அத்தியாயம்…19..2
விசுவநாதனும் குரு மூர்த்தியும் இருவருமே பேச வேண்டும் என்று ஒரு சேர சொன்னது போல தான் அவர்கள் எப்போதும் தனித்து பேசுவது என்றால், செல்லும் அந்த பங்களாவின் கடைசி தளமும், கடைசி அறையுமான மதுமானம் இருக்கும் பகுதிக்கு தான் இருவரும் சென்றது…
அங்கு சென்றதும் குரு மூர்த்தி ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ள விசுவநாதனோ தனக்கும் மாப்பிள்ளைக்கும் தனி தனியாக அவர் அவர்களுக்கு பிடித்த மதுபனத்தை கோப்பையில் ஊற்றியதோடு, தண்ணீரையுமே தனக்கும் மாப்பிள்ளைக்கும் அளவுக்கு தகுந்தப் படி கலந்து விட்டு ஒரு கோப்பையை குரு மூர்த்தியின் முன் வைத்தவர். தன்னதை தன் கையில் வைத்து கொண்டவர் குரு மூர்த்தியின் எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டவர்… ஒன்றும் பேசவில்லை.
அதே போல வேலையாள் எப்போதுமே அவர்கள் அங்கு சென்றாலே அவர்கள் கேட்காது கொண்டு வந்து கொடுப்பது போல அதற்க்கு தோதாக சைட் சிட்டிஷ் வைத்து விட்டும் சென்று விட்டான்..
அனைத்துமே முன் போல் தான் அனைத்தும் நடந்தது.. ஆனால் முன் போல அந்த இலகு தன்மை மட்டும் இருவரிடமும் இல்லாது அனைத்துமே ஏதோ ஒரு இயந்திர தன்மையில் தான் நடந்து கொண்டு இருந்தது..
இது போல நடந்து கொள்வது இருவருக்குமே புதியது,.. விசுவநாதன் தன் மனைவியிடம் கூட பகிராத ரகசியத்தை அனைத்துமே தன் மருமகன் குரு மூர்த்தியிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
ஒன்றை தவிர.. அதாவது தன் தங்கை ஆசைப்பட்டாள் என்று அவன் தந்தைக்கு அவளை திருமணம் செய்து வைத்த அந்த செயலை விடுத்து அனைத்துமே பகிர்ந்து கொண்டு இருக்கிறார்..
அதே போல தான் குரு மூர்த்தியுமே.. அவனின் குரு… ரோல் மாடல் அவனின் நாயகன் என்று இவை அனைத்தையும் தான்டி குரு மூர்த்தியின் பெஸ்ட் பிரண்ட் விசுவநாதன் என்று சொல்லலாம்…
அப்படி இருந்தவர்கள் இப்படி யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று தயங்கி கொண்டு இருப்போம் என்று இருவருமே நினைத்து கூட இருந்து இருக்க மாட்டார்கள்…
அதுவும் இந்த இடம்.. இருவருமே ரகசியம் பேசுவதோ.. அல்லது மிகவும் மகிழ்வான தருணங்களிலோ.. இல்லை ஏதாவது பிரச்சனை என்று வந்தாலோ.. இங்கு தான் வந்து விடுவார்கள்.. இங்கு வந்தால் இருவரும் பேசி விட்டால் போதும் மகிழ்ச்சி இரண்டு பங்காக பெருகுவதும், பிரச்சனைகள் அனைத்துமே மாயமானது போல தான் இருவருமே உணர்ந்து இருக்கிறார்கள்..
ஆனால் இது போல பேசவே சங்கடப்பட்டு அமர்ந்து கொண்டு இருப்பது இது தான் முதல் முறை. ஏதற்க்குமே முதல் முறை என்று ஒன்று உள்ளது அல்லவா…
மாமனும் மருமகனின் கருத்தும் இன்று வேறுப்பட்டு நிற்பதும் இது ஆரம்பம் என்று கூட எடுத்து கொள்ளலாம்..
