அத்தியாயம்…20..2
அவர்கள் வசிக்கும் இடத்தில் அது தான் பெரிய சூப்பர் மார்க்கெட்…. அன்று ஞாயிற்றுக்கிழமை… சித்தார்த்துக்கு கல்லூரி விடுமுறை என்பதினால் மகிக்கு துணையாக அவனுமே கூட வந்து இருந்தான்…
சாரதாவுக்கு ஆஞ்சியோ செய்ததில் இருந்து வீட்டு பொறுப்பை மகியுமே பார்த்து கொள்வதால், வீட்டில் என்ன என்ன இருக்கிறது… இல்லை என்பது அவளுக்கே தெரியும்..
அதோடு சமையல் செய்ய வைத்து இருந்த பெண்மணி சமைக்கும் உணவு நன்றாக இல்லை என்பதை விட, அவர் ஆரோக்கியமாக சமைக்கவில்லை என்பது தான் உண்மை..
உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று நிறைய எண்ணை விட்டு என்று செய்வது..எளிதான உணவாக உருளை கிழங்கு வறுவல்.. என்று செய்து விடுவதும்.. இவர்கள் கீரை வாங்கி வைத்தாலுமே, அதை செய்யாது “இது நாளை செய்கிறேன்..” “ நாளை மறு நாள் செய்கிறேன்” என்று சொல்லி சொல்லி அந்த கீரை அழுகியே போய் விடும்..
இது போல ஒரு முறை இல்லை மூன்று முறை நடந்து விட்டதால்,
அத்தைக்கும் வயதான மாமாவுக்கும் சத்துள்ள உணவு வேண்டும் என்று மகியே பாதி சமையலை முடித்து விட.
ராம் சந்திரன் தான்.. “நானும் இப்போ வீட்டில் தானே இருக்கேன் சாரும்மா .. சமையல் செய்யிறவங்களை நிறுத்திடு.. மேல் வேலைக்கு மட்டும் ஆள் வைத்து கொண்டால் போதாதா…? அவங்களையும் வைத்து கொண்டு நம்ம மகி தான் சமைக்கிறாள்..” என்று மனைவியிடம் சொல்ல.
சாரதாவுமே கணவன் சொல்வது உண்மை தானே என்று… அந்த சமையல் செய்ய வைத்த பெண் மணியை நிறுத்தி விட்டதில், இப்போது சாரதாவும், மகியுமே தான் செய்வது..
ராம் சந்திரன் கீரை ஆய்ந்து தருவது.. பூண்டு உரித்து கொடுப்பது என்று உதவி செய்ய சமையல் செய்வது என்பது கடினமாக இல்லாது எளிதாகவே முடிந்து விடுகிறது.. அதோடு உணவை ஆரோக்கியமான உணவாக தான் சமைக்கிறோம் சாப்பிடுகிறோம் என்ற மனநிறைவும் ஏற்படுகிறது..
இதோ இன்று ஞாயிறு. அதோடு மாதத்தின் முதல் வாரம் என்பதினால், வீட்டில் பாதி மளிகை பொருட்கள் காலியாகி விட்டது.. அதோடு தரை துடைக்கும் லிக்வெட்.. சோப்பு என்று ஒரு சில பொருட்களும் தேவைப்பட தன் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்பும் சமயத்தில் தான் சித்தார்த்..
“நானும் வரேன்.” என்று சொல்லி காரை எடுத்து விட.. இதோ இருவரும் அந்த சூப்பர் மார்க்கெட்டில் தேவையான பொருட்களை எடுத்து கொண்டு பில் போடும் போது தான் சித்தார்த்துக்கு ஷேவிங் க்ரீம் தன்னுடையது காலியாகி விட்டது என்பது அவனின் நியாபகத்தில் வந்தது..
ஞாயிறு என்பதினால் பில் போடும் இடத்தில் க்யூ.. அதனால் மகியிடம்… “மகி நீ வரிசையில் நில்.. நான் நாம பில் போடும் சமயத்திற்க்குள் நான் ஷேவிங் க்ரீமை எடுத்து கொண்டு வந்து விடுகிறேன்… “ என்று சொல்லி விட்டு சென்று விட..
மகியுமே பில் போடும் வரிசையில் நின்று கொண்டு இருந்த சமயம் தான் மகி அங்கு குரு மூர்த்தியை பார்த்தது… குரு மூர்த்தி தன்னை பார்த்தானா…? என்று தெரியவில்லை..
ஏன் என்றால் அந்த சூப்பர்மார்க்கெட் முதலாளியிடம் ஏதோ தீவிரமாக பேசி கொண்டு இருந்தவன். அந்த சூப்பர் மார்க்கெட் பெயர் பலகையை காட்டி ஏதோ சொல்லி கொண்டும் இருந்தான்..
முதலில் மகி குரு மூர்த்தியை எதேச்சையாக தான் பார்த்தாள்.. பின் தன் பார்வையை அவனிடம் இருந்து திருப்பிக் கொண்டவள்.. சிறிது நேரம் கழித்து முடியை காதில் ஓரம் ஒதுக்கிய வாறு… பார்த்தவள்..
அப்போதும் குரு மூர்த்தி தன்னை பார்க்கவில்லை என்பது தன் பக்கம் திரும்பாது இப்போது அவன் முதுகை மகியின் பக்கம் திருப்பிய வாறு இன்னுமே தீவிரமாக தன் முன் நின்று கொண்டு இருந்த அந்த சூப்பர் மார்க்கெட் முதலாளியிடம் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்த மகிக்கு…
இப்போது சந்தேகம் உண்மையில் இவன் நம்மை பார்க்கவில்லையா…? இல்லை பாரக்காது போல நடந்து கொள்கிறானா..? என்று.
காரணம் இந்த பத்து நாளில்… அதாவது சரியாக சொல்வது என்றால் தாமரை தங்கள் வீட்டிற்க்கு வந்து சென்ற இந்த பத்து நாளில் குரு மூர்த்தியை ஐந்து முறை பார்த்து விட்டாள்..
