அத்தியாயம்….18…2
குரு மூர்த்தி மகியின் கழுத்தில் தாலி கட்டியதை பார்த்த ஸ்ருதி முதலில் நடந்தது உண்மையா…? என்பது போல அதிர்ந்து விட்டாள்… தன் குரு அத்தான் தன்னை அடித்தது ஒரு அதிர்ச்சி என்றால், தன் கையில் இருந்த தாலியை பிடிங்கி மகியின் கழுத்தில் கட்டியது அவளுக்கு இன்னுமே அதிர்ச்சியாகி விட்டது…
முதலில் தன் கையில் இருந்த தாலியை மகியின் கழுத்தில் போட முயன்ற ஸ்ருதி இப்போது அதை கழட்ட முயன்ற வாறே.. தன்னை மறந்து கத்தி கொண்டு இருந்தாள்..
அவள் கத்தல் இதுவாக தான் இருந்தது.. “ என்னை எல்லோரும் சேர்ந்து ஏமாத்திட்டிங்க. என்னை ஏமாத்திடிங்க…” என்று தன்னை மறந்து கத்தி கொண்டு இருந்தாள்..
அவள் தோற்றம். பேச்சு. இந்த கத்தல் அனைத்துமே வித்தியாசமாக தெரிந்தது… விசுவநாதன்..
“ஸ்ருதி ஸ்ருதி..” என்று அழைத்து தன்னிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருந்தார்.. ஒரு சமயம் சித்தார்த் மகளிடம் பேசினால் கொஞ்சம் சரியாக கூடும் என்று நினைத்து..
“மாப்பிள்ளை நீங்க பேசுங்க மாப்பிள்ளை.. நீங்க பேசினா என் பெண் சரியாகி விடுவா…” என்று தன் வயது மறந்து தன் வசதியை மறந்து சித்தார்த்திடம் கெஞ்சவே ஆரம்பித்து விட்டார்.
ஆனால் அதற்க்கு… “யாருக்கு யார் மாப்பிள்ளை…? உங்க பெண் கழுத்தில் நான் தாலி தான் கட்டினேன்.. வேறு எதுவும் இல்ல.. இப்போது அந்த தாலியையே உங்க மகளே எனக்கு வேலை வைக்காது கழட்டிட்டா..போய் வேறு யாராவது புது மாப்பிள்ளையை பாருங்க…” என்று சொன்னவன்…
மகியின் கழுத்தில் இருந்த தாலியை காட்டி.. “ இதை கழட்டி வீசிட்டு வா குட்டிம்மா…. கழுத்து காலியா இருந்தா கட்டிடுவானா..? இவன் கட்டினா அதை அப்படியே கழுத்தில் தொங்க விட்டுட்டு உன் பின்னாடி தொங்கிட்டு வந்துடுவாளா.?”
மகியிடம் பேச்சை ஆரம்பித்த சித்தார்த் குரு மூர்த்தியிடம் முடித்தான்.
இந்த நிகழ்வுகள்… கல்லூரியின் சாலையில் நடந்ததால், அங்கு நீண்ட வருடமாக வாட்ச் மேனாக இருந்தவர்.. சித்தார்த் தந்தை ராம் சந்திரனுக்கு அவர் இந்த கல்லூரியில் வேலை செய்த போது.. அவசரத்திற்க்கும். ஏதாவது பிரச்சனை என்று வந்தால், தன்னை அழைக்க வேண்டி கொடுத்த அவரின் எண்ணை இப்போது அவர் மகன் மருமகளுக்காக அழைத்து இங்கு நடந்த அனைத்தையும் சொல்லி தெரியப்படுத்தி விட்டார்..
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டே பேசியின் அழைப்பை ஏற்றதால், ராம் சந்திரன் ஸ்பீக்கரில் போட்டு தான் கேட்டது.. இதை பக்கத்தில் அமர்ந்து கொண்டு..
“இன்னுமே சித்துவும் மகியும் வரல….” என்று புலம்பிக் கொண்டு இருந்த சாரதாவுக்குமே அந்த வாட்ச் மேன் சொன்னது ஒன்று விடாது கேட்டதில்,
சாரதாவுக்குமே மயக்கம் வராத நிலை தான்.. என்ன நேரம் இது..? ஒன்னு மாத்தி ஒன்னு இப்படி நடக்குது… அய்யோ… என்று அப்போது கூட தன் மகனை தான் சாரதா திட்டிக் கொண்டே அவசரமாக காரை எடுத்த கணவன் பக்கத்தில் அமர்ந்த சாரதா தன் மகனை திட்டிக் கொண்டு வந்தார்..
