Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yennai kondadaa pirandhavan...22..1

  • Thread Author
அத்தியாயம்…22…1

வசந்த் டி குடித்து முடித்த பின்.. தன் வீட்டை நோக்கி நடந்தான்.. தான் இருக்கும் வீதியில் அவன் கால் எடுத்து வைத்ததுமே அவன் உடல் அத்தனை கூசி போய் விட்டது… கடந்த ஆறு மாதமாக அந்த வீட்டில் தொழில் நடந்து கொண்டு தான் இருக்கிறது..

முதல் நாள் போலவே… ஒரு வித ஒவ்வாமையோடு தான் வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தான் வசந்த்.. தன் எதிர் வீட்டை பற்றி மனதில் நினைக்க கூடாது என்று அவன் நினைத்தாலுமே நினைக்க வைத்து விடுகிறது , வெறிச்சோடி போய் கிடக்கும் தன் வீட்டின் வீதி..

இதே ஆறு மாதம் முன் என்றால், வீட்டு பெண்கள் அனைவரும் வேலைகள் முடித்த பின். வேலைகள் என்றால் வெளி வேலைகளையும் சேர்த்தும் தான் அடங்கும். பெண்களும் ஏதாவது வேலை செய்தால் தான் குடும்பம் ஓடும்..

அப்படி வேலை முடித்து வந்த பின் இருப்பதை வைத்து இரவு சமையல் வேலைகள் முடித்து சாப்பிட்ட பின் பெண்கள் காற்றோட்டமாக வீட்டின் வெளியில் வந்து அமர்வார்கள்..

அங்கு இருப்பது பெரும்பாலான வீடு ஓட்டு வீடுகள் தான்.. அதனால் மாடி எல்லாம் கிடையாது.. அந்த தெருவில் சைக்கில் தான் அதிகம் செல்லும்.. அதிகப்பட்சம்… டூவீலர்.. இது தான் வந்து போகும் வீதி என்பதினால் ரோட்டில் கூட காற்றாட அமர்ந்து விட்டு தான் படுக்க செல்வார்கள்..

ஏன் என்றால் யாரின் வீட்டிலும் ஏசி இல்லாது இருப்பதால், வெக்கை தணிய கொஞ்சம் காற்றாட அமர்ந்தால் தான் உடல் பிசு பிசுப்பு கொஞ்சமாவது போகும்…

அன்று அப்படி ஒவ்வொரு வீட்டு பெண்மணிகள் வெளியில் அமர்ந்து இருப்பது போய் இப்போது எல்லாம் வெளி வேலைகளையும் கூட சீக்கிரமே முடித்து விட்டு, இப்போது வீடு வந்து அடைந்து கொள்கிறார்கள் பெண்கள்..

காற்று வராது போனால் கூட பரவாயில்லை என்று கதவு, ஜன்னல், இறுக்க சாத்தியும் கொள்கிறார்கள்.

இதில் என்ன விசேஷம் என்றால், முன் ஆண்கள் இது போல வெளியில் நிற்க மாட்டார்கள்.. ஆனால் ஒரு சில சபல கேஸ்கள்.. நோட்டம் இட நிற்க.. மனைவிமார்கள்.. தத்தம் கணவன்மார்களை தக்க வைத்து கொள்ள அவர்களால் என்ன முடியுமோ, அந்த விதத்தில் வெளியில் வராது பார்த்து கொள்வதில்..

தான் இருந்த வீதி இப்படி வெறிச்சோடி கிடப்பதை பார்த்து கொண்டே வந்தவன் தன் வீட்டின் முன் வீடு வந்த போது தான் தன் வீட்டு எதிரில் இருக்கும் அந்த தொழில் செய்யும் வீட்டில் ஒரு பெரிய கார் வந்து நின்றது..

அந்த வீட்டில் பெரிய கார் வந்து நிற்பது ஒன்றும் புதியது கிடையாது தான்.. இன்னும் கேட்டால் அந்த வீதியில் கார் வருவதே அந்த வீட்டினால் மட்டும் தான்..