சிறிது சிறிதாக மதுவை தொண்டை குழியில் இறங்கி கொண்டு இருக்க.வார்த்தைகள் எப்படி வெளிக்கொணர்வது என்று யோசித்து யோசித்தே இரண்டு ரவுண்ட் தொண்டைக்குள் சென்ற பின் நம் விசுவநாதன் தான் அங்கு நிலவிய மெளனத்தை கலைத்தது…
“அந்த பெண்ணை உண்மையில் உனக்கு பிடித்து தான் தாலி கட்டினியா.? இல்லை நம்ம ஸ்ருதிக்காக கட்டினியா..?”
இதுவா.? அதுவா.? என்று யோசித்து குரு மூர்த்தியின் நடவடிக்கை வைத்து நாமே ஒரு முடிவு எடுக்கும் முன் தன் மருமகனிடம் கேட்டு தெளிவுப்படுத்தி கொள்வது நல்லது என்ற முடிவோடு நேரிடையாக கேட்டு விட்டார்…
குருமூர்த்தியும் மாமனின் கேள்விக்கு யோசிக்க எல்லாம் இல்லை உடனே அவனிடம் இருந்து.
“நான் உங்க தங்கை மகன் மாமா… எனக்கு பிடிக்காத ஒருத்தியின் கழுத்தில் நான் தாலி கட்டி இருப்பேன் என்று நீங்க நினைக்கிறிங்கலா… அது யாருக்காகவுமாக இருந்தாலுமே…? ” என்ற குரு மூர்த்தியின் கேள்வி… அதுவும் குரு மூர்த்தி சொன்ன அந்த யாருக்காகவுமாக என்றாலுமே என்ற வார்த்தை விசுவநாதனை பலமாக தாக்கியது..
அதில் ஒரு நிமிடம் விசுவநாதனிடம் இருந்து பேச்சு இல்லை.. பின் தன்னை தேற்றிக் கொண்டவராக தொண்டையை கணைத்து கொண்டவர்..
பின்… “நீ முன்பே சொல்லி இருந்து இருந்தா நான் அந்த பெண்ணை பாலோ செய்ய ஆள் வைத்து இருந்து இருக்க மாட்டேன்…” என்று சொன்னவரிடம்…
குரு மூர்த்தி முதிலில்.. “ அந்த பெண் இல்ல மாமா என் மனைவி ஈஸ்வரி…” என்று தன் மாமனின் பேச்சை திருத்தியவன்..
பின்… “ நீங்க எல்லாவற்றையும் என் கிட்ட சொல்லிட்டு செய்வீங்க. .. இல்ல என்னை செய்ய சொல்லும் நீங்க… ஈஸ்வரியை பாலோ செய்ய ஆள் ஏற்பாடு செய்ததை பற்றி என் கிட்ட ஏன் மாமா சொல்லவில்லை….?” என்று கேட்டான்.
குரு மூர்த்தியின் இந்த கேள்விக்கு விசுவநாதனிடம் பதில் இல்லை என்பதை விட பதில் சொல்ல முடியவில்லை..
ஆனால் குரு மூர்த்தி அதற்க்கு உரிய பதிலை தெரிந்தே கேட்டதினால்.. “ நான் சொல்லட்டுமா மாமா..? என்று கேட்டவன் தன் மாமன் சொல்லும் முன் அவனே..
“ஏன்னா உங்களுக்கு தெரிந்து இருக்கு எனக்கு ஈஸ்வரியை பிடித்து இருக்கு என்று… இதுக்கு நான் ஒத்து கொண்டு இருந்து இருக்க மாட்டேன்.. என் கிட்ட கேட்டு நான் வேணா என்று சொன்ன பின் நீங்க செய்தா என்னை பகைத்து கொண்டது போல ஆகி விடும்.. என்னை பகைத்தும் கொள்ள கூடாது ஏன்னா என்னை உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்…” என்று சொன்ன மருமகனையே எதுவும் பேசாது அவன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தார் விசுவநாதன்..
