Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Puthiyathoru Jodi....24...5 Final...

  • Thread Author
அத்தியாயம்…24…5 நிறைவு பகுதி….

மஞ்சுளா தான் வைஷ்ணவி எதற்க்கு இப்படி பேசினாள்.. பின் ஏன் இப்படி ஓடுகிறாள் என்று புரியாது வைஷ்ணவி சென்ற திசையை நோக்கிய பார்த்து கொண்டு இருந்தவளை பின் பக்கம் இருந்து அணைத்து கொண்டவன்..

“புருஷன் நான் இருக்க..? அங்கு என்ன டி பார்வை….?” என்று மனைவியின் காதருகில் வந்து பேசியதில் அவனின் அடர்ந்த மீசை உராய்ந்ததில் அவளின் மேனி ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது தான்..



இருந்தும் அதை கணவனிடம் காட்டாது அந்த அணைப்பில் சட்டென்று மஞ்சுளாவின் பார்வை நர்த்தகனிடம் தான் நகர்ந்தன.. நல்ல வேளை குழந்தை அங்கு குளத்தில் இருக்கும் வாத்தை பார்த்து கொண்டு இருந்தான்…

குழந்தை பார்க்கைல்லை என்று நிம்மதி அடைந்தாலும் இது என்ன இது போல வெட்ட வெளியில் என்று நினைத்து கணவனின் அணைப்பில் இருந்து விலக பார்த்தாள்..

ஆனால் அவன் விட்டால் தானே…. “ என்னங்க இது குழந்தை எதிரில்….” குழந்தை வேறு பக்கத்தில் இருக்க… அவன் காதில் விழ கூடாது என்று மஞ்சுளா ரகசியம் பேசுவது போல மெல்ல பேச…

துகிலனும் மனைவி போலவே அதே குரலில்.. “ குழந்தை வாத்த பார்த்துட்டு இருக்கான்…” என்று அவன் இதை சொன்ன போது கூட முன் போலவே தான் அவனின் மீசை முடி உராய்வது போல கேட்டது…

மஞ்சுளாவுக்கு இன்னும் கூச்சம் அதிகம் ஆகியது…

அதில் ரகசிய குரல் வேறு மாதிரியான குரலாம மாறி போனவளாக… “ பப்ளிக் ப்ளேஸ்ல…” என்று பேச்சை இழுக்க.

“இது பப்ளிக் கிடையாது டி… “ என்று சொன்னவன் ஒரு கை மனைவியின் வயிற்று பகுதியில் கை வைத்து வயிற்றை மெல்ல தடவி விட..

“அதுக்கு என்று…” என்று கேட்ட மஞ்சுளாவின் குரலில் ரகசியத்தை மீறி வேறு ஒன்று குரலில் தெரிந்தது.

அவளுக்குமே கணவனின் இந்த அருகாமை நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்து இருக்கிறது… அது இன்னும் வேண்டும் என்றும்.. இதற்க்கு மேலும் வேண்டும் என்றும் கேட்க… ஒரு மாதிரியான அவஸ்த்தை நிலையில் தான் பெண்ணவளும் இருந்தாள்…

மனைவியின் நிலை கணவனுக்கு புரிந்து விட்டது போல… “பேபியை தூங்க வெச்சிடு டா….” என்று சொல்லி கொண்டு இருந்த போது தான் நர்த்தகனின் கவனமும் வாத்திடம் இருந்து இவர்கள் பக்கம் வந்தது…

தந்தையை பார்த்ததுமே… “ டாடி…” என்று இவனிடம் தாவ…

துகிலனும் குழந்தையை தூக்கி கொண்டவன்.. “ பேபி தூக்கம் வருதா…?” என்று கேட்டான்…

“வரலையே டாடி…” என்றவன்.. அதோடு விடாது…

“நீங்க பேபி என்று சொன்னா நான் இன்னைக்கு உங்கள தூங்க விட மாட்டேன்…” என்றது தான் துகிலன்..

“அய்யோ ராசா. இனி நான் உன்னை பிக் மேன் என்று கூட கூப்பிடுறேன் ராசா… இன்னைக்கு நான் தூங்கும் ஐடியா இல்லை தான்.. ஆனா அந்த தூக்க கெடல் வேறு ஒன்றுக்கு டா பிக் மேன்…” என்று சொல்ல குழந்தைக்கு தந்தையின் வார்த்தையின் அர்த்தம் புரியாது போனாலும்.. தந்தை தன்னை அழைத்த அந்த பிக் மேனில் மனது குளிர்ந்து போனது..

அதனால் நான் பெரிய மனதன் தான் என்பதை தந்தையிடம் உடனே நிரூபித்து காட்டி விட வேண்டும் என்றும் அந்த குழந்தை மனது நினைத்தது போல.

அதனால்.. “ நியூ பிராஜெக்ட் ஒர்க்கா டாடி…?” என்று மகன் கேட்டான்.

இந்த பேச்சு எல்லாம் நர்த்தகனை துகிலன் தூக்கி கொண்டு வீட்டிற்க்கு நுழையும் போது நடந்தது… மகன் இப்படி கேட்கவும் நடந்து வந்து கொண்டு இருந்தவன் சட்டென்று நின்று விட்டான்…

அதோடு விடாது மகன் கேட்ட.. “ ரொம்ப சீக்ரெட்டா செய்ய வேண்டியதா டாடி….?” என்று கேட்டு வைக்க..

பின் தொடர்ந்து வந்த மஞ்சுளாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. துகிலனுக்கும் சிரிப்பு வந்து விட்டது தான்..