அந்த ஐந்து முறையுமே… குரு மூர்த்தி இவளை பார்க்கவில்லை.. இதே போல் தான் யாரோ ஒருவரிடம் பேசுவது போலவும் பின் செல்வது போலவும்.. இவள் மட்டுமே தான் அவனை பார்க்கிறாள்..
ஒரு முறை இரண்டு முறை என்றால் பரவாயில்லை.. எதேச்சையாக பார்த்தோம் என்று நினைக்கலாம்.. ஆனால் ஐந்து முறையும்.. இவர் நாம அங்கு இருப்பதே அவருக்கு தெரியாது போய் விடுவாராம்.. நாம மட்டுமே இவனை உத்து உத்து பார்த்து கொண்டு இருக்கனுமாம். இது யாராவது காதில் பூ சுத்திட்டு இருப்பான்.. அவன் கிட்ட சொன்னா நம்புவான்..
நான் எல்லாம் நம்ப மாட்டேன் டா..அதுவும் உங்க குடும்பமே ஒரு கோல் மால் குடும்பம் டா …கண்டிப்பா இதை நான் நம்ப மாட்டேன் டா.
அது எப்படிடா.. இந்த பத்து நாளில் வீட்டை விட்டு நான் சரியா ஐந்து முறை தான் வெளியில் வந்து இருக்கேன்..
இந்த ஐந்து முறையும் சரியா நீ அங்கு வந்து நிற்கிற. அதுவும் ஏதேச்சையா போல காட்ட இது போல எவனாது ஒருத்தன் கிட்ட பேசிட்டு நீ போயிடுவ நான் இதை நம்பனும்..
அன்னைக்கு வீட்டிற்க்கு வந்தவன் என்னவோ பெரிய இவன் போல… அவன் அத்தையை திட்டி வீட்டை விட்டு அனுப்பிய பின்..
என்ன என்னவோ டையலாக் எல்லாம் பேசினான்.. அத்தை கிட்ட மாமா கிட்ட ஏன் சித்தார்த் கிட்ட கூட.
“ ஈஸ்வரிக்கு பிடித்து இருந்தால் தான் அவள் என் வீட்டிற்க்கு வரட்டும். அதுவும் என் வீட்டிற்க்கு வரும் போது சகல மரியாதையோடு தான் அழைத்து செல்வேன்… பிடிக்கவில்லை என்றால் எல்லாத்தையும் மறந்துடலாம்..” என்று சொன்னவனின் பேச்சில் மகேஷ்வரிக்கே..
அது யாருடா ஈஸ்வரி…? என்று தான் நினைத்தாள்.. ஏன் என்றால் அந்த பெயரில் யாருமே அவளை அழைத்தது கிடையாது… பின் தான் புரிந்தது நம்மை தான் ஈஸ்வரி என்று சொல்கிறான் என்று..
பிடித்து இருந்தால் வரட்டும் என்று சொல்றவன்.. பிடித்து இருக்கா என்று கேட்டு தானே டா இந்த தாலியை என் கழுத்தில் இவன் கட்டி இருக்க வேண்டும்…
பிடித்து இருந்தால் தாலி இருக்கட்டும் என்று சொல்றான்…
அப்போ ஏன் டா இதை நான் இத்தனை நாள் கழுத்தில் மாட்டிட்டு சுத்திட்டு இருக்கேன்.. அவளுக்கே புரியவில்லை.
முதலில் அந்த சிறிய பொன்னாலான தாலி அத்தனை கணம் கணத்தது.. எப்போதடா கழுத்தில் இருந்து கழட்டலாம் என்று கூட நினைத்தால் தான்..
ஆனால் அது என்னவோ அன்று குரு மூர்த்தி வீட்டிற்க்கு வந்து சென்ற பின்.. அத்தனை ஒன்றும் கணக்கவில்லையோ.. என்ற எண்ணம்.
அவள் மனமே அவளிடம் இப்படியும் பேசுகிறது… அப்படியும் பேசுகிறது.. எப்படி கணக்கும் அது தான் நல்லா வாட்ட சாட்டமா இருக்கான் லே.. உனக்கு எப்படி கணக்கும்..
உண்மையை சொல்வது என்றால் மகி குரு மூர்த்தியை அன்று தான் நன்றாகவே பார்த்தது,.. பார்த்தது பரவாயில்லை என்பதையும் தான்டி மிக நன்றாக தான் இருக்கான் என்று தான் அவள் மான கெட்ட மனம் நினைத்தது…
ஆனால் தன் தந்தையை அசிங்கப்படுத்தியவன்.. அது எப்படி நினைப்பாய் என்று அவள் மனதும் குரல் கொடுக்க பார்த்தவள் பின் பார்க்கவில்லை.
ஆனால் வெளியில் இது போல அவ்வப்போது தரிசனம் கொடுக்கும் சமயத்தில், அதுவும் தன் தாய் தந்தையின் இறப்புக்கு நியாயம் செய்ய குரு மூர்த்தி முயற்சி செய்து கொண்டு இருப்பது தெரிந்த பின்.. அவனை பாராதும் இருக்க முடியவில்லை..
இதோ இப்போது கூட பார்க்க மாட்டேன்… பார்க்க மாட்டேன்.. என்று அவள் மனதுக்கு மகி சொல்லி கொண்டாலுமே, அவளின் பார்வை அவன் பக்கம் தான் செல்கிறது… பின் அவளுக்கு அவளே பின் பக்கம் தானே பார்க்கிறோம்… என்று தன்னையே சமாதானமும் செய்து கொண்டாள்..
பாவம் அவளுக்கு தெரியவில்லை.. அவள் குரு மூர்த்தியின் முதுகையே அவ்வப்போது பார்த்து கொண்டு இருந்தவளின் பார்வை கொஞ்சம் விசாலமாக பார்த்து இருந்து இருந்தால் கூட அவனுக்கு முன் இருந்த அவ்வளவு பெரிய கண்ணாடியை அவள் கவனித்து இருந்து இருப்பாள்..