அவரை பொறுத்த வரை துஷ்ட்டரை கண்டால் தூர வந்து விட வேண்டும்.. ஆனால் அந்த துஷ்ட்டர் வீட்டினிலே தன் மகன் சம்மந்தம் பேசி வைத்ததினால் தானே, இப்போது தன் மகிக்கு இப்படியான நிலை என்று சாரதா வழி முழுவதுமே புலம்பிக் கொண்டு தான் வந்தார்.
ராம் சந்திரனும் சாரதாவும் அங்கு வந்த போது தான் சித்தார்த் மகியின் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட சொல்லி கொண்டு இருந்தது..
குரு ஒன்று மட்டும் தான் சொன்னது.. “ சித்தார்த் நீங்க கொஞ்சம் நிதானமா செயபட்டா நல்லது… தாலி கட்டியதுமே ஈஸ்வரியை என் வீட்டிற்க்கு கூட்டிட்டு போயிட மாட்டேன்..” என்று குரு மூர்த்தி ஏதோ சொல்லி முடிப்பதற்க்குள் சித்தார்த்..
“ஓ கூட்டிட்டு போய் குடும்பம் வேறு நடத்துவியா..? என்று கேட்டு குரு மூர்த்தியிடம் தர்க்கம் செய்து கொண்டு இருந்தான்..
ஸ்ருதியோ… “ என் கழுத்தில் தாலி இல்ல.. அவள் கழுத்திலும் இருக்க கூடாது.. கழட்ட சொல்லுங்கப்பா கழட்ட சொல்லுங்க..” என்று வெறி பிடித்தது போல ஸ்ருதி ஒரு பக்கம் கத்திக் கொண்டு இருந்தாள்..
விசுவநாதனுக்கோ.. மகள் அப்படி கத்தி கொண்டு இருந்த போதும் குரு மூர்த்தியின் அந்த நிதானம். அதுவும் சித்தார்த்திடம்.
“கொஞ்ச நாள் பொரு.. “ என்று சொன்னது.
அனைத்தையும் விட… குரு மூர்த்தி சரியாக இங்கு எப்படி வந்தான். அப்போ மகியின் பின் தொடர்பவன். குரு வைத்த ஆளா…? யாரிடம் இருந்து மகியை காப்பற்ற நினைக்கிறான்… என்னிடம் இருந்தா..? அப்போ குரு என் பக்கம் இல்லையா…?’ என்று அனைத்து குழப்பத்தின் புள்ளிகளையும் ஒன்றினைத்து பார்த்ததில் ஒன்று மட்டும் விசுவநாதனுக்கு தெரிந்தது..
அது குரு மூர்த்தி மகியை விரும்புகிறான் என்பது. அதுவும் அவன் அழைத்த ஈஸ்வரி… விசுவநாதனால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை…. தன் மருமகன் தன் கைய் விட்டு போனது போல உணர்ந்தார்… தன்னோடு அந்த பெண் அவனுக்கு முக்கியமாக போய் விட்டாளா…? ஈகோ அவரை பலமாக தாக்கியது..
அதன் விளைவு சித்தார்த் மகியிடம் தாலியை கழட்டு என்ற பேச்சுக்கு இவருமே…
“நீ கழட்டு..” என்று மகியை மிரட்டுவது போல அவளின் முன்னால் வர.
குரு மூர்த்தி.. “மாமா.” என்ற அவனின் அழுத்தமான அந்த அழைப்பானது. அப்போது தான் அங்கு வந்து சேர்ந்த சாரதா சொன்ன..
“அவள் கழட்ட மாட்டா… இப்போ என்ன செய்ய போற …? என்ன செய்ய போற…? உன் தங்கச்சி மகனின் பொண்டாட்டியையும் கடத்த போறியா என்ன..? உன் ஆசை தங்கச்சி மிஸ்டர் விசுவநாதன்…” என்று எள்ளலாக சொன்னவர்.
“அவள் கழுத்தில் இருப்பதுமே இல்லாது போவதுமே. அது நாங்க தான் முடிவு செய்யனும்..” என்று அழுத்தம் திருத்தமாக சொன்ன சாரதா.
