Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Yannai kondaada pirandhavan....15...1

  • Thread Author
அத்தியாயம்…15….1

கிருஷ்ண மூர்த்தி காவல் நிலையத்திற்க்குள் நுழையும் போதே வெளியில் நின்று கொண்டு இருந்த காவலர் கிருஷ்ண மூர்த்தியை அடையாளம் கண்டு கொண்டவர் கிருஷ்ண மூர்த்திக்கு வணக்கம் வைத்து விட்டு, இவர் வந்த விசயத்தை கூற காவல் நிலையத்திற்க்குள் செல்ல பார்த்த வரை தடுத்து நிறுத்திய கிருஷ்ண மூர்த்தி ..

“நானே பார்த்து கொள்கிறேன்…” என்று சொன்னவர்…

பின் அவரே… “ஏதாவது பெண் வந்தாங்கலா…?” வெளியில் நின்று கொண்டு இருந்த அந்த காவலரிடம் கிருஷ்ண மூர்த்தி கேட்டார்..

“ஆமா ஆமா சார்.. காலேஜ் பொண்ணு போல தான் இருந்தாங்க.. எல்லோ கலருல சுடி போட்டுட்டு இருந்தாங்க சிகப்பா..” என்று இன்னும் சொல்ல போன அந்த காவலரின் பேச்சை தடுத்து நிறுத்தி விட்டு..

“நான் பார்த்து கொள்கிறேன்…” என்று கிருஷ்ண மூர்த்தி சொன்ன போது கூட அந்த காவலர் மேலும் ஒரு தகவலாக..

“ஸார் அந்த பொண்ணு கூட தான் பேசிட்டு இருக்காங்க சார்…” என்ற பேச்சை காதில் வாங்கி கொண்டு காவல் நிலையத்திற்க்குள் உள் நுழைந்த கிருஷ்ண மூர்த்தியின் காதில் தான் அந்த காவல் அதிகாரி.. மகியிடம்..

“உன்னை பிராத்தல் கேஸில் உள்ள தள்ளி விடுவேன்…” என்ற வார்த்தை விழுந்தது.

எப்போதுமே கிருஷ்ண மூர்த்தி அமைதியானவர்.. சத்தமாக பேச மாட்டார். ஆனால் அதே சமயம் அவர் பேச்சு அழுத்தமாக இருக்கும்..

அதே அழுத்த குரலில் தான் கிருஷ்ண மூர்த்தி அந்த காவல் அதிகாரியிடம்.. “ ம் போட்டு அப்புறம் என்ன செய்வீங்க..?” என்று கேட்டுக் கொண்டே அந்த அதிகாரியின் எதிரில் போய் நின்றார்..

அந்த இடத்தில் அந்த காவல் அதிகாரி கிருஷ்ண மூர்த்தியை எதிர் பார்க்கவில்லை.. அதில் கொஞ்சம் பயந்தவராக..

“இல்ல சார்… காலையில வந்து குடச்சல் போல பேசுது…” என்று கிருஷ்ண மூர்த்தியிடம் பேசிய வாறே… தன் முன் மகி கொடுத்த ஆதாரத்தில் மேல் அங்கு இருந்த இரண்டு கோப்பை அதன் மீது வைத்து மறைப்பது போல செய்ய.

கிருஷ்ண மூர்த்தி அனைத்துமே கவனித்து கொண்டு தான் இருந்தார்…

மகி கிருஷ்ண மூர்த்தியின் குரலுக்கு வந்து விட்டாரா…? என்பது போல திரும்பி மட்டும் தான் பார்த்தாள்.. எதுவும் பேசவில்லை.. தனித்து பேசி பழக்கம் இல்லை..பேசியது எல்லாம் அவளின் மாமா ராம் சந்திரன் முன் தான்.. அதுவும் இப்போது கிருஷ்ண மூர்த்தியை பற்றி அனைத்தும் தெரிந்த விசயங்களில் பெண்ணவளுக்கு பேச கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது…

இப்போது அந்த அதிகாரி.. மகி பேசாது இருப்பதையே வைத்து கொண்டு கிருஷ்ண மூர்த்தியிடம்..