அதோடு அந்த கண்ணாடியில் தன் பிம்பம் மிக தெளிவாவே தெரிகிறது என்பதும்..
எவ்வளவு தெளிவாக என்றால், அவள் குரு மூர்த்தியை பார்ப்பதை அவனுமே பார்க்கிறான் என்பதுமே… இப்படி இங்கு மகி கண்ணா மூச்சு ஆடி கொண்டு இருந்தவள் ஒரு கட்டத்திற்க்கு மேல் தன் பார்வையை கட்டு படுத்த முடியாதவளாக.
‘இந்த அத்தான் எங்கு போனார்…? அவர் வந்தால் கூட பரவாயில்லையா இருந்து இருக்கும்.. இந்த லைன் ஏன் நகரவும் மாட்டேங்குது…” என்று சலித்து கொண்டவளின் பார்வை மீண்டும் குரு மூர்த்தியிடம் தான் சென்றது..
எப்படி சித்தார்த் அவ்வளவு சீக்கிரம் வந்து விடுவான். அதே சமயம். பில் போடும் லைனும்.. எப்படி அவ்வளவு சீக்கிரமாக நகரும் விடும்.. நகர விட்டு விடுவானா.? நம் குரு மூர்த்தி…
குரு மூர்த்தியோ தன் முன் இருந்த கண்ணாடியை பார்த்து கொண்டே இருந்தானே தவிர. தன் எதிரில் பாவமாக ஒருத்தன் தன்னையே பார்த்து கொண்டு இருப்பவனை சட்டை செய்யாது மகியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்ப்பதும். சிரிப்பதுமாக இருந்தவன்..
இதில் கண்ணாடியில் மகியின் உருவத்தை மறைப்பது போல இருக்கிறது என்று அந்த சூப்பர் மார்க்கெட்டின் முதலாளி சதிஷிடம்,..
“கொஞ்சம் தள்ளி நில்லுடா. சரியா தெரியல பாரு..” என்று சொல்லி அவனை நகர்த்த பார்க்க.
அதற்க்கு சதிஷ்.. “ நான் அந்த பக்கம் நின்றால் நீ யார் கிட்ட பேசுவது போல இங்கு இந்த சீனை போடுவ குரு..” என்று சொன்னதும்..
குரு மூர்த்தியும்.. “ ஆமாம் லே.. ஆனாலும் நீ இந்த வயசுக்கு இத்தனை குண்டா இருக்க கூடாது மச்சான்.. அது உடம்பு ஆரோக்கியத்துக்கு கெடுது.” என்று வேறு சம்மந்தம் இல்லாது சொல்ல.
அதற்க்கு சதிஷ்… “ இப்போ உன் காதல் பயிரை வளர்க்கிற நேரத்தில் என் உடம்பு பத்தி அக்கறையா சொல்றியே.. இதுல ஏதாவது விசயம் இருக்கா..?” என்று கேட்டவனிடம் குரு மூர்த்தி விசயம் இருக்கும் என்பது போல் தான்
“என்னை போல இருந்தா கண்ணாடியில் என் ஈஸ்வரியை முழுசா பார்ப்பேன் தானே.. என் முன்னாடி நீ இத்தனை பெருசா நிற்க தொட்டு தானே எனக்கு மறைக்குது.” என்று சொன்னவனை சதிஷ் வெட்டவா குத்தவா என்று தான் பார்த்து வைத்தான்..
பின் அப்படி பார்க்க மாட்டானா.. இதோ சித்தார்த் என்னவோ மறந்து விட்டான் எடுக்க போறான் அந்த பொருள் அவ்வளவு சீக்கிரம் அவன் கைக்கு கிடைக்க கூடாது என்று சொன்னதால், அவன் பின் ஒருத்தனை அனுப்பி அவன் கேட்ட ஷேவிங் க்ரீம் பிராண்ட்.. இங்கு இல்ல என்று சொல்லி அங்கு இருக்கும் என்று முதல் மாடி இரண்டாம் மாடி என்று அலை கழித்து கடைசியில் இந்த வீதியின் கடைசியில் இருக்கும் குடனுக்கோ அழைத்து சென்று உள்ளான் இந்த சூப்பார் மார்க்கெட்டின் ஊழியன்.
அதே போல. இதோ பில் போடாது அது சரியில்லை இது சரியில்லை என்பது போல பின் போடுபவனையும் தடுத்து நிறுத்தி விட்டு தன் வியாபரத்தை தடுத்ததோடு, தன் உருவத்தையும் கேலி செய்வானா…? என்று சதிஷ் கோபமாக பார்த்தாலுமே,பின் சிரித்து விட்டான்..
பின் சிரிக்க மாட்டானா..? குரு மூர்த்தி சதிஷின் நெருங்கிய தோழன் எல்லாம் கிடையாது.. இன்னும் கேட்டால் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சதிஷ் தன் நண்பர்களிடம்..
“பணம் இருக்கு என்றதில் ரொம்ப தான் பண்றான் டா…” என்று தன் நெருங்கிய நண்பனிடம் இந்த சதிஷ் குரு மூர்த்தியை பற்றி இப்படி சொல்லியும் இருக்கிறான்..
ஆனால் ஒரு காலத்திற்க்கு பின்.. சதிஷ் இந்த சூப்பர்மார்க்கெட் வைக்க வங்கிக்கு ஒரு ஜாமின் கைய்யெழுத்து போட கேட்ட போது அனைவரும் ஒன்று போல . ஏதோ ஒரு காரணம் சொல்லி ஒதுங்கி கொள்ள.
அப்போது குரு மூர்த்தியிடம் சதிஷ் போய் உதவி கேட்க கூட இல்லை.. வங்கியில் குரு மூர்த்தி சதிஷை பார்த்து விட்டு..
“ என்ன சதிஷ் இந்த பக்கம்,..?” என்று குரு மூர்த்தி வலிய வந்து கேட்ட போது சதிஷ் சிரித்து கொண்டே…
“ஒன்னும் இல்ல குரு.. பணம் போட தான் வந்தேன்.” என்று சென்றும் விட்டான்..
