Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yannai kondaada pirandhavan....24...3 final...

  • Thread Author
அத்தியாயம்….24…3

அந்த காவல் அதிகாரியை விசாரணை என்ற பெயரில் தாளித்து எடுத்து விட்டனர்… சொத்துக்கள் அனைத்துமே வருமானவரி சோதனையில் கணக்கு காண்பிக்க முடியாது போய் விட்டது ஒரு பக்கம் என்றால், அந்த காவல் அதிகாரியின் மனைவி தன் தாய் வீட்டின் பக்கத்து உறவான ஏதோ ஒரு விசேஷத்திற்க்காக சென்று இருந்தவள்..

இதை எல்லாம் பார்த்து விட்டு.. “நான் உன்னோடு வாழ மாட்டேன்…
என்று சொல்லி விட. அந்த காவல் அதிகாரியின் மாமனாரும் ஒரு காவல் அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் தான்..

அதனால் தன் மாமனாரை அழைத்து.. “ என்ன மாமா நம்ம டிபார்ட்மெண்டில் இந்த சஸ்பெண்ட்.. ரெயிட் இது எல்லாம் சகஜம் தானே மாமா….

இதுக்கு உங்க பெண்… என் கூட வாழ வர மாட்டேன் என்று சொல்லிட்டு அங்கு உட்கார்ந்து கொள்வது நியாயமா…? இந்த சமயத்தில் உறவா நீங்க தானே என் பக்கம் இருக்க வேண்டும்.. “ என்று கேட்டதற்க்கு அந்த காவல் அதிகாரியின் மாமனார்…

“நீங்க இந்த சொத்து சேர்த்து வைத்ததில் மட்டும் சிக்கி இருந்தா நான் உங்க கூட நின்னு இருப்பேன்.. ஆனா நீங்க என்ன செய்து வைத்து இருக்கிங்க..? ரெய்டில் பிடித்த பெண்ணிடம் உங்க சொத்து மதிப்பு எல்லாம் பேசி இருக்கிங்க… அதோட நிரந்தரமா அந்த பெண்ணை வைத்து கொள்ள திட்டமும் வைத்து இருந்து இருக்கிங்க…

இதோ இப்போ கூட அந்த பெண் எங்கு என்று கேட்டு தான் நம்ம டிப்பார்ட்மெண்ட் அத்தனை விசாரணை விசாரிக்கிறது.. ஆனா அந்த பெண்ணை எங்கு ஒளித்து வைத்து இருக்கிங்க என்று அத்தனை கேட்டும் அதை மட்டும் வாய் திறந்து சொல்ல மாட்டேங்குறிங்க. அது போலான பெண்ணோடும் சகவாசம் வைத்து கொண்டு என் பெண்ணோடும் குடும்பம் நடத்தினா நாளை பின்னே… உங்க மூலமா என் மகளுக்கு கண்ட நோய் வரதுக்கா..?” என்று கேட்டதில்.

பாவம் அந்த காவல் அதிகாரி தலையிலேயே தான் அடித்து கொண்டான்.. தனக்கு தானே எனக்கு இது வேண்டும் வேண்டும் என்று வேறு சொல்லி கொண்டவன்.

“மாமா முதல்ல அன்னைக்கு நடந்த அந்த ரெய்ட்டே ஒரு நாடகம்…” என்று சொன்னவன் மகியை பற்றி அனைத்து விவரங்களையும் சொல்ல.

“ஓ இந்த வயசுல உங்களுக்கு காலேஜ் படிக்கும் பெண் கேட்குதா… அது தான் இளசா பார்த்ததும் என் மகளுக்கு துரோகம் செய்ய துணிஞ்சிட்டிங்கலா….?” என்று அந்த காவல் அதிகாரி என்ன தான் சொல்லியும் அவன் மாமனார் அவனை நம்புவதாக காணும்..

கடைசியாக… “ மாமா அது பெண்ணே இல்லை மாமா. ஆம்பிள்ளை…” இது வரை போலீஸ் விசாரணையில் கூட உண்மையை சொல்லாதவன். தன் மனைவி குழந்தைகளுக்காக அசிங்கம் பாராது உண்மையை சொன்னான் தான்..

ஆனால் பாவம் அதை நம்ப தான் அவன் மாமனார் தயாராக இல்லை… மாமனார நம்பாத போது மற்றவர்கள் எப்படி நம்புவார்கள்… பின் உண்மையை அவன் கூவி கூவி சொன்ன போது… தப்பித்து கொள்ள வேண்டி இப்படி சொல்கிறான் என்று சொன்னார்களே தவிர….

அது உண்மையாக இருக்க கூடுமா என்று யாரும் யோசித்து பார்க்க கூட தயாராக இல்லை.

அவனின் வேலையில் இடைக்கால தடை கொடுக்கப்பட. பின் அனைத்து உண்மையையும் சொல்லி விட்டான்..

அதாவது தாமரையை கை காட்டி விட்டான் அந்த காவல் அதிகாரி.. அதற்க்கு ஆதரமாக தன் வங்கி கணக்கில் போடப்பட்ட பணம் தாமரையின் வங்கி கணக்கில் இருந்து தான் மாற்றல் ஆகி உள்ளது என்று சொல்ல..

இப்போது தாமரையை விசாரணை வளையத்திற்க்குள் காவல் துறை கொண்டு வந்தது..

சரியாக அந்த சமயம் தான் விசுவநாதன் தன் தண்டனை காலம் மூன்று மாதங்கள் முடிவடைந்து வெளி வந்த சமயம் அது…

தாமரைக்கு இது தெரிய… தன் கணவன் தன்னை காப்பாற்றுவார் என்று நம்பி கொண்டு இருக்க. விசுவநாதனோ தாமரையை சிறையில் சென்று பார்க்க கூட இல்லை..

