Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

yennai kondadaa pirandhavan...23...2

  • Thread Author
அத்தியாயம்…23…2

வசந்த்தை அதற்க்கு மேல் மெய் சிலிர்க்க விடாது மகி.. “குரு ஜீ தான் சொன்னார்…” என்றவள்..

வசந்தோ… … “ குரு ஜீ யா…? என்று கேட்டவன் பின் அவனே யோசித்து “ஓ குரு மூர்த்தியா…?” என்று கேட்டவனிடம் ஆமாம் என்று தலையாட்டிய மகி ..

“பின்.. குரு சார் எங்கே…?” என்றும் கேட்டாள்..

அதில் வசந்தின் மனது ஒரு மாதிரியாகி தான் போனது.. இருந்தும் நிதர்சனம் இது தான்.. மகியை குரு சார் திருமணம் செய்யாது இருந்தாலுமே, தன் குடும்ப சூழ்நிலைக்கு இந்த காதல் கல்யாணம்.. இது எல்லாம் ஒரு பத்து ஆண்டுகளுக்கு தன்னால் நினைத்து கூட பார்க்காத சூழ்நிலையில் இருப்பவனுக்கு, ஆசை வைப்பதற்க்கு கூட தனக்கு தகுதி கிடையாது என்று நினைத்த வசந்த்துக்கு நிதர்சனமும் புரிந்தது.. இப்போது தாங்கள் இருக்கும் நிலையும் புரிந்ததால்,

“ இங்கு நாம இருப்பது நல்லதுக்கு இல்ல.. வா போகலாம்.. என் வீடு எதிர் வீடு தான்.. வா போகலாம்..” என்று சொல்லி வசந்த் மகியை அவசரப்படுத்தினான்..

ஆனால் மகி மீண்டுமே … “ குரு ஜீ எங்கே…?” என்று அதே கேள்யில் நிற்க..

வசந்த்.. “எனக்கு தெரியல மகி.. அவர் சொல்லி தான் எல்லாம் செய்தேன்.. ஆனா அவரால் இங்கு வர முடியல… ஆனா பரவாயில்லை யாரோ ஒரு பெண் உனக்கு உதவி செய்து இருக்காங்க..” என்று சொன்னவன்….

வசந்த் மீண்டுமே .. “ இங்கு ரொம்ப நேரம் இருப்பது நல்லதுக்கு இல்ல வா போகலாம்.” என்று அழைத்தவன் பின் மகி சென்றாலும்..

“யாரோ பெண் என்று சொன்னிங்கலே.. அவங்க எங்கே…?” என்று கேட்டவளிடம்..

இதை எப்படி ஒரு பெண்ணிடம் அவன் சொல்வான்.. அந்த பெண் தனக்கு குளியல் அறையை காட்டி சைகை செய்து இருந்தாலுமே, அவன் அந்த பெண்ணை கண்டது ஒன்றும் நல்ல முறையில் இல்லையே.. நான்கு ஆடவர்களோடு…

அதனால் அதை எல்லாம் விடுத்து… “ இது எந்த மாதிரி இடம் என்று உனக்கு தெரியுமா தெரியல.. ஒரு மாதிரி.. அதனால அந்த பெண்ணை போலீஸ் அரெஸ்ட் செய்து போயிட்டாங்க…” என்றதும்.

வசந்த் பின் அந்த வீட்டில் வாசல் வரை வந்து விட்டவள்… இப்போது நடவாது நின்று விட.. வசந்துமே…

“மகி அவங்க உனக்கு உதவி செய்தாங்க தான்.. ஆனா..அதுக்கு எல்லாம் நாம என்ன பண்ண முடியும் சொல்..”

மகி தனக்கு உதவி செய்த பெண்ணை காவல் துறை அழைத்து கொண்டு சென்றதில் தான் அதிர்ச்சியாகி நின்று விட்டாள் என்று நினைத்து வசந்த் கூறினான்…

ஆனால் மகி சொன்ன. “அய்யோ.. அவங்க அவங்க தான் குரு ஜீ…” என்று சொன்னவளின் வார்த்தை வசந்த்துக்கு முதலில் புரியவில்லை..

“யாரு குரு ஜீ…”

ஒரு சமயம்.. அந்த நான்கு ஆண்களில் ஒருவராக குரு மூர்த்தி இருந்து இருப்பாரோ.. என்று நினைத்து தான் வசந்த் கேட்டது.

ஏன் என்றால் வசந்த்துக்கு கிருஷ்ண மூர்த்தியை தெரிந்த அளவுக்கு, குரு மூர்த்தியை தெரியாது… குரு மூர்த்தியை பற்றி பேச்சில் மட்டும் தான் தெரியும்…

அதுவும் மகியை திருமணம் செய்து கொண்டதால் குரு மூர்த்தி என்ற அந்த பெயர் வசந்தின் மனதில் ஆழ பதிந்து போனது..

பெயர் பதிந்த அளவுக்கு குரு மூர்த்தியின் உருவம் அவனுக்கு பரிட்ச்சயம் இல்லாதது.. அதோடு அந்த அறையில் உள் நுழைந்ததுமே வசந்தின் கவனம் மொத்தமும் அந்த பெண் மீது தான் இருந்ததே தவிர… அந்த நான்கு ஆடவர்கள் மீது இல்லை..

அந்த நான்கு ஆடவர்களில் குரு மூர்த்தி ஒருவராக இருந்து மகிக்கு அந்த பெண்ணை கொண்டு உதவி செய்தானோ என்று நினைத்து கொண்டான்.