ஏன் என்றால் குரு மூர்த்தி சொல்வது அத்தனையும் உண்மை அன்றோ… எப்படி அவரால் மறுக்க முடியும்,..?
மாமன் ஒன்றும் பேசாது இருந்தாலுமே குரு மூர்த்தி தொடர்ந்து … “ அதனால் தான் மாமா நான் உங்களை பத்தி தெரிந்ததினால் நான் ஈஸ்வரியின் பாதுகாப்புக்கு நான் இரண்டு ஆளை ஏற்பாடு செய்தேன்…” என்று சொன்னவனையே பார்த்து கொண்டு இருந்த விசுவநாதனிடம் இருந்து இப்போதும் பேச்சு இல்லை தான் .. ஆனால் மனது நிறைய பேசியது..
மகியின் பின் தொடர்ந்த ஆள் தன்னிடம் சொன்ன அந்த பெண் பின்னாடி ஏற்கனவே இரண்டு பேர் பாலோ செய்யிறாங்க என்று சொன்னதுமே…
விசுவநாதனுக்கு முதலில் குரு மூர்த்தியின் மீது தான் சந்தேகம் வந்தது.. அந்த பெண்ணின் பாதுகாப்புக்கு வேண்டி தன் மாப்பிள்ளை தான் ஏற்பாடு செய்து இருக்கிறானோ என்று…
அதனால் தான் குரு மூர்த்தியிடம் தான் வேலை செய்ய அனுப்பிய.. இந்த வேலைகளுக்கு என்று அனுகும் ஆட்களிடம் விசாரித்தது.. ஆனால் அவர்கள் இல்லை என்றதும்..
சாரதாவை தான் கடத்தியதை வைத்து மகியையுமே அது போல செய்ய கூடும் என்று சரியாக தன்னை பற்றி கணித்ததினால் சித்தார்த்தோ இல்லை ராம் சந்திரனோ தான் மகியிம் பாதுகாப்புக்கு வேண்டி அந்த ஆளை ஏற்பாடு செய்து இருக்க கூடும் என்று நினைத்து விட்டார்.
அப்போது கூட விசுவநாதன் மனதில் அப்படி ஒரு கொக்கரிப்பு… என் தங்கைக்காக செய்ததை என் மகளுக்காக நீங்க எத்தனை பாதுகாப்பு ஏற்பாடு செய்தாலுமே செய்ய மாட்டேனா என்று..
தன் மகளின் கணவனான சித்தார்த்தை எதிர்க்க நினைத்த விசுவநாதன் தன் தங்கையுன் மகனான குரு மூர்த்தியை எதிர்க்க நினைக்கவில்லை. அதற்க்கு உண்டான மனதும் அவருக்கு இல்லை.. அதற்க்கு உண்டான தைரியமும் அவரிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இவை அனைத்துமே விசுவநாதன் தன் மனதிற்க்குள் தான் நினைத்து கொண்டது,.
ஆனால் அவரின் மனதில் பாடத்தை குரு மூர்த்தி படித்தவனாக…. “ என் கிட்ட வேலை செய்யிறவங்களை வைத்து ஈஸ்வரிக்கு பாதுகாப்பு கொடுத்தா உங்களுக்கு தெரிய வந்துடும் என்று தெரியும் மாமா.. அதனால தான் அப்பாவை வைத்து ஈஸ்வரிக்கு பாதுகாப்பு கொடுத்தேன்..” என்று சொன்னதுமே விசுவநாதன் குரு மூர்த்தியை அதிர்ச்சியுடன் பார்த்தார் என்பதை விட… அடிப்பட்ட பார்வை பார்த்தார் என்று தான் சொல்ல வேண்டும்..
