Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

YENNAI KONDADAA PIRANDHAVAN....21.1

  • Thread Author
அத்தியாயம்…21…1

கணவனிடம் அத்தனை சண்டை பிடித்தும் மனது ஆறவில்லை தாமரைக்கு … அன்று சாரதா வீட்டில் எத்தனை பெரிய ஒரு அவமானத்தை குரு மூர்த்தி தனக்கு ஏற்படுத்தி விட்டான்.. அதுவும் அவர்களின் முன் நிலையில்.. மனது ஆறவே இல்லை..

கூட தன் அண்ணனுமே தான் சேர்ந்து தன்னை அத்தனை பேச்சு…

“நீ எல்லாம் ஒரு பொம்பளையா….?” என்று தன் கூட பிறந்த தங்கையை பார்த்து.. அதுவும் தன் முன் நாள் காதலியின் முன் கேட்டால் அவள் சும்மா இருப்பாளா என்ன..?

கேட்க தானே செய்வா.. “ உன் கண்ணுக்கு இவள் தான் பொண்ணாவே தெரிவா..” என்று கேட்டதற்கு..

தன்னை அடித்து விட்டாரே… அதுவும் அந்த சாரதா முன் நிலையில்..

சாரதாவை மனதில் வைத்து கொண்டு தானே அண்ணியுடன் சரியாக பேசாது நடந்து கொள்ளாது.. அவங்க செத்து போனது.. இது சொன்னால் என்னை அடிப்பாரா…? அவர்.

ஆம் அதை மட்டும் சொல்லாது கிருஷ்ண மூர்த்தியிடம்… “அண்ணி கூட பெண்ணா தெரியாததினால் தானே.. நீ அவங்க கிட்ட நல்ல விதமா நடந்துக்காம.. அவங்க செத்து போனாங்க… இன்னும் கேட்டால் என் புருஷன் இதுக்காக உன் மேல கேசு போட்டு உள்ளை தள்ளி இருந்து இருக்கனும்.. அப்படி தள்ளி இருந்தா.. ஊர் உலகம் இப்போ சொல்லுதே நேர்மையான ஆட்சியாளர் என்று..

அது எல்லாம் காத்துல பறந்து போய் இருந்து இருக்கும். உன் போஷி உன் காதலியை நினச்சிட்டு பொண்டாட்டி கூட வாழாத போஷி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்..” என்று தாமரை இந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்ல காரணம்.

சாரதாவை அசிங்கம் படுத்த வேண்டும் என்பதே… சாரதாவுக்கு அந்த பேச்சு பிடிக்கவில்லை என்பதை இங்கு வந்த உடன் அதை பத்தி பேசிய உடனே ஆவேசமாக ஆனதில் இருந்தே கண்டு கொண்டு விட்டாள்..

மகன்.. தன் அண்ணன் மகள் அதுவும் இந்த நாள் கணவன் முன் பேசினால் இன்னும் அசிங்கப்பட்டு தானே நிற்கனும்.. என் மகளும் நானும் என் குடும்பமும் அங்கு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கோம்..

இவங்க குடும்பமா கும்மி அடித்து கொண்டு இருப்பாங்களா…? தாமரைக்கு இவர்கள் குடும்பமாக சாப்பிட்டு கொண்டு இருந்த காட்சி தான் கண் வந்து நின்றது.. அது நினைக்க நினைக்க அத்தனை ஆத்திரம் தாமரைக்கு…

அதில் வார்த்தைகளை அத்தனை வாரி இறைத்தாள்… குரு மூர்த்தி முதலில் பொறுமையாக.

“அத்த வீட்டிற்க்கு போங்க அத்த… இங்கு வைத்து எந்த பேச்சும் வேண்டாம்…” என்று மிக பொறுமையாக தான் முதலில் பேசினான்..

ஆனால் அதற்க்கு தாமரையோ… “ என்ன இங்கு பேச வேண்டாம் என்று சொல்ற.. உன் அம்மா செத்ததுக்கு காரணமே இந்த பொம்பளை தான்..” என்று தாமரையை கை காட்டி சொன்னதில் .. குரு மூர்த்தி அப்போது கூட தன் கோபத்தை கட்டுப்படுத்தியவனாக..

“அத்த வேண்டாம் அத்த. பேச்சு ரொம்ப எல்லை மீறி போயிட்டு இருக்கு…” என்று குரு மூர்த்தி சொன்ன வார்த்தையில் தாமரை அடங்கி சென்று இருந்து இருந்தால் கூட தாமரையின் மரியாதையில் கொஞ்சமாவது மிஞ்சி இருந்து இருக்கும்..

ஆனால் இது வரை குரு மூர்த்தி தன் மீது வைத்த அந்த பாசத்தில் தன்னை இவர்கள் முன் விட்டு விட மாட்டான். அதுவும் தன் அண்ணன் இவர்கள் முன் அடித்ததில் குரு இவர்கள் முன்னவே தன் அப்பாவையும் நன்றாக கேட்க வேண்டும்.

அதே போல என் பெண் நிலை தான் இந்த வீட்டின் பெண் நிலையும் என்று இவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்து வார்த்தைகளை இன்னுமே அதிகமாக விட்டாள்..

ஸ்ருதிக்கு தான் சித்தார்த் மீது பைத்தியம்.. அதனால் தான் ஸ்ருதி இன்று தன் நிலை பிழன்டு புத்தி பேதலுத்து போய் பேசுகிறாள் நடந்து கொள்கிறாள்..

ஆனால் மகிக்கு குரு மூர்த்தி மீது அது போலான எண்ணம் இல்லை.. இன்னும் கேட்டால் குரு மூர்த்திக்கு மட்டும் தான் மகியின் மீது விருப்பமும்.. காதலும்..