சில சமயம் சில பிராஜெக்ட்க்கு கோட்டேஷன் தயார் செய்வது.. ரகசியம் காக்கா வேண்டியும்… ஒரு சில சந்தேகம் வந்தாலுமே அலுவலகத்தில் ஒரு கொட்டேஷனை அலுவலக ஊழியர்களை வைத்து தயார் செய்த பின்…

உண்மையான அனுப்ப வேண்டிய கொட்டேஷனை நர்மதாவும் துகிலனும் வீட்டில் தனித்து செய்து முடிப்பர்.. அதை தான் இப்போது மகன் சொல்வது…

சிரிப்பு வந்தாலும் சிரிக்காது.. “ ஆமா செல்லம்.. இது யாரின் பார்வைக்கும் தெரியாது.. ரொம்ப ரொம்ப சீக்ரெட்டா செய்ய வேண்டிய விசயம்.. அது தான் நீ சாப்பிட்டு தூங்கு… அம்மாவையும் என்னையும் டிஸ்ட்டப் செய்ய கூடாது.” என்றும் சேர்த்து சொன்னான்..

இந்த பேச்சில் மஞ்சுளா மெல்ல. “ குழந்தை கிட்ட என்ன பேச்சு.?” என்று கேட்டவள் முறைத்தும் வைத்தாள்…

ஆனால் அவள் குழந்தை என்று சொல்லப்பட்ட நர்த்தகனோ… “ டாடி ம்மா எதுக்கு….நீங்க மட்டும் அந்த சீக்ரெட் ஒர்க் பாருங்க… ம்மா என் கூட தூங்கட்டும்…” என்று சொல்லி தந்தையின் தோளில் ஓய்யாரமாக சாய்ந்து கொண்டு இருந்தவன் பேசிய பேச்சில்..

“ஏய் ஏய்… ஏன்டா ஏன்…? ம்மா எனக்கு எல்ப் பண்ணுவாங்க டா….” என்று அழாத குறையாக தந்தை மகனிடம் கெஞ்சி கொண்டு இருந்தான்..

அதை பார்க்க பார்க்க மஞ்சுளாவுக்கு சிரிப்பாக இருந்தது..

ஆனால் நர்த்தகன் நான் துகிலன் குழந்தை என்பது நிரூபிக்கும் வகையாக… “ப்பா ம்மா வயித்துக பேபி இருக்கு… ம்மா நல்லா தூங்கனும்.. ம்மா தூங்கினா தான் பேபியும் தூங்கும்…”

முன்பு நர்த்தகன் பகலில் தூங்கி விட்டதால் இரவில் தூக்கம் வராது மஞ்சுளாவின் பக்கத்தில் படுத்து கொண்டு..

முதலில்.. “ ம்மா கதை சொல்…” என்று சொல்லி கேட்டு கொண்டு இருந்தவன்..

பின்.. “ ம்மா உங்க கதை நல்லா இல்ல.. நான் உங்களுக்கு நல்ல நல்ல கதையா சொல்றேன்…” என்று சொல்லி அவன் வரிசையாக கதைகளை சொல்லி கொண்டு போக.

பாவம் மஞ்சுளாவுக்கு அப்போது குழந்தை உண்டாகி மூன்று மாதம் தான் ஆன நிலையில் . வாந்தி எடுத்து சோர்ந்து போய் இருந்தவள் மகனின் கதைகளை அந்த சோர்விலும் கேட்டு கொண்டு இருந்ததை பார்த்து அன்று துகிலன் தான் நர்த்தகனிடம் இப்படி சொன்னது..

ஆனால் மகன் அதை தனக்கே திருப்பி படிக்க.

“டேய் டேய்… முடியல டா. டாடி பாவம் இல்ல..? ” என்று கேட்டவன் கேட்ட வார்த்தை ஏற்ப முகத்தையும் பாவம் போல வைத்து கொண்டான்..

அதை பார்த்த மஞ்சுளாவினால் முடியவில்லை… சிரித்து விட்டாள்…. இத்தனை பேச்சும் பேசிக் கொண்டும் பேசிக் கொண்டே வீட்டிற்க்குள் வந்து விட்டு இருந்தனர்..

அப்போது தான் சரியாக திருமணத்திற்க்கு சென்று இருந்த துகிலனின் அப்பா அம்மா துர்காவும் கனக சபையும் வீட்டிற்க்குள் நுழைய… அவர்களின் பார்வைக்கு ஒரு குடும்பமாக மகன் மருமகள் குழந்தையோடு நின்று கொண்டு இருக்கும் அந்த காட்சி… கண்ணில் பட்டது..

அதுவும் மஞ்சுளா வயிற்றை பிடித்து கொண்டு சத்தமாக சிரிக்கும் போது தந்தையும் மகனும் ஒரு சேர..

“பாப்பா இருக்கு..” என்று பதறியதில்… ஒரு தாயாக துர்காவுக்கு புரிந்தது.. மகனின் இது வரை இது போலான மலர்ச்சியாமன் முகம்… இலகுவான தன்மை.. ஒரு தாயாக பார்க்காத ஒரு புதிய பரிமாணமாக மகனை பார்த்தார்..

நர்மதாவிடம் நங்கு பேசுவான் தான்.. ஆனால் இது போல மகிழ்ந்து… அதுவும் மனைவியை பார்க்கும் போது அவன் முகத்தில் தெரிந்த சிறிய அந்த வெட்கம்… ஒரு தாயாக… மனது நிறைந்து போனது…

அவர்களையே பார்த்து கொண்டு வந்தவர். மஞ்சுளாவிடம்..