காரில் எப்போதும் ஆண்கள் தான் வந்து இறங்குவது.. ஆனால் இந்த முறை ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு அந்த தொழில் செய்யும் வீட்டில் கொண்டு செல்வது அவன் பார்த்தது இது தான் முதல் முறை.

மூன்று பெண்களோடு பிறந்த வசந்தினால் அதை பார்த்த பின் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை…

அதற்க்கு என்று சினிமாவில் காண்பிப்பது போல ஓடி சென்று அந்த நான்கு பேரை அடித்து அந்த பெண்ணை மீட்கும் முயற்ச்சியையும் அவன் செய்ய முயலவில்லை… நின்றது நின்றபடி நின்று விட்டான்…

வசந்த் அப்படி நின்று விட்டது.. தன் வீட்டின் கேட் திறந்த போது தான் ஒரு பெண்ணை காரில் இருந்து வலுக்கட்டாயப்படுத்துவதை பார்த்து நின்றது..

வசந்தின் தாயார் ஏற்கனவே.. மகன் வெளியில் போய் இன்னும் வீடு வரவில்லையே என்று வாசலையே பார்த்து கொண்டு இருந்தார்.. என்ன செய்வது ஒரு தாயாக அதுவும் கணவன் இல்லாது ஒத்த பெண்மணியாக மூன்று பெண்களோடு தன் எதிர் கால வாழ்க்கையின் ஒளியாக மகனை மட்டுமே நம்பிக் கொண்டு இருக்கும் அந்த பெண்மணிக்கு எதிர் வீடு இப்படி ஆனதில் மகனையுமே கவனிக்கும் நிலை அவருக்கு…

அப்படி இருந்தவர்.. கேட் சத்தம் கேட்டும் இன்னுமே மகன் வீட்டிற்க்குள் வராது போனதில் அவர் வெளியில் வந்தார்..

வந்தவர் கண்களுக்கு தெரிந்தது மகன் கேட்டை பிடித்து கொண்டு எதிர் வீட்டை பார்த்து கொண்டு இருப்பதை தான்.. மனது பகீர் என்று ஆகி விட்டது..

அதில் “வசந்த்… அங்கு என்ன செய்யிற..?” இதை கொஞ்சம் கோபமாக தான் வசந்தின் அம்மா கேட்டது…

அன்னையின் குரலுக்கு கூட திரும்பி பாராது அந்த வீட்டையே பார்த்து கொண்டு இருந்தவன் கண்ணுக்கு அப்போது தான் அந்த பெண்ணின் முகம் மிக தெளிவாக தெரிந்தது..

அந்த பெண்ணின் முகம் பார்த்தவன். எதிர் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தான். ஆனால் அதற்க்குள் தன் கோபக்குரலுக்கு கூட தன்னை திரும்பி பார்க்காத மகனின் அருகில் சென்று விட்ட அந்த தாய் தன் மகன் அந்த வீட்டை நோக்கி செல்வதில் கோபமாக மகனின் கைய் பிடித்து தடுத்தவர் தன் வீட்டை நோக்கி இழுத்து கொண்டு சென்றதோடு கதவையும் அடைத்து கொண்டு விட்டான்…

அதில் வசந்த். “ ம்மா கதவை திறம்மா அந்த பெண்.. என் கூட படிக்கிற பெண்ம்மா ப்ளீஸ்ம்மா கதவை திறங்கம்மா… அந்த பெண்ணை வலுக்கட்டாயமா கூட்டிட்டு போறாங்கம்மா…” என்ற மகனின் இந்த பேச்சில் அந்த அன்னைக்கு ஒரு நிம்மதி.. கூடவே ஒரு திருப்தி தன் மகனை நல்ல முறையில் தான் வளர்த்து இருக்கிறேன் என்றதில்..

இருந்துமே வசந்தின் அம்மா கதவை திறக்கவில்லை.. அவருக்கு இவன் மட்டுமே மகன் இல்லையே அறையில் தூங்கி கொண்டு இருக்கும் மூன்று பெண்களுமே அந்த அன்னைக்கு இருக்கிறார்களே..