ஆனால் இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்த அந்த வங்கியின் ஊழியர்… குரு மூர்த்தியையும் நன்கு தெரியும்..
பின் மாதம் கோடியில் இந்த வங்கியில் இருந்து பரிவர்த்தனை நடக்கும் வாடிக்கையாளரை தெரியாது போனால் தானே ஆச்சரியம்…
அப்படி குரு மூர்த்தியை தெரிந்தவர்.. “ என்ன சார் அவரை உங்களுக்கு தெரியுமா…? என்று கேட்ட போது.
குரு மூர்த்தியும்.. “ ஆமாம் என் பிரண்ட் தான்..” என்று சொல்ல.
அப்போது தான் அந்த வங்கி ஊழியர்… குரு மூர்த்தியிடம்..
“இத்தனை பெரிய இடத்து நட்பை வைத்து கொண்டு இவர் ஏன் ஜாமின் கைய்யெழுத்துக்கு அத்தனை அலைய வேண்டும்.. “ என்று கேட்டார்..
பின் தான் குரு மூர்த்தி.. “ என்ன விசயம்..?” என்று அந்த வங்கி ஊழியரிடம் கேட்ட போது தான் அவர் அனைத்தும் சொன்னார்..
“சொத்து மூதையார் சொத்து.. அதுவும் பாகம்.. அதை வைத்து எல்லாம் இருபத்தி ஐந்து லட்சம் லோன் கேட்டா எப்படி சார் கொடுக்க முடியும்.. பார்க்கவும் பேசவும் நல்ல பையனா தான் தெரியுறான். ஆனா இதை வைத்து மட்டும் பேங்க் லோன் சேக்க்ஷன் பண்ண முடியாது தானே சார்.. அது தான் யாராவது சொத்து இருக்கிறவங்க ஜாமின் கைய்யெழுத்து போட்டா உடனே சேக்ஷன் பண்ணி விடுகிறோம் என்று சொன்னோம்..
அப்போ இவரும் உடனே “அதுக்கு என்ன சார் என் பிரன்ஸ்ங்க எல்லாம கொஞ்சம் இருக்கப்பட்டவங்க… கொஞ்சம் செட்டிலுடும் கூட நான் கேட்டா உடனே சைன் போடுவாங்க.. என்று சொல்லி விட்டு இரண்டு வாரம் முன் சென்றவர் இன்னைக்கு வந்து நீங்க என்னை மட்டும் நம்பி லோன் கொடுக்க மாட்டிங்கலா…? என்று கேட்டுட்டு போனார் சார்.. பாவம் இன்னும் அனுபவம் பத்தல என்று தான் சொல்லுவேன்..” என்றதும் அன்று குரு மூர்த்தி சதிஷ் கேட்காது ஜாமின் கைய்யெழுத்து போட்டான்…
சதிஷ் அப்போது தான் ஒன்று புரிந்து கொண்டது.. கூட இருக்கிறவன் அனைவருமே நெருங்கிய நண்பர்களும் கிடையாது.. அதே போல வெளிப்பார்வைக்கு தெரிவது உண்மையும் கிடையாது என்பதை..
அன்றில் இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டார்களா என்று கேட்டால், அதுவும் கிடையாது… ஆனால் சதிஷ் தான் ஒவ்வொரு படியாக வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எடுத்து வைக்கும் போது மறக்காது குரு மூர்த்தியை அழைத்து தன் முன்னேற்றத்தை சொல்லி விடுவான்..
அதற்க்கு குரு மூர்த்தியிடம் இருந்து ஒரு வாழ்த்து மட்டுமே சொல்வது ஒரு முறை மட்டுமே.
“எனக்கு தெரியும் சதிஷ் உன் கிட்ட திறமை இருக்கு.. நீ ஜெயிப்ப என்று..” அவ்வளவு தான் குரு மூர்த்தி சதிஷிடம் பேசுவது.
ஆனால் இன்று திடிர் என்று தன் கடைக்கு வந்தவன்.. தன் அறையில் இருந்து தன்னை வெளியில் அழைத்து வந்து .. “ சும்மா என் கிட்ட பேசு ஏதாவது பேசு..” என்று சொல்லி இந்த கண்ணாடி முன் நிறுத்தியவன் செயல் முதலில் புரியாது பின் புரிந்து விட்டது..
அதுவும் சித்தார்த்தை பிடித்து வை என்றதும்.. புரிந்து விட்டது தான்.. அதுவும் முதல் முறை இது போல சிரித்து மகிழ்ச்சியாக சதிஷ் குரு மூர்த்தியை பார்ப்பது இது தான் முதல் முறை என்று சொல்லலாம்..
கல்லூரியில் படிக்கும் போது கூட குரு மூர்த்தி இப்படி மகிழ்ச்சியாக இருந்து சதிஷ் பார்த்தது கிடையாது…
ஏதோ டீன் ஏஜ் பையன் போல அந்த பெண்ணை கண்ணாடி வழியாக பார்த்து கொண்டு இருந்தவனின் முக பல பலப்பை பார்த்து விட்டு சதிஷ் கூட தன் மனதில் இருந்ததை கேட்டு விட்டான்..
அதோடு… “காலேஜ் படிக்கும் போது பெண்கள் எல்லாம் உன் மீது அவங்கலே விழுந்து விழுந்து பழகுவாங்கலே. நீ அவங்களை எல்லாம் திரும்பி கூட பார்த்தது கிடையாது…?” என்று கேட்டான்..
ஏதாவது பேசு இல்லை சும்மாவாவது இரு என்று சொல்லி தான் சதிஷை குரு மூர்த்தி இங்கு அழைத்து வந்தது..
ஆனால் இங்கு வந்து நின்று கொண்டு குரு மூர்த்தி செய்து கொண்டு இருக்கும் செயல்களை பார்த்து விட்டு உண்மையில் சதிஷுக்கு நிறைய தெரிய வேண்டி இருந்ததினால் கேட்டு கொண்டு இருக்க..