விசுவநாதனின் நியாபகத்தில் அன்று ஒரு நாள் குரு மூர்த்தி தன் தந்தையுடன் இணக்கமாக பேசி கொண்டு இருந்ததை தான் பார்த்த அந்த காட்டி தான் கண் முன் வந்து நின்றது…
ஒரு பெரும் மூச்சு மட்டுமே அவரிடம் வந்து நின்றது.. பின் தன்னையே தேற்றிக் கொண்டவராக இப்போது குரு மூர்த்தியிடம் விசுவநாதன்…
“சிங்கப்பெருமாள் மகள் மகேஷ்வரியை… ராம் சந்திரன் மருமகள் மகேஷ்வரியை சித்தார்த்தின் மாமா பெண் மகி யை இதில் எந்த உறவு இருந்தாலுமே பாவம் புன்னியம் பார்க்காம என் மகளுக்காக நான் கடத்துவேன்.. யாருக்கு என்றாலுமே என் மகளின் வாழ்க்கைக்கு அவள் இடைஞ்சல் என்றால் அவளை கல்யாணம் செய்வேன். ஆனா என் மருமகனின் மனைவியான ஈஸ்வரியை நான் கடத்துவது என்ன அவள் பக்கம் என் பார்வை கூட செல்லாது மாப்பிள்ளை… ஏன்னா என் தைரியமே இப்போ நீ தான் டா.” என்று சொன்னவர் என்ன நினைத்தாரோ…
அங்கு இருந்த மது பாட்டிலை எடுத்தவர்.. எதுவும் கலக்காது பாதி பாட்டிலை தன் வாயில் கவித்ழ்து கொண்டவரின் கண்களில் லேசாக பள பளத்தது..
இத்தனை நேரம் அமர்ந்து கொண்டு இருந்த குருமூர்த்தி எழுந்து கொண்டு தன் மாமன் அருகில் சென்றவன்..
“மாமா…” என்று அழைத்து அவர் தோள் தொட.. சட்டென்று விசுவநாதன் குரு மூர்த்தியின் தோளில் தலை சாய்த்து கொண்டவர் ஒன்றும் பேசவில்லை..
ஆனால் அவர் அழுகிறார் என்று தன் சட்டையின் ஈரம் உணர்ந்து புரிந்து கொண்ட குரு மூர்த்தி தன் மாமனை தன் முகம் பார்க்க வைத்து..
“மாமா..” என்று அழைக்க.. விசுவநாதன் வெடித்து விட்டார்…
“இப்போ நான் என்ன செய்ய குரு..? நான் என்ன செய்ய…? என் மகள் கீழே பைத்தியமா ஆகிட்டு இருக்கா… அவளுக்காக நான் என்ன செய்ய..? ஒரு அப்பாவா அவளின் இந்த நிலையை பார்த்து அவளுக்காக என்ன வேணாலுமே செய்ய தோனுது தான்.. ஆனா அப்படி செய்தா அது என் மாப்பிள்ளையை கஷ்டப்படுத்தும்.. மாப்பிள்ளையை விரோதியாக்கும் என்று நினைக்கும் போது… எதுவும் செய்யாதே என்ன நடக்குமோ அது நடக்கட்டும் என்று தான் நினைக்க தோனுது குரு.” என்று கதறியவர்.
பின்… “என் மகள் இப்படி இருப்பதுக்கு அவள் அந்த தற்கொலை முயற்ச்சி செய்த போது செத்து இருந்து இருந்தா கூட பரவாயில்லை என்று தான் நினைக்கிறேன் குரு…” என்றவரின் பேச்சில் குரு மூர்த்தி…
“மாமா என்ன மாமா இது பேச்சு.. “ என்று அதட்டியவன்..
பின் . “ மாமா இதை எப்படி எடுத்திப்பிங்க என்று எனக்கு தெரியல. ஆனா இனி சித்தார்த் கண்டிப்பா ஸ்ருதியை ஏத்துப்பான் என்று எனக்கு தோனல…” என்று சொன்ன குரு மூர்த்தியின் பேச்சின் உண்மை விசுவநாதனுக்குமே புரிந்தது தான்.. அதனால் தான் மகேஷ்வரியை வைத்து காய் நகர்த்த நினைத்தது..