இன்னுமே தன்னை மறந்து பூ தாலி என்று கழட்டி போட்ட ஸ்ருதி சித்தார்த் தன்னை பார்க்க வேண்டும் என்று தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொண்ட மேச்சிங் வளையல்களையும் கழட்டி வீசிக் கொண்டு இருந்ததை காண்பித்து.
“சீக்கிரம் கூட்டிட்டு போங்க.. அப்புறம் வேறு ஏதாவது கழட்டிடா போற…” என்று இபடி சொன்னது நம் சாரதா தான்..
ஓரு பெண்ணாய்.. அதுவும் இத்தனை வயதுடைய மதிக்கத்தக்க பெண் மணி இப்படி சொல்ல கூடாது தான்..
ஆனால் அவரை அப்படி சொல்லி தூண்டியது… சாரதாவை கடத்தி வைத்து இருந்த போது சாரதா கத்தி கொண்டே இருந்த சமயத்தில்
துணி இருந்தால் வாயில் வைத்து அட…” என்று ஒருவன் சொன்ன போது தன்னை வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டு இருந்தவன்..
“இங்கு துணி எல்லாம் இல்ல… அந்த பெண்ணுடைய புடவையை வைத்தே அவள் வாயை அடைக்கட்டுமா..?” என்று சொல்லிக் கொண்டே தன்னை அவன் நெருங்கி வரும் போது அன்று அவள் பயந்த பயம் சொல்லி மாளாது…
அடி மனதில் அடி வாங்கிய வலி இன்று அது வார்த்தைகளாக வெளி வந்தது…
சாரதா சொன்னது போல தான் ஸ்ருதி… இது குரு அத்தான் வாங்கி கொடுத்தது உனக்கு வேண்டுமா. என் கிட்ட இருப்பதை தானே நீ எடுத்துப்ப.. இந்தா இந்தா என்று சொல்லி தன் ஆடையின் மீது கை வைத்த போது தான் விசுவநாதனுமே குரு மூர்த்தியுமே பதறி போனவர்களாக அவளின் இரு கையையும் வலுக்கட்டாயமாக பிடித்து காரில் தள்ளி இதோ மீண்டும் அதே மருத்துவமனை. அதே மருத்துவர்.
இவர்களை பார்த்ததுமே அந்த மருத்துவர் திரும்பவுமா…? என்று தான் நினைத்தார்.. ஆனால் ஸ்ருதியின் நிலையை பார்த்த உடன் ஒரு மருத்துவராக உடனே சிகிச்சை செய்ய தொடங்கி விட்டார்.
இங்கு ராம் சந்திரன் மனைவி மகன் மகியோடு காரில் வீட்டிற்க்கு திரும்பும் போதே வழியிலேயே கிருஷ்ண மூர்த்தியை அழைத்து விட்டு அனைத்துமே சொல்லி விட்டார்…
இதை கேட்டதும் கிருஷ்ண மூர்த்திக்கு திரும்பவுமா…? அந்த குடும்பத்தை ஒரு வழி செய்யாது விட மாட்டார்களா இவர்கள் என்று தான் நினைத்தார்..
தன் மகன் மகியை விரும்புகிறான் என்று கிருஷ்ண மூர்த்திக்கு தெரியத்தான் செய்தது.. அதுவும் மகியின் பாதுகாப்பு பற்றி அன்று தன்னிடம் பேசியதில் கிருஷ்ண மூர்த்திக்கு அது உறுதியாகியும் விட்டது தான்..
ஆனால் தன் விருப்பத்தை மகியிடம் சொல்லுவான் தன் மகன் என்று தான் அவர் நினைத்து இருந்தார். ஆனால் இப்படி தாலி கட்டி விடுவான் என்று எல்லாம் நினைத்து கூட கிருஷ்ணமூர்த்தி பார்க்கவில்லை…
ராம் சந்திரனுக்கு கிருஷ்ண மூர்த்தி என்ன என்று பதில் சொல்வார். அமைதியாகி விட்டார்… ராம் சந்திரனுமே அடுத்து என்ன பேசுவது என்று இருக்க.. இரு பக்கமும் யாரும் பேசவும் இல்லை.. பேசியை வைக்கவும் இல்லை…
பக்கத்தில் இருந்த சாரதா கணவன் பேச்சை கேட்டு கொண்டு இருந்தவர் தான் கணவனிடம்….
