Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yannai kondaada pirandhavan....13...2

  • Thread Author
அத்தியாயம்….13.2

விசுவநாதன் சாரதாவை கடத்தி விட்டான் என்று கிருஷ்ண மூர்த்தி சொன்னதுமே அமர்ந்து கொண்டு இருந்த சித்தார்த் எழுந்து விட்டான்…

தன் அம்மாவை ஒருவன். அது நடந்து முப்பது ஆண்டுகள் கடந்து இருந்தாலுமே, ஒரு மகனாக அதை கேட்டு கொண்டு இருந்த சித்தார்த்தின் மனநிலை… அதிர்ச்சி.. என்ற நிலையை தான்டிய நிலையில் தான் அவன் இருந்தான்..

குருமூர்த்தி தலை மீது கை வைத்து கொண்டான்… முன் ஸ்ருதி செய்த அந்த விபத்தே… தெரிந்தால் அவள் வாழ்க்கை என்ன ஆவது என்று நினைத்து கொண்டு இருந்தவனுக்கு, தன் மாமன் செய்து வைத்து இருந்த விசயம். இதை என்ன என்று சொல்லி அவன் சரி கட்டுவான்.. அதோடு இது என்ன முழு வில்லத்தனம்.. கூடவே தன் தந்தையின் காதல் கதை… மகனாக தன் அன்னையை தந்தை விரும்பி திருமணம் செய்து கொள்ளவில்லை.

சூழ்ச்சி செய்து தான் தன் அன்னையை தந்தைக்கு திருமணம் செய்து வைத்தது.. குரு மூர்த்திக்கு இந்த விசயம் சித்தார்த்தை விட அதிர்ச்சி தந்தது..

ஆனால் அவன் அனைத்துமே பார்க்கும் சூழலில் இருந்தான்.. இதோ இப்போதுமே தன் மாமன் தன் தங்கையின் ஆசையை நிறை வேற்றி இருக்கிறார்.. ஒரு அண்ணனாக தன் மாமனின் பாசம் அங்கு தெரிந்தது அவனுக்கு,

இவர்கள் இருவருக்குமே இந்த நிலை என்றால் கேட்டு கொண்டு இருந்த ஸ்ருதிக்கு… தலை கிடு கிடு என்று சுற்றி விட்டதில் சுவரின் மீது சாய்ந்து நின்று கொண்டு விட்டாள்..

அதோடு போகாது அடுத்த அடுத்த நிகழ்வாக கிருஷ்ண மூர்த்தி சொன்ன..

கிருஷ்ண மூர்த்தி குருவை கை காண்பித்து… “ இவன் தாய் மாமன் இதோடு விட்டானா… தாலி எடுத்து அவன் தங்கை கழுத்தில் கட்டினா தான் ஆச்சு என்று விட்டான்.. இல்லேன்னா சாரதாவை கடத்தி காவலுக்கு வைத்து இருக்குறவனை வைத்து சாரதா கழுத்தில் தாலி கட்டிடுவேன்.. என்று மிரட்டல் வேறு…

என்ன என்ன செய்ய சொல்ற..? எனக்கு படிப்பு ஒழுக்கம். நேர்மை எல்லாம் சொல்லி கொடுத்த என் கலியபெருமால் அய்யா… என்னை கை எடுத்து கூம்பிட்டு… உன் கிட்ட குரு தட்சணையா கேட்கிறேன் என் மகள் எந்த வித சேதாரமும் இல்லாம என் கிட்ட வரனும்.. இப்போவே ஊருல என்ன என்னவோ பேச ஆரம்பித்து விட்டாங்க என்று… நான் பதவியில் உட்கார்ந்து அவர் கிட்ட அவள் மகளை கேட்க நினைத்தேன்.. ஆனா நடந்ததோ… தாலி கட்டினேன்..