ஆனால் இப்போது அந்த பக்கமும் அடைப்பட்டு போக எதுவும் செய்யாத நிலையில் தான் அவர் இருந்தார்.. அனைத்தும் இருந்தும் தன் மகளின் வாழ்க்கையை காப்பாற்ற முடியாத நிலையில் தான் அவர் நினை இன்று இருந்தது…
சாரதாவை கடத்தும் போது அவரிடம் இன்று இடந்த பணமுமோ சமூகத்தில் இருக்கும் பெரிய ஆட்களின் தொடர்போ அந்த அளவுக்கு இல்லை தான்..ஆனால் அன்று வயது இருந்தது…
நாட்கள் வாரங்களாக கடந்தது.. வாரங்கள் மாதமாக தொட்ட நிலையில் கூட கணவன் ஒன்றும் செய்யாத இருப்பதில் தாமரை தினம் தினம் கணவனிடம் சண்டை பிடித்தார்..
அவரும் என்ன தான் செய்வார்.. நாளுக்கு நாள் ஸ்ருதியின் நிலையும் மோசமாகி கொண்டு போனால்,
தூக்க மாத்திரை ஒரு நாளுக்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும்.. அதுவும் தினமும் இதே தொடர்ந்தாலும் உடம்புக்கு நல்லது கிடையாது என்று ஸ்ருதிக்கு சிகிச்சை செய்த அந்த மருத்துவன் அத்தனை முறை சொல்லி தான் அனுப்பினார்.
ஆனால் ஸ்ருதி மருத்துவர் சொன்ன அளவோடு மூன்று மடங்கு கொடுத்தால் தான் அவள் உறங்கவே செய்கிறாள்.. இல்லை என்றால் உறங்குவதே கிடையாது..
உறங்காத சமயத்தில் சில சமயம் அமைதியாக அப்படியே இருப்பாள்… அப்படியே என்றால் கண்ணை மூட மாட்டாள்.. கொட்ட கொட்ட முழித்து கொண்டு தான் இருப்பாள்.. சாப்பிடவும் மாட்டாள்… குளிக்கவும் மாட்டாள்… ஏன் சீறு நீர் மலம் என்று கழிக்க கூட அவள் செல்லாது அப்படியே படுக்கையில் அமர்ந்து கொண்டு இருப்பாள்..
மூன்று நாள்…. நான்கு நாள் ஆனாலுமே இதே நிலையில் தான் அவள் இருப்பாள்… அப்படி ஒரு நிலையில் அவளை பார்க்க பெத்த தாயாகிய தாமரைக்கே பயமாகி போகும் என்றால் மற்றவர்கள் நிலையை நினைத்து பாருங்கள்..
ஒரு சில நாள் இப்படி இருந்தால், ஒரு சில நாட்கள் இதற்க்கு அப்படியே எதிர் பதமாக ஏதோ விழாவுக்கு போகுவது போல கிளம்பி கொண்டு இருப்பாள்..
மேக்கம் போடுவாள் புடவை. அதுவும் பட்டுப்புடவை நகைகள் என்று அணிந்து கொண்டு இருப்பவள்..
பின் என்ன நினைப்பாளோ.. மீண்டும் குளியல் அறைக்கு சென்று குளித்து முடித்து.. மாடனாக உடை.. அதற்க்கு தோதாக வைரத்தினாலான சிறிய மோதிரம்.. சிறிய கம்மல் வைரத்திலான டாலரில் செய்த ஜெயின் என்று அணிந்து கொண்டவள்.. அதற்க்கு மேட்சிங்காக ப்ரேஸ்லேட் இல்லை எங்கு என்று கேட்டு லாக்கரில் இருக்கு என்று சொன்னதற்க்கு உடனே அதை கொண்டு வந்து தான் என்று அடமாக நின்று விட்டவள்..