“உங்க பிரண்டை நம்ம வீட்டிற்க்கு வர சொல்லுங்க..” என்று சொன்னது… பேசியின் அந்த பக்கத்தில் இருந்த கிருஷ்ண மூர்த்தியின் காதிலும் சாரதா பேச்சு தெளிவாகவே கேட்க அவரால் நம்ப முடியவில்லை.
ஏன் ராம் சந்திரன் கூட மனைவி கிருஷ்ண மூர்த்தியை தான் அழைத்தாளா…? என்ற சந்தேகத்தில்.. “ கிட்டுவையா…?” என்று கேட்டார்.. கணவனை முறைத்தவர்..
“உங்க பிரண்ட் கிட்டு மகன் தானே குரு மூர்த்தி.. அவர் தானே இப்போ பிரச்சனையை ஆரம்பித்து இருக்கு… அப்போ அவர் தான் வரனும்…” என்ற இந்த பேச்சுமே கிருஷ்ண மூர்த்திக்கு தெளிவாகவே கேட்டது..
ராம் சந்திரனுக்கு அந்த சூழ்நிலையிலும் மெல்ல புன்னகை… அதை சாரதா கவனித்து விட்டார்.
“சிரிக்காதிங்க…” என்று ஒரு அதட்டல் போட. பேசியின் அந்த பக்கம் இருந்த கிருஷ்ண மூர்த்தியுமே சாரதாவின் இந்த பேச்சில் மெல்ல சிரித்து விட்டார் தான். சத்தம் இல்லாது தான்.. சாரதா மாறவே இல்லை.. அப்படியே தான் இருக்கிறாங்க. என்று நினைத்து கொண்டவரின் மனதில் ஓரம் இருந்த புண்ணில் கொஞ்சம் கீறி விட்டது போலான வலியும் சேர்ந்தே அவருக்கு ஏற்பட்டது. …
முதல் காதலை என்றுமே மறக்க முடியாது தானே… அவர்களே ஒத்து வரவில்லை என்று பிரிந்தால் அது வேறு.. ஆனால் வலுக்கட்டாயமாக பிரிக்க பட்டால்… அதுவும் அடுத்த அடியாக கல்யாண வாழ்க்கையின் துணை சரியாக அமைந்து போனால் மறக்க கூடுமோ என்னவோ… அதனால் தான் சாரதா.. இப்போது கிருஷ்ண மூர்த்தியை குரு மூர்த்தியின் தந்தையாக மட்டுமே நினைத்து அழைப்பது..
ஆனால் கிருஷ்ண மூர்த்திக்கு அந்த பாக்கியமும் இல்லை தானே…
கிருஷ்ன மூர்த்திக்கு சாரதாவின் இந்த பேச்சில் மனது ரணப்பட்டாலுமே வயதின் பக்குவத்தின் காரணமாக உடனே தன்னை தேற்றியும் கொண்டார்..
“ம் வரேன் சந்திரா..” என்ற கிருஷ்ண மூர்த்திக்கு ராம் சந்திரன்.. “ எப்போதுமே நாம இன்னு நினைத்தா வேறு ஒன்னு தான் நடக்குதுல கிட்டு..” என்று சொல்லி பேசியை வைத்து விட்டார்.
இங்கு மருத்துவமனையில் ஸ்ருதிக்கு சிகிச்சை பார்த்து கொண்டு இருக்க கிருஷ்ண மூர்த்திக்கு விடாது கிருஷ்ண மூர்த்தியிடம் இருந்து அழைப்பு…
குரு மூர்த்திக்கு தெரியும். கண்டிப்பாக ராம் சந்திரன் தன் தந்தைக்கு அழைத்து பேசி விடுவார் என்பது.. அவனுக்கு இதுவுமே தெரியும் இப்போது எல்லாம் தன் தந்தை ராம் சந்திரனை நேரிலும் பேசியிலும் பேசிக் கொண்டு இருப்பதும்..
இப்போது தான் செய்த விசயம் பேசியில் சொல்லும் விசயம் இல்லை என்பதினால், பேசியை ஏற்காது இருந்த குரு மூர்த்தி ஸ்ருதிக்கு வைத்தியம் பார்த்த அந்த மருத்துவர்…
“இப்போ அவங்க மைண்ட் ரிலாக்ஸ் ஆக இஞ்ஜக்ஷன் போட்டு தூங்க வைத்து இருக்கோம்… அவங்க தூங்கி எழுந்த பின் தான்.. அதற்க்கு அடுத்து என்ன ட்ரீட்மெண்ட் கொடுப்பது என்று மனநல மருத்துவர் உங்களிடம் சொல்லுவார்..” என்று சொல்லி விட்டு சென்றதுமே…
கணவன் ஸ்ருதியின் நிலை சொன்னதுமே அறக்க பரக்க ஓடி வந்த தாமரை… இதை கேட்டி தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்..