“பார்த்திங்கலா சார்… நீங்க எந்த பதவியில் இருந்து ஒய்வு பெற்று இருக்கிங்க. உங்களை பார்த்து ஒரு விஷ் செய்யல. குறைந்த பட்சம் எழுந்துக்க கூட இல்லாது என்ன தெனவெட்டா உட்கார்ந்துட்டு இருக்கு பார்த்திங்கலா சார்.. இப்போ இருக்கும் பிள்ளைகளுக்கு எல்லாம் மரியாதை என்பதே தெரியல சார்..”

தன் மீது இருக்கும் தப்பை மற்றவர்கள் செய்யும் தப்பை சொல்லி தான் தப்பிப்பது போல.. அந்த காவல் அதிகாரி மகியை சொன்னார்.. பாவம் அவருக்கு தெரியாது.. மகி அழைத்து தான் கிருஷ்ண மூர்த்தி வந்து இருக்கிறார் என்பதும்.. மகிக்கு கிருஷ்ண மூர்த்தியை தெரியும் என்பதும்..

கிருஷ்ண மூர்த்தி அந்த காவல் அதிகாரியை பார்த்து சிரித்து கொண்டே மகியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டவர்..

“ ஒ அப்படியா…?” என்று கேட்டவர் பின்.

“நேர்மை இருந்தா இந்த காலம் இல்லை எந்த காலமாக இருந்தாலும் கூழை கும்பிடு எல்லாம் போட தேவையில்லை. இதோ மகியை போல…” என்று சொன்ன கிருஷ்ண மூர்த்தி மகியின் தோள் மீது கை வைத்தார்..

அது என்னவோ தெரியவில்லை.. கிருஷ்ண மூர்த்திக்கு மகியை பார்த்ததில் இருந்தே.. அவளின் மீது பாசம்… தன் சொந்த தங்கை தாமரையின் மகள் ஸ்ருதியை விட. மகியை பார்க்கும் போது அவர் மனதுக்கு இதமாக இருந்தது… காரணம். தன் ஐய்யாவின் பேத்தி என்பதினாலா..? இல்லை சாரதாவின் சாயல் மகியில் இருப்பதினாலா தெரியவில்லை.. ஆனால் மகியை கிருஷ்ண மூர்த்திக்கு பிடித்து இருந்தது..

கிருஷ்ண மூர்த்தி மகியின் தோள் மீது கை வைத்ததோடு… “ நான் வரும் வரை கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்து இருக்கலாமே ம்மா..?” என்றும் கேட்க.

மகி… “ இல்ல அங்கிள் அன்னைக்கு என் கிட்ட கைய்யெழுத்து வாங்குவதில் இவர் தான் ரொம்ப அவசரப்பட்டார்… என் அப்பாவுக்கு இவர் தான் ட்ரீங்கஸ் ஊத்தி கொடுத்தது போலவே தான் பேசினார். அது தான் இவரை பார்த்ததும் வந்துட்டேன்… ஆனா பாருங்க இப்போவும் அதே போல தான் பேசுறார்.. நான் இத்தனை ஆதாரங்கள் கொடுத்த போதும்..”

தன் எதிரில் அமர்ந்திருந்த அந்த காவல் அதிகாரியை ஒரு கேவலமான பார்வை பார்த்து கொண்டே மகேஷ்வரி.. கிருஷ்ண மூர்த்தியிடன் சொன்னாள்.

மகி மட்டும் இந்த நேரம் இருந்து இருந்தால் கண்டிப்பாக அந்த அதிகாரி மிரட்டியது போல பிராத்தல் கேசில் போட்டு இருந்து இருப்பார்.. அந்த அளவுக்கு மகியின் பேச்சில் அந்த அதிகாரி மனதில் கோபம் வந்தாலுமே, அதை முகத்தில் காட்டாது அமைதி காத்தார்.. காரணம் கிருஷ்ண மூர்த்தி..

“அதுவாமா..? நீ எத்தனை ஆதாரம் காட்டினாலுமே இவர் இப்படி தான் சொல்வார்.. ஏன்னா அவ்வளவு வாங்கி இருந்து இருப்பார். வாங்கிய காசுக்கு அவர் நியாயம் செய்யிறார்..” என்று கிருஷ்ண மூர்த்தியுமே மகியின் பேச்சில் இணைந்து கொள்ள. அந்த காவல் அதிகாரிக்கோ..