ஆனால் மகளை பார்த்தார். தன்னிலை மறந்து தன்னை கூட அடையாளம் தெரியாது தன்னை பார்த்தும்.. “ நீ தாலி கட்டுறியா…?” என்று கேட்ட தன் மகளை பார்த்து ஒரு தகப்பனாக துடி துடித்து தான் போய் விட்டார்.. எந்த தகப்பனுக்கும் தன்னிலை வர கூடாது என்று நினைத்து கொண்ட விசுவநாதன். இதையும் நினைத்தார்..

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று.. அன்று சாரதாவை கடத்திய அன்று சாரதாவின் தந்தை தன்னிடம் கெஞ்சிய அந்த கெஞ்சலின் காட்சி அவரின் கண் முன் வந்து சென்றன..

ஒரு நல்ல தகப்பனை அன்று துடிக்க வைத்ததின் பலனை தான் இன்று தான் அனுபவிக்கிறோம் என்று நினைத்து கொண்டார்.

தன் தங்கையின் காதலை ஜெயிக்க வைக்க வேண்டி.. விருப்பம் இல்லாதவனை.. வேறு ஒரு பெண் மீது விருப்பம் கொண்டவனை வலுக்கட்டாயமாக அந்த காதலை புதைத்து விட்டு தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்த பாவம் தான் தன் மகளின் வாழ்க்கை ஒரு காதலால் சிதைந்து போய் விட்டது என்று உணர்ந்தும் கொண்டார் தான்..

வயதில் செய்தவை வயதான காலத்தில் நாம் அனுபவித்து தானே ஆக வேண்டும்… அதை தான் விசுவநாதன் அனுபவித்தார்..

சென்னையில் என்னை தெரியாதவர்கள் யாரும் கிடையாது என்று மார்த்தட்டி கொண்டவர்.. தன்னை யார் என்று தெரியாத இடத்திற்க்கு மகளை அழைத்து சென்று விட்டார்..

ஆம் விசுவநாதன் தான் யார் என்று தெரிய கூடாது என்று நினைத்து மகளை அழைத்து கொண்டு வெளி ஊருக்கு சென்று விட்டார்.

ஆனால் செல்லும் முன் குரு மூர்த்தியை பார்த்து விட்டு தான் சென்றார்.. அதுவும் இப்போது அனைவரோடும் இருக்கும் அந்த கெஸ்ட் அவுசில் சென்று தான் குரு மூர்த்தியை விசுவநாதன் பார்த்தது. கூட ஸ்ருதியையுமே அழைத்து சென்றார்…

குரு மூர்த்தி அன்று இதழ் முத்தத்தோடு தொடங்கிய அவனின் ஈஸ்வரியுடனான அந்த உறவின் தொடக்கம் அடுத்த கட்டமாக முன்னேற வில்லை என்றாலும். பின் தங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்,

குரு மூர்த்தியின் அந்த கெஸ்ட் அவுஸ் கடல் பக்கத்தில் பார்த்து கட்டப்பட்டது… அது என்னவோ தெரியவில்லை.. மகி அன்று அவனின் குரு ஜீ முத்தம் கொடுத்த அதே இடத்திற்க்கு அதே நேரத்திற்க்கு சரியாக வந்து நின்று விடுவாள்..

குரு மூர்த்தியுமே அந்த நேரம் சரியாக அவன் அறையின் பால் கனியில் நின்று கொண்டு இருப்பவன் இவளை பார்த்ததுமே அந்த இடத்திற்க்கு ஓடி வந்து நின்று விடுவான்..

பின் என்ன மகி அதே போல கடல் அலைகளை பார்க்க குரு மூர்த்தி அவனின் ஈஸ்வரியை பார்க்க பின் முத்தம் வைக்க. இப்படியாக தான் அடுத்த பத்து நாட்களும் இதே வேலையாக நடைப்பெற்று கொண்டு இருக்கிறது.

சாரதா தான் ஒரு நாள் குரு மூர்த்தி இது போல தன் அறையில் இருந்து அவனின் ஈஸ்வரிக்கு முத்தம் வைக்கும் ஆசையில் வழியில் யார் நிற்கிறார்கள் என்று கூட பாராது அவசர அவசரமாக கடல் பக்கம் சென்றவனின் ஓட்டத்தை பார்த்து சாரதாவும்..

என்ன ஆச்சு என்று பதறி போய் குரு மூர்த்தியின் பின்னே ஒட்டமாக ஒட பார்த்த மனைவியை பார்த்த ராம் சந்திரன்..

“என்ன சாரு உனக்கு என்ன சின்ன பெண் என்று நினைப்பா.? இப்படி ஒடுற…? விழுந்தா என்ன ஆகிறது…?” என்று கேட்ட கணவனுக்கு சாரதா.

“ஏங்க என்னன்னு தெரியல மாப்பிள்ளை அவசரமா கடல் பக்கம் ஓடுறார்… நம்ம மகி அங்கு தான் நின்னுட்டு இருந்தா.” என்று பதட்டமாக சொல்ல.

சித்தார்த்தும் கிருஷ்ண மூர்த்தியும் அப்போது அங்கு தான் இருந்தனர். சாரதா சொன்னதை கேட்டதும் அவர்கள் அனைவருமே என்ன ஆச்சோ. ..? ஏது ஆச்சோ..? என்று பதறி போய் அவர்களும் சாரதாவோடு சென்று பார்த்த போது அவர்கள் பார்த்த காட்சி குரு மூர்த்தி மகிக்கு முத்தம் கொடுப்பதை தான்..

அதை பார்த்த அனைவருக்கும் தான் என்னவோ போல் ஆகி விட்டது.. குரு மூர்த்தியும் மகியுமே இவர்களை பார்த்து விட மகிக்கு தான் அய்யோ என்றான நிலை.. மாமா அத்தை முன்.. ஒரு மாதிரி கூச்சத்துடன் நெளிந்து கொண்டு வீட்டிற்க்குள் ஓடி விட்டாள்..