ஆனால் மகி சொன்ன. “அய்யோ.. அந்த பெண்.. அய்யோ அய்யோ நானுமே பெண் பெண் என்று சொல்றேன் பாரு… அவர் அவர் தான் குரு..” என்றதுமே..

இது வரை அவசரம் அவசரம்.. இங்கு இருப்பது நமக்கு நல்லது கிடையாது என்று சொல்லி கொண்டு இருந்தவன்.. அவனுமே அந்த வீட்டின் வாசல் முன் மகியோடு நின்று விட்டான்.. அத்தனை அதிர்ச்சி அவனுக்கு…

ஆனால் வசந்தின் தாயார்.. என்ன தான் மகன் கதவை மூடிக் கொண்டு உள்ளே இரு என்று சொன்னாலும்.. கதவை மூடியவர்.. மகள்களை படுக்க சொன்னவர் ஜன்னலை லேசாக திறந்து வைத்து கொண்டு வீதியை பார்த்தவர் கண்ணுக்கு அனைத்துமே தெரிந்தது..

முதலில் தன் மகன் அந்த காவல் அதிகாரியிடம் பேசி கொண்டு இருந்தது.. பின் உள்ளே சென்றது சிறிது நேரம் கழித்து ஒரு பெண்ணையும்.. அந்த வீட்டில் இருக்கும் அந்த பொம்பளையையும் காவலர் வாகனத்தில் அழைத்து கொண்டு சென்றதையும் பார்த்து கொண்டு இருந்தவருக்கு மனது பகீர் என்று அடித்து கொண்டது..

அய்யோ இந்த பெண்ணை தானே மகன் காப்பத்தனும் என்று சொன்னது… வசந்தின் தாய்க்கும் வீதியில் இருந்த வெளிச்சம் கொஞ்சம் குறைவாக இருந்ததால், அந்த பெண்ணை சரியாக பார்க்கவில்லை.

நல்ல பெண் மீது பழி சுமத்துவது.. எத்தனை பெரிய பாவம்… மூன்று பெண்களை பெற்ற தாயாக அவர் மனது பதறி போனாலும், அடுத்து ஒரு மகனின் தாயாக என்ன இன்னுமே மகன் அந்த வீட்டில் இருந்து வரவில்லை என்று நினைத்து பதட்டத்துடன் எதிர் வீட்டு வாசலிலேயே கண்கள் நிலைப்பெற்று இருந்த சமயம் தான் வசந்த் முன் வர மகனின் பின் ஒரு பெண் வருவதை பார்த்தவருக்கு பெருத்த நிம்மதி… மகன் காப்பற்ற நினைத்த பெண் இந்த பெண்ணாக தான் இருக்கும்.. ஒரு ஆசுவாசம் மகள்களை பெற்ற அந்த தாய்க்கு..

ஆனால் அந்த வீட்டை விட்டு உடனே வராது என்ன வாசலில் நின்னு பேச்சு வேண்டி கிடக்கு என்று நினைத்தவர் கதவை திறந்து கொண்டு வெளி வாசலுக்கு வந்தவர்..

“வசந்தா … அந்த பெண்ணை அழச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்குள்ளே வா.” என்று ஒரு அதட்டல் போடவும் தான்… வசந்த் தன் அதிர்ச்சியில் இருந்து சிறிது வெளியில் வந்தது.. சிறிது தான் ஆனால் முழுமையாக அவனால் வெளி வர முடியவில்லை.

காரணம் குரு மூர்த்தியை பற்றி மகியின் கணவன் ஆன பின் அவன் கேட்டு தெரிந்து கொண்ட விசயம் அதிகம். அதில் குரு மூர்த்தியின் தோற்றம் அத்தனை கம்பீரமாக இருக்கும். கத்தை மீசை.. எப்போதுமே கொஞ்சம் தாடியோடு தான் இருப்பான். ஆனால் அந்த தாடி தான் அவனுக்கு இன்னுமே அழகு சேர்க்கும் என்று அவன் கேள்வி பட்ட விசயத்திற்க்கும்.. குரு மூர்த்தியை சற்று முன் அவன் பார்த்த அந்த பெண்ணின் வடிவம்.

உயரம் எடை கூடி என்று இப்போது அந்த எண்ணின் உருவத்தில் தெரிந்த வித்தியாசம் இப்போது அவனுக்கு புரிந்தது தான்..

ஆனால் புடவை… பூ… நகைகள்… என்று நினைத்து கொண்டே அன்னையின் குரலுக்கு கட்டுப்பட்டு மகியோடு தன் வீடு வந்து சேர்ந்து விட்டான் வசந்த்..

ஆனால் வீடு வந்த பின்னுமே அவனுக்கு ஒரு மாதிரியாக இருக்க. ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து குடித்த தன் மகனையே பார்த்து கொண்டு இருந்த அவனின் அம்மா.

மகியிடம் இன்னொரு சொம்பை கொண்டு தண்ணீர் எடுத்து கொடுத்து விட்டு…

“இவனுக்கு என்ன ஆச்சும்மா…? நீ தானே பதட்டமா இருக்கனும்,..? இவன் என்னவோ பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து வந்தது போல இப்படி இருக்கான். இவ்வளவு தண்ணீர் குடிச்சிட்டு இருக்கான்..” என்று மகியிடம் கேட்டார்.

ஆனால் மகியுமே வசந்தின் அம்மாவுக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லாது.. குரு மூர்த்தியும் அவன் தனக்காக செய்த அந்த செயல்களையுமே நினைத்து பார்த்து கொண்டு இருந்தவளுக்கு இது எல்லாம் நிஜம் தான். உன் கண் எதிரில் தானே அவன் பெண்ணாக மாறினான்.. என்று அவள் அறிவு எடுத்து கொடுத்தாலுமே.. எப்படி முடிந்தது.. அவனால் எப்படி முடிந்தது.. அவளாள் நம்ப முடியவில்லை..