பின் தான் தெரிந்தது என்னை போலவே சந்துருவுக்கும் சாரதாவை பிடிக்கும் என்பது… அவன் பார்வை வைத்த கலியபெருமாள் அய்யா கண்டு கொண்டாங்க… இது நடந்த பின்… ஐய்யா இப்போவும் என் பெண்ணை உனக்கு கட்டிக்க விருப்பமா என்று கேட்டதுக்கு.. ராம் சந்திரன் அவர் காலில் விழுந்து சாரதா கழுத்தில் தாலி கட்டினான்.. நான் இது எல்லாம் பார்க்கல கேள்விப்பட்டது..” என்று சொன்ன கிருஷ்ண மூர்த்தி.. சித்தார்த்திடம்..

“ஆனா உங்க அப்பா எப்போதுமே லக்கி பெர்சன் தான்… உங்க தாத்தாவின் முழு அன்பையும் ஜெயித்ததும் உங்க அப்பா தான்.. அடுத்து..” என்று ஆரம்பித்தவர் அடுத்து பேசாது அமைதியாகி விட்டார் கிருஷ்ண மூர்த்தி..

கிருஷ்ண மூர்த்தி பழையது பேசியதினால் அவர் அந்த நினைவிலேயே மூழ்கி போனவர் போல் அமர்ந்து விட்டார்..

இதை கேட்டு கொண்டு இருந்த குரு மூர்த்தி சித்தார்த் ஸ்ருதி முவரும் வெவ்வேறு முறையில் அதிர்ச்சியாகி விட்டனர்.

குருமூர்த்தி யோசனையுடன் .. “அம்மா அம்மா எப்படி இறந்தாங்க…?” என்று கேட்டவனின் மனது தந்தையின் பதிலுக்காக மனது துடிக்க.

அவன் துடிப்புக்கு ஏற்ப தான் கிருஷ்ண மூர்த்தி.. “ முதலில் கிடைத்த வெற்றி.. நாம சாக போகிறோம் என்றால் நாம ஆசைப்பட்டது எல்லாம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை கொடுத்த தைரியம்…

காஞ்சனா கழுத்தில் தாலி கட்டி அவள் கூட பேசவே இல்ல. பேச வைக்க வாழ வைக்க என்று எப்போவுமே நான் தற் கொலை செய்து விடுகிறேன்.. செத்து விடுகிறேன் கொஞ்சமா தூக்க மாத்திரை.. சும்மா எல்லோரும் பார்க்க ரூமுக்குள்ள போய் கதவை அடைத்து கொள்வது… என்று ஒவ்வொன்னுத்துக்கும் இதே தான் செய்து கொண்டு இருந்தா…

கடைசியில் நீங்க என் கிட்ட சரியா பேசுறது இல்ல… என்று அதற்க்கு ஒரு ட்ராமா ஆடி எலி மருத்து எடுத்து சாப்பிட்டு விட்டா.. முன்னவே அந்த எலி மருந்து சாப்பிட்டு ஒரு இரண்டு நாள் ஆஸ்பிட்டலில் இருந்து வீடு வந்த தைரியம் திரும்ப அதே கையில் எடுக்க… முன் சாப்பிட்டது.. திரும்ப அதே சாப்பிட்டது என்று.. அவள் பயம் முறுத்த செய்த விசயம். அவளையே கொண்டு போய் விட்டது.” என்று கிருஷ்ண மூர்த்தி அனைத்தும் சொன்னவர்.

சித்தார்த்திடம்.. “ இப்போ சொல்.. அந்த வீட்டு பெண்ணை உங்க வீட்டில் எப்படி மருமகளா ஏத்துப்பாங்க …?” என்ற கேள்விக்கு சித்தார்த்தினால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆனால் அவன் மனது சொன்னது எப்படி ஏத்துப்பாங்க..? கண்டிப்பா அவங்களால் முடியாது.. அதுவும் ஸ்ருதியின் தந்தை… எப்படி எப்படி..?