ஆனால் குரு மூர்த்தி ஓடி எல்லாம் ஒளிய வில்லை… “என்ன எல்லோரும் ஒன்னா வெளியில் வந்து இருக்கிங்க…?” என்று கேட்டதற்க்கு அவர்கள் என்ன என்று சொல்லுவார்கள்.. நீ ஓடி வந்த வேகத்தை பார்த்து தான் நாங்களும் பயந்து போய் ஒடி வந்து பார்த்தோம் என்றா சொல்ல முடியும்..

என்ன சொல்வது என்று யோசித்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு இருந்த வேளையில் தான் விசுவநாதன் தன் மகள் ஸ்ருதியோடு அங்கு வந்தது..

எப்போதுமே வாட்ச் மேன்.. யாராவது வந்தால் வீட்டிற்க்குள் காட்லஸ் காலில் கேட்டு விட்டு தான் வீட்டிற்க்குள் அனுப்புவான்..

ஆனால் விசுவநாதனை வாட்ச் மேன் அது போல கேட்டு எல்லாம் அனுப்பவில்லை. விசுவநாதனுக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு மரியாதையோடு அனுப்பி வைத்தார்.

காரணம்.. இந்த கெஸ்ட் அவுஸ் குரு மூர்த்தி வாங்கிய நாள் தொட்டு அந்த வாட்ச் மேன் இங்கு வேலை பார்க்கிறார்..

குரு மூர்த்தியும் விசுவநாதனும் எத்தனையோ முறை இந்த கெஸ்ட் அவுஸ்சுக்கு வந்து இருக்கிறார்கள்… ஏன் இன்னும் கேட்டால் இந்த கெஸ்ட் அவுசை வாங்கு.. விலையும் ரீசனபுலா இருக்கு.. நாளை பின்னே.. உனக்கு மேரஜ் ஆச்சின்னா உன் மேமிலியோடு தங்க உனக்கு நல்லா இருக்கும்.. அதோடு நல்ல இடம் நாளை பின்ன நல்ல இன்வெஸ்மெண்டாகவும் இருக்கும்…” என்று சொல்லி குரு மூர்த்தியை வாங்க வைத்ததே விசுவநாதன் தான்.

வெளி கேட்டில் இருந்து மகளின் கை பிடித்து நடந்து வந்து கொண்டு இருந்த விசுவநாதனுமே.. அந்த கெஸ்ட் அவுசை பார்த்து கொண்டே நடந்து வந்தவரின் மனதும். இதை வாங்கும் அந்த நாளை தான் நினைத்து பார்த்து கொண்டது..

இதோ எதுவும் தெரியாது தன் உடன் நடந்து வருகிறாளே மகள் ஸ்ருதி… இதை விலை பேசும் போது இவளுமே வந்து இதை பார்த்து விட்டு தன்னிடம்..

“ப்பா எனக்கு இந்த பங்களா ரொம்ப பிடித்து இருக்கு ப்பா.. அத்தானுக்கு எதுக்கு…? நமக்கு வாங்கிக்கலாம் ப்பா…” என்று அந்த கடல் பக்கம் நின்று கொண்டு ஆசையோடு சொன்ன போது குரு மூர்த்தியுமே இருந்ததால், அவனுமே…

“மாமா ஸ்ருதிக்கு இந்த பங்களா ரொம்ப பிடித்து இருக்கு போல.. அவள் பெயரிலேயே ரிஜிஸ்ட்டர் செய்து விடலாம் மாமா…” என்று தான் சொன்னான்..

அது என்னவோ விசுவநாதனுக்கு இந்த இடம் குரு மூர்த்தி வாங்க வேண்டும் என்ற எண்ணம்..

அதோடு மகள் ஆசைப்பட்டால் என்ன…? நாளை குரு மூர்த்திக்கு சொந்தமானது அவளுக்குமே சொந்தம் தானே…

அதை குரு மூர்த்தியிடமும் சொன்னார்…. “அவள் பெயரில் இதை வாங்கினால் என்ன…? உன் பெயரில் வாங்கினால் என்ன…? இரண்டும் ஒன்று தானே…” என்று சொன்ன தன் மாமனை பார்த்த குரு மூர்த்தி ஒன்றும் சொல்லவில்லை..சிரித்தான் அவ்வளவே..

விசுவநாதனுக்கு தெரியும்.. குரு மூர்த்திக்கு தன் மகள் மீது காதல் எல்லாம் இல்லை என்பது.. பாசம் தன் மகள் என்ற பாசம் இருக்கிறது..அதே போல ஸ்ருதியுமே குருவை விரும்பவில்லை.அதே பாசத்தை தன் அத்தான் மீது அவள் வைத்து இருப்பது தெரியும்..

இருவருக்கும் வேறு காதல் இல்லாத போது இருவரும் திருமணம் செய்து கொண்டால் கண்டிப்பா நன்றாக இருப்பார்கள் என்று நினைத்தார்… இடையில் ஸ்ருதி சித்தார்த்தை காதலிக்காது இருந்து இருந்தால் கண்டிப்பாக அவன் ஆசைப்பட்டது நடந்து இருக்கும் தான் இதை எல்லாம் யோசித்து கொண்டே மகளின் கை பிடித்து நடந்து வந்து கொண்டு இருந்தவரின் கண்களுக்கும் அந்த முத்தக்காட்சி தெரிந்தது….