பின் அவள் செய்த அமர்களத்தை சொல்லி தீராது என்பது போல் தான் நடந்து கொண்டாள்..
வேலையாட்கள் கிட்ட போக பயந்து போனார்கள் காரணம் அங்கு இருந்த அழகுக்கு என்று வைத்து இருந்த கண்ணாடியிலான குடுவையை தூக்கி அந்த வேலை செய்யும் பெண் மீது வீசி விட.
சரியாக அது நெற்றி பொட்டி பட்டு விழுந்ததில் முகம் முழுவதும் ரத்தக்காயத்தோடு வீடு சென்ற அந்த பெண் பின் சம்பள பாக்கி வாங்க கூட அந்த வீட்டிற்க்கு வரவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்..
பின் வங்கியில் இருந்த அந்த பிரேஸ்லேட்டை எடுத்து கொடுத்த பின் தான் கொஞ்சம் அடங்கி இருந்தாள்.. அது கூட தற்காலிகமானது தான். ஏன் என்றால் அதற்க்கு அடுத்து அடுத்து இரண்டு வேலை செய்யும் பெண்கள் பணியில் இருந்து நின்று கொண்டு விட்டனர்..
வேலையை விட்டு சென்ற இவர்கள் வெளியில் என்ன சொன்னார்களோ… இவர்கள் இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கிறேன் என்று சொன்ன போது கூட வர மறுத்து விட.
தாமரைக்கு மகளின் வாழ்க்கையோடு அவளின் மனநிலை உடல் நிலை என்ற கவலையோடு வீட்டு வேலைகளும் சேர்ந்து கொள்ள தாமரையுமே மெல்ல மெல்ல தன் வசம் இழக்க தொடங்கினாள்..
ஸ்ருத்க்கு அந்த அளவுக்கு மாத்திரை கொடுக்க கூடாது என்று சொல்லியும், முழித்து கொண்டு இருந்தால் அவளை சமாளிக்க முடியவில்லை என்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்தாள்..
அதன் விளைவு அவளின் உடல் மெலிந்து கண்கள் உள்ளே சென்று… சாதரணமாகவே கைகல் நடுங்கி கொண்டு.. எழுந்து நின்றாலே விழுவது போலான நிலையில் மகளின் கோலத்தை கண்ட தாமரை…
ஒரு நாள் பொறுக்க முடியாது தன் கணவனிடம் கத்தி விட்டாள்..
“நீங்க ஏதாவது செய்யிறிங்கலா இல்லையா.? உங்களுக்கு உன் மகனோட உன் மருமகன் பெருசா போயிட்டானா…? அன்னைக்கும் உன் தங்கைக்காக தான் அத்தனையும் செய்திங்க. இன்னைக்கும் உங்க தங்கை மகனுக்காக என் மகளை அழிக்க பார்க்கிறிங்கலா…” என்று சொல்லி விசுவநாதனின் சட்டையை தன் நிலையை மறந்து பிடித்து விட்டாள்..
இது நடந்தது வீட்டின் நடு கூடத்தில், ஸ்ருதிக்காக வேலையை விட்டு சென்ற வேலையாட்களில் எஞ்சி இருந்த ஒரு சில வேலையாட்களும் அப்போது அங்கு தான் இருந்தனர்.
சமீபகாலமாக தாமரையின் ஆவேசத்தையும் வேலையாட்கள் பார்த்து கொண்டு தானே இருக்கிறார்கள். தாமரையின் இந்த செயலில் அவர்கள் என்ன டா இது இந்த அம்மாவுக்குமே புத்தி பேதலிச்சி போயிடுச்சா என்ன.