எப்போதும் அதிகமாக பேசாத குரு மூர்த்தியும் இப்போது சதிஷ் கேட்டது அனைத்திற்க்குமே சிரித்து கொண்டு பதில் அளித்து கொண்டு இருந்தான்.. பதில் தான் சதிஷிடம். பார்வை மொத்தமும் கண்ணாடி வழியாக அவனின் ஈஸ்வரியை களவாடிக் கொண்டு இருந்தது…
குரு மூர்த்தியின் செயலையும் பார்வையையும் பார்த்து விட்டு சதிஷுக்குமே சிரிப்பு தான்.. ஆனாலுமே குரு மூர்த்தியிடம் சதிஷுக்கு ஒன்று கேட்க வேண்டி இருந்தது.. அது குரு மூர்த்தியின் மாமன் பெண் ஸ்ருதியை பற்றி..
குரு மூர்த்தியின் தாய் மாமன் விசுவநாதனை பற்றி கல்லூரிக்கு மட்டும் கிடையாது.. பெரும்பாலோருக்கு தெரிந்த நபர் தான்.. குரு மூர்த்தியின் தந்தையான கிருஷ்ண மூர்த்தியும் ஒரளவுக்கு அனைவருக்கும் தெரிந்த நபர் தான்..
என்ன ஒன்று விசுவநாதனை ஒரு முறையில் அனைவருக்கும் தெரியும் என்றால், கிருஷ்ண மூர்த்தியை ஒரு கெளரவமான ஆட்சியாளர் என்று அனைவருக்கும் தெரியும்..
அதனால் தான் கல்லூரியில் படிக்கும் சமயத்தில் சதிஷிக்கு குரு மூர்த்தியை பற்றிய அபிப்பிராயம் வேறாக இருந்தது..
விசுவநாதன் கல்லூரிக்கே வந்து குரு மூர்த்தியை தோள் மீது கை போட்டு அழைத்து செல்வார்.. அப்போது ஒரு பேச்சும் அந்த சமயத்தில் கல்லூரியில் பேசி கொண்டு இருந்தனர்… அது விசுவநாதன் பெண்ணை தான் குரு மூர்த்தி திருமணம் செய்ய உள்ளான்.. என்ற பேச்சு அடிப்பட.. அப்போது சதிஷே இதை தான் நினைத்தது..
அதனால் தான் இவன் இங்கு மேல விழும் பெண்களை சட்டை செய்யிறது இல்லையா…? என்று கூட சதிஷ் நினைத்து இருக்கிறான்…
இப்போது குரு மூர்த்தி வேறு பெண்ணை பார்க்கவும் அவனின் மாமா பெண்ணை பற்றி கேட்டதுமே குரு மூர்த்தியின் முகம் ஒரு நொடி மாறியது…
பின் அவனே,.. “ நான் என்னைக்காவது சொல்லி இருக்கேனா என் மாமா பெண்ணை தான் மேரஜ் செய்துக்க போறேன்..” என்று கேட்க.. இல்லை தான் என்று சொன்ன சதிஷ்…
பின்… “ குரு போதும் பா ஒரு ஷேவிங் க்ரீம்க்காக அலைய விட்டது போதும்..” என்று சொல்ல..
குரு மூர்த்தியுமே ஒரு வழியாக பெரிய மனது செய்து.
“சரி சரி ஒகே.. வீக்ஸ் இங்கு தான் வாங்குவா. பார்த்து.” என்று வேறு சொன்னவனிடம் தலையாட்டிய சதிஷ்.. பில் கவுண்டரிடம் வந்து ஏதோ சொல்லி விட்டு பின் மீண்டுமே சதிஷ் குரு மூர்த்தி முன் நின்று கொள்ள..
இப்போது மகி அதிர்ச்சியுடன் குருவையும் சதிஷையும் பார்த்து கொண்டு இருந்தவள் அப்படியும் இருக்குமோ என்று தான் நினைத்தது.
அது அப்படி தான் என்பது போல இத்தனை நேரம் பில்லிங் செக்க்ஷனில் தடுமாறிக் கொண்டு இருந்தவனின் கைகள் ஜெட் வேகத்தில் வேலை செய்ய அதே வேகத்துடன் வரிசையும் நகர்ந்து கொண்டு இருந்தது…
இத்தனை நேரம் வராது சித்தார்த்தும் முக கடுப்புடம் அங்கு வந்து மகியின் பக்கம் வந்து நின்றவன்..
“நான் கேட்ட ஷேவிங்க க்ரீம் இல்ல. சரி விடு டா என்று சொல்லியும் கேளாம இந்த சூப்பார் மார்க்கெட்டின் எல்லா தளத்தையும் எனக்கு சுற்றி காட்டியது மட்டும் இல்லாம.. இதோட கொடவுனையும் எனக்கு காட்டிட்டானுங்க…” என்று புலம்ப..
மகிக்கு அது தான் என்று உறுதியானதில் இருவரையும் முறைக்க.. மகியின் இந்த முறைப்பை குரு மூர்த்தி கண்ணாடி வழியாக கண்டி கொண்டவன். இப்போது திரும்பி நேர்க் கொண்டு அவளை பார்த்தான்..
இத்தனை நேரம் அவன் பாராத போது( மகியை பொறுத்த வரை.. குரு மூர்த்தி அவளை பார்க்கவில்லை என்று தான் நினைத்து கொண்ட் இருந்தாள்..) அவ்வப்போது குரு மூர்த்தியை பார்த்து கொண்டு இருந்த மகி இப்போது நேர்க் கொண்ட இந்த பார்வையில் சட்டென்று திருப்பி கொண்டவளின் கவனத்தை இப்போது சித்தார்த் தன் பக்கம் திருப்பிக் கொண்டவனாக.