தன் தங்கை தன் மகள் காதல் என்றால் ஜெயிக்க வேண்டும்.. ஆனால் மற்றவர்கள் காதல். தன் தந்தை நல்லவர் என்றதினால், அம்மாவின் வாழ்வு நல்லப்படியாக அமைந்து விட்டது.. இல்லை என்றால், அதுவும் தன் அன்னை ஆரம்பித்தில் தன் தந்தையோடான வாழ்க்கையை வாழ எப்படி போராடி இருந்து இருப்பாங்க.. இது தன் தந்தைக்குமே எத்தனை மன வருத்தத்தை அளித்து கொண்டு இருக்கும்.. பலதும் மனதில் யோசித்தவள் கிருஷ்ண மூர்த்தியிடம் ஒன்றும் சொல்லாது போனவன்.. ஆனாலும் எப்போதும் விட அன்று கிருஷ்ண மூர்த்தியை ஆழ்ந்து பார்த்து சென்றான். காரணம் முன் தன் அன்னையின் மனதில் இடம் பெற்றவர் என்பதினாலோ என்னவோ..

ஸ்ருதி வந்தது தெரியாது சென்று விட்டாள்.. ஸ்ருதிக்கு முன்பை விட இப்போது தான் செத்து விட தோன்றியது.. ஆனால் இப்போது நான் இதை செய்தால், தான் அத்தையை போல திரும்ப ட்ராமா செய்கிறேன் என்பது போல் தான் ஆகி விடும் என்று நினைத்தவகளுக்கு, என்ன இருந்தாலும் தன் தந்தை அப்படி செய்து இருந்து இருக்க கூடாது..

தன்னை யாராவது கடத்தி விடுவார்களோ என்று அத்தனை பார்ப்பவர். அடுத்த வீட்டு பெண் என்றால் கடத்தி விடுவாரா…? தன் அறையை விட்டு வெளி வராது சாப்பிடாது இருந்த மகளை தாமரை.

“என்ன தான் டி உன் பிரச்சனை…?” என்று அத்தனை முறை தன் அறைக்கு வந்து கேட்டு விட்டு சென்ற அன்னையை கூட அவள் சட்டை செய்யவில்லை…

அன்று தன் அம்மா சாரதா ஆன்ட்டி எழுதிய கடிதத்தை வீட்டில் காட்டாது இருந்து இருந்தால், மாமா கண்டிப்பாக சாரதா ஆன்ட்டியை திருமணம் செய்து கொண்டு இருப்பார்கள் என்ற கோபம் ஸ்ருதிக்கு,

தாமரை கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்து தன் கணவன் வீட்டிற்க்கு வந்ததும் கணனிடம் சண்டை பிடித்து விட்டார்..

“முதல்ல உங்க பெண்ணை மாப்பிள்ளை இருக்கும் இடத்திற்க்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு வாங்க. இல்ல உங்க மாப்பிள்ளையை இங்கு கூட்டிட்டு வாங்க… உங்க பென் ஒழுங்கா சாப்பிட்டு ஒழுங்கா தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா அத்தான்..

கண்ணை சுற்றி கருவளையம் … நடுயிரவு ஒரு சந்தேகத்திற்க்கு அவள் அறைக்கு போய் பார்த்தா எந்த நாளும், அது எந்த நேரம் ஆனாலும் பேய் மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க. இப்படி இருக்கவா.. அந்த தம்பியை நம்ம மகளுக்கு கல்யாணம் செய்து வைத்தது.. சீக்கிரம் சித்தார்த் தம்பியோடு நம்ம மகளை வாழும் வழி பாருங்க..” என்று பட பட என்று பேசிக் கொண்டு போகும் மனைவியையே பார்த்து கொண்டு இருந்த விசுவநாதன். தாமர பேசி முடித்த பின்…

“நீ சொல்வதற்க்கு முன்னவே நம்ம மகளை மாப்பிள்ளையோடு வாழ வைத்து இருப்பேன்.. ஆனா… மாப்பிள்ளை அந்த சாரதா மகனா இல்லாது போய் இருந்தா, நான் சித்தார்த் சாரதாகின் மகனா இருப்பார் என்று நினச்சி கூட பார்க்கல.. இதுல அந்த மகி பெண்… அப்பா அம்மா வேறு…” என்று ஆரம்பித்தவர் பின் தன் பேச்சு போகும் பாதையை புரிந்து கொண்டு அமைதியாகி போய் விட்டார்..

