Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yennai kondaada pirandhavan....18...2

  • Thread Author
அத்தியாயம்…18…1

ஸ்ருதி தன் கழுத்தில் இருந்த தாலியை காட்டி சித்தார்த் மீது தன்னை மீறி யாருக்கும் உரிமை இல்லை என்று சொன்னதும், மகி கோபப்பட்டு இருந்தாளோ.. .. இல்லை தன்னிடம் சண்டை போட்டு இருந்து இருந்தால் கூட ஸ்ருதிக்கு இந்த அளவுக்கு வெறி வந்து இருந்து இருக்காதோ என்னவோ..

ஆனால் தன்னை பார்த்து ஒரு விதமாக சிரித்து, அதுவும் தன்னிடம் கோபமாக பேச வந்த சித்தார்த்தையுமே தடுத்து நிறுத்திய மகியின் இந்த செயல் ஸ்ருதியை வெறி ஏற்றுவது போல ஆகி விட்டது..

இவள் யார்…? என் புருஷன் என் கிட்ட பேச வரார்.. அது சண்டையா இருந்தாலுமே பேசட்டும்.. இவள் யார் தடுக்க…? என்று மகியை நினைத்த ஸ்ருதி.. இவள் தடுத்தாள்.. இவள் கேட்பானோ.. என்று சித்தார்த்தையும் நினைத்தவள்..

“ஏன் சிரிக்கிற ஏன் சிரிக்கிற..?” என்று கேட்ட ஸ்ருதிக்கு மகி பதில் அளிக்கவில்லை.. மீண்டுமே அதே போல தான் ஸ்ருதியை பார்த்து மகி சிரித்து வைத்தாள்..

இப்போது ஸ்ருதி மகியை அவமானம் படுத்தும் நோக்கத்துடன்… “ முதல்ல புருஷன் பொண்டாட்டி பேசும் போது ஒதுங்கி நிற்க நீ கத்துக்க…? நான் அந்த வீட்டிற்க்கு வந்த பின் முதல்ல அந்த வீட்டை விட்டு அனுப்புவது தான் என் முதல் வேலையே…” என்றவளின் இந்த பேச்சில் மகி சத்தமாக சிரித்து விட்டவள்.

இப்போது ஸ்ருதி கேட்காமலேயே.. “ முதல்ல நீ என் அத்தை வீட்டுக்கு வா. அப்புறம் என்னை நீ அங்கு இருந்து அனுப்புவதை பற்றி பேசலாம்…” என்று சொல்லி விட்டு மீண்டும் சித்தார்த்தை பார்த்து.

“நேரம் ஆகுது அத்தான்.. அத்தை தேடுவாங்க..” என்று சொல்ல.

ஸ்ருதி… “ முதல்ல ஏன் நான் அங்கு வர முடியாது… எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சி.. நீ தான் அதை பார்த்த தானே,…” என்று கேட்டவளிடம்..

இப்போது… “ ஆமாம் நான் பார்த்தேன்.. என் அத்தையும் பார்த்தாங்க. அப்புறம் உன் அம்மா. உன் அப்பன். மாமா மாமா பையன். பார்த்தோம்.. அப்புறம் யாரு பார்த்தா…என் அத்தான் உன் கழுத்தில் தாலி கட்டியது ஒரு போட்டோ… இல்லை உங்க மேரஜ் ரிஜிஸ்ட்டர் பண்ணதுக்கு உண்டான ஆதாரம்.. ? என்று அவள் கேள்வியாக அடுக்க.. ஸ்ருதி விழி விரித்து இப்போது மகியை பார்த்தவள்.. சித்தார்த்தையும் பார்த்தாள்..

சித்தார்தோ மகியின் பேச்சுக்கு எந்த வித மறுப்பும் சொல்லாது அமைதியாக நின்று கொண்டு இருப்பதை பார்த்தவள்.. அப்போ சித்தார்த்துக்குமே இது தான் நினைத்து கொண்டு இருக்கிறானா.

நான் கூட தன்னுடன் வாழவில்லை. தன்னுடன் பேசவில்லை.. தான் தற்கொலைக்கு முயன்ற போது கூட தன்னை விசாரிக்கவில்லை என்று அத்தனை கவலையிலுமே ஸ்ருதிக்கு இருந்த ஒரே ஆறுதல். சித்தார்த் தன்னுடன் வாழ கூடாது என்று நினைத்து இருந்தால், இந்த நேரம் தனக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி இருந்து இருப்பார்..