“எப்படிம்மா இருக்க…? இப்போ ஒரளவுக்கு சாப்பிட முடியுதா… வாந்தி குறைந்து இருக்கா….? லாஸ்ட்டா எப்போ டாக்டர் கிட்ட செக்கப் போன… அடுத்த முறை எப்போ என்று சொல்லி நானும் உன் கூட வரேன்..” என்று அடுத்து அடுத்து மஞ்சுளாவின் உடல் நிலையை நலம் விசாத்தவருக்கு மஞ்சுளா அனைத்திற்க்கும் தன்மையாக பதில் அளித்தாள்..

துகிலன் தன் அன்னையின் பேச்சின் மாற்றம் புரிந்தது தான்… ஆனாலும் ஏன் என்று கேட்டு கொள்ளவில்லை.. ஒரளவுக்கு அவனுக்கு புரிந்தது.

முன் அன்னைக்கு நர்மதாவை விவாகரத்து செய்ததே பிடிக்கவில்லை.. அதோடு மஞ்சுளாவை திருமணம் செய்ததில் நர்மதாவோடு மஞ்சுளாவை ஒப்பிட்டு… எதிர் மஞ்சுளா நர்மதாவோடு உயர்த்தி என்று நினைத்து இருக்கிறார் என்பதும் தெரிந்து.. இப்போது அனைத்தும் தெரிந்து மருமகளிடம் நல்ல முறையில் இருக்கிறார்… என்பது புரிந்தது…

பின் இரவு உணவாக சாப்பிட்டு முடித்த பின் தான் தன் மனைவி மகனை தங்கள் அறைக்குள் அனுப்பினான். அதுவும் வேலையாட்கள் நீங்க சொன்னதை செய்து முடித்து விட்டோம் என்று சொன்ன பின் தான்…

“குழந்தையை மட்டும் தூங்க வை சில்க்கி.. நீ தூங்கிடாதே… புது பிராஜெக்ட் வேலை இருக்கு. அதுவும் ரொம்ப ரொம்ப ரகசியமான பிராஜெக்ட் அது… நீ இல்லாம நான் தனியா அதை பார்க்க முடியாது.” என்று கணவன் தன்னை நெருங்கி பேச பேச. என்ன இது… அதுவும் அவளின் மாமியார் கூட அங்கு தான் இருக்கார்.. அவர் என்ன நினைத்து கொள்வார்… என்ற பயம் வேறு..

ஆனால் அவளின் அந்த பயத்துக்கு அவசியமே இல்லை என்பது போல மகனின் மனம் அறிந்தோ….

“குழந்தை என் கிட்ட தூங்கட்டும் மஞ்சுளா..” என்று சொல்ல..

தன் மாமியார் எதற்க்கு இப்படி சொல்கிறார் என்பதை புரிந்து கொண்ட மஞ்சுளா தன் கணவனை தான் முறைத்தாள்…

“நான் என்ன டி செய்தேன் என்னை முறைக்கிற….?” இதுவுமே ரகசியம் போல அருகில் நின்று தான் கேட்டட்து.

“அய்யோ கொஞ்சம் தள்ளி நில்லுங்க..” என்று கணவனிடம் பல்லை கடித்து கொண்டு சொன்னவள்..

பின் தன் மாமியாரிடம் …. “ பரவாயில்லை. அத்தை குழந்தை என்னோட தூங்கட்டும்..” என்று சொல்லி நர்த்தகனோடு செல்ல பார்த்தவளிடம்.

“சரி உன்னுடனே தூங்கட்டும்.. குழந்தைக்கு பால் கொடுத்துட்டு துகிலா கூட அனுப்புறேன். பார்க்க ரொம்ப சோர்வா தெரியிற.. போய் நேரத்துக்கே படு..” என்று சொன்னதும்…

மஞ்சுளா தங்கள் படுக்கை அறைக்கு சென்றாள்… அதற்க்குள் துகிலனுக்கு ஒரு கை பேசி அழைப்பு வர… அழைப்பை ஏற்றவன்…

அதில் பேசாது…. “சீக்ரெட் பிராஜெக்ட் … தூங்கிடாதே…” என்று சத்தமாக வேறு சொல்ல…

அய்யோ என்று அறைக்குள் ஓடி வந்து விட்டாள்… தங்கள் அறைக்கு வரும் போதே நம்மல அந்த ரூமுக்கே போக விடல. அப்படி என்ன பண்ணி வெச்சி இருக்காரு இவரு இந்த ரூமில் என்று நினைத்து கொண்டே தான் சென்றது…

ஆனால் தங்கள் அறையில் கணவன் செய்து இருந்த மாற்றத்தை பார்த்தவள்… அப்படியே நின்று விட்டாள்…

அந்த அறையின் அமைப்பையே முற்றிலும் மாறி போனது போல மாற்றி அமைத்து விட்டான் துகிலன்…. பேச்சு வாக்கில் மனைவிக்கு பிடித்த நிறம் இளம் ஊதா என்று கேட்டு அறிந்து கொண்டவன்… இளம் ஊதாவோடு தனக்கு மிகவும் பிடித்த வென்மையும் நிறத்தையும் சேர்த்து இரண்டு நாட்களில் இப்படி புரட்டி போட்டது போல மாற்ற முடியுமா…?