“என் பெண் எப்படி சந்தோஷமா வீட்டை விட்டு போனா தெரியுமாங்க…” என்று சொல்லி அழ…
மீண்டுமே கிருஷ்ண மூர்த்தியிடம் இருந்து குரு மூர்த்தியின் பேசிக்கு அழைப்பு வந்தது… இது வரை செய்தது போல அழைப்பை துண்டித்து விடுவான் என்று விசுவநாதன் நினைத்து கொண்டு இருக்க…
குரு மூர்த்தியும் விசுவநாதன் நினைத்தது போல அழைப்பை துண்டித்து விட்டான் தான்…ஆனால் அவனுமே சட்டென்று அந்த இடத்தை விட்டு சென்று விட்டதில், விசுவநாதனுக்கு புரிந்து விட்டது.. குரு மூர்த்தி தன் தந்தையிடம் பேச தான் செல்கிறான் என்ரு.. இதுவும் புரிந்தது… மகி விசயமாக தான் செல்கிறான் என்பதும். தன் மருமகன் தன் உறவையே துண்டித்து செல்வதை போலான ஒரு உணர்வு அவருக்கு.
தன் மனைவி தன் கை பிடித்து தன்னிடம் தைரியம் தேட. விசுவநாதனுக்கோ தன் தைரியமே தன்னை விட்டு செல்வது போலான உணர்வு அவருக்கு.
விசுவநாதன் நினைத்தது போல குரு மூர்த்தி தன் மாமனின் உறவை முழுமையாக துண்டித்து எல்லாம் செல்லவில்லை…
வீட்டிற்க்கு சென்ற குரு மூர்த்தி தன் தந்தையிடம் சொன்னது இது தான்…
“எனக்கு ஈஸ்வரியை பிடித்து இருக்கு… பிடித்து தான் தாலியை கட்டினேன்.. ஆனா நானுமே இன்னைக்கே கட்டினேன் என்று எதிர் பார்க்கவில்லை….அங்கு பேசும் போது உங்க மகனின் விருப்பத்தையுமே கொஞ்சம் மனசு வெச்சி பேசுங்க…” என்று சொல்லி தான் கிருஷ்ண மூர்த்தியை ராம் சந்திரன் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தது…
குரு மூர்த்தி இன்னொன்றும் சொன்னான்.. “ நானும் தான் இப்போ வரனும்.. ஆனால் இப்போ இரண்டு பக்கமும் சரியில்லை… கண்டிப்பா நான் ராம் சந்திரன் அங்கிள் வீட்டிற்க்கு போவேன்.. இப்போ நிலமை சரியில்லாததால் நீங்க மட்டும் போங்க.” என்று சொன்ன போது..
கிருஷ்ண மூர்த்தி.. “ என்ன இரண்டு பக்கமும் சரியில்ல.. சந்திரா வீட்டில் கோபப்பட்டு பேசுவாங்க..” எனும் போதே குரு மூர்த்தி இடையிட்டு.
“ப்பா ஸ்ருதி நிலமை அங்கு சரியில்ல. மாமா கூட நான் அங்கு இருக்கனும்..” என்றவனை கிருஷ்ண மூர்த்தி முறைத்து விட்டு தான் சென்றது.
குரு மூர்த்தி மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவன். ஒன்றும் பேசாது கை கட்டி அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு விட்டான்..
இங்கு இடைப்பட்ட நேரத்தில் தாமரை… தன் கணவனிடம். “ நல்லா போனவளுக்கு எப்படி இப்படி ஆச்சி..?” என்று கேட்டதற்க்கு விசுவநாதன் அங்கு நடந்ததை அனைத்தையுமே தன் மனைவியிடம் சொல்லி விட்டு இருந்தார்.
தாமரைக்கு முதலில் அதிர்ச்சி தான்.. “ என்ன சொல்றிங்க குரு அந்த பெண் கழுத்தில் தாலி கட்டிட்டானா…? எப்படிங்க..?” என்று அதிர்ச்சியாகி தான் விட்டார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து தாமரையின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பித்து விட்டது..