அவருக்கு அந்த எண்ணம் எல்லாம் கிடையாது.. அவருமே என்ன செய்வார்…? சித்தார்த் அம்மாவுக்கு தன் அப்பா செய்த செயல் . அது ஒரு பெரிய விசயம் தானே..

அதோடு அவனின் தாய் மாமா மாமி என்னால் இறந்து இருக்கிறார்கள்.. இதன் தாக்கம் குறைய சிறிது காலம் அவருக்கும் வேண்டும் தானே.. என்று நினைத்து கொண்டு இருந்தவளுக்கு..

நீ செய்தது திருமணமே கிடையாது.. நான் சித்தார்த் மனைவியே இல்லை என்பது போலான மகியின் இந்த பேச்சில் அதிர்ந்து போய் சிறிது நேரம் வாய் அடைத்து போய் நின்று விட்டவள்..

பின் அனைத்திற்க்கும் சேர்த்து வைத்து…. “ நான் மனைவி இல்லேன்னா நீயா…?” என்று வெடுக்கென்று கேட்டு விட்டவளிடம் மகி சித்தார்த் அத்தானை ஒரு பார்வை பார்த்தவள்..

“நான் மனசு வைத்தா.. இன்னைக்கே கூட நான் அப்படி ஆகலாம்..” என்று இப்படி சொன்னவளுக்கு சிறிது கூட அந்த மாதிரி எண்ணம் கிடையாது..

முன்பே சித்தார்த்தை திருமணம் செய்ய சம்மதித்த போதே காதல் அது போலான அபிப்பிராயம் இல்லை என்றாலுமே, அவளுக்கு சித்தார்த் மீது அன்பு பாசம் மரியாதை இருந்தது..

ஆனால் இப்போது அந்த மரியாதை…? தெரியவில்லை..

அதோடு ஸ்ருதியின் அப்பா முன் அத்தையை கடத்தியதினாலும்.. தன் அப்பா அம்மாவை ஏற்றி கொன்றது ஸ்ருதியின் கார் என்று தெரிந்ததினாலும் ஸ்ருதியை சித்தார்த் ஒதுக்கி வைத்து விட்டான்..

இது இரண்டும் இல்லாது போய் இருந்தால், சித்தார்த் ஸ்ருதியோடான இந்த திருமணத்தை ஏற்று இருந்து இருப்பார் தானே என்ற எண்ணம்.

தாய் தந்தை இல்லாதவளின் மனது தனக்கு வர போகிறவனின் முழு அன்பும் தனக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு, அதனால் சித்தார்த்தை இனி தன்னால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவளுக்கு கிடையாது தான்..

ஆனால் தன் தந்தை தாயை கொன்றவள்.. அதன் தாக்கம் சிறிதும் இல்லாது.. அதுவும் இவளின் அப்பா செய்த விசயங்கள் அனைத்துமே தெரிந்து இருந்தும்.. எப்படி இப்படி இவளாள் பேச முடிகிறது என்ற எண்ணத்தில் தான் மகி இப்படி சொன்னது.

ஆனால் இது ஸ்ருதிக்கு தெரிய வேண்டுமே… தன் காதலன் தான் இந்த உலகத்திலேயே இருக்கும் ஒரே ஆணழகன் என்று இந்த பெண்கள் நினைப்பது போல தான் ஸ்ருதியும் சித்தார்த்தை நினைத்து விட்டாள் போல.

அதில் சித்தார்த்தை நான் இப்போது நினைத்தாலும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற மகியின் இந்த வார்த்தையில், தன் தலையில் சூடி இருந்த மல்லிகை பூவை பிடித்து இழுத்தவள்..

“இந்த பூ வேண்டுமா. இந்த பூ வேண்டுமா.?” என்று ஸ்ருதி தன்னை மறந்து ஆவேசமாக கத்தி கொண்டு இருந்தவளின் இந்த செயல் சாதாரணமானவள் நடந்து கொள்வது போல் இல்லை..