அப்படி பார்த்தால் மகி மறுத்தால் நம் குருவுக்கு தான் புத்தி பேதலிப்பு ஏற்படுமே ஒழிய மகிக்கு கிடையாது என்று தெரியாது..

இன்னும் ஆவேசத்துடன்… “ சொல்லுடா குரு.. இவங்க கிட்ட சொல்… ஸ்ருதியை இவங்க ஏத்து கொண்டா தான் இவ நம்ம வீட்டில் வாழுவாள் என்று சொல்லு குரு..” என்றதில் இத்தனை நேரம் நாடகம் போல அனைத்துமே பார்த்துகொண்டு.. இடை இடையே தன் அத்தையை பற்றி அடிக்கடி இது போல பேசியதில் மகிக்கு தாமரையின் எண்ணம் புரிந்து விட்டதில்..

சீ நீ இவ்வளவு தான். எங்கள் அத்தையை பற்றி நீ என்ன டி சொல்றது.. என் மாமாவுக்கு தெரியும் டி என் அத்தையை பத்தி என்று இதை தான் மனதில் நினைத்து பார்த்து கொண்டு இருந்தவள்.

குரு மூர்த்தியையுமே அப்போது தான் அவள் கவனித்து பார்த்தது. நன்றாக தான் இருக்கிறான் தன் அத்தையை போல் இல்லாது நல்ல மாதிரி தான் பேசுகிறான்..

ஆனால் இவன் தனக்கு செய்தது அத்தனை நல்ல விதமாக இல்லையே.. தன் அப்பாவின் இறப்பை அசிங்கப்படுத்தியதும்.. தன் கழுத்தில் இதை மாட்டி விட்டதும்..

அந்த காலமா பிரானநாதா என்று கல் ஆனாலும் கணவன்.. புல் ஆனாலும் புருஷன் என்று இவன் பின் போக… என்று அவனை பார்த்து கொண்டே நினைத்து கொண்டு இருந்த சமயம் தான்…

தாமரை சொன்ன இந்த வார்த்தையில் மகி..

“அய்யோ என்ன நீங்க இப்படி சொல்றிங்க…? இவர் எனக்கு வாழ்க்கை கொடுக்கலேன்னா அப்போ என் நிலை… இப்படி எல்லாம் நீங்க சொல்ல கூடாது..” என்று ஒரு மாதிரி தான் பேசியது.

குரு மூர்த்திக்கு மகி இப்படி சொன்ன விதத்தில் கோபம் வராது சிரிப்பு தான் வந்தது.. குரு மூர்த்திக்குமே மகியை பார்த்ததும் பிடித்து விட்டது.. பேசியது பழகியது எல்லாம் கிடையாது தானே…

இவளின் இந்த கிண்டல் பேச்சை குரு மூர்த்தி ரசித்தான்… அதில் சிரிப்பும் வந்து விட பார்த்தது தான். ஆனால் சிரிக்காது அவளை பார்த்தான்… ஆனால் என்ன தான் கட்டுப்படுத்தியுமே அவன் கண்கள் அவனின் அந்த சிரிப்பை காட்டி கொடுத்து விட்டது தான்..

மகியின் அந்த பேச்சின் தன்மை அனைவருக்கும் புரிந்து விட்டது.. ஆனால் கோபத்திலும், ஆத்திரத்திலும் இருந்த தாமரைக்கு மட்டும் மகியின் இந்த பேச்சு கிண்டலாக தெரியாது.. உண்மையில் தான் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டு விட்டாள்..

ஒரு சமயம் மகியிடம் இருந்த இந்த கெஞ்சலை தான் தாமரை எதிர் பார்த்து இருந்ததினால் மகி அப்படியே பேசவும் தன் மனது தனக்கு பிடித்ததை மட்டுமே தானே எடுத்து கொள்ள தோன்றும்.. அதனால் கூட மகியின் இந்த பேச்சை உண்மை என்று நம்பி விட்ட தாமரை…

மகியிடம்.. “ அப்போ நீ உன் அத்தை கிட்டேயும் என் மாப்பிள்ளை கிட்டேயும் சொல். ஒழுங்கு மரியாதையா என் பொண்ணு கூட வாழு என்று.. “ என்று சொன்ன தாமரை அதோடு விடாது..

“முக்கியமான விசயம்.. என்னை அடித்ததிற்க்கு.. என்னை உங்க வீட்டில் அசிங்கப்படுத்தியதிற்க்கு உன் அத்தை என் கிட்ட மன்னிப்பு கேட்கனும்.. “ என்று சொன்னவள்..

கூடவே.. “முன் இருந்தால் எப்படியோ.. ஆனால் இனிமே என் பொண்ணு இந்த வீட்டில் வாழ மாட்டா… என் மாப்பிள்ளை எங்க வீட்டிற்க்கு வீட்டோட மாப்பிள்ளையா வரட்டும்.” என்றவள்.. அதோடாவது விட்டு இருந்து இருக்கலாம் தாமரை..

ஆனால் விடாது. “இன்னொன்று முக்கியமானது என் பொண்ணு மேல போட்ட கேசை நீ வாபஸ் வாங்கிக்கனும்.” என்று சொன்னவளின் இந்த பேச்சில்.

உண்மையில் ஸ்ருதிக்கு பிரச்சனையா.? இல்லை தாமரைக்கா என்று அனைவருக்கும் சந்தேகம் வந்து விட்டது..

மகி கூட. “இது தானா இன்னும் இருக்கா…? இருந்தா அதையும் சேர்த்து சொன்னா.. ஒட்டு மொத்தமா நீங்க சொன்னதை எல்லாம் செய்ய எங்க எல்லோருக்கும் வசதியா இருக்கும்..” என்று மகி சொன்ன போது தான் தாமரைக்கு புரிந்தது மகி தன்னை கிண்டல் செய்கிறாள் என்பதே..

