Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yennai kondaada pirandhavan...19...1

  • Thread Author
அத்தியாயம்…19…1

திரும்பவும் ஸ்ருதியின் வாசம் மருத்துவமனையில் ஒரு வாரம் கடந்த பின் அன்று தான் வீடு வந்து சேர்ந்தது… குரு மூர்த்தியுமே தினமும் மருத்துவமனைக்கு வந்து ஸ்ருதியை பார்த்து விட்டு தான் செல்வது..

வருவான் ஸ்ருதியை பார்ப்பான் செல்வான்.. தன் மாமனிடமும், அத்தையிடமும் பேசவும் இல்லை.. பேச முயலவும் இல்லை… இப்போது விசுவநாதனுமே தன் மருமகனிடம் பேச முயற்சி செய்யவில்லை… காரணம் அவள் மகளின் நிலை தான்.. விசுவநாதனுக்கு அந்த ஒரு வாரமும் தன் மகளை தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாது போல் தான் ஸ்ருதியின் செயல்கள் இருந்தது…

தன் தொழிலானது மதுபான கடையில் தினம் ஒரு பிரச்சனை வரும் போது… ஒவ்வொன்ருக்கும் அவர் போகவில்லை என்றாலுமே, இது செய். அது செய்… என்று எது எதற்க்கு யார் யார் சென்றால் சரியாக இருக்கும் என்று கணித்து அனுப்பி விடுபவர்..

இப்போது மதுபானகடையில் இருந்து இது போல் பிரச்சனை என்று சொல்லி அழைத்தால் போதும், அழைத்தவரிடம்..

“இத்தனை ஆண்டுகள் வேலை செய்து இவ்வளவு பணம் வாங்குறிங்க.. இதுக்கு எல்லாமே நானே வந்தா தான் ஆச்சின்னா. நீங்க எல்லாம் எதுக்கு…? உன்னால் பிரச்சனையை தீர்த்து வைக்க முடிந்தால் பாரு இல்லேன்னா அதை இழுத்த் மூடி விட்டு வீட்டிற்க்கு போய் தூங்கு..” என்று கத்தி விட்டு.. தன் தொழிலையே மறந்தவருக்கு, குரு மூர்த்தியிடம் பேச அவரின் மனநிலை சரியாக இல்லாததினால் அந்த சமயம் பேசாது.. இருந்தார்…

மருத்துவர் ஸ்ருதி தூங்கி எழுந்தால் தான் என்ன என்று நிலவரம் தெரியும் என்று சொன்னவர்.. சொன்னது போல தூங்கி எழுந்த பின்னும் ஸ்ருதியின் நிலை சொல்லிக் கொள்ளும் படி இல்லை…



மனநலமருத்துவர் வந்து பார்த்து ஸ்ருதியிடம் பேசி என்று எதிலுமே துளி கூட முன்னேற்றம் காணாது தான் ஸ்ருதி மருத்துவமனையில் இருந்தது..

தூங்கும் போது மட்டும் தான் ஸ்ருதி அமைதியாக இருந்தது.. எழுந்து விட்டால் போதும் பேய் பிடித்தது போல தான் பேச்சு.. ம் பேச்சு என்பது சாதாரண வார்த்தை. கத்தல் கூச்சம் கலாட்டா என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்…

தூங்குவது கூட ஊசி போட்டால் தான் தூங்குவது. இல்லை என்றால் இரண்டு நாள் ஆனாலுமே ஒரு பொட்டு தூக்கம் கண்ணில் இல்லாது விழித்து கொண்டு தான் இருப்பாள்..

மருத்துவரே.. “ நான் என் சர்சீஸ்சில் இது போலான ஒரு கேசை பார்த்தது இல்லை..” என்று சொன்னார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்..