மகி ஸ்ருதியின் இந்த செயலையே ஆராய்ச்சியுடன் தான் பார்த்து கொண்டு நின்று இருந்தாள். ஒரு சமயம் நடிக்கிறாளா என்று..

ஆனால் அடுத்து தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டிய அவளின் அந்த செயலையே மகி நினைத்து பார்த்து இருக்காத போது அதை தன் கழுத்தில் போட முயன்றவளின் செயலில் மகி விதிர்த்து போய் விட்டாள்

உடனே தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த மகி.. ஸ்ருதி அதை தன் கழுத்தில் மாட்ட விடாத வாறு தடுத்து நிறுத்த முயன்று கொண்டு இருந்தாள்..

ஸ்ருதிக்கு அத்தனை வலு எங்கு இருந்து தான் வந்ததோ என்று தெரியவில்லை… இஸ்ட்ரியா பேஷண்ட் போலவே அவளின் நடவடிக்கை இருந்தது.. இத்தனை தூரம் சித்தார்த் ஸ்ருதியை விட்டு சிறிது தள்ளி நின்று கொண்டு இருந்தவன்.

அவளின் கை பிடித்து தடுத்து முயன்ற வாறே… “ உனக்கு பைத்தியமா பிடித்து இருக்கு..” என்று கோபமாக கேட்டவனை கவனிக்கும் நிலையில் கூட ஸ்ருதி இல்லாது அந்த தாலியை மகியின் கழுத்தில் மாட்டுவதிலேயே அவள் முழு மூச்சுடன் இருக்க..

சித்தார்த் சும்மா இல்லாது… “ இதை நீ அவள் கழுத்தில் போடனும் என்று இல்ல. ஒரு நல்ல நாளில் அவள் கழுத்தில் நான் போடுறேன் ..” என்றவனின் இந்த பேச்சில் ஸ்ருதியின் வெறி ஆட்டம் இன்னும் தான் கூடி போயின…

ஸ்ருதியின் கையை பிடித்து கொண்டு இருந்த சித்தார்த்தின் கை வெடுக்கென்று ஸ்ருதி கடித்து விட்டாள்..

இதை சித்தார்த் துளியும் எதிர் பார்க்கவில்லை. கடி என்றால் சும்மா எல்லாம் இல்லை. அவளின் முன் பற்கள் நான்கும் அவனின் கையில் தடையமாக பதியும் அளவுக்கு கடித்து இருந்தாள்..

வலியில் சட்டென்று கையை உதறி கொண்டவன் அவளை அடிக்க கை ஓங்க.. இன்னுமே கை பிடித்து இழுத்து கடித்து விட்டவளின் முகத்தில் அத்தனை வெறி.. பேய் பிடித்தது போலான ஒரு தோற்றம்.. பூவை பிடித்து இழுத்த போது முடியையும் சேர்த்து இழுத்ததில் தலை விரி கோலமாக நின்று கொண்டு இருந்தவள் மீண்டும் தாலியை மகியின் கழுத்தில் போட முனைப்பாக இருந்த சமயம் தான் குரு மூர்த்தியின் கார் அவர்கள் அருகில் வந்து நின்றது.

நின்றவன் இவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு இருந்தவனை முறைத்து விட்டு… ஸ்ருதியின் அருகில் சென்றவன். எதை பற்றியும் யோசிக்காது ஸ்ருதியை அடித்து விட்டவன்.

அவள் கையில் இருந்த தாலியையும் பரித்து கொண்டவன். சித்தார்த்திடம். “இதை நீ ஸ்ருதி கழுத்தில் இருப்பதில் உனக்கு விருப்பம் இல்லை தானே…?” என்று கேட்க..

சித்தார்த் இல்லை என்று தலையாட்டிய நொடி.. குருமூர்த்தி அதை மகியின் கழுத்தில் மாட்டி விட்டு இருந்தான்.

அந்த காட்சியை பார்த்து கொண்டே தான் விசுவநாதனும் தன் காரில் இருந்து இறங்கி வந்தது…
மீண்டும் ஒரு இறுக்கமான சூழ் நிலை சித்தார்த் வீட்டில் நிலவியது… முன்பு ஒரு காலத்தில் அந்த வீட்டில் எத்தனை எத்தனை அமைதியும் சந்தோஷமும் நிலவியதோ.. இப்போது அத்தனை அத்தனை ஒரு நாள் இல்லாத நிலை இன்னொரு நாள் மாறி மாறி கால நிலை மாற்றம் போலான நிலை தான் சாரதா வீட்டில் இருந்தது..