“மகி இது எடு அது கொடு..” என்று பில் கவுண்டரின் அருகில் சென்றவர்கள் அவர்கள் வாங்கிய பொருட்களுக்கு பணத்தை கொடுத்து பொருட்களை வாங்கி சென்று விட்டார்கள்..
அவர்கள் செல்லும் போது தான் சதிஷ் மகியின் கழுத்தில் இருந்த அந்த தாலியை கவனித்தது..’அதில் அதிர்ந்து போனவாக.
அதுவும் சித்தார்த் பொருட்களை அனைத்துமே டிக்கியில் வைத்த பின் மகியின் தோள் பற்றி கார் கதவை திறந்து மகியை அமர வைத்ததோடு மட்டும் அல்லாது மகியின் துப்பட்டாவை கார் கதவின் சிக்கி கொள்ளாது எடுத்தும் விட்ட பின் காரை ஓட்டிக் கொண்டு செல்வதை அனைத்துமே பார்த்து கொண்டு இருந்த சதிஷ் அதிர்ச்சியுடன் குரு மூர்த்தியை பார்த்தவன்..
“ அவன் யாரு குரு…? அவனை ஏன் இப்படி அலைய விட்ட. அதோட அந்த பெண் கழுத்தில் தாலி வேறு இருக்கு குரு… அப்போ அப்போ அந்த பையன். அந்த பெண்ணோட..” என்று சொல்லும் போதே குரு மூர்த்தி அவனை பார்த்த அந்த பார்வையில் அடுத்து வாய் பேசாது இருந்தாலுமே அவன் கண்கள் அவனின் சந்தேகத்தை கேட்க.
“இனி இங்கு நிற்க வேண்டிய அவசியம் இல்ல என்று நினைக்கிறேன்.. வா உன் ரூமுக்கு போய் பேசலாம்.” என்று சொன்னதுமே சதிஷும் தன் அறைக்கு குரு மூர்த்தியை அழைத்து சென்றான்….
சதிஷ் சொல்லாது அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்ட குரு.. சதிஷை அவனின் இருக்கையில் அமர சொன்னவன்..
“ம் இப்போ கேள்..?” என்று சொன்னவன்.. பின் அவனே..
“ஆ அது தான் வெளியிலேயே எல்லாத்தையும் கேட்டிட்டியே… நீ எப்போவும் என்னை பத்தி நல்ல விதமாவே நினைக்க மாட்டியாடா…? என்று கேட்கவும் தான் சதிஷுக்கு தன் தவறு புரிந்தது..
அதில் சதிஷ் உடனே… “ சாரி…” என்று மன்னிப்பு கேட்க.
குரு மூர்த்தி அந்த மன்னிப்பையும் உடனே எல்லாம் ஏற்று கொள்ளவில்லை..
“சாரி எல்லாம் வேண்டாம்.. ஏன்னா நான் அவ்வளவு நல்லவனும் கிடையாது…” என்றதும் சதிஷ்.. இப்போது குரு மூர்த்தியியம்…
“ இப்போ நீ என்ன தான் டா சொல்ல வர…” என்று கடுப்புடன் கேட்க..
“இல்ல சாரி கேட்டுட்டு நான் ஈஸ்வரி கழுத்தில் அவள் சம்மதம் இல்லாமல் தெருவில் வைத்து தான் தாலி கட்டினேன்.. என்று நான் சொன்னா. நீ இவன் கிட்ட போய் சாரி கேட்டு விட்டோமே என்று நீ வருந்த கூடாது பாரு.. அதனால் தான் ..” என்றவனின் பேச்சில் சதிஷ் அதிர்ந்து பார்த்தவன்.
“ சத்தியமா இத்தனை நாள் சீ நாம குருவை தப்பா நினச்சிட்டோமே… காலேஜ் படிக்கும் போதே இவன் கூட நல்ல மாதிரியா நட்போடு இருந்து இருக்கலாமே என்று நேற்று வரை.. “ என்று சொன்ன சதிஷ் பின் தன் பேச்சை திருத்தியவனாக…
“நேற்று என்ன டா நேற்று இன்று காலை வரை கூட நினச்சிட்டு இருந்தேன் டா.. ஆனா இப்போ நான் சொல்றேன் டா. நல்ல வேளை காலேஜ் படிக்கும் போது உன் கூட பிரண்டா இல்ல…” என்று சொன்னவனிடம் குரு மூர்த்தி சிரித்து கொண்டே…
“ஏன் டா..?” என்று கேட்டதே ஒரு இழுவையில் இருக்க. அது சதிஷை இன்னும் காண்டாக்குவது போலான மாடுலேஷனில் தான் இருந்தது..
அதில் கை எடுத்து குரு மூர்த்தியை பார்த்து ஒரு கும்பிடு போட்ட சதிஷ்.. “ நீ என்ன குழப்புற குழப்பத்தில் படிக்கும் போது உன் கூட பிரண்டா இருந்து இருந்தா நான் என் படிப்பை கூட ஒழுங்கா முடிச்சி இருக்க மாட்டேன் டா…” என்று சொன்ன சதிஷும் இப்போது சிரித்து கொண்டே சொன்னவன்.
இப்போது சதிஷ் சீரியஸாகவே. “ உண்மையில் அந்த பெண்ணுக்கு பிடிக்காது தான் தாலி கட்டினியா டா.. ஏன்…? இது தப்பு இல்லையா..?” என்று கேட்டவனிடம் குரு மூர்த்தி அனைத்துமே ஒன்று விடாது சொல்லி முடித்தான்..
குரு மூர்த்தி சொன்னதை கேட்க கேட்க.. சதிஷ் இப்படி எல்லாமா நடக்கும்..? என்பது போல அதிர்ச்சியில் அப்படியே ஒரு நிமிடம் எதுவும் பேச முடியாது இருந்தவனிடம்.
குரு மூர்த்தி.. “ காலேஜில் இருந்தது போலவே இப்போவும் இவன் கிட்ட பேசாது டிஸ்டன்ஸ் மெயிட்டன்ஸ் பண்ணி இருந்து இருக்கலாம் என்று தோனுதா சதிஷ்…?” என்று கேட்டவனிடம் சதிஷ் மறுப்பாக தலையாட்டியவன்..