கணவனின் அந்த பேச்சில் இருந்து தப்பி வந்த மஞ்சுளாவுக்கு தன் அறையின் அந்த மாற்றம் மனதுக்கு ஒரு இதத்தை கொடுத்தது…

அதுவும் ஒரு பெரிய கட்டில் அந்த பெரிய கட்டிலை விட்டு தள்ளி ஒரு சின்ன கட்டில் அந்த இரண்டு கட்டிலுக்கும் இடையில் ஒரு திரை….அனைத்தும் பார்த்து கொண்டு இருந்தவளின் பின் கழுத்தின் பக்கம் வெப்பமான காற்று…

அந்த குளிரூட்டப்பட்ட அறையின் குளுமையும் தான்டி அந்த வெப்பமானது பெண்ணவளுக்கு சுட்டது.. கூடவே ஒரு மனம்… அந்த மனம் வாசனை திரவியத்தையும் தான்டி அவள் நாசி உணர்ந்த… இது கணவனின் வியர்வையின் மனம் என்று மூளை அவளுக்கு எடுத்து உரைத்தது… கணவனின் அந்த வெப்பம் மூட்டும் மூச்சு காற்றில்

என்ன இது கையில் குழந்தையை வைத்து கொண்டு என்று நினைத்து பெண்ணவள் கோபமாக திரும்பி பார்க்க… திரும்பி பார்த்தவளுக்கு நர்த்தகன் இல்லாது கணவன் மட்டுமே தங்கள் அறைக்கு வந்த நிற்பதும். தங்கள் அறையின் கதவு தாழிட்டு இருப்பதுமே அப்போது தான் கவனித்தாள் பெண்ணவள்…

“என்னங்க இது… வெளியில் இருப்பவங்க என்ன நினைப்பாங்க. அதுவும் உங்க அத்த இப்போ தான் நான் என்னவோ உங்களை முந்தானையில் முடிஞ்சி வைத்து இருப்பது போலவும்… சொக்கு பொடி தூவி என் பின்னாடி சுத்த வைப்பது போலவும் பேசுனாங்க… நீங்க இது போல பகலிலேயே பண்ணா….?” என்று கோபமாக பேசிக் கொண்டு இருந்தவள் கணவனின் முக மாறுதலை பார்த்து கோபமான பேச்சு மெல்ல மெல்ல குறைந்து பின் குழைந்து முடிவாக காற்று தான் வருவது போல் வந்து நின்றது…

பெண்ணவளின் இந்த மாற்றம் ஆணவனுக்கு இன்னும் மோகத்தை தான் கூட்டியது. அதன் விளைவு பெண்ணவளின் கழுத்துக்கு கிடைத்த அந்த வெப்ப மூச்சு காற்று பெண்ணவளின் முகத்திற்க்கு கிடைத்து போக போக… தன் சுவாச காற்றை பெண்ணவளுக்கு இதழ் மூலம் கடத்த.. ஒரு நிலைக்கு மேல் பெண்ணவளாள் முடியாது. கணவனை தள்ளி விட்டாள்..

அவள் தள்ளளுக்கு எல்லாம் தூரம் போகும் ஆள் கிடையாது தான். இருந்துமே மனைவியின் இந்த கோபத்தையும் ரசிக்க ஆண் மனம் தூண்ட… கொஞ்சம் தள்ளி நின்றான். கொஞ்சம் கொஞ்சமே தான் தள்ளி நின்று கொண்டது..

அதோடு விடாது மனைவியை இன்னுமே கோபம் மூட்ட நினைத்த துகிலன்.. “ அப்போ நீ உன் முந்தானியில் என்னை முடிச்சிக்கலையா சில்க்கி… “ என்று சொல்லி கொண்டே மென்மையாக இருக்கும் பெண்ணவளின் கன்னத்தை தடவியவன்.

பின் அதன் மிக அருகில் இருந்த அந்த சின்ன சிமிக்கியை தன் ஒற்றை விரல் கொண்டு அதை ஆட வைத்தவன்.

“உண்மை தான்டி உன் கிட்ட நான் மயங்கி தான் இருக்கேன். நீ என்னை மயக்காதே நான் உன்னிடம் மயங்கி போய் தான் கிடக்கிறேன்.. நீ மயக்க எனக்கு உன் முந்தானை தேவை இல்லை.. பொடியும் தேவையில்லை.. சின்ன சின்ன.” என்று சொல்லி கொண்டு வந்தவன் மனைவியின் முறைப்பிலும்..

“என்ன இது அசிங்கமா…?” என்று கேட்டவளிடம்..

“சில்க்கி நீ வர வர ரொம்ப பேட் கேல்ல மாறிட்டு வர.” என்று சொன்னவளிடம் பெண்ணவள்..

“யாரு நானா.?” என்று கேட்டாள் .. கோபத்தில் தள்ளி விட்ட கணவன் அருகில் இவள் நெருங்கி வந்து நின்று விட்டாள்..

இப்போது ஆணவன் தன் கை பிடிக்கு ஏதுவாக கிடைத்த மனைவியின் இடுப்பை பிடித்து இன்னுமே தன்னை நெருக்கி இழுத்து கொண்டவன்..

“ஆமா நீ தான். பின் நானா. தோ பாரு குட் பாயா நான் தள்ளி தான் நின்னேன்.. ஆனா இப்போ நீ தானே என் கிட்ட நெருங்கி வந்து நின்ன… நெருங்கி நின்னவ குட்… சரி ஒரு பிடிமானதுக்கு உன் இடுப்பை பிடிச்ச அப்போ நான் பேட் பாயா..? இது என்ன நியாயம் சில்க்கி..? என்று கேட்டவன்…

பின்.. “ நான் சின்ன சின்ன என்று சொன்னது உன் இந்த சின்ன சிமிக்கியை….” என்று சொல்லி மீண்டுமே அந்த சிமிக்கியை ஆட்டி விட்டவன்..

“நீ என்ன நினச்ச சில்க்கி..?” என்றும் கேட்டவனே..

“ஆனா …” என்று சொன்னவனை அடுத்து பேச விடாது தன் வாய் கொண்டு ஆணவனின் வாயை அடக்கினாள் பெண்ணவள்..

அப்போதும் விடாது சிறிது இடை வெளி கிடைத்ததும்..