இவள் தன்னை கிண்டல் செய்ய. தன் அண்ணன்.. அண்ணன் மகன் அதை பார்ப்பதா… ?என்ற ஆத்திரத்தில் ஒன்று இல்லை இரண்டு வார்த்தைகளை தாமரை அன்று விட்டாள்..

அது. “ உன் அப்பன் அவள் மயக்கத்தில் உன் அம்மாவை சாவ விட்டான். நீ இவள் மயக்கத்தில் என் பொண்ணை சாக விட பார்க்கிறியா..?” என்று குரு மூர்த்தியிடன் கேட்ட தாமரை

அதோடு விடாது… சாரதாவிடம்.. “ அது எப்படி உங்க வீட்டு பெண்கள் எங்க வீட்டு ஆம்பிளைங்களை அவ்வளவு சீக்கிரத்தில் கை கீழே போட்டு கொள்கிறிங்க.. நீ என் அண்ணனை.. காதலிக்கும் போது நீ எந்த அளவுக்கு என் அண்ணன் கூட பழகி இருந்தா என் அண்ணனுக்கு கல்யாணம் ஆக ஒரு மகன் பிறந்த பின் கூட உன்னை மறக்க முடியாது என் அண்ணி கூட சரியாக வாழாது இருந்து இருப்பாரு.

உன் போல தான் போல உன் அண்ணன் மகளுமே… குருவுக்கு என் கணவன் என்றால் அத்தனை அன்பு . அத்தனை மரியாதை… ஸ்ருதி என்றால் அத்தனை பிடித்தம் பாசம் வைத்து கொண்டு இருந்தான்..

அவளையும் மீறி உன் கழுத்தில் இந்த தாலியை போட்டு விட்டு இருக்கான் என்றால் என் அண்ணன் மகன் கூட நீ எந்த எல்லை வரை போனியோ…” என்ற இந்த பேச்சில் தான் மகி தாமரையை அடித்து விட்டது.

தாமரைக்கு மகி அடித்ததுமே அதிர்ச்சி அந்த அதிர்ச்சியில் குரு மூர்த்தியையும் தன் அண்ணனையும் தான் பார்த்தாள் தாமரை..

ஆனால் அவர்களோ இவள் பேசிய பேச்சுக்கு தான் இவளை கோபமாக பார்த்தார்களே தவிர. மகி தாமரையை அடித்ததை கேட்கவில்லை.. அதை பெரியதாக கூட எடுத்து கொள்ளவில்லை..

ஆனால் தாமரைக்கு அது எவ்வளவு பெரிய அவமானம்.. தாமரை அடித்தாள் தன் அண்ணன். மகி சின்ன பெண்ணிடம் அடி வாங்கியதோடு அதை தன் அண்ணனும் அண்ணன் மகனும் கண்டு கொள்ளாது இருப்பதில் ஆத்திரமாக மகியை கை ஓங்கி கொண்டு சென்றவளை குரு மூர்த்தி தான் தடுத்து நிறுத்தியது…

“அத்த நான் உங்க கிட்ட முதலில் இருந்தே சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க போங்க போங்க என்று… உங்க பேச்சு எல்லாம் எப்படி இருக்கு தெரியுமா அத்த. இப்போ நான் சொல்றேன் அத்த.. சித்தார்த் ஸ்ருதி கூட வாழுறது முடியாத விசயம்.” என்று சொன்ன போது தாமரை மகியிடம் தான் வாங்கிய அடி.. தான் அசிங்கப்பட்டது அனைத்துமே மறந்து குரு மூர்த்தியின் கையை கெட்டியாக பிடித்து கொண்ட தாமரை.

“குரு நீ அப்படி சொல்ல கூடாது… நீ மனசு வைத்தா ஸ்ருதியை வாழ வைக்க முடியும் குரு… ஸ்ருதிக்கு நீ தானே முன்ன இருந்து இந்த கல்யாணத்தை முடித்து வைத்த…” என்று மன்றாடிக் கொண்டு இருந்த அத்தையை பார்க்க குரு மூர்த்திக்குமே பாவமாக தான் இருந்தது..

ஆனாலுமே அவனாலும் என்ன செய்ய முடியும்…? அதை தன் சொன்னான்..

“அத்த நான் ஒத்து கொள்கிறேன்.. ஸ்ருதிக்கு நான் தான் கல்யாணம் செய்து வைத்தது.. ஆனால் அப்போ மாமா செய்து வைத்த விசயம் எதுவும் தெரியாது.. அதோடு ஸ்ருதி விபத்து செய்தது… ஈஸ்வரியின் அப்பா அம்மா என்றும் தெரியாது..

அதோடு இதோ இப்போ கூட நீங்க என்ன மாதிரி வார்த்தைகளை விடுறிங்க. எப்படி அத்தை இது ஒத்து போகும்..?” என்று கேட்டவனிடம் தாமரை மீண்டுமே ஆக்ரோஷமாக பேச ஆரம்பித்து விட்டாள்..

குரு மூர்த்திக்கு மட்டும் அல்லாது அங்கு இருந்த அனைவருக்குமே இப்போது சந்தேகம் வந்து விட்டது.. ஸ்ருதி சித்தார்த்தின் மீது பைத்தியம் ஆனது போல தாமரைக்கு மகளின் வாழ்க்கை இப்படி ஆனதில் புத்தி பேதலித்து விட்டதோ என்று…

தாமரை அன்று அத்தனை பேசியும் யாரும் ஸ்ருதியின் பக்கம் யோசிக்காது தன் கூட பிறந்த பிறப்பு… தான் பாசத்தோடு வளர்த்த தன் அண்ணன் மகன். இதோ தன் கணவனுமே தன் மகளை விட குருவை தானே பெரியதாக நினைக்கிறார்..