அந்த பொண்ணு கிட்ட இருந்து இந்த அம்மா தான் அப்போ அப்போ நம்மை காப்பத்தி விட்டுட்டு இருந்துச்சி.. இப்போ இந்த அம்மாவே பேய் வந்தது போல் இந்த ஆட்டம் ஆடுது.. என்று இப்படி தான் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
காரணம் இத்தனை நாட்கள் விசுவநாதனும் தாமரையும் அந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை அத்தகையது. தாமரை தன் கணவன் விசுவநாதனை அத்தான் என்று அழைத்து மரியாதையோடு தான் பேசுவது.. அத்தனை அன்பு காதல் தாமரையின் பேச்சிலும், நடத்தையிலும் தெரியும்.. அப்படி இருந்த பெண்மணி இப்படி நடந்தால் பயப்பட தானே செய்வார்கள்..
வேலையாட்கள் இப்படி என்றால் நம் விசுவநாதனுக்கோ.. வேலையாட்கள் முன் தன் சட்டையை பிடித்தது அவர் கெளரவத்தை குலைத்தது போல நினைத்து கொண்டார்..
அதில் மனைவியை அடித்தும் விட்டார்.. அதோடு…. “ பெண்னை நீ ஒழுங்கா வளர்க்க தெரியாம இப்போ வந்து என் கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கியா…?” என்றும் கேட்டு விட்டார்..
பொதுவாக பெரும்பாலான கணவன் மார்கள் போல தான் விசுவநாதனும் இருந்தார்.. அதாவது பிள்ளைகள் நல்ல முறையில் நடந்து ஆளாகி நின்றால், என் மகன் என் மகள் என்று பெருமையாக மார்த்தட்டி கொள்வதும்..
சரியாக நடக்காது போனால் மனைவியின் பக்கம் தவறை தள்ளி விடுவது போல தான் அவரும் பேசி விட்டார்…
கணவனின் இந்த பேச்சை கேட்டு தாமரைக்கு இன்னும் தான் ஆத்திரம் கூடியது.. அதுவும் தன்னை அடித்தும் விட்டதில் தாமரையுமே பொங்கி விட்டார்…
“என்ன து நான் என் மகளை சரியா வளர்க்கலையா..?” என்று ஆவேசத்துடன் கேட்ட மனைவியிடம் விசுவநாதனும்..
“ஆமாம் ஸ்ருதி சின்ன வயசா இருக்கும் போதே உன் அண்ணன் என்ன சொன்னார்.. ரொம்ப அடமா இருக்கா கொஞ்சம் கண்டித்து வளர்க்க பாரு என்று சொன்னார் தானே…? “ என்று சொன்னதற்க்கு..
தாமரை இன்னுமே பொங்கி விட்டார் என்று தான் கூற வேண்டும்.. அதில் இன்னுமே ஆவேசமாகியவள்..
“ஆமா ஆமா என் அண்ணன் சொன்னாரு தான்… ஆனா என் அண்ணன் சொன்ன இந்த வார்த்தை நியாபகத்தில் இருக்கும் உங்களுக்கு இடையில் ஒரு வார்த்தை சொன்னாரே. அது மறந்துடுச்சா இல்ல மறைக்க பார்க்கிறிங்கலா.?” என்று கேட்டவள் பின் அவளே..
“அவள் அத்தை போல அடமா வளர்க்காதே என்று சொன்னார்… அது உங்களுக்கு நியாபகத்தில் இருக்கா..? “ என்று கேட்டவர்.
பின் அதே ஆவேசம் அடங்காத குரலில்… “ அவளை நீங்களும் உங்க அம்மாவுமே நல்லா வளர்த்து இருந்து இருந்தா இன்னைக்கு எல்லாமே நல்லா நடது இருந்து இருக்கும்..” என்று கத்த.
பதிலுக்கு விசுவநாதனுமே …. “ என்ன நல்லா நடந்து இருக்கும்.. உன் பொண்ணும் என் தங்கைக்கும் என்ன டி தொடர்பு…?” என்று கேட்டவரிடம் தாமரை விலாவாரியாக..