கிருஷ்ண மூர்த்தி எந்த நிலை வந்தாலும்.. சாரதாவின் முன் மட்டும் நின்று சாரதாவுக்கு தர்ம சங்கடமான நிலையை கொடுக்க கூடாது என்று நினைத்து கொண்டு இருந்தவர்.. இப்போது சாரதா வீட்டில் சாரதாவின் முன் நிலையில் அமரும் படியான சூழ் நிலையில் அவரை நிறுத்தி விட்டான் அவனின் மகன் குரு மூர்த்தி..

ராம் சந்திரனுக்கும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை.. தன் மகன் ஸ்ருதி கழுத்தில் தாலி கட்டி பின் அந்த பிரச்சனையின் தாக்கம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில்,

புதியதாக குரு மூர்த்தி மகியின் கழுத்தில் தாலி கட்டியதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…

தன் மகன் சித்தார்த்தாவது அந்த பெண்ணை விரும்பினான்.. அதனால் அப்படி நடந்து முடிந்து விட்டது.. ஆனால் மகி.. இது வரை குருவிடம் பேசி இருந்து இருப்பாளா என்று கூட தெரியவில்லையே.

தாலி என்ன ஜெயினா. இவள் கழுத்தில் இருந்து இவள் கழுத்திற்க்கு மாற்றி போட்டு கொள்வதற்க்கு.? ஆண் மகனாக ஒரு முடிவு எடுத்த தந்தைக்கு ஒரு பெண்ணாக மகியின் வாழ்க்கையை பற்றி ஒரு முடிவு எடுக்க ராம் சந்திரன் தயங்கி இருந்தார்.

சித்தார்த் தான் அப்படி ஆடி தீர்த்து விட்டான்.. கூடத்தில் இருந்தே. “ அதை முதல்ல கழிட்டி வீசு குட்டிம்மா…” என்று படுக்கை அறையில் இருந்த மகியின் காதில் விழ வேண்டும் என்று சத்தம் போட்டு பேச. ஆனால் அதற்க்கு எதிர் வினையாக மகியின் படுக்கை அறையில் இருந்து ஒரு சத்தத்தையும் தான் காணும்..

அதனால் சித்தார்த் மகியின் அறைக்கு போக முயல.. சாரதா தான் மகனை போக விடாது தடுத்து நிறுத்தி விட்டவர்.

“நீ பேசாதே.. எல்லாம் உன்னால் தான்.. இதற்க்கு ஆரம்ப புள்ளியே. நீ தான்… அந்த ஆளு பார்வை பட்ட வீடு ஆமை புகுந்தது போல… இது நினைத்து தான் நான் பயந்து போய் இருந்தேன்..” என்று தன் மகனை அடக்கிய சாரதா..

கிருஷ்ண மூர்த்தியிடம்… “ உங்க மகன் என்ன சொல்லுறார்…?” என்று கேட்டார்..

சாரதாவுக்கு கிருஷ்ண மூர்த்தியின் முகத்தை பார்த்து பேசுவற்க்கு எந்த வித தயக்கமும் காட்டாது அவரை நேர்க் கொண்டு பார்த்து தான் இதை கேட்டது..

கிருஷ்ண மூர்த்திக்கு தான் சாரதாவின் முகத்தை பார்க்க ஒரு விதம் தயக்கமாக இருந்தது.. அன்று தன்னால் தானே சாரதா அவ்வளவு பெரிய இக்கட்டில் மாட்டிக் கொண்டது…

அதனால் கிருஷ்ண மூர்த்தி.. சாரதாவை பார்க்காது பக்க வாட்டில் பார்வையை பதித்து கொண்டு.. ஏதோ பேச தொடங்கும் முன் சாரதா கிருஷ்ண மூர்த்தியின் பேச்சை இடையிட்டு தடுத்து நிறுத்தியவர்..