கிருஷ்ண மூர்த்திக்கு தெரிந்த பெண்ணாக இந்த பெண் இருப்பாள் என்று அவர் நினைக்கவில்லை..

கூடவே இவர் மகன் சொல்லி தானே அந்த கேசை அப்படி முடித்தேன்… என்றும் நினைத்து கொண்டார்… அதனால் ரொம்ப எல்லாம் அவர் பயப்படாது தான் கிருஷ்ண மூர்த்தியிடன் அந்த அதிகாரி பேசியது..

உண்மையை தான் பேசியது.. “ சார் உங்க பையன் தான் இப்படி முடிக்க சொன்னது.” என்று..

கிருஷ்ண மூர்த்தி அவர் சர்வீஸில் இது போலான அதிகாரியை எத்தனையோ பார்த்து விட்டு தான் வந்து இருக்கிறார்.. அதனால் அவர் பெரியதாக எல்லாம் ரியாக்ஷன் காட்டாது…

“சரி இப்போ நாங்க கம்பிளையிண்ட் பண்றோம், அதை வைத்து கேசை பையில் பண்ணு…” என்று சொல்ல..

மகி தான்… “ பணம் கொடுத்தா நீங்க என்ன என்றாலும் செய்வீங்கலா.? உங்களுக்கு கவர்மெண்ட் தானே சம்பளம் கொடுக்குது..” என்று அந்த வயதிற்க்கே உரிய நீதி நியாயம்.. அது கொடுத்த அதைரியத்தில் கேட்டாள்..

இந்த பேச்சுக்கும் கிருஷ்ண மூர்த்தியை நினைத்து தன் கோபத்தை மனதில் அடக்கி வைத்து கொண்டு தான் அந்த காவல் அதிகாரி மகியை பார்த்தது.

ஆனால் அவரின் அந்த கோபம்.. அவர் கண்ணில் தெரிந்து விட்டது போல…

கிருஷ்ண மூர்த்தி மகியிடம்… “ கவர்மெண்ட் கொடுக்கும் பணத்தோடு அதிகமா யார் கொடுக்கிறாங்கலோ.. அவங்களுக்கு விசுவாசமா இருக்குறாங்க. அவ்வளவு தான்..” என்று சொன்னவர்.. பின் மகியிடம் ..

“இதை நான் பார்த்து கொள்கிறேன்..” என்று சொல்லி விட்டு சொன்னது போல முறையாக அந்த கேசை ஃபைல் செய்தவர் அங்கு இருந்து கிளம்பும் போது…

கிருஷ்ண மூர்த்தி அந்த காவல் அதிகாரியிடம்… “அந்த பெண்ணை ஏதாவது செய்யனும் என்று நினச்சே… ? நான் சர்வீஸில் இல்லை தான்.. ஆனால் இப்போது சர்வீஸ்ஸில் இருக்கும் அதிகாரிங்க கிட்ட எனக்கு இன்னுமே பழக்கம் இருக்கு என்று உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்…” என்று சொன்னவர்…

இறுதியாக.. “ உங்களுக்கு பிரமோஷன் கூட வர போகுது போல..” என்று பேச்சு வாக்கில் சொல்லி விட்டு தான் வந்தது..

பின் கிருஷ்ண மூர்த்தி மகியை பாதுகாப்பாக அவள் அத்தையின் தெரு முனையில் விட்டு விட்டு தான் கிருஷ்ண மூர்த்தி வீடு வந்தது..

வந்தவரை வர வேற்றது அவர் மகன் மட்டும் அல்லாது அவரின் தங்கை தங்கையின் கணவன் மகள் ஸ்ருதியும்.. கூடுதலாக ஸ்ருதி அழுதுக் கொண்டு இருந்தாள்…

கிருஷ்ண மூர்த்திக்கு தெரியும்.. கேஸ் ஃபைல் செய்ததை அந்த அதிகாரி மகனிடம் கூறி இருப்பார் என்று… ஆனால் விசுவநாதனை கிருஷ்ண மூர்த்தி தன் வீட்டில் எதிர் பார்க்கவில்லை….