“ஆ உன் தங்கை என் அண்ணன் மீது ஆசைப்பட்டதினால் தானே.. உன் தங்கை காதலுக்கு இடைஞ்சலா என் அண்ணன் அந்த சாரதாவை காதலிக்கிறாள் என்று அந்த சாரதாவை நீங்க கடத்தினது… எந்த மகன் தன் அம்மாவை கடத்தின மகளோடு வாழுவான்.. இன்னைக்கு என் மகள் இப்படி இருக்க காரணமே உன் தங்கை தான். அவளுக்கு என்று நீங்க செய்த அந்த செயலும் தான்..” என்று அவிழ்ந்து கிடந்த கூந்தலை கொண்டை போட்டு கொண்டே கத்தியவளை பார்க்க பார்க்க விசுவநாதனின் பொறுமையை இழந்து விட்டு அவருமே பதிலுக்கு கத்த தொடங்கி விட்டார்..
“ஓ எல்லாத்துக்கும் காரணம் என் தங்கை தானா.? அம்மணி ஒன்னும் செய்யலையோ… அந்த வயசுலேயே நீ என்னௌ முறச்சி முறச்சி பார்ப்பியே… கேடி.. என் தங்கையை உன் அண்ணனுக்கு கட்டினா தான்.. நீ என்னை கட்டிக்க முடியும் என்று தானே… உன் அண்ணனுக்கு வந்த அந்த காதல் கடுதாசியை நீ வீட்டில் மாட்டி கொடுத்தது..” என்று இத்தனை நாள் மனைவியின் அந்த காதலை போற்றிக் கொண்டு இருந்த விசுவநாதன் ஒரே நொடியில் அதை கீழ் இறக்கி விட்டார்..
இதை எல்லாம் அங்கு இருந்த வேலையாட்கள் பார்த்தவர்கள் மனதினில் என்ன டா இது கலேஜா இருக்கு என்று தான் நினைத்து கொண்டனர். அதோடு நாம் இருக்கும் இடம் தான் கலேஜீ ஆனா இவங்க வாழ்க்கையே கலேஜா இருக்கும் என்று நினைத்து கொண்டனர்..
விசுவநாதன் தன் மனைவியை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்து எல்லாம் இதை சொல்லவில்லை..
தாமரை அப்படி பேசியதினால் தான் அவருமே தன் நிலை மறந்து கொட்டி விட்டார்.. பாவம் அவரும் என்ன தான் செய்வார்.
வெளியில் தொழிலிலும் விசுவநாதனுக்கு பலத்த அடி தான். எப்போதுமே விசுவநாதன் தன் தொழிலை கண்காணித்து கொண்டே தான் இருப்பார்..
தன் மதுபான கடைக்கு எதிராக பேச்சு தொடங்கினாலே அது அடக்கும் முறையில் அடக்கி விட்டு விடுவார்.. இந்த போராட்டம் இது வரை எல்லாம் அவர் கொண்டு போகவே விட மாட்டார்.
ஆனால் சமீபகாலமாக மகளில் இந்த பிரச்சனையில் அவரால் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை.. அதில் இரண்டு மதுபான கடைக்கு எதிராக போராட்டம் நடந்து இரண்டு கடைகளையும், சீல் வைத்து விட்டனர்.. ஒன்று பள்ளிக்கு அருகில் இருக்கிறது என்றதினாலும், மற்றொன்று கோயிலுக்கு மிக அருகில் இருக்கிறது என்று.. இது தொழிலில் அவருக்கு விழுந்த முதல் அடி.. அதிலேயே தன்னிலையில் இல்லாது வந்தவர் வீட்டிலும் மனைவி இப்படி பேசியதில் அனைத்துமே கொட்டி விட்டார்..
அதன் விளைவாக தாமரை. “ நீங்க என் மகளுக்காக ஒன்றும் செய்ய தேவையில்லை. நானே எல்லாம் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு சென்ர இடம் சாரதாவின் இல்லம்…