ஆனால் எனக்கு அப்படி கிடையாது… எனக்கு என் மகள் வாழ்க்கை தான் முக்கியம்… என் மகளுக்காக என்ன என்றாலும் செய்து முடிப்பேன்..என்று மனதில் நினைத்து கொண்ட தாமரை அதற்க்கு உண்டான வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டார்…

இந்த இடைப்பட்ட நேரத்தில் ஸ்ருதி மகியின் பெற்றோர் மீது கார் ஏற்றி விபத்து செய்து கொன்ற குற்றத்திற்க்கு அவள் மீது ஒரு வழக்கும் குரு மூர்த்தி விசுவநாதன் மீது தன் தந்தையின் இறப்பை கேவலப்படுத்தியதிற்க்கு மானநஷ்ட கேசும் போடப்பட.

அந்த கேஸ் நீதி மன்றத்தில் வழக்கில் வர.. இதோ அதற்க்காக விசாரணைக்கு என்று இன்று அனைவரும் நீதி மன்றத்தில் வந்து இருந்தனர்..

ஸ்ருதியுமே வந்து இருந்தாள்.. தாலி தாலி என்று கேட்கிறாளே என்று வீட்டில் இருந்த அம்மன் கழுத்தில் போட்டு வைத்து இருந்த தாலியை தான் ஸ்ருதியின் கழுத்தில் போட்டு வைத்து இருந்தாள் தாமரை..

காரணம் வீட்டு வேலையாட்கள் என்ன தான் கழுத்தை மறைத்து உடை போட்டு கொண்டு இருந்தாலுமே அதை கிழிப்பது போல ஆவேசத்துடன் வரும் ஸ்ருதியை இவர்களாள் ஒன்றும் செய்ய முடியாது போய் விடுகிறது.

அதிலும் சமையல் செய்யும் பெண்மணியின் தாலியை இழுக்க பார்த்த ஸ்ருதியை அந்த சமையல் செய்யும் பெண்மணி அடித்து விட்டார்..

அதை பார்த்த தாமரையோ.. “ எப்படி நீ என் மகளை அடிக்கலாம் என்று..” கத்தியதில்..

அந்த பெண்மணி தீர்த்து சொல்லி விட்டார்.. “ தோ பாரும்மா நீ சம்பளம் அதிகமா தான் தர.. நான் இல்ல என்று சொல்லலே… ஆனா என் புருஷன் ஆட்டோ ஒட்டுறவர்.. இப்படி உன் மகள் என் தாலியை பிடித்து இழுத்தா அது என் மனசுக்கு ஒரு அச்சாணியா தோனாதா.. உங்களுக்கு எப்படியோம்மா.. ஆனா எனக்கு… “ என்று விட்ட அந்த பெண்மணியை தாமரையினால் ஒன்றும் சொல்ல முடியவில்லை…

காரணம் வேறு ஒரு சமையல் செய்யும் பெண்மணியை தேடுவது அவ்வளவு எளிதான விசயம் இல்லை… ஸ்ருதியை பற்றி அனைவருக்கும் தெரிந்து விட்டது..

சமையல் வேலை இல்லை என்பதினால் தான் தாமரையினால் ஸ்ருதியை பார்த்து கொள்ள முடிகிறது.. ஏற்கனவே யாரும் இல்லாது அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே ஸ்ருதியை பார்த்து கொண்டதில் அத்தனை முடியாது போய் விட்டது… மீண்டும் அது போல ஆனால் கண்டிப்பாக தன்னால் முடியாது தனக்குமே வயது ஆகிறது தானே என்று நினைத்து கொண்டவள்..

பின் தான் தன் பூஜை அறையில் இருந்த அம்மனின் கழுத்தில் இருந்த தாலியை ஸ்ருதியின் கழுத்தில் போட்டு விட்டு.

“தோ பாரு ஸ்ருதி உன் கழுத்திலும் தான் தாலி இருக்கு.. இனி யாரின் தாலியையும் நீ கேட்க கூடாது என்ன.?” என்று சொன்ன தாமரையின் பேச்சை ஸ்ருதி காதில் வாங்கவில்லை என்றாலும், தன் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து ஸ்ருதி மகிழ்ந்து தான் போய் விட்டாள்..

அதில் இருந்து யாரின் தாலியையும் ஸ்ருதி பரிப்பது இல்லை.. தாமரை கூட நினைத்து கொண்டாள்.. இதை முன்னவே செய்து இருந்து இருக்கலாம் என்று நினைத்து.

அதனால் இப்போது அந்த பயம் இல்லாது தான் ஸ்ருதியை நீதி மன்றத்திற்க்கு தாமரை அழைத்து வந்து இருந்தாள்..

அவளுக்கு ஒரு நம்பிக்கை கெட்டதிலும் ஒரு நல்லதாக ஸ்ருதி இப்படி இருப்பதை வைத்து தண்டனை கிடைக்காது என்று.

தாமரை நினைத்தது சரி தான். ஆனால் தண்டனை கிடைக்காதது போல் தான் இனி நீதிமன்றம் சொல்லும் மருத்துவமனையில் தான் ஸ்ருதி தங்க வேண்டும்.. அங்கு வைத்து தான் இனி ஸ்ருதிக்கு வைத்தியம் பார்க்க முடியும்..