மனைவியின் இந்த முக மாற்றத்தை கண்ட விசுவநாதன்.. “ என்ன..? ” என்று கேட்டதற்க்கு…
தாமரை… “இப்போ அவங்க குடுமி நம்ம கையிலேங்க… மகி கூட குரு வாழனும் என்றால் நம்ம பெண்ணோட அவங்க வீட்டு பையன் சித்தார்த் வாழனும்… நாம சொல்லலாம்… குரு இதுக்கு தானுங்க அந்த பொண்ணு கழுத்தில் தாலியை கட்டி இருப்பான்.
நாம் கூட இது என்ன…? இப்படி குருவுமே ஸ்ருதி வாழ்க்கையை பத்தி கவலை படாது எனக்கு என்ன..? என்று இருக்கானே என்று அவனை பத்தி தப்பா நினச்சிட்டேங்க.. மாப்பிள்ளை நம்ம பொண்ணு கூட வாழ்ந்தா போதுமுங்க.. நம்ம பொண்ணுக்கு எல்லாம் சரியாகிடும்..” என்று பேசிக் கொண்டு செல்லும் மனைவியை பார்த்து கொண்டு இருந்த விசுவநாதன் இப்போதும் குருவை பத்தி நீ தப்பா நினச்சிட்டு இருக்க என்று சொல்ல தான் நினைத்தார்…
ஆனால் சொல்லவில்லை. அவருக்கே… அடுத்து என்ன என்று மண்டை குழம்பி போய் இருக்கிறார்.. இதில் மனைவி வேறு.. பெண்ணுக்கு இப்படி ஆகிடுச்சே என்று சொல்லி அழும் போது அவருக்கு இன்னுமே தான் வேதனையாக இருந்தது.. சரி ஏதோ நினைத்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டார்.
ஆனால் குரு மூர்த்தி உடனே திரும்ப வந்து விடுவான் என்று விசுவநாதன் நினைக்கவில்லை… அதில் அவருக்கு கொஞ்சம் நிம்மதி ஆனது.. நம்மை முற்றிலுமாக மருமகன் தவிர்க்க வில்லை என்று…
ஆனால் தாமரை குரு மூர்த்தியை பார்த்ததும் அவன் அருகில் செல்ல. மனைவி என்ன பேசுவாள் என்பது விசுவநாதனுக்கு புரிந்து விட்டது….
முதலில் மனைவியை அதை பற்றி பேச விடாது தடுக்க தான் பார்த்தார் விசுவநாதன்.. பின் என்ன நினைத்தாரோ… பேசட்டும் குரு மூர்த்தி என்ன நினைக்கிறார் என்று அவருக்குமே தெரிய வேண்டி இருந்தது..
அதனால் மனைவி பேசுவதை தடுக்காது விட தாமரையும். குரு பக்கத்தில் அமர்ந்து கொண்டு மருமகனின் கை பிடித்து கொண்டவள்..
“ உண்மையில் உன் மாமா சொல்லுவார். நம்ம எப்போதுமே குரு கை விட மாட்டான். நான் போனா கூட நம்ம பெண் உன்னை எப்படி பார்த்துப்பா என்று எனக்கு தெரியல. ஆனா குரு உன்னை நல்லப்படியா பார்த்துப்பான்.. என்று.. எனக்குமே தெரியும் குரு நீ உன் மாமா மீது எத்தனை பாசம் வைத்து இருக்கேன் என்று. ஆனா இன்னைக்கு நீ செய்தது…? அதுவும் உன் வாழ்க்கை பத்தி கூட யோசிக்காது…. உன் மாமா அன்னைக்கு அவர் தங்கை உன் அம்மா விரும்பிய வாழ்க்கை கிடைக்க.. என்ன என்னவோ செய்தார் தான்.ஆனால் அவர் வாழ்க்கையை அதில் வைக்கவில்லை. ஆனால் நீ…” என்று தாமரை இத்தனை பேசி கூட பாவம் குரு மூர்த்திக்கு தன் அத்தை என்ன சொல்ல வருகிறார் என்பது அவனுக்கு புரியவில்லை..
சத்தியமாக குரு மூர்த்தி மகளின் நிலையை பார்த்து அவருக்குமே ஏதாவது ஆகி விட்டதோ என்று கூட அவன் பயந்தும் போய் விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்..