முதலில் தான் மாமனுக்கு விபத்து என்று அவள் பதறி ஒடி சென்றது… தன் வீதியில் வைத்தே தன்னை கடத்தியது..

பின் இதோ இந்த வீட்டிற்க்கு தன்னை அழைத்து வந்தது… என்று ஒன்றன் பின் ஒன்றாக நினைத்தவளின் நெஞ்சு கூடு இப்போது கூட பட படத்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் கெட்டதிலும் ஒரு நல்ல விசயம் என்ன என்றால்…? அவர்கள் அவளை பிடித்து காரில் தள்ளும் போது மட்டும் தான் இரு ஆண்கள் அவளின் கை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளியது.

அதன் பின் அவர்கள் காரில் ஏறியதுமே கார் வேகம் எடுக்க. இவள் காரில் இருந்து இறங்கும் முயற்ச்சி செய்யும் போது அதில் இருந்த ஒருவன் சொன்ன.

“தோ பாரு பொண்ணு உன்னை நாங்க தொடும் எண்ணத்தில் எல்லாம் கடத்தவில்லை. நீயே பார்த்த தானே காரில் பிடித்து தள்ளும் போது மட்டும் தான் உன் கையை தொட்டேன். இதோ நீ அங்கு இருக்க நான் இந்த மூலையில் இருக்கோம்..

மத்தவங்களும் அப்படி தான் இருக்காங்க.. இப்போ நீ இது போல காரை விட்டு வெளியே போக முயற்சி செய்தா நாங்க என்ன செய்வோம்.. உன் கிட்ட வந்து நீ இறங்காது இருக்க.. உன்னை பிடிப்போம்..

பிடிக்கும் போது கார் போகும் ஸ்பிடுக்கு கை எக்கு தப்பா எங்காவது படும்.. புரியுதா..? எங்களுக்கு கொடுத்த வேலையே வேறு.. நீ எங்களை வேறு வேலை பார்க்க வைத்து விடாதே.. என்னால அவ்வளவு தான் சொல்ல முடியும்…” என்றவனின் இந்த பேச்சில் மகி அதற்க்கு அடுத்து அவள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து அசைந்தால் இல்லை..

ஆனால் மீண்டுமே ஒரு வீட்டின் முன் நிறுத்தி.. இறங்கு எனும் போது வீதியே இப்படி அமைதியாக கிடந்ததில்..

“இல்ல இல்ல நான் இறங்க மாட்டேன்..” என்று இப்போது காரை விட்டு இறங்க மாட்டேன் என்பது போல அடமாக காரில் அமர்ந்து இருந்தவளை தான் வலுக்கட்டாயமாக தன்னை இழுத்து வந்து அந்த அறையில் தள்ளிய போது அப்படி ஒரு பயம் மனதில்…

காரில் தவறாக நடக்கவில்லை.. ஆனால் வீட்டில் நடந்தால், என்ற பயத்தோடு அவளுக்கு இன்னொரு பயமும்.. இங்கு வேறு யாராவது இருந்தால், இப்படி பயத்தில் காரில் இருந்து இறங்காது அடம் பிடித்தவளை தான் மீண்டுமே வலுக்கட்டாயமாக அந்த வீட்டிற்க்குள் இழுத்து சென்றது..

அப்போது தான் வசந்த் பார்த்தது.. மகி மட்டும் சாதாரணமாக அந்த வீட்டிற்க்குள் காரில் இருந்து இறங்கி சென்று இருந்தால், வசந்தின் பார்வை அந்த வீட்டின் பக்கம் கூட சென்று இருந்து இருக்காது.. கெட்டதிலும் ஒரு நல்ல விசயம் இது தான் போல..

மகி வீட்டிற்க்குள் சென்ற பின்…அந்த வீட்டில் நிறைய அறைகள்…. அந்த வீட்டின் சூழல் அவளுக்கு நல்லதாக படவில்லை தான்.. ஆனால் என்ன என்று அவள் யோசித்து கொண்டு இருந்த போதே..

அங்கு இருந்த ஒரு பெண்மணி… “ என் அறை அது… அங்கே கொண்டு போங்க..’ என்றதும் அவர்களும் இழுத்து கொண்டு வந்தவர்கள் அந்த அறையில் விட்டதோடு அந்த அறையிலேயே அந்த நான்கு ஆண்களுமே இருந்து கொள்ள.

இப்போது மகிக்கு பயம் எல்லாம் விட்டு போனது.. சாரதா அத்தையை கடத்தியது போல கடத்தி இருக்கிறார்கள் போல என்று நினைத்து கொண்டவள்.. மனதில் கிண்டலாக. அத்தனை வருஷம் சென்று கூட நீங்க உன் டெக்னிக்கல மாத்திக்கலையா… இப்போ என்ன சித்தார்த் அத்தான் அந்த ஸ்ருதி கூட வாழனும் என்று டிமாண்ட் வைக்க போறாங்கலா என்று தான் நினைத்து கொண்டாள்.

ஆனால் தாமரை அவளை கடத்தி கொண்டு வந்து அவளுக்கு என்ன செய்ய இருக்கிறார்கள் என்று . அந்த விபச்சார விடுதி நடத்தும் பெண் வாயிலாகவே கேட்டவளுக்கு ஈர குடலே நடுங்கி விட்டது..

ஆம் மகிக்கு அந்த வீட்டில் இருந்த அந்த பெண்மணி தான் அனைத்தும் சொன்னது.