அது அனைவருக்கும் பார்க்கும் ஒரு மருத்துவமனையாக தான் இருக்கும் என்பதும். தன் மகளுக்கு என்று ஸ்பெஷலாக இவர்கள் பார்ப்பது போல இருக்காது என்பதும் தெரியவில்லை…

இதோ நீதிபதியின் முன் ஸ்ருதி தான் நின்றாள்.. ஸ்ருதியின் சார்பாக நியமித்து இருந்த வக்கீலுக்கு அத்தனை அதிகம் வேலை எல்லாம் இல்லாது மிக எளிதாகவே பேசி தன் வாதத்தை இரண்டே இரண்டு வார்த்தைகளில் முடித்து கொண்டு விட்டார்.

அதாவது.. “ என் கட்சிக்காரர் மனநிலை சரியில்லாதவர்…” என்று சொன்னதோடு ஸ்ருதியின் மருத்துவ அறிக்கையையும் ஸ்ருதிக்கு வைத்தியம் பார்க்கும் மனநல மருத்துவரின் சாட்சியுமே போது மானதாக இருந்தது..

அதை தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டி… ஸ்ருதியிடம். அந்த நீதிபதியுமே இரண்டு வார்த்தை தான் பேசியது.

“உன் பெயர் என்ன..? ஸ்ருதி சரியாக பதில் சொன்னாள்..

பின்… “ என்ன படித்து இருக்கிங்க…?.”

அதற்க்குமே ஸ்ருதியிடம் இருந்து சரியான பதில் தான் கிடைத்தது.. என்ன இது என்று அந்த நீதிபதி யோசிக்கும் போதே ஸ்ருதி தன் கழுத்தில் இருந்த தாலியை காட்டி.

“இது நீ தானே எனக்கு கட்டின.. சொல்.. நீ தானே கட்டின..?” என்று கேட்டவளின் பேச்சில் அந்த நீதிபதிக்கு புரிந்து விட்டது..

ஸ்ருதிக்கு அரசு மேற்பார்வையில் அரசு மனநலமருத்துவமனையின் சிகிச்சை செய்ய அந்த நீதிபதி உத்தரவு இட்டார்.. தாமரை மறுத்து ஏதோ பேச வர.. அதை எல்லாம் அந்த நீதிபதி காதில் வாங்குவதாக இல்லை..

விசுவநாதன் நினைத்து இருந்தால், குறைந்த பட்சம் தன் மகள் தன் மேற்பார்வையில் சிகிச்சை செய்கிறோம் என்று செய்து இருந்து இருக்க கூடும்.

ஆனால் விசுவநாதனுக்கோ.. அனைத்துமே வெறுத்து விட்ட நிலையில் தான் அவர் இருந்தது.

முதல் அடி அவருக்கு சித்தார்த் அம்மாவாக சாரதாவை பார்த்தது.. அதிலேயே அவர் கொஞ்சம் ஆடி போய் விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்..

பின் அடுத்த அடுத்த அடியாக தொடர்ந்து தன் மகள் புத்தி பேதலித்து போனது.. தன் மாப்பிள்ளை குரு மூர்த்தி தன்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி போய் விட்டது.. அதுவும் குரு மூர்த்தி மகியின் கழுத்தில் தாலி கட்டியதில் அதுவும் தான் மகியை ஏதாவது செய்து விடுவேன் என்று தெரிந்து தனக்கு தெரியாது மகியின் பாதுகாப்புக்கு என்று ஆள் ஏற்பாடு செய்தது.. என்று ஒன்றன் பின் ஒன்றாக அவருக்கு விழுந்த அடியில் அவர் ஒடுங்கி தான் போய் விட்டார்.

இன்னும் கேட்டால் குரு மூர்த்தி இது வரை தன்னிடம்… எதிர்த்து சண்டை போடவில்லை. ஆனால் சண்டை போட்டு இருந்து இருந்தால் கூட படவாயில்லையாக இருந்து இருக்கும் என்று அவர் நினைக்கும் படி தான் குரு மூர்த்தியின் நடவடிக்கைகள் இருந்தது..

விசுவநாதன் சமீபத்தில் கேள்விப்பட்ட செய்தி.. குரு மூர்த்தி அந்த பப்பை விற்க விலை பேசி கொண்டு இருப்பதும்…

அடுத்து ஏற்கனவே நல்ல முறையில் இயங்கி கொண்டு இருக்கும் ஒரு கார் ஷோரூமை வாங்க வேண்டி விலை பேசி கொண்டு இருப்பதும் தான்..

கேள்விப்பட்ட இந்த விசயம் விசுவநாதனுக்கு மகிழ்ச்சியை தான் தந்தது.. அந்த பப் தனக்காக தான் வாங்கியது.. குரு மூர்த்தி பணம் கொடுத்தான்.. ஆனால் அதை தனக்காக வேண்டி எடுத்து நடத்தும் போது கூட விசுவநாதன் சொன்னார் தான்..

“உன் படிப்புக்கு இது வேண்டாம்.. நான் தான் படிக்காதவன் உனக்கு என்ன..? என்று…?”

ஆனால் அதை எடுத்து நடத்தினான்.. அதற்க்கு உண்டான காரணம் விசுவநாதனுக்கு தெரியும். தன் மீது அவனுக்கு இருக்கும் அன்பு.. என்று..