“என் மருமகளின் வாழ்க்கை பற்றி பேசும் முன் நான் வேறு ஒரு விசயத்தை பேசி தெளிவு படுத்திக்க விரும்புகிறேன்… நான் இப்போது மிஸஸ் சாரதா ராம் சந்திரன்.. என் பெயருக்கு அடுத்து ராம் சந்திரன் வர காரணம்… அந்த நிகழ்வு தான். அன்னைக்கு நான் பயந்தேன் தான்.. ஆனால் கெட்டதிலும் நல்லது… அந்த நிகழ்வு தான் எனக்கு இவரை எனக்கு கொடுத்தது.

அதற்க்கு என்று அந்த ஆள் அன்னைக்கு செய்தது சரி என்று சொல்ல மாட்டேன்.. அன்னைக்கு நான் பயந்த பயம்.. அது போல இன்னொரு பெண்ணுக்கு நடக்க வேண்டாம்.. இப்போ பேச்சு அது கிடையாது..

இப்போ இந்த நிமிஷம்.. மகி கழித்தில் தாலி கட்டியவனின் தகப்பான மட்டும் தான் உங்களை நினைத்து உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்..

அதே போல.. மகியின் அத்தையா என் கிட்ட எந்த வித தயக்கமும் இல்லாது நீங்க பேசலாம்.. பழைய சுவடு எதுவும் பேசவும் வேண்டாம் நினைக்கவும் வேண்டாம்.” என்று சொல்லி சாரதா தெளிவு படுத்தி கொண்ட பின்..

கிருஷ்ண மூர்த்தியும் இப்போது சாரதாவின் முகத்தை பார்த்து… “ குருவுக்கு மகியை பிடித்து தான் தாலி கட்டி இருக்கான்.. அதுல எந்த வித சந்தேகமும் இல்லை… நான் கேட்ட போது அது தான் சொன்னான்..” என்ற பேச்சில்..

“இது என்ன பழக்கம் மிஸ்டர் கிருஷ்ண மூர்த்தி.. உங்க வீட்டு பெண்ணுக்கு பிடித்து இருந்தா எப்படியாவது அந்த பெண் விரும்புபவனை கல்யாணம் செய்து வைத்து விடுவிங்க். ஆண் விரும்பினா. உடனே தாலியை கட்டி விடுவிங்கலா..? நான் தெரியாம தான் கேட்கிறேன்.. என் மருமகள் என் மகனை விரும்பி இருந்தா.? இல்ல வேறு யாராவது என் மருமகள் மனதில் இருந்தால்,..?” என்ற சாரதாவின் இந்த கேள்விக்கு கிருஷ்ண மூர்த்தியிடம் பதில் இல்லை..

அமைதியாக இருக்க. பின் கிருஷ்ண மூர்த்தி ராம் சந்திரனிடம்… “ இப்போ ஸ்ருதி ஆஸ்பிட்டலில் இருக்கா… அவள் கூட தான் குரு இருக்கான் சந்திரா.. என் மகனுக்கு மகியை பிடித்து இருக்கு.. எனக்குமே ஐய்யா பேத்தி என் வீட்டிற்க்கு வருவது அவ்வளவு சந்தோஷம். ஆனா இது எல்லாம் மகி விரும்பினா மட்டும் தான்.

அதோட குரு மகி கழுத்தில் இப்போ தாலி கட்ட கூட ஏதாவது காரணம் இருக்கும் என்று தான் எனக்கு தோனுது.. ஏன்னா அவன் ஸ்ருதியை பார்க்க ஆஸ்பிட்டலுக்கு போகும் போது என் கிட்ட இதை தான் சொல்லிட்டு போனான்.

எனக்கு ஈஸ்வரியை பிடித்ததினால் தான் அந்த தாலியை அவள் கழுத்தில் போட்டேன்.. ஆனா வாழ்க்கை வாழுவாது ஈஸ்வரிக்குமே விருப்பம் இருந்தால் மட்டும் தான்… அப்படி விருப்பம் இல்லை என்றால், வேண்டாம்.. ஆனால் தற்சமயம் ஈஸ்வரி என் மனைவியா இருப்பது தான் அவளுக்கு சேப்ட்டி… “ என்று சொன்னான்.. என்று குரு மூர்த்தி சொன்னதை சொன்னதுமே சாரதாவுக்கு புரிந்து விட்டது…

ஏன் குரு மூர்த்தி மகியின் கழுத்தில் அத்தனை அவசரமாக ஏன் தாலியை கட்டினான் என்பது..