ஆனால் தாமரை இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.. அவரின் கவனம் மொத்தமும் தன் மகளின் வாழ்வை பற்றியதாக மட்டுமே தான் இருந்தது..

அதில்.. “நானுமே நினச்சி கூட பார்க்கல தான்.. ஆனா என்ன செய்வது.? நம்ம மகள் ஆசைப்பட்டு விட்டா. பார்த்திங்க தானே சித்தார்த் கிடைக்க மாட்டான் என்று நினச்சி சாக கூட போயிட்டா. அதனால தானே நாம அவசர அவசரமா கல்யாணத்தை செய்து வைத்தது…

அது தான் சொல்றேன் சித்தார்த்துக்கு முழு விவரம் தெரியிறதுக்கு முன்ன இரண்டு பேரும் வாழ ஆரம்பித்து ஒரு குழந்தை உண்டாகி போயிட்டா போதும்… அப்புறம் மாப்பிள்ளைக்கு தெரிந்தா கூட கவலை இல்ல… குழந்தைக்காவது நம்ம மகள் கூட மாப்பிள்ளை வாழ்ந்து தான் ஆக வேண்டும்…” என்று தாமரை விசுவநாதனிடம் சொல்லி கொண்டு இருக்க.

இவை அனைத்துமே கேட்ட வாறு தான் அந்த இடத்திற்க்கு ஸ்ருதி வந்தது…

வந்தவள் தன் தந்தை எதிரில் அமர்ந்து கொண்டவள்..

“எப்படிப்பா வாழ முடியும்.. உங்க தங்கை மாதிரி ஒவ்வொன்னுக்கும் நான் சாகுறேன் சாகுறேன்.. என்று சொல்லி கொண்டு சித்து கூட வாழ சொல்றிங்கலா…? அத்தை மாதிரியே மிரட்டினது உண்மையா கூட போய் விடும்.. யாரையும் மிரட்டி எல்லாம் வாழ வைக்க முடியாது ப்பா..” என்ற மகளின் பேச்சில் தாமரையும் விசுவநாதனும் பதறி தான் போய் விட்டனர்.

அதில் விசுவநாதன் கோபத்துடன்… “நீ சாவ தான் உன்னை இத்தனையும் செய்து நீ ஆசைப்பட்டவனுக்கு கல்யாணம் செய்து வைத்தேனா..?” என்று கோபத்துடன் கேட்ட தந்தையிடம் ஸ்ருதியுமே இப்போது கோபத்துடன் தான் பதில் அளித்தாள்..

“நீங்க எனக்கு மட்டுமே ஆசைப்பட்டவனோடு கல்யாணம் செய்து வைக்கல ப்பா.. உங்க தங்கைக்கும் பண்ணி வைத்து இருக்கிங்க.?” என்ற இந்த பேச்சில் தாமரையும் விசுவநாதனும்.. இப்போது தான் மகளின் பேச்சை கவனித்தது..

முன் கூட தற்கொலை செய்து கொள்வேன் என்று உன் தங்கை போல இது போல தானே பேசினாள் என்று இருவரும் மகளை பார்க்க..

மகளோ… “ என்னப்பா நீங்க செய்தது இப்போது உங்களுக்கு திரும்புதா…?” என்று கேட்டவளிடம் விசுவநாதன்..