மருத்துவர் இந்த வார்த்தை சொன்ன போது கிருஷ்ண மூர்த்தியுமே அங்கு தான் இருந்தார்.. என்ன தான் கிருஷ்ண மூர்த்திக்கு தன் தங்கை மீதும், அவள் கணவன் விசுவநாதன் மீதும் மனதில் ஆயிரம் மனஸ்தாபங்கள் இருந்தாலுமே, தங்கை பெண் என்ற போது ஸ்ருதிக்காக அவர் மனது பதற தான் செய்தது..

மகன் போல் தினம் மருத்துவமனைக்கு வந்து ஸ்ருதியை பார்க்கவில்லை என்றாலும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து பார்த்து விட்டு தான் சென்றது. மகனை போலவே யாரிடமும் பேசாது தூங்கி கொண்டு இருக்கும் ஸ்ருதியை பார்த்து விட்டு செல்வார்..

அப்போது வந்த போது தான் மருத்துவர் ஸ்ருதியை பற்றி இப்படி சொன்னது…

இந்த வார்த்தைக்கு கிருஷ்ண மூர்த்தி தன் தங்கையிடம் பேசினார்..

“இதுக்கு தான் அவள் சின்ன வயசா இருந்த போதே ரொம்ப அடம் பிடிக்கிறா கொஞ்சம் கண்டித்து வளர்க்க பாரு என்று சொன்னேன்… அதுக்கு என் புருஷனை பிடிக்கல.. அதனால ஸ்ருதி செய்யிறது எல்லாமே தப்பா தெரியுது என்று என் வாயை தான் அடைத்த. பொருள் கேட்டா வாங்கி கொடுத்துடலாம்.. ஆனா இவள் கேட்பது..” என்று கேட்டு விட்டு கிருஷ்ண மூர்த்தி நிறுத்தி விட்டார்..

ஆனால் அவரின் தங்கை தாமரையோ… “ இப்போ என்ன ண்ணா.. என் பொண்ணு அடுத்த பெண் புருஷனையா கேட்கிறா.. அவள் புருஷனை தானே கேட்கிறா… நீயும் உன் மகனும் நினைத்தால் கண்டிப்பா அவள் கூட அவள் புருஷனை சேர்த்து வைத்து விடலாம்..” என்று இப்போதுமே இப்படி பேசும் தன் தங்கையிடம் பேசுவது இனி வீண் என்று நினைத்து கொண்டவர் தங்கையின் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாது சென்று விட்டார்..

மருத்துவருமே… “சித்து சித்து என்று சொல்றாங்க யார் அவர் ..?” என்று கேட்டவர் அவர் கூட கொஞ்சம் இருந்தா உங்க மகள் மனது கொஞ்சம் தெளிய கூடும் என்று விட…

தாமரை தன் கணவரிடம்… “ நான் போகிறேன் ..” என்று சொன்ன மனைவியை கூட தடுத்து நிறுத்தி விட்டார் விசுவநாதன்…

“நம்ம பொண்னு நிலை தான் என்னங்க…?” என்று கேட்ட மனைவிக்கு பதில் சொல்லும் நிலையில் கூட விசுவநாதன் இல்லை. ஏன் என்றால் இதற்க்கு என்ன பதில் என்று அவருகே தெரியவில்லை.

வயதில் முறுக்கேறி.. தன் தங்கைக்கு பிடித்தவனை அவளுக்கு கட்டி வைக்க அத்தனை தகிடுத்தனம் செய்து பிடித்தவனை திருமணம் செய்து வைத்த விசுவநாதனால்..

இப்போது அறுபது வயதை தொட இருக்கும் விசுவநாதனால் செய்ய முடியவில்லை என்று சொல்வதை விட செய்ய தயக்கம்..

ஆம் தயக்கமே தான்… சாரதாவை வைத்து தன் தங்கைக்கு பிடித்தவனை திருமணம் செய்து வைத்தது போல் தான் மகியை வைத்து தான் இப்போது ஸ்ருதியை சித்தார்த்தோடு சேர்க்க நினைத்தது..