அதில் பிடித்து இருந்த தன் அத்தையின் கரத்தின் மீது தன் மற்றொரு கரத்தை வைத்தவன்.
“அத்த ஸ்ருதிக்கு ஒன்றும் இல்ல.. சரியாகி விடுவாள். ஒரு இரண்டு மூன்று கவுன்சில் கொடுத்தா போதும்..” என்று அவன் வேறு நினைத்து தன் அத்தைக்கு தைரியம் கொடுக்க.
ஆனால் அவனின் அத்தை அடுத்து பேசிய பேச்சில், இவங்களுக்கு எல்லாம் ஒன்னுமே ஆகாது.. இவங்களால் தான் மத்தவங்க எல்லோருக்கும் ஆகும் என்பதை நிருபிப்பது போன்று..
“ எனக்கு தெரியும் குரு நீ நம்ம ஸ்ருதிக்கு ஒன்னும் ஆக விட மாட்ட என்று… சித்தார்த் வந்தா போதும் நம்ம ஸ்ருதிக்கு இந்த கவுன்சிலிங் கூட தேவைப்படாது..” என்ற பேச்சில் சித்தார்த் தான் மொத்தமா முறித்து கொண்டு விட்டாங்கலே.. என்று அவன் நினைக்கும் போதே…
“இப்போவே போன் போட்டு பேசு குரு.. சித்தார்த் இப்போ இங்கு வந்தா தான்… உங்க வீட்டு பெண்ணை நான் மனைவியா ஏத்துப்பேன்..” என்று இதை சொன்ன போது தான் குரு மூர்த்திக்கு தன் அத்தை எந்த பக்கம் வருகிறார் என்பதே அவனுக்கு புரிந்தது..
தன் அத்தையின் இந்த பேச்சில் குரு மூர்த்தியின் பார்வை சட்டென்று தன் மாமனிடம் தான் சென்றது.. ஐடியா அவருடையதா என்று..
ஆனால் கூடவே இருந்த குரு மூர்த்திக்கு புரிந்து விட்டது… தன் அத்தையின் திட்டம் இது என்பது.. கூடவே தன் மாமன் தன் மனதை தெரிய வேண்டி தான் மனைவியை பேச விட்டு பார்த்து கொண்டு இருப்பது என்பதையும்..
இந்த சமயம் குரு மூர்த்தி இதை பேச கூடாது என்று தான் நினைத்து இருந்தான். ஸ்ருதியின் மீது அவனுக்கு இப்போதுமே அந்த பாசம் இருக்கிறது தான்.
அதனால் தான் வீட்டிற்க்கு சென்றவன் மீண்டும் இங்கு வந்ததும்… ஸ்ருதியின் நிலை சிறிது சீராகட்டும்.. பின் பேசி கொள்ளலாம். அவனுக்குமே மகியோடான இந்த திருமணம். இது திருமணமா. அவனுக்கே தெரியாத நிலை தான்…. மகியின் பக்கம் இருந்து வரும் பேச்சில் இருந்து தான் அவனுக்குமே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே யோசிக்க வேண்டி உள்ளது..
அதனால் அந்த பேச்சி இப்போது வேண்டாம் என்று நினைத்து கொண்டு இருந்தவன் தாமரையின் இந்த திட்டத்தில், குரு மூர்த்தி தீர்த்து சொல்லி விட்டான்…
“அத்தை சித்தார்த் ஸ்ருதியோடான இந்த பிரச்சனையையும், நான் மகி கழுத்தில் தாலி கட்டியதையும் முடிச்சி போடாதிங்க…” என்று.
தாமரைக்கோ… இவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாது..
“அப்போ அந்த பொண்ணு கழுத்தில் எதுக்கு குரு தாலி கட்டின…. உங்க மாமா அவருக்கு தெரிந்த பையனை தானே அந்த பெண்ணை கல்யாணம் செய்ய நினைத்து இருந்தாரு…” என்று தன் கணவன் தன் திட்டத்தை சொல்லி யாரிடமும் சொல்லாதே… குருவையும் சேர்த்து தான் என்று சொன்னதை மறந்து சொல்லி விட்டார்..
அத்தையின் இந்த பேச்சில் சிரித்த குரு மூர்த்தி… “ அதனால் தான் அத்த நான் தாலி கட்டினேன்..” தன் மாமனை பார்த்த வாறே தான் இதை சொன்னது.