அந்த நாள்வருமே.. மகியிடம். “ தோ பாரும்மா இப்போ கூட நீ காரில் இருந்து இறங்க மாட்டேன் என்றதினால் தான் கை பிடித்து இழுத்து வர மாதிரி ஆயிடுச்சி… இதோ நீ அந்த மூலையில் இரு நாங்க இந்த மூலையில் இருக்கிறோம்.. ஆனா நாங்க நாளு பேரும் இந்த அறையில் மட்டும் தான் இருப்போம் நாங்க வெளியில் எல்லாம் போக மாட்டோம்…” என்று அந்த நால்வரில் ஒருவன் இவ்வாறு கூறியவன்.

பின் அந்த அறையில் இருந்தே . “என்ன ராணிக்கா.. இன்னுமே கதவை பூட்டிக் கொள்ளலே.. என்ன இன்னைக்கு அதிசயமா உனக்கும் ஆளு வந்துடுச்சா என்ன….?” என்று சொன்னதின் வார்த்தையின் அர்த்தம் மகிக்கு புரியாது விழித்து கொண்டு இருந்த போது தான்.. ராணி என்று அழைக்கப்பட்ட அந்த பெண்மணி இவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தது.

ராணி அந்த அறைக்குள் நுழைந்ததுமே… அந்த நால்வருமே.. “ என்ன ராணி இங்கு வந்து இருக்க.. சீக்கிரம் நீ வெளியில் போய் கதவை பூட்டிக் கொள்… போலீஸ் எப்போ ஆனாலும் வரலாம்..” என்று சொல்லி ராணியை அந்த அறையை விட்டு செல்லும் படி அவசரப் படுத்தினார்கள்..

அப்போது தான் மகிக்கு ஏதோ விசயம் புரிவது போல் ஆனது.. அதுவும் ராணியாகப்பட்டவளை பார்த்தவளுக்கு அந்த பெண்மணியை அவள் வயதிற்க்கு கூட மரியாதை கொடுக்கும் தோற்றத்தில் அவள் இல்லாததோடு திரைப்படத்தில் ஒரு சில படத்தில் அது போலான இடத்தின் பெண்ணின் தோற்றத்தில் இருந்தவளையே பார்த்து கொண்டு இருந்தவளின் அருகில் வந்த அந்த பெண்மணி…

மகியின் கன்னத்தை தன் ஒரு விரல் கொண்டு தடவி பார்த்தவள் … “ க்ரீம் எதுவுமே போடலையா.? அப்போ கூட உன் கன்னம் நல்லா இருக்கு.” என்று சொன்னவளின் பேச்சும் சரி தொடுகையும் சரி மகிக்கு அருவெருப்பை தந்தது.. அது கொடுத்த தாக்கத்தில் மகி அவளை விட்டு கொஞ்சம் தூரம் விலகி நின்று கொண்டாள்..

ஆனால் அதற்க்குள் அந்த நாள்வர்களில் ஒருவன். “என்ன ராணிம்மா நீ என்னத்த செய்யிற….? நீ என்ன மனசுல வெச்சிட்டு நீ அந்த பொண்ணு கிட்ட பேசுற என்று எனக்கு புரியுது.. அது எல்லாம் நடக்காது…. நமக்கு கொடுத்த வேலையை முடிச்சிட்டு நமக்கு கொடுக்கும் பணத்தை வாங்கிட்டு நாம போயிட்டே இருக்கனும்.. புரியுதா…? எனக்கு ஏற்கனவே மெசஜ் வந்துடுச்சி… போலீஸ் வெளியில் தான் நிற்குது… நீ போ நமக்கு சொன்ன வேலையை செய்து முடிப்போம்.. போ எங்களை விட்டு வெளியில் பூட்டு போடு..” என்ற இந்த வார்த்தையை கேட்ட மகிக்கு அப்போது தான் தன்னை சுற்றி பின்னப்பட்ட வலையின் சிக்கலே அவளுக்கு புரிந்தது.

இந்த வலையில் நாம் சிக்கி கொண்டாள், கண்டிப்பாக அதில் இருந்து வெளியில் வர முடியாது… என்று அவள் நினைத்தது போல் தான் அந்த ராணிம்மா இப்போது மகியிடம்.

தான் அவளுடன் பேச வந்த காரணத்தை சொன்னது..

அதாவது.. “ தோ பாரும்மா நீ காலேஜில படிக்கிறதா தான் சொன்னாங்க.. நீ என்ன செய்த தெரியல. ஆனா ஒன்னு மட்டும் தெரியுது.. நீ பெரிய இடத்துல பகைச்சிக்கிட்ட என்று…

நீ நல்ல பெண்ணா இருந்தாலும். நாளைக்குள்ள. என்று சொன்ன ராணி..

“நாளைக்குள் என்ன நாளைக்குள்.. இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் இங்கு வரும்.. இவங்க நாளு பேரு கூட நீ இருந்த… அது தான் வெளியில் வர போகுது..

உன்னை ஜெயில்ல தள்ளனும்.. அது எல்லாம் அவங்களுக்கு நோக்கம் இல்ல… அதே போல உன்னை கெடுக்கனும் என்ற நோக்கம் கூட இல்ல..

உன் பேர கெடுக்கனும்.. அவ்வளவு தான்.. ஆனா பாரு நீ உண்மையில் கெட்டா கூடா காதும் காதும் வைத்தது போல மூடி மறச்சிட்டு போயிடலாம்…

ஆனா இப்போ வரும் போலீஸ் கைய்யோட மீடியாவையும் கூட்டிட்டு தான் வரும்…” என்று ராணி சொல்ல சொல்ல மகிக்கு தான் இருக்கும் நிலமையின் தீவிரம் அவளுக்கு புரிந்து தான் போனது..