குரு மூர்த்தி விலகி நின்ற போது கூட தான் அவன் தந்தைக்கு செய்த அந்த செயலினால் தான் விலகி நிற்கிறான் என்று நினைத்து கொண்டவருக்கு, இப்போது மருமகன் மகியின் மீதான ஈடுப்பாட்டால் தான் தன்னை நெருங்காது விலகி நிற்கிறான் என்று புரிந்து கொண்ட பின்.. இனி ஸ்ருதி வாழ்க்கைக்காக மகியை பணையம் வைக்க அவர் விரும்பவில்லை.

அப்போது இதன் முடிவு தான் என்ன.? அதற்க்கு தீர்வு கிடைக்காது தான் இதோ ஸ்ருதியை வீட்டிற்க்கு அழைத்து வந்து விட்டனர்.. தூங்கி கொண்டு இருக்கும் போது தான்..

வீட்டை பார்த்தாலாவது அவளின் மனநிலையில் கொஞ்சம் மாற்றம் வருமா என்ற ஒரு எதிர் பார்ப்பிலும் தான் வீட்டிற்க்கு அழைத்து வந்தது..

வீட்டிற்க்கு வந்த பின் இரண்டு மணி நேரம் சென்று ஸ்ருதியும் எழுந்தாள் தான்… ஸ்ருதி வீட்டிற்க்கு வந்த விசயமும்.. பின் அவளின் நிலை அனைத்தும் தெரிந்து தான் வதனியுமே ஸ்ருதியை பார்ர்க்க அவள் வீட்டிற்க்கு வந்தது.

அனைத்தும் சொல்லி வர வழைத்தது நம் குரு மூர்த்தி தான்.. ஸ்ருதிக்கு கல்லூரியில் படிக்கும் போது கொஞ்சம் நெருங்கிய தோழி என்றால் அது வதனி மட்டும் தான்… அவள் எழும் போது வதனி இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைத்து தான் குரு மூர்த்தி வதனியை வர வழைத்தது.. கூட குரு மூர்த்தியுமே தான் அங்கு இருந்தான்…

அவள் முழித்ததுமே தன் எதிரில் அமர்ந்து இருந்த வதனியை தான் ஸ்ருதி பார்த்தது… பார்த்த உடனே எல்லாம் வதனியை கட்டிப்பிடித்து பேசி.. என்று எல்லாம் மகிழவில்லை..

வதனியையே சிறிது நேரம் பார்த்து விட்டு தான் ஸ்ருதி… “ என்ன இங்கே.?” என்று கேட்டவள் எங்கே என்று அப்போது தான் தான் இருக்கும் இடத்தை பார்த்து பின் வீடா…?” என்று கேட்டது..

பேச்சு கத்தி இல்லை என்றாலுமே, பேச்சில் ஒரு நிதானம் இல்லை.. யோசித்து யோசித்து பேசுவது போல் இருந்தது.. அதே போல ஸ்ருதியின் பார்வை வதனியிடம் பேசும் போது அவள் முகத்தை பாராது அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டே தான் கேட்டது.

பெண் எழுந்த உடனே குடிக்க சத்துபான கஞ்சியை தயாராக கையில் வைத்து கொண்டு இருந்த தாமரை மகளின் கையில் கொடுத்தவர்.

“இப்போ தான் உனக்கு உடம்பு சரியில்ல என்று கேள்வி பட்டு உன்னை பார்க்க வந்து இருக்கா..?” என்று வதனியிடம் கேட்ட கேள்விக்கு தாமரை மகளுக்கு பதில் அளித்தார்..

“ஏன் அவள் பதில் சொல்ல மாட்டாளாமா..?” என்று கேட்டுக் கொண்டே அன்னையின் கையில் இருந்து அந்த பானத்தை வாங்கிய ஸ்ருதியின் கையில் அத்தனை நடுக்கம்..

அதனால் தாமரை அதை மகளின் கையில் கொடுத்த பின்னும் தன் கையை மகளின் கை மீது அணைவாக வைத்து கொண்டவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடி வந்தது..