இப்போது அது விற்பதற்க்கு உண்டான காரணமும் விசுவநாதனுக்கு தெரிந்து தான் இருந்தது… தான் சாரதாவுக்கு செய்ததை அவன் மனது ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுமே…

இதோ தன் முன் தான் குரு மூர்த்தி நிற்கிறான்.. ஆம் அடுத்த விசாரணை இவர்களுடையது தானே…

குரு மூர்த்தியும் விசுவநாதனும் சேர்ந்து தானே அந்த விபத்தை வேறு மாதிரியாக மாற்றியது,’அதற்க்கு உண்டான தண்டனையாக மான நஷ்ட ஈடாக ஒரு கோடி மகேஷ்வரிக்கு விசுவநாதனும் குரு மூர்த்தியும் தர வேண்டும் என்ற தீர்ப்பை நீதி பதி வழங்க… குரு மூர்த்தி அவனின் ஈஸ்வரிக்காக தன் சொத்து முழுவதையுமே எழுதி கொடுத்து விடுவான்..

ஒரு கோடியை தர மாட்டானா என்ன.? கொடுக்கிறேன் என்று விட்டான்.. ஆனால் அதை அவனின் ஈஸ்வரி வாங்கி கொள்ள மறுத்து விட்டாள்.

அவளின் கோரிக்கை.. இது தான் இருந்தது அனைத்து செய்தி தாள்களிலும் மீடியாக்களிலும் தன் தந்தையின் இறப்பை பற்றி வெளியிட வேண்டும் என்பதே.

அதற்க்கு மகேஷ்வரி சொன்ன காரணம்.. என் தந்தையிடம் பயின்ற நிறைய பேர்… நல்ல நிலையில் நல்ல ஒரு கவுரவமான நிலையில் என் தந்தையின் வழிகாட்டலில் இருக்கிறார்கள்..

அவர்களில் ஒரு சிலர் என் மாமா அத்தையிடம் பேசியில் பேசியது நல்ல மாதிரியாக இல்லை.. சாத்தான் வேதம் ஒதக்கூடாது போலான பேச்சாக அது இருந்தது..

அதனால் அது மட்டும் செய்தால் போதும்.. அதோடு பணத்தை கொடுத்து அனைத்துமே சரி செய்து விட முடியாது.. எனக்கு வேண்டியது தண்டனை மட்டும் தான். பணம் தேவையில்லை என்று சொல்லி விட்டாள்..

விசுவநாதன். குரு மூர்த்தியின் மீது எந்த தவறும் கிடையாது. ஒரு பெண்ணின் தந்தையாக நான் தான் இதை செய்தேன்…என்று குரு மூர்த்தியை காப்பற்ற மொத்த பழியையும் விசுவநாதன் தன் மீது போட்டு கொண்டார்.

இடையில் குரு மூர்த்தி இல்லை என்று ஏதோ சொல்ல வந்தவனை பேசவிடவில்லை.

ஸ்ருதிக்கு தந்தை நான் தான் என் மகளின் மீது அக்கறை என்னை தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்..

என் தங்கை இறந்த பின் என் தங்கை மகன் எனக்கு இரண்டாம் பட்சம் தானே. என்று தன் மீது போட்டு கொள்ள. விசுவநாதனுக்கு மூன்று ஆண்கள் சிறை தண்டனை கொடுத்து நீதிபதி தீர்ப்பு வழங்கி விட. மகி கேட்டு கொண்டது போல அனைத்து செய்திதாள்கலும் மீடியா ஏன் யூட்யூப் என்று அனைத்திலுமே சிங்கப்பெருமாள் விபத்து பற்றி உண்மையான செய்து வெளி வந்தன..

முன் பேசியில் அழைத்து பேசியவர்கள் கூட மீண்டும் அழைத்து மன்னிப்பு கேட்டனர்.

இதோ தாமரை தான் நீதிபதி கொடுத்த தீர்ப்பு படி மகளை மனநல காப்பகத்திலும் கணவனை சிறை சாலையிலும் அனுப்பி விட்டு அத்தனை பெரிய பங்களாவில் தாமரை தனித்து வீடு திரும்பியது..

அது என்னவோ தாமரை அத்தனை கோபமாக கத்தியள் இப்போது அதற்க்கு எதிர்பதமாக அமைதியாகவே இருந்தார்…

வீட்டு மேல் வேலை செய்யும் பெண்.. தாமரையின் பக்கத்து வீடான கிருஷ்ண மூர்த்தியின் வீட்டிற்க்கும் செய்யும் பெண் தான்.

அந்த பெண் கிருஷ்ண மூர்த்தியிடம்.. “ சார் உங்க படிப்புக்கு நான் இது போல பேசுவது தப்பு தான்.. உங்க தங்கை முன் எல்லாம் ரொம்ப கோபமா கத்துவாங்க திட்டுவாங்க. ஆனா இப்போ எல்லாம் அது போல இல்லங்க சார்..

சமையல் செய்பவங்க கூட என் கிட்ட சொன்னாங்க. என்ன சமைக்கட்டும் என்று கேட்டா … “ உன் விருப்ப படி செய்..” என்று சொல்றாங்க சரியா கூட சாப்பிடுவது இல்ல.” என்ற அந்த பெண்ணின் பேச்சில் கிருஷ்ண மூர்த்தி இதை தான் சொன்னார்.

“பெண் இப்படி ஆகி கணவனும் இப்போ சிறையில் எனும் போது ஒரு பெண்மணி வகை வகையாவா சாப்பிடுவாங்க… ஆனா பேசாது இருப்பது.. நான் பார்க்கிறேன்.. “ என்று சொன்ன கிருஷ்ண மூர்த்தி சொன்னது போல மகன் குரு மூர்த்தியுடன் தாமரையின் வீட்டிற்க்கு சென்றார்…

இவர்கள் சென்ற போது தாமரை ஹாலில் தான் அமர்ந்திருந்தாள்.. இவர்களை பார்த்ததும்..

“வாங்க..” என்று அழைத்ததோடு எதிரில் இருந்த இருக்கையை காட்டி… அமரும் மாறு சொன்னவள்..