அதோடு இவனை நம்பி தான் அடுத்து அனைவரும் எனும் போது அந்த பெண்ணை காப்பாற்ற போய்.. ஏதாவது தன் மகனுக்கு ஆகி விட்டால், என்ன செய்வது.? அதனால் கதவு திறக்காது..

“வசந்த் நீ ஒன்டி ஆளு நீ போய் என்ன செய்ய போற. அதோடு அந்த வீட்டிற்க்கு போலிஸ்ஸெ வந்து போகுது… அப்படி இருக்க நாம என்ன என்று செய்யிறது…? அமைதியா இரு.” என்று மகனை அடக்க.

ஆனால் இளம் ரத்தமான மகனோ.. “ ம்மா அந்த இடத்தில் நம்ம வீட்டு பெண்களை நினைத்து பாருங்கம்மா.” என்ற மகனின் பேச்சு அந்த அன்னைக்கு பகீர் என்று தான் இருந்தது..

ஆனாலுமே.. “ நம்ம வீட்டு பெண்களை நினைத்ததினால் தான் டா. நான் கதவை திற்க்க மாட்டேங்குறேன்…” என்றவர்.

கூடவே.” உன் கிட்ட சொல்ல கூடாது என்று தான் இருந்தேன்.. நான் ஏதாவது சொல்லி நீ அந்த எதிர் வீட்டு ஆளுங்க கிட்ட சண்டைக்கு நின்னா. பின் அவங்க இல்லாத கேஸ் கொடுத்து உன்னை உள்ளே தள்ளிட போறாங்க..” என்றதும்..

வசந்த் அன்னையின் இந்த பேச்சில் யோசனையுடன் தன் அன்னையை பார்க்க அவரோ.

“நான் அந்த கொத்தனார் வேலைக்கு போகும் போதும் வரும் போதும்.. ஒன்னுக்கு மூன்று பெண்களை லட்டு மாதிரி வைச்சிட்டு, நீ எதுக்கு இத்தனை கஷ்டப்படனும்.. அதோட நம்ம கிட்ட வரும் ஆட்கள் எல்லாம் பெரிய பெரிய ஆளுங்க தான்..

உங்க மூன்று பெண்களில் ஏதாவது ஒரு பெண்ணை வரும் அந்த ஆட்களுக்கு பிடித்து விட்டால் போதும்.. உங்க பையனுக்கு படிப்பு முடிந்ததும் ஒரு நல்ல வேலை கிடச்சிடும்..” என்று அன்னை சொல்லும் போதே வசந்த் கதவை மறைத்தார் போல நின்று கொண்டு இருந்த தன் அன்னையை தான்டி கதவை திறக்க முயன்றான்… இப்போது தனக்கு மிகவும் பிடித்த பெண்ணான மகேஷ்வரியோடு, தன்னை பிடிக்கும் தன் வீட்டு பெண்களுக்கும் சேர்த்து வந்த ஆவேசத்தில்.

ஆனால் வசந்தின் அன்னை வசந்தை கதவை திறக்க விடவில்லை…

“ம்மா விடுங்கம்மா விடுங்கம்மா.?” என்று சொன்னவனால் அன்னையை பிடித்து தள்ள முயலவில்லை.

காரணம் அவனுக்கு வலு இல்லாததினால் கிடையாது… தனக்கு இந்த வலு கிடைக்க தன் வலுவை எல்லாம் இழந்து நிற்க்கும் தன் தாயை தள்ள மனது இல்லாததினால்.

“ம்மா உங்க பையனை பெட்டை என்று நினச்சிட்டிங்கலா.. கதவை திறங்கம்மா… திறங்கம்மா…” என்று கோபத்துடன் கூறிய மகனை அடக்கி அமர வைத்த அந்த தாய்… அங்கு இருந்த தண்ணீரை அவனிடம் கொடுத்து குடிக்க வைத்த பின்…

“ஆம்பிள்ளை என்பது சண்டை போட்டு ஜெயிப்பது மட்டும் ஆம்பிள்ளை இல்ல வசந்த்… இப்போ நீ போனா என்ன உன்னால செய்ய முடியும்…? சொல்லு உன்னால என்ன செய்ய முடியும்..?