அந்த கண்ணீரை துடைக்க கூட தன் மகளின் கை மீது இருந்த கையை தாமரை விலக்கி கொள்ளவில்லை.. கஞ்சி கொஞ்சம் சூடாக இருந்தது.. மகளின் கை நடுக்கத்தில் கஞ்சியை தன் மீது கொட்டி கொள்வாளோ என்ற பயத்தில்…

வதனிக்குமே ஸ்ருதியை பார்த்து அதிர்ச்சி தான்.. கருத்து போய் கண்களை சுற்றி கருவளையம் விழுந்து… கன்னம் கொஞ்சம் ஒட்டி போய் என்று இவள் ஸ்ருதி தானா என்று நினைக்கும் அளவுக்கு தான் ஸ்ருதியின் தோற்றம் இருந்தது..

அதனால் ஸ்ருதியின் இந்த பேச்சை பெரியதாக எடுத்து கொள்லவில்லை என்று சொல்வதை விட கவனிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

அதில் ஸ்ருதி தாமரையிடம்.. “ஏன் அவள் சொல்ல மாட்டாளா…?” என்று கேட்ட பின்னும் கூட பதில் சொல்லாது தன்னையே அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தவளை பார்த்த ஸ்ருதியின் பார்வை இப்போது கோபமாக மாறியதை கவனித்து விட்ட தாமரை மகளின் அடுத்த செயல் எண்ணவாக இருக்கும் என்று தெரிந்தவராக கஞ்சியை மகளின் கையில் கொடுக்காது இழுத்து கொண்டவர்.

வதனியிடம்.. “அவள் கேட்டதுக்கு பதில் சொல்லி விடம்மா….” என்று ஒரு மாதிரி பதட்டமாக சொன்ன பின் தான் ஸ்ருதி தன்னிடம் என்ன கேட்டாள் என்று தாமரையிடம் கேட்ட பின்.. ஸ்ருதியிடம்.

தாமரை சொன்னதே… “ இல்ல உனக்கு உடம்பு சரியில்லை என்று தான் பார்க்க வந்தேன்..” என்று பேச்சு இருந்தாலுமே வதனியின் பார்வை இன்னுமே ஸ்ருதியை அதிர்ச்சியுடன் தான் பார்த்து இருந்தது.. ஒரே வாரத்தில் பத்து வருடம் வயது கூடியது போலான தோற்றம் தெரிந்தது ஸ்ருதியிடம்…

வதனியின் அந்த பார்வையில் “ஏன் என்னையே பார்த்துட்டு இருக்க….?” என்று ஸ்ருதி கேட்டதற்க்கு வதனி தன் மனதில் நினைத்தை சொல்லி விட்டாள் பாவம்..

குரு மூர்த்தி ஸ்ருதியின் தற்போதைய நிலையை தெளிவாக சொல்லவில்லையா..? இல்லை வதனி குரு மூர்த்தி சொன்னதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லையா…? என்று புரியவில்லை..

ஆனால் வதனி பழைய ஸ்ருதி என்பது போலவே தான் நினைத்ததை சொல்லி விட்டாள்..

அவ்வளவு தான் இது வரை பாவமான தோற்றத்தில் இருந்த ஸ்ருதியின் பார்வை செயல் அனைத்துமே நொடியில் மாறி விட்டது…

“நான் கிழவி போல உனக்கு தெரியிறேன்னா..? என்று ஆக்ரோஷமாக கேட்டவள் பின்..

“ஆமா நீ ஏன் என் சித்து வேலை பார்க்கும் காலேஜிலேயே வேலைக்கு போன?” என்று கேட்ட ஸ்ருதியின் முக பாவனை தோற்றத்தில் வதனி பயந்து போய் விட்டாள்.. அதில் அமர்ந்து இருந்தவள் எழுந்து நின்று கொண்டவளாக..

“நா..ன் பி.எச்.டி படிக்… கனும்.. அதுக்கு உதவியா இருக்கும்.. என்று.. உனக்கும் தான் தெரியுமே ஸ்ருதி..” என்று திக்கி திணறி சொன்னவளின் பேச்சையே பிடித்து கொண்ட ஸ்ருதி.