விசுவநாதன் இங்கு வந்தோ… இவர் விசுவநாதன் வீட்டிக்கு சென்றோ வருடங்கள் பல கடந்து விட்டது…

இருந்தும் கிருஷ்ண மூர்த்தி மச்சானை விசாரிக்காது ஏன் யாரையும் சட்டை செய்யாது தன் அறைக்கு தான் செல்ல பார்த்தார்..

ஆனால் தாமரை… “ ண்ணா நீங்க செய்யிறது உங்களுக்கே நியாயமா இருக்கா ண்ணா.? ஏற்கனவே என் மகளின் வாழ்க்கையை நினச்சி நான் கவலைப்பட்டுட்டு இருக்கேன்.. இதுல நீங்க ஸ்ருதி மேல கேஸ் வேற ஃபைல் பண்ணிட்டு வந்து இருக்கிங்க… அவள் உங்க தங்கச்சி மகள் ண்ணா… அந்த பாசம் கூட உனக்கு இல்லையாண்ணா..?” என்று கண்களில் கண்ணீரோடு கேட்ட தங்கையை பார்த்து நியாயமாக ஒரு அண்ணாக அவர் கண்ணீரை கிருஷ்ண மூர்த்தி துடைத்து விட்டு இருக்க வேண்டும்..

ஆனால் கிருஷ்ண மூர்த்தியோ கை கட்டி கொண்டு ஏதோ நாடகத்தை பார்ப்பது போல தான் தங்கையின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தார்…

தன் பேச்சுக்கு எதுவும் சொல்லாது, அதுவும் தன்னை இலக்காரத்துடன் பார்த்து கொண்டு இருந்த அண்ணனின் இந்த செயலை பார்த்து…

“ண்ணா உங்களுக்கு தங்கை மகளோடு உங்க முன்னால் காதலியோட அண்ணன் மகள் தான் முக்கியமா போயிட்டாளா…?” என்று தாமரை கோபமாக கேட்க.

ஒரே சமயத்தில் விசுவநாதன்… “ தாமரை…” என்று ஒரு அத்தட்டலான குரலும்.. குரு மூர்த்தியிடம் இருந்து ..

“அத்த பார்த்து பேசுங்க…” என்று கோபமான ஒரு குரலும் எழுந்தன..

ஆனால் கிருஷ்ண மூர்த்தி கோபப்படாது அமைதியாகவே. “இது தான் நீ தாமரை… உனக்கு ஒன்னு வேண்டும் என்றால், நீ எந்த அளவுக்கு கீழ் இறங்குவ என்று எனக்கு தெரியும்…” என்று சொன்னவரின் பேச்சில் தாமரை மீண்டும் பணிந்து போனவராக.

“ண்ணா மன்னிச்சிக்கோ ண்ணா மன்னிச்சிக்கோங்க. நான் என் பொண்ணை பத்தி கவலையில் தெரியாது அப்படி பேசிட்டேன்…” என்று சட்டென்று தன் முகப்பாவனையை மாற்றி கொண்டு பேசிய தன் தங்கையை பார்த்து கொண்டு இருந்த கிருஷ்ண மூர்த்தியின் பார்வையில் துளி மதிப்பு இல்லை…

அண்ணனின் பார்வையில்.. “ண்ணா. சத்தியமா எனக்கு ஸ்ருதி அந்த விபத்து செய்தது தெரியாது ண்ணா…” என்று சொல்ல.. தங்கையை பற்றி தான் கிருஷ்ண மூர்த்திக்கு நன்கு தெரியுமே..

அதனால் இந்த பேச்சு உண்மை என்று தான் அவருக்கு புரிந்தது.. அதனால்.. “ சரி இப்போ தான் தெரிஞ்சிடுச்சி தானே.. இப்போ என்ன செய்ய போற… என் ஐய்யாவோட மகன் அவரு… விபத்து தெரியாம நடந்துடுச்சி.. ஆனா அதற்க்கு அடுத்து நடந்தது…?” என்று கேட்ட அண்ணனிடம் உடனே தாமரையிடம் இருந்து பதிலாக.