“நான் இப்போவும் சொல்வேன்.. நான் எந்த தப்பும் செய்யல… இப்போ நீ ஆசைப்பட்ட வாழ்க்கை அமச்சி கொடுக்க நினச்சது போல தான் அன்னைக்கு என் தங்கை ஆசைப்பட்ட வாழ்க்கையை அமச்சி கொடுத்தேன்..” என்ற தந்தையின் பேச்சில் இருந்த முரனில்.. அவரை பார்த்து ஒரு மாதிரியாக சிரித்த ஸ்ருதி…

“ப்பா உங்க தங்கை கல்யாணமும்.. என் கல்யாணமுன் ஒன்னு இல்ல. உங்க தங்கை மட்டும் தான் மாமாவை லவ் பண்ணி இருக்காங்க… மாமா யாரையும் விரும்பி இல்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனா மாமா சாரதா ஆன்ட்டியை அத்தனை பிடித்து விரும்பி இருக்காங்க..

ஆனா நான் சித்துவுமே என்னை விரும்புகிறார்ப்பா… மகியோடான மேரஜ்… பெரியவங்க பேசினது..

சித்துக்கு அவங்க அப்பா அம்மாவை அத்தனை பிடிக்கும்… ஏன் மகி மீது அன்பு இருக்கு.. அதுல தான் சித்து மகியை கல்யாணம் செய்ய ஒத்து கொண்டது.. நீங்க உங்க தங்கையையும் என்னையும் கம்பெர் செய்யாதிங்க…” என்று திட்ட வட்டமாக பேசி விட்ட ஸ்ருதியின் பேச்சுக்கும் விசுவநாதனிடம் பதில் இருந்தது.

ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மகள் விடாது மேலும் மேலும் பேசிய பேச்சிற்க்கு விசுவநாதன்..

“கட்டாயத்தில் கல்யாணம் செய்தாலுமே அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க வாழ்ந்து தான் இருக்காங்க. அதுக்கு சாரதாவுக்கு சித்தார்த்.. உங்க மாமாவுக்கு உன் குரு அத்தான்..” என்ற இந்த பதிலை ஸ்ருதி மட்டும் கேட்கவில்லை..

தான் தங்கி இருந்த அறைக்கு சென்ற சித்தார்த்தினால் ஒரு துளி கூட அமைதியாக அவனால் இருக்க முடியவில்லை..

சாரதாவை அந்த வயதில் கடத்தி கொண்டு இரண்டு நாள் வைத்து கொண்டு இருந்தது.. விசுவநாதன் மீது அவனுக்கு அப்படி ஒரு கோபத்தை கொடுத்தது…

காசுக்காக கடத்தி வைத்து கொண்டு இருப்பவர்கள் எந்த அளவுக்கு நல்லவர்களாக இருந்து இருப்பார்கள். அவர்கள் தன் அம்மாவை ஏதாவது செய்து இருந்து இருந்தால், கண்டிப்பாக தன் அம்மா தன்னை மாய்த்து கொண்டு இருந்து இருப்பார்கள் ..

அப்படி ஏதாவது நடந்து இருந்தால், இவரின் தங்கைக்காக என் அம்மாவை அப்படி கடத்துவார்களா. இதில் ஸ்ருதியின் அன்னை தன் காதலுக்காக செய்த வேலை என்று அனைத்தையும் நினைக்க நினைக்க அப்படி ஒரு ஆத்திரம் வந்தது அவனுக்கு..

ஸ்ருதியின் பெற்றோரை பார்த்து ஏதாவது கேட்டால் தான் ஆச்சு என்று தான் இங்கு வந்தது.. ஆனால் வந்தவன் காதில் தாமரை ஸ்ருதியை சித்தார்த் கூட வாழ வைக்க வேண்டும் என்ற பேச்சு ஆரம்பித்ததில் இருந்து குழந்தை ஒன்று பிறந்து விட்டால், குழந்தைக்காக வாழ்வார்கள் என்று வரை கேட்டவனுக்கு கோபம் தான்..

இப்போது கூட இவர்களின் மகள் வாழ்க்கையை பற்றி மட்டும் தான் இவர்கள் யோசிப்பார்களா என்று கோபமாக கேட்டு கொண்டு இருந்த சித்தார்த்..