ஆனால் சாரதாவுக்கு இப்போது தெரிய வேண்டியது எல்லாம். குரு மூர்த்தி.. கிருஷ்ண மூர்த்தியின் மகன் … ஆனால் அவன் கஞ்சனாவின் மகனும் தானே…. அதோட விசுவநாதன் தாய் மாமன்.. இவனை அனைத்தையும் விட.

தன் அண்ணன் அண்ணி இறப்பை அசிங்கம் படுத்தியன் குரு மூர்த்தி. இப்போது மட்டும் மகியின் பக்கம் யோசிப்பது ஏன்..? இதிலுமே விசுவநாதனின் பங்கு இருக்குமா.? இது வரை சாரதா மட்டும் அல்லாது யாருமே குரு மூர்த்தியை பற்றி தனித்து யோசித்ததும் கிடையாது அவனை பற்றி பேசியதும் கிடையாது..

இனி தான் விசாரிக்க வேண்டும்.. அதை சாரதா கிருஷ்ண மூர்த்தியிடம் கூறி விட்டார்..

“என் மகனுக்கு மகியை இனி திருமணம் செய்து வைக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.. ஏன்னா மகியை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. அதோடு உங்க மகனை பற்றி எனக்கு ஒரு முடிவு எடுக்கவும் எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்..” என்று கேட்டவரிம் கிருஷ்ண மூர்த்தி..

“தாரளமா யோசிங்க. குரு மூர்த்தியை பற்றி விசாரிங்க. அவன் படிப்பு வேறு தொழில் வேறு… இந்த தொழில் கூட அவன் மாமா கையில் எடுக்க நினைத்தது…” என்றவரின் பேச்சு தான் அங்கு இருந்த அனைவருக்கும் இடித்தது..

தன் மாமனுக்காக தன் படிப்புக்கு துளி கூட சமந்தப்படாத.. அதுவும் வெளிப்பார்வைக்கு பப் வைத்து நடத்துவது என்பது அவ்வளவு மரியாதைக்கு உரிய விசயம் கிடையாது என்ற போது..

மாமனுக்காக தொழிலை எடுத்தவன்.. அவன் மகளுக்காக மகியைன் கழுத்தில் தாலி கட்டி இருப்பானோ… அதை விசாரிக்க வேண்டும்.. அதனால் சாரதா யோசிக்க வேண்டும் என்று சொல்லி கிருஷ்ண மூர்த்தியை அனுப்பி வைத்தார்..

மகியின் சம்மந்தப்பட்ட அனைத்து விசயங்களையும் சாரதா தான் பேசியது… கிருஷ்ண மூர்த்தி சென்றதும் சாரதா தன் கணவனிடம்.

“நீங்க ஒன்னுமே சொல்லலே.. நான் பேசினது..” என்ற மனைவியின் பேச்சை ராம் சந்திரம் முழுமை அடைய விடவில்லை..

மனைவியின் கரம் பிடித்து கொண்டவர்.. “ எனக்கு உன்னை புரியுது சாரும்மா. இது நம் மகி விசயம் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய கூடாது எனக்கும் புரியுது.. இது எல்லாம் விட நாம எந்த முடிவு எடுத்தாலும், மகி கிட்ட கேட்டுட்டு தான் எடுக்கனும்..” என்று சொன்னதற்க்கு சாரதாவும் அதை ஏற்க..

சித்தார்த் தான். “ எனக்கு இதுல துளி கூட விருப்பம் இல்ல. நம்ம மகிக்கு குரு ஏத்தவன் கிடையாது..” என்று பட பட என் று பொரிந்து கொண்டு இருந்தவனிடம்..

சாரதா.. “ அப்போ நீ ஏற்றவனா…?” என்று கேட்டார்..

அன்னையின் இந்த கேள்வியில் அதிர்ச்சியாக சாரதாவை பார்த்தவனிடம் மீண்டுமே அதே கேள்வியை கேட்டவர்.. மேலும்..