“ண்ணா இது என் பொண்ணு சம்மந்தப்பட்ட விசயம் ண்ணா… அவள் என்ன தெரிந்து ட்ரக்ஸ் யூஸ் பண்ணியா. காரை அவங்க மேல ஏத்திட்டா.. அவளுக்கே தெரியாம அவளுக்கு கொடுத்துட்டாங்க.. அவ மானம் போயிட போகுதுன்னு அங்கு இருந்து வந்த அவளையும் மீறு நடந்த விசயம் ண்ணா.. இது சொன்னா உலகம் நம்புமா.. வயசு பொண்ணு பேரு கெட்டு போயிடாது ண்ணா..” என்று தாமரை சொன்னது அனைத்துமே சரி தான். அது கிருஷ்ண மூர்த்திக்குமே புரிந்தது தான்..

ஆனால் அதற்க்கு என்று கெளரவமாக வாழ்ந்த ஒருவரை.. அதுவும் நல்லாசிரியர் விருது வாங்கிய ஒருவரை இறப்பில் இப்படி அசிங்கப்படுத்திவீங்கலா.?

அதை தான் கிருஷ்ண மூர்த்தி தன் தங்கையிடன் கேட்டது.

இத்தனை பேச்சுக்கும் அமைதியாக அமர்ந்திருந்த விசுவநாதன் எழுந்து கிருஷ்ண மூர்த்தி எதிரில் வந்து நின்றவர்.

“முடிவா நீங்க என்ன சொல்ல வர்றிங்க…?” என்று நேரிடையாக கேட்டவருக்கு பதிலாக கிருஷ்ண மூர்த்தியுமே விசுவநாதனின் முகம் பார்த்து…

“சிங்கப்பெருமாள் வாழும் போது கெளரமா வாழ்ந்தான்... அதே போல அவர் இறப்புமே அவருக்கு கெளரவத்தை கொடுக்க வேண்டும்.. அதுக்கு நான் என்ன என்றாலுமே செய்வேன்…” என்று முடிவாக சொல்ல…

அவருமே கிருஷ்ண மூர்த்தியிடம்… “ நான் அன்று என் தங்கைக்காக அத்தனை செய்தேன்.. இன்று என் மகளுக்காக செய்ய மாட்டேன் என்று நினச்சிட்டிங்கலா…? “ என்று சொன்னவர்…

அதற்க்கு அடுத்து கிருஷ்ண மூர்த்தியிடம் ஒன்றும் பேசாத விசுவநாதன்.. தன் மனைவியை மகளை பார்த்தவர்..

“போகலாம்.” என்று அழைத்து சென்று விட்டார்..

கிருஷ்ண மூர்த்திக்கு விசுவநாதனின் பேச்சும் பார்வையும் சரியாக படவில்லை.. அனைத்துமே ஒரு வித யோசனையுடன் கேட்டு கொண்டு இருந்த மகனிடம்..

“அந்த பெண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு. நான் சும்மா இருக்க மாட்டேன் குரு… உன் மாமன் கிட்ட சொல்லி வை… முன் போல எல்லாம் அவர் நினச்சதை நடத்தி விடலாம் என்று…கனவு காண வேண்டாம் என்று.” சொன்ன தந்தையிடம்..

குருமூர்த்தி.. “கவலை படாதிங்கப்பா ஈஸ்வரிக்கு ஒன்னும் ஆக நான் விட மாட்டேன்..” என்றதில்..

கிருஷ்ண மூர்த்தி குழப்பமான முக பாவனையில்..

“யார் ஈஸ்வரி…?” என்று கேட்க. தன் தலையை இரு பக்கமும் ஆட்டிய குருமூர்த்தி..

“மகேஷ்வரிக்கு தான்..” என்று விட்டு வெளியில் சென்ற மகனின் முதுகையே கிருஷ்ண மூர்த்தி யோசனையுடன் பார்த்திருந்தார்…












 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Enna Visu… over ah pannureenga… thappu unga mela.. 😡😡😡
Guru inime Mama Koma nu sollittu pona irukku…

Guru edho mudivu pannittan pola… Eeshwari ame 😑😑😑
 
Top