பேசட்டும் .. எது வரை பேசுகிறார்கள் என்று பார்க்கலாம் என்று நினைத்து தான் அமைதியாக நின்று விட்டான்…

இதில் கேட்டவனுக்கு ஒரே ஒரு ஆறுதல் ஸ்ருதியின் பேச்சு மட்டும் தான்.. பரவாயில்லை இவளாவது பொய்த்து போகாது இருக்கிறாளே என்று நினைத்தவன்.. இடையில் விசுவநாதன் பேச்சை விட்ட.

மகியின் பெற்றோர் இறப்பை பற்றி அதை தாமரை கவனிக்கவில்லை என்றாலும்… சித்தார்த் கவனித்து விட்டான்..

மகியின் அப்பா அம்மா இறந்தது வேறு பிரச்சனை என்கிறார்… அவங்க இறந்ததில் இவங்களுக்கு என்ன பிரச்சனை இருக்க போகிறது.. ஏற்கனவே தன் மாமா அத்தையின் இறப்பில் இருக்கும் அவனின் சந்தேகம் உறுதி பெற. இப்போது தன் கோபத்தை காட்டிக் கொள்ள சித்தார்த் விரும்பவில்லை…

அதனால் வந்த தடையம் தெரியாது சித்தார்த் சென்று விட்டான்.

தன் இருப்பிடத்திற்க்கு வந்தவன் தன் மாமாவின் இறப்பில் இருக்கும் சந்தேகத்தை தீர்க்க என்று அனுகி இருந்த டிடெக்டீவ் ஏஜென்ஸியை அழைத்த சித்தார்த்..

என்ன ஏது என்று விவரம் சொல்லாது தன் மாமா இறந்த அன்று விசுவநாதன் எங்கு இருந்தார் என்ற விவரத்தை விசாரிக்க சொன்னான்..

சொன்னவனுக்கு அடுத்த நாளே… தன் மதுபான கடையில் இருந்தது பின் தன் மாமா இறந்த பகுதிக்கு சென்றது.. பின் குருமூர்த்தியின் காரை எடுத்து கொண்டு வந்தது என்ற விவரம் சொன்னவன் காரில் ஸ்ருதியையும் அழைத்து வந்தது சொல்ல..

ஸ்ருதியா…. சித்தார்த்துக்கு இது அதிர்ச்சியான தகவல் தான்.. இன்னும் எனக்கு எத்தனை அதிர்ச்சியான விசயம் காத்து கொண்டு இருக்கிறது…? என்று நினைத்தாலுமே, அதையும் விசாரிக்க சொல்ல…

இன்னும் மூன்று நாட்கள் கடந்து அவன் முன் அனைத்து தகவல் அடங்கிய் கோப்புக்கள் அவன் முன் இருந்தன. படித்தான்… சித்தார்த் நிதானமாக அனைத்துமே படித்தான்..

படித்தவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.. ஸ்ருதி குடும்பத்தினர்கள்.. தன் குடும்பத்தினருக்காக என்ன என்றாலும் செய்து விடுவார்கள் என்பது தான்..

இப்போது தான் என்ன செய்ய வேண்டும்,.. தன் குடும்பத்திற்க்காக தான் என்ன இப்போது செய்ய வேண்டும்.. சித்தார்த் இது தான் யோசித்தது…

தான் செய்த செயலின் வீரியம் சித்தார்த்தை பலமாக தாக்கியது… ஸ்ருதியை கண்டிப்பாக தன் அம்மாவின் முன் நிற்க வைக்க முடியாது.. தன் அம்மாவுக்கு அவளின் அப்பா செய்தது ஒரு அநியாயம் என்றால், ஸ்ருதியே தன் மாமனுக்கும் மாமிக்கும் செய்த இந்த செயலை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

அவள் நினைவு இல்லாது தான் அந்த விபத்து நடந்தது.. ஆனா அதை மறைத்து கவுரவமான ஒரு மனிதருன் மீது சேற்றை வாரி இறைத்தது போல மது அருந்தி விபத்தை ஏற் படுத்தி கொண்டார் என்று மாற்றியதை, அவனால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை..