ஆனால் ஊரு பத்தி எரியும் போது அதில் இருந்து சிகரெட்டுக்கு நெருப்பை பற்ற வைத்து கொண்டது போல ராணி அடுத்து சொன்ன…

“நீ கெடல என்றாலும் உன்னை உங்க வீட்டுல சேர்த்துக்க மாட்டாங்க..” என்று சொன்ன ராணி மகியின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து விட்டு.

“ஓ கல்யாணம் ஆகிடுச்சா. அப்போ சரியா போச்சு போ… கட்டுனவன் கண்டிப்பா உன்னை நீ யார் என்று தான் பார்ப்பான்.. அதனால நீ என்ன செய்யிற. இந்த போலீஸ் வேலை எல்லாம் முடிந்த பின்.. நீ என் கிட்ட வந்துடு…” என்ற ராணியின் இந்த பேச்சில் மகி அவளை கோபத்துடன் பார்த்தாள்.

ஆனால் ராணி அதை எல்லாம் சட்டை செய்வதாக காணும்… “ நீ கவலை படாதே உன்னை நான் ஆவாதவன் போவாதவன் கூட எல்லாம் அனுப்ப மாட்டேன்… உன்னை மாதிரி பொண்ணை எல்லாம்.. ரொம்ப கசங்க எல்லாம் விட மாட்டேன்… பெரிய பெரிய ஆளுங்களுக்கு தான்..” என்று ராணி சொல்லிக் கொண்டு இருந்த சமயம் தான் குரு மூர்த்தி அங்கு வந்தது…

வந்தவன் காதில் ராணி கடைசியாக சொன்ன. வார்த்தை தெளிவாக காதில் விழ… குரு மூர்த்தி எடுத்த உடன் அவன் வாய் பேசவில்லை.. அவன் கை தான் முதலில் பேசியது..

அதற்க்குள் நாள்வர்கள் குரு மூர்த்தி மீது பாய வர. தன் கை துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டியவன்..

“நீங்க எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது.. புரியுதா. உங்களை ஏதாவது செய்யும் நோக்கமும் எனக்கு இல்ல.. ஏன்னா நீங்க சொன்னதை செய்யிறிங்க அவ்வளவு தான்.. இந்த லேடியை நான் அடித்தது கூட என் ஈஸ்வரியிடம் பேசியதில் தான்..” என்று சொல்லி கொண்டே தன் ஈஸ்வரியின் முகம் பார்த்தான் ஈஸ்வரியின் குரு மூர்த்தி….

அவனின் ஈஸ்வரி… அவள் இருக்கும் அந்த இடம். அதுவும் அவனை பார்த்து நின்று இருந்த அந்த கோலம். அதிலும்ம்ம் அவள் கண்களில் தெரிந்த அந்த கலக்கம். உண்மையில் குரு மூர்த்தி தன் கையில் இருந்த துப்பாக்கி கொண்டே தன்னை சுட்டு கொள்ளலாம் என்று கூட நினைத்து விட்டான்..

அப்படி ஒரு கலக்கம் அவள் கண்களில் கண்டது.. இது வரை அவனின் ஈஸ்வரி அவனை காதலாக பார்த்தது கிடையாது.. குறைந்த பட்சம்.. பாசம்.. ம் இல்லவே இல்லை.. ஆனால் இன்று அவள் கண்களில் முதலில் தன்னை பார்த்ததும் தெரிந்த அவள் கண்களின் அந்த கலக்கம் போக போக அந்த கலக்கம் மெல்ல மெல்ல மறைந்து.. அந்த கண்களில் தெரிந்ததே… ஒரு நிம்மதி.. இனி ஒன்றும் பயம் இல்லை…என்று தன்னை பார்த்ததும் அவள் மனது சொன்னதினால் தான் அவனின் ஈஸ்வரியின் கண்களில் அந்த நிம்மதி தெரிந்தது..

அவளின் அந்த நிம்மதிக்காக குரு மூர்த்தி எதையும் செய்ய துணிந்து விட்டான்.. இதோ இப்போது கூட என்ன செய்ய வேண்டும் என்பது அவன் திட்டம் போடவில்லை..

தான் இங்கு பேசுவது வசந்துக்கு தொந்திரவாக இருக்க கூடாது என்று தன் கை பேசியை சைலண்ட் மோடில் வைத்து இருந்தவன் அதை அகற்றி விட்டு வசந்த் பேசுவதை கேட்டவனுக்கு புரிந்து விட்டது இனி வசந்தினால் கூட நிறை நேரம் அவர்களை பிடித்து வைத்து கொண்டு இருக்க முடியாது என்று,,.

குரு மூர்த்தி ராணியிடம்.. “ தாமரைக்கு நீ எப்படி உதவி செய்யிற. அவங்க விசுவநாதனின் ஒய்ப் என்பதினால் தானே..?” என்று குரு மூர்த்தி ராணியை பார்த்து கேட்டதும்..

ராணி ஆம் என்று தலையாட்டியவள்.. “ உனக்கு எப்படி தெரியும்..?” என்றும் ராணி கேட்க. குரு மூர்த்தி தன் பேச்சை வளர்க்கவில்லை…

நேரம் இல்லை என்பது குரு மூர்த்திக்கு தெரியும்… அதனால் குரு மூர்த்தி தன் கை பேசியில் வசந்த் தொடர்பை அணைத்து விட்டு சிறையில் இருக்கும் தன் மாமன் விசுவநாதனை அழைத்து ராணியிடம் கொடுத்தான்…

விசுவநாதன் நினைத்து இருந்தால் இந்த சிறைக்கு செல்லாது தன் செல்வாக்கினால் தப்பித்து இருந்து இருக்கலாம்.. ஆனால் விசுவநாதனுக்கு அது போல ஒரு எண்ணம் இல்லாததினால் தான்.. சிறையில் இருப்பது.. அதனால் தான் சிறையிலும் அவரால் பேசியின் மூலம் தன் மாப்பிள்ளையிடம் பேச முடிகிறது…

இப்போது அது கை கொடுக்க. குரு மூர்த்தி முன்பே விசுவநாதனிடம் அனைத்தும் சொல்லி விட்டான் போல..

