாக தான் சொன்னது….

போகும் போது கணபதி மஞ்சுளாவை ஆசீர்வாதம் செய்வது போல செய்தவர்.

“என்ன செய்யிறது.. உன்னை என் மருமகளா ஆக்கா எங்களுக்கு கொடுத்து வைக்கல.. நடுவுல என்ன என்னவோ நடந்து விட்டது…” என்று சொல்லி விட்டு செல்பவரை பார்த்து மனதில் சிரித்து கொண்டார் மஞ்சுளா..

தாய் வீட்டில் இரண்டு நாட்கள் விட்ட துகிலன் அன்று மாலையே வந்து மனைவியை அழைத்து கொண்டு தன் வீடு வந்து விட்டான்..

வழியில் தன் வீட்டு அக்கம் பக்கத்தவர் பேசியது அனைத்தும் சொன்னவள்… தன் அத்தை அத்தை கணவன் வந்து போன விசயத்தையும் அவர்கள் வீடு கட்டி கொடுக்க சொன்னதையும் கூறியவள் கடைசியாக…

போகும் போது தன்னை வாழ்த்தி சென்றது சொன்னவள்..

கடைசியாக அவர் தன்னை தன் அக்கா ஓடி போனதற்க்கு தன்னையும் பேசிய பேச்சையுமே சேர்த்து தான் சொன்னாள்…

முதல் பேச்சுக்கு எல்லாம் சிரித்து கொண்டு கேட்டு கொண்டு இருந்த துகில.. அதுவும் அந்த சல்லிசா வீடு கேட்டாங்க என்று மனைவி சொன்னதில் துகிலனுக்கும் அத்தனை சிரிப்பு வந்து விட்டது…

“இப்படி எல்லாமா பேசுவாங்க….?” உயர் வகுப்பு குடிமகனுக்கு ஒரு சில மத்தியதரவர்க்கத்தினர்… கல் விட்டெறிந்து பார்ப்போம்… கிடைத்தால் மாங்கா… என்ற அந்த ரீதியான மனோபாவம் தெரியவில்லை போல…

“அவங்களுக்கு வீடு விற்காது போனாலுமே பிள்ட்டிங்க வேல்யூ தான் குறையும். இடத்தின் வேல்யூ அதிகரிக்கும் என்று தெரியாதா…” என்று கேட்டவனிடம் தான்.

மஞ்சுளா.. கல் விட்டெரிந்தி பார்ப்பது… அவங்களுக்கு எல்லா விசயமும் தெரியும் தான்.. நமக்கு புதுசா கல்யாணம் ஆகி இருக்கு… நம்ம ரிசப்ஷனுக்கு அவங்களுமே தான் வந்து இருந்தாங்க…. நீங்க என்னை பார்த்த பார்வையை வைத்தே.. உங்களுக்கு என் மீது இருக்கும் மயக்கம் தெரிந்து இருக்கும்.. அந்த மயக்கத்தில் நான் என்ன கேட்டாலும் நீங்க செய்து கொடுத்துடுவீங்க என்று நினச்சி இருப்பாங்க…” என்று விளக்கமாக சொல்ல…

“என் மயக்கம் உன் அம்மா வீட்டு வீதி முழுவதுமா பரவி இருக்கு…” என்று அதை சொல்லியும் சிரித்து கொண்டு இருந்தவனிடம் தான்..

அத்தை கணவன் சொன்னதை மஞ்சுளா சொன்னது… இதற்க்கு ஒன்றும் சொல்லாது அமைதியாக கணவன் இருக்கவும்.. திரும்பி பார்த்தவள்..

“என்னங்க….?” என்று கேட்டும் அமைதியாக கணவன் இருக்க.. பின் ஏதோ யோசித்தவளாக.

“ஏங்க மாமா கேட்டதுக்கு உங்க கிட்ட சொல்றதா சொன்னேன்… அவ்வளவு தான்.. உடனே முடியாது என்று சொன்னா அவ்வளவு நல்லா இருக்காது… ஒரு இரண்டு நாள் கழித்து அவருக்கு ஏற்கனவே முடித்து கொடுக்கும் பிரஜெக்ட் எல்லாம் நிறைய இருக்கு என்று சொல்லிடுறேன்….”