அவரின் குரு மூர்த்தியை இத்தனை மகிழ்ச்சியாக அவர் இது வரை பார்த்ததே கிடையாது… அத்தனை ஒரு மகிழ்ச்சியை விசுவநாதன் குரு மூர்த்தியின் முகத்தில் கண்டது… இப்போது ஒன்று புரிந்தது தன் மகள் சித்தார்த்தை காதலிக்கவில்லை என்றாலுமே தன் மகள் குரு மூர்த்தியோடான திருமணம் நடந்து இருந்து இருக்காது… என்பதை உணர்ந்தவர் மனது பெரியதாக இழந்த உணர்வு…

குரு மூர்த்தி அவனின் ஈஸ்வரியின் வெட்கத்தை உள்வாங்கி கொண்டான் என்றால், விசுவநாதன் தன் மருமகனின் அந்த மகிழ்ச்சியை உள்வாங்கி கொண்டே தான் இருந்தார்.. அதோடு இனி குரு மூர்த்தியை நான் பார்ப்பேனா…? எப்போது பார்பேனோ…? சொந்த ஊரை விட்டு சொத்தை விட்டு.. ஏன் மனைவியை விட்டு கூட போகும் அவருக்கு மனது வலிக்கவில்லை.

குரு மூர்த்தி.. அவனோடான நேரம்.. இனி தனக்கு இல்லை என்ற போது அவர் மனது கணத்து விட்டது… அப்படி தான் குரு மூர்த்தியோடு இருக்க நினைத்தால், அதனால் குரு மூர்த்தியின் வாழ்க்கையில் தான் பிரச்சனை ஆகும்.. தான் இந்த ஊரில் இருந்தால், கண்டிப்பாக தன் மருமகன் குரு மூர்த்தியை பார்க்காது அவரால் இருக்க முடியாது..

இந்த சிறை வாசம் இந்த மூன்று மாதத்தில் விசுவநாதன் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை தான்.. காரணம் பார்த்தால் கண்டிப்பாக தன் மூளை ஏடாகூடமாக யோசித்து தான் வெளியில் வர தான் பார்ப்பேன்.. அது குரு மூர்த்தியின் காதலுக்கு தான் பிரச்சனையாக முடியும் என்று தான் யாரையும் தன்னை பார்க்க அவர் அனுமதிக்கவில்லை.

ஆனால் மனைவி மகளை பாராது கூட இருக்க முடிந்த விசுவநாதனால் குரு மூர்த்தியை தான் பார்க்காது இருப்பது தான் அவரை பெரிதும் பாதித்தது… ஆனால் இனி எப்போதும் பார்க்க முடியாது என்ற அந்த நினைப்பே விசுவநாதனை குரு மூர்த்தியை இன்னுமே கூர்ந்த பார்க்க தூண்டியது…

விசுவநாதன் மற்ற விசயத்தில் எப்படியோ ஆனால் குரு மூர்த்தியின் மீது அவர் வைத்த பாசம் உண்மையானது… இதோ அவனுக்காக மட்டும் தான் அனைத்தையும் விடுத்து விசுவநாதன் ஊரை விட்டு செல்வது.. இதே குரு மூர்த்தி மகியின் மீது ஆசைப்படாது போய் இருந்தால், அவரின் நடவடிக்கையே வேறாக தான் இருந்து இருக்கும்..

அவன் ஒருவனுக்காக மட்டும் தான் விசுவநாதன் தன் மகளின் வாழ்க்கை கூட பொருட்படுத்தாது இருப்பது.. அனைத்தையும் நினைத்து ஒரு பெரும் மூச்சு விட்டு கொண்டே அவர்கள் அருகில் சென்ற போது தான் அவர்கள் அனைவரும் விசுவநாதனை பார்த்தது..

குரு மூர்த்தியை தவிர அனைவரும் ஒன்று போல ஏன் இங்கு வந்தார்.. என்பது போல முகத்தில் ஒரு பிடித்தம் இன்மையை அப்பட்டமாக காட்டி அவரை பார்த்தனர்.. சித்தார்த்துமே விசுவநாதனை அப்படி தான் பார்த்தான்..

ஆனால் ஸ்ருதியை பார்த்தவன் மனதில் ஒரு குற்றவுணர்ச்சி… தான் அவள் மீது செலுத்திய அந்த பார்வையும் தானே ஸ்ருதிக்கு தன் மீது வைத்து இருந்த அந்த காதலுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது…

அந்த காதல் தானே அவளை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. என்று நினைத்தவன் அதற்க்கு மேல் அவளை பார்க்க முடியாது வீட்டிற்க்குள் சென்று விட்டான்… ஸ்ருதியின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்பதை சித்தார்த் உணர்ந்தான்..

ஆனாலுமே.. ஸ்ருதியை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.. அதை அவன் மனமே ஏற்றுக் கொள்ளவில்லை…

சித்தார்த்தின் இந்த முக மாற்றத்தை அனைவரும் கவனித்தாலுமே அவர்களாலும் ஒன்றும் சொல்லவில்லை.. எதுவும் செய்ய முடியாது எனும் போது என்ன என்று சொல்வார்கள் அதனால் அமைதி காத்தனர்..

இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் ஸ்ருதி யாருக்காக தன்னை மறந்த நிலையில் இருக்கிறாளோ… அவனே அவள் கண் எதிரில் நின்று கொண்டு இருந்த போது கூட அவளாள் அவனை உணர முடியவில்லை..

ஏதோ எங்கோ பார்வையை செலுத்திக் கொண்டு இருந்த பெண்ணை கையில் பிடித்து கொண்டு இருக்கும் விசுவநாதனை பார்த்த போது அவர் மீது கோபம் இருந்தாலுமே, அதை அவரிடம் காட்ட முயலவில்லை.. செத்த பாம்பை அடிப்பது எதற்க்கு என்று விட்டு விட்டனர் போல.

குரு மூர்த்தியோ.. எப்போதும் போல தன் மாமனை பார்த்ததும்..

“வாங்க மாமா.. “ என்று அழைத்தவன்… “ ஸ்ருதியை பார்த்தவன் தன் மாமனிடம்… “ ஸ்ருதியை எதுக்கு மாமா அழச்சிட்டு வந்திங்க.. எப்படி உங்க கூட விட்டாங்க..?” என்றும் கேட்டவனிடம்..