“பாரு இப்போ கூட நீ தான். நீ தான்… என்னை என்ன என்னவோ செய்ய சொல்ற… நான் இல்லேப்பா….” என்று சொன்னவன் அடுத்து மனைவியை பேச விட வில்லை…

இடை இடையே கணவன் தன் இதழுக்கு விடுத்தலை கொடுக்கும் அந்த இடைப்பட்ட நேரத்தில்..

“குழந்தை… குழந்தைங்க…” என்று கேட்ட போது.

“அவன் அப்பா அம்மவோடு தூங்க போயிட்டான் டி… அதுவும் என்ன என்று சொல்லி தூங்க போனான் தெரியுமா….? ம்மா வயித்துல பாப்பா இருக்கு… உங்க பிராஜெக்ட்டுக்கு நீங்க ம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்தாதே…” என்று சொல்லிட்டு தானான் போனான் டி…

“அதனால நம்ம மகன் பேச்சுக்கு ஏற்ப இந்த முறை இந்த புதிய பிராஜெக்ட்டை சாப்ட்டா ஹான்டில் பண்றேன்.. என்ன…?” என்று கேட்டவன் பேச்சில் மஞ்சுளாவுக்கு அய்யோடா என்றான நிலை தான்..

“நான் புது பிராஜெக்ட்டா…?” அந்த வெட்கத்திற்க்கும் இடையில் கேட்டாள்..

“ஆமா… முதல்ல என் மனைவியா மட்டும் இருக்கும் போது நான் உன்னை ஹான்டில் பண்ணனேன்..

ஆனால் இப்போ என் குழந்தையின் அம்மாவா ஹான்டில் பண்றேன் லே.. இது எனக்கு புது டாஸ்க் போல தானே….” என்று கேட்டவன்..

பின் தன் புது பிராஜெக்ட் வேலையில் முழு கவனத்துடன் இறங்கி வேலை பார்த்தான்..

உண்மையில் அவனுக்கு இது ஒரு புது டாஸ்க் தான்… முன் திருமணம் முடிந்து நடந்த அந்த பத்து நாட்களின் கூடல். அனைத்திலும் துகிலனிடம் ஒரு வேகம் இருந்தது.. கூடவே மோகமும்..

ஆனால் இன்றைய கூடலில் வேகம் மட்டுப்பட்டு நிதானம் அதிகரித்து… உடல் மட்டும் சங்கமிக்காது மனைவியின் மனதும் உணர்ந்து சேர்ந்த அந்த கூடல் இருவருக்குமே ஒரு நிறைவை தந்தது…

ஒன்னரை வருடம் சென்று….

அன்று தன் மகள் நந்தியாவின் முதல் பிறந்த நாள் விழா…..

குடும்பமே ஒரே நிறத்திலான மஞ்சுளாவுக்கு பிடித்த நிறமான பர்ப்புள் நிறத்தில் உடை அணிந்து இருக்க…

நந்தியாவை தூக்கி வைத்து கொண்டு இருந்த நர்த்தகன்.. தங்கள் முன் இருந்த கேக்கின் மீது கை வைக்க முயன்றவளின் முயற்ச்சியை தடுத்து கொண்டு..

‘பேபி… டாடியும் ம்மாவும் இதுல கேண்டில் வைப்பாங்க.. அப்புறம் இப்பரி ஊ ஊ என்று ஊதிட்டு தான் கேக் கட் பண்ணுவாங்க.. என்ன…?” என்று அந்த சிறு குழந்தைக்கு பேச்சிலும் சைகையிலும் விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தான்..

அது என்னவோ நந்தியா.. அம்மா அப்பா பேச்சு கேட்பாளோ இல்லையோ தன் அண்ணன் பேச்சை தட்டாது கேட்டு விடுவாள்..

சமத்து பிள்ளையா தன் அண்ணன் சொன்னது புரிந்ததா இல்லையா.. என்பது தெரியவில்லை… ஆனால் தன் அண்ணன் தலையாட்டியது புரிந்தது போல… அதனால் தன் அண்ணனை போலவே தலையாட்டி சரி சரி என்று சொல்ல..

“குட் பேபி…” என்று சொல்லி தன் தங்கையை கொஞ்சியும் கொண்டான்…

நரேன் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தாள். கிட்ட தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது தான் தன் மகனை பார்க்கிறான்(ள்)

எத்தனை வளர்ச்சி… உடல் அளவில் மட்டும் அல்லாது உள்ளத்து அளவிலுமே மகன் வளர்ந்து விட்டது போல உணர்ந்தான்… தூரம் நின்று கொண்டான்…

ஒரு மனதில் சந்தோஷம்…. சர்ஜெரி அனைத்தும் முடிவடைந்து விட்டது.. ஒரு சில ஹார்மோன் சம்மந்தமான மெடிசனை மட்டுமே அவன் எடுத்து கொண்டு இருக்கிறான். இப்போதும் கூட தன் உணர்வோடு போராடி கொண்டு தான் இருக்கிறான்..

ஆனால் முன் போல் இல்லை. அனைத்தையும் விட முன் இருந்த அந்த குற்றவுணர்வு நரேனுக்கு இல்லவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

நர்மதாவாக இருந்த சமயம் துகிலனுக்கு தான் அநியாயம் செய்கிறோமோ… தன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவன் உணர்வுளை கொன்று விட்டோமோ என்பது போலான மனநிலையில் இருந்து இன்று அவனுக்கு கிடைத்த அந்த விடுதலையானது அனைத்தையும் விட பெரியது தானே… அதில் அவன் முகம் தன்னால் நிம்மதி வந்து அமர்ந்து கொண்டது..