கண்டிப்பாக இனி ஸ்ருதி தன் வீட்டிற்க்கு மருமகளாக வரவே முடியாது.. இனி தான் என்ன செய்ய வேண்டும்..அவனுக்கு தெரியாத ஒன்று ஒன்று வரை கூட ஸ்ருதி தான் விபத்தை செய்து விட்டோம் என்றோ.. அதனால் இரு உயிர் போய் விட்டது என்று தெரியாது என்பது சித்தார்த்துக்கு தெரியவில்லை.

சித்தார்த் இப்போதுமே அவசரப்பட்டு தான் போய் விட்டான்.. அதன் விளைவு தன்னிடம்

இருந்த ஆதாரத்தை எடுத்து கொண்டு தன் தந்தையிடம் கொடுத்து விட்டான்.. வீட்டிற்க்கு தான் சென்றது..

அப்போது வீட்டில் ராம் சந்திரன் மட்டும் தான் இருந்தார்.. சாரதாவும் மகியும் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வெளியில் சென்று இருந்த சமயம் அது..

அந்த சமயம் ராம் சந்திரன் தன் மகனை எதிர் பார்த்து இருக்கவில்லை. அவருமே மகனை பார்த்து நீண்ட நாள் ஆனதால், சட்டென்று கோபம் பட அவர்ல் முடியவில்லை.

என்ன தான் இருந்தாலும் மகன்.. அதுவும் ஒரே மகன்.. பார்த்த உடன் அவர் கண்ணுக்கு தெரிந்தது மகனின் இளைத்த தோற்றம் தான்.. இது வரை வெளி சாப்பாட்டு மகனுக்கு அவ்வளவு பழக்கம் இல்லை..

ஆனால் இப்போது கடந்த நான்கு மாதமாக சித்தார்த் வெளி சாப்பாட்டினால் கொஞ்சம் இளைத்தும் கருத்தும் தான் போய் விட்டான்..

ராம் சந்திரனை மகனை பார்த்ததும் இதை தான் நினைத்தார்.. இப்படி அவரசரப்பட்டுட்டியே…. கண்டிப்பாக விசுவநாதன் செய்த விசயம் மகனுக்கு தெரிய வந்தால், அவனால் ஸ்ருதியோடான ஒரு வாழ்க்கை எப்படி இருக்கும்.. ஒரு தந்தையாக மகனின் வாழ்க்கையையும் நினைத்தும் தான் கவலைப்பட்டார்..

அதே தான் தந்தையில் காலில் சாஷ்ட்டாங்கமாக வீழ்ந்து விட்டான் சித்தார்த்..

“ப்பா என்னை மன்னிச்சிக்கோங்கப்பா. ப்ளீஸ். உங்க வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடந்து இருக்கும்.. அதுவும் அம்மாவை அம்மாவை..” அவனால் தன் அம்மாவை கடத்தியது பற்றி இப்போது சொல்ல கூட முடியவில்லை என்பதை விட சொல்ல பிடிக்கவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்..

சாரதாவை கடத்திய போது அவன் இல்லை தான். ஆனாலுமே தன் கைய்யாளகத்தனமாக தான் இப்போது நினைக்கிறான்.. அது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை… ஆனால் அது நடந்து இருந்து இருக்க கூடாது… அவர்கள் நடத்தி இருக்க கூடாது என்று நினைத்தவன்..

“ப்பா ப்ளீஸ்ப்பா. நான் எனக்கு தெரியாம…” என்று தந்தையின் கை பற்றி கொண்டவனிடம் ராம் சந்திரன் என்ன என்று சொல்லுவார்..

அவர் காதலுக்கு எதிரி கிடையாது.. இன்னும் கேட்டால் அவருமே சாரதாவை காதலித்தார் தானே.