“அது எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல குரு… நானுமே இதை விட பெஸ்ட்டா தான் ட்ரீட்மெண்ட் கொடுக்க போறேன் என்று ஜட்ஜ் மூலமாவே மூவ் பண்ணிட்டேன்…” என்று சொன்னவன்.

பின் மெல்ல குரு மூர்த்தியிடம்… “ நான் வேறு ஊருக்கு போறதா முடிவு செய்து விட்டேன் குரு.. உன் கிட்ட சொல்லிட்டு போக தான் வந்தேன்…” என்று சொன்ன மாமனையே குரு மூர்த்தி பார்த்து இருந்தான்..

அவனுக்கு தெரியும் தன் மாமா இந்த முடிவை தான் எடுப்பார் என்று… கண்டிப்பாக இனி தன் அத்தையை சேர்த்து கொள்ள மாட்டார் என்பதும், அவனுக்கு தெரியும் தான்.

அதோடு இப்போது தன் மாமனை எங்கும் போகாதே என்றும் அவன் சொல்லவில்லை.. தான் சொன்னாலுமே தன் மாமன் அதை கேட்க மாட்டார் என்பதும் அவனுக்கு தெரியும்.. காரணம் தன் மீது அவருக்கு தான் உரிமை அதிகம் இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பார்.. சில சமயம் தன் பேச்சில் தன் தந்தை மீது தான் அதிகப்படியாக பாசமான வார்த்தை வெளிப்பட்டு விட்டால் கூட தன் மாமனின் முகம் சட்டென்று மாறி விடும்…

அதையும் குரு மூர்த்தி கவனித்து தான் இருந்து இருக்கிறான். தன் தந்தையுமே தன் மீது அதிகப்படியான உரிமை எடுத்து கொள்வதை விசுவநாதன் விரும்ப மாட்டார்..

அப்படி இருக்க இனி இந்த ஊரில் தன்னை பார்த்து யாரோ போல கடந்து செல்வதை அவரால் ஏற்று கொள்ள முடியாது.. அதே சமயம் தன்னிடம் நெருக்கமாக இருந்தால், அது தன் வாழ்க்கைக்கு பிரச்சனை என்று தெரிந்து தான் அவர் தன்னை விட்டு விலகி செல்கிறார் என்பதை குரு மூர்த்தி உணர்ந்து இருந்தாலுமே அவனாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் தான் குரு மூர்த்தி இருந்தான்.

காரணம் அவனின் காதல்… காதலுக்காக என்ன என்னவோ செய்த தன் அன்னையின் மகனாக தன் காதலை விட்டு விட்டு எதுவும் செய்யும் எண்ணம் அவனுக்கு இல்லை.

அதற்க்கு என்று மாமாவோடு பகையும் பாராட்டாது.

“வாங்க மாமா.” என்று அழைத்து பேசிக் கொண்டு இருக்க. அதை பார்த்த மற்றவர்கள் அந்த இடத்தை விட்டு போக பார்க்க..

அப்போது விசுவநாதன்.. “ உங்களிடமும் பேச தான் வந்தேன்..” என்றதும் அவர்கள் நின்று விட விசுவநாதன்.. சாரதாவை பார்த்து முக்கியமா உங்களிடம் பேச தான் நான் இங்கு வந்தது… குருவை மட்டும் பார்த்து பேச என்றால் நான் வெளியில் சந்தித்து இருந்து இருப்பேன்..” என்ற பேச்சில் சாரதா என்ன பேசுவது என்று தெரியாது தன் கணவனை பார்த்தார்..

ராம் சந்திரன்… “ அது தான் பேசனும் என்று சொல்றாரே சாரும்மா… என்ன என்று பேசிட்டு வாம்மா..” என்று அவர் செல்ல பார்க்க..

விசுவநாதனோ… “ நீங்களும் இருங்க.” என்று விட பின் ராம் சந்திரனும் நிற்க..

விசுவநாதன் சாஷ்ட்டங்கமாக சாரதாவின் காலில் விழுந்து விட்டார்… அனைவரும் பார்க்க. அங்கு இருந்த யாரும் இதை சத்தியமாக எதிர் பார்க்கவில்லை…

சாரதா சட்டென்று தன் கால்களை இரண்டு அடி பின் எடுத்து வைத்தவருக்கு மிக சங்கடமாக போய் விட்டது.. சாரதாவுக்கு விசுவநாதனின் மீது கழுத்து அளவுக்கு கோபம் இருக்கிறது தான்… அவனை தான் பார்க்கவே கூடாது என்று தான் நினைத்தார்.. ஆனால் இது போல அனைவரும் பார்க்க தன் காலில் விழுந்ததில் என்ன இது என்பது போல் தான் அப்போது சாரதா குரு மூர்த்தியை பார்த்தது….

குரு மூர்த்திக்குமே மாமனை இது போல மற்றவர்கள் காலில் விழுவதை பார்க்க முடியவில்லை.. அதில் கோபத்துடன்..

“மாமா என்ன பண்றிங்க எழுந்துடுங்க…” என்று அதட்டலாக சொன்ன போது தான் ஸ்ருதி..

“ஐய்..” என்று சொன்னவள் பின் கை தட்டி.. “ நானு நானு…” என்று சொன்னவள் அதுவும் ஒரு விளையாட்டு போல என்று நினைத்து கொண்டு அவளுமே சாரதாவின் காலில் விழுந்தவள்.. பின் விசுவநாதனை பார்த்து..

“அந்த கால் அந்த கால்…” என்று கிருஷ்ண மூர்த்தியின் கால் காட்டியவள் பின் கிருஷ்ண மூர்த்தியின் காலில் விழுந்த ஸ்ருதி..

விசுவநாதனை பார்த்து.. “ நீயும் வா.. நீயும் வா… விழு விழு…” என்று அது ஏதோ விளையாட்டு போல பேசியவள் விசுவநாதன் மகளின் செய்கையில் கண்கள் கலங்க எழுந்து நின்றவர் சாரதாவை பார்த்து கை எடுத்து கும்பிட்டவர்..

