Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Tesar...24

  • Thread Author
டீசர்…

அந்த அறையின் அமைப்பே முற்றும் மாற்றி போனது போல மாற்றி அமைத்து விட்டான் துகிலன்…. பேச்சு வாக்கில் மனைவிக்கு பிடித்த நிறம் இளம் ஊதா என்று கேட்டு அறிந்து கொண்டவன்… இளம் ஊதாவோடு தனக்கு மிகவும் பிடித்த வென்மையும் நிறத்தையும் சேர்த்து இரண்டு நாட்களில் இப்படி பிரட்டி போட்டது போல மாற்ற முடியுமா..

வசந்தியின் பேச்சில் இருந்து தப்பி வந்த மஞ்சுளாவுக்கு தன் அறையின் அந்த மாற்றம் மனதுக்கு ஒரு இதத்தை கொடுத்தது…

அதுவும் ஒரு பெரிய கட்டில் அந்த பெரிய கட்டிலை விட்டு தள்ளி ஒரு சின்ன கட்டில் அந்த இரண்டு கட்டிலுக்கு இடையில் ஒரு திரை….அனைத்தும் பார்த்து கொண்டு இருந்தவளின் பின் கழுத்தின் பக்கம் வெப்பமான காற்று…

அந்த குளிரூட்டப்பட்ட அறையின் குளுமையும் தான்டி அந்த வெப்பமானது பெண்ணவளுக்கு சுட்டது.. கூடவே ஒரு மனம்… அந்த மனம் வாசனை திரவியத்தையும் தான்டி அவள் நாசி உணர்ந்த… இது கணவனின் வியர்வையின் மனம் என்று மூளை அவளுக்கு எடுத்து உரைத்தது… கணவனின் அந்த வெப்பம் மூட்டும் மூச்சு காற்றில்

என்ன இது கையில் குழந்தையை வைத்து கொண்டு என்று நினைத்து பெண்ணவள் கோபமாக திரும்பி பார்க்க… திரும்பி பார்த்தவளுக்கு நர்த்தகன் இல்லாது கணவன் மட்டுமே தங்கள் அறைக்கு வந்த நிற்பதும். தங்கள் அறையின் கதவு தாழிட்டு இருப்பதுமே அப்போது தான் கவனித்தாள் பெண்ணவள்…

“என்னங்க இது… வெளியில் இருப்பவங்க என்ன நினைப்பாங்க. அதுவும் உங்க அத்த இப்போ தான் நான் என்னவோ உங்களை முந்தானையில் முடிஞ்சி வைத்து இருப்பது போலவும்… சொக்கு பொடி தூவி என் பின்னாடி சுத்த வைப்பது போலவும் பேசுனாங்க… நீங்க இது போல பகலிலேயே பண்ணா….?” என்று கோபமாக பேசிக் கொண்டு இருந்தவள் கணவனின் முக மாறுதலை பார்த்து கோபமான பேச்சு மெல்ல மெல்ல குறைந்து பின் குழைந்து முடிவாக காற்று தான் வருவது போல் வந்து நின்றது…

பெண்ணவளின் இந்த மாற்றம் ஆணவனுக்கு இன்னும் மோகத்தை தான் கூட்டியது. அதன் விளைவு பெண்ணவளின் கழுத்துக்கு கிடைத்த அந்த வெப்ப மூச்சு காற்று பெண்ணவளின் முகத்திற்க்கு கிடைத்து போக போக… தன் சுவாச காற்றை பெண்ணவளுக்கு இதழ் மூலம் கடத்த.. ஒரு நிலைக்கு மேல் பெண்ணவளாள் முடியாது. கணவனை தள்ளி விட்டாள்..

அவள் தள்ளளுக்கு எல்லாம் தூரம் போகும் ஆள் கிடையாது தான். இருந்துமே மனைவியின் இந்த கோபத்தையும் ரசிக்க ஆண் மனம் தூண்ட… கொஞ்சம் தள்ளி நின்றான். கொஞ்சம் கொஞ்சமே தான் தள்ளி நின்று கொண்டது..

அதோடு விடாது மனைவியை இன்னுமே கோபம் மூட்ட நினைத்த துகிலன்.. “ அப்போ நீ உன் முந்தானியின் என்னை முடிச்சிக்கலையா சில்க்கி… “ என்று சொல்லி கொண்டே மென்மையாக இருக்கும் பெண்ணவளின் கன்னத்தை தடவியவன்.

பின் அதன் மிக அருகில் இருந்த அந்த சின்ன சிமிக்கியை தன் ஒற்றை விரல் கொண்டு அதை ஆட வைத்தவன்.

“உண்மை தான்டி உன் கிட்ட நான் மயங்கி தான் இருக்கேன். நீ என்னை மயக்காதே நான் உன்னிடம் மயங்கி போய் தான் கிடக்கிறேன்.. நீ மயக்க எனக்கு உன் முந்தானை தேவை இல்லை.. பொடியும் தேவையில்லை.. சின்ன சின்ன.” என்று சொல்லி கொண்டு வந்தவன் மனைவியின் முறைப்பிலும்..

“என்ன இது அசிங்கமா…?” என்று கேட்டவளிடம்..

“சில்க்கி நீ வர வர ரொம்ப பேட் கேல்ல மாறிட்டு வர.” என்று சொன்னவளிடம் பெண்ணவள்..

“யாரு நானா.?” என்று கேட்டாள் .. கோபத்தில் தள்ளி விட்ட கணவன் அருகில் இவள் நெருங்கி வந்து நின்று விட்டாள்..

இப்போது ஆணவன் தன் கை பிடிக்கு ஏதுவாக கிடைத்த மனைவியின் இடுப்பை பிடித்து இன்னுமே தன்னை நெருக்கி இழுத்து கொண்டவன்..

“ஆமா நீ தான். பின் நானா. தோ பாரு குட பாயா நான் தள்ளி தான் நின்னேன்.. ஆனா இப்போ நீ தானே என் கிட்ட நெருங்கி வந்து நின்ன… நெருங்கி நின்னவ குட பாய்… சரி ஒரு பிடிமானதுக்கு உன் இடுப்பை பிடிச்ச அப்போ நான் பேட் பாயா..? இது என்ன நியாயம் சில்க்கி..? என்று கேட்டவன்…

பின்.. “ நான் சின்ன சின்ன என்று சொன்னது உன் இந்த சின்ன சிமிக்கியை….” என்று சொல்லி மீண்டுமே அந்த சிமிக்கியை ஆட்டி விட்டவன்..

“நீ என்ன நினச்ச சில்க்கி..?” என்றும் கேட்டவனே..

“ஆனா …” என்று சொன்னவனை அடுத்து பேச விடாது தன் வாய் கொண்டு ஆணவனின் வாயை அடக்கினாள் பெண்ணவள்..

அப்போதும் விடாது சிறிது இடை வெளி கிடைத்ததும்..

“பாரு இப்போ கூட நீ தான். நீ தான்…
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
1,164
Teaser போட்டீங்க சூப்பர். பதிவு எப்போ வரும். 🤔 🤔 இது 25 வந்து டீஸர் தானே.
நான் ஒரு சபதம் எடுத்து இருக்கேன்.. 24 மேல் தான்ட கூடாது என்று.. அதனால் 24.3 24.5 அப்படி வரும் பா
 
Well-known member
Joined
Aug 16, 2024
Messages
381
நான் ஒரு சபதம் எடுத்து இருக்கேன்.. 24 மேல் தான்ட கூடாது என்று.. அதனால் 24.3 24.5 அப்படி வரும் பா
ஓ நல்ல சபதம் தான்.
 
Top