அதனால் எடுத்த உடனே விசுவநாதன். ராணியிடம். “ஒழுங்கு மரியாதையா என் மாப்பிள்ளை சொல்வது கேள்.. இது வரை உன்னை நான் பார்த்தது கூட கிடையாது… ஆனா பாரு இனி நான் பார்க்க நினைத்தா கூட பார்க்க முடியாத இடத்துக்கு என் மாப்பிள்ளை உன்னை செய்து விடுவான். புரிஞ்சி இருக்கும் என்று நினைக்கிறேன்..” என்று சொல்ல…

ராணி தலையாட்டினாலும் அவளுக்குள் ஏதோ ஒரு தயக்கம்.. அதனால் தயங்கியவளின் பாவனையில்..

“நான் சொல்றது போல நீ அமைதியா இருந்தே நீ தப்பித்தே…” என்று சொன்னவனின் பேச்சுக்கு தலையாட்ட…

பின் அந்த நான்கு பேரிடமும் பேரத்தில் இறங்கினான்.. ஒன்று இரண்டு எல்லாம் ஆரம்பிக்கவில்லை.. தான் இப்போது கட்டி கொண்டு இருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் இடம் அதன் அளவு அதனின் மதிப்பை சொன்னவன்..

“இந்தை உங்க நால்வரின் பேரில் எழுதி வைத்து விடுகிறேன்…” என்று சொன்னதும் அவர்களும் பிகு எல்லாம் செய்யாது உடனே ஒத்து கொண்டு விட்டனர்..

பணத்துக்காக வேலை பார்ப்பவர்கள்.. யார் அதிகம் கொடுக்கிறார்கள்.. அவர்கள் பக்கம் சாய்வது தானே அவர்களுக்கு லாபம்..

மகியிடம்.. “ ம் சீக்கிரம் என்று சொன்னவ மகியோடு தான் வந்த விழி போகும் போது தான்.. அந்த மீடியாக்காரனில் ஒருவன் பின் பக்கம் நின்று கொண்டு போன் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தவன் சட்டென்று மீண்டும் அதே அறைக்குள் வந்தவனுக்கு புரிந்து விட்டது வெளியில் செல்வது அத்தனை உசிதம் கிடையாது என்று அதனால் ஏதோ முடிவு செய்தவனாக..

ராணியிடம்.. “இங்கு வேறு யாராவது பெண் இருக்காங்கலா…” என்று கேட்க.

ராணி.. “ இல்ல இன்னைக்கு இது போல என்று சொன்னதும் என் தங்கத்தை எல்லாம் சேப் செய்துட்டேன்.. ஏன்னா இப்போ வருபவனை நம்ப முடியாது அதனால. “ ராணி காவல் துறையை தான் இப்படி சொன்னது..

இவர்கள் ஈஸ்வரியை பார்த்து இருந்து இருக்க மாட்டார்கள். இன்று இங்கு ஈஸ்வரி மட்டும் தான் இருப்பாள் அவளை தாமரை சொன்னது போல செய்ய வேண்டும்.. அது தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையாக இருக்கும்..

இப்போது ஒரு பெண் இருந்தால் போதும்.. ஈஸ்வரியின் பக்கம் அவர்களின் கவனம் செல்லாது பார்த்து கொள்ளலாம்.. என்று யோசித்தவனுக்கு நேரம் செல்ல செல்ல… என்ன செய்வது என்றே புரியவில்லை..

பின் என்ன நினைத்தானோ… ராணியிடம் மீண்டும்.. “ எவ்வளவு தொகை என்றாலும் கொடுக்க நான் தயார் புரியுதா இப்போ நீ என்ன செய்யிற அவங்க சொன்னது போல வெளியில் பூட்டி கொள்.. அதுக்கு முன்னாடி.. உன் ட்ரஸ்.. உன் ட்ரஸ் எல்லாம் ஒன்னு விடாது கொடுத்துட்டு போ… அதே போல நகைகளும்.”

ராணியின் உடல் எடையையும் உயரத்தையும் பார்த்து கொண்டே கேட்டவனிடம் ராணி ஏன் என்று தெரியாது போனாலுமே கொடுத்து விட்டாள்.

அதே போல் சவுரி.. இப்போது அந்த ஒட்டுவது போலான சவுரியும் அங்கு தொங்கி கொண்டு இருக்க. அதையும் எடுத்து கொண்டவன் குளியல் அறைக்குள் செல்ல போனவன் பின் என்ன நினைத்தானோ தன்னையே பயமும் குழப்பவுமாக பார்த்து கொண்டு இருந்த மகியையுமே தன்னோடு குளியல் அறைக்குள் அழைத்து கொண்டு குளியல் அறையின் கதவை தாழ் இட்டு கொண்டான்.

அவனுக்கு தான் குளியல் அறையில் இருக்கும் சமயம். போலீஸ் மீடியாவும் வந்து விட்டால், அதோடு இந்த நாங்கு பேரின் கூட ஈஸ்வரியை தனியே விட்டு செல்ல அவனுக்கு மனது இல்லை.. அதனால் கூடவே அழைத்து கொண்டு விட்டான்..