வசந்தியும் இப்போது நிதர்சனத்தை ஏற்க பழகி கொண்டு விட்டார்… முன் போல மஞ்சுளாவை பார்த்து பொறாமை படுவது இல்லை என்று சொல்ல முடியாது.. படுகிறார் தான்… ஆனால் மனதோடு…

இதோ இப்போது கூட நரேன் தனித்து இருப்பதை பார்த்து அருகில் சென்ற வசந்தி…

“நீயே உன் வாழ்க்கையை அழிக்கிட்ட . பாரு பாரு… உன்னை பார்த்து கூட உன் மகன் வா என்று சொல்லிட்டு அந்த மஞ்சுவை ம்மா ம்மா என்று கூப்பிட்டு இருக்கான்.. அந்த மஞ்சு பொண்ணு துகிலா கூட எத்தனை அந்நோனியமா வாழுறா தெரியுமா..? அத்தனை மதிப்பும் அந்த பொண்ணுக்கு… அந்த பொண்ணு படிக்கும் போது ஏதோ ஒரு வேலை கிடச்சுதாம் அது போக முடியாது போயிடுச்சி என்று.. இப்போ வேலைக்கு அனுப்புறான் துகிலா.. கொஞ்சம் சம்பளம் தான்.. அது நம்ம வீட்டு ட்ரைவருக்கு கூட இதை விட அதிகமா நாம கொடுப்போம்… ஆனா துகிலா என்ன சொல்றான்ன்னா.. சம்பளத்தை நான் பார்க்கல என் மனைவி ஆசை.. அது தான் நான் பார்க்கிறேன்.. என்று சொல்லி வேலைக்கு அனுப்புறேன்…” என்று அங்கலாய்த்து கொண்டு போக..

நரேன் பார்த்த பார்வையில்… “ சரி சரி கோபப்படாதே… நீ இப்படி தனியா இருக்கியே உனக்கு ஒரு பொண்ணையாவது பார்க்கட்டுமா…?” என்று கேட்டதுக்குமே நரேன் அதே கோபப்பார்வையை செலுத்த..

“சரி சரி..” என்று சென்று விட்டார்.

இப்போது விக்னேஷ் மெல்ல மெல்ல தன் தோல்வியில் இருந்து பாடத்தை கற்று கொண்டு முன் போல் சரிவை ஏற்படுத்தவில்லை … ஒரு சமநிலையில் அவன் தொழில் போகிறது.. வைஷ்ணவியும் தங்கள் தொழிலை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்று முன்பு போல சோம்பேறியாக இல்லாது கணவனோடு அவளும் தங்கள் தொழிலை கவனித்து கொள்கிறாள்.

பிரதீப் இப்போது எந்த தவறும் செய்யவில்லை தான். ஆனால் முன் செய்த அந்த தவறின் பலனை இப்போதும் அவ்வப்போது அனுபவித்து கொண்டு தான் இருக்கிறான்..

அந்த பார்ட்டி ஹாலில் அனைவரும் கூடி அவர் தக்க பேசி கொண்டு இருக்கும் போது நர்த்தகன் தான்.

“ டாடி உங்க புது பிராஜெக்ட் பத்தி அப்புறம் பேசிக்கலாம் டாடி… பேபி அழுக ஆரம்பிக்கிறா..” என்று குரல் கொடுக்க.

அந்த பார்ட்டி ஹாலில் இருக்கும் மின் தூக்கியொல் இருந்து கை பிடித்து கொண்டு ஒரே நிறத்திலான உடையில் வந்தவர்களின் அந்த ஜோடி பொருத்தம் கண்ணுக்கு அப்படி நிறைவாக இருந்தது…

அதை பார்த்த மஞ்சுளாவின் பெற்றோருக்கு ஒரு பெண் தான் வாழ்க்கையில் தவறி விட்டாள்.. ஆனால் தன் இன்னொரு பெண்… எத்தனை பிரச்சனை வந்துமே… தன் வாழ்க்கையை விடாது அதை பிடித்து கொண்டதோடு நல்ல மாதிரியாகவும் அமைத்து கொண்டதில் அத்தனை நிறைவு அவர்களுக்கு…. ( நர்த்தகன் சொன்ன அந்த புது பிராஜெக்ட் உண்மையில் புதிய பிரஜெக்ட் பற்றி தான் பேசியில் தன் கை பேசியில் பேசி கொண்டு இருந்தான்.. மஞ்சுளா வேலை வேலை என்று சாப்பிடாது இருக்கிறானே.. என்று சின்ன சின்ன சாம்பார் இட்லியை கணவனுக்கு ஊட்டி கொண்டு இருந்தாள்…) அது தான்….

நிறைவு..














 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
362
அருமையான கதை.ஒரு அம்மாவாக வசந்தியை புரிந்து கொள்ள முடிகிறது.நர்மதா என்ற நரேன் ஒரு வகையில் பாவம் தான்.‍ வைஷ்ணவி வேலைக்கு போவதால் அவளுக்கு வேறு எதிலும் கவனம் போகாது.எல்லா கதாபாத்திரங்களையும் அருமையாக கையாண்டு இருக்கிறீர்கள், சூப்பர். விரைவில் அடுத்த கதையை எதிர் பார்க்கிறோம்.
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,109
அருமையான கதை.ஒரு அம்மாவாக வசந்தியை புரிந்து கொள்ள முடிகிறது.நர்மதா என்ற நரேன் ஒரு வகையில் பாவம் தான்.‍ வைஷ்ணவி வேலைக்கு போவதால் அவளுக்கு வேறு எதிலும் கவனம் போகாது.எல்லா கதாபாத்திரங்களையும் அருமையாக கையாண்டு இருக்கிறீர்கள், சூப்பர். விரைவில் அடுத்த கதையை எதிர் பார்க்கிறோம்.
நன்றி பா🙏💕
 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
110
எல்லா கதாபாத்திரங்களையும் நேர்மறையா காட்டி நிறைவா முடிச்சுட்டீங்க 😉😉😉