“ஏதாவது சாப்பிடுறிங்கலா..? குடிக்கிறிங்கலா…” என்று வேறு கேட்டு தங்களை உபசரித்த தங்கையை கிருஷ்ண மூர்த்தி நம்ப முடியாது தான் தாமரையை பார்த்தது..

அவர் எதிர் பார்த்தது கண்டிப்பாக தங்களை பார்த்ததுமே கோபப்படுவாள். திட்டுவாள் கத்துவாள் என்பது தான். சத்தியமாக இந்த அமைதியை அதுவும் தன் தங்கையிடம் இருந்து கிருஷ்ண மூர்த்தி எதிர் பார்க்கவில்லை…

தாமரையின் இந்த அமைதி ஒரு அண்ணனாக அவரை வேதனைப்படுத்தியது…. கிருஷ்ண மூர்த்தி எப்போது தாமரை அவளின் காதலிக்காக சுயநலமான வேலைகளை செய்தாளோ.. அன்றில் இருந்து தங்கையின் மீது இருந்த அந்த பாசம் குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

சரியாக சொல்வது என்றால் தாமரை தன் செயல்களால் குறைத்து கொண்டாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்..

அதோடு அவளின் மீது கவனத்தையும் பாசத்தையும் செலுத்தும் அளவுக்கு தாமரையின் நிலை இது வரை இருந்தது கிடையாது..

விசுவநாதன் குடும்பம் என்று வந்து விட்டால், அடுத்த அனைத்து விசயமும் அவருக்கு இரண்டாம் பட்சம் தான்.. அவரில் அந்த அதிகப்படியான குடும்பத்தின் மீதும், அவர் தங்கை மீதும் அவர் அவர் வைத்த அந்த பாசம் தானே அவரை சாரதாவை அவ்வாறு செய்ய வைத்தது.

தங்கை போலவே மனைவியான தாமரையின் மீதும் அன்பு காதல் என்று பார்த்து கொண்டதால் கிருஷ்ண மூர்த்தி இது வரை தாமரையை பற்றி எல்லாம் அதிகம் நினைத்ததூ கிடையாது.. நினைத்தால் கோபம் தான் அவருக்கு வரும் அவள் தனக்கு செய்த துரோகத்தை நினைத்து..

ஆனால் இப்போது தங்கையின் இந்த அநாதரவான நிலையை பார்த்து முதன் முதலில் தன் தங்கையின் மீது அனுதாபம் எழுந்தது..

அதில். “ நீ தனியா இங்கு இருக்க வேண்டாம்.. அங்கு நம்ம வீட்டிற்க்கு வந்து விடு தாமரை..” கிருஷ்ண மூர்த்தி தன் தங்கையை தன் வீட்டிற்க்கு அழைத்தவர்..

தன் பக்கத்தில் எதுவும் பேசாது தன் தங்கையை யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்த தன் மகன் குரு மூர்த்தியிடம்.

“குரு உன் அத்தையை நம்ம வீட்டிற்க்கு கூப்பிடு..” என்றும் சொல்ல.

அப்போதும் குரு மூர்த்தி வாய் திறவாது அதே யோசனையான முகபாவனையில் தாமரையையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்த கிருஷ்ண மூர்த்தி தன் மகனும் தன் அத்தையை நினைத்து தான் கவலை படுகிறான் என்று நினைத்து மீண்டும் தாமரை பக்கம் திரும்பிய கிருஷ்ண மூர்த்தி..

“தாமரை விசு வரும் வரை அங்கு நம்ம வீட்டில் வந்து இரும்மா…” என்றதும் தாமரை தன் அண்ணனை பார்த்து சிரித்தாள்..

அவளின் அந்த சிரிப்பில் உயிர்ப்பு இல்லை.. அதே சமயம் கிண்டலும் கிடையாது.. தன் அண்ணனை நேர்க் கொண்டு பார்த்த தாமரை..

“எனக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருடத்தில் இப்போது தான் முதல் முறை நீங்க உங்க வீட்டிற்க்கு கூப்பிடுறிங்க ண்ணா..” என்று சொன்னவளின் பேச்சில் கிருஷ்ண மூர்த்தி தன் தங்கையையே பார்த்தாள்..

ஆனால் தாமரை இப்போது தன் அண்ணனை பார்க்கவில்லை… அங்கு இருந்த விநாயகர் சிலையையே பார்த்து கொண்டே தொடர்ந்து தாமரை….

“ ஸ்ருதியின் பிரசவம் கூட இங்கு என் வீட்டில் தான் நடந்தது ண்ணா… இது வரை ஒரு நாள் நையிட் கூட நான் அங்கு தங்கினது கிடையாது..” என்றவளின் பேச்சு நூத்துக்கு நூறு உண்மை தான்..

விசுவநாதன் பக்கத்து பக்கத்து வீடு தான் தாமரையின் வீடு என்பதினாலோ என்னவோ தனிப்பட்டு எல்லாம் விசுவநாதன் தன் தங்கையை இது வரை அழைத்தது கிடையாது… அப்படி தாமரையும் இது வரை நடந்து கொள்ளவில்லை என்பது வேறு விசயம்..

இன்று தங்கையின் மகளும் இப்படி இருக்கு கணவனும் துணை இல்லாது இருக்கவும் தான் விசுவநாதன் தன் தங்கையை அழைத்தது.. தங்கையின் இந்த பேச்சில் விசுவநாதன் என்ன சொல்வது என்று இருந்த போது..

தாமரை.. “ ரொம்ப எல்லாம் யோசிக்காதிங்க ண்ணா. நான் என்னை பார்த்து கொள்வேன்..” என்று சொன்னவள் பின்..