கணவனின் இந்த மெளனத்திற்க்கு காரணம் இதுவாக இருக்கும் என்று சொன்னாள்…

காரை செலுத்தி கொண்டு இருந்த துகிலன் ஒரு ஓரமாக நிறுத்தி விட்டவன் மனைவியை பார்க்க ஏதுவாக திரும்பி அமர்ந்தவன்…

“உன் மாமாவுக்கு நீ என் ஹஸ்பெண்ட் கட்டி தருவார் என்று கமிட்மெண்ட் கொடுத்தா கூட தப்பு இல்ல டா… ஏன்னா உனக்கு அந்த உரிமை இருக்கு.. எனக்கு ஏற்கனவே எத்தனை கமிட்மெண்ட் இருந்தாலுமே நான் செய்து கொடுத்து விடுவேன்.. உண்மையில் இருக்கு..

நரேன்.. ( நர்மதா….) அமெரிக்காவுக்கு போயிட்ட தொட்டு எல்லாமே நான் தான் பார்க்கும் படி இருக்கு… இதுல ஒரு ப்ரீ என்ன என்றால், விக்னேஷ்… பிரதீப் எல்லாம் அவங்க அவங்களுடையது தனியா பிரிச்சி கொடுத்ததுலே ஒரளவுக்கு என்னால மேனஜ் பண்ண முடியுது… உங்க மாமா வீட்டை எக்ஸ்ட்ரா ஆளை வைத்து கூட செய்து முடித்து விடுவேன்..” என்று இப்போது துகிலன் மனைவிக்கு விளக்கம் அளித்தான்.

பின் ஏன் பேசாது அமைதியாக இருந்தான்… நினைத்தவள் கணவனிடம் கேட்கவில்லை..

ஆனால் துகிலன் சொன்னான்.. “ உன் அக்கா அது போல போகாது இருந்தால் நீ உன் அத்தை மகனை தான் மேரஜ் செய்து இருந்து இருப்பளே என்று….?”
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
131
வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் 🙁🙁🙁🙁

ஸ்கூல்ல போய் வார்ன் பண்ணிட்டான் 🤗 🤓 அப்போ தான் டீச்சரும் சரியா நடந்துப்பாங்க 🤭🤭

அக்கா மாதிரி இருப்பான்னு சொல்லி மஞ்சுவ வேண்டாம் என்று சொல்லிட்டு இப்போ மருமக சரியில்லை என்றதும் எப்படி எல்லாம் மாத்தி பேசுறாங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

மஞ்சுவ மருமகளா ஆக்காததுக்காகவே வீடு கட்டி கொடுப்பான் போல 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
 
Last edited:
Active member
Joined
Mar 22, 2025
Messages
50
துகி கேட்டதுல தப்பு இல்லை ஆனால் இந்த நேரத்தில் கேட்டது தப்பு தான் இப்போ இந்த விசயம் தேவையா துகி இதுல இவருக்கு மன்மதானு கூப்பிடல வேற வருத்தம் உனக்கு எத்தனை கல்யாணம் செஞ்சாலும் ம்க்கும்
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
157
ஆக மொத்தம் இவங்களுக்கு எல்லாம் எதாவது பேசிட்டே இருக்கணும் அடுத்தவங்களை பத்தி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதுவும் விக்காத வீடு பாதி விலையில வேணுமாம் 🤣🤣🤣🤣


ஆமா தான்... மஞ்சு அக்கா ஓடிப் போனதால தான் அவ உனக்கு கிடைச்சுருக்கா.....
இப்போ அதுக்கு என்ன 😅
 
Well-known member
Joined
Jul 14, 2024
Messages
327
ஆக மொத்தம் இவங்களுக்கு எல்லாம் எதாவது பேசிட்டே இருக்கணும் அடுத்தவங்களை பத்தி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதுவும் விக்காத வீடு பாதி விலையில வேணுமாம் 🤣🤣🤣🤣


ஆமா தான்... மஞ்சு அக்கா ஓடிப் போனதால தான் அவ உனக்கு கிடைச்சுருக்கா.....
இப்போ அதுக்கு என்ன 😅
Athukku மஞ்சு akka kku avangha mama kku வீடு கட்ட porar namma hero
Only for manju 😉😉😉
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
157
Athukku மஞ்சு akka kku avangha mama kku வீடு கட்ட porar namma hero
Only for manju 😉😉😉
அதெல்லாம் பொண்டாட்டி சொன்னா ப்ரீயாவே கட்டிக் குடுப்பான்.... இப்போ தான் காதல் மன்னன் ஆயிட்டானே 🤣🤣🤣🤣🤣
 
Active member
Joined
May 11, 2024
Messages
143
துகில் கேள்விக்கு மஞ்சு என்ன சொல்ல போகிறாள் ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்டான் மஞ்சு கிட்ட 🤔🤔🤔🌺🌺🌺
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
286
Adhane engeda sontha bandham varala innum nu parthen…

Enna da Thugila… possessive ah?? 🤭🤭🤭
 
Top