வசந்தி கெட்டவங்க இல்லை அவங்க பிள்ளைங்க வாழ்க்கை சரியில்லாமல் போன வேதனையில் அதை கோவமா வெளி காட்டுறாங்க 😑😑😑 இப்போ கொஞ்சம் நிதர்சனத்தை ஏத்துக்க பழகிட்டாங்க 🙂🙂🙂

துர்கா மகனோட சந்தோஷத்தை பார்த்ததும் தான் மஞ்சுவை முழுசா ஏத்துக்க முடியுது போல ☺️ 🤣

நர்மதாவுக்கு அவளை புரிஞ்சுக்கிற குடும்ப சூழலும் பணமும் இருந்தே இவ்வளவு போராட்டமா இருக்கு 😨 😨 இதுல குடும்பங்களால் புறக்கணிக்க பட்டவங்க நிலை எவ்வளவு மோசமா இருக்கும் 😴 😴 😴

விக்னேஷ் வைஷ்ணவி நம்ம முன்னேற்றத்துக்கு நாம் தான் உழைக்கணும் என்று புரிஞ்சு ஒழுங்கா வாழ ஆரம்பிச்சுட்டாங்க 🤗🤗🤗 ஆரம்பம் கஷ்டமா இருந்தாலும் உறுதியா நின்று உழைக்கிறதால் எதிர் காலத்தில் நிச்சயம் உயர்ந்திடுவாங்க ☺️☺️☺️☺️

பிரதீப் தப்பு செஞ்சாச்சு பொண்டாட்டி காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்டு அவளை சமாதான படுத்த முயற்சி பண்ணு 😣😣😣 காலம் எப்போதாவது அவ மனசை மாத்துனா பார்க்கலாம் 😖😖😖 தனக்கு என்று ஒரு குடும்பம் வந்த பிறகும் நொடி நேர சலனத்தில் பாதை தவறினா இந்த நிலை தான் 🥺 🥺 🥺

துகிலன் ஆரம்பத்தில் மஞ்சுவை புரிஞ்சுக்காமல் சில தவறுகள் செஞ்சாலும் அதை உணர்ந்து சரி பண்ணி ஊரறிய மஞ்சுவுக்கான உரிமையையும் கௌரவத்தையும் கொடுத்தது அருமை 😀 😉 🙂 🙂

மஞ்சுளா புருஷன் அவனா தன்னை புரிஞ்சு நடந்துக்கணும் என்று நினைக்காமல் தன்னோட பக்கத்தை அவளே பேசி அவனுக்கு புரிய வச்சது அருமை 😀 😉 😉 இங்கு பல பேர் தங்களோட வாழ்க்கை துணை நாம் சொல்லாமலே நம்மை புரிஞ்சு நடந்துக்கணும் என்று நினைச்சு வாழ்க்கையை சிக்கல் ஆக்குறாங்க 🥺 🥺 🥺

மஞ்சு தனக்கான அங்கீகாரத்தை கேட்டு வாங்கியதில் எந்த தப்பும் இல்லை அவளோட நியாயங்கள் துகிக்கு புரியாத போது அதை அவை கேட்டு வாங்கினா 😄😄😄 மஞ்சு தன்னோட பிரச்சினைகளை சரியா ஹேண்டில் பண்ண தெரிஞ்ச பெண் 🤗🤗🤗

நர்த்தகன் அறிவும் தெளிவும் உள்ள அருமையான குழந்தை ☺️☺️☺️ பெத்தவங்களை சொல் பேச்சு கேட்டு நடந்துக்கிறான் அதே நேரம் அறிவா கேள்வி கேட்டு அப்பாவுக்கு கொஞ்சம் ஷாக்கும் கொடுக்கிறான் 🤓 🤓 🤓 🤓 🤓 🤓 வளர்ந்த பிறகு நரேன் @நர்மதாவுக்கு உறுதுணையாக இருப்பான் 😗😗😗😗

துகிலன் நல்ல கணவனாக மகனா தந்தையா நண்பனா என்று எல்லா பரிணாமத்திலும் ஜொலிக்கிறான் 🤗🤗🤗🤗🤗 அவனுக்கு துணையா மஞ்சுளா 🥰🥰🥰🥰🥰🥰🥰


துகிலன் மஞ்சுளா நர்த்தகன் நதியா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

மஞ்சுவோட தம்பி மட்டும் மிஸ்ஸிங் 🤭🤭🤭🤭
 
Last edited:
Joined
Mar 3, 2025
Messages
67
அருமையான பதிவு 😍 😍 😍
நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩.
குடும்ப உறுப்பினர்களோட ஜெண்டர்ல மாற்றம் ஏற்படும் போது அதைய அருவருப்பா தீண்டத்தகாத முறையில் பாக்காம நல்ல முறையில் அணுகி அவிகளையும் வாழ வைக்க முடியும் ன்னு அருமையா சொல்லி கலக்கீட்டீங்க ரைட்டர் ஜீ.
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,109
எல்லா கதாபாத்திரங்களையும் நேர்மறையா காட்டி நிறைவா முடிச்சுட்டீங்க 😉😉😉

வசந்தி கெட்டவங்க இல்லை அவங்க பிள்ளைங்க வாழ்க்கை சரியில்லாமல் போன வேதனையில் அதை கோவமா வெளி காட்டுறாங்க 😑😑😑 இப்போ கொஞ்சம் நிதர்சனத்தை ஏத்துக்க பழகிட்டாங்க
🙂🙂🙂

துர்கா மகனோட சந்தோஷத்தை பார்த்ததும் தான் மஞ்சுவை முழுசா ஏத்துக்க முடியுது போல ☺️ 🤣