“அன்னைக்கு என்னை உங்க கண்ணுக்கு தெரியலையாண்ணா…?” என்றும் ஒரு மாதிரி குரலில் கேட்டவளுக்கு விசுவநாதன்..

“அன்னைக்கு நீ பேசியதும் நல்ல மாதிரியா இல்லையே தாமரை… நீ செய்தது.. நீ நடந்து கொண்டது.. கொஞ்சம் நீ தனியா இருந்து யோசித்து பாரு..” என்று சொன்ன விசுவநாதனிடம் தாமரை..

“தனியா தானே இனி கொஞ்ச நாளுக்கு நான் தனியா தானே இருக்க போறேன் .. வேண்டிய மட்டும் யோசித்து கொள்கிறேன். ண்ணா..” என்று சொன்ன தாமரையிடம் விசுவநாதம் மீண்டும் என்னவோ பேச ஆரம்பித்தவரின் கையை பிடித்து பேச வேண்டாம் என்பது போல சொன்ன குரு மூர்த்தி..

தாமரையிடம்.. “ ஏதாவது எல்ப் வேண்டும் என்றால் என்னை கூப்பிடுங்க அத்த.?” என்று சொன்ன தன் அண்ணன் மகனிடம் தாமரை..

“கண்டிப்பா…” என்று சொன்ன விதமே ஒரு மாதிரியாக தான் இருந்தது.

“சரியத்தை நாங்க வரேன்.” என்று சொன்னவனிடம் தாமரையும் சரிப்பா என்று சொல்லி நல்ல மாதிரியாக தான் வழி அனுப்பி வைத்தார்..

தங்கள் வீடு வந்த பின் மகனிடம் கிருஷ்ண மூர்த்தி தான்… “ ரொம்ப உடஞ்சி போயிட்டா குரு.. இது போல நான் அவளை பார்த்ததே கிடையாது..” என்று உண்மையான வருத்ததில் சொன்னவரிடம்..

குரு மூர்த்தி இது வரை கேட்காத கேள்வியை கேட்டான்..

“ப்பா ஒன்னு கேட்பேன்.. ஒரு மகனா இதை நான் உங்க கிட்ட கேட்க கூடாது தான்.. ஆனால் சாரதா அவங்க விசயம் தெரிந்ததில் இருந்து என் மனதை அரித்து கொண்டு இருக்கும் ஒரு விசயம் இது.. இது உங்க கிட்ட தான் கேட்டு ஆகனும் அதனால கேட்கிறேன்..” என்ற குரு மூர்த்தியின் இந்த அனுமதிக்கு கிருஷ்ண மூர்த்தியில் தலை தன்னால் ஆடி சம்மதம் சொன்னாலுமே மகன் கேட்கும் கேள்வி என்னவாக இருக்கும் என்று அவர் மனது தவிக்க தான் செய்தது..

காரணம் கிருஷ்ண மூர்த்திக்கு தன் மகனை பற்றி நங்கு தெரியும்… தன் மகனிடம் அத்தனை நெருக்கம் அவருக்கு இல்லை என்றாலுமே, மகனை பற்றி நன்கு தெரிந்து வைத்து இருப்பவர் அவர்.

குரு மூர்த்தி இது போல தயக்கத்துடன் எல்லாம் தான் கேட்க நினைப்பதை அனுமதி கேட்டு எல்லாம் கேட்க மாட்டான்.

இப்போது இந்த தயக்கத்தோடு தன்னை கேட்கும் இந்த கேள்வி தனக்கு சங்கடத்தை கொடுக்கும் என்று நினைத்தாலுனே கிருஷ்ண மூர்த்தி கேள்.. என்று தான் சொன்னார்..

அவர் நினைத்தது போல் தான்… “ கட்டாயப்படுத்தி மேரஜ் தான் செய்து வைக்க முடியும்.. வாழ எல்லாம் வைக்க முடியாது ப்பா… நீங்க வாழாது நான் பிறக்கவில்லை ப்பா…” என்று கேட்டவனின் கேள்வியில் தன் மகனை அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்த கிருஷ்ண மூர்த்தி..

பின் தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்தவரின் மனது அத்தனை சங்கடப்பட்டது இருந்தும் தன் மகனுக்கு கிருஷ்ண மூர்த்தி பதில் அளித்தான் தான்…

“ஓரு நல்ல பெண்மணியின் ஒழுக்கத்தை தினம் தினம் அவள் வாயிலில் அரைப்பட்டு போவதை நான் விரும்பவில்லை குரு… அவள் உன் அம்மா தான்… ஆனாலும் அவள் பேசியதை நான் உன் கிட்ட சொல்லி தானே ஆக வேண்டும்.. அதுவும் என் கிட்ட இந்த மாதிரி ஒரு கேள்வி வந்த பின்..” என்று சொன்னவர்.

பின் என்ன நினைத்தாரோ… “ ஒரு அப்பாவா உன் கிட்ட இது பேச கூடாது தான்.. ஆனாகும் சொல்றேன்.. உன் அம்மா இரண்டாம் முறை தற்கொலைக்கு முயற்ச்சி.. தப்பு தப்பு ட்ராமா ஆட காரணம். உனக்கு தங்கையோ.. தம்பியோ வேண்டும் என்று தான்..” என்று சொன்னவர் அந்த இடத்தில் நிற்காது.. நிற்க முடியாது சென்று விட்டார்.
 
Active member
Joined
May 12, 2024
Messages
223
Thamarai yoda amaithikku pinnala enna irukku???
Vanmam??? Su***de attempt pannuwangalo… avanga family ku than adhu kai vandha kalai aache… 🙄🙄🙄

Niraiya spelling mistakes irukku…

And Krishnamoorthy & Vishwanathan names maari pottu irukkeenga…
 
Top