பின்… “ உண்மையில் உனக்கு பிடித்து தானே அந்த பெண் கழுத்தில் தாலி கட்டின.?” என்று கேட்டவனிடம்..
“இப்போவும் என் மாமா எனக்கு ஸ்பெஷல் தான் சதிஷ்… அவர் மேல பிராமிஸ்ஸா சொல்றேன்… ஈஸ்வரியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து தான் தாலி கட்டினேன். இன்னும் கேட்டால் நான் அவளை ரொம்ப எல்லாம் பார்த்தது கிடையாது.. பேசியது சுத்தமா இல்லவே இல்லை… இதுவும் எனக்கு தெரியும். இந்த காலத்தில் தாலி கட்டினா அவள் என் கூடவே வந்து விடனும் என்று எதிர் பார்க்க கூடாது… என்று..
அவளுக்கு என்னை பிடிக்குதோ இல்லையோ… ஆனா இன்னும் கொஞ்ச நாளுக்கு நான் கட்டிய தாலி ஈஸ்வரி கழுத்தில் இருப்பது தான் அவளுக்கு சேப்.. ஏன்னா என் மாமா அவர் பெண்ணுக்காக என்ன வேணா என்றாலும் செய்வாரு… எந்த நேரமும் ஈஸ்வரிக்கு பாது காப்பு கொடுத்துட்டு இருந்து இருக்க முடியாது….” என்று சொன்னவனின் பேச்சில் சதிஷுக்கு கோபம் தான் வந்தது.. ஒன்று விசுவநாதன் செய்த செயலை நினைத்து இன்னொன்று.. அதற்க்கு குரு மூர்த்தி துணை போனதோடு, சிறிது நேரம் முன் கூட குரு மூர்த்தி சொன்ன.. இப்போதுமே எனக்கு என் மாமாவை பிடிக்கும் என்ற பேச்சை வைத்தும்..
அதை சொல்லவும் செய்து விட்டான்.. முதலில்..
“ நீ தாலி கட்டியதால் மட்டும் உன் மாமா அந்த பெண்ணை ஒன்றும் செய்ய மாட்டாரா.?” என்று கேட்டவனிடம்..
குரு மூர்த்தி… “ கண்டிப்பா செய்ய மாட்டார். அவர் பெண்ணுக்காக எது என்றாலும் செய்வார் தான்.. ஆனா நான் என்று வந்து விட்டால், என் மாமாவுக்கு அவர் மகளும் மனைவியுமே எனக்கு அடுத்து தான் என்று நிறுத்தி விடுவார்.” என்று சொன்ன குரு மூர்த்தியின் வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை தான் என்பதை அவனின் தாய் மாமா நிருபித்து இருந்தார்..
ஆம் தாமரை தன் வீட்டில் பேய் ஆட்டம் ஆடி விட்டாள்…
“ஏதாவது செய்து ஆகனும். நீங்க. நான் உங்க பொண்டாட்டி.. ரூமில் தன் நிலை இல்லாம நடந்து கொள்கிறாளே.. அவள் உங்க மகள்… எங்க இரண்டு பேரை விட.. உங்களுக்கு குரு தான் ரொம்ப முக்கியமோ…?” என்ற கேள்விக்கு..
விசுவநாதன்.. “ ஆம் .” என்று சொல்லி தன் நிலையை ஒரே வார்த்தையில் முடித்து கொண்டு விட்டார்…
அதில் தாமரை வெறி கொண்டவள் போல… “ உங்களுக்கு பிறந்தவள் ஸ்ருதி தானே குரு இல்லையே..” என்று கேட்டதில்..
விசுவநாதன் இப்போது தன் நிலை இழந்து விட்டார்.. ஒரு அடி கிடையாது தாமரையை விசுவநாதன் பல அடி அடித்து விட்டவர்.
“கொன்று போட்டு விடுவேன்.. உன்னை கொன்றால் உன் அண்ணன் கூட ஒன்னும் கேட்க மாட்டார்.. நீ எல்லாம் ஒரு பொம்பளையாடி… என் கூட பிறந்த தங்கச்சி..” என்று கேட்டவருக்கு அடுத்து வார்த்தை வரவில்லை.
ஆனால் தாமரைக்கு.. அந்த வயதில் அத்தனை அடி வாங்கிய பின்னும் எப்படி தான் அந்த உடம்பில் தெம்பு இருக்கிறது என்று அனைவரும் யோசிக்கும் அளவுக்கு..
அப்படி ஆவேசமான பேச்சு தாமரையிடம் இருந்து வந்தது.
“நானும் என் மகளும் எப்படி போனாலும் உங்களுக்கு கவலை இல்லையா..? ஸ்ருதி மீது போட்ட கேசு.. இது வரை எடுக்காது அப்படியே தானே இருந்தது.. இப்போ என்ன திடிர் என்று எடுத்து விசாரணை என்று கூப்பிடுறாங்க…? உங்களை மீறி இது எல்லாம் நடக்குதுன்னா அதுக்க காரணம் ஆனவன். குருவா மட்டும் தான் இருப்பான்..
அவன் என்றதினால் தான் நீங்க ஒன்னும் செய்யாது அமைதியா இருக்கிங்க…?” என்று சொன்ன தாமரையின் இந்த பேச்சு உண்மை தான்.
சிங்கப்பெருமாள் விபத்தை பற்றிய கேசில் மகி கேஸ் பைல் செய்து இருந்த போது.. அதுவும் கிருஷ்ண மூர்த்தி உதவி செய்த போது கூட விசுவநாதனை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது தான் உண்மை..
ஆனால் என்று குரு மூர்த்தி மகியின் கழுத்தில் தாலி கட்டினானோ அன்றே மகியின் தந்தை விபத்தை பற்றியான மகி கேஸ் கொடுத்ததை பற்றி.. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ.. அதை செய்து விடுங்கள்..