பின் எதுவும் பேசாது மகளின் கை பிடித்து அங்கு இருந்து செல்ல பார்த்த விசுவநாதனை குரு மூர்த்தி..

“மாமா…” என்று அழைக்க. அவனின் அந்த அழைப்பில் அவனை திரும்பி பார்த்த விசுவநாதன்..

“என்னை விட்டு நீ கொஞ்சம் விலகி இருப்பது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது குரு,,. என் கிட்ட நீங்க எந்த ஊருக்கு போறிங்க என்று கேட்காதே.. நீ கேட்டாலுமே நான் சொல்ல மாட்டேன்.. ஆனா எனக்கு இதுவும் தெரியும்.. நீ மனசு வைத்தா நான் இருக்கும் இடத்தை நீ சீக்கிரம் கண்டு பிடித்து விடுவே என்று.. ஆனா இது உன் மன நிம்மதியை கெடுத்து விடும் குரு… இனி நீ என்னை விட்டு விலகி நில்.. அது தான் உனக்கும் நல்லது…. எனக்கும் நல்லது எல்லோருக்கும் நல்லது..” என்று சொன்னவர் திரும்பி பார்க்காது சென்று விட்டார்…

கிருஷ்ண மூர்த்திக்குமே இதை பார்த்து முதன் முதலாக கண்கள் கலங்கியது.. அதுவும் ஸ்ருதி தன்னிலை மறந்து தன் காலில் விழுந்தவளை தொட்டு தூக்கிய கிருஷ்ண மூர்த்தி அவள் தலை மீது கை வைத்து..

“எல்லாம் சரியாகிடனும்.. “ என்று சொன்னவருக்குமே தெரியவில்லை.. இனி ஸ்ருதியின் வாழ்க்கையில் எப்படி..? என்ன சரியாகும் என்று…

சிறையில் தாமரை ஒரு மாதம் அடைக்கப்பட்டு பின் வெளியில் வந்தவள் கணவனையும் மகளையும் தேட அவர்கள் போன இடம் தெரியாது… தனித்து இருந்த பெண் மணி… குரு மூர்த்தியை தான் பார்க்க சென்றது..

ஆனால் தாமரையினால் குரு மூர்த்தியை பார்க்கவே முடியவில்லை… அதோடு விசுவந்தான் போகும் முன் தனக்கும் தன் மகளுக்கும் தேவையான பணத்தை கையில் எடுத்து கொண்டவர்.. பின் அனைத்துமே அநாதை ஆசிரம். முதியோர் இல்லம் என்று எழுதி வைத்து விட்டு தான் சென்றது..

இருக்கும் சொத்துக்கள் அனைத்துமே விசுவநாதனின் தனிப்பட்ட சொத்து.. அவர் விருப்பம் போல யார் பெயரிலும் எழுதி வைப்பது அவர் விருப்பம். அதனால் தாமரையினால் ஒன்றும் செய்ய முடியாது நடுத்தெருவில் நின்று விட்டாள்..

விசுவநாதன் சொத்தை இப்படி எழுதி வைத்து செல்ல காரணம்.. பணம் இருந்ததினால் தானே கோடியை கொட்டி கொடுத்து மகியை அப்படியான நிலையில் நிற்க வைக்க முயற்ச்சி செய்தது..

இப்போதுமே இத்தனை சொத்து இருந்தால் தாமரை சிறையில் இருந்து வந்த பின் கணவனும் மகளும் கண் காணாத இடத்திற்க்கு சென்றதற்க்கு காரணம் குரு மூர்த்தி மகி தான் என்று சொல்லி இன்னுமே ஏதாவது செய்ய கூடும்..

தங்க இடமும்.. அடுத்த வேலை சோத்துக்குமே இல்லை எனும் போது அதை பார்க்கவே தேடவெ நேரம் சரியாக இருக்கும்.. எங்கு இருந்து அடுத்தவர்களை கெடுக்க நேரம் இருக்கும்.. அதோடு அதிகாரிகளை வைத்து காரியம் சாதிக்க பணம் தேவை.. அது இல்லாத போது தாமரை பல் புடிங்கின பாம்பு போல தான் இருக்க வேண்டும் என்று நினைத்து தான் சொத்தை மட்டும் அல்லாது தாமரைக்கு அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கூட விட்டு வைக்காது விசுவநாதன் சென்றது..

விசுவநாதன் நினைத்தது தான் சரி என்பது போல வெளியில் வந்த தாமரை தன் வீட்டிற்க்கு தான் சென்றது..

இப்போது அந்த இடத்தை முதியோர் இல்லத்திற்க்கு எழுதி வைத்து விட்டதால், தாமரையினால் அங்கு இருக்க முடியாது போய் விட்டது..

முதலில் எப்படி என்று தாமரை கத்தி கலாட்டா செய்தாள் தான்… ஆனால் காவல் துறை வந்து அனைத்தையும் சரி பார்த்து தாமரையிடம்..

“உங்க கணவன் எல்லாம் முறையா இந்த வீட்டை முதியோர் இல்லத்துக்கு என்று எழுது வைத்து இருக்காரும்மா தன்னிடம் இருந்த அந்த பத்திரத்தை காட்ட இங்கு இருந்து வீணா பிரச்சனை செய்யாதிங்க. இப்போ தான் ஜெயில்ல இருந்து வந்து இருக்கிங்க. பார்த்து நடந்துக்கோங்க..”

ஒருவரிடம் பணம்.. பதவி என்று இருக்கும் போது தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்.. அது இல்லாத போது கண்டிப்பாக கிடைக்காது..