ஒரு அடி இரண்டு அடி அந்த தடிமாடு போல இருப்பவங்களை உன்னால அடிக்க முடியுமா…? அது எல்லாம் அவனுங்களுக்கு கொசு கடித்தது போல வசந்த்..

ஆனா நீ அடித்த அந்த இரண்டு அடியால், அவங்க நம்மை என்ன என்றாலும் செய்ய முடியும்…? புரியுதா…?”

“ இப்போ அந்த பெண்ணை உனக்கு காப்பத்தனுமா..? அறிவு பூர்வமா யோசி….? அந்த பெண்ணை காப்பத்து… இப்போ வீரத்தோடு விவேகம் தான் கை கொடுக்கும்..” என்று சொன்ன தாயின் பேச்சில் வசந்த் அமைதியாகி விட்டான்..

யோசித்தான்… வசந்துக்கு குரு மூர்த்தியின் கை பேசி எண் தெரியாது.. ஆம் வசந்துக்கு மகியின் கழுத்தில் குரு மூர்த்தி தாலி கட்டியது வரை தெரியும்.. அனைவரும் மகியின் கழுத்தை வம்பு வளர்க்க உத்து உத்து பார்த்தனர் என்றால், வசந்த்… தன் வருங்காலம் தன் கை விட்டு போய் விட்டதே என்று பார்த்து வைத்தான்..

அதனால் குரு மூர்த்தியை தெரியும்.. ஆனால் அவனின் கை பேசி எண் தெரியாது.. ஆனால் குரு மூர்த்தியின் தந்தை கிருஷ்ண மூர்த்தியை பற்றி வசந்துக்கு தெரியும்… இரண்டு வருடம் முன்.. ஏதாவது கேஸ் போடுவது என்றால் ஏழை பாழைகளின் மீது கேஸை போட்டு விடுவதால், அவரை அனுகிய போது தங்களுக்கு உதவி செய்தவர்…

உதவி செய்தது மட்டும் அல்லாது தன் கை பேசி எண்ணை கொடுத்து விட்டு…

“ஏதாவது உதவி தேவை என்றால் இந்த நம்பருக்கு அழையுங்கள்… “ என்றும் சொல்லி விட்டு செல்ல..

அதை வசந்தி தன் கை பேசியில் பதவி செய்து வைத்து இருந்தது நியாபகத்திற்க்கு வர. உடனே கிருஷ்ண மூர்த்தியை உடனே அழைத்து விட்டான்…

அப்போது தான் சித்தார்த் மகியை கடத்தப்பட்டதில் குரு மூர்த்திக்கு அழைத்த சமயம் அது…

அப்போது இரவு பத்தரை மணி… குரு மூர்த்தி வீட்டிற்க்கும் வந்து சாப்பிட்டு விட்டு உறங்கும் முன் தன் கை பேசியில் இருந்த அவனின் ஈஸ்வரியை பார்த்து கொண்டு இருந்த சமயமும் அது தான்…

சித்தார்த் அழைக்கவும்.. இந்த நேரத்தில் ஏன் என்று யோசித்து கொண்டே குரு மூர்த்தி ஒரு வித பதட்டத்துடன் தான் சித்தார்த் அழைப்பை ஏற்றது..

அவன் பயந்தது போலவே… சித்தார்த் எடுத்த உடன். “ மகியை கடத்திட்டாங்க. உங்க குடும்ப ஆளுங்க செய்யும் தில்லு முல்லு எல்லாம் உங்க குடும்ப ஆளுங்களுக்கு மட்டும் தானே தெரியும்.. ( ஆம்பிள்ளை படத்தில் சந்தானம் பேசும் டையலாக் மாடுலேஷனில் படிக்கவும்…)

( அடித்த வரை பதிவு செய்து விட்டேன்..)






 
Active member
Joined
May 12, 2024
Messages
223
Sidhu Guru kitta kettathu 👌🏻👌🏻👌🏻
Vasanth um one side ah love pannana Magi ya???
Ippo appavum Maganum padaiyoda poga porangala
 
Top