“ஓ பி.எச் டியா..? சித்து கூட பி.எச்.டி தான் முடிச்சார்லே… அதுவும் அவர் எடுத்த அதே சப்ஜெட்டில் தான் நீயுமே பி.எச்.டி பண்ண போற.அது தானே.. அப்போ உனக்கு சந்தேகம் என்று என் சித்து முன்னே முன்னே போய் நிற்ப தானே…?” என்று ஆவேசமாக கேட்டவளை இப்போது பயந்து போய் பார்த்த வதனி…

“என்ன ஸ்ருதி இப்படி சொல்ற…? அவர் உன் ஹஸ்பெண்ட் நான் எப்படி…?” என்று வதனி சொல்லும் போதே..

“ஓ என் புருஷன் அதனால நீ பார்க்க மாட்ட…?” என்று வதனியை பார்த்து ஒரு மாதிரியாக கேட்ட ஸ்ருதி..

தன் கழுத்தை காட்டி… “அவர் கட்டின தாலி இப்போ என் கழுத்தில் இல்ல… அவர் தாலி கட்டினதுக்கு எந்த கவர்மெண்ட் ப்ரூப் இல்ல… இப்போ நீ பார்க்கலாம் தானே…” என்று கேட்ட ஸ்ருதியிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாது இப்போது பேந்த பேந்த முழித்து கொண்டு நின்று விட்டாள் வதனி..

தாமரை தான்… “என்ன ஸ்ருதி அவள் உன் பிரண்ட்… உனக்கு உடம்பு சரியில்ல என்றதும்.. உன் மீது இருக்கும் அக்கறையில் தானே உன்னை பார்க்க வந்தது… இப்படி பேசலாமா ..?” என்று கேட்டதுக்கு..

ஸ்ருதி.. “அவள் என் பிரண்ட் தான்.மா.. ஆனா இவளுக்கு என் சித்து மேல ஒரு கண் இருந்ததும்மா.. நான் ஒன்னும் பொய் சொல்லலே.. நீ அவளையே கேட்டு பாரேன். என் சித்துவை இவள் சைட் அடிச்சத… கேளு கேளு இப்போ என் முன்ன நீ கேளேன்..” என்று ஆக்ரோஷமாக கத்தியவளின் குரல் நொடியில் மாறி.

வதனியிடம்… “ நீயுமே சித்துவை சைட் அடிச்ச தானே. உண்மையை சொல் என் அம்மா கிட்ட உண்மையை சொல்… நான் உன்னை அடிக்க மாட்டேன்.. உண்மையை சொன்னா நான் உன்னை அடிக்க மாட்டேன்…” என்று சொல்லி பக்கத்தில் பால் ஊற்றி இருந்த ப்ளாஸ்க்கை கையில் எடுத்து கொண்டவளின் செயலை பார்த்து வதனி வெட வெடத்து போய் விட்டாள்..

குரு மூர்த்தி இப்போது… “ஸ்ருதி என்ன இது.?” என்று அவளை அதட்டியவன். வதனியிடம்..

“சாரிம்மா நீ வீட்டிற்க்கு போ…” என்று அனுப்பி வைக்க பார்க்க.

ஸ்ருதியோ.. “நீ போயிடுவீயா நீ என் கிட்ட பதில் சொல்லாது போயிடுவீயா டி…” என்று வெறி கொண்டவள் போல கத்தி கொண்டு போக.

இப்போது தாமரையே. “சொல்லிடும்மா சொல்லிடு..” என்று அவருமே பயந்து போய் விட்டார்.. ஏன் என்றால் மகளின் இன்னொரு கை அவளின் ஆடையில் இருந்தது.. இப்போது எல்லாம் கோபம் என்றால் அவளின் ஆடையை கலைய தான் அவள் முயல்கிறாள்..