அதை தன் மகனின் இப்போது கூறினார்… “ நான் உங்க அம்மா மீது வைக்காத காதலாடா…? காதலுக்கும் குருபக்திக்கும் நடுவில் நான் இருந்தேன்டா… ஆனா உங்க அம்மாவுக்கு ..” என்று பேச ஆரம்பித்தவர்.. அதை விடுத்து அடுத்து பேசினார்…

“நான் விட்டு கொடுத்து விலகி நிற்கல.அப்போ என் காதல் அவ்வளவு வலு இல்ல்லாததா.? இல்ல டா.. என் சாரதாவுக்கு பிடித்த வாழ்க்கை அவளுக்கு கிடைக்கட்டும் என்று ஒதுங்கி நின்று கொண்டேன்.. ஒரே ஒரு வார்த்தை என் ஐய்யா கிட்ட.. அது தான் உன் தாத்தன் கிட்ட நான் சொல்லி இருந்த. உன் அம்மாவை என் கையில் பிடித்து கொடுத்து இருப்பாருடா. அது தான்டா அப்புறம் நான் கேட்காமலேயே என் ஐயா எனக்கு செய்தார்… நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டாருடா உன் தாத்தா.. ஆனா என்னை புரிந்தவர் அவர் மகளை புரிந்து கொள்ளவில்லை… அதனால சாரதா பட்ட துன்பம்..

அவள் நல்லா இருக்கட்டும் தான் நான் ஒதுங்கி கொண்டேன். ஆனால் அவள் ஆசைப்பட்டதே அவளுக்கு துன்பத்தை கொடுக்கும் என்று நினச்சி இருந்து இருந்தா நான் ஒதுங்கி நின்னு இருந்து இருக்க மாட்டேன்…

ஆனா நீ இப்போ அவசரப்பட்டது.. என்ன விட சித்து மகியை கூட விடு….. உன் அம்மா.. எப்படி டா. நான் அதில் இருந்து மீட்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமாடா.. காதல் கூட அவளுக்கு பெரிது இல்லேட்டா.. இன்னொருத்தன் புருஷனை இன்னும் நினச்சி கொண்டு இருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து இருக்கல என்று சொல்லிட்டா..

ஆனா அவளை கடத்தி கொண்டு போன அந்த இரண்டு நாளும்.. ஒவ்வொரு நிமிஷமும்.. எவ்வளவு பயந்து இருந்தா உனக்கு தெரியுமாடா. எத்தனை ராத்திரி பயந்து அலறி எழுந்து உட்கார்ந்து இருந்து இருக்கா தெரியுமா…? அத்தனை பயத்தை கொடுத்த அவன் மகளை எப்படிடா உன் அம்மா..” என்று அவருமே இதற்க்கு என்ன தீர்வு என்று யோசித்து கொண்டு இருக்க..

‘இன்னொரு பிரச்சனையாக மாமா மாமியின் விபத்தை பற்றி கூற ராம் சந்திரன் அதிர்ந்து போய் விட்டார் என்றால், அனைத்துமே கேட்டு கொண்டு வந்த சாரதாவும் மகியின் நிலை சொல்லவும் வேண்டுமோ…
 
Active member
Joined
May 12, 2024
Messages
198
Ippo kooda thirunthala intha lotus 😡😡😡
Guru un mama va pathi nallatha ninaikkirathai kooda vittudu…

Kandipp action eduthe aaganum antha Visuwanathan mela…

Shruthi ya Sharadha accept pannuwnagala???

Shruthi ku Siddharth than venum na inimel avalukku amma appa kooda ulla relationship ah cut panna solli avalai veetukulla edukkanum
 
Active member
Joined
Jul 13, 2024
Messages
164
Great going! Intha mudichu eppadi avizhpathu?

But Mahiku, Saradha ku and kittu ku nyayam kidaikkanum.

How is Guru and Mahi Jodi going to join in all this commotion and Guru has done the biggest mistake of supporting his mama and still continuing to do it
 
Last edited:
Top