இதோ சொத்துக்கள் எதுவும் இல்லை.. அதோடு தாமரை சிறையில் இருந்த போது குரு மூர்த்தியோ கிருஷ்ண மூர்த்தியோ ஏதாவது செய்து வெளியில் கொண்டு வந்து இருக்கலாம். அப்படி எதுவும் செய்யாது ஒதுங்கி நின்றதில், அந்த காவல் அதிகாரி தாமரையை கீழாக தான் நடத்தினார்.

அதில் கோபத்துடன் குரு மூர்த்தியையும் தன் அண்ணன் கிருஷ்ண மூர்த்தியையும் பார்க்க முயன்ற தாமரை அதுவும் முடியாது போய் விட.

முதலில் உங்களை எல்லாம் என்ன செய்கிறேன் என்று பாரு.. முன் போல கத்தினாள் தான் தாமரை… ஆனால் அடுத்து தங்க இடம் இல்லாது வயிறு பசித்ததில், அடுத்து என்ன என்று யோசிக்க தான் தாமரைக்கு சரியாக இருந்ததே தவிர. வேறு எதுவும் தோனாது வருமானத்திற்க்கு வழி தேட அதன் இன் ஓடினாள் தாமரை.

இங்கு சித்தார்த் குற்றவுணர்வில் இருந்தாலுமே பின் தெளிந்து விட்டான்.. அன்னை பெண் பார்க்கவா என்று கேட்ட போது மட்டும்.

“ம்மா ப்ளீஸ். எனக்கும் கொஞ்சம் நேரம் தேவைம்மா எல்லா வற்றிலும் இருந்து வெளியில் வர…” என்று சொன்ன போது அதை சாரதாவும் ராம் சந்திரனும் ஏற்று கொண்டனர்..

அந்த காலம் எப்போது வரும் என்று தான் தெரியவில்லை.. ஒரு சிலது இப்படி தான் நடந்து விடுகிறது…

சித்தார்த் தவறானன் கிடையாது.. காதலித்தான்.. காதலித்த பெண்ணை ஏமாற்றாது கை பிடிக்க நினைத்தான்.. ஆனால் அந்த காதலே தவறு என்பது போலான நிகழ்ச்சி அவனை நிலை குலைய செய்து விட்டது…

முன் வினையின் கர்மாவா. என்று தெரியாது சித்தார்த் தனித்து நின்று விட்டான். தாமரையோ தன் காதல் ஜெயிக்க வேண்டும் என்று தன் அண்ணன் காதலை படு குழியில் போட்டு விட்டு கரம் பிடித்தவள் இன்று அந்த காதல் கணவனும் இல்லாது.. தன் காதலின் சின்னமான தன் மகள் ஸ்ருதியின் காதலும் ஜெயிக்காது.. அந்த அவளின் அந்த காதலே தன்னிலை மறக்க வைத்து ஊரை விட்டே சென்று விட்டதில் இதோ தாமரை தனித்து இருக்கிறாள்.

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலகாரணமான விசுவநாதனின் தங்கையும் கிருஷ்ண மூர்த்தியின் மனைவியும், குரு மூர்த்தியின் அன்னையின் காதல் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி அவளால் நிலை நிறுத்தி வைக்க முடியவில்லை.. அதன் விளைவு காதலித்த கணவனை விட்டு, மகனை விட்டு அல்ப ஆயுசில் போகும் படி ஆகி விட்டது..

ஆனால் சாரதா. சதியினால் அவர் காதல் அவரிடம் இருந்து பரிக்கப்பட்டாலுமே, அவரை ஒரு தலையாக காதலித்த ராம் சந்திரன் கணவனாக ஆகியதில் அழகிய ஒரு குடும்பம் அவருக்கு கிடைத்தது..

இதோ கணவன் மகன் மகளாக மருமகள்.. மருமகளுக்காக எதையும் செய்யும் கணவனாக குரு மூர்த்தி.. முன் நாள் காதலனான கிருஷ்ண மூர்த்தியை தினம் தினம் பார்க்கும் படியான சூழல் இருந்தாலுமே.. சாரதா சில சமயம் தயங்கும் போது எல்லாம் ராம் சந்திரன் மனைவியின் கை பிடித்து துணையாக சாரதாவை அந்த தயக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்து நிறுத்தி… இதோ அவர்களின் வாழ்வு இலகுவாக தான் செல்கிறது…

கூடா நட்பு கெடுதியில் முடியும் என்பது போல பொருந்தாத காதலும் செல்லாது போனாலும், சித்தார்த்துக்கு காதல் கை கூடவில்லை என்றாலும், ஒரு புதிய வாழ்க்கை அவனுக்கு நிச்சயம் கிடைக்கும்..

இதோ மகிக்கு கிடைத்தது போல…

ஆம் மகியின் வாழ்க்கையின் வசந்தமாக இன்று அவள் திருமணத்தின் வரவேற்ப்பு… தாமரை பிரச்சனை செய்து இவர்கள் குடும்பமாக குரு மூர்த்தியின் கெஸ்ட் அசுசில் இருந்த போது சாரதா தான்…

“ இன்னும் எத்தனை நாள் தான் இங்கு இருப்பது..?” என்று கேட்டவர் பின் என்ன நினைத்தாரோ குரு மூர்த்தியிடம்..

“நீங்க மகி கழுத்தில் தாலி கட்டும் போது யாரும் பார்க்கல.. இப்படி நாங்க இருப்பது வெளியில் தப்பான பேச்சாக மாற கூட வாய்பு இருக்கு.. ஏன் தாமரை கூட ஏதாவது இதை வைத்து செய்தாலும் செய்ய கூடும்..” என்றதும்..

கிருஷ்ண மூர்த்தி கூட. தன் மகனிடம். “ ஆமாம் குரு நானுமே உன் கிட்ட இதை பத்தி சொல்லலாம் என்று தான் இருந்தேன்.. எல்லாம் முறையா நடந்து முறையா மகி நம்ம வீட்டிற்க்கு வருவது தான் மருமகளுக்கு மரியாதை…” என்று சொல்ல.