வதனியோ மிகவும் சங்கடத்துடன்.. “ “எல்லோரும் தானே சைட் அடிச்சோம்.. ஆனா நீ சித்தார்த் சாரை லவ் பண்றேன் என்றது நான் அவரை பார்க்கல தானே… இது காமன் தானே ஸ்ருதி.. சார் நல்லா இருந்தா பார்ப்பது தானே…”

தாமரை குரு மூர்த்தி இருக்க இப்படி பேசுவது வதனிக்கு சங்கடத்தை கொடுத்தது.. இங்கு வந்து இருக்க கூடாதோ.. என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே ஸ்ருதி..

“ஆமா ஆமா. நம்ம காலேஜ் எல்லா பொண்ணுங்களும் பார்த்தாளுங்க தான்.. வெட்கம் கெட்டதுங்க..” என்று ஸ்ருதி சொல்லும் போது வதனிக்கு அவள் தன்னை சொல்வது போல அவமானமாக உணர்ந்தாள்..

தொடர்ந்து.. “இப்போ தான் சித்து நான் உன் கூட கல்யாணம் பண்ணது செல்லாது என்று சொல்லிட்டாரே… அவர் கல்யாணம் செய்ய நினைத்த அந்த மகி கழுத்தில் இவர் தாலி கட்டிட்டாரு.” என்று குரு மூர்த்தியை காட்டி சொன்னவள்..

“இது எல்லாம் தெரிந்து இப்போ நீ ட்ரைப் பண்ண நினைக்கிற அப்படி தானே.. இதோ இதோ..” என்று தன் உடம்பையும், முகத்தையும் காட்டி..

“எனக்கு வயசு ஆகிடுச்சி என்று சொல்லி சித்துவ உன் பக்கம் இழுக்க தானே என்னை நீ பார்க்க வந்தது…” என்று சொன்னவள் பின் ஏதோ யோசித்து..

“ஏய் நான் இது போல இருப்பதை போட்டோ எடுத்து தானே வெச்சி இருக்க. அதுக்கு தானே வந்ததே…. துரோகி துரோகி.” ” என்று கத்தியவள் வதனி கையில் இருந்த கை பேசியை பிடுங்கும் முயற்சியில் இறங்க.. குரு மூர்த்தி தான் ஸ்ருதியின் பிடியில் இருந்து வதனியை விடுவித்து விட்டவன்.

வதனியிடம்.. “ நீ போம்மா.” என்று சொன்னது தான் வதனி யாரையும் திரும்பி கூட பாராது அந்த வீட்டை விட்டு ஓடி விட்டாள்.

இவை அனைத்துமே ஸ்ருதியின் அறை வாயிலில் இருந்து பார்த்து கொண்டு இருந்த விசுவநாதன் முகத்தில் ஜீவனே இல்லாது பொய் இருந்தவரிடம்..

“மாமா..” என்று குரு மூர்த்து அவர் தோள் பற்ற… அதில் அவனை பார்த்து விசுவநாதன்..

“உன் கிட்ட பேசனும் குரு…” என்று சொன்னதற்க்கு.

குரு மூர்த்தியும்.. “நானும் தான் மாமா…” என்றான்..
 

grg

Member
Joined
Oct 18, 2024
Messages
15
இன்னும் இந்த தாமரை திருந்தல..., சுருதி பாவம் தான்....விஸ்வநாதன் குரு கிட்ட என்ன பேச போறாரோ.... Nice epi
 
Well-known member
Joined
Jul 13, 2024
Messages
191
Arumai. Viswanathan, you need to see this for all your mistakes. What are they going to talk? Please give the next epi soon ma.

Mahi, if you accept Guru, cut his relationship with Viswanathan. That will be his next punishment.
 
Last edited:
Active member
Joined
May 12, 2024
Messages
223
Thirunthadha jenmam intha Thamarai…
Visu inimel sari uruppdiya irukkanum…
Eppadiyum Sharadha mannikka porathilla…

Guru Magi unakku venum na ne un mama family vittu thalli nirkkanum…
 
Top