நர்மதாவுக்கு அவளை புரிஞ்சுக்கிற குடும்ப சூழலும் பணமும் இருந்தே இவ்வளவு போராட்டமா இருக்கு 😨 😨 இதுல குடும்பங்களால் புறக்கணிக்க பட்டவங்க நிலை எவ்வளவு மோசமா இருக்கும் 😴 😴 😴

விக்னேஷ் வைஷ்ணவி நம்ம முன்னேற்றத்துக்கு நாம் தான் உழைக்கணும் என்று புரிஞ்சு ஒழுங்கா வாழ ஆரம்பிச்சுட்டாங்க 🤗🤗🤗 ஆரம்பம் கஷ்டமா இருந்தாலும் உறுதியா நின்று உழைக்கிறதால் எதிர் காலத்தில் நிச்சயம் உயர்ந்திடுவாங்க ☺️☺️☺️☺️

பிரதீப் தப்பு செஞ்சாச்சு பொண்டாட்டி காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்டு அவளை சமாதான படுத்த முயற்சி பண்ணு 😣😣😣 காலம் எப்போதாவது அவ மனசை மாத்துனா பார்க்கலாம் 😖😖😖 தனக்கு என்று ஒரு குடும்பம் வந்த பிறகும் நொடி நேர சலனத்தில் பாதை தவறினா இந்த நிலை தான் 🥺 🥺 🥺

துகிலன் ஆரம்பத்தில் மஞ்சுவை புரிஞ்சுக்காமல் சில தவறுகள் செஞ்சாலும் அதை உணர்ந்து சரி பண்ணி ஊரறிய மஞ்சுவுக்கான உரிமையையும் கௌரவத்தையும் கொடுத்தது அருமை 😀 😉 🙂 🙂

மஞ்சுளா புருஷன் அவனா தன்னை புரிஞ்சு நடந்துக்கணும் என்று நினைக்காமல் தன்னோட பக்கத்தை அவளே பேசி அவனுக்கு புரிய வச்சது அருமை 😀 😉 😉 இங்கு பல பேர் தங்களோட வாழ்க்கை துணை நாம் சொல்லாமலே நம்மை புரிஞ்சு நடந்துக்கணும் என்று நினைச்சு வாழ்க்கையை சிக்கல் ஆக்குறாங்க 🥺 🥺 🥺

மஞ்சு தனக்கான அங்கீகாரத்தை கேட்டு வாங்கியதில் எந்த தப்பும் இல்லை அவளோட நியாயங்கள் துகிக்கு புரியாத போது அதை அவை கேட்டு வாங்கினா 😄😄😄 மஞ்சு தன்னோட பிரச்சினைகளை சரியா ஹேண்டில் பண்ண தெரிஞ்ச பெண் 🤗🤗🤗

நர்த்தகன் அறிவும் தெளிவும் உள்ள அருமையான குழந்தை ☺️☺️☺️ பெத்தவங்களை சொல் பேச்சு கேட்டு நடந்துக்கிறான் அதே நேரம் அறிவா கேள்வி கேட்டு அப்பாவுக்கு கொஞ்சம் ஷாக்கும் கொடுக்கிறான் 🤓 🤓 🤓 🤓 🤓 🤓 வளர்ந்த பிறகு நரேன் @நர்மதாவுக்கு உறுதுணையாக இருப்பான் 😗😗😗😗

துகிலன் நல்ல கணவனாக மகனா தந்தையா நண்பனா என்று எல்லா பரிணாமத்திலும் ஜொலிக்கிறான் 🤗🤗🤗🤗🤗 அவனுக்கு துணையா மஞ்சுளா 🥰🥰🥰🥰🥰🥰🥰


துகிலன் மஞ்சுளா நர்த்தகன் நதியா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

மஞ்சுவோட தம்பி மட்டும் மிஸ்ஸிங் 🤭🤭🤭🤭
நன்றி பா... மிக்க நன்றி என்ன சொல்ல... உங்களின் இந்த கருத்துக்களை என் முக நூலில் பகிர்ந்து கொள்கிறேன் பா... மீண்டும் நன்றி🙏💕🙏💕
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,109
அருமையான பதிவு 😍 😍 😍
நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩.
குடும்ப உறுப்பினர்களோட ஜெண்டர்ல மாற்றம் ஏற்படும் போது அதைய அருவருப்பா தீண்டத்தகாத முறையில் பாக்காம நல்ல முறையில் அணுகி அவிகளையும் வாழ வைக்க முடியும் ன்னு அருமையா சொல்லி கலக்கீட்டீங்க ரைட்டர் ஜீ.
நன்றி பா
 
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
144
நிறைவான முடிவு 😍😍😍
அருமையான கதை ❤️❤️❤️
துகிலன் வாழ்க்கையில இருந்த சோதனைகளை எல்லாம் முறியடிச்சு பொண்டாட்டி பிள்ளை ப்ராஜெக்ட்ன்னு செம பிஸியாகிட்டான் 🤣🤣🤣🥰🥰🥰🥰

மஞ்சு ஆரம்பத்துல துகிலனோட புரிதல் இல்லாமையால கஷ்டப்பட்டாலும் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்கிட்டா.... 😇😇😇

நர்மதா மாதிரி bold and independent ஆனவங்க கூட இந்த மாதிரி மாற்றம் வரும் போது உணர்வால உறவுகளால எவ்வளவு போராட்டம் மனசுல.....😐 எல்லாத்தையும் மீறி நரேனா மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழறது சூப்பர்...... 💚

நர்த்தகன் அருமையான அறிவான குழந்தை 🥰🥰🥰
 
Top