அடுத்து குரு மூர்த்தியின் செயல் மின்னல் வேகம் தான்.. அவனுக்கு ஏனோ இப்போது எல்லாம் அவன் முத்தத்தோடு நிறுத்த அவனால் முடியவில்லை…

இன்னுமே அவர்கள் முத்தம் அந்த கடல் அலையை பார்த்த வாறு தான் தொடர்கிறது… ஆனால் முதல் எல்லாம் இனித்த அந்த முத்தம்.. இப்போது அவனின் உடலை வெப்பம் கூட்ட செய்கிறது…

இன்னும் கேட்டால் அந்த முத்தம் ஜில் என்ற அந்த கடலின் ஓரத்தில் தான் கொடுப்பது… அந்த கடல் காற்றின் ஈரம் கூட குரு மூர்த்தியின் வெப்பத்தை குறைப்பதற்க்கு பதில் கூட்ட தான் செய்கிறது..

விஷத்தை வைத்து விஷத்தை முறிப்பது போல.. அவனின் அந்த உடல் வெப்பத்தை தணிக்க. இன்னும் ஒரு வெப்பமான உடல்.. அதுவும் அவனின் ஈஸ்வரியின் உடல் தான் வேண்டும் என்று அவன் மனது சமீபகாலமாக அடம் பிடித்து கேட்க.

இதோ அதன் முதல் படியாக. தன் திருமணத்தை பதிவு செய்தவன்.. அனைவரையும் கூட்டி..

“இவள் தான் என் மனைவி..” என்று சொல்ல ஒரு கிரண்டான வர வேற்ப்பை கொடுத்து விட்டான் குரு மூர்த்தி..

குரு மூர்த்திக்கு தன் தாய் மாமன் இருக்கும் இடம் தெரியும்.. அவர் எப்படி இருக்கிறார் என்பதும் தெரியும்.. ஆனால் தன் வர வேற்ப்புக்கு தன் மாமனை அழைக்கவில்லை..

அது என்னவோ தன் மாமனை ஒரு நாயகனாக பார்த்த கண்ணுக்கு குரு மூர்த்தியினால் உடல் தளர்ந்து போய நிற்பவரை பார்க்க முடியாததில் அழைக்கவில்லை என்பது ஒரு காரணம் என்றால், மற்றோரு காரணம்…

தன் மாமன் தன்னை பார்த்தால், தன்னுடம் இருக்க முடியவில்லையே என்று அவர் மனது இன்னுமே வலு இழக்க கூடும் என்று அழைக்காது விடுத்தான்.

குரு மூர்த்திக்கு விசுவநாதன் எங்கு இருக்கிறார் என்று தெரிந்தது போல விசுவநாதனுக்கும் இன்று தன் மருமகனின் வரவேற்ப்பு என்று தெரிந்து தான் இருந்தது..

தன் நிலை மறந்த பெண்ணிடம் தான் சொல்லி கொண்டு இருந்தால் இதை… “ எல்லாமாக அவனுக்கு நான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.. ஆனால் நான் இல்லாது தான் அவனுக்கு எல்லாம் நடக்கும் என்றால் நான் ஒதுங்கி கொள்வேன்..” என்று சொல்லி கொண்டு இருந்தார்.

இதோ ஊர் கூட்டி தங்களின் வர வேற்ப்பை முடித்து முறையாக அவனின் ஈஸ்வரியை அதே கெஸ்ட் அவுசுக்கு தான் அழைத்து வந்தான்..

கிருஷ்ண மூர்த்தி கூட. “ ஏன் குரு.. இனி நாம அந்த வீட்டில் இருக்கலாமே. ஏன் இங்கு…?” என்று கேட்டதற்க்கு.

“வேண்டாம் ப்பா.. இப்கேயே இருந்துடலாம்..” என்று தந்தையிடம் குரு மூர்த்தி காரணம் சொல்லவில்லை என்றாலும், அந்த வீட்டில் இருந்தால், தினம் தினம் அவன் மாமனை நினைக்காம இருக்க முடியாது.. இப்போதும் இங்குமே நினைக்கிறான் தான். ஆனால் இதனால் தன்னுடம் இருக்கும் மனது பாதிக்கும் என்பதில் உடனே அதை மறைத்துக் விட அவனால் முடிகிறது.

ஆனால் அந்த வீட்டில் சத்தியமாக அவனால் அது முடியாது பொய் விடும்… அதோடு இந்த கெஸ்ட் அவுசுக்கு வர இன்னொரு முக்கியகாரணம்… அந்த கடல் கரையை ஒட்டிய கரை. தன் அறை. அந்த பால்கனி. இனிமையான நினைவு கொடுத்த அந்த இடத்தில் அனைவரும் பார்க்க இவள் தன் சொந்தம் என்று சொன்ன குரு மூர்த்தி..

யாரும் பார்க்காது அவளை மொத்தமாக தன் சொந்தமாக்கி கொள்ள தான் இங்கு வந்தது..

அதே அறை அந்த கடல் அலையின் சத்தம் அவன் அறை எங்கும் கேட்க … ஈரமான காற்று அவர்கள் வெற்று உடம்பில் குளி₹சியை கொடுக்க… ஆனால் இருவரும் உடலுமே அந்த குளுமையையும் தான்டி வியர்வையின் நனைந்து கொண்டு இருக்க. திரையில் ஆட்டத்தில் இதை கண்ட நாம் இன்னுமே காண முடியாத கோலத்தை பார்த்தால், இந்த கதை 18+ ஆகி விடும் என்ற காரணத்தினால். இந்த காட்சி மட்டும் அல்லாது இந்த கதையயுமே இதோடு நிறைவு பெற்று அடுத்த கதையில்… வேறு கதையோடு சந்திக்கிறேன்.. வாசகர்களே…

நன்றி…
 
Top