குளியல் அறையின் கதவை தாழ் இட்டவனையே இவன் என்ன செய்ய போகிறான் என்பது போல் தான் மகி அவனை பார்த்து கொண்டு நின்று இருந்தாள்..

அவன் ஒவ்வொன்றாக செய்ய செய்ய தான் மகிக்கு அவனின் செயலை பார்த்து அதிர்ச்சியாகி.

முதல் முறையாக அவனின் பெயரை.. . “ குரு ஜீ.” என்று அழைத்தவள் அதற்க்கு பின் என்ன சொல்வது என்ன கேட்பது என்று வார்த்தை வராது அதிர்ந்து போய் பார்த்தவளிடம்..

குரு மூர்த்தி சிரித்தவன்.. “ இப்போ நீ என்னை கூப்பிட்ட பார்த்தியா குரு ஜீ என்று.. இந்த அழைப்புக்கு இப்போ உன்னை கட்டி பிடித்து அட்லீஸ்ட் உதட்டில் இல்லை என்றாலும் கன்னத்தில் முத்தம் கொடுக்கனும் என்று தோனுது.. ஆனா பாரு எனக்கு நேரம் இல்ல.”

ஆம் நேரம் இல்லாது தான் குரு மூர்த்தியின் வாய் இதை ஏசிக் கொண்டு இருந்தாலும் கை தன்னால் அவன் உடையை அகற்றி கொண்டு இருந்தது.

ஈஸ்வரியின் முன் உள்ஜட்டியோடு நின்றவனுக்கு கூச்சம் இல்லை.. அதே போல அவனை அப்படி பார்த்து கொண்டு இருந்த மகிக்குமே கூச்சம் இல்லை.. அதற்க்கு மாறாக அவனின் செயல்களை பார்த்து கொண்டு இருந்தவளுக்கு அதிர்ச்சி தான்..

தான் மார்பில் இருந்த அடர்ந்த ரோம முடிகளை அங்கு இருந்த ஷேவீங்க மிஷின் கொண்டு வழிக்க ஆரம்பித்தான்..

குரு மூர்த்திக்கு தெரியும்.. இது போலான இடத்தில் இருக்கும் குளியல் அறையில் இருக்கும் இந்த ஷேவீங்க மிஷின் எங்கு உபயோகம் செய்து இருப்பார்கள் என்று.. அதை நினைத்ததுமே முகம் தன்னால் அருவெருத்து தான் போய் விட்டது குரு மூர்த்திக்கு, அதுவும் குரு மூர்த்தி அனைத்திலும் அத்தனை சுத்தம் பார்ப்பவன்..

ஆனால் இன்று வேறு வழி இல்லை… அதை கொண்டு தான் தன் நெஞ்சில் இருக்கும் முடியை மழித்தது பின் மீசை தாடி என்று அனைத்துமே வழித்து முடித்த பின்..

இதே ராணி கொடுத்த ஆடை. அணிந்து கொண்டு அந்த ஒட்டிக் கொள்ளும் சவுரியை தன் தலையில் பதித்து கொண்டவன் ராணி கொடுத்த கம்மலில் பெரியதாக இருந்த டப்சை எடுத்து தன் காதிலும் மாட்டி கொண்டு விட்டான்.

இது போல பெரிய கம்மலை எல்லாம் ராணி அங்கு இருக்கும் பெண்களுக்கு டப்சாக இருப்பது போல் தான் வாங்கி தருவாள்.. காதில் ஓட்டையில் மாட்டுவது போலான காது தொங்கி பெண்களின் அழகு கெட்டு விடும் என்பது என்பதினால், ராணி இதில் எல்லாம் கில்லடி தான். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்..

அனைத்து அலங்காரமும் குரு மூர்த்தி அவனின் ஈஸ்வரியின் முன் தான் செய்து முடித்தான்.. அசல் பெண் உருவமாக இப்போது உரு மாறி தன் முன் இருந்தவனை இப்போது மகி கண்கள் கலங்க பார்த்து கொண்டு இருந்தவளின் பார்வையில் குரு மூர்த்தி கடைசியாக அங்கு இருந்த கண்ணாடியை பார்த்து கொண்டு உதட்டிற்க்கும் லிப்ஸ்ட்டிக் தீட்டிக் கொண்டு இருந்தவனை பார்த்து மகி அணைத்து கொண்டு விட்டாள்..

குரு மூர்த்தியுமே இப்போது அவனின் ஈஸ்வரியை அணைத்து கொண்டான்… இப்போது அவனின் கண்களும் கலங்கி தான் இருந்தது..

பேசினால் குரு மூர்த்தி அவனின் ஈஸ்வரியிடம் பேசினான்..

“எந்த ஒரு ஆணுமே.. தனக்கு பிடித்த பெண்ணின் முன் ஆண்மையாக தான் நிற்க பிடிக்கும் ஈஸ்வரி…. ஆனா இப்போ எனக்கு உன் முன் இப்படி நிற்பதில் எந்த ஒரு அசிங்கமும் எனக்கு கிடையாது.. சொல்வாங்க. தாய்க்கு பின் தாரம் என்று.. ஏன் கணவன் அந்த அவதாரத்தை தன் மனைவிக்காக எடுக்க கூடாதா…? என்று கேட்டவனுக்கு அவன் கேளாது தன் இதழ் முத்தம் ஒன்றை தன் குரு ஜீக்கு கொடுத்தாள் அவனின் ஈஸ்வரி..