நானுமே இதில் தண்டனை என்று வந்தால் என்னிடம் வர கூட தயங்க கூடாது என்று குரு மூர்த்தி தான் முன்பு இருந்த அந்த காவலாளியை ட்ரான்ஸ்வர் செய்து விட்டு.. புதிய காவல் அதிகாரி நேர்மையானவரை சிங்கப்பெருமாள் விபத்தை பதிவு செய்த அந்த ஸ்டேஷனுக்கு மாற்றி விட்டு.. அனைத்துமே செய்து முடித்தது…
பத்து நாட்கள் முன்பு சரியாக சொல்வது என்றால் தாமரை சாரதா வீட்டிற்க்கு சென்று வந்த மாலையே குரு மூர்த்தி ஏற்பாடு செய்து இருந்த அந்த காவல் அதிகாரி ஸ்ருதியை விசாரிக்க வேண்டி வீட்டிற்க்கு வந்து விட்டார்..
விசுவநாதன் அன்றே கண்டு கொண்டார்.. இது யார் வேலை என்று… ஒன்றும் பேசவும் இல்லை..தடுக்கவும் இல்லை.. அமைதியாக யாரோ வீட்டில் யாரோ வந்து யாரையோ விசாரணை செய்ய அழைக்கிறார்கள் என்பது போல் தான் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு விட்டார்.
தாமரை தான். ஸ்ருதியின் நிலை சொல்லி.. அழைத்து செல்ல அனுமதிக்காது தடுக்க. விசாரணை என்று அழைத்தால் இது போல் தான் ஏதாவது ஒன்று சொல்வார்கள் என்று நினைத்து..
அந்த காவல் அதிகாரி தாமரை தடுத்தும் மீறிக் கொண்டு ஸ்ருதியின் அறைக்குள் நுழைந்து விட்டார் தான்..
ஸ்ருதியின் அறைக்குள் சென்று விட்டனர் தான். ஆனால் சென்ற பார்த்த பின்பு தான் அவர்களுக்கு தெரிந்தது தாமரை பொய் சொல்லவில்லை உண்மை தான் சொல்லி இருக்கிறார் என்பது..
ஆம் காவல் அதிகாரியை பார்த்து… “ நீ எனக்கு தாலி கட்டுறியா.? நீ கட்டுறியா.? என்று அங்கு வந்த மூன்று காவல் அதிகாரியிடமும் கேட்டவளின் பேச்சில் முதலில் நடிக்கிறாளோ என்று தான் சந்தேகப்பட்டனர்.
ஆனால் வெடுக்கென்று தாமரையின் கழுத்தில் இருந்த தாலி சரடை கழட்டியவள்..
“இந்தா இதை என் கழுத்தில் போடு போடு.. “ என்று அவர் மூன் நீட்டியவள்..
“பாரு பாரு என் கழுத்தில் தாலியே இல்லை.. தாலியே இல்லை…” என்று சொன்னவளின் பேச்சில் உண்மை தன்மை அறிய அந்த காவல் அதிகாரி ஸ்ருதியின் கழுத்தில் மாட்டுவது போல பாவலா காட்ட.
அப்போதும் ஸ்ருதி தன் கழுத்தை அப்படியே குனிந்து காட்டிய படி நிற்கவும் தான்.. இது நடிப்பு இல்லை உண்மை என்று நிருபனம் ஆனது.
கூடவே தாமரையும் அவரிடம் இருந்து தாலி வாங்கி தன் கழுத்தில் போட்டு கொண்டவர் ஸ்ருதிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அறிக்கையை அவரிடம் காட்டவும் தான் ஸ்ருதியை விசாரணைக்கு அழைக்காது சென்றார்.
ஆனால் இதுவும் சொல்லி விட்டு தான் சென்றது.. அனைத்தும் முறைப்படி இந்த கேஸ் கோர்ட்க்கு போகும்.. நீங்க உங்க சைடில் என்ன செய்யனுமோ செய்து கொள்ளுங்கள்..” என்று சொல்லி தான் அவர்கள் சென்றது.
தாமரை அந்த தாலியை அப்படி சாதாரணமாக தன் கழுத்தில் மாட்டி கொள்ள காரணமும்.. ஒரு முறை இரண்டு முறை இது போல செய்தால் பரவாயில்லை பதரலாம். தினம் ஒரு முறையாவது தாமரையின் கழுத்தில் இருந்த தாலி சரடை கழட்டினால்..
தாமரையுடையது மட்டும் கிடையாது.. கஷ்டப்பட்டு வேலைக்கு சேர்த்த இரண்டு பெண்மணிகளின் தாலியையுமே மூன்று முறை கழட்டி விட்டாள்..
இதற்க்கு என்றே காலர் வைத்த ஜாக்கெட்.. இல்லை சுடிதார் அணிந்து கொண்டு வருவதோடு.. ஸ்ருதியின் அறைக்கு செல்வது என்றால் புடவை என்றால் முந்தியை போர்த்திக் கொண்டும் சுடிதார் என்றால் துப்பட்டாவை கொண்டு மறைத்து கொண்டோ தான் செல்வது.
அவர்களும் என்ன செய்வார்கள்.. வீட்டு கஷ்டத்திற்க்கு இங்கு வேலைக்கு யாரும் வருவது இல்லை என்று தாமரை இரண்டு மடங்கு பணம் கொடுத்து அழைக்க வந்து விட்டார்கள்..
இப்படி தாமரை தனித்து அனைத்திற்க்கும் போராடி கொண்டு இருக்க விசுவநாதன் இதற்க்கு பின் இருப்பது குரு மூர்த்தி என்ற ஒரே காரணத்திற்க்காக. அமைதியாக இருந்து விடுவாரா என்று கணவனிடம் சண்டை பிடித்தவன்.
“ஆனால் நான் அமைதியாக இருக்க மாட்டேன்…” இதை தாமரை தன் கணவனிடம் சொல்ல வில்லை மனதிற்க்குள் சொல்லி கொண்டாள்..