“இதற்க்கு ஆரம்ப புள்ளி நீ தான் வைத்த சித்து…” என்று அவருமே மகியின் வாழ்க்கையில் அடுத்து என்ன ஆகுமோ..? என்று ஒரு வித குழப்பத்துடன் தான் இருந்தார்..

இந்த அனைத்து பேச்சுக்களையும் தன் அறையில் படுத்து கொண்டு இருந்த மகியின் காதிலுமே விழுந்தது தான். இப்போது அவளுக்குமே குழப்பம் தான். குருவை பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியாது.. ஆனால் ஸ்ருதிக்காக குரு செய்த விசயம் தெரியும்.. அதை நினைத்து கண்களை இறுக்கி மூடிக் கொண்டவளின் கைய் தன் கழுத்தில் இருந்த தாலியை தான் கெட்டியாக பிடித்து கொண்டு இருந்தது..

ஸ்ருதியை மீண்டுமே அதே மருத்துவமனைக்கு தான் அழைத்து சென்றனர்.. இல்லை இல்லை தவறு இழுத்து சென்றனர் என்று சொன்னால் சரியாக இருக்கும்..

விசுவநாதன் மகியின் பின் அனுப்பிய ஆட்கள் இன்று காலை தான் அவரை அழைத்து பேசியது..

அதாவது அவர்கள் பேசிய விசயம். “ என்ன சார் எங்களை இல்லாம வேறு யாராவது அந்த பெண்ணை பின் தொடர ஆளை ஏற்பாடு பண்ணி இருக்கிங்கலா..? நான் அவங்க கூட சேர்ந்து பொண்ணை தூக்கி விடவா…?” என்று கேட்ட போது..

விசுவநாதன்.. “ என்னது.. அந்த பெண்ணை இன்னொருத்தவங்க பின் தொடருறாங்கலா…? நம்ம ஆளுங்களா…?” என்று கேட்க.

விசுவநாதன் கேள்வியிலேயே மகியை பின் தொடர்பவனுக்கு புரிந்து விட்டது.. இது விசுவநாதன் அனுப்பிய ஆள் இல்லை என்பது.

இப்போது விசுவநாதனுக்கு சந்தேகம்… தன் சந்தேகத்தை தீர்த்து கொள்ள குரு மூர்த்தியிடம் வேலை செய்யும் சில ஆட்களை அழைத்து பேசினார்..

“குரு ஒரு பெண்ணை பாலோ செய்ய யாரையாவது அனுப்பி இருக்கிறானா…?” என்று..

எதிர் பக்கத்தில் இருந்து இல்லை என்று பதில் வர விசுவநாதன்… சூடு கண்ட பூனை..தானே,.

அது தான் சாரதா தன் மருமகளை தான் தூக்க கூடும் என்று சரியாக கணித்து கூடவே தன் மகனையும் இருக்கும் மாறு பார்த்து கொள்பவர்… மகியை காக்க ஒரு ஆளையும் ஏற்பாடு செய்துட்டா போல.. ஆனா சாரதா. இப்போ நான் என் மகள் வாழ்க்கைக்கு இத்தனை தயங்க காரணம். நான் உனக்கு செய்தது தப்பு.. அது எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனால் அந்த தப்பு செய்ய காரணம் என் தங்கை ஆசைப்பட்டவனுடம் வாழனும் என்று.

இன்று என் மகள் உன் மகனை விரும்பி கல்யாணமும் செய்து கொண்டு இருக்கா.. அவளை வாழ வைக்க நான் என்ன வேணாலும் செய்வேன். உன் மருமகள் மகியை ஏழு கடல் தான்டி ஒளித்து வைத்தாலுமே தூக்கி விடுவேன்.. பிசாத்து உன் மகனையும். நீ வைத்த அந்த ஆளையும் மீறி தூக்குவதா கஷ்டம் என்று நினைத்து கொண்ட விசுவநாதன் மகியை பின் தொடரும் ஆட்களை அதிகரித்த விசுவநாதன்.

நேரம் கிடைத்தால் சித்தார்த் கண்களின் மண்ணை தூவி விட்டு மகியை பின் தொடர்பவனையும் அடித்து விட்டு கூட மகியை தூக்கி விடு. ஆமா என் மாப்பிள்ளை மீது கை வைக்க கூடாது.. என்று எச்சரிக்கை செய்து விட்டார்..