“ஏய் லிப்ஸ்ட்டிக் கலைந்து விட போகிறது..” சிரிப்புடன் தான் இதை சொன்னான்…

பின்னுமே மகி.. “ இது வேண்டாமே.” என்று சொன்னவளிடம்..

குரு மூர்த்தி.. “ இப்போ இதை தவிர நமக்கு வேறு வழி இல்ல ஈஸ்வரி… உன்னை கண்டிப்பா பார்த்து இருக்க மாட்டாங்க… இதை நான் செய்யலேன்னா. எல்லா இடத்தையும் சர்ச் பண்ணுவாங்க. போலீஸ் மட்டும் வது இருந்தால் நான் சமாளித்து இருப்பேன்.. ஆனா மீடியா.. இவனை நம்ப முடியாது.. உன் விசயத்தில் நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்ல ஈஸ்வரி..” என்றவனின் பேச்சில் மகி கண்கலங்க கொண்டு அவனை பார்த்தவனின் நெற்றியில் இரு முத்தம் பதித்த குரு மூர்த்தி அவளின் அழுகையை நிறுத்த வேண்டி..

“நான் இந்த ட்ரஸ்ல உன்னை விட அழகா இருக்கேன் என்று உனக்கு பொறாமை.. அதுல தானே நீ அழுகுற..” என்று குரு மூர்த்தி சொன்ன பாவனையில் குரு மூர்த்தி நினைத்தது போல அவனின் ஈஸ்வரியின் முகத்தில் லேசான புன்னகை மிளர்ந்தது தான்.

இருந்தாலுமே அவள் மனது கேட்கவில்லை. யார் இது போல் செய்வார்கள்… நினைக்க நினைக்க. அவளாள் தாங்க முடியவில்லை..

அதில் மகி. “ இல்ல என்ன ஆனாலுமே பரவாயில்லை… உங்களை இது போல எல்லோர் முன்னும் வேண்டாமே.” என்று சொல்லி குளியல் அறையின் தாழை திறக்க பார்த்தவனின் கை பிடித்து தடுத்து நிறுத்திய ஈஸ்வரியிடம் குரு மூர்த்தி சொன்னது இது தான்.

“நான் உன்னை இந்த நேரத்தில், அதுவும் இது போலான ஒரு சூழலில் காப்பத்தாது போனா தான் நான் ஆம்பிள்ளை இல்லாதவன் ஈஸ்வரி… ஒரு ஆம்பிள்ளையின் அழகு… தனக்கு பிடித்த பெண்ணுக்கு எந்த வித பிரச்சனையும் வராது பார்த்துக்குறது தான்.. ஏற்கனவே தெரிந்தோ தெரியாமலேயே உனக்கு பிரச்சனைகள் ஒரு சிலது என்னாலேயே ஏற்பட்டு விட்டது.. ஆனா இனி…அதுவும் இது போல உன்னை விட்டிட்டு நான் ஆம்பிள்ளையா நிற்பதை விட இப்படி மத்தவங்க முன் நிற்பது ஒன்னும் இல்ல.” என்று சொன்னவன்..

பின் கடைசியாக.. “ இங்கு இருந்து நீ வெளியில் வர கூடாது புரியுதா ஈஸ்வரி.. வசந்த் வருவான் அவன் கூட மட்டும் போ…” என்று சொல்லி விட்டு அந்த அறைக்குள் சென்றவனை தான் அங்கு இருந்த நால்வர்களும் வெறித்து பார்த்தது..

அந்த நால்வரும்.. மகியை கூட இப்படி பார்த்து இருந்து இருக்க மாட்டார்கள் போல… குரு மூர்த்தியின் உயரத்திற்க்கும்.. எடைக்கும்.. அந்த புடவை நகையில் குரு மூர்த்தி அந்த நால்வர்களின் பார்வைக்கு ஒரு தினுசாகவே தெரிந்தான்…

அவர்களின் பார்வையிலும், அதிலும் வெளியில் கேட்ட பேச்சு சத்தத்திலும்..

“உங்க பார்வை எல்லாம் போது, நான் சொன்னது போல இருங்க.” என்றவனின் பேச்சில் தான் காவல் அதிகாரியும் அந்த மீடியாவும் அந்த அறைக்குள் வந்த போது பார்த்த அந்த காட்சி அப்படியாக மாறி இருந்தது..

குரு மூர்த்தி அப்படி செய்ய காரணம் கூட.. தான் சாதாரணமாக இருந்தால், மற்றவர்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தாலும் வர கூடும்…

இப்படியான நிலையில் பார்த்தால் தான் மற்றவர்களின் கவனம் வேறு எங்கும் செல்லாது என்று நினைத்து தான் குரு மூர்த்தி இப்படியான உருவத்தில் நின்றது .. அப்படியான நிலையில் தன்னை நிலை நிறுத்தி கொண்டது…

குளியல் அறையில் நடந்ததை நினைத்து பார்த்த மகியிடம் வசந்த் மீண்டும் மீண்டும் என்ன நடந்தது கேட்க. வசந்திடம் என்ன சொல்ல வேண்டுமோ அனைத்துமே சொல்லி விட்டாள்..

அதை கேட்ட வசந்துக்கு மட்டும் அல்லாது அவனின் அம்மா கூட தனக்கு பிடித்த பெண்ணுக்காக ஒரு ஆண் இப்படி செய்வானா என்று…
 
Active member
Joined
Jun 2, 2024
Messages
82
Super ud maam...nan apove guess panen Guru than antha lady ah irkum nu...edho Eswari um Guru um raasi ayitaanga thane...next ud innum nalla irkum polave...police station la Guru ku enna nadanthichu nu therinjika eagerly waiting...nalaiku mudinha seekiram ud thaanga maam...
 
Top