பின் இன்று மாலை மகியை பின் தொடர சொல்பவனிடம் இருந்து விசுவநாதனுக்கு ஒரு அழைப்பு வந்தது.. அதை பார்த்த விசுவநாதன் கூட.

பெண்ணை தூக்கி விட்டாங்க போல. என்று நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டு தான் அவனின் அழைப்பை விசுவநாதன் ஏற்றது.

ஆனால் அவன் சொல்லப்பட்ட விசயமான. “ சார் நம்ம மேடம் காலேஜ் முன்னே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.” என்றதும் விசுவநாதன் கூட தன் மனைவி என்று தான் நினைத்தார்.

காலையில் கூட தாமரை தன்னிடம் சண்டை பிடிக்கும் போது. “ நீங்க மாப்பிள்ளை கிட்ட பேசல என்றால், நான் போய் பேசுறேன்.” என்று சொன்னது போல சித்தார்த்தை பார்த்து பேச தான் காத்து கொண்டு இருக்கிறாளோ என்று நினைத்தாலுமே அதை தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டி,..

“என் மனைவியா..?” என்று கேட்டார்.. அதற்க்கு அவன்..

“இல்ல சார் உங்க மகள்..” என்றதுமே விசுவநாதனுக்கு ஒரு பதட்டம்.. தன் மகளின் மனநிலையையும் கொஞ்ச நாட்களாக சரியில்லை என்பதை அவருமே கவனித்து கொண்டு தான் இருக்கிறார்..

சித்தார்த்திடம் கோபமாக ஏதாவது பேசி விட போகிறாள்.. மாப்பிள்ளையிடம் நாசுக்காக பேசி தன் பக்கம் இழுத்து கொள்ளவது தான் விசுவநாதனின் திட்டம்.. இவள் கோபமாக பேசி விட போகிறாள் என்று நினைத்து சிட்டியை தான்டி சென்று கொண்டு இருந்த தன் காரை ஓட்டுனரிடம்…

தன் மகள் படித்த கல்லூரியின் பெயரை சொல்லி.. அங்கு திருப்பு.” என்று சொன்னவர் தன் மகளுக்கு பேசியில் அழைக்க.. அவளே அவரின் அழைப்பை ஏற்கவில்லை.. பேசி கூட தானும் சித்தார்த்தும் பேசுவதற்க்கு தொல்லையாக இருக்க கூடாது என்று நினைத்து அதை சைலண்டில் போட்டு வைத்து இருந்தாள்..

விசுவநாதன் நினைத்தை விட அதிகமாகவே. அவர் அங்கு வந்த போது விசயங்கள் நடந்து முடிந்து விட்டு இருந்தது..

அதுவும் சித்தார்த் தன் மகளை அடித்து இருந்து இருந்தால் கூட விசுவநாதன் தாங்கி கொண்டு இருந்து இருப்பாரோ என்னவோ. தன் மருமகன் குரு மூர்த்தி அடித்ததும் மகியின் கழுத்தில் தாலியை போட்டதுமே. இதோ ஸ்ருதியை மருத்துவமனையின் அனுமதித்து விட்டு காத்து கொண்டு இருந்த இந்த நேரம் முழுவதுமே.. அந்த காட்சி தான் அவர் கண் முன் மீண்டும் மீண்டும் வந்து சென்றது..







.


 
New member
Joined
Dec 18, 2024
Messages
5
Ithukku oru mudive illaya?, no one is good in Visvanathan family including guru Moorthy, even if Mahi is going to live with him, how come a person can forgive or forget the injustice for her own parents🤔🤔
Siddarth is so dumb, how can he be like this when his own mother was treated so cruel manner..
 
Well-known member
Joined
Jul 13, 2024
Messages
191
Arumai. Guru, if you have to live with Mahi, you have to completely ditch your mama, your business and also clear her parents bad name. Lot of work for you man.
 
Last edited:
Active member
Joined
May 12, 2024
Messages
223
Nan sonnen la… Guru thali kattuwan nu…
😑😑😑
Avan Visu kitta irunthu kappatra than kalyanam pannan… Aanalum avanai enekku pidikkala…

Shruthi ku mental aagittu pola… 🙄🙄🙄

Sidhu inimelym ava unakku vendam
 
Top